Jump to content

ஆலையடிவேம்பில் 3 இலட்சம் பெற்ற பிரதேச செயலாளர், உதவித் திட்டமிடல் பணிப்பாளருக்கு விளக்கமறியல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆலையடிவேம்பில் 3 இலட்சம் பெற்ற பிரதேச செயலாளர், உதவித் திட்டமிடல் பணிப்பாளருக்கு விளக்கமறியல்

திருக்கோவில் நிருபர்
 
VILA.jpg
 
வீதி நிர்மாண ஒப்பந்தகாரரிடமிருந்து 3 இலச்சம் ரூபா லஞ்சம் பெற்றபோது கைது செய்யப்பட்ட ஆலையடிவேம்பு பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர்  மற்றும் பிரதேச செயலாளர் உட்பட இருவரையும் எதிர்வரும் 10ஆம் திகதி வரை  விளக்க மறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.எச்.எம் ஹம்ஸா இன்று வியாழக்கிழமை (28) உத்தரவிட்டார்.
 
அரசினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் ‘சப்ரிகம’ அபிவிருத்தி வேலைத் திட்டத்தின் கீழ், அம்பாறை ஆலையடிவேம்பு பிரதேசத்தில் தலா 20 இலச்சம் ரூபா வீதம்  ஒதுக்கப்பட்ட 3 வீதிகளை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தமொன்றினை அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒப்பந்தக்காரர் ஒருவர் பெற்றுள்ளார்.
 
இந்த வீதி நிர்மாணத்தை அமுலாக்கும் பொறுப்பு, ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மேற்படி ஒப்பந்தகாரர் பெற்றுள்ள ஒவ்வொரு வீதிக்கும் தலை ஒரு லட்சம் ரூபா வீதம் 03 லட்சம் ரூபாவை லஞ்சமாக வழங்க வேண்டுமென ஆலையடி ஆவம்பு பிரதேச செயலாளர் கோரியுள்ளார்.
 
அதேவேளை பணம் கிடைக்கும் வரை, அந்த வீதி நிர்மாண வேலையை ஆரம்பிப்பதற்கான அனுமதியை பிரதேச செயலக தொழில்நுட்ப உத்தியோகத்தருக்கு வழங்காமல் பிரதேச செயலாளர் இழுத்தடித்து வந்துள்ளதாகவும்  இந்தப் பின்னணியிலேயே தன்னிடம் பிரதேச செயலாளர் லஞ்சம் கோரும் விடயத்தை, குறித்த ஒப்பந்தக்காரர்  கொழும்பிலுள்ள லஞ்ச, ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளுக்கு அறிவித்தார்.
 
இதனையடுத்து பிரதேச செயலாளர் லஞ்சம் வாங்கும் போது அவரை கையும் மெய்யுமாகப் பிடிப்பதற்காக சில நாட்களுக்கு முன்னர் கொழும்பிலிருந்து லஞ்ச, ஊழல் ஆணைக்குழுவைச் சேர்ந்த 06 பேர் கொண்ட குழுவினர் அம்பாறை மாவட்டத்துக்கு வந்து தங்கிநின்று குறித்த ஒப்பந்தகாரரிடம் ஆலோசனைகளை வழங்கிய நிலையில்
 
சம்பவதினமான இன்று வியாழக்கிழமை (28) லஞ்ச ஊழல் ஆணைக்குழு கொண்டு வந்த 03 லட்சம் ரூபா பணத்தை, குறித்த ஒப்பந்தக்காரரிடம்; கொடுத்த பிரதேச செயலாளர் லவநாதனுக்கு அதனை வழங்குமாறு கூறியுள்ளனர்.
 
அந்த நிலையில் ஒப்பந்தகாhர் பிரதேச செயலாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பணம் வழங்குவது தொடர்பாக பேசிய நிலையில்  பிரதேச செயலாளர் லவநாதன் பணத்தைப் பெற்றுக் கொள்ளாமல், அதனை பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் உதய குமாரிடம் வழங்குமாறு, ஒப்பந்தக்காரருக்கு தொலைபேசியில் தெரிவித்துள்ளார் .
 
இதற் கிணங்க, பிரதேச செயலகத்துக்கு ஒப்பந்தக்காரருடன் சாதாரண நபர்போல் ஆடையணிந்த லஞ்ச, ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளும் சென்று, மூன்று லட்சம் ரூபா பணத்தையும் ஒபபந்தக்காரரிடம் இருந்து உதவித் திட்டமிடல் பணிப்பாளர் உதயகுமார் பெற்றபோது, அவரை லஞ்ச, ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் கையும் மெய்யுமாகப் பிடித்து கைது செய்ததுடன் பிரதேச செயலாளர் லவநாதனையும் கைது செய்துள்ளதாக பொலிசாரரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
 
இதில் கைது செய்யப்பட்ட  இருவரையும்  அக்கரைப்பற்று பிராந்திய உதவி   பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு  அவர்களிடமிருந்து வாக்கு மூலம் பெறப்பட்ட பின்னர் இரவு 7 மணியளவில்  அக்கரைப்பற்று நீதவான் நீதமன்றத்தில் நீதவான் எம்.எச்.எம் ஹம்ஸா இ மன்னிழலயில் ஆஜர் செய்யப்பட்டபோது, இவர்களை  ஜுன் மாதம் 10ஆம் திகதி வரை இவர்களை விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹாஹா தமிழ் சேவையாளர்களின் சேவை இதுதான் ரெண்டு பேரும் பாண்டிருப்பை சேர்ந்தவர்கள்

