Jump to content

நாலடியாரில் பனையும் கரும்பும்… !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நாலடியாரில் பனையும் கரும்பும்… !

12705185_197174827307278_758249520594451

1. பனைமரம்

1.1.பனைமரத்தின் சிறப்பு

‘கடையாயர் நட்பிற் கமுகனையர் ஏனை

இடையாயார் தெங்கின் அனையர்- தலையாயார்

எண்ணரும் பெண்ணைபோன்(று) இட்டஞான்றிட்டதே

தொன்மை யுடையார் தொடர்பு.’ (216)

இதற்குரிய உரையில் கமுகு, தென்னை, பெண்ணை இவற்றைப் பற்றி பதுமனார் கூறுவதைக் காண்போம்.

கமுகுக்கு நாள்தோறும் இறைக்கவும் மேற்றலையில் குற்றமாய புழுக்கடியும் பார்த்துப் பேணினாற்போல் இவனுக்கு நாள் தோறும் செய்யும் ……..அருஷதஞ் செய்ய வேண்டும். அது ஒழிந்தால் கமுகு தலைகெட்டு விழுந்தாற்போல இவனும் விழுமளவும் தீனகு விசாரிப்பான் என்றவாறு.

இடையாயார் தெங்கின் அனையர்- தெங்கிற்குத் தலையாலே தண்ணீர் சுமந்து அடியிலே வார்க்கப் பின் தலையாலே நீரைத் தருதலால் இவர்க்கும் முன்பு நன்மை செய்தால் பின்பு வரும்.

எண்ணரும் பெண்ணை போன்று இட்டஞான்று இட்டதே தொன்மையுடையார் தொடர்பு- எண்ணுதற்கரிய பனையும் ஒரு நாள் விதையிட்டாற் பின்பு பாதுகாக்க வேண்டாம். பின்பு பயன்பட்ட காலத்திலே சென்று பயன் கொண்டாற்போல அறிவும் , ஒழுக்கமும் பெருமையும் முயற்சியும் ஒழியாமல் தொன்றுதொட்டு வரும் பழைமையை யுடையார் உறவை விடாது கொள்ளுதல் நன்று என்று உரைப்பாருமுளர். - (பக்கம் 35, பதுமனார் உரை நாலடியார் உரைவளம் இரண்டாம் பாகம்.)

நட்பில் கமுகிற்கு நாள்தோறும் நீர் இறைப்பது முதலிய அதிக பராமரிப்பு தேவைப்படுகிறது என்பதும், தென்னைக்கு அது வளரும் வரை நீர் இறைத்தால்தான் வளர்ந்தபின் பயன் தரும் என்பதும், பனைமரமோ வித்திட்ட பிறகு குறைந்த நன்மையைச் செய்தாலுங்கூட அது பெரும்பயனைத் தரும் என்பதும், இவற்றைப் பேணியிருந்தாலன்றி அல்லது பேணி வளர்த்ததைப் பார்த்தாலன்றிக் கூற முடியாச் செய்திகள்.

கமுகு, தென்னை, பனை மரங்கள் அவர்களால் (நாலடிப் பாடல் காலத்து மக்களால் ) வளர்க்கப்பட்டிருக்கின்றன என்பதோடு, பனைமரத்தை வித்திட்டு வளர்க்கும் செய்தி இதில் கிடைக்கப் பெறுவதைக் காண்க. பனங்கிழங்கு முதலானவை வேண்டி பனங்கொட்டைகளை முளைக்க வைக்கும் பழக்கம் இன்றளவும் நம் தமிழ்நாட்டில் பல பகுதிகளிலும் காணப்படுகிறது.

இப்பாடலைக் கொண்டு நாம் கண்டடையும் முடிவு இதுதான்… அக்காலச் சமூகத்தில், கமுகு, தென்னையைவிட பனை மரமே மிகவும் உயர்வாகக் கருதப்பட்டுள்ளது.

