• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
Nathamuni

நாம யார் வம்பு தும்புக்கும் போறதில்லை, யார் பக்கமும் இல்லை - அப்படி போடு அரிவாளை

Recommended Posts

இந்தியா, சீனா கோஷ்டியிலேயே இல்லை- அணிசேரா கொள்கையே எங்களது பாதை... 'அடேங்கப்பா' மகிந்த ராஜபக்சே

பஞ்சசீல கொள்கை

இந்தியாவும் சீனாவும் எங்களுக்கு நட்பு நாடுகள்; அணிசேரா கொள்கைதான் எங்களது பாதை என இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே திடீர் ஞானோதயம் பெற்றவராக கூறியுள்ளார். ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த காலம் முதலே இலங்கை தீவில் இந்தியாவின் செல்வாக்கு சரிவை சந்தித்தது. அவருக்கு முன்னர் பிரதமராக இருந்த இந்திரா காந்தியை கண்டு இலங்கை தேசம் குலைநடுங்கிப் போய் கிடந்தது. இந்திராவின் காலத்தில் அரசியல் தலைவர்கள், வெளியுறவு கொள்கையை தீர்மானித்தனர்; ராஜீவ் காலத்தில் அதிகாரிகளே வெளியுறவு கொள்கையை தீர்மானித்தனர். இதனால்தான் இலங்கையில் இந்தியாவின் ஆதிக்கம் சரிவை சந்தித்தது.

ராஜபக்சேவின் சீனா சார்பு

ராஜபக்சேவின் சீனா சார்பு என்னதான் தமிழீழ விடுதலைப் புலிகளை வீழ்த்த இந்தியா உதவி இருந்த போதும் சீனாவுக்கே மகிந்த ராஜபக்சே முக்கியத்துவம் அளித்தார். சீனாவுக்காக ஒட்டுமொத்த இலங்கையையே குறிப்பாக சிங்களர் வாழும் தென்னிலங்கையையே ராஜபக்சே திறந்துவிட்டார் அல்லது தாரைவார்த்தார். இந்த ராஜதந்திர கோபத்தில்தான் ராஜபக்சே தேர்தலில் மண்னைக் கவ்வி மைத்திரி பால சிறிசேனா அதிபரானார் என்பது தென்னாசியாவின் வரலாறு.

நாடாளுமன்றத்தில் 50 ஆண்டுகள் இந்த நிலையில் இலங்கை நாடாளுமன்றத்துக்குள் ராஜபக்சே நுழைந்து 50 ஆண்டுகள் ஆனதை அவரது ஆதரவாளர்கள் வெகு விமரிசையாக கொண்டாடுகின்றனர். இதனை முன்னிட்டு நியூஸ் 18 சேனலும் மகிந்த ராஜபக்சேவிடம் சிறப்பு நேர்காணல் ஒன்றை எடுத்திருக்கிறது. நியூஸ்18.காம் மூத்த செய்தி ஆசிரியர் டிபி சதீஷூக்கு ராஜபக்சே அளித்த நேர்காணலில் சீனாவுடனான உறவுகள் குறித்த கேள்விக்கு ராஜபக்சே அளித்த பதில்:

இலங்கை அணி சேரா கொள்கை

இலங்கை அணி சேரா கொள்கை இலங்கையானது அனைத்து நாடுகளுடனும் அணிசேரா கொள்கையை கடைபிடிக்கிறது. இந்தியாவும் சீனாவும் எங்களது மதிப்பிற்குரிய நட்பு நாடுகள். இந்தியாவின் ஜவஹர்லால் நேருவும் சீனாவின் சூ என்லாயும் பிற நாடுகளின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் மதிக்கும் விதமாக, பிற நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடாத, பஞ்சசீலக் கோட்பாட்டை உருவாக்கினர்.

பஞ்சசீல கொள்கை இந்த பஞ்சசீலக் கோட்பாட்டை நாங்களும் ஏற்றுக் கொள்கிறோம். இனிவரும் காலங்களிலும் இந்த பஞ்சசீலக் கோட்பாடுகளின் அடிப்படையில் பயணிப்போம். பிராந்திய நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பு என்பது மிக முக்கியமானது. சார்க் போன்ற அமைப்புதான் இந்த ஒத்துழைப்பை மேலும் வலிமையாக்கும். உறுப்பு நாடுகளிடையே இருக்கும் பிரச்சனைகளால் சார்க் அமைப்பு இயங்காமல் இருக்கலாம். ஆனால் பிரச்சனைகள் இருக்கின்றன. பேச்சுகளைத் தொடங்குவதற்கான பாதைகள் திறந்தே இருக்கின்றன. இவ்வாறு ராஜபக்சே கூறினார்.

