Sign in to follow this  
தமிழ் சிறி

அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஜி-7 உச்சிமாநாட்டில் ஜேர்மனி அதிபர் பங்கேற்கமாட்டார்!

Recommended Posts

b7be7aaef1064beb8bbca020e28ebedb_18-720x450.jpg

அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஜி-7 உச்சிமாநாட்டில் ஜேர்மனி அதிபர் பங்கேற்கமாட்டார்!

அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஜி-7 உச்சிமாநாட்டில் ஜேர்மனி அதிபர் அங்காலா மெர்கல் பங்கேற்க மாட்டார் என ஜேர்மனிய அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஸ்டெஃபென் சீபர்ட் தெரிவித்துள்ளார்.

கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரித்தானியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் பங்கேற்கும் 46ஆவது ஜி-7 உச்சிமாநாடு மார்ச் மாத நடுப்பகுதியில் அமெரிக்காவில் நடைபெறவிருந்தது.

எனினும், கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்று அச்சுறுத்தல் காரணமாக, இந்த மாநாடை இணைய வழியுடாக நடத்த ஆரம்பத்தில் திட்டமிடப்பட்டது.

ஆனால், வெள்ளை மாளிகைக்குத் தலைவர்களை நேரடியாக அழைத்து, மேரிலாந்து மாநிலத்தில் உள்ள கேம்ப் டேவிட் என்ற இடத்தில் பெரும் கூட்டத்தை நடத்த முடியும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த வாரம் கூறினார்.

ட்ரம்ப்பின் இந்த யோசனையின் பின்னால் பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் ஆதரவு உள்ளது.

இந்தநிலையில், ஜி-7 உச்சிமாநாட்டில் ஜேர்மனி அதிபர் அங்காலா மெர்கல் பங்கேற்க மாட்டார் என ஜேர்மனிய அரசாங்க செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,

‘வொஷிங்டனில் ஜூன் மாத இறுதியில் நடைபெறவுள்ள ஜி-7 உச்சிமாநாட்டில் ஜேர்மனி அதிபர் அங்காலா மெர்கல் பங்கேற்க மாட்டார். எனினும், ஜி-7 உச்சிமாநாட்டிற்கு அழைக்கப்பட்டதற்கு ஜனாதிபதி ட்ரம்பிற்கு அதிபர் நன்றி கூறுகிறார்.

இன்றைய நிலவரப்படி, ஒட்டுமொத்த தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு, வொஷிங்டனுக்கான பயணத்திற்கு அவர் தனது தனிப்பட்ட பங்களிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது’ என கூறினார்.

இதனிடையே உலக சுகாதார நிறுவனத்துடனான உறவை துண்டிப்பதாக அமெரிக்க எடுத்த முடிவு ஏமாற்றம் அளிப்பதாக ஜேர்மனி சுகாதாரத்துறை அமைச்சர் ஜென்ஸ் ஸ்பஹன் தெரிவித்துள்ளார்.

இது உலக சுகாதார நிறுவனத்துக்கு கடும் பின்னடைவு எனவும், உலக சுகாதார அமைப்பால் எதிர்காலத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்த முடியும், ஆனால் அந்த அமைப்பில் சீர்திருத்தங்கள் செய்ய வேண்டும் எனவும் அவர் மேலும் கூறினார்

http://athavannews.com/அமெரிக்காவில்-நடைபெறவுள/

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this