Jump to content

தமிழர்களின் பெரும் செல்வமாக விளங்கிய யாழ் பொது நூலகம்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் பெரும் செல்வமாக விளங்கிய யாழ் பொது நூலகம்

61450064_10161617854255198_5971147286208577536_n.jpg?189db0&189db0

தமிழர்களின் கலாச்சாரம் இன்று கேள்விகுறியானாலும் சில பல இடங்களில் அது வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. யாழ் நூலகம் பற்பல கிடைத்தற்கரிய பழம்பெரும் நூல்கள் மற்றும் தமிழ் ஓலைச் சுவடிகள் நாழிதழ்கள், வார மாத இதழ்கள் துண்டுப் பிரசுரங்கள் போன்றவற்றைத் தன்னகத்தே கொண்டு விளங்கிய காலம் அது.

பல ஆர்வலர்களுடைய அயராத உழைப்பினாலும், பொது மக்களினதும், பல உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்களினதும் தாராளமான ஆதரவினாலும் வளர்ச்சி பெற்றிருந்த எமது பண்பாடு, கலாச்சாரம் என்பவற்றிலும், கல்வியிலும் முக்கியம் வகிக்கும் யாழ் பொது நூலகம் பற்றி ஒரு நோக்கு..

நூலக வரலாறு

இந்த நிறுவனத்துக்கான கருப்பொருள் க.மு. செல்லப்பா என்னும் ஆர்வலரொருவரால் உருவாக்கப்பட்டது. இந்த செல்லப்பா அச்சுவேலியை சேர்ந்தவர், யாழ்ப்பான நீதிமன்றத்தில் கரியதரிசியாக இருந்தவர். அதாவது சக்கடத்தார். நவம்பர் 11. 1933 ஆம் ஆண்டில் தனது வீட்டில் சில நூல்களுடன் இவர் நடத்திவந்த நூல் நிலையமே இன்று விசாலமாக வளர்ந்துள்ளது. இதனைப் பலருக்கும் பயன்படும் வகையில் விரிவுபடுத்தும் நோக்கில் 1934ஆம் ஆண்டு ஆனி மாதம் 9ஆம் திகதி ஐசாக் தம்பையா அவர்களின் தலைமையில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மண்டபத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றே பொது நூலகத்தின் தோற்றத்திற்கு அடிகோலியது.

இக்கூட்டக் காரியதரிசி திரு. க. மு. செல்லப்பா அவர்கள் சிரமப்பட்டுத் திரட்டிய 184 ரூபா 22சதம் தான் முன்னோடியான பொது நூலகம் ஒன்றிற்கான மூலதனமாய் அமைந்தது. அன்றைய காலத்தில் அது ஒரு பெரிய மூலதனம் தான். இதன் வழி ஆஸ்பத்திரி வீதியில் வாடக அறை ஒன்றில் 844 நூல்களுடனும் 36 பருவ வெளியீடுகளுடனும், 1934 ஆம் ஆண்டு ஆவணி மாதம் 1ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட சிறியதொரு பொது நூலகம் வசதியின்றி இடர்ப்பட்ட போது அதனை யாழ்ப்பாணப் பட்டின சபை பொறுப்பேற்று 01-01-1935 இல் வாடி வீட்டிற்குத் தெற்கிலுள்ள மேல் மாடிக்கு இடமாற்றஞ் செய்யப்பட்டு, அங்கே இயங்கி வந்தது.

சகல வசதிகளையும் கொண்ட நவீன பொது நூலகக் கட்டிடம் ஒன்றினை அமைப்பதற்கான முயற்சிகள் 1952ஆம் ஆண்டு ஆனி மாதம் 14ஆம் திகதி சாம் ஏ. சபாபதி அவர்களின் தலைமையில் நடைபெற்ற ஒரு மகாநாட்டினை அடுத்து ஆரம்பிக்கப்பட்டன. புதிய நூலகக் கட்டிடடத்தை அமைப்பதில் அதி வண பிதா லோங் அவர்கள் மிகுந்த அக்கறை காட்டி வந்தார். அவர்களது முயற்சியின் மூலம் நூலகத் துறையில் நிபுணத்துவம் வாய்ந்த கலாநிதி எஸ். ஆர். ரங்கநாதன் அவர்களின் ஆதரவும் கிடைத்தது.

ojLV_8nu223Wm1zwxslemVrGL0MZDXI3MR0C1UR2 யாழ்ப்பாண பொது நூலகம் கட்டிடம்

நூலகத்தின் அமைப்பிற்கான திட்டங்களை வகுத்துக் கொடுக்க சென்னை அரசின் கட்டிடக் கலை நிபுணர் கே. எஸ். நரசிம்மன் அவர்கள் வந்து வரைபடங்களைத் தயாரித்து உதவினார். கட்டிட அடிக்கல்நாட்டு விழா 1953ஆம் ஆண்டு பங்குனி மாதம் 29ஆம் திகதி நடைபெற்றது. திராவிடக் கலயம்சம் பொருந்திய எழில் மிகு அறிவுக் கோயில் ஒன்று வெகு பொது மக்களின் நிறைவான ஆதரவுடன் உருப்பெற ஆரம்பித்தது.

பொது நூலகத்தின் முதற்கட்டம் பூர்த்தி செய்யப்பட்டு 11.10.1959ல் அதி விமரிசையாக திறந்து வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நூலகத்தின் ஏனைய கட்டடடங்களும் பூர்த்தி செய்யப்பட்டன. பூரணத்துவம் பெற்று இயங்கி வந்த இந்நூலகத்தில் நூலகர் உட்பட 33 பேர் கடமையாற்றி வந்தார்கள்.

பொது நூலகம் எரிப்பு.

யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிப்பு என்பது இலங்கை இனப்பிரச்சினையில் ஒரு முக்கிய நிகழ்வாகும். ஒரு இனத்தை அழிக்க வேண்டுமானால் அந்த இனத்தின் வராலாற்றை சுவடு இழக்க செய்ய வேண்டும் என்ற சதித் திட்டத்தின் கீழ் 1800 ஆம் ஆண்டுகளில் எழுதப்பட்ட ஓலைசுவடிகள், வரலாற்று சான்றுகள் உள்ளிட்ட 97,000 க்கும் மேற்ப்பட்ட விலை மதிக்க முடியாத நூல்களை கொண்ட தெற்காசியாவில் சிறந்த நூலகமாக விளங்கிய யாழ் பொது நூலகம் நள்ளிரவில் சிங்களக் காவல் துறையினரால் எரிக்கப்பட்டதில் பல்லாயிரக்கணக்கான பெறுமதி மிக்க நூல்கள் அழிந்தன.

அன்று இரவு 10 மணி போல நூலகத்திற்குள் நுழைந்த கொடியவர்கள் காவலாளியைத் துரத்தியடித்து விட்டு நூலகப் பெருங்கதவைக் கொத்தித் திறந்து உள்ளே புகுந்து அட்டூழியங்கள் புரிந்தனர். 97ஆயிரம் கிடைத்தற்கரிய நூல்கள் மற்றும் ஓலைச்சுவடிகளுக்குப் பெற்றோல் ஊற்றிக் கொழுத்தி எரித்தழித்தனர். நூலகத்தினுள் சாம்பல் குவியல்களே எஞ்சிக் கிடந்தன. அந்தச் சாம்பல் குவியல்களுக்குள்ளே எரியாத நூல்கள் ஏதேனும் எஞ்சிக் கிடக்குமோ என்ற நப்பாசையில் நூலக உதவியாளர்கள் சு.யோ.இமானுவேலும் அ.டொன் பொஸ்கோவும் ச.கந்தையாவும் சாம்பல் குவியல்களைக் கிளறிக் கொண்டிருந்த நிலையைக் காண முடிந்தது. நூலகம் கருகிக் காரை பெயர்ந்து கிடந்தது கயவர்கள் நூலகத்தையே புகைத்து விட்டார்கள்.

lOYATuXduJyepgwsP7-GHvP6CsqTCCoAtXILE7FU 1981 ஆம் ஆண்டு மே 31 ஆம் திகதி நள்ளிரவுக்கு பின்னர் சிங்கள அரசபடைக் குழுவொன்றால் நூல்கள் மற்றும் ஓலைச்சுவடிகளுக்குப் பெற்றோல் ஊற்றிக் கொழுத்தி எரித்தழிக்கப்பட்டது.

இந்த நிகழ்வு 1981 ஆம் ஆண்டு மே 31 ஆம் திகதி நள்ளிரவுக்கு பின்னர் சிங்கள அரசபடைக் குழுவொன்றால் இடம்பெற்றது. (இன்று 2020 – 39 ஆண்டுகள் கடந்தது). இது 20ம் நூற்றாண்டின் இன நூலழிப்புகளில் ஒரு மிகப்பெரும் வன்முறையாகக் கருதப்படுகிறது.

இவ்வழிப்பு நேர்ந்த காலகட்டத்தில் யாழ்ப்பாணப் பொது நூலகம் கிட்டத்தட்ட 97,000 அரிய நூல்களுடன் தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாகத் திகழ்ந்தது. இந்த நூலக எரிப்பு வன்கும்பலில் இலங்கையின் அமைச்சர் காமினி திசாநாயக்கா உட்பட வேறு பல அப்போதைய சிங்கள அரசியல் தலைவர்கள் அடங்கியிருந்தனர்.

நூலகம் எரியும் செய்தியை கேட்டு சென் பற்றிக்ஸ் ஆசிரியரும் புலவருமான சங். பித கலாநிதி டேவிட் அவர்கள் மனவதிர்ச்சியில் தம் உயிரை நீத்தார். நூலகம் எரிக்கப்பட்டது தமிழ் மக்கள் மத்தியில் அழியா காயம் ஒன்றை ஏற்படுத்தி விட்டது. இன்று இதன் கட்டிடம் மீளமைக்கப்பட்டுப் புதிய நூல்கள் சேர்க்கப்பட்டிருப்பினும், எரிந்துபோன பல நூல்களும், பழமைவாய்ந்த கையெழுத்துப் பிரதிகளும், ஏட்டுச் சுவடிகளும் வேறு பல ஆவணங்களும் திரும்பப் பெறமுடியாதவையே!

 

https://newuthayan.com/தமிழர்களின்-பெரும்-செல்வ/

 

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

 

Edited by nochchi
 • Thanks 1
Link to comment
Share on other sites

சொறிலங்கா சிங்கள அரச பயங்கரவாதம் யாழ் நூலகத்தை எரித்த நாள். 1981 மே 31.

 

 

 

 

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை எழுத கல்கி கிருஷ்ணமூர்த்தி 3 தடவை யாழ்ப்பாணம் வந்தாராம். இதிலிருந்து தமிழ் நாட்டில் கூட இல்லாத சோழர் காலத்து வரலாற்றை தன்னகதே வைத்திருந்தது தான் யாழ் நூலகம். 

அதேபோல் தமிழ்நாட்டில் ஏன் சோழர் பற்றிய தகவல்கள் இல்லாமல் போயின?

அதே போல் எனக்குள் இருக்கும் ஊகம்... சிங்களவன் தான் யாழ் நூலகத்தை எரித்தானா அல்லது சோழர் இராச்சியத்தை வீழ்த்திய விஜய நகர அரசின் வம்சவாளியினர் யாராவது ஊக்கம் கொடுத்திருப்பார்கள?

Link to comment
Share on other sites

21 minutes ago, Dash said:

அதே போல் எனக்குள் இருக்கும் ஊகம்... சிங்களவன் தான் யாழ் நூலகத்தை எரித்தானா அல்லது சோழர் இராச்சியத்தை வீழ்த்திய விஜய நகர அரசின் வம்சவாளியினர் யாராவது ஊக்கம் கொடுத்திருப்பார்கள?

நன்றாக தெரிந்த உண்மையை பலவீனப்படுத்தும் வகையில் அதிகப்பிரசங்கி தனமா சிந்திச்சு எரித்த சிங்களவனை காப்பாற்றுவதை விட புதுசா சாதிக்க போவது ஒன்டுமில்லை.

 • Like 1
Link to comment
Share on other sites

2 hours ago, உடையார் said:

இந்த நிறுவனத்துக்கான கருப்பொருள் க.மு. செல்லப்பா என்னும் ஆர்வலரொருவரால் உருவாக்கப்பட்டது. இந்த செல்லப்பா அச்சுவேலியை சேர்ந்தவர், யாழ்ப்பான நீதிமன்றத்தில் கரியதரிசியாக இருந்தவர். அதாவது சக்கடத்தார். நவம்பர் 11. 1933 ஆம் ஆண்டில் தனது வீட்டில் சில நூல்களுடன் இவர் நடத்திவந்த நூல் நிலையமே இன்று விசாலமாக வளர்ந்துள்ளது.

சிறந்த சமூக நோக்குடைய பெரியவர் போற்றுதலுக்கு உரியவர்.

1980 களின் முற்பகுதியில் ஐக்கிய தேசியக் கட்சி எனப்படும் பயங்கரவாதக் கும்பலில் உள்ள சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளின் அட்டூழியங்களில் மிக மிலேச்சத் தனமான செயலாக யாழ் நூலக எரிப்பு காணப்படுகிறது.

இந்தப் பயங்கரவாதிகளுக்கு தெற்கில் சிலை வைத்துள்ளமை நல்லிணக்கம் ஏற்பட வாய்ப்பில்லை என்பதை வெளிப்படுத்துகிறது.