Edited by Nathamuni
 • Like 2

Share this post

Link to post
Share on other sites

இந்தியனுக்கு இன்னொரு தரம் ஆப்பு இருக்கியாச்சு!

 • Like 1
 • Haha 1

Share this post

Link to post
Share on other sites
Quote

இந்தியாவும் சீனாவும் எங்களுக்கு நட்பு நாடுகள்; அணிசேரா கொள்கைதான் எங்களது பாதை என இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே திடீர் ஞானோதயம் பெற்றவராக கூறியுள்ளார்

.கடன் கொஞ்சம் தேவையாக உள்ளது. அது தான் நடுவால் ஓடுகிறார்.

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, Nathamuni said:

இந்தியா, சீனா கோஷ்டியிலேயே இல்லை- அணிசேரா கொள்கையே எங்களது பாதை... 'அடேங்கப்பா' மகிந்த ராஜபக்சே

சிங்கள அரசியல் வாதிகள்  மேல்,  எவ்வளவு... வெறுப்பு இருந்தாலும்.
அவர்களின் ராஜ தந்திரத்தை பாராட்டியே ஆகவேண்டும்.

எங்களின் தமிழ் அரசியல் வாதிகள், வாயால் வடை சுட்டுக் கொண்டு...
தன்னுடைய இனத்தையே... விற்றுக் கொண்டு இருக்கிறாகள்.

Share this post

Link to post
Share on other sites

இந்தக் காணொளியை முழுமையாக பார்க்கா விட்டாலும்,
5´வது நிமிடத்தில் இருந்து, கட்டாயம் பாருங்கள். :grin:

 • Like 2
 • Haha 1

Share this post

Link to post
Share on other sites
Posted (edited)
1 hour ago, தமிழ் சிறி said:

இந்தக் காணொளியை முழுமையாக பார்க்கா விட்டாலும்,
5´வது நிமிடத்தில் இருந்து, கட்டாயம் பாருங்கள். :grin:

இவர், சொதப்பல், ஊழல் புகழ் இந்தியாவை பத்தி சும்மா அவிச்சு இறக்கிறார் போல கிடக்குது.:grin:

Edited by Nathamuni

Share this post

Link to post
Share on other sites
26 minutes ago, Nathamuni said:

இவர், சொதப்பல், ஊழல் புகழ் இந்தியாவை பத்தி சும்மா அவிச்சு இறக்கிறார் போல கிடக்குது.:grin:

இப்படி அவிச்சு விட்டாத் தானே அவருடைய கடையில் வியாபாரம் நடக்கும்.

2 hours ago, தமிழ் சிறி said:

இந்தக் காணொளியை முழுமையாக பார்க்கா விட்டாலும்,
5´வது நிமிடத்தில் இருந்து, கட்டாயம் பாருங்கள். :grin:

இந்தியாவின் முழு நம்பிக்கை அமெரிக்கா அவுஸ்திரேலியா ஜப்பான் தனது பக்கம் என்று.

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, ஈழப்பிரியன் said:

இந்தியாவின் முழு நம்பிக்கை அமெரிக்கா அவுஸ்திரேலியா ஜப்பான் தனது பக்கம் என்று.

அதை வைத்து ஒன்றும் செய்ய முடியாது. கடந்த இந்திய மக்களவைத் தேர்தலுக்காக வைக்கப்பட்ட புல்வாமா குண்டு போல இந்தச் சீன எல்லைப் பிரச்சனையும் இந்திய கொறோனாப் பிரச்சனை முடிந்தவுடன் புஸ்ஸ்ஸ்....ஸ் என்று போய்விடும். அதுவரை வடிவேல் ஸ்ரைல் "" நீயும் இந்தப் பக்கம் வரப்படாது. நானும் அந்தப் பக்கம் வரமாட்டேன். பேச்சுப் பேச்சாகத்தான் இருக்கவேண்டும்"" என கூவுவார்கள். 😏😏

 • Confused 1

Share this post

Link to post
Share on other sites
3 hours ago, Kapithan said:

அதை வைத்து ஒன்றும் செய்ய முடியாது. கடந்த இந்திய மக்களவைத் தேர்தலுக்காக வைக்கப்பட்ட புல்வாமா குண்டு போல இந்தச் சீன எல்லைப் பிரச்சனையும் இந்திய கொறோனாப் பிரச்சனை முடிந்தவுடன் புஸ்ஸ்ஸ்....ஸ் என்று போய்விடும். அதுவரை வடிவேல் ஸ்ரைல் "" நீயும் இந்தப் பக்கம் வரப்படாது. நானும் அந்தப் பக்கம் வரமாட்டேன். பேச்சுப் பேச்சாகத்தான் இருக்கவேண்டும்"" என கூவுவார்கள். 😏😏

என்னப்பா வடை போச்சா?

