Jump to content

இந்தியா - சீனா எல்லை பதற்றம் எங்கு போய் முடியும்? அடுத்து என்ன நடக்கும்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா - சீனா எல்லை பதற்றம் எங்கு போய் முடியும்? அடுத்து என்ன நடக்கும்?

அன்பரசன் எத்திராஜன் மற்றும் விகாஸ் பாண்டே பிபிசி
இந்தியா - சீனா எல்லை பதற்றம்AFP

ஆசியாவின் இரு முக்கிய நாடுகளின் ராணுவங்களும் இமயமலையில் குவிக்கப்பட்டுள்ளது, பதற்றத்தை அதிகரித்துள்ளது. நிலைமை மேலும் மோசமாகும் வாய்ப்பு இருப்பதாகவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

இந்தியா - சீனா எல்லை பிரச்சனை கடந்த சில வாரங்களில் பூதாகரமாகி உள்ள நிலையில், சர்ச்சைக்குரிய காஷ்மீர் பிராந்தியத்தில் அதாவது லடாக்கில் உள்ள கால்வன் பள்ளத்தாக்கில் ஆயிரக்கணக்கான சீன துருப்புகள் நுழைந்துள்ளதாக அதிகாரிகள் கூறியதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியத் தலைவர்களுக்கும், ராணுவ உத்தியாளர்களுக்கும் இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தியா தனக்கு சொந்தமான இடம் என்று கருதும் எல்லைப்பகுதிகளில் சீனப் படைகள் கூடாரம் அமைத்து, சுரங்கங்கள் தோண்டி அதன் வழியாக கனரக உபகரணங்களை கொண்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

கால்வன் பள்ளத்தாக்கில் இந்தியா கட்டுமானப்பணிகளை செய்வதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

எனினும் இதனால் சீனா சொல்ல வரும் செய்தி டெல்லி தலைவர்களுக்கு தெளிவாகவே இருக்கிறது. இது வழக்கமான ஊடுருவல் அல்ல எனும் செய்திதான் அது. 

"சூழல் மோசமாக உள்ளது. இந்தியாவுக்கு சொந்தமானது என்று ஏற்கனவே சீனாவால் ஒப்புக்கொள்ளப்பட்ட பகுதிக்குள்ளே அவர்கள் தற்போது நுழைந்துள்ளனர். அதனால், அங்கிருந்த நிலை முற்றிலும் மாறியுள்ளது" என்கிறார் இந்திய ராணுவ நிபுணரான அஜய் சுக்லா.

இந்த மாற்றத்திற்கு காரணம் இந்தியா மாறியதுதான் என்று சீனா கூறுகிறது. 

லடாக்கில் இருதரப்பினரிடையே இருமுறை மோதல் ஏற்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. கால்வன் பள்ளத்தாக்கு, ஹாட் ஸ்பிரிங்க்ஸ் மற்றும் பங்காங் ஏரியின் தெற்கு பகுதியில் இருதரப்பிற்கும் மோதல் நிலை ஏற்பட்டது.

இந்தியா-சீனா எல்லை பதற்றம்

இந்தியா, சீனாவுடன் 3,488 கி.மீ எல்லையை பகிர்ந்து கொள்கிறது. ஜம்மு-காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட், சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேசம் வழியாக இந்த எல்லை செல்கிறது. இருப்பினும், இரு நாடுகளும் இன்னும் முழுமையாக எல்லைகளை வரையறுக்கவில்லை. ஏனென்றால் பல பகுதிகள் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே எல்லை தகராறு நீடிக்கிறது.

இரு நாடுகளின் எல்லைப் பாதுகாப்பு வாகனங்களிடையே அடிக்கடி மோதல் நிகழ்வுகள் இருந்தாலும், கடந்த 4 தசாப்தங்களாக துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் ஏதும் இருக்கவில்லை. 

உலகிலேயே மிகப்பெரிய ராணுவத்தை கொண்ட இந்த இருநாடுகளும் அவ்வப்போது பல தருணங்களில் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டிருக்கின்றன. 

எது எவ்வாறு இருந்தாலும், இருக்கும் நிலையை அப்படியே தக்க வைத்துக் கொள்ள, நிஜமான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு அதாவது எல்.ஏ.சி என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. இருப்பினும், அது இன்னும் தெளிவுபடுத்தப்படாமல் இருக்கிறது. 

 

இந்த எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டில், பல பனிப்பாறைகள், பனிப் பாலைவனங்கள், மலைகள் மற்றும் ஆறுகள் இருக்கின்றன. எல்.ஏ.சி-யை ஒட்டியப் பகுதிகளில் இதுபோன்ற பல பகுதிகள் உள்ளன, அங்கு இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே பதற்றங்கள் அடிக்கடி ஏற்படுகின்றன.

இந்த பதற்றம் லடாக் பகுதிக்கு மட்டும் இல்லை. இருநாட்டு ராணுவ வீரர்களும் சீனாவிற்கும் சிக்கிமிற்கும் இடையே உள்ள நகு லா கணவாயிலும் விழிப்புடன் இருக்கிறார்கள். 

