• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
உடையார்

சுமந்திரனின் சிங்கள நேர்காணல் தொடர்பில் தமிழரசுக் கட்சி மத்திய செயற்குழு கூடி ஆராயும்; சம்பந்தன் அறிவிப்பு

Recommended Posts

சுமந்திரனின் சிங்கள நேர்காணல் தொடர்பில் தமிழரசுக் கட்சி மத்திய செயற்குழு கூடி ஆராயும்; சம்பந்தன் அறிவிப்பு

Sampanthan-300x169.jpg“விமர்சனங்கள் எல்லாவற்றுக்கும் நாம் பதிலளித்துக்கொண்டிருக்க முடியாது. கூட்டமைப்புக்குள் ஒற்றுமை மிக அவசியம். சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சுமந்திரனின் சிங்கள நேர்காணல் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூடி ஆராயும்.”

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான மாவை சேனாதிராஜா (தமிழரசுக் கட்சி), செல்வம் அடைக்கலநாதன் (ரெலோ), தர்மலிங்கம் சித்தார்த்தன் (புளொட்) ஆகியோருக்கும் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று மாலை கொழும்பில் நடைபெற்றது.

இதில் உரையாற்றிய போதே சம்பந்தன் இதனைத் தெரிவித்தார். அவர் இங்கு மேலும் முக்கியமாகத் தெரிவித்ததாவது;

“எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் எமக்கு மிக முக்கியமானது. இந்தநிலையில், தேர்தல் தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை நான் எதிர்பார்த்திருக்கின்றேன். இன்று பெரும்பாலும் தீர்ப்பு வரக்கூடும். எனினும், தேர்தலை நாம் எந்தவேளையிலும் எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். இம்முறை காத்திரமான தேர்தல் அறிக்கையை நாம் தயாரிக்க வேண்டும்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் அண்மையில் நாம் நடத்திய சந்திப்பின் போது தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை, காணி விடுவிப்பு உள்ளிட்ட சில விடயங்கள் தொடர்பில் வாக்குறுதிகளை அவர் வழங்கியிருந்தார். ஆனால், அந்த வாக்குறுதிகள் அப்பிடியே இருக்கின்றன. இது தொடர்பில் இன்று நாம் கலந்து பேசி ஒரு தீர்மானம் எடுக்க வேண்டும்” என்றார்.

 

http://thinakkural.lk/article/43980

Share this post


Link to post
Share on other sites

இவங்கள் எல்லோருக்கும் தமிழன் என்றால் முட்டாள்கள் என்ற நினைப்பு சட்டதரணிகள் மற்றவன் எல்லாம் அடிமைகள் என்று நடக்கிறாங்கள்

Share this post


Link to post
Share on other sites

செயற்குழு 

பொது குழு 

உயர் மட்ட குழு 

தேர்தல் பணி குழு 

ஆலோசனை குழு ..

கட்சி ஒழுங்காற்று குழு (  disciplinary committee  ) கூடி ஆராய்ந்து நோட்ஸ் கொடுத்த பிறகு தானே மத்திய செயற்குழு ஆராயும்..☺️..😊

18813547_1812082219120088_31501085362039

என்னம்மோ போங்கப்பா ..👍

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, உடையார் said:

சுமந்திரனின் சிங்கள நேர்காணல் தொடர்பில் தமிழரசுக் கட்சி மத்திய செயற்குழு கூடி ஆராயும்; சம்பந்தன் அறிவிப்பு

ஆராய்ந்து விட்டு அவர்களது தனிப்பட்ட கருத்துக்களை தனித்தனியாக தெரிவிப்பார்கள் 

Share this post


Link to post
Share on other sites

என்ன திரும்பவும் முதலில் இருந்தா 😂😂😂

Share this post


Link to post
Share on other sites

கூட்டமைப்பின் நேற்றைய கூட்டத்தில் என்ன நடந்தது? சுமந்திரன் வந்தார்; செல்வம் அடைக்கலநாதன் ‘மிஸ்ஸிங்’

TNA-5.jpgதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் நேற்று மாலை கொழும்பில் நடந்தது. இதன்போது, எம்.ஏ.சுமந்திரன் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் விவகாரம் பூதாகரமாக வெடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், கூட்டம் சுமூகமாகவே இடம்பெற்றது.