Share this post

Link to post
Share on other sites
5 hours ago, ஈழப்பிரியன் said:

இப்படி அவிச்சு விட்டாத் தானே அவருடைய கடையில் வியாபாரம் நடக்கும்.

இந்தியாவின் முழு நம்பிக்கை அமெரிக்கா அவுஸ்திரேலியா ஜப்பான் தனது பக்கம் என்று.

இந்தியா... மற்ற ஆட்களை, நம்பி கெடப்  போகுது.
நமக்கென்ன... பார்த்து,  "எஞ்ஜாய்"  பண்ண வேண்டியதுதான். :)

இவர்கள் கெதியில், போரை ஆரம்பித்தால் நல்லது,
நெடுக... கொரோனா செய்திகளை வாசித்து,  "அலுப்பு" அடிக்குது. :grin:

 • Haha 2

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, தமிழ் சிறி said:

இந்தியா... மற்ற ஆட்களை, நம்பி கெடப்  போகுது.
நமக்கென்ன... பார்த்து,  "எஞ்ஜாய்"  பண்ண வேண்டியதுதான். :)

இவர்கள் கெதியில், போரை ஆரம்பித்தால் நல்லது,
நெடுக... கொரோனா செய்திகளை வாசித்து,  "அலுப்பு" அடிக்குது. :grin:

3 hours ago, ஈழப்பிரியன் said:

என்னப்பா வடை போச்சா?

Share this post

Link to post
Share on other sites
8 hours ago, ஈழப்பிரியன் said:

ஈழப்பிரியர், ஏதோ சொல்ல வந்தவர், பேரன் கூப்பிட்டு விட்டான் போல கிடக்குது.

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, Nathamuni said:

ஈழப்பிரியர், ஏதோ சொல்ல வந்தவர், பேரன் கூப்பிட்டு விட்டான் போல கிடக்குது.

ஆமா  நாதமுனி,  அவர் எழுத வந்த... கருத்து, என்ன என்று... அறிய ஆவலாக உள்ளது. :)

Share this post

Link to post
Share on other sites
21 hours ago, தமிழ் சிறி said:

இந்தக் காணொளியை முழுமையாக பார்க்கா விட்டாலும்,
5´வது நிமிடத்தில் இருந்து, கட்டாயம் பாருங்கள். :grin:

இந்தியா என்ற மாயைக்குள் சிக்கியிருக்கும் இந்தியர்கள் உலகமே தெரியாத முட்டாள்கள் என்பதற்கு இக்காணொளியும் ஓர் உதாரணம்.

 • Like 1
 • Thanks 2
 • Haha 1

Share this post

Link to post
Share on other sites
17 hours ago, Kapithan said:

அதை வைத்து ஒன்றும் செய்ய முடியாது. கடந்த இந்திய மக்களவைத் தேர்தலுக்காக வைக்கப்பட்ட புல்வாமா குண்டு போல இந்தச் சீன எல்லைப் பிரச்சனையும் இந்திய கொறோனாப் பிரச்சனை முடிந்தவுடன் புஸ்ஸ்ஸ்....ஸ் என்று போய்விடும். அதுவரை வடிவேல் ஸ்ரைல் "" நீயும் இந்தப் பக்கம் வரப்படாது. நானும் அந்தப் பக்கம் வரமாட்டேன். பேச்சுப் பேச்சாகத்தான் இருக்கவேண்டும்"" என கூவுவார்கள். 😏😏

இது பற்றி பல வருடம் முன்பு நான் இங்கு ஒரு கட்டுரை எழுதி இருந்தேன்.

சீனா உண்மையிலேயே இந்தியாவுக்கு சொந்தமான அருணாச்சல பிரதேசம் முழுவதையும் 
வலு கட்டாயமாகவே பிடித்து வைத்திருக்கிறது.

ஆனாலும் இந்தியாவினால் ஒன்றும் செய்ய முடியாது ..காரணம் 1962 ஆண்டு போரின் போது 
உண்மையிலேயே ஒரு சீனாவுக்கு சொந்தமான சிறு பிரதேசம் இந்திய எல்லைக்குள் இருந்தது 
அப்போது அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள்தான் இருந்தது. சீன பிரதேசத்தை சுற்றி இந்திய இராணுவம் இருந்தததால் பெருமளவு இராணுவ உயிர்பலியை தவிர்க்க சீனா தந்திரோபயாகவே அந்த பிரதேசத்தை விட்டு பின்வாங்கியது ..அதன் பின்பு படை எடுத்து வந்ததுதான் அருணாச்சல பிரதேசம் முழுவதும் கைப்பற்றியது.

