Jump to content

தென் சீனக் கடலை ஆக்கிரமிக்க சீனாவும் அமெரிக்காவும் துடிப்பது ஏன்?- அதிரவைக்கும் பின்னணி!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தென் சீனக் கடலை ஆக்கிரமிக்க சீனாவும் அமெரிக்காவும் துடிப்பது ஏன்?- அதிரவைக்கும் பின்னணி!

அமெரிக்கப் போர்க்கப்பல்

தென் சீனக் கடல் சீனாவினால் ஆக்கிரமிக்கப்படுவதை, அமெரிக்கா விரும்பவில்லை. சீனாவின் அண்டை நாடுகளும் விரும்பவில்லை.

உலக வல்லரசுகள், கொரோனா வைரஸின் கோரப் பிடியில் சிக்கி சீரழிந்துவரும் நிலையில், அமெரிக்கா-சீனா இடையேயான பொருளாதாரப் போர், ஆதிக்கப் போராக உருமாறி, ஆசியக் கண்டத்தை அச்சுறுத்திவருகிறது.

கொரோனா பிரச்னையில், சீனாவை கடுமையாகச் சாடிவரும் அமெரிக்கா, தற்போது அந்நாட்டை ராணுவரீதியாக ஒடுக்கவும் திட்டமிட்டுள்ளது. இதை உணர்ந்த சீனா, தென் சீனக் கடல்மீது தனது அதிகாரத்தை நிலைநாட்ட ராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. இரு வல்லரசுகளின் ஆதிக்கப் போரால் தென் சீனக் கடல் கொந்தளித்துள்ளது.

சமீபகாலமாக, அமெரிக்காவின் போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், தென் சீனக் கடல் பகுதியில் சர்ச்சைக்குரிய வகையில் நுழைந்துள்ளதாலும், சீனாவின் போர் விமானங்கள் அப்பகுதியில் வட்டமிடுவதாலும், பதற்றம் அதிகரித்துள்ளது.

 

தென் சீனக் கடல்

தென் சீனக் கடல்மீது சீனா ஆதிக்கம் செலுத்துவதை அமெரிக்கா விரும்பவில்லை. சீனாவின் அண்டை நாடுகளும் விரும்பவில்லை. ஏனெனில், மலேசியா, வியட்நாம், பிலிப்பைன்ஸ், தைவான் எனப் பல நாடுககள் தென் சீனக் கடல்மீது சொந்தம் கொண்டாடுகின்றன. பல காலமாக அமெரிக்கா தென் சீனக் கடலை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.

இதற்கு முக்கியக் காரணம், தென் சீனக் கடல் முழுக்க கொட்டிக்கிடக்கும் எரிவாயு, எண்ணெய் உட்பட பல இயற்கை வளங்கள். இக்கடல், உலகின் முக்கியமான கடல் போக்குவரத்துத் தடங்களில் ஒன்று. உலகின் மூன்றில் ஒரு பங்கு கப்பல் போக்குவரத்து தென் சீனக் கடல் வழியாகத்தான் நடைபெறுகிறது.

சமீபகாலமாக, சீனா இந்தக் கடல் பகுதியைச் சொந்தம் கொண்டாடினாலும், இதுவரை இந்த அளவுக்கு கடுமையாக சீனா நடந்துகொண்டதில்லை. கொரோனா பிரச்னையில் சீனா உள்நாட்டிலும் உலகத்தின் பார்வையிலும் குற்றவாளியாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த இக்கட்டான சூழலைப் பயன்படுத்தி, அமெரிக்கா சீனாவை ஒடுக்க முனைந்துள்ளது. தனது அதிகாரத்தை நிலைநாட்டவும், இழந்த பெயரை மீட்கவும் சீனாவுக்குத் தேவை ஒரேயொரு வெற்றி. தனது ஆளுமையை நிலைநாட்ட எப்போதும் சீனா பிரயோகிக்கும் ஒரே அஸ்திரம் ஆக்கிரமிப்பு அல்லது அச்சுறுத்தல். தற்போது, தென் சீனக் கடலிலும் இதே அஸ்திரத்தைப் பயன்படுத்தியுள்ளது.

இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து, கொரோனா வைரஸ் சீனாவை புரட்டிப்போட்டபோதிலும், தென் சீனக் கடலில் தனது செயல்பாடுகளை சீனா குறைத்துக்கொள்ளவில்லை.

சர்வதேச விதிமுறைகளை மீறி, சீனா தென் சீனக் கடல்மீது செயற்கை திட்டுகள் அமைத்து, இரு புதிய ஆராய்ச்சி நிலையங்களை அமைத்துள்ளது. அந்தப் பகுதியில் பாதுகாப்பு குழிகள் மற்றும் ராணுவ விமான ஓடுபாதைகள் அமைத்தது. இதன்மூலம் 100 கிமீ சுற்றளவுள்ள பகுதிமீது உரிமை கொண்டாடி வருகிறது.