Edited by போல்
 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

யாழ் நூலக எரிப்பு: அடையாள அழிப்பின் ஆறா வடு! இன்று 39 வருட நினைவு

 • என்.சரவணன்

ஒரு இனத்தை அழிக்குமுன் அதன் சுவடுகளை அழி, அடையாளத்தை அழி என்பார்கள். வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்களின் புலமைச் சொத்தாக கருதப்பட்டு வந்த யாழ் நூலகம் எரித்துச் சாமபலாக்கப்பட்ட சம்பவம் வரலாற்றில் என்றுமே துடைக்க முடியாத கறையாக ஆகி விட்டிருக்கிறது.

தமது தமிழ் மரபையும், வரலாற்றையும் ஆவணப்படுத்தி வைத்திருக்கும் ஒரு தொல்பொருள் வைப்பகமாகவும் தான் பேணப்பட்டு வந்தது. மீளப் பெற முடியாத அரிய நூல்களையும், பல நூற்றாண்டுகளுக்கு முன்னரான ஏடுகளும் கூட அங்கு பாதுகாககப்பட்டு வந்தன. அந்த நூலகம் அரசு கொடுத்தத்தல்ல. அன்றைய தமிழ் புலமையாளர்கள் சேர்ந்து உருவாக்கியது. பின்னர் தான் அது மாநகர சபை கையேற்று நடத்தியது.

70களின் இறுதியில் வடக்கு கிழக்கெங்கும் தொல்பொருள் ஆய்வுகள் என்கிற பேரில் கண்டு பிடிக்கப்பட்டவற்றைக் கொண்டு ஆதலால் வடக்குகிழக்கு முழுவதும் சிங்களவர்களின் பிரதேசங்கள் என்று நிறுவும் வேலைத்திட்டம் தொடங்கப்பட்டிருந்தது. தமிழர்களின் தாயகக் கோட்பாட்டை மறுத்தொதுக்குவதற்கான இந்த வேலைத்திட்டத்தில் அரசின் உதவியுடன் பல்வேறு இனவாத அமைப்புகள் பல முனைகளில் திட்டமிட்டு மேற்கொண்டிருந்தன. 77 இனக் கலவரத்தை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிடம் கூட சாட்சியமளித்த பல இனவாத சக்திகள் கலவரத்தைப் பற்றி பேசுவதை இந்த தொல்பொருள் ஆதாரங்களைப் பற்றியே அதிகம் பேசின என்பது அந்த சாட்சியங்களில் இருந்து காண முடியும். மடிகே பஞ்ஞாசீல தேரர், ஹரிச்சந்திர விஜேதுங்க, எச்.எம்.சிறிசோம போன்றோர் அங்கு பெரிய அறிக்கைகளையே சமர்ப்பித்தனர். அவை சிறு கை நூல்கலாவும் கூட சிங்களத்தில் வெளியிடப்பட்டன.

யார் இந்த சிறில் மெத்தியு?

1-2-31-212x300.jpgஅந்த பாதையில் வளர்த்தெடுக்கப்பட்டவர் தான் சிறில் மெத்தியு. இலங்கையின் வரலாற்றில் பல இனவாதிகளை உருவாக்கிய முக்கிய கோட்டையாக அன்றிலிருந்து இன்றுவரை திகழ்வது களனி பிரதேசம். அந்தத் தொகுதியின் ஐ.தே.க. அமைப்பாளர் சிறில் மெத்தியு. 1977 தேர்தலில் களனி தொகுதி மக்களால் வெற்றியடையச் செய்யப்பட்டவர் சிறில் மெத்தியு. அதே தொகுதியைச் சேர்ந்தவர் ஜனாதிபதி ஜே.ஆர். ஜே.ஆர் சிறில் மெத்தியுவுக்கு தொழில் மற்றும் விஞ்ஞான அலுவல்கள் அமைச்சராக நியமித்தார். 1980ஆம் ஆண்டு சிறில் மெத்தியு தனது அதிகார பலத்துடன் வடக்கில் அகழ்வாராய்ச்சிகளை விஸ்தரிப்பதற்காக அதிகாரிகளை அனுப்பி தனது வழிகாட்டலின் பேரில் மேற்கொண்டார்.

இந்தப் பணிகளை மேற்கொள்வதற்காக “அரச தொழிற்துறை பௌத்த சங்கம்” என்று ஒன்றை ஆரம்பித்து திருமலையில் புல்மூடை – குச்சவெளி பிரதேசத்தில் “அரிசிமலை ஆரண்ய சேனாசனய” என்கிற ஒரு பௌத்த தளத்தை ஆரம்பித்தார். சிறில் மெத்தியு தயாரித்த அறிக்கையை அதிகாரபூர்வமாகவே இலங்கையின் கலாசார உரிமைகள் பற்றி யுனெஸ்கோ நிறுவனத்திடம் கையளித்து அந்த பிரதேசங்களை பாதுகாத்து தருமாறும் முறைப்பாடொன்றை செய்தார். அந்த அறிக்கை இன்றுவரை சிங்கள தேசியவாதிகளால் போற்றப்பட்டுவருகிறது. வடக்கு கிழக்கு சிங்களவர்களின் பூர்வீக உடமை என்கிற வகையில் அந்த அறிக்கை தயாரிக்கப்பட்டிருந்தது.

வடக்கு கிழக்கு பகுதிகளில் பௌத்தமதமும், அதன் செல்வாக்கும் இருந்திருக்கிறது என்பது மறுப்பதற்கில்லை. ஆனால் அந்த வரலாற்றை சிங்களத்துடன் இணைத்து சிங்கள பௌத்த வரலாறாக புனையும் சிங்கள பேரினவாதம் அதை காலாகாலமாக செய்து வருகிறது. தமிழ் பௌத்தம் என்கிற ஒன்று இருந்தது என்பதையும், அதன் செல்வாக்குக்குள் தமிழர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்கிற உண்மையை ஏற்றுக்கொண்டு, அதை உறுதி செய்வதன் மூலமே சிங்கள பௌத்த புனைவுகளுக்கு பதிலடி கொடுக்க முடியும் ஆனால் யாழ் – சைவ – தமிழ் மையவாத மரபு அதற்கு இடங்கொடுப்பதில்லை. தமிழ் பௌத்தத்தை கொண்டாட அந்த மரபு இடங்கொடுப்பதில்லை. வெகு சில ஆய்வுகளையே அப்படி காண முடிகிறது.

1-4-9.jpgதமிழர்களுக்கு உரிமை கோருவதற்கு அங்கு ஒன்றும் இல்லை. அது பயங்கரவாதக் கோரிக்கைகளே என்று நிறுவும் வகையில் அவர் நூல்களை எழுதி பிரசுரித்தார். “கவுத கொட்டியா?” (புலிகள் யார்? – 1980), “சிஹளுனி! புதுசசுன பேராகனிவ்” (சிங்களவர்களே பௌத்தத்தைக் காத்திடுங்கள்!) என்கிற நூல்கள் மிகவும் மோசமான இனவாத நூல்கள். தன்னை தீவிர சிங்கள பௌத்தனாக ஆக்கிக்கொண்ட சிறில் மெத்தியு தமிழ் விரோத போக்கையும், வெறுப்புணர்ச்சியையும் வளர்த்துக்கொண்டிருந்தவர்.

யாழ் நூலக எரிப்புக்கு சிறில் மெத்தியு மட்டும் பொறுப்பில்லை. அதற்கு ஏதுவான இனவாத அலை ஏற்கெனவே வளர்தெடுக்கப்பட்டு, நிருவனமயப்படுத்தப்பட்டுத் தான் இருந்தது. ஆனால் சிறில் மெத்தியு அந்த உடனடி நிலைமைகளுக்கு தலைமை கொடுத்தார் என்பது வெளிப்படை. இந்த காலத்தில் சிறில் மெத்தியு பாராளுமன்றத்தில் சிறில் மெத்தியு ஆற்றிய உரைகளில் இனவாத விசர்நாயொன்றின் கர்ஜனைகளைக் காண முடியும்.

சிறில் மெத்தியுவின் இந்தப் போக்கை ஐ.தே.க அரசாங்கமும் ஜே.ஆறும் கண்டுகொள்ளவில்லை. தமிழ் மாணவர்களின் பல்கலைக்கழக நுழைவை சிறில் மெத்தியுவால் சகிக்கக் கூட முடியவில்லை. எம். சிவசிதம்பரம் சிறில் மெத்தியுவுக்கும் இடையில் பாராளுமன்றத்தில் கடுமையான வாதம் நிகழ்ந்தது. தமிழ் மாணவர்களை குறுக்குவழியில் பல்கலைக்கழகத்துக்கு அனுப்புவதற்காக வினாத்தாள் திருத்துனர்கள் மோசடி செய்து அதிக புள்ளிகளை வழங்கினார்கள் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார். அந்த விவாதத்தில் அவரை ஆதாரத்தை முன்வைக்கக் கோரியபோதும் கையில் ஒரு கடுதாசியை வைத்துக் கொண்டு கடைசி வரை சமர்ப்பிக்கவில்லை. ஆனால் இன்று வரை சிங்கள நூல்களில் சிறில் மெத்தியு கூறியது உண்மை என்றே பதிவு செய்யப்பட்டுள்ளதையும் காண முடிகிறது.

“நாம் எதனையும் ஏற்றுக்கொள்வோம்; ஆனால், நேர்மையற்றவர்கள் என்ற குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது… கஷ்டப்பட்டு படித்துப் புள்ளிகள் பெறும் மாணவர்களை நோகடிகின்ற, இழிவுசெய்கின்ற கருத்துக்கள் இவை” அவர் ஆத்திரத்துடன் உரையாற்றினார்.

 

வடக்கில் எழுச்சியுற்ற தமிழர் உரிமை இயக்கங்களை எதிர்கொள்ள இப்படியான சக்திகள் சிங்களத் தரப்புக்கு தேவைப்பட்டுக்கொண்டிருந்தது. குறிப்பாக அரசாங்கத்துக்குள்.

ஐ.தே.வின் மானப் பிரச்சினைக்கு விலை

வடக்கில் தமிழ் இளைஞர்களின் எழுச்சி அரசாங்கத்துக்கு ஒரு பெரும் சவாலாகவே இருந்தது. 77 கலவரம் நிகழ்ந்து அதன் மீதான விசாரணையும் கூட அந்த சூட்டைத் தணிய வைக்கவில்லை. மாவட்ட சபைகள் தேர்தலில் கூட்டணியுடன் போட்டியிட்டு எப்பெரும் விலையைக் கொடுத்தாவது பல ஆசனங்களைக் கைப்பற்ற வேண்டும் என்று களம் இறங்கியது ஐ.தே.க. அருவருக்கத்தக்க தேர்தல் மோசடிகளில் இறங்கியது பற்றி பல சர்வதேச அறிக்கைகள் கூட சுட்டிக் காட்டியுள்ளன. வாக்குப் பேட்டிகள் சூறையாடப்பட்டன. பொலிசாரின் கெடுபிடிகள் சாமான்ய மக்களுக்கு அதிரித்திருந்தன.

இந்த நிலையில் ஐ.தே.க நியமித்திருந்த பிரதான வேட்பாளரான தியாகராஜா தமிழ் இயக்கங்களால் குறி வைக்கப்பட்டிருந்தார். அவர் மே 24 அன்று அவர் கொல்லப்பட்டார். ஐ.தே.கவுக்கு இது பேரிடியாக இருந்தது. வெற்றி வாய்ப்புகள் கைநழுவிப் போவதை உணர்ந்த அவர்கள் இதனை தமக்கேதிறான் சவாலாகவே பார்த்தனர்.

1-5-6.jpg
          படம்: சிறில் மெத்தியு, பிரேமதாச, லலித் அத்துலத் முதலி, ஹெக்டர்          ஜெயவர்த்தன, ஜே.ஆர்.ஜெயவர்த்தன

தேர்தல் பணிகளை நேரில் நின்று கவனிப்பதற்காக ஜே.ஆர், அமைச்சர் சிறில் மெத்தியுவையும், மெத்தியுவுக்கு நெருக்கமான அமைச்சர் காமினி திசாநாயக்கவையும் அவர்கள் தலைமையில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர், அமைச்சரவையின் செயலாளர் ஆகியோரைக் கொண்ட ஒரு சிறப்புக் குழுவை மே 30 ஞாயிறு அன்று யாழ்ப்பாணத்துக்கு அனுப்பினார். அதைவிட ஏற்கெனவே அதிகளவில் பொலிசார் குவிக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணத்துக்கு மேலதிகமாக வெளி மாவட்டங்களிலிருந்து 500 பொலிசாரிக் கொண்ட ஒரு பெரும்படையும் அனுப்பப்பட்டது. ஒரு பெரும் அசம்பாவிதத்துக்கான முஸ்தீபுகள் மேற்கொள்ளப்படுவதை யாழ்ப்பாண மக்கள் அறிந்திருக்கவில்லை.

தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே இருந்த நிலையில் தேர்தல் பிரச்சாரங்கள் பரபரப்புமிக்கதாக இருந்தது. மே.31ஆம் திகதி தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் யாழ்ப்பாணம் நாச்சிமார் அம்மன் கோவிலடியில். இந்தக் கூட்டத்தில் பாதுகாப்புக் கடமையில் இருந்த மூன்று பொலிஸார் இளைஞர் சிலரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானார்கள். இரண்டு பொலிஸார் ஸ்தலத்திலேயே உயிரிழந்தார்கள்.