ஒவொரு அமெரிக்க ஜனாதிபதி மாற்றம் நடக்கும்போதும் 
அமெரிக்க தூதுவராக இருக்கும் ஒரு சங்கியை அவருடன் நெருக்கமாக பழக விட்டு 
உங்களுக்கு எப்போது வேண்டுமானாலும் நாம் கழுவிவிட தயராக இருக்கிறோம் 
ஆகவே எம்மை பற்றி நீங்கள் அதிகம் யோசிக்க தேவை இல்லை என்ற உறுதிமொழி வழங்குவது 
கடந்த 20 வருடமாக ஒரு சம்பிரதாயமாகவே மாறிவிட்டது.

அதுக்கு பதிலாக கிளிண்டன் தொடங்கி எல்லா அமெரிக்க ஜனாதிபதியும் இந்தியாவுக்கு சார்பாக ஒரு அறிக்கை விடுவார்கள் அருணாச்சல பிரதேசம் இந்தியாவுக்கே சொந்தமானது இதை சீனா கருத்தில் கொள்ளவேண்டும் என்று.

இந்த அறிக்கை வந்ததும் அதை டாலாய் லாமா (நாடு கடந்த தீபெத் அதிபர்) உடனே  சி என் என் னில் தோன்றி  
இந்த பகுதியை எவ்வளவு அடக்குமுறையாக சீனா வலு கட்டாயமாக பிடித்து வைத்திருக்கிறது என்று ஒரு விளக்கம்  கொடுப்பார்.

பின்பு நியூயோர்க்கில் இருக்கும் யூ என் னில் இது பற்றி ஒரு வாதம் நடக்கும்  
பின்பு இறுதி விவாதத்துக்கு சீனாவுக்கும் அழைப்பு விடுக்கப்படும்.
இறுதி விவாதத்துக்கு சீனாவும் வரும்  ........வந்து நாம் என்ன இல்லை என்றா சொல்கிறோம் 
நாம் அருணாச்சல பிரதேசத்தை விடுவிக்கிறோம் அதுபோல இந்தியாவும் எமது பிரதேசத்தை திருப்பி தரவேண்டும்  என்று கூறும். இவர்கள் அதே அளவு நில பரப்பை அருணாச்சல பிரதேசத்தில் சீனா எடுத்து கொள்ளலாம்  என்று கூறுவார்கள். சீனா கண்ணுக்கு கண் என்று ஆடம் பிடிக்கும்  

பின்பு நீங்கள் பகிடியாக எழுதினாலும்  வடிவேல் போலதான் .........
நீயும் இந்தப்பக்கம் வரப்படாது 
நானும் அந்தப்பக்கம் வர மாடடேன் 
என்று இந்திய சார்பு பக்கம் கொஞ்சம் அழுத்தி கூறும் அவ்வளவுதான்.  

Share this post

Link to post
Share on other sites
33 minutes ago, Maruthankerny said:

நீங்கள் என்னத்தைக் கூறினாலும் அருணாச்சல் பிரதேசம் சீனாவுக்குத்தான் சொந்தம். காஷ்மீர் முழுவதும் பாகித்தானுக்குச் சொந்தம். சீனா விரும்பினால் கேரளத்தையும் எடுத்துக்கொள்ளலாம். 😎

நாட்டாமை கப்பித்தானின் தீர்ப்புதான் இறுதியானது. 

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, போல் said:

இந்தியா என்ற மாயைக்குள் சிக்கியிருக்கும் இந்தியர்கள் உலகமே தெரியாத முட்டாள்கள் என்பதற்கு இக்காணொளியும் ஓர் உதாரணம்.

போல்.... அவர்களே, 
"நச்சென்று..."  இரண்டு வரியில்,  
எழுதிய... உங்கள் கருத்து,  உண்மையானது. :)

Share this post

Link to post
Share on other sites
On 28/5/2020 at 15:16, தமிழ் சிறி said:

இந்தக் காணொளியை முழுமையாக பார்க்கா விட்டாலும்,
5´வது நிமிடத்தில் இருந்து, கட்டாயம் பாருங்கள். :grin:

இவங்கள இப்படியே இருக்க விடுவதுதான் நல்லது. கற்பனையிலேயே 2020யில் உலக மகா வல்லரசான நாடல்லவா 😂