கடந்த ஜனவரி முதல் சீனாவின் கடலோர காவல்படை கப்பல்கள், தென் சீனக் கடல் பகுதியின் சர்ச்சைக்குரிய பகுதியில் வலம் வரத்தொடங்கியதும், அப்பகுதியில் மீன்பிடிப்பவர்களைத் துன்புறுத்தி விரட்டியதும், வியட்நாமின் மீன்பிடிப் படகை சீனா கண்காணிப்பு கப்பல் மூழகடித்தது என அனைத்தும் தனது பலத்தைக் காட்டுவதற்காகத்தான்.

ஏற்கெனவே, ஒரு சர்வதேச தீர்ப்பாயம் நீர்வழி உரிமை தொடர்பாக சீனா முன்வைத்த கோரிக்கைகளை நிராகரித்தது. ஆனால், பெய்ஜிங் இதற்கு அலட்டிக்கொள்ளவில்லை.

சீனா வேண்டுமென்றேதான் இப்படி நடந்துகொள்கிறது. பிரச்னையைத் திசைதிருப்பவும், அமெரிக்காவால் ஓரளவுக்கு மேல் எதுவும் செய்ய முடியாது என்றும் தனது அண்டை நாடுகளுக்குக் காட்டவும்தான் சீனா இப்படிச் செய்கிறது என்கிறார்கள், ராணுவ நிபுணர்கள்.

நாங்கள் நினைத்ததைச் செய்வோம் என்பதைக் காட்டும் வகையில், மேலும் பல பகுதிகளை ஆக்கிரமித்தது.

அமெரிக்காவுக்கு இந்தக் கடல் பகுதிமீது எந்த உரிமையும் இல்லாதபோது, அந்தப் பகுதியை சீனா ராணுவமயமாக்குவதை அது விரும்பவில்லை. தனது நட்பு நாடுகளின் பாதுகாப்புக்கும், பொருளாதாரத்திற்கும் அச்சம் ஏற்படும் என்பதால், சீனாவை ஒடுக்க நினைக்கிறது.

சீனாவைச் சுற்றியுள்ள நாடுகள் மற்றும் தீவுகளைத் தங்கள் வசம் கொண்டுவந்து, ஒரு சங்கிலித்தொடர் போல அமைத்து, சீனாவுக்கு ஒரு நிரந்தர அச்சுறுத்தலை உருவாக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது

நேரடியாகவோ அல்லது ராணுவரீதியாகவோ சீனாவை அடக்குவது அவ்வளவு எளிதல்ல என்பது அமெரிக்காவுக்குத் தெரியும். சமீப காலமாக, சீனாவின் ராணுவம் அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த 1991ல் வளைகுடா மற்றும் ஆப்கானிஸ்தான் போர்களில் அமெரிக்கா கவனம் செலுத்தியபோது, அந்தச் சூழலைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட சீனா, தன்னுடைய ராணுவ பலத்தை பிரயோகித்து, அண்டை நாடுகளை அடக்கி, தென் சீனக் கடல்மீது கோலோச்சத் தொடங்கிவிட்டது.

அதனால், அமெரிக்கா தனது ராஜ தந்திர அணுகுமுறைகள் மற்றும் ராணுவ நடவடிக்கைகளில் மிகப்பெரிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.

 

சீனாவைச் சுற்றியுள்ள நாடுகள் மற்றும் தீவுகளைத் தங்கள் வசம் கொண்டுவந்து, ஒரு சங்கிலித்தொடர் போல அமைத்து, சீனாவுக்கு ஒரு நிரந்தர அச்சுறுத்தலை உருவாக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. முதல் கட்டமாக, விமானம்தாங்கிக் கப்பல்கள் தெற்கு பசிபிக் கடலில் நிலை நிறுத்தப்பட்டன. தைவானுக்கு நவீன ஏவுகணைகளைத் தர முன்வந்துள்ளது. அமெரிக்காவின் நீர்மூழ்கிக் கப்பலை தென் சீனக் கடலில் நிறுத்தியது.

அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்

கடந்த ஆகஸ்ட்டில் நவீன ஏவுகணைகளை உற்பத்திசெய்ய, 5,000 கி.மீ தூரம் செலுத்தக்கூடிய ஏவுகணைகள் உற்பத்திக்குத் தடை விதிக்கும் உடன்படிக்கையிலிருந்து அமெரிக்கா வெளியேறியது. இதனால் நவீன ஏவுகணை உற்பத்தி செய்வதில் அமெரிக்காவுக்கு இருந்த தடை விலகியது. வான்படையை பலப்படுத்தினால் சீனாவை அடக்க முடியும் என்றும் அமெரிக்கா நம்புவதால், பி 21 ஸ்டெல்த் விமானங்களைப் பயன்படுத்தவும், சூப்பர் ஹார்னெட் ஜெட்டுகளைப் பயன்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.

