Sign in to follow this  
Nathamuni

தொண்டைமான் மரணத்தில் மிகுந்த சோகத்தில் மகிந்தா.

Recommended Posts

எதிர்வரும் தேர்தலை முன்னிட்டு, மலையக மக்களுக்காக  பல திட்டங்களை மகிந்தவுடன் சேர்த்து, வழக்கத்தினை விட மிக நீண்ட நேரம் ஒன்றாக இருந்து பேசி, நிறைவேற்றி வீடு திரும்பிய ஆறுமுகம் தொண்டைமான் மரணச்செய்தி கிடைத்ததும், முதலில் நம்ப மறுத்த மகிந்த, மிகுந்த மனக்கிலேசத்துக்கு ஆளானார்.

உடனடியாக வைத்தியசாலைக்கு சென்று, பார்த்த மகிந்தா, மிகவும் மனக்கவலையில், உணர்வு பூர்வமாக இருந்ததை பார்க்கக்கூடியதாக இருந்தது என தெரிவிக்கப்படுகின்றது.

சில மணிநேரங்களுக்கு முன்னர், தன்னுடன் பேசிக் கொண்டிருந்த ஒருவர், இறந்து போனதை அவரால் நம்பவோ, ஜீரணிக்கவோ முடியவில்லையாம்.

பல மலையகத்தலைவர்கள், அங்கும், இங்கும் பாய்ந்தாலும், என்றும் தனது உறுதியான, அரசியல் ஆதரவாளராக, வடக்கில் டக்ளஸ் போல, இருந்தவரே ஆறுமுகம் என்பதால், மகிந்தா மிகுந்த கவலையடைந்துள்ளாராம்.

அரசியல் தலைவர்கள் அனைவரினதும் பிறந்தநாளை குறித்து வைத்திருக்கும் பழக்கம் கொண்ட மகிந்தா, அந்தநாளில் காலையில் அவர்களுக்கு அழைத்து வாழ்த்து சொல்வது வழக்கம். மே 29ம் திகதி பிறந்தநாள் குறித்து சொல்லி முன்கூட்டி வாழ்த்தி, நான் அன்று காலை அழைப்பேன் என்று கூறி இருக்கிறார். அந்த திகதிக்கு முன்னரே மரணித்தார் ஆறுமுகம். 

முக்கியமாக, மனித வாழ்க்கையின் நிலையாமை குறித்து, தனது வாழிவின், மாலைப்பொழுதில் (in his evening of the life) இருக்கும் மகிந்தா, விளங்கிக் கொண்டிருப்பாரோ. 

Edited by Nathamuni
  • Like 2

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, Nathamuni said:

முக்கியமாக, மனித வாழ்க்கையின் நிலையாமை குறித்து, தனது வாழிவின், மாலைப்பொழுதில் (in his evening of the life) இருக்கும் மகிந்தா, விளங்கிக் கொண்டிருப்பாரோ. 

டக்கி மகிந்த என்ற போர்க்குற்றவாளியுடன் மாலையில் கதைப்பதை தவிர்ப்பார் என நம்பலாமா?   

Share this post


Link to post
Share on other sites

ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக் கோரிக்கையை நிறைவேற்றுவேன் - பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

ஆறுமுகன் தொண்டமான் இறுதியாக தன்னிடம் விடுத்த அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று உறுதியளித்தார்.

இறுதிக் கிரியைகள் நடைபெற்ற மைதானத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்திய போதே மஹிந்த ராஜபக்ஷ இந்த உறுதியை வழங்கியிருந்தார்.

மலையக மக்களின் பிரச்சினைகள் தொடர்பிலேயே ஆறுமுகன் தொண்டமான் தன்னிடம் இறுதியாக கருத்துக்களை பகிர்ந்துகொண்டதாக அவர் குறிப்பிட்டார்.

'தொண்டமானின் இறுதிக் கோரிக்கையை நிறைவேற்றுவேன்'படத்தின் காப்புரிமைPMO

பெருந்தோட்ட தமிழ் மக்களின் நாளாந்த சம்பளமாக ஆயிரம் ரூபாய் வழங்கப்பட வேண்டும் எனவும், மலையக மக்களின் வீட்டுத் திட்டத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும் எனவும், கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணங்களை வழங்க வேண்டும் எனவுமே தொண்டமான் தன்னிடம் இறுதியாக கோரிக்கை விடுத்ததாக பிரதமர் கூறினார்.

ஆறுமுகன் தொண்டமான் இறுதியாக தன்னிடம் முன்வைக்கப்பட்ட அனைத்து கோரிக்கைகளையும் அமைச்சரவை ஊடாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் இதன்போது உறுதியளித்தார்.

ஆறுமுகன் தொண்டமான் இந்தியாவினதும், தனதும் நண்பர் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோதி தன்னிடம் தெரிவித்ததாக பிரதமர் குறிப்பிட்டார்.

ஆறுமுகன் தொண்டமானின் திடீர் மறைவு தொடர்பில் தன்னிடம் தனிப்பட்ட ரீதியில் தொலைபேசியூடாக உரையாற்றிய போதே நரேந்திர மோதி இதனை கூறியதாக அவர் குறிப்பிட்டார்.

தமது நாடு தொடர்பில் போலி பிரசாரங்களை செய்து, நிதியுதவிகளை பெற்று நாடாளுமன்ற அதிகாரத்தை பாதுகாப்பதை விடுத்து, தமது பெருந்தோட்டத் தொழிலாளர்களை ரத்தம் சிந்தாமல் பார்த்து கொண்டவர் தொண்டமான் என பிரதமர் தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-52870421

Share this post


Link to post
Share on other sites
41 minutes ago, ampanai said:

ஆறுமுகன் தொண்டமான் இறுதியாக தன்னிடம் விடுத்த அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று உறுதியளித்தார்.

"உறுதியளித்தார்" -  சிங்கள தலைமைகள் காலம் காலமாக இதை கூறுபவர்கள்...

எமது தலைமைகளும் ஏமாறுவார்கள் / ஏமாற்றுவார்கள். 

நாங்களும் இல்லாத ஊருக்கு வழி காட்டப்பட்ட ஏமாளிகளாக ... 

Share this post


Link to post
Share on other sites
10 hours ago, Nathamuni said:

பல மலையகத்தலைவர்கள், அங்கும், இங்கும் பாய்ந்தாலும், என்றும் தனது உறுதியான, அரசியல் ஆதரவாளராக, வடக்கில் டக்ளஸ் போல, இருந்தவரே ஆறுமுகம் என்பதால், மகிந்தா மிகுந்த கவலையடைந்துள்ளாராம்.

101306785_10158101598111855_7321670404924243968_n.jpg?_nc_cat=111&_nc_sid=dbeb18&_nc_ohc=qM7nInxhTjAAX-HqQY2&_nc_ht=scontent-yyz1-1.xx&oh=291bd5e3bb640120cd978e6f45f6e721&oe=5EF992F4

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this