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • போன் ஐந்து மணித்தியாலம் விலாண்டினால் மண்டை   சிதறும் …. அம்மானுடன் ஐந்து நிமிடம் கும்மி அடித்தாலே மோட்சம் கிட்ட வரும்   !!!! இப்ப கப்பல் ஓடுற தமிழன் எப்ப செக்கு இழுக்கப் போறான் ..  
  • மாட்டையும் மரத்தையும் கதைக்கதானே பலர் இருக்கின்றார்கள்  சொன்னதை மாற்றி பல்டி அடிப்பதில் வல்லவர்   மரண சன்றிதழில் எப்படிவருமென்று எல்லோருக்கும் தெரியும். மனைவி அவர் என்ன செய்தார் என்று சொன்னதை கூட உங்களால்  நம்ப முடியவில்லையென்றால் நீங்கள் .....
  • சித்திரவதைத் தடுப்புச் சட்டத்துக்கு முன்னுரை எழுதும் சாத்தான்குளம் மரணங்கள் எம். காசிநாதன்   / 2020 ஜூலை 06 தமிழகப் பொலிஸ் துறையின் வரலாற்றில், ‘கரும்புள்ளி’யாக மாறிய சாத்தான்குளம் மரணங்கள், பொலிஸாரின் சித்திரவதைக்கு எதிரான குரலை, இந்திய அளவில் எழுப்பியுள்ளது.    ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக அழைத்துச் செல்லப்பட்டு, பொலிஸ் நிலையத்தில் அடித்துத் துவைக்கப்பட்டார்கள். பின்னர், சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு, அங்கிருந்து மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டபோது, உயிரிழந்தார்கள்.    தமிழகத்தின் தென் மாவட்டங்களை மட்டுமின்றி, மாநிலத்தையே உலுக்கிய இந்த ‘இருவர் மரணம்’ , சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையின் தீர்ப்புகளுக்குப் பின்னர், இந்திய அளவில் பேசப்படும் மரணங்களாக மாறியிருக்கின்றன.    இந்த வழக்கை விசாரித்த நீதியரசர்கள் பி.என். பிரகாஷ், புகழேந்தி ஆகிய இருவரும், இன்று தமிழகத்தில் மட்டுமல்ல, இந்திய அளவிலும் மனித உரிமையை நிலைநாட்டும் நீதிபதிகளாகவும் உயர்நீதிமன்றத்தின் அதிகாரம் என்ன என்பதைப் பொலிஸாருக்கு அறிவுறுத்தும் நீதிபதிகளாகவும் புகழ் பெற்று, உயர்ந்து நிற்கிறார்கள்.    மனித உரிமை ஆர்வலர்கள் பாராட்டும் நீதிபதிகளான இவர்கள், இந்த வழக்கில் பிறப்பித்த அதிரடி உத்தரவுகள், நீதி தேடிப் போராடிய மக்களுக்குப் பெரிய ஆறுதலை ஏற்படுத்தி இருக்கிறது. பொது அமைதி மீண்டும் தென் மாவட்டங்களில் மட்டுமின்றி, தூத்துக்குடி மாவட்டத்திலும் வழமைக்குத் திரும்பியிருக்கிறது.   “ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் மரணங்களில், கொலை வழக்காகப் பதிவு செய்வதற்கான முகாந்திரம் இருக்கிறது என்பது, பின்வரும் நடவடிக்கைகள் மூலம் உணர்ந்தகொள்ள முடியும்.  பொலிஸ் நிலையத்துக்கு விசாரிக்கப் போன நீதிபதியைப் பணி செய்ய விடாமல் தடுத்த அதிகாரிகளை, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆஜராக வைக்கப்பட்டது.  சம்பவம் நடைபெற்ற சாத்தான்குளம் பொலிஸ் நிலையத்தை, பொலிஸ் அதிகாரிகளின் நிர்வாகக் கட்டுப்பாட்டிலிருந்து விடுவித்து, வருவாய் துறையின் கட்டுப்பாட்டின் கொண்டு வரப்பட்டது. சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டதை மாற்றி, அது காலதாமதம் ஆகும் என்றும், உடனடியாக சி.பி.சி.ஐ.டி விசாரணையை, ஒரு நிமிடம் கூடத் தாமதம் ஆகாமல் எடுத்திட வேண்டும் என்றும் உத்தரவிட்டது.  பொலிஸ் நிலையத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் தாக்கப்பட்டமை குறித்துச் சாட்சி சொன்ன, அந்த நிலையத்தில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் ரேவதியுடன், உயர்நீதிமன்ற நீதிபதிகளே நேரடியாக அலை பேசியில் தொடர்புகொண்டு, பாதுகாப்பு, லீவு, சம்பளம் வழங்க உத்தரவிடப்பட்டது.  மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகள் எல்லாமே, மனித உரிமையை நிலைநாட்டுவதில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் போட்ட உத்தரவுகள். தமிழகத்தில் இதுவரை நடைபெற்ற பொலிஸ்  நிலைய மரணம், நீதிமன்றக் காவல் மரணம் போன்றவற்றில், இதுவரை இல்லாத அளவுக்கு முன்னுதாரணமாக, இந்த உத்தரவுகள் அமைந்துவிட்டன.  