லவன் ,உதயன்  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 52 வீதமான மக்கள் போரை விரும்பவில்லை என்று எனக்கு விளங்குகிறது. 74 வீதமான மக்கள் போரை வீரும்பவில்லை என்று உங்களுக்கும் கபிதானுக்கும் விளங்குகிறது.  🙂
    • ஆஹா.... "கொல்லைப்புறம்". 😂 சிரித்து வயிறு நோகுது.  
    • அங்கே என்ன நடந்தது? 1. "ரேடாரில் மாட்டாமல் தாழப் பறக்கும் நுட்பத்தை முதலில் பயன்படுத்தியது இஸ்ரேல்" என்று நான் எழுதினேன் (கவனியுங்கள்: அமெரிக்கா அல்ல, இஸ்ரேல்). 2. நீங்கள் வந்து "ஜப்பான் காரர் இதை பேர்ள் ஹாபரில் செய்து விட்டார்கள், சொம்பு, முட்டு, பொங்கல், அவியல்" என்று குதித்தீர்கள். ஆதாரம் கேட்டேன், மௌனமாகப் போய் விட்டீர்கள் (ஏனெனின், ஜப்பான் காரன் கூட தான் இதைச் செய்ததாக எங்கும் சொல்லி நான் அறியவில்லை). 3. பின்னர் நான் ரேடாரில் ஜப்பான் விமானங்கள் தெரிந்தமை, ஏன் அமெரிக்கா தவற விட்டது என்று வரலாற்று நூல்களில் இருந்த தகவல்களைச் சொன்னேன். 4. இன்னொரு உறவு, விமானங்கள் ரேடாரில் தெரிந்ததை உறுதிப் படுத்தும் ஒரு ஆதாரப் பதிவை இணைத்தார் (கவனியுங்கள்: நீங்கள் எதுவும் இணைக்கவில்லை😎!) அதே ஆதாரத்தை , தாழப் பறந்து வந்து ஜப்பானியர் தாக்கியதன் ஆதாரமாக எனக்கு நீங்கள் சிவப்பெழுத்தில் கோடிட்டுக் காட்டியிருந்தீர்கள் (மீண்டும் கவனியுங்கள்: "ஆங்கிலம் ஒரு மொழியேயொழிய, அது அறிவல்ல!" - எங்கேயோ கேட்ட குரல்😎!) எனவே, இது வரை ஜப்பானியர் தாழப் பறந்து வந்து ரேடாரில் இருந்து தப்பினர் என்பதற்கு ஒரு ஆதாரமும் நீங்கள் தரவில்லை (இல்லாத ஆதாரத்தை எப்படித் தருவதாம்😂?).   இனி உங்கள் பிரச்சினைக்கு வருவோம்: நீங்கள் உட்பட யாழில் ஓரிருவரின் பிரச்சினை "மேற்கு எதிர்ப்பு" என்ற ஒரு உணர்ச்சி. அந்த உணர்ச்சிக்கு நியாயமான காரணங்கள் இருக்கலாம், அதை மறுக்க யாருக்கும் உரிமையில்லை. ஆனால், அந்த உணர்ச்சி மட்டுமே உலகத்தை, சம்பவங்களைப் புரிந்து கொள்ளப் போதாது. அப்படி உணர்ச்சி மட்டும் வைத்து "நாசா சந்திரனுக்குப் போகவில்லை" என்று கூட வாதாடும் நிலை இருக்கிறது பாருங்கள்? அந்த முட்டாள் தனத்தைத் தான் நான் சவாலுக்குட் படுத்துகிறேன். இனியும், தவறாமல் செய்வேன் - நீங்கள் சொம்போடு குறுக்கே மறுக்கே ஓடினாலும், நான் நிறுத்தாமல் செய்வேன்! ஏன் இப்படி சவலுக்குட்படுத்துவது முக்கியம்? இந்த மேற்கு எதிர்ப்பு உணர்ச்சி மயப் பட்டு, பொய்த்தகவல்களை உங்கள் போன்றோர் பரப்புவதால் மேற்கிற்கு ஒரு கீறலும் விழாது. ஆனால், எங்கள் தமிழ் சமுதாயத்தில், குறிப்பாக புலத் தமிழ் சமுதாயத்தில், இதனால் ஒரு முட்டாள் பரம்பரை உருவாகி வரும் ஆபத்து இருக்கிறது. எனவே, உங்கள் போன்றோரை அடிக்கடி இப்படிச் சவாலுக்குட்படுத்துதல் அவசியம். உங்களுக்கு முடிந்தால், இந்த சவால்களை ஆதாரங்களை இணைத்து எதிர் கொள்ளலாம். இல்லையேல் சொம்போடு நின்று விடலாம், இரண்டும் எனக்கு சௌகரியமே!
    • Respondents were asked if they think Israel should respond to the Iranian attack on Saturday night, to which 52% answered that it is better not to respond to end the current round of conflict. In comparison,  48% answered that Israel should respond, even if it means that the price would be an extension of the current conflict.   இதில் யாருக்கு விளக்கமில்லை?? இன்னுமொன்று புரிகிறதா? கூட்டுநாடுகள் இல்லையென்றால் இஸ்ரேல் பாடு அதோகதிதான்!!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.