1-6-4-300x253.jpg                            படம்: எரித்து நாசமாக்கப்பட்ட யோகேஸ்வரன் வீடு

அரச பயங்கரவாதம்

சொற்ப நேரத்தில் அங்கு விரைந்த ஆயுதமேந்திய பொலிஸ் படையொன்று தமது வெறியாட்டத்தைத் தொடங்கியது. வீதியில் கண்டவர்களையெல்லாம் அடித்து துன்புறுத்தினர். வீதி வெறிச்சோடியது. ஆத்திரத்தில் அருகில் இருந்த அனைத்தையும் சின்னாபின்னப்படுத்தினர். 150க்கும் மேற்பட்ட கடைகள் கொள்ளையிடப்பட்டும் தீயிடப்பட்டும் நாசம் செய்யப்பட்டன. அருகிலிருந்த கோவிலுக்கு தீவைத்த அவர்கள், தொடர்ந்து அருகிலிருந்த வீடுகளையும் வீதியிலிருந்த வாகனங்களையும் தீக்கிரையாக்கத் தொடங்கினர். பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனின் வீடு சாம்பலாக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டது. யோகேஸ்வரனும் அவரது மனைவியும் மயிரிழையில் உயிர் தப்பியோடினர். ஈழநாடு பத்திரிகைக் காரியாலயம் தீ வைத்து கொளுத்தப்பட்டது. அதன் ஆசிரியர் கோபாலரத்தினம் கொடூரமாக தாக்கப்பட்டார். தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைமைக் காரியாலயமும் தீ வைத்து நாசமாக்கப்பட்டது. நான்கு தமிழர்கள் வீதிக்கு இழுத்து வரப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார்கள். யாழ்ப்பாணப் பெரிய கடையில் கட்டியெழுப்பப்பட்ட திருவள்ளுவர் சிலை, ஓளவையார் சிலை, சோமசுந்தரப் புலவர் ஆகியோரின் சிலைகளும் உடைத்து துவம்சம் செய்யப்பட்டன.

இந்த ஆராஜகத்தை யாழ்ப்பாண விருந்தினர் விடுதியில் இருந்தபடி இயக்கிக் கொண்டிருந்தார்கள். சிறில் மெத்தியு, காமினி திசாநாயக்க தலைமையிலான குழு. ஏற்கெனவே இறக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான காடையர்களும் தம் பங்குக்கு கொள்ளைகளிலும், நாசம் செய்வதிலும் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள். இத்தனைக்கும் அவசரகால சட்டம், அமுலில் தான் இருந்தது. சகலதும் முடிந்த பின்னர் தான் காலம் கடந்து ஜூன் 2அன்று ஊரடங்கு சட்டத்தைப் பிறப்பித்தது அரசாங்கம். அந்த சட்ட நடவடிக்கைகள் காடையர்களுக்கு பாதுகாப்பையும், பாமரர்களுக்கு இழப்பையும் தான் தந்தது. மொத்தத்தில் சொல்லப்போனால் அரச பயங்கரவாதம் இந்த சட்டங்களின் மூலம் மேலதிக அதிகாரங்களுடனும், வசதிகளுடனும் மக்களை கட்டிப்போட்டு சூறையாடியது. அவர்களின் சொத்துக்களை அளித்து சின்னாபின்னமாக்கியது.

 

இரவிரவாக நடந்த இந்தக் கொடுமைகளுக்கு இடைவேளை கொடுக்கவில்லை. அவர்களின் நாசகர தாகமும் அடங்கவில்லை. மறுநாளும் தொடர்ந்தது ஜூன் 1 அவர்கள் யாழ் பொது நூலகத்துக்குள் நுழைந்தார்கள். அங்கிருந்த 97,000க்கும் மேற்பட்ட நூல்களையும், காலங்காலமாக பாதுக்காக்கப்பட்டு வந்த ஓலைச்சுவடிகளையும், பல கையெழுத்து மூலப் பிதிகளையும் சேர்த்து கொளுத்தினார்கள். வரலாற்று முக்கியத்துவம் பெற்ற “யாழ்ப்பாண வைபவ மாலை”யின் ஒரேயொரு மூலப் பிரதியும் அழிக்கப்பட்டவற்றுக்கு உதாரணம்.

%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%இரவிரவாக தீயில் பொசுங்கிக்கொண்டிருந்த அந்த புலமைச் சொத்துக்களுடன், பல்லாயிரக்கணக்கானோரை உருவாக்கிய அந்த நூலகம் எரிந்துகொண்டிருந்ததை யாழ். புனித பத்திரிசிரியார் கல்லூரியின் மேல்மாடிக் கட்டடத்தில் வாழ்ந்து வந்த 74 வயதுடைய தாவீது அடிகள் இதனைக் கண்ணுற்ற அதிர்ச்சியில் மாரடைப்பில் உயிர்துறந்தார்.

“தமது புலமைச் சொத்தின் ஒட்டுமொத்த அழிப்பின் அடையாளமாகவே பார்த்தார்கள். பொது நூலக எரிப்பானது, ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையும் அடக்குமுறைமிக்க அரசுக்கு எதிராகத் திருப்பியது’ என்று குறிப்பிடுவார் பேராசிரியர் சிவத்தம்பி.

library-2.jpg
மா.க. ஈழவேந்தன் தமிழினத்தின் மீதான பண்பாட்டுப் படுகொலை என்றார்.

பேராசிரியர் சுனில் ஆரியரத்ன தமிழ் மொழி, கலை, பண்பாடு என்பவற்றை சிங்கள சமூகத்து கொண்டு போய் சேர்க்கும் முக்கிய சிங்கள புலமையாளர். யாழ் பல்கலைக்கழகத்திலும் கற்றவர். அவர் இப்படி குறிப்பிடுகிறார்.

“ஆயிரக்கணக்கான வரலாற்று இதிகாசங்களைக் கொண்டவர்கள் தமிழ் மக்கள். மிகவும் கிடைத்தற்கரிய நூல்களையும் கொண்டிருந்தது யாழ் நூலகம். நாங்கள் எங்களுக்குத் தேவையான நூல்களை பலகலைக் கழக நூலகத்திலிருந்து பெற்றுக்கொண்ட போதும் அதை விட மேலதிகமான தேவைகளுக்கு யாழ் போது நூலகத்தையே நாடினோம். உலகில் எங்கும் கிடைத்திராத நூல்களும், இந்தியாவில் கூட கிடைத்திராத பல நூல்கள் ஆவணங்களும் பாதுகாப்பாக அங்கு இருந்தன. இனி அந்த நூல்களை எந்த விலை கொடுத்தாலும் நமக்கு கிடைக்கப்போவதில்லை. புராண வரலாற்று தொல்லியல் சான்றுகளை எரித்து அழித்ததற்கு நிகர் இது.”

1-7-4-200x300.jpgயாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் சுவாமிநாதன் விமல் இப்படி கூறுகிறார்.
“காலனித்துவகாலத்து நூல்களும், யாழ்ப்பாணத்தின் கல்வி மறுமலர்ச்சி சம்பந்தப்பட்ட மூல ஆவணங்களும், ஈழத்து தமிழ் இலக்கியத்தை வெளிப்படுத்தும் எங்கும் கிடைத்திராத நூல்களும் கூட இங்கு சேகரிக்கப்பட்டிருந்தன.”

இலங்கையின் அரச பயங்கரவாதம் காலத்துக்கு காலம் கலவரங்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் தலைமை கொடுத்து வந்திருக்கிறது தான். இதற்கு முந்திய 1939, 1956, 1958, 1977 முக்கிய கலவரங்களின் போதும் அழிவுகளை ஒவ்வொரு கோணத்தில் கண்ணுற்றிருக்கிறோம் ஆனால் 1981 இல் அழித்தவற்றில் தலையாய இழப்பாக, மறக்கவும், மன்னிக்கவும் முடியாத இழப்பாக பதிவானது யாழ் நூலக அழிப்பு.

தென்னாசியாவின் சிறந்த நூலகமாகவும், இலங்கையின் இரண்டாவது பெரிய நூலகமாகவும் அறியப்பட்டது அது.

கணேசலிங்கத்தின் வாக்குமூலம்

யாழ் நூலக எரிப்புக்கு காரணமான எவரும் இறுதிவரை உத்தியோகபூர்வமாக தண்டிக்கப்படவில்லை. அவர்கள் எவரும் சட்ட ரீதியாக குற்றம் சுமத்தப்படவுமில்லை. ஆனால் 1993 மார்ச் மாதம் அப்போது வெளிவந்த சரிநிகர் பத்திரிகைக்கு ராவய பத்திரிகையின் ஆசிரியர் விக்டர் ஐவன் இனப்பிரச்சினை குறித்த ஒரு பேட்டியை வழங்கியிருந்தார். அதில் அவர் அன்றைய கொழும்பு மேயரும், ஐ.தே.க.வின் பொருளாளருமாக இருந்த கே.கணேசலிங்கத்துடன் ஒரு உயர்ஸ்தானிகரின் வீட்டு விருந்தொன்றில் பரிமாறிக்கொண்ட கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

“அங்கு மது பரிமாறப்பட்டிருந்தது. 1981 யாழ் நூலக தீவைப்புக்கு நீங்களும் மெத்தியு போன்றோருக்கு உடந்தையாக இருந்திருக்கிறீர்களே:”

என்று கேட்ட கேள்விக்கு.

Ganeshalingam-unp.jpgகணேசலிங்கம்: “அந்த நேரம் கள்ள வாக்குகளைப் போடுவதகாகத் தான் நாங்கள் போயிருந்தோம் என்பது உண்மை…. நானோ, சிறில் மெத்தியுவோ, காமிநியோ பெஸ்ரல் பெறேராவோ காரணமல்ல. அதைச் செய்தது பொலிஸ் அதிகாரி ஹெக்டர் குணவர்த்தன தான். நாங்கள் அதைத் தடுக்கவில்லை.”

ஐவன்: 83 கலவரத்தில் சிறில் மெத்தியுவுக்கு நேரடிப் பங்கு இருந்ததை ஏற்றுக் கொள்கிறீர்களா?

கணேசலிங்கம்: “1983 கலவரத்திற்கு நானும் பங்களிப்பு செய்திருக்கிறேன். நானும் சிறில் மெத்தியுவும் மட்டுமல்லஅரசோடு இருந்த எல்லா சிரேஷ்ட அரசியல் வாதிகளும் அக்கலவரத்தைப் பாவித்தார்கள்.. தமக்கு தேவையானதை செய்துகொண்டார்கள். காமினி, லலித், மெத்தியு, பிரேமதாச அனைவரும் பாவித்தார்கள். நாங்கள் எவரும் யோசிக்கவில்லை அது அவ்வளவு சிக்கலைக் கொண்டு வரும் என்று. சாதாரணக் கலவரத்தைப் போல எழும்பி அடங்கி விடுமென்றே கருதியிருந்தோம்”

ஐவன்: “இப்படி ஒரு கேவலமான செயலைச் செய்ய தமிழனான நீங்கம் எப்படி உடந்தையாக இருந்தீர்கள்.”

பிரேமதாச அரசாங்கத்தின் போது காமினி திசாநாயக்க, லலித் அத்துலத்முதலி பிரேமதாசவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டு வருவதற்கான ஆயத்தங்களை செய்து கொண்டிருந்த போது பிரேமதாச இந்த உண்மைகளை உடைத்தார். காமினி திசாநாயக்க நூலக எரிப்பில் ஆற்றிய பாத்திரத்தைப் பற்றிய உண்மைகளை அன்றைய ஜனாதிபதி பிரேமதாச மறைமுகமாக வெளிப்படுத்தினார்.

புத்தளம் முஸ்லிம் கல்லூரியில் பிரேமதாச ஆற்றிய உரையின் போது;

1981இல் மாவட்ட அபிவிருத்திச் சபை தேர்தல் நடைபெற்ற வேளையில் கட்சிக்காரர்கள் நாட்டின் பிர பகுதிகளிலிருந்து பலபேரைச் சேர்த்துக்கொண்டு வடக்கு நோக்கிச் சென்றார்கள். வடக்கில் நடைபெற்ற தேர்தலை நடக்க விடாமல் குழப்பியதோடு குழப்பமும் செய்தார்கள். யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்தில் விலைமதிப்பற்ற புத்தகங்களைக் கொளுத்தியவர்கள் யாரென்று அறிய விரும்பினால் எம்மை எதிர்ப்பவர்களின் முகத்தைப் பார்த்தால் தெரியும்” என்றார்.

அன்று அவரை எதிர்த்து நின்றவர்கள் வேறு யாருமில்லை காமினி திசாநாயக்க தலைமையிலான குழுவே.

1-8-3-1024x682.jpgஇந்தக் குற்றச்சாட்டுக்கு காமினி பூசி மெழுகி எழுதியிருந்த கடிதத்துக்கு ஜனாதிபதி பிரேமதாச மீண்டும் பதிலளித்தார். அது பற்றிய செய்தி 1991 ஒக்டோபர் 26 ஆண்டு வெளியான ஈழநாடு பத்திரிகையில் செய்தியும் வெளியானது, அதில்

“வடக்கு கிழக்கில் தற்போதைய நிலைமையை எழுப்பியவர்கள் யார். இதற்கு பிரதானமான காரணம் காமினியே. பத்து வருடங்களுக்கு முன் 1981ல் நடந்த சம்பவங்கள் இந்நாட்டின் சமுதாயங்களுக்கு இடையிலான உறவுகளில் இது ஒரு கரை படிந்த துரயரமான சமவமாகும்… மாவட்ட அபிரிவித்து சபை முறையை பாராளுமன்றத்தில் காமினி திசாநாயக்கவே எதிர்த்தார். தேர்தலுக்கு முதல் காமினி நிறைய ஆட்களை கூட்டிக்கொண்டு யாழ்ப்பாணம் சென்றார்…
மாவட்ட அபிவிருத்திச் சபை தேர்தல்களில் சதிநாசவேலைகள் இடம்பெற்ற பின்னர் ஒரு சர்வதேச நூல்நிலயமான யாழ் நூல் நிலையமான யாழ் நூலகம் எரியூட்டப்பட்டது. வாக்குச் சீட்டுக்களால் நீதியை பெறுவதற்கே எமது தலைவர்களால் முடியாவிடில் நாங்கள் நீதியை குண்டுகள் மூலம் பெறுவோம் என இளம் தமிழ் தீவிரவாதிகள் நினைத்தனர். இப்படித்தான் அவர்கள் தீவிரவாத செயலில் இறங்கினார்கள்..”