இனியொரு முறை, இப்படியொரு தாக்குதல் சம்பவமோ, மரணமோ பொலிஸ் நிலையத்தில் நடக்கக் கூடாது என்பது இந்த உத்தரவுகளில் மேலோங்கியுள்ளது. அந்த வகையில், சட்டத்தின் ஆட்சியை உயர்நீதிமன்றம் உறுதி செய்திருக்கிறது.   அதே சமயத்தில், பொலிஸ் நிலைய நிர்வாகக் கட்டுப்பாட்டை பொலிஸ் துறையிடமிருந்து வருவாய்த்துறைக்கு மாற்றியமையானது, வரலாறு காணாத உத்தரவு. இந்திய வரலாற்றில், இது முதல் உத்தரவாகவே போலிஸ் அதிகாரிகளால் பேசப்படுகிறது.  குறிப்பாக, பொலிஸ் துறை,  முதலமைச்சரின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. பொலிஸ் நிலைய நிர்வாகத்தை, முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இருந்தே, வேறு ஒரு துறைக்கு மாற்றியமை, சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதில், எப்போதுமே முன்னணிக் கள வீரர்களாக நிற்போம் என்பதை வெளிக்காட்டும் விதத்தில், உயர்நீதிமன்ற நீதிபதிகள் செயற்பட்டுள்ளார்கள். இந்த உத்தரவு, இந்திய மக்கள் அனைவராலும் வரவேற்கப்படுகிறது; வாழ்த்தப்படுகிறது.  இந்த இரு மரணங்களும் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் மனதை எவ்வளவு தூரம் பாதித்திருக்கிறது என்பதற்கு, அவர்கள் அளித்துள்ள உத்தரவில் உள்ள வாசகங்களே போதுமான ஆதாரங்களாக இருக்கின்றன. இவ்வழக்கின் விசாரணை அதிகாரியாக சி.பி.சி.ஐ.டி சப்-இன்ஸ்பெக்டர் அனில் குமாரை நியமித்த உத்தரவில், “இறந்த இருவரின் குடும்பத்தினரின் கண்களில் ஆறாக ஓடும் கண்ணீரைத் தன் முன் நிறுத்தி,- பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் கண்ணீரைத் துடைக்கும் விதத்தில், புலனாய்வு செய்வார் என்று நம்புகிறோம்” என்று உருக்கமாகத் தெரிவித்த குறிப்பிட்ட நீதிபதிகள், “இந்த வழக்கு விசாரணையை, உயர்நீதிமன்றம் நேரடியாகக் கண்காணிக்கிறது என்பதை, புலனாய்வு அதிகாரி மனதில் கொள்ள வேண்டும்” என்றும், எச்சரிக்கை மணி அடித்திருக்கிறார்கள்.   பொலிஸ் நிலையங்களில் இது போன்று சித்திரவதைகள், மனித நேயமற்ற விசாரணை முறைகள் (Third Degree Methods) இருக்கக் கூடாது என்று, பலமுறை உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றங்களும் எச்சரித்து வந்துள்ளன. இதன் உச்சக்கட்டமாக, இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களே இதைத் தடுக்கும் வகையில், சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்று, குரல் எழுப்பி வந்துள்ளனர்.  அதன் விளைவாக, 2010ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் இருந்த போது, 1975இல் ஐ.நா சபை கொண்டு வந்த, ‘சித்திரவதைக்கு எதிரான பிரகடனம்’  அதிகமாகப் பேசப்பட்டது. இந்தப் பிரகடனத்தில் 1997இல் இந்தியா கையெழுத்திட்டாலும், அதை ஏற்று உள்ளூர் சட்டங்களில் சித்திரவதைக்கு எதிரான, சட்டத் திருத்தங்கள் கொண்டு வரவில்லை என்ற குரல் எழும்பியது.   உச்சநீதிமன்றமே சில வழக்குகளில், “ஏன் ஐ.நா பிரகடனத்தில் கையெழுத்திட்டும் இதுவரை சித்திரவதை தடுப்புச் சட்டம் கொண்டு வரவில்லை” என்று மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கவே, இதைச் சமாளிக்க, சித்திரவதைத் தடுப்புச் சட்டமூலம் -2010 இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளில், ஒன்றான மக்களவையில் 2010 ஏப்ரல் மாதம் தாக்கல் செய்யப்பட்டு,  மே மாதம் நிறைவேற்றப்பட்டது.  அது, இன்னோர் அவையான மாநிலங்களவையில் நிறைவேறி இருக்க வேண்டிய நேரத்தில், அந்தச் சட்டமூலத்தில் சித்திரவதைகளைத் தடுக்கும் வலுவான பிரிவுகள் இல்லை என்று கூறி, அன்றைய சட்டத்துறை அமைச்சர் அஸ்வனி குமார் தலைமையிலான 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட தேர்வுக்குழுவுக்கு ஓகஸ்ட் 2010 இல் அனுப்பி வைக்கப்பட்டது.   