Sign in to follow this  
உடையார்

கொரோனா பாதிப்பு: மும்பை அரசு மருத்துவமனையில் ஒரே படுக்கையில் 2 நோயாளிகளுக்கு சிகிச்சை

Recommended Posts

கொரோனா பாதிப்பு: மும்பை அரசு மருத்துவமனையில் ஒரே படுக்கையில் 2 நோயாளிகளுக்கு சிகிச்சை

கொரோனா பாதிப்பு: மும்பை அரசு மருத்துவமனையில் ஒரே படுக்கையில் 2 நோயாளிகளுக்கு சிகிச்சை

மும்பை

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரி்ன் எண்ணிக்கை 1,65,799 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 71,105 ஆக உயர்ந்துள்ளது. 89,987 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். கொரோனாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,706 ஆக அதிகரித்துள்ளது.


''மராட்டிய மாநிலத்தில் பலியானோர் எண்ணிக்கை 1,982 ஆக அதிகரித்துள்ளது. அடுத்த இடத்தில் உள்ள குஜராத்தில் உயிரிழப்பு 960 ஆகவும், மத்தியப் பிரதேசத்தில் உயிரிழப்பு 321 ஆகவும் அதிகரித்துள்ளது.

மராட்டிய மாநிலத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 59,546 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 18,616 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் பிர்ஹன் மும்பை மாநகராட்சித் தகவல்களின் படி 645 ஐசியு படுக்கைகளில் 99 சதவீதம் நிரம்பிவிட்டன. ஆக்சிஜன் உதவியுடன் கூடிய 4,292 படுக்கைகளில் 65 சதவீதம் படுக்கைகள் நிரம்பியுள்ளன.
373 வென்ட்டிலேட்டர்களில் 73 சதவீதம்  உபயோகத்தில் உள்ளன.

நேற்று மட்டும் மும்பையில் மேலும் 1438 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளன. இதன் மூலம் மும்பையில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை 35,273 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 38 பேர் பலியாகியுள்ளனர்.

மும்பையில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் இடவசதி இல்லாததால், ஒரே படுக்கையில் இரண்டு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அவலம் நிலவுகிறது எனபிபிசி தமிழ்வீடியோவுடன்  செய்தி வெளியிட்டு உள்ளது.

தி கார்டியன் வெளியிட்டு உள்ள செய்தியில்

மும்பையின் சியோன் மருத்துவமனை அவசர வார்டில் ஒரு படுக்கையில் இரண்டு நோயாளிகள் உள்ளனர்.  மும்பை, 2 கோடிக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் நகரம். சாதாரண காலங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும் சியோன் போன்ற அரசு மருத்துவமனைகளில் கூட்டம்  அதிகமாக இருக்கும். தற்பொது கொரோனா பாதிப்பால் நிரம்பிவழிகிறது இத்னால் படுக்கைகள் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது.

முன்னணி மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் போன்ற மருத்துவ ஊழியர்களின் பற்றாக்குறையையும் அங்கு உள்ளன என கூறி உள்ளது.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/05/29160817/Patients-share-beds-as-coronavirus-cases-overwhelm.vpf

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • அடுத்த வீட்டுக்குள்... நடப்பதை, எட்டிப்  பார்க்கும் பழக்கம் எல்லா இடமும் இருக்குது போலை...
    • இனவாத சிந்தனையுடைய வேட்பாளர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும்- சுமனரட்ன தேரர் இனவாத சிந்தனையுடன் களமிறங்கியுள்ள வேட்பாளர்களை இனங்கண்டு, மக்கள் புறக்கணிக்க வேண்டும் என மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரட்ன தேரர் வலியுறுத்தியுள்ளார். மட்டக்களப்பில் இடம்பெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடக சந்திப்பில் அம்பிட்டிய சுமனரட்ன தேரர்  மேலும் தெரிவித்துள்ளதாவது, “மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் இன்றும் வறுமைக் கோட்டுக்கு கீழ்தான் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களின் வாழ்வாதாரம் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. குடிக்க நீர் கூட இல்லாமல் சில குடும்பங்கள் காணப்படுகின்றன. எனினும், இதுதொடர்பாக எல்லாம் அக்கரைக் கொள்ளாமல் இருக்கும் அரசியல்வாதிகள், இனவாதத்தையும் மதவாதத்தையுமே மக்கள் மனங்களில் விதைத்து வருகிறார்கள். இவ்வாறான செயற்பாடுகளால் எந்தக் காலத்திலும் மக்களின் உரிமையை வென்றெடுக்க முடியாது. இனவாதத்தை தோற்றுவிக்கும் முகமாக பிரபாகரனை காட்டி வாக்குகேட்டு நாடாளுமன்றம் சென்ற உறுப்பினர்கள், மக்களுக்காக செய்தது என்ன என்று கேட்க விரும்புகிறேன். வடக்கின் முன்னாள் முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன், ஒரு நேரத்தில் தன்னை ஜனநாயகவாதியாகும் இன்னொரு நேரத்தில் தன்னை ஒரு அடிப்படைவாதியாகவும் தான் காண்பிக்கிறார். இவ்வாறானவர்கள் நாடாளுமன்றம் சென்று மக்களின் உரிமையை எவ்வாறு பெற்றுக் கொடுப்பார்கள். இதனை மக்கள் சிந்திக்க வேண்டும். எனவே இத்தகைய அரசியல்வாதிகளை இனங்கண்டு மக்கள் புறக்கணிக்க வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/இனவாத-சிந்தனையுடைய-வேட்ப/
    • பின்னாலை வந்து மோடி நின்றது எதற்காக அதையும் விபரமா சொன்னாதானே எங்களுக்கும் புரியும். மோடி வந்து திடிதிப்பென்று இண்டைக்கே உங்கட பின்னாலை நிக்கிறார். தேர்தல் பிரசாரத்திலை போய் இப்படி சொல்லி வாக்கு கேட்கவேணும் என்பதற்காக இதுவரையும் சொல்லாமை இப்பதான் சொல்றிங்கள். மோடி வந்து நிண்டதுதான் நிண்டுட்டார் கொஞ்சம் விடுங்கோ நிண்டிட்டு போகட்டும். இதை கேள்விப்பட்டா தங்களுக்குபின்னாலை சீனாவின் அரச தலைவர் சி ஜிப்பிங் நிக்கிரார் என்றெல்லொ  ராஜபக்ச கோஷ்டி சொல்லபோகுது. இந்தியாவிட்டை இல்லாத வீட்டோ உரிமையும் சீனாவுக்கு இருக்குதெல்லோ. சம்பந்தன் ஐயா உங்கடை திருகு தாளத்தும் ஒரு அளவு வேணும்.