1-9-884x1024.jpg                  படம்: 26.10.1991 ஈழநாடு பத்திரிகையில் வெளியான செய்தி 

அழிப்பின் சிகரம்

கடந்த 2016 டிசம்பர் மாதம் யாழ் நூலக எரிப்புக்கு முதற்தடவையாக பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார் பிரதமர் ரணில்.

சிறில் மெத்தியு ஒரு வீரனாகவே இனவாதிகள் மத்தியில் இன்னும் திகழ்கிறார். 1981சம்பவத்தில் சிறில் மெத்தியுவை கண்டும் காணாது இருந்ததன் விளைவு தான் 1983 கலவரத்திலும் மெத்தியு அதனை தனக்கு கிடைத்த லைசன்சாக கருதி ஆடிய ஆட்டம். பிரேமதாசா போன்றோரின் எதிர்ப்பைத் தொடர்ந்து பின்னர் அவர் விலத்தப்பட்ட நாடகம் வேறொரு உபகதை. உண்மையில் சிறில் மெத்தியுவை எவரும் விலத்தத் துணியவில்லை அவர் தானாக விலகினார் என்பது தான் உண்மை.

1-2-32-200x300.jpgசர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பு நிறுவனத்தின் தலைவர் Orville H. Schell, தலைமையில் உண்மையறியும் குழுவொன்று இதனை விசாரிப்பதற்காக 1982இல் சென்றது. Orville H. Schell சர்வதேச மன்னிப்புச் சபையின் தலைவராகவும் விளங்கியவர். ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் பக்கசார்பில்லாத புலனாய்வுப் பிரிவை நிறுவவில்லை என்று அவர் குற்றம் சாட்டினார். 1981 மே, யூனில் ஏற்பட்ட அழிவிற்கு யார் பொறுப்பாளி என்பதைக் கூறுவதற்கு அரசாங்கம் தயாராக இருக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

யாழ் நூலகத்தை பின்னர் புனரமைத்து தமிழர்களுக்கு தந்ததாக சிங்கள அரசு கைகழுவிக் கொண்டது. ஆனால் கைநழுவிப் போன தமிழர் நம்பிக்கையை அவர்களால் திருப்பிப் பெற முடியவில்லை. அது அடுத்து வரும் பெரிய இழப்புகளுக்கு முத்தாய்ப்பாக ஆனது. ஒரு போராட்டத்தின் விதையாக ஆனது. தமக்கான தலைவிதியை தீர்மானிக்கும் வித்தானது.

யாழ் நூலக எரிப்பு அடையாள அழிப்பின் சிகரம்.

இந்த அரச பயங்கரவாதச் செயலுக்கு ஒருவகையில் காரணமாக இருந்த ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன றோட்டரிக் கழக வைபவத்தில் ஆற்றிய உரையில் இப்படி குறிப்பிடுகிறார்.

யாழ் பொது நூலகமே எனது அரசியல் வாழ்வுக்கு அத்திவாரமிட்டது. (11.06.1982 வீரகேசரி செய்தி)

 

http://thinakkural.lk/article/44402

 

Link to comment
Share on other sites

பரப்புரை ரீதியாக தமிழர் தரப்பு இந்த ஈனசெயலை அதிகமாக முன்னெடுப்பதில்லை.
எமது அடுத்த தலைமுறைக்கும் அதிகளவில் கூறுவது  இல்லை. 

எமது ஆயுத போராட்டத்தை 'பயங்கரவாதம்' என சிங்களம் கூறும்பொழுது, ஆயுத போராட்டத்திற்கு வழி கோழிலிய பல விடயங்களை தமிழர் தரப்பு ஆதரபூர்வமாக கூறலாம். அவற்றுள் ஒரு அரிய  பொது நூலகத்தை எடுத்தார்கள் என்பதை கூறல் வேண்டும். நான் கூறும்பொழுது அதை கேட்பவர்கள் மத்தியில் சிங்களவர்களின் கொடிய முகத்தை அவர்களால் உணரக்கூடியதாக இருப்பதை கண்டுள்ளேன்.  
 

Link to comment
Share on other sites

82246520_10163489609050562_1108841675427414016_o.jpg?_nc_cat=104&_nc_sid=730e14&_nc_ohc=vZqCMB8XdMQAX-Pii4r&_nc_ht=scontent-yyz1-1.xx&oh=180db1bb09ce434f287f5185c573fafc&oe=5EF89681

15 minutes ago, ampanai said:

பரப்புரை ரீதியாக தமிழர் தரப்பு இந்த ஈனசெயலை அதிகமாக முன்னெடுப்பதில்லை.
எமது அடுத்த தலைமுறைக்கும் அதிகளவில் கூறுவது  இல்லை

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, Rajesh said:

நன்றாக தெரிந்த உண்மையை பலவீனப்படுத்தும் வகையில் அதிகப்பிரசங்கி தனமா சிந்திச்சு எரித்த சிங்களவனை காப்பாற்றுவதை விட புதுசா சாதிக்க போவது ஒன்டுமில்லை.

சிங்களவனை காப்பாற்ற எங்கு முயற்சித்தேன்; சிங்களவன் எந்த அளவுக்கு எதிரியோ அதை விட பெரிய எதிரி கறுப்பு சட்டைகாரர்கள். நான் பார்த்த வரையில் ஒரு நூலகத்தை எரிக்கும் அளவுக்கு சிங்களவனுக்கு அறிவு இல்லை ...சிங்களவன் ஸ்ட்டைல் 83ம் ஆண்டு கலவரமும் முள்ளிவாய்க்காலும் தான். நுட்பமாக சிந்தித்து நூலகத்தை எரிக்கும் அளவுக்கு அவர்களுக்கு அறிவில்லை, இருந்திருந்தால் ஆசியாவில் மிகவும் அபிவிருத்தி அடைந்திருந்த நாட்டை பிச்சைக்காரா நாடாக்கியிருக்க மாட்டார்கள்.    அதை விட அவர்களுக்கு நூலகத்தை எரிப்பதால் எதுவும் கிடைக்க போவதில்லை ஏன் என்றால் இலங்கை வரலாறு என்பது மகாவம்சம் மட்டுமே... அவ்வாறான மனோநிலையில் இருப்பவர்கள் யாழ் நூலகத்தில் இருந்த நூல்களை பற்றி கவலைப்பட போவதில்லை. எனக்கு உறுத்தலாக இருக்கும் விடயம் உலகின் மூத்த குடியின் தலை சிறப்பான சரித்திரத்தை யாழ் நூலகம் வத்திருந்தது என்றால் வெறும் சிங்களவனை மட்டும் நாம் சந்தேகிக்க முடியாது ஏன் என்றாக் தமிழ் இனம் அடையாளம் இழந்து போக வேண்டும் என சிங்களவன் நினைப்பதில்லை,இதன் முன்னோடிகளான கறுப்பு சட்டைகாரர்களையும் நாம் சந்தேக கண்ணுடன் தான் பார்க்க வேண்டும்.பலர் கருணாநிதி பதவிக்காகவும் பணத்துக்கவும் ஊழல் வழக்கில் இருந்து தப்பவும் தான் முள்ளிவாயிக்கால் அவலத்தை தடுத்து நிறுத்தவில்லை என்பார்கள் ஆனால் கருணாநிதியிடம் இல்லாத நிதியா ...அதே போல் கருணாநிதி பார்க்காத பதவியா? இல்லை கருணாநிதியால் வெல்ல முடியாத வழக்கா? இவர் ஏன் முள்ளிவாய்க்கால தடுக்கவில்லை என்றால் அதுக்கு காரணம் வேறு.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஏன் நாம் எமது வரலாற்றை எமது சந்ததிக்கு  சமகால வரலாற்றுடன் நிறுத்தி விடுகிறோம். இதுவும் ஓர் காரணம் எமது வரலாற்றை இலங்கைத் தொடர்ச்சியான சுவடுகளை காணமுடியாமல் தேடிக்கொண்டு இருப்பதற்கு.         


இதே போல போர்த்துக்கேய பேய்கள், யாழ் இராச்சியத்தில் இருந்த தமிழரின் வரலாறு பதிருந்த  ஓலைச் சுவடுகளையம், செப்பு தகடுகளையும் கொண்ட   புராதன அருங்காட்சியாகமும் நூலகமுமான  சரசுவதி மகாலை தீமூட்டின Filipe de Oliveriya தலைமை கட்டளையின் பிரகாரம்.    

போர்த்துக்கேய பேய்கள்  சரசுவதி மகாலை தீமூட்டிய நாள் அநேகமாக  2 மாசி 1621 ஆம் திகதியாக இருபதற்கு வாய்ப்புகள் உள்ளது.   

இப்போதைய குறிப்பு. http://www.ceylontamils.com/history/history4.php

The Nallur Kandasamy Kovil was demolished under orders given by de Oliveriya on 2 February 1621, the day he assumed office as the senior Portuguese official in Jaffna. In 1622, the last great Ariya Chakravarti temple, the Thirukonamalai Tiru Konesar Kovil in Trincomalee was also torn down. In both Jaffna and Trincomalee, temple masonry was used to enhance the fortifications being built by the new colonial masters to withstand assault by modern weaponry. In Jaffna and in other towns, the destroyed temples were provided the building blocks for churches.

Perhaps the greatest crime was de Oliveriya's destruction of the Saraswati Mahal, which held the Ola leaf and copper-plate inscriptions containing the history of the oldest written language in the world. This ancient museum and library, the repository of all the lore and history of the Tamil people, was destroyed without a trace.

இதை பற்றி முன்பும் பதிவிட்டேன் ஒரு சிலரை தவிர வேறு எவருமே  அக்கறை பட்டதாக  தெரியவில்லை.

 • Like 3
Link to comment
Share on other sites

பரப்புரையும் நாமும் 
 
ரஜனி திரணகம சுடப்பட்ட நாள் என்று எழுதுவார்கள்.
சபாரத்தினம் கொல்லப்பட்ட நாள் என்றும் எழுதுவார்கள்.
 
ஆனால்,
 • யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்ட நாள் என்றோ,
 • யாழ்ப்பாண மருத்துவமனை பிணக்காடாக மாறிய நாள் என்றோ,
 • குமுதினிப்படகு படுகொலை நாள் என்றோ,
 • செஞ்சோலைக் குழந்தைகள் குண்டு வீசி கொல்லப்பட்ட நாள் என்றோ,
 • கோணேஸ்வரிகளும் கிருஷாந்திகளும் இராணுவத்தின் பாலியல் வன்முறைக்கு பலியான நாள் என்றோ அவர்கள் ஒரு போதும் எழுதுவதில்லை.
நாம் தான் இன்னும் தெளிவாக இல்லையோ என எண்ணத்தோன்றும்.

101437127_10217694786142859_6284065550989524992_n.jpg?_nc_cat=100&_nc_sid=e3f864&_nc_ohc=YxqBYslVkK0AX8-wbmf&_nc_ht=scontent-yyz1-1.xx&oh=3d06b988963efc8685c4aecca87aa7ec&oe=5EFA45C2

 

Sad memory in our history!

The real wealth of Tamils burnt to ashes on that day!
People who talk about peaceful protest and peaceful rebellion, I wanted to remind you that Tamils of Jaffans were peaceful people never involved in armed rebellion then.

The successive Sinhala Govts had unleashed their oppression against peaceful Tamils in Jaffna.
The burning of the largest library in south Asia with thousands of rare collections. This was the work of Singhala Govts to deprive the future Tamil generation of their history and knowledge.

 • Like 2
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இந்த நாள் தமிழர் வாழ்வில் ஒரு கரிநாள்.

Link to comment
Share on other sites

7 hours ago, உடையார் said:

வடக்கு கிழக்கு பகுதிகளில் பௌத்தமதமும், அதன் செல்வாக்கும் இருந்திருக்கிறது என்பது மறுப்பதற்கில்லை. ஆனால் அந்த வரலாற்றை சிங்களத்துடன் இணைத்து சிங்கள பௌத்த வரலாறாக புனையும் சிங்கள பேரினவாதம் அதை காலாகாலமாக செய்து வருகிறது. தமிழ் பௌத்தம் என்கிற ஒன்று இருந்தது என்பதையும், அதன் செல்வாக்குக்குள் தமிழர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்கிற உண்மையை ஏற்றுக்கொண்டு, அதை உறுதி செய்வதன் மூலமே சிங்கள பௌத்த புனைவுகளுக்கு பதிலடி கொடுக்க முடியும் ஆனால் யாழ் – சைவ – தமிழ் மையவாத மரபு அதற்கு இடங்கொடுப்பதில்லை. தமிழ் பௌத்தத்தை கொண்டாட அந்த மரபு இடங்கொடுப்பதில்லை. வெகு சில ஆய்வுகளையே அப்படி காண முடிகிறது.

