Jump to content

ஆயுதப் போராட்டம் பழைய கதை; பேசிப்பயனில்லை; சுமந்திரனின் கட்டுப்பாட்டில் கட்சியில்லை: இரா.சம்பந்தன்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எமது உரிமைகளை நாம் பெற்றுக்கொள்வதை யாராலும் தடுக்க முடியாது. ஜனாதிபதி கோட்டாபயவினாலும் தடுக்க முடியாது. ஆயுதப் போராட்டம் பழைய கதை. அதைப்பற்றி பேசி பலனில்லை. இப்போது நாம் ஜனநாயகத்தின் அடிப்படையில், மனித உரிமைகளின் அடிப்படையில் பயணிக்கிறோம் என தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.

இன்று (30) தனியார் வானொலி ஒன்றிற்கு வழங்கிய செவ்வியில் இதனை தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.ஏ.சுமந்திரனின் கட்டுப்பாட்டில் வந்து விட்டது என்ற கருத்தையும் நிராகரித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

உண்மையின் அடிப்படையில், நீதியின் அடிப்படையில், சமத்துவத்தின் அடிப்படையில் எமக்கு தீர்வு கிடைப்பதை எவராலும் தடுக்க முடியாது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினாலும் தடுக்க முடியாது. வடக்கு கிழக்கு எமது சரித்திர பூமி. அது எமது அடிப்படை உரிமை. அந்த நியாயமான தீர்வை அடைவதை யாராலும் தடுக்க முடியாது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உருவாக்கம் பற்றிய கேள்விக்கு,

ஆயுதப் போராட்டம் முடிந்த பின்னர் நாம் எல்லோரும் ஒன்றாக செயற்பட சில கருமங்கள் எடுத்தோம். அதன்படி, ஒற்றுமையாக ஒரு அமைப்பை எடுத்தோம். அந்த செயற்பாட்டை இன்றுவரை தொடர்ந்து வருகிறோம்.

தமிழீழ விடுதலைப் புலிகள் எமது அரசியல் கட்சிகளிடையே ஒற்றுமையை ஏற்படுத்த விரும்பினார்கள். அதை நாம் வரவேற்றோம். 2009 ஆயுதப் போராட்டம் மௌனமாகிய பின்னரும், அது தொடர்கிறது. இலக்கை அடையும் வரை தொடர்வோம்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் பழைய கதை. அதைப் பற்றி பேசி பலனில்லை. அது முடிந்த விடயம். நாம் இன்று வேறு வழியில் பயணிக்கிறோம். மனித உரிமைகளின் அடிப்படையில், ஜனநாயகத்தின் அடிப்படையில், சர்வதேசத்தின் ஆதரவுடன் பயணத்தை செய்கிறோம்.

ஆயுதப் போராட்டம் குறித்த கருத்து பற்றிய கேள்விக்கு,

ஆயுதப் போராட்டத்தின் சரி பிழைகளை நாம் பேசவில்லை. இன்னொரு ஆயுதப் போராட்டத்தை நாம் விரும்பவில்லை. சிங்கள, தமிழ் மக்களிற்கு ஆபத்தை விளைவிக்கும் ஆயுதப் போராட்டத்தை நாம் விரும்பவில்லை. அதையே வலியுறுத்துகிறோம்.

ஆயுதப் போராட்டம் பற்றிய சுமந்திரனின் கருத்து பற்றிய கேள்விக்கு,

சுமந்திரன் பேசியது தனிப்பட்ட விடயம். அது பற்றி நான் கதைக்க விரும்பவில்லை. இந்த விடயங்களை பாவித்து எமது கட்சியை உடைக்க பலர் முயற்சிக்கிறார்கள். நாம் அதற்கு ஒத்தழைக்க மாட்டோம்.

சுமந்திரனின் கட்டுப்பாட்டில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சென்றுவிட்டது என கூறுவது கற்பனை. அதை முற்றாக நிராகரிக்கிறேன். கட்சியின் செயற்குழு, மத்தியகுழு, நாடாளுமன்ற குழு கூடியே முடிவுகள் எடுக்கிறோம். யாரும் தனிப்பட்ட ரீதியில் முடிவெடுப்பதில்லை.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் அடுத்த தலைவரை அடையாளம் கண்டுவிட்டீர்களா என்ற கேள்விக்கு,

அது மக்களின் அதிகாரம். கட்சியின் அதிகாரம். உரிய நேரத்தில், உரியவர் அந்த பொறுப்பில் வருவார். இந்த பொறுப்பில் இருப்போமென நாம் கற்பனை செய்தோமா? தமது கடைமையை உண்மையாகவும், நேர்மையாகவும் மக்கள் பணியை செய்து வந்தால், மக்கள் தமது தலைவர்களை தீர்மானிப்பார்கள்.

