Sign in to follow this  
உடையார்

கொரோனா வைரஸ் உங்கள் மனைவி போன்றது மந்திரி பேச்சு-பெண்கள் அமைப்புகள் கண்டனம்

Recommended Posts

கொரோனா வைரஸ் உங்கள் மனைவி போன்றது மந்திரி பேச்சு-பெண்கள் அமைப்புகள் கண்டனம்

 

கொரோனா வைரஸ் உங்கள் மனைவி போன்றது மந்திரி பேச்சு-பெண்கள் அமைப்புகள் கண்டனம்

கொரோனா வைரஸ் உங்கள் மனைவி போன்றது என இந்தோனேசிய மந்திரியின் பேச்சுக்கு பெண்கள் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
பதிவு: மே 29,  2020 16:02 PM
ஜகார்தா

இந்தோனேசியாவில் 24 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கபட்டு உள்ளனர். 1,496 இறப்புகளை உறுதிப்படுத்தியுள்ளது.வைரஸ் இறப்புகளின் உண்மையான எண்ணிக்கை அதிகாரப்பூர்வ எண்ணிக்கையை விட  பல மடங்கு அதிகம் என்று ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர்.


இந்த நிலையில் இந்தோனேசிய பாதுகாப்பு மந்திரி முகமது மஹ்புத் இந்த வார தொடக்கத்தில் உள்ளூர் பல்கலைக்கழகத்திற்கு ஆன்லைன் மூலம் ஆற்றிய உரையில் கூறியதாவது:-

நம் உடல்நலத்தில் கவனம் செலுத்தினால் கொரோனா நிலைமையை சரிசெய்ய முடியும்.

கொரோனா உங்கள் மனைவியைப் போன்றது. ஆரம்பத்தில் நீங்கள் அதை கட்டுப்படுத்த வில்லை என்றால் பிறகு உங்களால் முடியாது என்பதை நீங்கள் உணருங்கள். பிறகு நீங்கள் அதனுடன் வாழ கற்றுக்கொள்வீர்கள் எறுன கூறினார். இதற்கு பல்வேறு சமூக அமைப்புகள், பெண்கள் அமைப்புகள் கண்டனம் தெரிவித்து உள்ளன

நாட்டில் பொது அதிகாரிகளின் பாலியல் மற்றும் தவறான மனநிலையையும் காட்டுகிறது" என்று மகளிர் ஒற்றுமை குழுவின் தலைமை நிர்வாகி டிண்டா நிசா யூரா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/05/29160241/Corona-Is-Like-Your-Wife-Anger-Over-Indonesia-Ministers.vpf