101274465_10158101610166855_7277990965481046016_n.jpg?_nc_cat=107&_nc_sid=730e14&_nc_ohc=aRSTSOqBOo4AX_-jct1&_nc_ht=scontent-yyz1-1.xx&oh=78e4a83683d87788ed75fb709fa68997&oe=5EF9D7FB

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

புத்தகமும் கையுமாய் 
அந்த நூலகத்தில் 
எப்பவுமே குந்தி இருக்கும் தாத்தா 
அந்த நூலகம் 
எரிந்த காலத்தில் இருந்து 
எதுகுமே பேசாமல் 
உட்கார்ந்த தாத்தா 
அப்படியே தான் இருக்கிறார் 
தூக்கத்தில் எப்பவுமே 
கனவு ஏதோ கண்டு கத்துகிறார் 
எரிக்காதீர்கள் எரிக்காதீர்கள் 
என் புத்தகங்களை என்றே.
 

 • Sad 1
Link to comment
Share on other sites

11 hours ago, Dash said:

சிங்களவனை காப்பாற்ற எங்கு முயற்சித்தேன்; சிங்களவன் எந்த அளவுக்கு எதிரியோ அதை விட பெரிய எதிரி கறுப்பு சட்டைகாரர்கள். நான் பார்த்த வரையில் ஒரு நூலகத்தை எரிக்கும் அளவுக்கு சிங்களவனுக்கு அறிவு இல்லை ...சிங்களவன் ஸ்ட்டைல் 83ம் ஆண்டு கலவரமும் முள்ளிவாய்க்காலும் தான். நுட்பமாக சிந்தித்து நூலகத்தை எரிக்கும் அளவுக்கு அவர்களுக்கு அறிவில்லை, இருந்திருந்தால் ஆசியாவில் மிகவும் அபிவிருத்தி அடைந்திருந்த நாட்டை பிச்சைக்காரா நாடாக்கியிருக்க மாட்டார்கள்.    அதை விட அவர்களுக்கு நூலகத்தை எரிப்பதால் எதுவும் கிடைக்க போவதில்லை ஏன் என்றால் இலங்கை வரலாறு என்பது மகாவம்சம் மட்டுமே... அவ்வாறான மனோநிலையில் இருப்பவர்கள் யாழ் நூலகத்தில் இருந்த நூல்களை பற்றி கவலைப்பட போவதில்லை. எனக்கு உறுத்தலாக இருக்கும் விடயம் உலகின் மூத்த குடியின் தலை சிறப்பான சரித்திரத்தை யாழ் நூலகம் வத்திருந்தது என்றால் வெறும் சிங்களவனை மட்டும் நாம் சந்தேகிக்க முடியாது ஏன் என்றாக் தமிழ் இனம் அடையாளம் இழந்து போக வேண்டும் என சிங்களவன் நினைப்பதில்லை, இதன் முன்னோடிகளான கறுப்பு சட்டைகாரர்களையும் நாம் சந்தேக கண்ணுடன் தான் பார்க்க வேண்டும்.பலர் கருணாநிதி பதவிக்காகவும் பணத்துக்கவும் ஊழல் வழக்கில் இருந்து தப்பவும் தான் முள்ளிவாயிக்கால் அவலத்தை தடுத்து நிறுத்தவில்லை என்பார்கள் ஆனால் கருணாநிதியிடம் இல்லாத நிதியா ...அதே போல் கருணாநிதி பார்க்காத பதவியா? இல்லை கருணாநிதியால் வெல்ல முடியாத வழக்கா? இவர் ஏன் முள்ளிவாய்க்கால தடுக்கவில்லை என்றால் அதுக்கு காரணம் வேறு.

சிங்களவன் எதுவுமே தெரியாத ஒரு அப்பாவி என்ட கோதாவில் இங்கு முழுமையாக சிங்களவனை காப்பாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளீர்கள்.

யாழ் நூலக எரிப்புக்குள் கறுப்பு சட்டைக்காரர்களை தேவையில்லாமல் இழுத்து சிங்களவனை காப்பாற்ற நினைப்பதில் ஏதாவது லாபம் இருக்குமோ?

இதுவொன்றும் புதுசில்லையே!

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

யாழ்பொது நூலகம் எரியூட்டப்பட்டமை : இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தை நோக்கிய ஒரு ஆரம்பகட்ட நடவடிக்கை

தமிழ் வேந்தன் ஆனந்தவிநாயகன்

 

டிப்ளொமட்

 

இலங்கையில் உருவாகிவருகின்ற உள்நாட்டு போர் குறித்த ஆரம்பகட்ட சமிக்ஞைகள் 1981 மே 31 ம் திகதி தென்பட்டன.
ஏற்பாடு செய்யப்பட்ட சிங்கள காடையர்கள் கும்பல் யாழ்ப்பாணத்தின் மிகவும் மதிப்புமிக்க நூலகத்தின் மீது வன்முறை தாக்குதலை மேற்கொண்டது.
யாழ் நூலகம் அவ்வேளை மிகப்பெரிய நூலகங்களில் ஒன்றாக காணப்பட்டது.மேலும் தென்னாசியாவில் மிகவும் சிறந்ததாகவும் அது காணப்பட்டது.

jaffna-li3-300x205.jpg

அந்த காடையர் கும்பல் அறிவற்றது இல்லை,விழிப்புணர்வு அற்ற சட்டத்தை தங்கள் கையிலெடுத்த அநாமதேய குழுவும் இல்லை.

அவர்களில் இலங்கை காவல்துறையை சேர்ந்த நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் காணப்பட்டனர், அவர்களை சிறிஸ் மத்தியு காமினி திசநாயக்க என்ற அப்போதைய அரசாங்கத்தின் சிரேஸ்ட அமைச்சர்கள் இருவர் யாழ்ப்பாணத்திற்கு அழைத்து சென்றிருந்தனர்.Gamini_Dissanayake-214x300.jpg

தமிழர் விடுதலைக்கூட்டணியின் பேரணியை கண்காணிப்பதற்காகவும் குழப்பவதற்காகவுமே அவர்கள் அங்கு அழைத்து செல்லப்பட்டனர்.
தமிழர்விடுதலைக்கூட்டணி அன்று தனது வரலாற்றின் உச்சத்தில் காணப்பட்டது,கொழும்பில் உள்ள இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் முக்கிய கட்சியாக தமிழர் விடுதலை கூட்டணி காணப்பட்டது.

எனினும் மோதல் காரணமாக அந்த பேரணி குழப்பத்தை சந்தித்தது மூன்று பொலிஸார்உயிரிழந்தனர்.

இந்த பின்னணியிலேயே யாழ்ப்பாண நூலகம் தீ மூட்டப்பட்டது,அணைக்கப்படாமல் இரண்டு நாட்கள் எரிந்தது.

ஆனால் அது அங்கு முடியவில்லை-யாழ்ப்பாணத்தின் பல வீடுகளிற்கும் வர்த்தக நிலையங்களிற்கும் வன்முறைகளும் தீயும் பரவின.தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைமையலுவலகம் ஈழநாடு பத்திரிகை அலுவலகமும் வன்முறைக்கு உள்ளாகின.

jaffna-lib2-300x204.jpg

தமிழ் கலாச்சார மத பிரமுகர்களின் சிலைகள் சேதமாக்கப்பட்டன.

இந்த வன்முறைகளை காரணமாக வைத்து ஸ்ரீலங்கா பொலிஸார் அரசியல் எதிராளிகளை இலக்கு வைத்ததன் காரணமாக எனது தந்தை வண்ணை ஆனந்தன் போன்றவர்கள் தலைமறைவாக வேண்டிய நிலையேற்பட்டது.

இதேவேளை அருகிலிருந்து யாழ்ப்பாண விடுதியொன்றிலிருந்தவாறு சிறில்மத்தியுவும் காமினி திசநாயக்கவும் நூலகம் எரிவதை பார்வையிட்டனர்.
பின்னர் அவர்கள், நூலகம் எரிக்கப்பட்டமை துரதிஸ்டவசமான சம்பவம், சில பொலிஸார் மதுபோதையில் சூறையாடலில் ஈடுபட்டனர் அவர்கள் தாங்களாகவே இதில் ஈடுபட்டனர் என குறிப்பிட்டிருந்தனர்.

syril-mathew-300x169.jpg

தனிநபர்கள் சூறையாடல்கள் கலவரங்களில் ஈடுபடுவது என்ற சொல்லாடல்கள் காலனித்துவத்திற்கு பிந்தைய இலங்கையில் நியாயப்படுத்தல்களிற்கான தொடர்ச்சியான வழிமுறையாக காணப்பட்டன.சிங்கள அரசியல் தலைவர்களும் சிங்கள ஊடகங்களும் இதனை தெரிவித்தன.

இவ்வாறான ஒரு நிலைப்பாடு தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படுவதற்கு வழிவகுத்தது.

பேர்லினின் ஸ்டேட் ஓபராவில் உள்ள சதுக்கத்தில் நாஜிகள் ஜேர்மனிய மொழியில் இல்லாத 25,000 நூல்களை தீயிட்டு கொழுத்திய 1933 ம் ஆண்டிலிலேயே யாழ் நூலகம் கேஎம் செல்லப்பாவின் தனிப்பட்ட சேகரிப்பாக ஆரம்பமானது.அவர் தனது வீட்டிலிருந்து நூல்களை வழங்க ஆரம்பித்தார்.

இந்த சாதாரண ஆரம்பம் , செல்லப்பா தலைமையிலான உள்ளுர் குழுவொன்று நூலகமொன்றை ஆரம்பிப்பதற்கு வழிவகுத்தது.
ஆரம்பத்தில் அந்த சிறிய நூலகத்தில் ஆயிரம் நூல்கள் பத்திரிகைகள், இதழ்கள் ஒரு சிறிய அறையில் காணப்பட்டன.
எனினும் காலப்போக்கில் நூல்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது.அதன் பின்னர் நூலகம் பிரதான வீதிக்கு மாற்றப்பட்டது. சந்தா முறை ஆரம்பிக்கப்பட்டது.
யாழ்ப்பாண சமூகத்தின் முக்கிய பிரமுகர்கள் நிரந்தர நவீன கட்டிடமொன்றை கட்டுவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்தனர்.

அந்த தருணத்தில் அறிவின் சோலையையும் தமிழர்களின் நினைவுகளையும் சேகரிப்பதற்கு உதவுவதற்கு பெருமக்கள் பலர் ஓன்றுசேர்ந்தனர்.
கட்டிடக்கலைஞர் விஎன் நரசிம்மன் புதிய கட்டிடத்தை வடிவமைத்தார்.அதேவேளை இந்தியாவின் பிரபல நூலகவியலாளர் எஸ்ஆர் ரங்கநாதன் நூலகம் சர்வதேச தராதரத்தில் காணப்படுவதை உறுதி செய்வதற்காக ஆலோசகராக செயற்பட்டார்.
தமிழ் சமூகத்தின் பெரும் மதிப்பிற்குரிய பிரமுகர்கள் நூல்களை வழங்கினார்கள்.
பிரதான கட்டிடத்தை 1959 இல் யாழ் மேயராக விளங்கிய அல்பிரட் துரையப்பா திறந்துவைத்தார். jaffna_library_chandran_cropped-300x289.

யாழ்ப்பாண நூலகத்தை சர்வதேச மற்றும் உள்நாட்டு புத்திஜீவிகள் நேசித்ததால் அதன் முக்கியத்துவமும் மேன்மையும் அதிகரிக்க ஆரம்பித்தது.குறிப்பாக அது தமிழ் சமூகத்திற்கான கலாச்சார தளமாக காணப்பட்டது.
நூலகத்தில் 1736 இல் மயில்வாகன புலவர் எழுதிய யாழ்ப்பாண வைபமாலை என்ற யாழ்ப்பாண வரலாற்று நூலின் ஒரேயொரு பிரதி போன்ற மிகவும் அரிய நூல்கள் காணப்பட்டன.

இராமாயணத்தின் மிகச்சிறிய அளவிலான பதிப்புகள், யாழ்ப்பாணத்தின் தமிழ் பத்திரிகைகளின் தொகுப்புகள்,முக்கியமான ஆவணங்களின் மைக்ரோபிலிம்கள்,இலங்கையின் காலனியாட்சியின் போது கிறிஸ்தவ மிசன்களால் வெளியிடப்பட்ட மோர்னிங் ஸ்டாரின் பதிவுகள் போன்றவை காணப்பட்டன.
யாழ் நூலகத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் நூல்களும் பழைய அபூர்வமான கையெழுத்துப்பிரதிகளும் ஆவணங்களும் காணப்பட்டன.

சில பெறுமதியான ஆவணங்கள் எழுத்தோலைகளில் எழுதப்பட்டு மணக்கும் சந்தனப்பெட்டிகளில் சேமிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டன.
யாழ் நூலகத்தில் மூலிகை மருத்துவம் பற்றிய வரலாற்று பதிவுகளும்,பிரபலமான புத்திஜீவிகள்,எழுத்தாளர்கள் நாடக கலைஞர்களின் கையெழுத்துப்பிரதிகள் காணப்பட்டன.
இவை அனைத்தும் சாம்பலில் கலந்தன.

Jaffna-Library-300x211.jpg

பிரபல சிங்கள நூலகர் எச்ஏஐ குணதிலக தனிப்பட்ட கடிதமொன்றை எழுதினார். எரியூட்டப்பட்ட அந்த கட்டிடம் இனவெறி வெறுப்பின் காட்டுமிராண்டித்தனமான மிருகத்தனமான போக்குகளிற்கு ஒரு சான்றாகும் என அவர் எழுதியிருந்தார்.

அந்த தீ வைப்பு சம்பவத்தின் பின்னர் தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான அமிர்தலிங்கம்( இவரும் பின்னர் விடுதலைப்புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்) இலங்கை நாடாளுமன்றத்தில் கடுமையான உரையொன்றை ஆற்றினார்.

