Jump to content

யாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி


Recommended Posts

நீதிமன்றினால் 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான ஆள் பிணையில் விடுவிக்கப்பட்ட ஒருவரிடம் அந்த பணத்தினை நீதிமன்றில் செலுத்த வேண்டும் என கூறி 50 ஆயிரம் ரூபாயை சட்டத்தரணி ஒருவர் மோசடி செய்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

யாழ்.மாவட்டத்திலுள்ள நீதவான் நீதிமன்றங்களில் ஒன்றின் நியாயதிக்கத்திற்கு உட்பட்ட பகுதியில் சிறு குற்றம் ஒன்றினை புரிந்தார் என கூலி தொழிலாளி ஒருவர் மன்றில் முற்படுத்தப்பட்டிருந்தார்.

அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த நீதவான் அந்நபரை 50 ஆயிரம் ரூபாய் ஆள் பிணையில் செல்வதற்கு அனுமதித்து வழக்கினை ஒத்திவைத்தார்.

அதனையடுத்து அவரது பிணை நடவடிக்கைகள் முடிவடைந்து மன்றினை விட்டு அந்நபர் வெளியேறிய போது அவரை மறித்த சட்டத்தரணி ஒருவர் 50 ஆயிரம் பிணையில் தானே விட்டது.

அந்த பணத்தினை நீதிமன்றில் செலுத்த வேண்டும் என கூறி அவரிடமிருந்து 50 ஆயிரம் பணத்தினை மோசடியாக பெற்றுள்ளார்.

50 ஆயிரம் ரூபாய் ஆள் பிணை அல்லது சொந்த பிணை என்பது அந்நபர் தனது தேசிய அடையாள அட்டை பிரதியை வழங்கி கையொப்பமிட்டு பிணையில் செல்ல முடியும்.

அதற்காக மன்றுக்கு 50 ஆயிரம் செலுத்துவதில்லை. இந்நிலையிலையே மன்றுக்கு காசு செலுத்த வேண்டும் என கூலி தொழிலாளியிடம் மோசடியாக பணத்தினை பெற்று குறித்த சட்டத்தரணி மோசடி புரிந்துள்ளார்.

இதேவேளை யாழில் பொலிஸாருடன் தொடர்பினை பேணும் சில சட்டத்தரணிகள் பொலிஸார் ஊடாக வழக்குகளை பெறும் சந்தர்ப்பங்களும் அதிகரித்து செல்வதாகவும் அது சட்டத்தரணிகளின் அறத்தை மீறிய செயல் எனவும் சக சட்டத்தரணிகள் கவலை தெரிவித்தனர்.

https://www.ibctamil.com/srilanka/80/144230

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல்வாதியாகுவதற்குரிய முழுத் தகுதியும் சட்டத்தரணி அடைந்துவிட்டார் என்று நினைக்கிறேன் ☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கௌரவ கொள்ளை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kapithan said:

அரசியல்வாதியாகுவதற்குரிய முழுத் தகுதியும் சட்டத்தரணி அடைந்துவிட்டார் என்று நினைக்கிறேன் ☹️

ஒரு அரசியல் கட்சிக்கும் அவர் எடுப்புத்தானாமே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஒரு அரசியல் கட்சிக்கும் அவர் எடுப்புத்தானாமே

அப்படியானால் எனது யூகம் சரிதானே. 😂😂

Link to comment
Share on other sites

On 29/5/2020 at 22:44, போல் said:

இதேவேளை யாழில் பொலிஸாருடன் தொடர்பினை பேணும் சில சட்டத்தரணிகள் பொலிஸார் ஊடாக வழக்குகளை பெறும் சந்தர்ப்பங்களும் அதிகரித்து செல்வதாகவும் அது சட்டத்தரணிகளின் அறத்தை மீறிய செயல் எனவும் சக சட்டத்தரணிகள் கவலை தெரிவித்தனர்.

சும்மா சும்மா கவலை தெரிவிச்சு ஊரை ஏமாத்தாமல் சட்டத்தரணி சேவைக்கக்கான அனுமதிகளை ரத்து செய்யலாமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சட்டத்தரணி மோசடி செய்தி – சட்டத்தரணிகள் சங்கம் கவலை

May 31, 2020

mallakam22.jpg

சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஷ் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் தகவல் தொடர்பில் கண்டனம் வெளியிட்டுள்ள மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கம், உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளிவருவது குறித்தும் கவலை வெளியிட்டுள்ளது.

மல்லாகம் சட்டத்தரணி ஒருவர், தனது கட்சிக்காரரிடம் நீதிமன்றில் சொந்தப் பிணைக்கு பண கட்டவேண்டும் என்று தெரிவித்து மேலதிகமாகப் பணம் அறவீடு செய்தார் என்ற விவகாரம் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியாகி இருந்தன.

அவ்வேளை அந்த விவகாரத்தில் மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் க.சுகாஷ் மீது குற்றம் சுமத்தி சமூக வலைத்தளங்களில் தனிநபர்களால் கருத்துக்கள் வெளியிடப்பட்டு வந்தன. அதுதொடர்பில் தன் மீது அவதூறு பரப்பப்படுவதாக சட்டத்தரணி க.சுகாஷ், வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

இந்த நிலையில் மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கம் கடந்த வெள்ளிக்கிழமை கூடி எடுத்த தீர்மானத்துக்கு அமைய அதன் தலைவர் சட்டத்தரணி சோமசுந்தரம் தேவராஜா அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார்.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

சமூக வலைத்தளங்களில் 28.05.2020 திகதி எமது சங்கத்தின் செயலாளர் கனகரட்ணம் சுகாஷ் தொடர்பில் வெளிவந்த உறுதிப்படுத்தப்படாத செய்தி தொடர்பில் மல்லாகம் சட்டத்தரணிகள் கண்டனத்தைத் தெரிவிப்பதோடு, இவ்வாறு உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளிவருவது தொடர்பிலும் சங்கம் கவலை கொள்கிறது.

எந்தவொரு சட்டத்தரணியினது பெயர் குறிப்பிட்டும் எந்தவொரு முறைப்பாடும் மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கத்துக்கு இதுவரை கிடைக்காத நிலையிலும் இவ்வாறான உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிடுவது கவலையானதும் கண்டித்தக்கதுமான செயலாகும்.

மேற்படி உறுதிப்படுத்தப்படாத செய்தி தொடர்பான விடயப்பொருள் தொடர்பில் மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கத்தினால் ஆழமாக ஆராய்வதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளதோடு, அவ்வாறான ஏதேனும் விடயம் வெளிப்பட்டால் எமது சங்கம் அதுதொடர்பில் காத்திரமான நடவடிக்கையை எடுப்பதற்கு தயாராகவுள்ளது என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றது – என்றுள்ளது. #சட்டத்தரணி  #மோசடி  #சட்டத்தரணிகள்சங்கம்  #கவலை
 

http://globaltamilnews.net/2020/144067/

Link to comment
Share on other sites

11 hours ago, கிருபன் said:

சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஷ் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் தகவல் தொடர்பில் கண்டனம் வெளியிட்டுள்ள மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கம், உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளிவருவது குறித்தும் கவலை வெளியிட்டுள்ளது.

ஓ! இவர்தான் அந்த 50,000 மோசடிக்காரரா?
கஜேந்திரகுமாரின் தோழர் தானே?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.