அந்தக் குழு, இந்தச் சித்திரவதைத் தடுப்புச் சட்டமூலத்தை ஆய்வு செய்வதற்காக, ஒன்பது கூட்டங்கள் நடத்தியது. கைதிகள்,  மனித உரிமை ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமும் ஆலோசனை நடத்தி, இறுதியில் ஒரு சட்டமூலத்தை 2010 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் தயாரித்தது.  அந்தச் சித்திரவதைத் தடுப்புச் சட்டமூலத்தில், பொலிஸ் காவலில் சட்டவிரோதமாகச் சித்திரவதை செய்தால், மூன்று வருட சிறைத் தண்டனையும்  பாதிக்கப்பட்டவருக்கு ஒரு இலட்சம் ரூபாய் நட்டஈடும் சித்திரவதை செய்யப்பட்டது குறித்து, பாதிக்கப்பட்டவர் இரண்டு வருடங்களுக்குள் புகார் அளித்திருக்க வேண்டும் எனவும் இது போன்ற சித்திரவதை வழக்கில், ஒரு வருடத்துக்குள் விசாரித்துத் தீர்ப்பளித்து விட வேண்டும் என்பன போன்ற முக்கிய பிரிவுகள், சேர்க்கப்பட்டு இருந்தன. ஆனால், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் ஆட்சி இழந்ததால், அந்தச் சட்டமூலம் அப்படியே காலாவதியானது.   பின்னர், 2014இல் ஆட்சிக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க அரசாங்கத்துக்கும் இந்த அழுத்தம் கொடுக்கப்பட்டது. குறிப்பாக, முன்னாள் சட்டத்துறை அமைச்சர் அஸ்வணி குமார், உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, இந்திய சட்ட ஆணைக்குழுவுக்கு இந்த விடயம் அனுப்பப்பட்டு, ஐ.நா பிரகடனத்தை ஏற்று, உள்ளூர் சட்டங்களில் திருத்தம் கொண்டு வருவது குறித்து ஆராயுமாறு பணிக்கப்பட்டது.  அதன் அடிப்படையில், 273ஆவது சட்ட அறிக்கை அளிக்கப்பட்டு, அதில் புதிதாக ‘சித்திரவதைத் தடுப்புச் சட்டமூலம் 2017’ தயார் செய்யப்பட்டது. இந்தப் புதிய அறிக்கையில், 2010 சட்டமூலத்தில் இருந்த மூன்றாண்டு சிறைத்தண்டனை, ஆயுள்தண்டனையாக மாற்றப்பட்டமை மிக முக்கியமான பரிந்துரையாகும்.  அதேபோல், ஒருவரைச் சித்திரவதை செய்யவில்லை என்று நிரூபிக்கும் பொறுப்பு, பொலிஸ் நிலைய அதிகாரியின் மீது சுமத்தப்பட்டது.  பாதிக்கப்பட்டவரின் சமூக, பொருளாதார இழப்புகளை அடிப்படையாக வைத்து, நீதிமன்றமே நட்ட ஈட்டை நிர்ணயிக்க வேண்டும்  என்று கூறப்பட்டது.  இந்தச் சித்திரவதைச் சட்டம் 2017இல் நடைமுறைக்கு வந்திருந்தால், பொலிஸ் நிலைய மரணங்கள் நிகழ்ந்திருக்காது.  1975இல்  வெளிவந்த ஐ.நா பிரகடனத்துக்கு, 22 வருடங்களுக்குப் பிறகு கையெழுத்திட்டும் இன்றுவரை,  சித்திரவதை தடுப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டு,  உள்ளூர் குற்றவியல் விசாரணை நடைமுறைச் சட்டம் 1973, இந்திய தண்டனைச் சட்டம் 1872 ஆகியவற்றில் உரிய திருத்தங்கள் கொண்டு வரவில்லை என்ற கோரிக்கை அலை நாடு முழுவதும் பரவியிருக்கிறது.  சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த ஏ.பி.ஷாவே, “சட்ட விரோத சித்திரவதைகளுக்கு முடிவுரை எழுதும் காலம் வந்து விட்டது” என்று தன் ஆவேசத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆகவே, சித்திரவதைத் தடுப்புச் சட்டம் விரைவில் வருவதற்கு, சாத்தான்குளம் பொலிஸ் நிலைய மரணங்கள் முன்னுரை எழுத வேண்டும் என்பது, சட்டத்தின் ஆட்சியை விரும்பும் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.      http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/சித்திரவதைத்-தடுப்புச்-சட்டத்துக்கு-முன்னுரை-எழுதும்-சாத்தான்குளம்-மரணங்கள்/91-252842