சில அரியவகை நூல்களும் முற்றாக எரிக்கப்பட்டன,இந்த நாட்டின் மக்கள் எந்தஅளவிற்கு கீழிறங்குவார்கள் என்பதற்கான அறிகுறி இது என அவர் குறிப்பிட்டிருந்தார்.

யாழ்பொது நூலகம் மீதான தாக்குதல் குறித்து ஒருபோதும் உரிய விசாரணைகள் இடம்பெறவில்லை குற்றவாளிகள் ஒருபோதும் நீதியின் முன்நிறுத்தப்படவில்லை,இலங்கையின் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கபடும் கலாச்சாரத்தில் இன்னொரு அத்தியாமாக இது காணப்படுகின்றது.

யாழ் நூலகம் இன்னமும் உதயமாகாத, ஆனால் ஆவலுடன் எதிர்பார்த்துள்ள தமிழ் தேசத்தின் அறிவுசார் நீர்த்தேக்கமாக காணப்பட்டது.
அறிவு வரலாறு மற்றும் நினைவை இலக்குவைத்தல் என்பன இனச்சுத்திகரிப்பின் முக்கியமான அம்சங்கள்.

1992 இல் சரஜீவோவில் உள்ள ஓரியன்டல் நிறுவகத்தின் மீதான சேபியன் தேசியவாதிகளின் தாக்குதல் மூலம் இது மீண்டும் புலனாகியது.

ஆகவே யாழ் பொதுநூலகம் எரியூட்டப்பட்டமை சாதாரண காடையர் கும்பலினால் மேற்கொள்ளப்பட்ட சம்பவமல்ல.
அது வரவிருக்கும் பேரழிவை ஏற்படுத்தும் போரின் முன்னோடியாக காணப்பட்டது.இந்த போர் 1983 இல் கறுப்பு ஜூலை என அழைக்கப்படும் தினத்தில் ஆரம்பமாகி 2009 மேயில் முடிவடைந்தது.இதன் காரணமாக 200,000ற்க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர்,உலகில் அதிகளவானவர்கள் பலவந்தமாக காணமல்போகச்செய்யப்பட்ட இரண்டாவது நாடாக இலங்கை மாறியது.

ஆனால் இவற்றை விட எரியூட்டல் இன்னொரு முக்கியமான செய்தியை தெரிவித்தது.
அதிகாரத்தில் உள்ளவர்களால் தாங்கள் நினைத்த நேரத்தில் இனத்துவ அடையாளங்களை அழிக்க முடியும் என்பதே அது.

யாழ் நூலகத்தை எரித்தமை என்பது தமிழ்சமூகத்தின் பெருமை மற்றும் கண்ணியம் ஆகியவற்றை களவாடுவதற்கான ஒரு முயற்சியாகும்.
இது அவர்களின் பாரம்பரியத்தை அழிப்பதற்கான ஒரு முயற்சியாகும்.
அந்த பேரழிவு தரும் எரியூட்டல் மற்றும் மோசமான உள்நாட்டு போரிற்கு , பின்னர் நூலகம் சமீப காலங்களில் நன்கொடையாளர்களின் நல்லெண்ணத்தின் காரணமாகவும், தமிழ் மக்களின் ஆதரவை பெறுவதற்கான அரசாங்கத்தின் முயற்சி காரணமாகவும் புனரமைக்கப்பட்டது.

jaffna-lib-300x200.jpg

விலைமதிப்பற்ற ஆவணங்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அது தமிழ் பாரம்பரியம் மற்றும் பின்னடைவுகளில் இருந்து மீள் எழுவதற்கான தமிழர்களின் அவர்களின் திறமையை உறுதிப்படுத்துகின்றது.

 

http://thinakkural.lk/article/44415

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

யாழ். நூலகம் எரிக்கப்பட்ட 39 ஆவது ஆண்டு நினைவுதினம்

image_0133df30ad.jpgஎன்.ராஜ்

20 ஆம் நூற்றாண்டின் "தமிழ் கலாசார இனப்படுகொலை" என்று கூறப்படும் யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிக்கப்பட்ட 39ஆவது ஆண்டு நினைவுதினம், இன்று (01) யாழ். நூலகத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.

யாழ்ப்பாண பொது நூலகம் எரிக்கப்படட போது படுகொலை செய்யப்படடவர்களுக்கு யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஏற்பாட்டில் பதில் முதல்வர் தலைமையில் நூலக வளாகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த அஞ்சலி நிகழ்வில் யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஆணையாளர், செயலாளர் ஊழியர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

மேலும், எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையிலும் நூலக நுழைவாயிலில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந்த அஞ்சலி நிகழ்வில் வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

http://www.tamilmirror.lk/பிரதான-செய்திகள்/யழ-நலகம-எரககபபடட-39-ஆவத-ஆணட-நனவதனம/46-251164

 

Link to comment
Share on other sites

ஸ்ரீலங்கா அரசின் அக்கிரமங்களை எப்ப நினைச்சாலும் நெஞ்சு பொறுக்குதில்லையே!

ஸ்ரீலங்கா சிங்களம் செய்த அநியாயங்கள் ஒவ்வொன்றுக்கும்  100 மடங்கு அறுவடை செய்ய வேணும்.

Link to comment
Share on other sites

#eelam #tamil #canada #jaffna #jaffnalibrary #library #education #genocide #history #identity #books #may18 #tamilgenocide #srilanka #srilankatravel #srilankatourism

101431320_1575256082642278_7903566034613829632_o.jpg?_nc_cat=102&_nc_sid=730e14&_nc_ohc=kiUFzUJWFO8AX_I_kFr&_nc_ht=scontent-yyz1-1.xx&oh=76d368962aaccb851542e78732c6b463&oe=5EFAAD2A

The construction of this library was started with many phases from 1933 and in 1959 opened for the public completedly. soon it became the biggest library in Asia with more than 97,000 Books and ancient Palm leaf manuscripts.

And also it had the original and only copy of "யாழ்ப்பாண வைபவமாலை/ yalpaana vaipavamaalai" which is a historical Book of Jaffna kingdom(Eelam Tamils state before the colonial period)

This attack was well planned with the ruling Government of Sri Lanka the United National Party and executed with the help of Sri Lankan police and military guidance through the Sinhala Mobs.

Later that day several Newspaper offices and printing presses such as Eelanaadu also were attacked and burnt down.

Tamil Journalists also were the target of these Sinhala mobs and after this incident there was a debate going on in the Srilankan Parliament. And majority Sinhala MPs blamed Tamils for being minority and the resistance.

This systematical genocide continues to this day and nobody being held accountable for any of this atrocities done by Sri Lankan state terrorism.

Article: Eelam Library
Graphic: Nishan Sanjee

Link to comment
Share on other sites

மொழி என்பது அதைப் பேசும் ஒரு இனக் குழுமத்தின் தனித்துவமான பண்பாட்டையும் / அடையாளத்தையும்/ மரபையும்/ தொன்மத்தையும் குறித்து நிற்கிறது.
 
அதனால்தான் ‘ஒரு இனத்தை அழிக்கப் போகிறாயா? முதலில் அவர்களின் மொழியை அழி’ என்கிறது இன அழிப்புச் சூத்திரம்.
 
இதற்கு அமைவாகத்தான் இன அழிப்பு அரசு அன்று தனிச் சிங்களச் சட்டத்தைக் கொண்டு வந்தது.
 
மொழியை அழிக்க வேண்டும் என்றால் அதற்கு அந்த இனத்தின் வரலாற்றை அழிக்க வேண்டும்.
 
வரலாற்றை அழிக்க வேண்டும் என்றால் அதை சேமித்து வைத்திருக்கும் ஆவணக் கருவூலங்களை அழிக்க வேண்டும்.
 
அதனால்தான் யாழ் நூலகம் இன அழிப்பு அரசின் இலக்காக மாறியது.
 
முள்ளிவாய்க்கால் பாரிய இன அழிப்புக்கு பல பத்தண்டுகளுக்கு முன்பே நடந்தது இன அழிப்புத்தான் என்பதற்கான வாழும் சாட்சியமாக யாழ் நூலகம் திகழ்கிறது.
 
ஆனால் இன அழிப்புக்கு போதிய ஆதாரம் இல்லை/ நோக்கத்தில் அது இன அழிப்பு இல்லை என்று பிதற்றும் சுமந்திரன் வகையறாக்களிடம் நாம் எமது அரசியலை ஒப்படைத்துவிட்டு பல்லிளித்துக் கொண்டு நிற்கிறோம்.
 
-- முகநூல் பதிவு ஒன்றில் இருந்து --- 
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 31/5/2020 at 12:18, Dash said:

கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை எழுத கல்கி கிருஷ்ணமூர்த்தி 3 தடவை யாழ்ப்பாணம் வந்தாராம். இதிலிருந்து தமிழ் நாட்டில் கூட இல்லாத சோழர் காலத்து வரலாற்றை தன்னகதே வைத்திருந்தது தான் யாழ் நூலகம். 

அதேபோல் தமிழ்நாட்டில் ஏன் சோழர் பற்றிய தகவல்கள் இல்லாமல் போயின?

அதே போல் எனக்குள் இருக்கும் ஊகம்... சிங்களவன் தான் யாழ் நூலகத்தை எரித்தானா அல்லது சோழர் இராச்சியத்தை வீழ்த்திய விஜய நகர அரசின் வம்சவாளியினர் யாராவது ஊக்கம் கொடுத்திருப்பார்கள?

காமினி திசா'நாயக்க' யாரு என்று நினைக்கிறீர்கள்?

Link to comment
Share on other sites

Burning Jaffna library, an intent of genocide 

“Where they have burned books, they will end in burning human beings.” - Heinrich Heine - a German poet, writer and literary critic. 

Today is the 39th anniversary of the burning down of Jaffna library on 31st May 1981 by the Sinhala mob brought down from the South of Sri Lanka by senior ministers of the Sri Lankan state. 

This is a key event in the history of the Sri Lankan state’s genocide against Tamils, as the library was attacked in an aggressive act of biblioclasm, the deliberate destruction of books. By intentionally burning one of the oldest and respected collection of ancient Tamil manuscripts in the whole of south Asia, Sri lankan state deprived Tamils of their immeasurable treasure of cultural heritage.  

This was intentional as there was no provocation in the area in which the library stood.. The Jaffna district Police Headquarters was in the vicinity of the library when this occurred which shows intent as they were led by former ministers Gamini Thissanayake and Cyril Matthew. These are evidence that the burning of Jaffna Library was an intentional act of cultural genocide as the Sri Lankan government purposefully wanted to erase parts of Tamil history. 

70 years of acts of genocide against Tamils calls for the need of justice through an international judicial mechanism and a process to protect the Tamils in the North-East of Sri Lanka.

 

101446029_2645698892197728_5722608240437493760_n.jpg?_nc_cat=110&_nc_sid=8bfeb9&_nc_ohc=nhkN-pOUm5wAX8UJi3t&_nc_ht=scontent-yyz1-1.xx&oh=ccfe6ed9ebe7018429e295c3057718fe&oe=5EF92E23

 

101771965_2643261922441425_1881005636230053888_n.jpg?_nc_cat=105&_nc_sid=8bfeb9&_nc_ohc=npN3V3weUYkAX_JmBTE&_nc_ht=scontent-yyz1-1.xx&oh=0f939871d103cc9e26e32d6c440c3d32&oe=5EFAE9DB

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

யாழ் நூலக எரிப்பு: தமிழரின் அறிவுமீது தொடுத்த போர்!

 

jaffna-library-300x219.jpg

இலங்கைத் தீவில் ஈழத் தமிழ் மக்கள் தங்கள் உரிமையை குறித்து குரல் எழுப்பப்பட்ட காலத்தில் அவர்களின் குரலின் அறிவுத்தடங்களை, இன உரிமைப் போராட்டத்தின் ஊற்றிடங்களான சரித்திர வேர்களை அழித்து ஈழத் தமிழ் குரலை அழிக்கவும் அதன் சரித்திரத்தை அழிக்கவும் அன்றைய இன வன்முறையாளர்கள் திட்டமிட்டு யாழ் நூலகத்தை எரித்தனர். இதனால் ஈழத் தமிழ் மக்கள் மாபெரும் அறிவிழப்பை, பாரம்பரிய சொத்திழப்பை, தொன்மை இழப்பை முகம் கொடுத்தார்கள். ஈடு செய்ய முடியாத பேரிழப்பு அது.

ஒரு இனத்தை அழிக்க வேண்டுமனால் அதன் பண்பாட்டை, அதன் அறிவுத்தடங்களை, அதன் சரித்திரத்தை அழிக்க வேண்டும் என்பது இன அழிப்பு சார்ந்த கொள்கைகளாக பின்பற்றப்படுகின்றன. அப்படித்தான் ஈழத்தின் யாழ் நூலகம் அழிக்கப்பட்டது. இன்று யாழ் நூலகம் எரிக்கப்பட்ட கறுப்பு நாள். 1981ஆம் ஆண்டு இதேபோல் ஒரு நாளில் (31.05.1981- 01.06. 1981)  யாழ் நூலகம் எரியூட்டப்படது. அந்த நாள், யாழ் நூலகம் இன நூலெரிப்பு வன்முறையால் அழிக்கப்பட்ட நாள்.

தெற்காசியாவில் மிகப் பெரும் நூலகமாக கருதப்படும் யாழ் நூலகத்தில் கிட்டத்தட்ட 97ஆயிரம் அரிய புத்தகங்கள் காணப்பட்டன. பல நூற்றாண்டுகள் பழமைகொண்ட ஈழ ஓலைச்சுவடிகள், ஈழத்தின் பண்டைய நூல்கள், பல அரிய பண்டைய தமிழ் நூல்கள், ஈழத் தமிழ் பத்திரிகைகளின் மூலப் பிரதிகள் என்று பல்வேறு வகைப்பட்ட அரிய ஆவணங்கள் இதில் அழிக்கப்பட்டது. மாபெரும் அறிவுப் பொக்கிசமாக யாழ் நூலகம் கருதப்பட்டது.