Once_part_of_States.jpg

1.2. ஊர்நடுவில் பனைமரம்

‘நடுவூருள் வேதிகை சுற்றுக்கோட் புக்க

 படுபனை அன்னர் பலர் நச்ச வாழ்வார்’ (96)

என்ற பாடல் வழி பனை மரத்தை விரும்பி வளர்த்துள்ளனர் என்பது நமக்கு அறியலாகிறது. அதிலும் பெண்பனையைப் பெரிதும் போற்றி வளர்த்துள்ளனர். ஆண்பனை மக்கள் புழக்கம் இல்லா இடங்களில் மட்டுமே இருக்கும் (இடுகாட்டுள் ஏற்றுப்பனை 96) என்பதும் நமக்கு அறியக் கிடைக்கும் செய்தி. பெண்பனையானது இருக்கும் இடத்தில் அதைச் சுற்றிலும் திண்ணை (வேதிகை) போன்ற கட்டை கட்டி வைப்பார்கள் என்னும் செய்தி புதுமையான ஒன்றாய் இருக்கிறது.

தற்காலத்தில் நானறிந்தவரை பனைமரத்தைச் சுற்றி கட்டை கட்டுவது எங்கும் இல்லை. அரச மரம் வேப்பமரத்தைச் சுற்றி கட்டை கட்டுவார்கள். குளக்கரைகளில் உள்ள மரங்களுக்கும் அல்லது மக்கள் கூடுமிடங்களில் உள்ள நிழல்மரங்களுக்கும் கட்டுவார்கள். பனை மரத்தடியில் சில நாட்டார் தெய்வங்கள் இருப்பதுண்டு.

அதுபோன்ற இடங்களிலும் கூட பனை மரத்தடியில் மோடை கட்டி அதில் சாமியை வைத்திருப்பார்களே தவிர ஆட்கள் உட்கார்வதுபோல் சுற்றிலும் கட்ட மாட்டார்கள். பனை மரத்திற்குச் சுற்றிலும் கட்டை கட்டும் வழக்கம் இருந்திருக்கிறது என்பது நமக்குக் கிடைக்கும் செய்தி.

பனைமரம் அதன் பயன்கொடுக்குந் தன்மையால் மக்களால் எவ்வளவு போற்றப்பட்டு வந்துள்ளது என்பதற்கு இப்பாடல் சான்று.

1.3 நுங்கு வெட்டுதல்.

176752.jpg

நுங்கு வெட்டி அதைச் சீவி சூன்றெடுத்தலை,

‘தெண்ணீர்க் குவளை பொருகயல் வேலென்று

கண்ணில்புன் மாக்கள் கவற்ற விடுவனோ

உண்ணீர் களைந்தக்கால் நுங்கு சூன்றிட்டன்ன

கண்ணீர்மை கண்டொழுகுவேன்’ (44)

என்னும் பாடல் நுட்பமாகச் சொல்கிறது. பாடல் என்னவோ - கண்களைத் தோண்டி எடுத்துவிட்டால் நுங்கு சூன்றெடுத்த நுங்குமட்டைக் குழியைப் போல முகம் இருக்கும் - என்றுதான் சொல்கிறது. சூன்றெடுத்தலுக்கான குறிப்பு மட்டும்தானே இதில் இருக்கிறது?

வெட்டி என்பது வலிந்து வருவித்ததோ என யாரேனும் கருதலாம். இந்த இடத்தில், நுங்கு பனை மரத்திலிருந்து பனம்பழமாகப் பழுத்தாலன்றித் தானாக விழாது என்பதையும் இணைத்தெண்ணியே நுங்கு வெட்டும் செயலை ஊகித்துணர வேண்டும்.