மேலும், நேபாளம் வெளியிட்ட புதிய வரைபடம் குறித்த சர்ச்சையும் நீடிக்கிறது. சீனாவை இணைக்கும் சாலையை அமைப்பது மூலம் இந்தியா நேபாளுக்கு உட்பட்ட இடத்தை ஆக்கிரமிப்பதாக அந்நாடு குற்றஞ்சாட்டுகிறது. 

தற்போது பதற்றம் அதிகரிப்பது ஏன்?

இதற்கு பல காரணங்கள் உண்டு. 

"தற்போது கல்வான் நதிக்கு அருகில்தான் அதிக பதற்றம் நீடிக்கிறது. ஏனென்றால் ஷ்யோக் நதிக்கரையோரத்தில் இருந்து டாலட் பெக் பகுதிக்கு இந்தியா அமைக்கும் புதிய சாலை இங்கிருந்துதான் எல்ஏசி-க்கு மிகவும் நெருக்கமான இருக்கிறது" என்று சுக்லா கூறுகிறார்.

இது சீனாவிற்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியது.

இந்தியா-சீனா எல்லையில் உள்ள பாங்கோங் த்சோ ஏரிGetty Images இந்தியா-சீனா எல்லையில் உள்ள பாங்கோங் த்சோ ஏரி

"கால்வன் பள்ளத்தாக்கு சீன பிராந்தியத்துக்கு உட்பட்டது. உள்ளூர் எல்லைக் கட்டுப்பாட்டு சூழல் தெளிவாக இருக்கிறது" என சீன அரசு ஊடக நிறுவனமான குளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டது. 

"சீன ராணுவத்தை பொறுத்தவரை, இந்தியாதான் கால்வன் பள்ளத்தாக்கில் அத்துமீறி நுழைந்ததாக கூறுகிறது. எல்லையில் இருக்கும் சூழலை இந்தியா மாற்றுவதே, சீனாவின் கோபத்திற்கு காரணம்" என்று உலக விவகாரங்களுக்கான செங்க்டு நிறுவனத்தின் தலைவர் லாங் ஷிங்சுன் தெரிவிக்கிறார். 

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை இந்திய அரசு நீக்கியது பிராந்திய வரைபடத்தில் மாற்றத்தை கொண்டு வந்தது.

இதன்படி அக்சாய் சீனா லடாக் பகுதிக்குள் கொண்டுவரப்பட்டது. சீனாவின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் பகுதியை, இந்தியா தனக்கு சொந்தம் என்று கூறியது. 

வில்சன் சென்டர் என்ற வல்லுநர் அமைப்பில் ஆசிய திட்டத்தின் துணை இயக்குநராக இருக்கும் மைக்கெல் கூகெல்மேன் கூறுகையில், "இது வழக்கமான மோதல் கிடையாது. தங்களுடைய பலத்தை காண்பிக்கவே எல்லையில் ராணுவ வீரர்களை சீனா நிறுத்தியுள்ளது" என்றார்.

மோதல் ஏற்பட்டால் ஆட்களையும் அதற்கு தேவையானவற்றையும் எல்லைக்கு அனுப்ப இந்தியா வேகமாக நடவடிக்கை எடுக்கும். 

கடந்த ஆண்டில் மற்றக் கொள்கைகளிலும் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிலவின.

பாகிஸ்தான் நிர்வகிக்கும் காஷ்மீரை மீண்டும் கைப்பற்றுவது குறித்து பாஜக மூத்த தலைவர்கள் பேசி வருகின்றனர்.

நீண்டகால நட்பு நாடுகளாக இருக்கும் சீனா மற்றும் பாகிஸ்தானை இணைக்கும் சாலையான கரகொரம் நெடுஞ்சாலை இப்பகுதியில்தான் செல்கிறது.

பாகிஸ்தானின் கட்டமைப்பில் சீனா சுமார் 60 பில்லியன் டாலர்கள் அளவிற்கு முதலீடு செய்துள்ளது. இந்த நெடுஞ்சாலை வழியாகத்தான் பாகிஸ்தானிய துறைமுகம் குவாடரில் இருந்து சீனாவுக்கு சரக்கு போக்குவரத்து செய்யப்படுகிறது. இந்தத் துறைமுகம்தான் அரபுக்கடலில் சீனாவிற்கு இருக்கும் கட்டுப்பாட்டை நிலைநிறுத்த உதவுகிறது. 

இந்தியா-சீனா எல்லை பதற்றம்

இது எங்கு போய் முடியும்?

"எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை இருநாட்டு ராணுவங்கள் அவ்வப்போது மீறுவது வழக்கம்தான். இதுபோன்ற நிகழ்வுகள் அப்பகுதியில் ராணுவ மட்டத்திலேயே பேசி தீர்க்கப்படும். ஆனால், தற்போது நடப்பது நாங்கள் கண்டிராத ஒன்று" என்கிறார் இந்தியா - சீனா விவகாரங்களுக்கான வல்லுநரும் முன்னாள் இந்திய அரசின் அதிகாரியுமான ஸ்டோப்டன்.