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • வணக்கம் வாத்தியார்.......! வாடிய நாளெல்லாம் வருந்தி வருந்தித் தவமிருந்து தேடிய நாள் தன்னில் செல்வமாய் வந்தவளே மலடி மலடி என்று வையகத்தால் ஏசாமல் தாயென்ற பெருமை தனை மனங்குளிரத் தந்தவளே அழுதா அரும்புதிரும் அண்ணாந்தால் பொன்னுதிரும் சிரிச்சா முத்துதிரும் வாய் திறந்தால் தேன் சிதரும் பிள்ளையைப் பெற்று விட்டால் போதுமா? பேணி வளர்க்க வேணும் தெரியுமா? அல்லலைக் கண்டு மனசு அஞ்சுமா? குழந்தை அழுவதைக் கேட்டு மனசு மிஞ்சுமா......! ---மண்ணுக்கு மரம் பாரமா---  
  • தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அலுவலகம் இராணுவம், பொலிஸாரால் அதிரடியாகச் சுற்றிவளைப்பு July 5, 2020 யாழ்ப்பாணம் கொக்குவிலில் உள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகம் சற்று முன்னர் 50 க்கும் அதிகமான இராணுவம், பொலிஸாரால் சற்று முன்னர் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. யாழ். பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியும் இதன்போது நேரில் வந்திருந்ததாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வட்டாரங்கள் தெரிவித்தன.   கரும்புலிகள் தினத்தை முன்னிட்டு அங்கு நிகழ்வுகள் ஏதாவது நடைபெறலாம் என்பதாலேயே இந்தச் சுற்றிவளைப்பு இடம்பெற்றதாகவும் அறியவருகின்றது.   http://thinakkural.lk/article/51889
  • வெள்ளவத்தையில் பாரிய தீ விபத்து; பல கடைகளுக்குப் பரவல்: தீ அணைப்புப் படை போராட்டம் (படங்கள், வீடியோ) July 5, 2020 கொழும்பு, வெள்ளவத்தை காலி வீதியில் அமைந்துள்ள வணிக நிறுவனம் ஒன்றில் சற்று முன்னர் பாரிய தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. குறிப்பிட்ட இடத்துக்கு பத்து தீயணைப்புப் படை வாகனங்கள் விரைந்துள்ளன.     போக்குவரத்து தடைப்பட்டுள்ளதால் வாகனங்கள் கடற்கரை வீதியூடாக திருப்பி அனுப்பப்படுகின்றன. ஆடைகள் விற்பனை செய்யும் கடை ஒன்றில் ஏற்பட்ட தீ அருகேயுள்ள மேலும் பல கடைகளுக்குப் பரவியுள்ளது. இதனை அணைப்பதற்காக தீ அணைப்புப் படையினர் போராடி வருகின்றார்கள்.   அப்பகுதியில் பெருந்தொகையான பொதுமக்கள் குவிந்திருப்பதையும், நிலைமைகளைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளதையும் காணக்கூடியதாக இருந்தது.   http://thinakkural.lk/article/51870
  • புலம்பெயர் தமிழர்களே அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படாமைக்கு காரணம் – கருணாவின் மனைவி Jul 05, 20200   புலம்பெயர்ந்துள்ள சிலர், பணம் உழைப்பதற்காகவும் சுகபோகங்களை அனுபவிப்பதற்காகவும் போராளிகளை பயன்படுத்தி வருகின்றனர்.இத்தகைய விடயங்களை அரசாங்கம் உணர வேண்டும். மேலும் பல தமிழ் அரசியல் கைதிகள், விடுதலை செய்யப்படாமல் இருப்பதற்கு புலம்பெயர் தமிழர்களின் செயற்பாடுகளே காரணம் என மட்டக்களப்பு மாவட்ட தலைமை வேட்பாளரும் முன்னாள் போராளியுமான வித்தியாபதி முரளிதரன் தெரிவித்துள்ளார்.மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.(15)   http://www.samakalam.com/செய்திகள்/புலம்பெயர்-தமிழர்களே-அரச/
  • இன்று காலை கைது செய்யப்பட்டிருந்த எம்.கே.சிவாஜிலிங்கம் பிணையில் விடுதலை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் இல்லத்தில், பிரபாகரனின் பிறந்ததினத்தை முன்னிட்டு கேக் வெட்டியது தொடர்பாக பருத்தித்துறை நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு சமூகமளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் வல்வெட்டித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.வல்வெட்டித்துறையிலுள்ள அவரது வீட்டில் வைத்து இன்று ஞாயிற்றுக்கிழமை 9.30 மணியளவில் அவர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில் நீதிமன்ற பிடியாணையின் கீழ் இன்று காலை கைது செய்யப்பட்டிருந்த எம்.கே.சிவாஜிலிங்கம் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.பருத்தித்துறை நீதவானின் இல்லத்தில் சற்று முன்னர் அவரை முன்னிலைப்படுத்தியபோதே, அவரை பிணையில் செல்ல நீதிபதி உத்தரவிட்டார்.(15)   http://www.samakalam.com/செய்திகள்/இன்று-காலை-கைது-செய்யப்ப/