மரமேறி வெட்டினால் அல்லவா நுங்கு கைக்குக் கிடைக்கும்? நுங்கு கைக்குக் கிடைத்தாலல்லவா அதைக் குறுக்கில் வெட்டிச் சீவ முடியும்? சீவினாலல்லவா அதன் இளஞ்சுளைகளைச் சூன்றெடுத்துச் சாப்பிட முடியும்? பனைமரத்தின் பயன் கருதி அதைப் போற்றி வந்திருக்கும் அன்றைய சூழலில் பனையின் மிக முக்கிய பயனான நுங்கு வெட்டுதல் இக்குறிப்பில் இடம்பெறுகிறது என்பது வலிந்து கொள்ளுதலாகாது.

மேலும் ‘கள்ளார் கள்ளுண்ணார்’ (157) என்னும் குறிப்பிலிருந்து கள் இறக்கப்பட்டுள்ளதையும் அறிந்து கொள்ளலாம். இவையெல்லாம் பனை மரமேறும் தொழில் தொடர்பானவையே.

2. கரும்பு

karumpu.jpg

‘தீங்கரும்(பு) ஈன்ற திரள்கா(ல்) உளையலரி

தேங்கமழ் நாற்றம் இழந்தாங்கு’ (199)

இப்பாடலில் , இனிப்பான கரும்பின் பூவுக்கு இனிய நறுமணம் இல்லை என்னும் குறிப்பு விளைநிலங்களில் கரும்பு உற்பத்தியைப் பற்றிய பதிவாக இருக்கிறது.

‘கடித்துக் கரும்பினைக் கண்டகற நூறி

 இடித்துநீர் கொள்ளினும் இன்சுவைத்தேயாகும்’ (156)

கரும்பினைக் கடித்துத் தின்றதோடு ஆலையில் இடித்துச் சாறெடுத்தனர் என்கிற குறிப்பும் மேற்கண்ட அடிகளில் காணக் கிடைக்கிறது. கரும்பும் இனிக்கிறது, கரும்புச் சாறும் இனிக்கிறது என்ற குறிப்பிலிருந்து கரும்பைத் தின்றும், கரும்புச் சாற்றைப் பருகியுமுள்ளனர் என்பதை அறிந்து கொள்கிறோம்.

கரும்பின் வேர்ப்பகுதி இனிப்பு மிக்கபகுதி என்றும், நுனிப்பகுதி இனிப்புச் சுவை குறைவாக இருக்கும் பகுதி என்றும், அவர்கள் தின்று நோக்கிக் கண்டனர். ‘நுனியிற் கரும்புதின்று அற்றே நுனினீக்கித் தூரில்தின்றன்ன’ (138) என்னும் பாடற்குறிப்பு அதைத்தான் சொல்கிறது.

கரும்பை எப்போது தின்றாலும் நுனியில் இருந்து வேர்நோக்கித் தின்ன வேண்டும் என்றும் அவர்கள் பின்பற்றிய வாழ்வியல் வழக்கத்தைச் சொல்கின்றனர். இனிப்புச் சுவைக்குப் பின்பு சப்பென்று சுவை இருந்தால் இனிமை குறையும் என்பதால் சப்பென்றிருக்கும் நுனிக் கரும்பைச் சாப்பிட்டு முடித்த பின்னரே அடிக்கரும்பைச் சாப்பிட வேண்டும் என்பது எண்ணி வியக்க வேண்டிய குறிப்பு

‘கற்றறிந்தார் கேண்மை எஞ்ஞான்றும்

குருத்திற் கரும்புதின் றற்றே குருத்திற்கு

எதிர்செலத்தின் றன்ன’ (211)

என்ற பாடலடிகளும் இதனையே உறுதிபடுத்துகிறது.

(கரும்பு சாப்பிடும் முறையைப் பற்றிச் சொல்லும் போது ஒரு செய்தி நினைவிற்கு வருகிறது. காந்தியைப் பேட்டி எடுக்க வந்திருந்தார் பத்திரிகையாளர் லூயிபிஷர். உணவருந்தும்போது இலையில் மாம்பழம் பரிமாறப்பட்டிருக்கிறது. அவருக்கு அதை எப்படித் தின்பது என்பது தெரியவில்லை.