யாழ் நூலக எரிப்பு என்பது இருபதாம் நூற்றாண்டில் நடந்த மிகப் பெரும் இன நூலெரிப்பு வன்முறையாகும். எவ்வாறு 1983இல் திட்டமிட்டு இனக்கலவரம் செய்யப்பட்டு ஈழத் தமிழ் மக்கள் இன அழிப்பு செய்யப்பட்டார்களோ அதைப்போலவே மிகவும் திட்டமிட்டு இன அறிவழிப்பு செய்யப்பட்டது. தனி ஈழத்திற்கான அரசியல் குரல்கள் எழுந்த கால கட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்தச் செயல் தனி ஈழத்திற்கான ஆயுதப் போராட்டத்திற்கும் உரமூட்டியது.

யாழ்நூலக அறிவழிப்பு வன்முறை ஈழத் தமிழர் போராட்டத்தை வலுப்படுத்தியது. ஈழத் தமிழ் மக்கள் நெஞ்சில் ஆறாத காயத்தை தோற்றுவித்தது. ஒரு அறிவற்ற, பிற்போக்குத் தனமான கொடிய இந்தச் செயல் – இந்த நூலெரிப்பு வன்முறை ஈழத் தமிழ் மக்கள் மாத்திரமின்றி உலக மக்களையும் அதிரச்சிக்குள்ளாக்கியது. இனமேலாதிக்கத்தின் அசீங்கமான வெளிப்படாகவும் கொடிய இன வெறி, அறிவுக்கு எதிரான வெறி மனோபாவத்தின் நடவடிக்கையாகவும் இந்த நிகழ்வு மதிப்பிடப்படுகிறது. இனத்தின் சரித்திரத்தை அழிக்க புத்தகங்களுடன் வன்முறை புரிந்த செயல் இது. அறிவுடன், சிந்தனையுடன் வன்முறை புரிந்த செயல் இது.

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி, ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த, ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் ஆட்சிக்காலத்தில் இந்தச் சம்பவம் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்றது. இந்த சம்பவத்தில் அன்றைய அமைச்சர் காமினி திசாநாயக்கா உள்ளிட்ட பலர் நேரடியாக செயற்பட்டமைக்கான ஆதாரங்கள் வெளிப்பட்டன. அன்றைய அரசின் இனவெறிக் குண்டர்கள், இராணுவத்தினர், காவல்துறையினர் கூட்டாக இந்த நூல் எரிப்பு வன்முறையில் ஈடுபட்டார்கள்.

யாழ் நூலக எரிப்பு மிகவும் கண்டிக்கத்தக்க, அறிவுடைய, சிந்தனையுடைய மனித சமூகம் வெட்கப்படக்கூடிய ஒரு செயலாக இருக்கிறது. ஆனால் கடந்த நாற்பது வருடங்களாக ஈழத்தில், அதன் பூர்வீககக் குடிகளான ஈழத் தமிழர்களின் சரித்திர தடங்கள் மிக திட்டமிட்டு – தெளிவான கொள்கையில் அழிக்கப்பட்டு வருகின்றன. அன்றைக்கு புத்தகங்களுடன் ஒரு நூலகம் எரியூட்டப்பட்டது. அதன் பின்னரான காலத்தில் போர் நடவடிக்கைகளின் மூலம் பல்வேறு நூலகங்கள் அழிக்கப்பட்டுள்ளன. இலங்கையை ஆண்ட அத்தனை அரசுகளும் அழித்துள்ளன.

போரின்போது பாடசாலை நூலகங்களின் புத்தங்கள், தனிப்பட்ட வாசகர், எழுத்தாளர்களின் புத்தகங்கள், பிரதேச நூலகங்களின் புத்தகங்கள் எல்லாம் குண்டு வீசி அழிக்கப்பட்டுள்ளன. போர் முடிந்தவுடன் கைப்பற்றப்பட்ட பகுதிகளில் இந்த அறிவழிப்பு நடைபெற்றது. இன நூலெரிப்பு வன்முறை என்பது,1981இல் ஆரம்பிக்கப்பட்டு மிகவும் விரிவுபடுத்தப்பட்டது. அத்துடன் சரித்திரத்தை, பண்பாட்டை, அழிக்கும் தொன்மங்களை அழிக்கும் செயற்பாட்டின் மற்றொரு செயல்தான் ஆலயங்கள், சிலைகள், சமாதிகள், தொல்லியல் மையங்கள், பண்பாட்டு புலங்கள் முதலியவற்றை அழித்தலும் ஆகும். இதுவும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இருபதாம் நூற்றாண்டின் மிகக்கொடிய இன, நூலெரிப்பு வன்முறை இன்னமும் புரிந்து கொள்ளப்படாதிருக்கிறது என்பதையும் உணர்த்துகிறது. தமிழ் மக்களின் பாரம்பரிய, தமிழ் பண்பாட்டு பூமியில் அதற்கு மாறான இன, மத அடையாளங்களை நிறுவுவதும் ஒரு வகையில் பாரம்பரியத்தை, பண்பாட்டை அழிக்கும் செயலாகும்.

-கவிஞர் தீபச்செல்வன்https://www.kuriyeedu.com/?p=258949

யாழ் நூலக எரிப்பு : அரங்கேற்றப்பட்ட இனவாதம் – 39 வருடம் நிறைவு

34092936_10209345779480407_3909018562664யாழ் நூலக எரிப்பென்பது சாதாரணமான ஒரு வன்முறையல்ல. அது வேண்டும் என்று அரங்கேற்றப்பட்ட ஓர் இனவாத அரசியல் நாடகம். திட்டமிட்டு தமிழர்கள் மீது நடத்தப்பட்ட ஒரு பெரும் தாக்குதல். தீர்மானம் மிக்கதோர் இன அழிப்பு நடவடிக்கை. தமிழ் மக்களின் கலை, கலாசாரம், பண்பாடு, அறிவியல் ஆகிய அம்சங்களை அழித்தொழித்ததோர் இன வன்முறை. அதுவும் ஓர் அரச வன்முறை.

தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்கான சாத்வீகப் போராட்டங்கள் தோல்வியடைந்தையடுத்து, வேறு வழியின்றி தனிநாட்டைக் கோருவதைவிட வேறு வழியில்லை என்ற அரசியல் ரீதியான வெறுப்பின் விளிம்பில், தமிழ்த் தலைவர்கள் வந்திருந்த தருணம் அது.

சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தமிழ் மக்களின் இறைமையையும் சுதந்திரத்தையும் நிலைநாட்டி தமிழ்த் தேசிய இனம் பாதுகாப்புடன் வாழ்வதற்காக தனித் தமிழீழத்தை நாடுவதைவிட வேறு வழியில்லை என்று வட்டுக்கோட்டை பண்ணாகத்தில் 1976 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் திகதி தனிநாட்டுக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் அப்போதைய தலைவர் தந்தை செல்வநாயகத்தின் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்காகத் தமிழ் அரசியல் தலைவர்கள் இப்படியொரு தனிநாட்டுக்கான தீர்மானத்தை துணிந்து நிறைவேற்றுவார்கள் என்று ஆட்சியாளர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை.

மாவட்ட சபை முறைமை

தனிநாட்டுத் தீர்மானம் மாத்திரமல்ல. அதன் பின்னர் 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஒரு சர்வசன வாக்கெடுப்பைப்போன்று இந்தத் தீர்மானத்தை முன்வைத்துப் போட்டியிட்ட தமிழர் விடுதலைக்கூட்டணிக்கு தமிழ் மக்கள் அமோக ஆதரவளித்திருந்தனர். அந்தத் தேர்தல் தமிழர் விடுதலைக் கூட்டணியினருக்குப் பெரும் வெற்றியை ஈட்டித் தந்திருந்தது.

ஏற்கனவே தமிழ்த் தலைவர்களின் தனிநாட்டுத் தீர்மானத்தினால் சீற்றத்திற்கு உள்ளாகியிருந்த சிங்களத் தலைமைகளினால் இந்தத் தேர்தல் வெற்றியை சீரணிக்க முடியவில்லை. தமிழ்த் தலைவர்களின் மீதும் தமிழ் மக்கள் மீதும் தமது ஆத்திரத்தை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி இருந்தனர்.

வடக்கிலும் கிழக்கிலும் தமிழர் விடுதலைக் கூட்டணி தேர்தலில் வெற்றிபெற்றிருந்தது. நாட்டின் தென்பகுதிகளில் ஐக்கிய தேசிய கட்சி தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்திருந்தது. ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக அப்போதிருந்த ஜே.ஆர்.ஜயவர்தன தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர்களுடன் தந்திரோபாய பேச்சுக்களை நடத்தி மாவட்ட சபைகளின் ஊடாக அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதற்கு இணக்கம் கண்டிருந்தார்.

தனிநாடே பிரச்சினைக்குத் தீர்வாக அமையும் என்று வட்டுக்கோட்டையில் தீர்மானம் நிறைவேற்றியதன் பின்னர் மாவட்ட சபைகளின் ஊடாக அதிகாரப் பகிர்வுக்கு எவ்வாறு தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்கள் ஒப்புக்கொண்டார்கள், எவ்வாறு அந்தத் தீர்மானத்திற்கு இணங்கினார்கள் என்பது தமிழ் அரசியலில் ஒரு புதிராகவே இருக்கின்றது.

வட்டுக்கோட்டை தீர்மானத்தையடுத்து, தமிழ் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்குமாகத் தமிழ் இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள். இலை மறை காயாக அந்தப் போராட்டம் நடந்து கொண்டிருந்தது. தனிநாட்டுக் கோரிக்கையை வைத்திருந்த தமிழ்த்தலைவர்கள் மாவட்ட சபை தீர்மானத்திற்கு ஒப்புக்கொண்டிருந்தமை தமிழ் இளைஞர்களைக் கோபமடையச் செய்திருந்தது

இலங்கை அரசியலில் ஜே.ஆர்.ஜயவர்தன மிகவும் தந்திரசாலி, தந்திரோபாயப் போக்கைக் கொண்டிருந்தவர் என்ற ஒரு கணிப்பு உண்டு. தனிநாட்டுத் தீர்மானத்தை மேற்கொண்டு, தமிழ் மக்களிடம் தேர்தல் ஒன்றின் மூலம் அதற்கான ஆணையைப் பெற்றிருந்த தமிழ்த்தலைவர்களை வெறும் மாவட்ட சபைக்கு இணங்கச் செய்ததன் மூலம் ஜேஆர் தனது அரசியல் நரித்தந்திர மூளையின் மகத்துவத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

தனிநாடு கோரி போராட்டத்தை ஆரம்பித்திருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியினதும், அதற்கு பேராதரவளித்திருந்த தமிழ் மக்களினதும் அரசியல் வலிமையைப் பலவீனப்படுத்த வேண்டும் என்ற திட்டமும் ஜேஆர் ஜயவர்தனவிடம் இருந்தது. அந்தத் திட்டத்தின் ஓர் அங்கமாகவே தமிழர் விடுதலைக்கூட்டணி தலைவர்களை மாவட்ட சபை முறைமையை ஏற்கச் செய்து, அதற்கான தேர்தலில் அவர்களை அவர் போட்டியிடச் செய்திருந்தார்.

 ஐநூறு பேர் கொண்ட பொலிஸ் படையும் வந்தது

அதேவேளை, மாவட்ட சபைத் தேர்தலில் எப்படியாவது யாழ்ப்பாணத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் ஒருவரை வெற்றி பெறச் செய்துவிட வேண்டும் என்பதிலும் அவர் குறியாக இருந்தார். தமிழ் மக்களின் ஒன்றிணைந்த அரசியல் பலத்தைப் பலவீனப்படுத்துவதற்குரிய களமாக மாவட்டசபைகளுக்கான தேர்தல் களத்தை அவர் தெரிவு செய்திருந்தார்.

நாட்டின் பிரதான அரசியல் கட்சிகளாகப் பிரபல்யம் பெற்றிருந்த ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளும் தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் ரீதியாக வேரூன்றுவதற்காக மேற்கொண்ட முயற்சிகள் பெரிய அளவில் வெற்றியளிக்கவில்லை. இருப்பினும் அந்த முயற்சிகள் முழு அளவில் தோல்வியடையவுமில்லை.

அந்த வகையில் 1970 ஆம் ஆண்டு தேர்தலில் அகில இலங்கைத் தமிழ்க்காங்கிரஸின் சார்பில் வட்டுக்கோட்டை தொகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தளபதியாகத் திகழ்ந்த அமிர்தலிங்கத்தைத் தோற்கடித்து நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகியிருந்த அ.தியாகராஜாவை, 1981 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் மாவட்டசபைக்கான தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி தனது வேட்பாளராகத் தெரிவு செய்திருந்தது.

தமிழ்க் காங்கிரஸின் வட்டுக்கோட்டை தொகுதிக்கான பிரதிநிதியாக 1970 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்திற்குச் சென்றிருந்த அ.தியாகராஜா தமிழ் மக்களின்; அரசியல் நலன்களை முற்றாகப் புறக்கணித்திருந்த போதிலும், 1972 ஆம் ஆண்டு சிறிலங்கா சுதந்திரக் கட்சியினால் உருவாக்கப்பட்ட அரசியலமைப்புக்கு ஆதரவளித்திருந்தார். அத்தகைய ஒரு பின்னணியிலேயே மாவட்ட சபைத் தேர்தலில் அவர் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளராகக் களமிறங்கியிருந்தார்.

