Sign in to follow this  
உடையார்

லட்சக்கணக்கானோரை புகை பிடிப்பதை கைவிட வைக்கிறது கொரோனா...

Recommended Posts

லட்சக்கணக்கானோரை புகை பிடிப்பதை கைவிட வைக்கிறது கொரோனா...

லட்சக்கணக்கானோரை புகை பிடிப்பதை கைவிட வைக்கிறது கொரோனா...

 

சிகரெட் புகைப்பது உள்பட புகையிலையை எந்த வகையில் ஒருவர் பயன்படுத்தினாலும் அது அவர்களுக்கு பகை, உயிராபத்தை ஏற்படுத்தும் புற்றுநோய்க்கு வழிவகுத்து விடும் என்றெல்லாம் காலகாலமாக எச்சரிக்கை விடப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது.

 
புகைப்பது உடல்நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் என்று சிகரெட் பாக்கெட்டில் விளம்பரம் செய்யப்பட்டிருக்கிறது. ஆனாலும் எளிதில் யாரும் புகை பிடிப்பதை விட்டு விட முன்வருவதில்லை. மது போதை போல சிகரெட் போதையில் கோடிக்கணக்கானோர் உலகமெங்கும் அகப்பட்டுள்ளனர். இப்போது கொரோனா வைரஸ், அவர்கள் வாழ்வில் ‘கேம் சேஞ்சர்’ என்பது போல பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் சூழல் உருவாகி உள்ளது.

இதற்கு காரணம் இல்லாமல் இல்லை.

கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரமாகிறபோது அது மனிதர்களின் நுரையீரலில்தான் பெருத்த பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது. சுவாசிப்பதில் சிக்கலை உண்டுபண்ணுகிறது. வென்டிலேட்டர் என்னும் செயற்கை சுவாச கருவிகளை பொருத்தி சுவாசிக்க வைக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. அதிலும் வென்டிலேட்டர் கருவிகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.

இந்த நிலையில் புகை பிடிக்கிறவர்களுக்கு, கொரோனா தொற்று ஏற்பட்டால் பாதிப்பு அதிகம் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்தது. அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் எச்சரித்தது. புகை பிடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று இந்திய சுகாதார அமைச்சகமும் வலியுறுத்தியது.

கொரோனா வைரஸ் பாதிப்பு அச்சம் காரணமாக லட்சக்கணக்கானோர் இப்போது மனம் மாறி வருகிறார்கள்.

யுகாவ், புகைபிடித்தல் மற்றும் ஆரோக்கியம் என்ற பிரசார குழுவின் சார்பில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வில், கொரோனா வைரஸ் அச்சத்தால் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் இங்கிலாந்து நாட்டில் புகைப்பிடிக்கும் பழக்கத்தை விட்டுவிட்டதாக தெரிய வந்தது. மேலும், 5½ லட்சம் பேர் புகை பிடிப்பதை விட முயற்சித்துள்ளனர். 24 லட்சம் பேர் தினமும் புகைக்கிற அளவை குறைத்துள்ளனர்.

இந்த நிலையில் லட்சக்கணக்கானோர் சிகரெட் புகைப்பதை விட்டு விட விரும்புகின்றனர் என்று உலக சுகாதார நிறுவனத்தின் சுகாதார மேம்பாட்டு இயக்குனர் ருடிகர் கிரெச் கூறுகிறார். இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், “இந்த கொரோனா வைரஸ் தொற்று நோய் நெருக்கடிகளுக்கு மத்தியில் லட்சக்கணக்கானோர் புகை பிடிக்கும் பழக்கத்தை விட்டுவிட விரும்புவதை இப்போது நாங்கள் பார்க்கிறோம். இந்த நெருக்கடியான காலகட்டத்தில், புகையிலை பொருட்கள் பயன்படுத்தும் பழக்கத்தை நிறுத்தும் திட்டங்களில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. புகை பிடிப்பதை கைவிட எங்களுக்கு ஆதரவு காட்டுங்கள் என்று கோரிக்கை விடுக்கிறார்கள்” என்று குறிப்பிட்டார்.