அப்போது அருகில் இருந்த காந்தி மாம்பழத்தை கைகளில் வைத்துப் பிசைந்து கூழாக்கித் தோலில் துளையிட்டு உறிஞ்சி சாப்பிடவேண்டும் என்று செய்து காட்டிச் சொல்லிக் கொடுத்ததாக அவர் நூலில் குறித்திருக்கிறார். மாம்பழம் சாப்பிடும் முறைபோல கரும்பு சாப்பிடும் முறை இது.)

‘கரும்பாட்டிக் கட்டிச் சிறுகாலைக் கொண்டார் துரும்பெழுந்து வேங்காற்…’ (35)

இக்குறிப்பின் வழி அக்காலத்தில் கரும்பை ஆலையில் ஆட்டிச் சாறு எடுத்ததையும் அதைக் காய்ச்சி வெல்லம் (அக்காரம்) கட்டி உற்பத்தி செய்ததையும் மீதமுள்ள சக்கையை எரித்துள்ளதையும் அறிய முடிகிறது.

இதனையே

‘கரும்பூர்ந்த சாறு போற் சாலவும் பின்னுதவி மற்றதன் கோதுபோற் போகு முடம்பு’ (34)

என்னும் பாடல்வரியும் உறுதிபடுத்துகிறது.

1564726496-1622.jpg

இப்படிக் கரும்பிலிருந்து எடுக்கப்பட்ட சாறிலிருந்து உற்பத்தி செய்யப்பட்ட அக்காரம் (வெல்லம்) அவர்களின் உணவு முறையில் முக்கிய இடத்தைப் பெற்றிருந்ததற்கும் குறிப்புகள் இருக்கின்றன. வெல்லத்தின் பயன்பாட்டைப் பற்றிக் கூறும் வகையில் அமைந்திருக்கிறது, ‘அக்காரம் யாவரே தின்னினும் கையாதாம்’ (112) அக்காரத்தை (வெல்லத்தை) யார் தின்னாலும் கசக்காது என்கிற இக்குறிப்பு. இந்த அக்காரம் கொண்டு பொங்கல் வைத்ததைப், ‘புலியுகிர் வான்புழுக்கல் அக்காரம் பாலோடு’ (206) என்னும் பாடற்குறிப்பின் வழி அறிகிறோம்.

ஒருவர் ஒருவர்க்கு இனிமையானவராய்த் தெரிவதை ‘அக்காரம் அன்னார் அவர்க்கு’ (374) என்ற இழிவுக் குறிப்பின் வழி அறிகிறோம். உனக்கு அவன்தான் சக்கர என்று வயதானவர்கள் சிலர் இழிவுபடச் சொல்வதை இப்போதும்கூட கேட்க முடியும்.

- பொ.முத்துவேல்

http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/40242-2020-05-26-06-04-12

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு பகிர்வு தோழர்....நன்றி.......!   😁

