Jump to content

2021 இல் 1 ஆம் தர மாணவர் அனுமதிக்கான விண்ணப்பம் கோருகிறது கல்வியமைச்சு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

2021 இல் 1 ஆம் தர மாணவர் அனுமதிக்கான விண்ணப்பம் கோருகிறது கல்வியமைச்சு

grade-1-1-300x175.jpg2021 ஆம் ஆண்டு முதலாந் தரத்தில் மாணவர்களைச் சேர்த்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளன.

விண்ணப்பங்களை 15 ஆம் திகதி ஜுலை மாதம் 2020க்கு முன்னர் பூர்த்தி செய்து பதிவுத்தபாலில் பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பிவைக்க வேண்டுமென கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

விண்ணப்பத்தில் கோரப்பட்டுள்ள விபரங்கள் யாவும் ஜுன் மாதம் 30 ஆம் திகதி 2020 க்கு பொருத்தப்பாடு உடையதாக இருப்பதோடு உரிய ஆவணங்கள் யாவும் இணைக்கப்பட வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://thinakkural.lk/article/43933

 

முதலாம் வகுப்பிற்கு முதல் நாள் அழது கொண்டு அம்மா அப்பா காலை பிடித்து அடம்பிடித்தவர்கள் எல்லாம் ஓடி வந்து பதியவும், அந்த நாள் மறக்க முடியுமா? எத்தனை புதிய முகங்கள்...

 

Kid School Crying Images, Stock Photos & Vectors | Shutterstock

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலாம் ஆண்டிற்கான குழந்தைகளை அனுமதிப்பு ; நெரிசலைக் குறைக்கத் தீர்வு

1-2-29-300x188.jpgமுதலாம் ஆண்டிற்குக்  குழந்தைகளைப் பாடசாலையில் சேர்ப்பதில்  ஏற்பட்டுள்ள நெரிசலைக் குறைப்பது தொடர்பான ஜனாதிபதியின் வழிகாட்டலுக்கு அமையக் கல்வி அமைச்சின் கீழ் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தெற்கு மாகாணத்தின் கல்விப் பிரிவில்  தலா ஒரு பாடசாலை என்ற அடிப்படையில் 39 பாடசாலை ,    தமிழ் மொழி பாடசாலை  6 உட்பட   45   பாடசாலைகளை தேர்ந்தெடுத்து பிரசித்தி பெற்ற பாடசாலைகளில் கிடைக்கின்ற சகல வசதிகளையும் குறித்த பாடசாலைகளுக்கு    வழங்கத் திட்டமிட்டுள்ளது.
ஜனாதிபதியின்  வழிகாட்டலுக்கு அமையத்  தென் மாகாண சபை கல்வி அமைச்சின் கீழ்  தன்மாகாண ஆளுநராக வில்லி இந்த திட்டத்தை  செயற்படுத்துவார்.
அதன் முதல் கட்டமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலை  காலி பிராந்திய ரிச்சர்ட் பதிரானா வித்தியாலயத்தில் கடந்த வாரம் புனரமைப்பு விழாவில் இடம்பெற்றது.
இதன்போது  தெற்கு மாகாண ஆளுநர் வில்லி கமகே மற்றும் அமைச்சர் ரமேஷ் பதிரானா ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கென்னவோ.. அரிவரி குரிவரி.. அம்பட்டக் கணபதின்னு.. ஆக்கள்.. நக்கல் அடிச்சது தான் ஞாபகம் இருகுது. 

மேலும்.. அரிவரியில்.. பள்ளி வாழ்க்கை.. மிக மகிழ்ச்சியானது. காரணம்.. விளையாட்டோடு படிப்பு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, nedukkalapoovan said:

எனக்கென்னவோ.. அரிவரி குரிவரி.. அம்பட்டக் கணபதின்னு.. ஆக்கள்.. நக்கல் அடிச்சது தான் ஞாபகம் இருகுது. 

மேலும்.. அரிவரியில்.. பள்ளி வாழ்க்கை.. மிக மகிழ்ச்சியானது. காரணம்.. விளையாட்டோடு படிப்பு. 

ஆமால்ல இது இப்பதான் ஞாபகத்திற்கு வருகுது

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.