Jump to content

அமெரிக்க மண்ணில் புதிய வரலாறு : 2 நாசா விண்வெளி வீரர்களுடன் ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாகப் பாய்ந்தது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க மண்ணில் புதிய வரலாறு : 2 நாசா விண்வெளி வீரர்களுடன் ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாகப் பாய்ந்தது

history-in-the-making-spacex-propels-two-nasa-astronauts-into-orbit

எலான் மஸ்க்கின் "ஸ்பேஸ்எக்ஸ்" தனியார் நிறுவனம் தயாரித்த ராக்கெட் 2 அமெரிக்க விண்வெளி வீரர்களுடன் அமெரிக்க மண்ணிலிருந்து நேற்று நாசா சர்வதேச விண்வெளி மையத்துக்கு விண்ணில் சீறிப்பாய்ந்தது.

வர்த்தகரீதியான விண்வெளி பயணத்துக்கு புதிய விடியலாக இந்த பயணம் அமைந்து புதிய வராலாற்றையும் படைத்துள்ளது. அமெரிக்க மண்ணில், அமெரிக்க ராக்கெட்டில் , அமெரிக்க விண்வெளி வீரர்களுடன் ராக்கெட் நாசாவுக்கு பாய்ந்துள்ளது.



விண்வெளிக்கு இதுநாள் வரை எந்த தனியார் நிறுவனமும் மனிதர்களை அனுப்பியதில்லை. வரலாற்றிலேயே முதல்முறையாக மனிதர்களை அனுப்பும் முதல் தனியார் நிறுவனம் எனும் பெருமையை “எலாம் மஸ்க்கிற்கு சொந்தமான " ஸ்பேஸ்எக்ஸ்"நிறுவனம் பெற்றது.

 

1590892436756.jpg

 

 

இதற்கு முன் மனிதர்களை விண்ணுக்கு அமெரி்க்கா, ரஷ்யா, சீனா அரசுள் மட்டுமே அனுப்பி இருந்தன.முதல்முறையாக தனியார் நிறுவனம் மனிதர்களை அனுப்பியுள்ளது

கடந்த 2011-ம் ஆண்டுக்குப்பின் ஸ்பேக்ஸ்எக்ஸ் நிறுவனம் விண்வெளிக்கு அமெரிக்க மண்ணிலிருந்து ராக்கெட்டை அனுப்பவில்லை. ஏறக்குறைய 10ஆண்டுக்குப்பின் அமெரி்க்க மண்ணிலிருந்து இரு அமெரிக்க விண்வெளி வீரர்களுடன் நாசாவுக்கு முதல்முறையாக ஸ்பேக்எக்ஸ் ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

ப்ளோரிடாவில் உள்ள கேப் கெனரவலில் உள்ள கென்னடி விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இரு மனிதர்களைச் சுமந்துகொண்டு அமெரிக்க நேரப்படி சனிக்கிழமை பிற்பகல் 3.22மணிக்கு விண்ணில் ராக்கெட் சீறப்பாய்ந்தது.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் நிருபர்களிடம் கூறுகையில் “என்னுடையது மட்டுமல்லாமல் ஸ்பேஸ்எக்ஸ்ஸி்ல் உள்ள ஒவ்வொருவரின் கனவும் உண்மையாகி இருக்கிறது.

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் ஒவ்வொருவரின் மதிப்பிடமுடியாத உழைப்பும் இந்த பயணத்தின் வெற்றிக்கு பங்களித்துள்ளது. இந்த பயணம் வெற்றியாக அமைய ஏராளமானோரின் பங்களிப்பும் இருக்கிறது. அமெரிக்க மண்ணில், அமெரிக்க விண்வெளி வீரர்களுடன், அமெரிக்க ராக்கெட் விண்ணுக்கு புறப்பட்டுள்ளது புதிய சாகப்தம்.” எனத் தெரிவித்தார்

1590892487756.jpg

 

இந்த ராக்கெட்டில் நாசா விண்வெளி வீரர்களான அமெரி்க்காவைச் சேர்ந்த பாப் பெக்கென்(49), டாக் ஹர்லி(53) இருவரும் பயணித்தனர். இந்த ராக்கெட் 19 மணிநேரம் விண்ணில் பயணித்து விண்வெளியில் அமைக்கப்பட்டுள்ள நாசா விண்வெளி மையத்தை சென்றடையும்.

