• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
உடையார்

கொடிகாமத்தில் அதிகாலையில் வீடு புகுந்து யுவதியைக் கடத்திச் சென்ற குழு; பொலிஸ் விசாரணை

Recommended Posts

கொடிகாமத்தில் அதிகாலையில் வீடு புகுந்து யுவதியைக் கடத்திச் சென்ற குழு; பொலிஸ் விசாரணை

யாழ்ப்பாணம், கொடிகாமத்தில் தம்மை சிஐடியினர் என தெரிவித்து வீடு புகுந்த அட்டகாசம் செய்த குழு அங்கிருந்து 20 வயது யுவதியை கடத்திச் சென்றுள்ளனர். பின்னர் ஒரு மணி நேரத்தில் அந்த யுவதி விடுவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் இன்று அதிகாலை நடந்தது. சிஐடியினர் என தெரிவித்து 7 பேர் கொண்ட கும்பலொன்று வீட்டுக்குள் நுழைந்த நிலையில் வாள், கத்தி, கொட்டன் என்பவற்றுடன் சென்று, அட்டகாசம் புரிந்தனர்.

பின்னர் வீட்டில் உள்ளவர்களை தாக்கியதுடன், கத்தி முனையில் வீட்டிலிருந்த 20 வயது யுவதியை கடத்திச் சென்ற நிலையில் சுமார் ஒரு மணித்தியாலம் வீட்டுக்கு அருகிலுள்ள ஆலயமொன்றில் யுவதி விடுவிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் யுவதியின் பெற்றோரால் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

http://thinakkural.lk/article/44387

மந்துவிலில் வீடு புகுந்து யுவதி கடத்தப்பட்டு விடுவிப்பு – இருவர் சிக்கினர்

யாழ்ப்பாணம் – தென்மராட்சி, மந்துவில் வடக்கு முத்துமாரியம்மன் ஆலய பகுதியில் இன்று (30) அதிகாலை ஊரடங்கு அமுலில் இருந்த போது வீடு ஒன்றுக்குள் புகுந்த குழுவினர் தந்தையை கட்டி வைத்துவிட்டு மகளான யுவதியை (20-வயது) கடத்திச் சென்றுள்ளனர்.

வாள், கத்தி மற்றும் கொட்டன் போன்ற ஆயுதங்களுடன் வீட்டுக்குள் நுழைந்த 7 முதல் 10 பேர் கொண்ட குழுவே குறித்த யுவதியைக் கடத்திச் சென்றுள்ளது.

இது தொடர்பில் யுவதியின் தந்தை தெரிவிக்கையில், ‘தம்மை பொலிஸ் சிஐடி எனக்கூறியபடி குழு ஒன்று வீட்டுக்குள் புகுந்தது. பொலிஸாருக்கு முறையிட முயன்ற போது எனது கைபேசியை தட்டிவிட்டு என்னை தாக்கி கட்டிப்போட்டு மகளை கடத்தி சென்றனர்’. – என்றார்.

இவ்வாறு கடத்திச் செல்லப்பட்ட யுவதியை சில மணி நேரங்களில் யுவதியின் வீட்டில் இருந்து 300 மீட்டர் தூரத்தில் விடுவித்து குறித்த குழு தப்பிச் சென்றுள்ளது.

இதனையடுத்து யுவதியை மீட்ட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு இருவரை கைது செய்துள்ளனர்.

குறித்த பெண்ணை ஒரு வருடமாக காதலித்த ஒருவரே இந்த கடத்தல் சம்பவத்தை அரங்கேற்றியுள்ளார் என்று பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது, அத்துடன் ஊரடங்கை மீறி, வீட்டுக்குள் அத்துமீறியமை, யுவதியை கடத்தியமை தொடர்பில் இருவரை கைது செய்தோம் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில் மேலதிக சந்தேக நபர்களை கைது செய்ய விசாரணைகள் தொடர்ந்து வருகிறது. யுவதியை நாளை (01) சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜரப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

https://newuthayan.com/மந்துவிலில்-வீடு-புகுந்/

Share this post


Link to post
Share on other sites

தென்னிந்திய சினிமாத் தாக்கம். 

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

சிங்கள சிறிலங்கா அரசு நினைப்பதை  அரங்கேற்றும் நிசலையிலா தமிழிளையோரில் ஒரு பகுதியினர் முழுமூச்சோடு அலைகிறார்கள் போல் உள்ளது. 

Share this post


Link to post
Share on other sites

பச்சை மட்டையடி கொஞ்சம் வேலை செய்யும்.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this