நான் தேசியக்கொடியை மதிக்கிறேன். தேசியக்கொடியை ஏற்கிறீர்களா, இல்லையா என்ற கேள்விகளை ஏன் கேட்கிறீர்கள்? இதெல்லாம் தேவையில்லாத கேள்விகள். இந்த கேள்விகளால் எமது சமூகத்திற்கு என்ன நன்மை? இப்படியான கேள்விகளால் எமது மக்களை குழப்ப பலர் முயற்சிக்கிறார்கள். ஊடகங்களும் முயற்சிக்கின்றன. இப்படியான கேள்விகளிற்கு பதிலளித்து, அதற்கு நான் உதவலாமா? இப்படியான கேள்விகளிற்கு நான் பதிலளிக்க மாட்டேன். இப்படியான கேள்விகளை என்னிடம் கேட்க வேண்டாம் என்றார்.

https://www.pagetamil.com/127344/

Link to comment
Share on other sites

7 hours ago, பெருமாள் said:

இப்போது நாம் ஜனநாயகத்தின் அடிப்படையில், மனித உரிமைகளின் அடிப்படையில் பயணிக்கிறோம் என தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.

இப்ப தேர்தல் மட்டும் இல்லை என்டால் சம்பந்தன் கிடைச்ச சொகுசு பங்களாவில் இழுத்து போத்திக்கொண்டு படுத்திருப்பார்.

சம்பந்தனின் ஜனநாயகம் என்டால் தமிழின கொலைகாரர்களுக்கு முண்டு கொடுப்பதும், அவர்கள் வீசும் எலும்புத்துண்டுகளை பொறுக்குவதும் என்டு தான் அர்த்தம். அத தான் அவர் 30-40 வருஷமா செய்றார்.

சம்பந்தனின் மனித உரிமை என்டால் தமிழர்களை படுகொலை செய்த போர்குற்றவாளிகள் தப்ப உதவுவதும், அதனால் கிடைக்கும் சலுகைகளை அனுபவிப்பதும் என்டு தான் அர்த்தம்.

7 hours ago, பெருமாள் said:

சுமந்திரன் பேசியது தனிப்பட்ட விடயம். அது பற்றி நான் கதைக்க விரும்பவில்லை.

அனந்தி சசிதரன் ஜெனீவா சென்று காணாமல் ஆக்கப்பட்டவர்கள், அதுவும் அவரின் கணவர் உட்பட பலரைப் பற்றிய உண்மைகளை பேசியது மட்டும் எப்படி தனிப்பட்ட விஷயம் இல்லாம அவர் மேல் நடவடிக்கை எடுத்து விலத்தப்பட்டார்?

உங்க போலி ஜனநாயக வேடம் பற்றி உங்க போலி மனித உரிமை பற்றி கைக்கூலி அரசியல்வாதிகள் சம்பந்தனும் மாவை சேனாதிராசாவும் பதில் சொல்ல முடியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, பெருமாள் said:

உண்மையின் அடிப்படையில், நீதியின் அடிப்படையில், சமத்துவத்தின் அடிப்படையில் எமக்கு தீர்வு கிடைப்பதை எவராலும் தடுக்க முடியாது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினாலும் தடுக்க முடியாது.

