Jump to content

வடக்கில் பொலிஸாருக்கு வழங்கப்பட வேண்டிய சிவில் நிர்வாக செயற்பாடுகள் இராணுவத்திடம் ; செல்வம்


Recommended Posts

இலங்கையின் வடபுலத்தில் கொரோனா அச்சுறுத்தலை அடிப்படையாக கொண்டு தொடர்ந்தும் இராணுவ மயபப்டுத்தல் செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக முன்னாள் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் விசனம் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வட மாகாணம் இராணுவ மயப்படுத்தலுக்குள்ளாக்கப்பட்டு வருவது தொடர்பாக நாம் தொடர்ந்தும் சுட்டிக்காட்டி வந்திருந்தோம்.

எனினும் இது தொடர்பில் ராஜபக்ஷ அரசு எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்காத நிலையில் எமது மக்களை சொல்லணா துன்பத்திற்குள்ளாகி வருகின்றது.

இலங்கையின் எப்பாகத்திலும் இல்லாத அளவிற்கு இராணுவ சோதனைச் சாவடிகளும் ரோந்து நடவடிக்கைகளும் இராணுவ நடமாட்டமும் வடக்கில் தலைதூக்கியுள்ளது.

இது எமது மக்களை அச்சத்திற்குள்ளும் யுத்த மனோபாவத்திற்குள்ளும் வைத்திருப்பதற்காகவா என எண்ணத்தோன்றுகின்றது.

தற்போது கொரோனா தொற்றை காரணம் காட்டி வடக்கில் மேலும் இராணுவ பிரசன்னம் அதிகரித்துள்ளது.

பொலிஸாருக்கு வழங்கப்படவேண்டிய சிவில் நிர்வாக செயற்பாடுகளை இராணுவத்திற்கு வழங்கி வடக்கில் உள்ள தமிழ் பேசும் மக்களை அடக்கி ஒடுக்கவே இந்த அரசு முற்படுவதாக தோன்றுகின்ற அதேவேளை இலங்கை முகம்கொடுக்கவுள்ள தேர்தலில் தமிழ் மக்களை அடக்கி வைத்திருந்து தென்னிலங்கையில் தம்மை ஒரு வீரனாக காட்டவே இந்த ஜனாதிபதியும் பிரதமரும் எண்ணுகின்றனர்.

தமிழர்களை தொடர்ச்சியாக அடக்குவதனால் தமது வெற்றியை இலகுவாக்கலாம் என எண்ணக்கோட்டை கட்டும் பேரினவாத அரசுக்கு தமிழ் மக்கள் தகுந்த பாடத்தினை எதிர்வரும் தேர்தலில் காட்டுவார்கள் என்பது திண்ணம்.

இராணுவ பிரசன்னம் என்பது சர்வதேச விதிமுறைகளுக்கு அமையவே காணப்பட வேண்டும். எனினும் சர்வதேச ஒழுக்க நெறியை மீறி செயற்படும் இவ் அரசு தமிழ் மக்களை அடக்கி சாதிக்க நினைப்பவைகளை ஈடேற்ற தமிழ் தேசியக்கூட்டமைப்பு என்றும் தடையாகவே இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/83042

Link to comment
Share on other sites

12 minutes ago, ampanai said:

தமிழர்களை தொடர்ச்சியாக அடக்குவதனால் தமது வெற்றியை இலகுவாக்கலாம் என எண்ணக்கோட்டை கட்டும் பேரினவாத அரசுக்கு தமிழ் மக்கள் தகுந்த பாடத்தினை எதிர்வரும் தேர்தலில் காட்டுவார்கள் என்பது திண்ணம்.

With Sri Lanka's parliament dissolved, and elections delayed by the pandemic, the Rajapaksa brothers are running the country without any checks on their power. In the political vacuum caused by the coronavirus lockdowns, Rajapaksa has strengthened his grip on government offices by appointing former military officials to a number of key positions in ministries. In the absence of a legislature, Sri Lanka's coronavirus response is being steered by the Rajapaksa-led executive and the military. "The president has consolidated his majoritarian appeal," said Ruki Fernando, a human rights activist based in the capital, Colombo. "There has been an intensified crackdown on dissent as the country battles the pandemic."

Sri Lankan President Gotabaya Rajapaksa

 

https://www.dw.com/en/coronavirus-keeps-sri-lanka-without-a-functioning-parliament/a-53615108?maca=en-Facebook-sharing

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்தியாவில் லோக்சபா தேர்தல் கட்டம் கட்டமாக நடப்ப்துதான் வழமை. பெரிய மாநிலங்களில் பிரிப்பார்கள். ஆனால் வெறும் 39 தொகுதிகள் உடைய மத்திய அளவு மாநிலமான தமிழ் நாட்டில் ஒரே நாளில்தான் வைப்பார்கள்.  
    • கெட்ட வார்த்தை பின்னோட்டங்கள் இட்டவர்கள் எல்லோரும் நாம் தமிழர் கட்சிகளை சேர்ந்தவர்களாம்.
    • பதில் 9 புள்ளிகளில் வழங்கப்பட்டுள்ளது.
    • என்றுமே உண்மையாக இருந்தால் இந்த உலகில் வாழ்வது மிக சிரமம்.
    • நாளைய தினம் முதல் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக் கூடிய அபாயம் உள்ளதாக  எரிபொருள் விநியோகஸ்தர்கள்  சங்கம் தெரிவித்துள்ளது.    எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி காரணமாக இந்த நிலைமை ஏற்படக்கூடிய ஆபத்து உள்ளது என்று  அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் கபில நாவுதுன்ன(Kapila Navuthunna) தெரிவித்துள்ளார். இதன்படி, எரிபொருள் நிரப்பு நிலையங்களின்  வற் தவணைகள் நாளை முதல் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். நாளை முதல் செலுத்த வேண்டிய வற் வரி இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எரிபொருள் நிலையங்கள் கடும் நெருக்கடி நிலைக்குள்ளாகியுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி என்பது உரிமையாளருக்கு கிடைக்க கூடிய சிறிய தொகையில் செலுத்த வேண்டிய வற் வரியாகும். அதற்குரிய வற் தவணைகள் நாளை முதல் செலுத்தப்பட வேண்டும்.   அவ்வாறு செலுத்தப்படாது விட்டால் எரிபொருள் நிலையங்களின் அடுத்தக்கப்பட்ட பயணங்கள் மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்படும். கடந்த 3 மாதங்களாக இந்த பிரச்சினையை தீர்க்க கோரிக்கை விடுத்தோம். எனினும் கலந்துரையாடல் மேற்கொள்வதற்கேனும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 20ஆம் திகதிக்கு பின்னர் எரிபொருள் நிலையங்களில் கடும் நெருக்கடியை சந்திக்கும்.     இந்த VAT வரியால் சிறிய நிரப்பு நிலையங்கள் கூட 10 லட்சத்திற்கும் அதிக VAT வரி செலுத்த நேரிடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.   https://tamilwin.com/article/fuel-shortage-in-the-country-1713508148?itm_source=article
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.