உயர் நீதிமன்றத்தில் இடம்பெற்ற பொதுத் தேர்தல் குறித்த விசாரணை முடிவடைந்ததையடுத்து சுமந்திரன் கூட்டத்துக்கு நேரடியாகவே வந்ததாகத் தெரிகின்றது. ஆனால், சுமந்திரனுக்கு எதிராக முதலாவது கணையைத் தொடுத்த செல்வம் அடைக்கலநாதன் நேற்றைய கூட்டத்துக்கு சமூகமளிக்கவில்லை.

இரா.சம்பந்தன் தலைமையில் அவரது இல்லத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாவை சேனாதிராஜா, சித்தார்த்தன், சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

அண்மையில் சிங்கள ஊடகமொன்றில் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த கருத்து, ஆயுதப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் விதமாக அமைந்திருந்ததாக கடுமையான விமர்சனங்கள் எழுந்திருந்தன.

இந்த நிலையில் நேற்று முன் தினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் இரா.சம்பந்தனின் இல்லத்தில் சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்பில், எம்.ஏ.சுமந்திரன் விவகாரத்தை முதன்மையானதாக விவாதிக்கவில்லை. பொதுத்தேர்தல், புதிய அரசுடன் பேச்சு, புதிய இந்தியத் தூதர், ஜனாதிபதி, பிரதமருடன் பேச்ச, அரசியல் கைதிகள் விடயம் என்பன பற்றி ஆராயப்பட்டது.

முக்கியமாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நடவடிக்கைகள் தொடர்பாக அதிருப்தி தெரிவித்து அரசியல் கைதிகள் ஒரு கடிதம் அனுப்பியிருந்தனர். அது குறித்து விவாதிக்கப்பட்டு, இனியும் காலத்தை இழுத்தடிக்காமல் அரசுடன் உடனடியாக இது பற்றி பேசுவதென முடிவாகியிருந்தது.

இந்த நிலையில் நேற்றைய சந்திப்பிற்கு எம்.ஏ.சுமந்திரனும் அழைக்கப்பட்டிருந்தார். சுமந்திரனைப் பதவிவிலக்கவேண்டுமென நாம் தனிப்பட்ட காரணங்களுக்காக வலியுறுத்தவில்லை, ஆனால் அவராகக் கூட்டமைப்பின் பேச்சாளர் பொறுப்பைத் துறக்கவேண்டும் எனக் கடந்த கூட்டத்தில் வலியுறுத்திய செல்வம் அடைக்கலநாதன் நேற்றைய சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை. அவர் திடீர் உடல்நலக் குறைவுக்குள்ளாகியுள்ளார்.

நேற்றைய சந்திப்பில், சுமந்திரனைப் பேச்சாளர் பொறுப்பிலிருந்து நீக்கவேண்டுமென நாம் விரும்பவில்லை. ஆனால் அவர் தனிப்பட்ட கருத்துக்களை தவிர்த்து, மக்களின் உணர்வுகளை புரிந்து பேசவேண்டுமென மாவை சேனாதிராசா தெரிவித்தார். அதை ஆமோதித்த இரா.சம்பந்தன், சுமந்திரனின் சர்ச்சைக்குரிய பேட்டி வெளியான பின்னர் தன்னுடனும் பலர் பேசியதாகக் குறிப்பிட்டார். அந்தப் பேட்டி கூட்டமைப்பின் வாக்கு வங்கியில் தாக்கத்தைச் செலுத்துமெனப் பரவலாகத் தனக்கு தெரிவிக்கப்பட்டதாகவும் கூறினார்.

“தமிழ் அரசியல் நெருக்கடியான சூழலில் இருக்கும் இன்றைய சமயத்தில் ஒவ்வொருவரும் பொறுப்பான முறையில் கதைக்க வேண்டும். மக்களின் உணர்வுகளைக் காயப்படுத்தாமல் பேச வேண்டும்” என சம்பந்தன் ஆலோசனை தெரிவித்தார்.

“கூட்டமைப்பின் பேச்சாளர் பொறுப்பிலிருந்து நான் விலகமாட்டேன். விரும்பினால் கூட்டமைப்பு என்னை விலக்கிக் கொள்ளட்டும்” என எம்.ஏ.சுமந்திரன் இதன் போது தெரிவித்தார். எனினும், இது மோதல் களமல்ல. அனைவரும் ஒற்றுமையாகச் செயற்பட்டாலே கூட்டமைப்பினால் எதையாவது செய்ய முடியும். அனைவரும் தவறுகளைப் புரிந்து கொண்டு, முன்னோக்கிச் செல்ல வேண்டும் என இரா.சம்பந்தன் குறிப்பிட்டார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

 

http://thinakkural.lk/article/44135

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this