பல நாடுகளிலும் புகையிலை பொருட்கள் பயன்படுத்துவதை நிறுத்தும் திட்டங்களுக்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது என்று உலக சுகாதார நிறுவனத்தின் ‘புகையிலை இல்லை’ பிரிவின் ஒருங்கிணைப்பாளரான விநாயக் பிரசாத் கூறுகிறார்.

மெக்சிகோ, ஜோர்டான், இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் இப்படி புகையிலை பொருட்களை கைவிட விருப்பம் தெரிவித்துள்ளனர். இவர்களுக்காக நாங்கள் புதிய தீர்வுகளை, தொழில்நுட்ப தீர்வுகளை தேடுகிறோம்” என்கிறார் விநாயக் பிரசாத்.

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் புகை பிடிப்போரும், புகையிலை பொருட்களை பயன்படுத்துவோரும் தங்கள் பழக்கத்தை முடிவுக்கு கொண்டு வந்தால் அது அவர்களுக்கும் நல்லது, மற்றவர்களுக்கும் நல்லது.

 

https://www.maalaimalar.com/news/topnews/2020/05/30094223/1564855/Coronavirus-is-causing-lakhs-to-quit-smoking.vpf

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • கடவுள் தந்த அழகிய வாழ்வு உலகம் முழுதும் அவனது வீடு கண்கள் மூடியே வாழ்த்து பாடு கருணை பொங்கும்.. உள்ளங்கள் உண்டு கண்ணிர் துடைக்கும் கைகளும் உண்டு இன்னும் வாழணும் நூறு ஆண்டு எதை நாம் இங்கு கொண்டு வந்தோம் எதை நாம் அங்கு கொண்டு செல்வோம் அழகே பூமியின் வாழ்க்கையை அன்பில் வாழ்ந்து விடை பெறுவோம்... கடவுள் தந்த அழகிய வாழ்வு உலகம் முழுதும் அவனது வீடு கண்கள் மூடியே வாழ்த்து பாடு ஓ ஓ ஓஓஒ..... பூமியில் பூமியில் இன்பங்கள் என்றும் குறையாது வாழ்க்கையில் வாழ்க்கையில் எனக்கென்றும் குறைகள் கிடையாது எதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ.. ஒ.. எதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ அது வரை நாமும் சென்றுவிடுவோம் விடைபெறும் நேரம் வரும் போதும் சிரிப்பினில் நன்றி சொல்லிவிடுவோம் ஓஓஒ ஓஒ பரவசம் இந்த பரவசம் என் நாளும் நெஞ்சில் தீராமல் இங்கே வாழுமே (கடவுள் தந்த) நாம் எல்லாம் சுவாசிக்க தனி தனி காற்று கிடையாது மேகங்கள் மேகங்கள் இடங்களை பார்த்து பொழியாது கோடையில் இன்று இலையுதிரும் வசந்தங்கள் நாளை திரும்பி வரும் வசந்தங்கள் மீண்டும் வந்துவிட்டால் குயில்களின் பாட்டு காற்றில் வரும் முடிவதும் பின்பு தொடர்வதும் இந்த வாழ்க்கை சொல்லும் பாடங்கள் தானே கேளடி...  
  • நினைத்தாலே அருள் கதவு திறந்துவிடும்  
  • கருணா ஆண் மகனாக இருந்தால் நிரூபித்து காட்டட்டும் – செல்வம்   போதைவஸ்து கடத்தலுக்கும் எனக்கும் சம்மந்தம் இருப்பதாக கருணாவால் என்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை ஒரு போதும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். அவர் ஓர் ஆண் மகனாக இருந்தால் அதை உடனடியாக நிரூபிக்க வேண்டும் என முன்னாள் எம்பி செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார். மேலும், “கருணா மிகவும் மோசமான கருத்துக்களை கூறி வருகின்றார். அவருடைய கருத்துக்கு நான் சவால் விடுகிறேன். அவருக்கு