  • இம்ப்ரோ சித்த மருந்து விவகாரம்; ஆயுஷ் அமைச்சகம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு   இம்ப்ரோ சித்த மருந்தில் கொரோனாவை தடுக்கும் திறன் உள்ளதா? என்று ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய ஆயுஷ் அமைச்சகத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பதிவு: ஜூலை 07,  2020 11:07 AM மதுரை, மதுரையைச் சேர்ந்த சித்த மருத்துவர் எஸ்.சுப்பிரமணியன், கொரோனா வைரசை கட்டுப்படுத்த 66 மூலிகைகள் உள்ளடங்கிய இம்ப்ரோ என்ற பொடியைத் தயாரித்திருந்தார். பின்னர் இந்தப் பொடியை நுண்ணுயிர் ஆய்வுக்கு உட்படுத்த உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்ற கிளையில் சுப்பிரமணியன் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், மனுதாரர் கண்டுபிடித்துள்ள இம்ப்ரோ மருந்தை ஆய்வு செய்வதற்காக சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி, அலோபதி மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழுவை தமிழக அரசு அமைக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.  அண்மையில், இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, மதுரை சித்த மருத்துவர் கண்டுபிடித்துள்ள புதிய சித்த மருந்து பொடியில் கிருமியை கட்டுப்படுத்தும் சக்தி இருப்பதாக  உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்து இருந்தது. இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த மதுரை ஐகோர்ட் கிளை, “ இம்ப்ரோ மருந்தில் கொரோனாவை தடுக்கும் திறன் உள்ளதா என்று ஆய்வு செய்து ஆகஸ்ட் 3 ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று ஆயுஷ் அமைச்சகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.  https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/07110723/Impro-Siddha-Medicine-AYUSH-Ministry-directs-to-file.vpf    
  • கரும்புலிகள் தினத்தில் முல்லைதீவில் குண்டை வெடிக்கவைக்க திட்டமிட்டனர்- ஐலன்ட் செய்தி July 7, 2020 கரும்புலிகள் தினத்தில் தாக்குதலை மேற்கொள்வதற்காக தயாரிக்கப்பட்ட குண்டே இயக்கச்சியில் வெடித்தது என விசாரணையாளர்கள் தெரிவிப்பதாக ஐலன்ட் செய்தி வெளியிட்டுள்ளது. இயக்கச்சியில் முன்கூட்டியே வெடித்த குண்டை முல்லைத்தீவிற்கு கொண்டு சென்று வெடிக்கவைப்பதற்கான திட்டம் காணப்பட்டது என ஐலன்ட் செய்தி வெளியிட்டுள்ளது.   முன்னாள் போராளிகளும் கிளிநொச்சியை சேர்ந்த பல இளைஞர்களும் கரும்புலிகள் தினத்தை கடைப்பிடிப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டனர் என விசாரணையாளர்கள் தெரிவிக்கின்றனர் என ஜலன்ட் தெரிவித்துள்ளது.   சனிக்கிழமை சம்பவத்தினை தொடர்ந்து குண்டு தயாரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட முன்னாள் பேராளியின் மனைவியையும் கைதுசெய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்,அவரும் முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்க போராளி, குண்டை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டவர் விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் புலனாய்வு பிரிவின் போராளி அவரதுபெயர் மேனன் என ஐலன்ட் செய்தி வெளியிட்டுள்ளது.   மேனன் முதலில் கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அவரது நிலை மோசமடைந்ததை தொடர்ந்து அனுராதபர வைத்தியசாலையி;ல அனுமதிக்கப்பட்டுள்ளார் என ஐலன்ட் தெரிவித்துள்ளது. மேனனின் வீட்டை சோதனையிட்டவேளை இரு குண்டுகளையும் வெடிக்கவைக்கும் கருவிகளையும் கண்டுபிடித்தனர்.முன்கூட்டியே குண்டு வெடித்ததன் காரணமாக விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களால் கரும்புலிகள் தினத்தில் தங்கள் திட்டத்தினை முன்னெடுக்க முடியவில்லை என ஐலன்ட் தெரிவித்துள்ளது. கைதுசெய்யப்பட்ட முன்னாள் போராளி இராணுவத்தினரிடம் சரணடைந்த பின்னர் புனர்வாழ்விற்கு உட்படுத்தப்பட்டவர் எனவும்விடுதலையான பின்னர் புதிதாக உருவாக்கப்பட்ட அரசியல் கட்சியில் இணைந்தவர் எனவும் தெரியவந்துள்ளதாக விசாரணையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர் எனஐலன்ட் தெரிவித்துள்ளது. இதேவேளை யாழ்பல்கலைகழக மாணவர்கள் கரும்புலிகள் தினத்தை கடைப்பிடித்தமை குறித்து விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என ஐலன்ட் குறிப்பிட்டுள்ளது.   http://thinakkural.lk/article/52409