கடந்த வாரமே இந்த ராக்கெட் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் மோசமான வானிலை காரணமாக அந்த திட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

கரோனா வைரஸால் அமெரிக்கா மோசமாக பாதிக்கப்பட்டு ஒரு லட்சம் உயிர்களை பலிகொடுத்துவிட்டு, 19 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு, 4 கோடி மக்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ள நிலையில் அமெரிக்காவின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் விண்ணுக்கு மனிதர்களை அனுப்பியது அந்தநாட்டு மக்களால் கொண்டாடப்படுகிறது

ஸ்பேக்ஸ் எக்ஸ் நிறுவனம் விண்ணில் வெற்றிகரமாக இரு விண்வெளி வீர்ர்களுடன் ராக்கெட்டை விண்ணில் செலுத்தியதைப் பார்த்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அவரின் மனைவி மெலனியா ட்ரம்ப் ஆகியோர் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்கிற்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.

விண்வெளிக்கு ராக்கெட் வெற்றிகரமாக சென்றதைப் பார்த்த அதிபர் ட்ரம்ப் நிருபர்களிடம் கூறுகையில் “ இந்த நாள் வரலாற்று சிறப்பு மிக்க நாள். அமெரிக்க மக்கள், நாசா, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தை நினைத்து பெருமைப்படுகிறேன். இந்த நிகழ்வைப் பார்த்தபோது உற்சாகமாக இருந்தது.

ராக்கெட் பறக்கும்போது ஏற்பட்ட சத்தம், தீப்பிளம்பு பார்க்கவேமிரட்சியாக இருந்தது. இந்த பயணம் நாட்டுக்கு மிகப்பெரிய புத்துணர்ச்சியாக அமையும். நமது நாடு சிறப்பாக செயலாற்றி வருகிறது. கரோனாவால் நாம் பல துன்பங்களை அனுபவித்து வரும் நிலையில்இந்த பயணம் உற்சாகத்தை அளிக்கிறது” எனத் தெரிவித்தார்

ராக்கெட் புறப்படும் முன் அதில் பயணிக்கும் இரு விண்வெளி வீரர்களுடனும் அதிபர் ட்ரம்ப் பேசினார். மேலும் ராக்கெட் வெற்றிகரமாகச் சென்றபின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் அதிபர் எலான் மஸ்கிடமும் அதிபர் ட்ரம்ப் பேசினார்.

இதற்கிடையே அமெரிக்கா வரும் 2024-ம் ஆண்டில் அர்டிமிஸ் திட்டத்தில் நிலவுக்கு முதல் பெண்ணையும், அடுத்த ஆண் வீரரையும் அனுப்பத் திட்டமிட்டுள்ளது

https://www.hindutamil.in/news/world/557144-history-in-the-making-spacex-propels-two-nasa-astronauts-into-orbit-3.html

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

36c36f6c3a60e35a224bdff9d91dc731-720x450.jpg

மனித விண்வெளி பயணத்தை தொடங்கும் இரண்டாவது முயற்சி ஆரம்பம்!

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு நாசாவின் விண்வெளி வீரர்களை அனுப்பும் இரண்டாவது முயற்சி எதிர்வரும் மணித்தியாலங்களில் முன்னெடுக்கப்படவுள்ளது.

நாசா விண்வெளி வீரர்களான டக் ஹர்லி மற்றும் பாப் பெஹென்கென் ஆகியோரை புளோரிடாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து, சுற்றுப்பாதையில் சேர்ப்பதற்கான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் வரலாற்று சிறப்புமிக்க இந்த திட்டம், கடந்த புதன்கிழமை மோசமான காலநிலையால் நிறுத்தப்பட்டது.

தற்போது இதற்கான இரண்டாவது முயற்சியை நாசா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்கள் முன்னெடுத்துள்ளன.

கடந்த 2011ஆம் ஆண்டில் நாசாவின் விண்வெளி விண்கலங்கள் ஓய்வு பெற்ற பின்னர் அமெரிக்கா தனது விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்ப முதல் தடவையாக இந்த முயற்சி முன்னெடுக்கப்படுவதால், அவர்களின் பணியில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது.

அமெரிக்க விண்வெளி நிறுவனம் தனது ஒரு குழுவினரை சுற்றுப்பாதையில் கொண்டு செல்ல ஒரு தனியார் நிறுவனத்தைப் பயன்படுத்திய முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

http://athavannews.com/மனித-விண்வெளி-பயணத்தை-தொ/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.