எதிராக நீதிமன்றம் செல்ல இருக்கின்றேன். போதைவஸ்து கடத்தலுக்கும் எனக்கும் சம்மந்தம் இருப்பதாகவும், மதுபானசாலைகள் இருப்பதாகவும் கருணா அம்மான் மிக மோசமான கருத்துக்களை கூறி வருகின்றார். உண்மையிலேயே அவர் ஓர் ஆண் மகனாக இருந்தால் இதை உடனடியாக நிரூபிக்க வேண்டும். அப்படி ஆதாரத்தோடு அவர்கள் நிரூபித்தால் இந்த நிமிடமே நான் இந்த தேர்தலில் இருந்து விலகிக் கொள்ள தயாராக இருக்கிறேன். அரசியலில் இருந்தும் ஒதுங்கிக் கொள்ள தயாராக இருக்கின்றேன்.” – என்றார். https://newuthayan.com/கருணா-ஆண்-மகனாக-இருந்தால/  
  • தாமரை மொட்டு ஆகஸ்ட்க்கு பின்னர் கருகிப்போகும் – வேலுகுமார் ஆளுங்கட்சியின் அரசியல் முகாம் ஆட்டம் கண்டுள்ளது. எனவே, ஜனாதிபதி தேர்தலின்போது மலர்ந்த மொட்டு எதிர்வரும் ஆகஸ்ட் 5ம் திகதிக்கு பின்னர் கருகிவிடும் என்பது உறுதி என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட வேட்பாளருமான வேலுகுமார் தெரிவித்தார். நேற்று (03) கண்டியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் இதனை தெரிவித்தார். மேலும், “ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே நாட்டின் காவலன் என்றும் அவரே மீட்பார் என்றும் மக்கள் மத்தியில் மாயையை உருவாக்கி, இனவாதத்தையும், மதவாதத்தையும் கையிலெடுத்து – தேசப்பற்று தொடர்பில் தொண்டைக்கிழிய போலியாக கொக்கரித்து ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பிரச்சாரம் செய்துவருகின்றது. ஆனால், கடந்த 6 மாதங்களில் இவர்கள் செய்தது என்ன? கொரோனா விவகாரத்தில் சற்று காத்திரமாக செயற்பட்டிருந்தாலும் ஏனைய விடயங்களில் தோல்விகண்டுள்ளனர். அரசாங்கத்திடம் தூரநோக்கு சிந்தனை கிடையாது. குறிப்பாக சிவில் நிர்வாகத்துக்கு பதிலாக இராணுவமயப்படுத்தப்பட்டுவருகின்றது. இந்நிலையில் மீண்டும் ஆட்சிக்குவந்தால் 19 ஆவது திருத்தச்சட்டம் இல்லாது செய்யப்படும் எனவும் அறிவிப்பு விடுக்கின்றனர். தப்பிதவறியேனும் ராஜபக்ச தரப்பு ஆட்சிக்குவந்தால் பாரிய நெருக்கடிகள் ஏற்படும். எனவே, நாட்டில் எதிர்காலத்தையும் ஜனநாயகத்தையும் கருத்திற்கொண்டு மக்கள் வாக்களிக்கவேண்டும்.” – என்றார். https://newuthayan.com/தாமரை-மொட்டு-ஆகஸ்ட்க்கு/  
  • மின்சாரம் தாக்கி விவசாயிகள் இருவர் பலி!   மட்டக்களப்பு – உன்னிச்சை வயல் பிரதேசத்தில் யானைகளில் இருந்து வேளாணன்மையை பாதுகாக்க அமைக்கப்பட்ட மின்சார வேலியின் மின்சாரம் தாக்கியதில் வேளாண்மை காவலில் இருந்த இரு விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று (02) இரவு வயல் பிரதேசங்களை நோக்கிவந்த யானைகளை துரத்த முற்பட்டபோது இடம்பெற்றுள்ளது. இதன்போது கரவெட்டியாறு பிரதேசத்தைச் சேர்ந்த 5 பிள்ளைகளின் தந்தையான (58-வயது) முனிச்சாமி தங்கையா , 7 பிள்ளைகளின் தந்தையான (51-வயளு; சின்னத்தம்பி மணிவண்ணன் ஆகிய இரு விவசாயிளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.   https://newuthayan.com/மின்சாரம்-தாக்கி-விவசாயி/