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எதையும் கணித ரீதியில் சொன்னால் இலகுவாய் புரியும்🤣
    • 52 வீதமான மக்கள் போரை விரும்பவில்லை என்று எனக்கு விளங்குகிறது. 74 வீதமான மக்கள் போரை வீரும்பவில்லை என்று உங்களுக்கும் கபிதானுக்கும் விளங்குகிறது.  🙂
    • ஆஹா.... "கொல்லைப்புறம்". 😂 சிரித்து வயிறு நோகுது.  
    • அங்கே என்ன நடந்தது? 1. "ரேடாரில் மாட்டாமல் தாழப் பறக்கும் நுட்பத்தை முதலில் பயன்படுத்தியது இஸ்ரேல்" என்று நான் எழுதினேன் (கவனியுங்கள்: அமெரிக்கா அல்ல, இஸ்ரேல்). 2. நீங்கள் வந்து "ஜப்பான் காரர் இதை பேர்ள் ஹாபரில் செய்து விட்டார்கள், சொம்பு, முட்டு, பொங்கல், அவியல்" என்று குதித்தீர்கள். ஆதாரம் கேட்டேன், மௌனமாகப் போய் விட்டீர்கள் (ஏனெனின், ஜப்பான் காரன் கூட தான் இதைச் செய்ததாக எங்கும் சொல்லி நான் அறியவில்லை). 3. பின்னர் நான் ரேடாரில் ஜப்பான் விமானங்கள் தெரிந்தமை, ஏன் அமெரிக்கா தவற விட்டது என்று வரலாற்று நூல்களில் இருந்த தகவல்களைச் சொன்னேன். 4. இன்னொரு உறவு, விமானங்கள் ரேடாரில் தெரிந்ததை உறுதிப் படுத்தும் ஒரு ஆதாரப் பதிவை இணைத்தார் (கவனியுங்கள்: நீங்கள் எதுவும் இணைக்கவில்லை😎!) அதே ஆதாரத்தை , தாழப் பறந்து வந்து ஜப்பானியர் தாக்கியதன் ஆதாரமாக எனக்கு நீங்கள் சிவப்பெழுத்தில் கோடிட்டுக் காட்டியிருந்தீர்கள் (மீண்டும் கவனியுங்கள்: "ஆங்கிலம் ஒரு மொழியேயொழிய, அது அறிவல்ல!" - எங்கேயோ கேட்ட குரல்😎!) எனவே, இது வரை ஜப்பானியர் தாழப் பறந்து வந்து ரேடாரில் இருந்து தப்பினர் என்பதற்கு ஒரு ஆதாரமும் நீங்கள் தரவில்லை (இல்லாத ஆதாரத்தை எப்படித் தருவதாம்😂?).   இனி உங்கள் பிரச்சினைக்கு வருவோம்: நீங்கள் உட்பட யாழில் ஓரிருவரின் பிரச்சினை "மேற்கு எதிர்ப்பு" என்ற ஒரு உணர்ச்சி. அந்த உணர்ச்சிக்கு நியாயமான காரணங்கள் இருக்கலாம், அதை மறுக்க யாருக்கும் உரிமையில்லை. ஆனால், அந்த உணர்ச்சி மட்டுமே உலகத்தை, சம்பவங்களைப் புரிந்து கொள்ளப் போதாது. அப்படி உணர்ச்சி மட்டும் வைத்து "நாசா சந்திரனுக்குப் போகவில்லை" என்று கூட வாதாடும் நிலை இருக்கிறது பாருங்கள்? அந்த முட்டாள் தனத்தைத் தான் நான் சவாலுக்குட் படுத்துகிறேன். இனியும், தவறாமல் செய்வேன் - நீங்கள் சொம்போடு குறுக்கே மறுக்கே ஓடினாலும், நான் நிறுத்தாமல் செய்வேன்! ஏன் இப்படி சவலுக்குட்படுத்துவது முக்கியம்? இந்த மேற்கு எதிர்ப்பு உணர்ச்சி மயப் பட்டு, பொய்த்தகவல்களை உங்கள் போன்றோர் பரப்புவதால் மேற்கிற்கு ஒரு கீறலும் விழாது. ஆனால், எங்கள் தமிழ் சமுதாயத்தில், குறிப்பாக புலத் தமிழ் சமுதாயத்தில், இதனால் ஒரு முட்டாள் பரம்பரை உருவாகி வரும் ஆபத்து இருக்கிறது. எனவே, உங்கள் போன்றோரை அடிக்கடி இப்படிச் சவாலுக்குட்படுத்துதல் அவசியம். உங்களுக்கு முடிந்தால், இந்த சவால்களை ஆதாரங்களை இணைத்து எதிர் கொள்ளலாம். இல்லையேல் சொம்போடு நின்று விடலாம், இரண்டும் எனக்கு சௌகரியமே!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.