அரசியல் லாபத்திற்காகவும், தங்களது அதிகாரத்தை நிலைநிறுத்தவும், இரு நாட்டுத் தலைவர்களாலும் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த அரசியல் விளையாட்டால், இரு நாடுகளுக்கும் பெரிய அளவில் நீண்ட கால பலன் எதுவும் இருக்காது. மொத்தத்தில், பல நாடுகளின் அமைதிக்குப் பங்கம் மட்டுமே ஏற்படும் என்பதை இரு நாடுகளும் உணரவேண்டிய தருணம் இது.

https://www.vikatan.com/government-and-politics/international/us-china-governments-on-tug-of-war-for-south-china-sea

 

 

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சிறப்பான பதிவுகளைத் தேடி எடுத்துத் தருகிறீர்கள் நன்றி பிரியன்..........!  👍
    • ஹிந்தி மொழிக்கு எதிராக‌ போராடி ஆட்சிய‌ பிடித்த‌ திராவிட‌ம் உத‌ய‌நிதியின் ம‌க‌ன் எந்த‌ நாட்டில் ப‌டித்து முடிந்து விட்டு த‌மிழ் நாடு வ‌ந்தார்..................ஏன் உற‌வே புல‌ம்பெய‌ர் நாட்டில் த‌ங்க‌ட‌ பிள்ளைக‌ள் ஆங்கில‌த்தில் க‌தைப்ப‌து பெருமை என்று நினைக்கும் ப‌ல‌ர் இருக்கின‌ம் யாழில் இனி ப‌ழைய‌ திரிக‌ளை தேடி பார்த்தா தெரொயும்...............நான் நினைக்கிறேன் சீமானின் ம‌க‌னுக்கு த‌மிழ் க‌தைக்க‌ தெரியும்.................இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ர் ம‌ற்றும் அவ‌ரின் ம‌க‌ன் உத‌ய‌நிதி இவ‌ர்களுக்கு ஒழுங்காய் த‌மிழே வாசிக்க‌ தெரியாது.........ச‌ரி முத‌ல‌மைச்ச‌ர் ஜ‌யாவுக்கு வ‌ய‌தாகி விட்ட‌து ஏதோ த‌டுமாறுகிறார் வாசிக்கும் போது உத‌ய‌நிதி அவ‌ரின் அப்பாவை விட‌ த‌மிழின் ஒழுங்காய் வாசிக்க‌ முடிவ‌தில்லையே உற‌வே...............சீமானின் ம‌க‌ன் மேடை ஏறி த‌மிழில் பேசும் கால‌ம் வ‌ரும் அப்போது விவாதிப்போம் இதை ப‌ற்றி.............என‌து ந‌ண்ப‌ன் கூட‌ அவ‌னின் இர‌ண்டு ம‌க‌ன்க‌ளை காசு க‌ட்டி தான் ப‌டிப்ப‌க்கிறார்............அது சில‌ரின் பெற்றோர் எடுக்கும் முடிவு அதில் நாம் மூக்கை நுழைத்து அவ‌மான‌ ப‌டுவ‌திலும் பார்க்க‌ பேசாம‌ இருக்க‌லாம்............ஒரு முறை த‌மிழ் நாட்டை ஆளும் வாய்ப்பு சீமானுக்கு கிடைச்சா அவ‌ர் சொன்ன‌ எல்லாத்தையும் செய்ய‌ த‌வ‌றினால் விம‌ர்சிக்க‌லாம் ஒரு தொகுதியிலும் இதுவ‌ரை வெல்லாத‌ ஒருவ‌ரை வ‌சை பாடுவ‌து அழ‌க‌ல்ல‌ உற‌வே........................
    • உந்தாள் முந்தியும் ஒருக்கால் கம்பி எண்ணினதெல்லோ? 
    • “அந்த மக்களிடம் அற்ப விலைக்கு வாங்கி, புலம் பெயர் மக்களிடம் அறாவிலைக்கு விற்கும் கந்துவட்டி வகை வியாபாரிகளை” இதனை எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள்? உதாரணமாக ஓர் பொருளின் சிறீலங்கா v பிரித்தானிய விலையை கூறுங்கள். எனக்கு தெரிந்தவர்களிடம் அதனை விசாரித்து கூறுகிறேன்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.