உங்கள் கூற்று உண்மை என்றால்; நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு அது கிடைத்திருக்க வேண்டும். இல்லை, ஆயத்தப் போராட்டம் மௌனித்த உடன் கிடைத்திருக்க வேண்டும். சர்வதேசம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கும் முட்டுக்கட்டை போடும் உங்களால், அது முடியுமா ஐயா? சும்மா தேர்தலுக்காக சொல்லி வைக்க கூடாது. நீங்கள் சொல்வது எல்லாம் சொல்லி விட்டு, எமது கட்சியை உடைக்கிறார்கள் என்றோ, பத்திரிகைகள் மீதோ பழியை போட்டுவிட்டு தப்பிக்கப் பார்க்காதீர்கள். ஆயுதப் போராட்டமே, இன்று ஒரு முடிவை எடுக்க சிங்களத்தை நிர்பந்தித்துக் கொண்டிருக்கிறது என்பதை மறவாதீர்கள். அதனாலேயே சிங்களம் அந்தக் கேள்வியால் உங்களை மாட்டுகிறது. அதில் இருந்தே உங்கள் பொறுப்பு எது? என்பதை உணருங்கள். பொறுப்பாக அதன் காரணத்தை தெளிவுபடுத்துங்கள். ஆயுதப் போராட்டத்துக்கும், ஒரு இனத்தின் அழிவுக்கும் நீங்களும், சிங்கள அரசுமே காரணம் என்று சுட்டுங்கள். இளைஞர் வெறும் அம்புகளே, என்று சொல்லுங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, பெருமாள் said:

ஆயுதப் போராட்டம் பழைய கதை. அதைப்பற்றி பேசி பலனில்லை.

பேசிப் பயனில்லையா?

பேச பயமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேசப்பயமாத்தானிருக்கும் டிமாண்ட் பண்ணி கதைத்தால்  வீடு வந்து சேரு முன் மார்கயா இப்பதானே செயட்கையாக இதய செயலிழப்பை செய்யகூடிய மருந்துகள் வகை வகையாய் உள்ளது .

ஆறுமுகம் தொண்டைமானின் மகனுடன் ஏன் அவசரப்பட்டு கொள்ளுப்படுகிறார் கோத்தா ? மகளை  தனிமை படுத்துகினம் அவ வைத்தியரா ?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முட்டாள்த்தனமாக பதிலளித்து சர்ச்சையில் மாட்டுவது, அல்லது தெனாவெட்டாய் வெருட்டுவது சம்பந்தனுக்கு கைவந்த கலை. உந்தக் கோவத்தை காட்ட வேண்டிய இடம் இதுவல்ல. முண்டு கொடுத்து காப்பாற்றிய இடத்தில் காட்டப் பயம், இங்கு பாய்ந்து விழுகிறார். எங்கே மாட்டிவிடுவேனோ என்கிற பயமும்.  இருக்க, கூட்டமைப்பின் தலைவர் பதவிக்கு எப்படி சம்பந்தர் வந்தாரோ, அவ்வாறு வரவேண்டியவர் மாவையே. ஆனால் சுமந்திரன் என்கிற குள்ள நரி, அதுக்கு கண் வைத்து, விக்கியருக்கு எதிராக மாவையை கொம்பு சீவி அந்தப் பக்கம் தள்ளிப்போட்டு, சம்பந்தரின் கக்கத்துக்கய் காவல் காக்கிறார். பாவம்! காலம் யாரை தெரியுமோ, அவர் தான் தலைவர். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பெருமாள் said:

பேசப்பயமாத்தானிருக்கும் டிமாண்ட் பண்ணி கதைத்தால்  வீடு வந்து சேரு முன் மார்கயா இப்பதானே செயட்கையாக இதய செயலிழப்பை செய்யகூடிய மருந்துகள் வகை வகையாய் உள்ளது .

 

 

இதேதான்..ராயப்பு அடிகளாருக்கும் ...நடந்தது...அணிலின் நரித்தனம்....

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒம்.. பழையன கழிதலும் புதியன புகுதலும் - போகி ..👌

2b5e96c371f13108af924ebef1e6f7895a2829a8

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன் 50 வருசப் பழசு.. சுமந்திரன் 10 வருசப் பழசு.. பழசுகளின் கதையை விட்டிட்டு.. மக்கள் புதிசுகளாத் தெரிவு செய்யுங்கோ. இந்த தேர்தலை பழசுகளை கழிய ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்துங்கோ. 

Link to comment
Share on other sites

On 31/5/2020 at 07:00, பெருமாள் said:

ஆறுமுகம் தொண்டைமானின் மகனுடன் ஏன் அவசரப்பட்டு கொள்ளுப்படுகிறார் கோத்தா ? மகளை  தனிமை படுத்துகினம் அவ வைத்தியரா ?

முகக்கவசம் அணியாம மீடியாக்களுக்கு பிலிம் காட்டும் மகனின் அட்டகாசம் யாராலயும் சகிக்க முடியல என்று பௌத்த அமைப்புகளும் வைத்தியர்களும் கோத்தாவிடம் போட்டு குடுத்திருக்கீனம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.