யாழ் மாவட்டத்தில் தமிழ் வேட்பாளர்கள் எவரும் பேரின கட்சிகளின் சார்பில் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று ஆயுதப் போராட்டத்தில் குதித்திருந்த இளைஞர்கள்; எச்சரிக்கை செய்திருந்தனர். அந்த எச்சரிக்கையை மீறிச் செயற்பட்டிருந்த தியாகராஜா தேர்தலுக்கு முந்திய வாரம் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்.

தமிழ் அரசியலைப் பலவீனப்படுத்தும் நோக்கத்தில் எந்த வகையிலாவது யாழ்ப்பாணத்தில் காலூன்றிவிட வேண்டும் என்று முனைந்திருந்த ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைக்கு, தனது வேட்பாளர் அங்கு கொலை செய்யப்பட்டிருந்ததைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இருப்பினும் அந்தத் தேர்தல் களத்தில் தனது கைவரிசையைக் காட்ட வேண்டும் என்பதற்காக அமைச்சர்களான காமினி திசாநாயக்க, சிறில் மத்தியூ ஆகியோரின் தலைமையில் அதிகாரிகள் குழுவொன்றை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி இருந்தார். அத்துடன் 500 பேர் கொண்ட ஒரு விசேட பொலிஸ் படையும் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

வெறியாட்டம்

ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் தியாகராஜா கொல்லப்பட்ட சூழலில் தேர்தலுக்கான பிரசாரத்தில் தமிழர் விடுதலைக்கூட்டணியினர் மும்முரமாக இறங்கி இருந்தனர். மே மாதம் 31 ஆம் திகதி யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடியில் கூட்டணியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

அந்தக் கூட்டத்திற்குப் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த 3 பொலிசார் ஆயுதமேந்திய இளைஞர்களின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகினர். அவர்களில் இருவர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். படுகாயமடைந்த மற்றவர் உடனடியாகக் கொழும்புக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

அன்று மாலை சம்பவ இடத்திற்குச் சென்றடைந்த பொலிசார் நாச்சிமார் கோவிலடியைச் சூழ இருந்த வீடுகள் கட்டிடங்கள் அனைத்திற்கும் எரியூட்டினார்கள். கண்ணிலகப்பட்டவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அந்தப் பிரதேசம் ஒரு குறுகிய நேரத்தில் புகை மண்டலம் சூழ்ந்து சுடுகாடாகியது.

அந்த அரச வன்முறைகள் அத்துடன் நிற்கவில்லை. கொழும்பில் இருந்து வந்தவர்களினால் யாழ் நகரம் பெரும் தாக்குதலுக்கு உள்ளாகியது. நகரில் வைக்கப்பட்டிருந்த தமிழ்ப் பெரியார்களின் சிலைகள் அடித்து நொறுக்கப்பட்டன. வர்த்தக நிலையங்கள் தாக்கப்பட்டு எரியூட்டப்பட்டன. ஈழநாடு பத்திரிகை நிறுவனத்துக்கும் எரியூட்டப்பட்டது.

நூலகத்தில் இருந்து பழம்பெரும் சுவடிகள், பெறுமதி மிக்க புத்தகங்கள், பத்திரிகைகள், கையெழுத்துப் பிரதிகள் என்பவற்றின் தொகுப்புக்கள் என்பன முற்றாக எரித்துச் சாம்பலாக்கப்பட்டன. இலங்கை மற்றும் தென்னிந்திய பழைமை வாய்ந்த இலக்கியம் மற்றும் வரலராற்றுப் பதிவுகளைக் கொண்ட கிடைத்தற்கரிய புத்தகங்களும் எரித்து நாசமாக்கப்பட்டன.

எல்லாமாக சுமார் ஒரு லட்சம் புத்தகக் களஞ்சியம் இந்த வெறியாட்டத்தின் மூலம் நாசமாக்கப்பட்டது. நூலகக் கட்டிடமும் தீயினால் பெரும் சேதத்திற்கு உள்ளாகியது.

ஆசியாவிலேயே சிறந்த பெரிய நூலகமாகத் திகழ்ந்த யாழ் நூலகம் என்ற அறிவுக்களஞ்சியம் யாழ்ப்பாணத்தில் வெறியாட்டம் ஆடியவர்களினால் அழித்தொழிக்கப்பட்டது. இது தமிழ் மக்களின் அறிவுசார்ந்த செல்வத்திற்கு ஏற்பட்;ட ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

யாழ் நூலகப் பிரதேசத்தில் அமைந்திருந்த யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வி.யோகேஸ்வரனின் வீட்டைச் சுற்றி வளைத்த காடையர்கள் அவருடைய ஜீப் வாகனத்திற்கு முதலில் தீ வைத்ததுடன், வீட்டிற்கும் தீ வைத்தார்கள். நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் தெய்வாதீனமாக அவர்களுடைய கண்ணில் அகப்படவில்லை. அவர் தனது மனைவியுடன் அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தார்.

ஒப்புக்கொண்டனர் – நீதி நியாயம் வழங்க முற்படவில்லை

அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் இருவர் அதிகாரிகள் மற்றும் பெரும் பொலிஸ் படையுடன் யாழ். மாவட்ட சபைத் தேர்தலைக் கவனிப்பதற்காக வருகை தந்திருந்த நிலையிலேயே யாழ் நூலகமும், யாழ் நகரமும் எரித்து சாம்பலாக்கப்பட்டது. பேரழிவுக்கு உள்ளாகியது. இந்த வெறியாட்டத்தை நடத்தியவர்கள் சிவிலுடையில் காணப்பட்ட போதிலும், அவர்கள் மத்தியில் பொலிஸ் சீருடை அணிந்தவர்களும் இருந்ததைப் பாதிக்கப்பட்ட பலர் நேரில் கண்டிருந்தார்கள்.

நகரின் மையப்பகுதியில் யாழ் வாடி வீட்டில் தங்கியிருந்த அமைச்சர்கள் இருவரும் யாழ் நகரமே தீப்பற்றி எரிந்த போது எழுந்த தீச்சுவாலையையும், புகை மண்டலத்தையும் நேரடியாகக் கண்டிருந்தார்கள். ஆனால் அங்கு என்ன நடந்தது என்பதைக் கண்டறியவோ அல்லது அந்த அட்டூழியங்களைத் தடுத்து நிறுத்தவோ அவர்கள் முயற்சிக்கவில்லை.

யாழ் நகரமும், யாழ் நூலகமும் எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பின்னர் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டபோது, அமைச்சர்கள் காமினி திசாநாயக்காவும், சிறில் மத்தியூவும் அங்கு பிரசன்னமாக இருந்ததை ஒப்புக்கொண்டிருந்தனர். அது மட்டுமல்லாமல் மது வெறிக்கு ஆளாகியிருந்த சில காவல்துறையினரே கட்டு மீறி நடந்து கொண்டார்கள் என்று மிகச் சாதாரணமாகக் குறிப்பிட்டிருந்தனர்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற அந்தப் பேரழிவையும் பேரக்கிரமத்தையும் மிகச் சாதாரண நிகழ்வாகவே அந்த அமைச்சர்களும், அரச தரப்பினரும் கருதி, நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தின்போது உரையாற்றி இருந்தனர். அங்கு நடைபெற்ற சம்பவங்கள் குறித்து ஆதாரங்களுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான அ.அமிர்தலிங்கம் மற்றும் வி.யோகேஸ்வரன் ஆகியோர் நாடாளுமன்றத்தில் எடுத்துரைத்து நியாயம் கோரியிருந்தனர்.

அவர்களுடைய அறிக்கையையும் உரையையும் செவிமடுத்த அரச தரப்பினர் வாயடைத்துப் போயிருந்தனர். பதிலளிக்க வேண்டும் என்ற சம்பிரதாயத்திற்காக அவர்கள் கருத்துக்களை வெளிப்படுத்தனார்களே தவிர மனிதாபிமானத்தையோ அல்லது இழைக்கப்பட்ட அநியாயங்களை உணர்ந்து அதற்காக வருத்தத்தையோ வெளிப்படுத்தவில்லை. நடைபெற்ற அநியாயங்களுக்கு நீதி வழங்கவும் குற்றவாளிகளைத் தண்டிக்கவும் முற்படவே இல்லை.

யாழ் நூலகம் எரிக்கப்பட்டு நான்கு தசாப்தங்களாகின்றன. தமிழ் மக்களை இன ரீதியாக ஒடுக்க வேண்டும் என்ற அரசியல் நிலைப்பாட்டில் இருந்து பேரினவாதிகள் இன்னுமே விடுபடவில்லை.

தமிழ் மக்களின் அரசியல் ரீதியான ஒற்றுமையையும் அரசியல் பலத்தையும் இல்லாமல் செய்ய வேண்டும். அவர்களை அரசியல் ரீதியாகப் பலவீனமடையச் செய்து இரண்டாந்தரக் குடிமக்களாகவே வைத்திருக்க வேண்டும் என்ற நீண்டகால திட்டத்தை அவர்கள் படிப்படியாகச் செயற்படுத்தி வருவதையே 1981 ஆம் ஆண்டின் பின்னரான அரச வன்முறைச் செயற்பாடுகள் வரலற்று நிகழ்வுகளாகக் காட்டியிருக்கின்றன.

நினைவுகூர வேண்டும் நிலைமைகள் குறித்து சிந்திக்கவும் வேண்டும்

மாவட்ட சபைத் தேர்தலின்போது தமிழ் மக்கள் மீதும், அவர்களுடைய ஒன்றிணைந்த அரசியல் நிலைப்பாட்டின் மீதும் பேரின அரசியல்வாதிகள் கட்டவிழ்த்துவிட்ட வன்முறைகள் தற்செயலாக நடைபெற்றதல்ல. ஏற்கனவே ஏதாவது ஒரு வகையில் தமிழர்கள் மீதான தாக்குதல்களை நடத்த வேண்டும் என்பதற்கான பெரும் திட்டம் தீட்டப்பட்டிருந்தது என்பது அந்த வன்முறைகளின் பின்னர் ஏற்கனவே தெளிவாகியிருந்தது

யாழ் நூலக எரிப்பின் மூலம் கலை, கலாசார, பண்பாட்டு அறிவியல் ரீதியாக தமிழ் மக்கள் மீதான இன அழிப்பு நடவடிக்கையே மேற்கொள்ளப்பட்டது என்பது அந்த வன்முறைகள் இடம்பெற்ற விதத்தில் இருந்து தெளிவாகியது. அது மட்டுமல்ல. அதன் பின்னர் 1983 ஆம் ஆண்டு கறுப்பு ஜுலை வன்முறைகளின் மூலம் தமிழ் மக்களின் பொருளாதாரம் முற்றாக நசுக்கி அழிக்கப்பட்டது. இது தமிழ் மக்கள் மீதான பொருளாதார ரீதியான இன அழிப்பு நடவடிக்கையாகவே மேற்கொள்ளப்பட்டது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

கறுப்பு ஜுலை வன்முறைகளைத் தொடர்ந்து தீவிரம் பெற்ற தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராட்டம் 2009 ஆம் ஆண்டு அப்பட்டமான இன அழிப்பு இராணுவ நடவடிக்கையாக முள்ளிவாய்க்காலில் நடத்தி முடிக்கப்பட்டது.

பேரழிவுகளுக்கு மத்தியிலும் தமது அரசியல் உரிமைகளுக்காகவும் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள், உரிமை மீறல்களுக்காகவும் குரல் எழுப்புகின்ற தமிழ் மக்கள் மீது தொடர்ச்சியாகப் பல்வேறு வடிவங்களில் நிழல் வடிவிலான இன அழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

காணி அபகரிப்பு, கலாசார ரீதியான, மத ரீதியான அடக்குமுறைகள், தொல்லியல் சின்னங்களை பௌத்த சின்னங்களாக உரிமை கோருவதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு வடிவிலான நடவடிக்கைகள் என்று அந்தப் பட்டியல் நீண்டு செல்கின்றது.

இந்த நிலைமைகள் வெறுமனே தமிழ் மக்களைத் துறைசார்ந்த ரீதியில் பாதிப்படையச் செய்வதுடன் நிற்கவில்லை. தமிழ் மக்களின் ஒன்னிணைந்த அரசியல் சக்தியையும் பலவீனப்படுத்தி உள்ளது. அந்த அரசியல் சக்தி திரட்சி பெற முடியாத வகையில் புறச் சூழல்களும், அரசியல் சூழல்களும் மறைமுக நிகழ்ச்சிநிரல்களின் ஊடாக அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

யாழ் நூலக எரிப்பை நினைவுகூர்ந்து வருந்துகின்ற அதேவேளை, அரசியல் ரீதியாக எழுந்துள்ள நிலைமைகளையும் தமிழ் மக்கள் நினைவுகூர்ந்து சிந்திக்க வேண்டியது அவசியம்.

பி.மாணிக்கவாசகம்https://www.kuriyeedu.com/?p=259201

1 minute ago, nochchi said:

யாழ் நூலக எரிப்பை நினைவுகூர்ந்து வருந்துகின்ற அதேவேளை, அரசியல் ரீதியாக எழுந்துள்ள நிலைமைகளையும் தமிழ் மக்கள் நினைவுகூர்ந்து சிந்திக்க வேண்டியது அவசியம்.

அனைவரும் சிந்திக்க வேண்டியது. ஆனால், சிந்திக்கும் மனநிலையில் யாருளர். 

 • Sad 1
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

×