"தனக்கு மிகவும் முக்கியம் என்று இந்தியா கருதும் சில பகுதிகளில் மோதல் சூழ்நிலை உருவாகி உள்ளது. பாங்காங் ஏரி கைவிட்டு போனால் லடாக்கை காப்பாற்ற முடியாது. ஷ்யோக் பள்ளத்தாக்கில் சீன ராணுவம் குடியேற அனுமதிக்கப்பட்டால், அவர்கள் நுப்ரா பள்ளத்தாக்கு மற்றும் சியாச்சினை கூட அடையலாம்" என்று அவர் கூறுகிறார். 

இந்தியா இதுபோன்ற ஒரு சிக்கலில் மாட்டிக் கொண்டதற்கு புலனாய்வு தோல்வியே காரணம் என்று கருதப்படுகிறது. எல்லைப் பிராந்தியத்தில் இந்திய ராணுவ வீரர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்க, அதற்குள் சீனா அங்கு அந்நாட்டின் ராணுவத்தையும் தேவையான உபகரணங்களையும் குவித்துவிட்டது.

இதனால் ஆபத்தை உணர்ந்த இந்தியாவுக்கு, தகுந்த நடவடிக்கை எடுப்பதற்கான வாய்ப்பும் குறைவாகவே இருக்கிறது. 

இது எங்கு போய் முடியும்?Getty Images

ஒன்று, பேச்சுவார்த்தை மூலம் துருப்புகளை திரும்பிப் பெற இந்தியா சீனாவை சம்மதிக்க வைக்கலாம். அல்லது கட்டாயப்படுத்தி அவர்களை வெளியேற்றலாம். ஆனால், இரண்டுமே அவ்வளவு எளிமையானது கிடையாது. 

"உலகிலேயே இரண்டாவது பெரிய ராணுவ சக்தியாக சீனா திகழ்கிறது. தொழில்நுட்ப ரீதியாக இந்தியாவை விட சீனா வலிமையானது. சீனா மேம்பட்ட கட்டமைப்பு வசதிகளை கொண்டது. ராணுவத்திற்கு தேவையானவற்றை பெற சீனாவிடம் நிதியை செலவழிக்கும் திறன் இருக்கிறது. ஆனால், இந்தியாவின் பொருளாதார நிலை இதற்கு ஏதுவாக இல்லை. மேலும், கொரோனா வைரஸ் தொற்று, இந்திய பொருளாதார சூழலை அதிகம் பாதித்துள்ளது" என்று அஜய் சுக்லா கூறுகிறார். 

அடுத்து என்ன?

இமய மலையில் சீனாவுடனான எல்லைப் பகுதியில் 1962ல் நடைபெற்ற குறுகியகால, கசப்பான போர் முடிந்து அரை நூற்றாண்டுக்கு அதிகமானபோதும், அந்த அதிர்ச்சி மறக்க முடியாதது. இந்த யுத்தத்தில், இந்திய ராணுவத்துக்கு ஏற்பட்ட தோல்வி அரசியல் தோல்வியாகவும் கருதப்பட்டது.

தனது பிராந்தியத்தின் 38,000 கிலோ மீட்டர் பரப்பை சீனா ஆக்கிரமித்துள்ளதாக இந்தியா கூறுகிறது. எல்லைப் பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர கடந்த 3 தசாப்தங்களாக பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. ஆனால், அவை அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தது.

இந்தியா-சீனா எல்லை பதற்றம்PRESS INFORMATION BUREA

இந்தியா தனக்கு சொந்தமானது என்று கூறும் லடாக்கின் கிழக்கில் இருக்கும் அக்சாய் சீனா, ஏற்கனவே சீனாவின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. சீனாவின் ஷின்ஜியாங் மாகாணத்தையும் மேற்கு திபெத்தையும் அக்சாய் சீனா இணைப்பதால், அது மூலோபாய ரீதியாக சீனாவுக்கு மிகவும் முக்கியமானதாகும். 

"பதற்றத்தை அதிகரிக்கும் எண்ணம் சீனாவிற்கு இல்லை. இந்தியாவும் மோதலை தவிர்க்கவே நினைக்கும் என்று எண்ணுகிறேன். ஆனால், என்ன நடக்கும் என்பது இருதரப்பையும் சார்ந்தது. உயர் மட்ட பேச்சுவார்த்தைகள் மூலம் இந்தப் பிரச்சனையை தீர்க்கும் வல்லமை இரு நாடுகளுக்கும் இருக்கிறது" என்று செங்டு நிறுவனத்தின் லாங் ஷிங்சுன் கூறுகிறார். 

எல்லை தகராறு குறித்து சீன ஊடகங்கள் பெரிய செய்திகள் ஏதும் வெளியிடவில்லை. அதனால் பேச்சுவார்த்தைகள் மூலம் இப்பிரச்சனையை சீனா தீர்க்க நினைப்பதாகவே தெரிகிறது. 

"இந்தியா - சீனா ஆகிய இரு நாடுகளும் ராணுவ பதற்றத்தை தவிர்த்து, தங்களின் பொருளாதாரத்தை மீட்பதில் கவனம் செலுத்தவதில் விருப்பம் கொண்டுள்ளதாக தெரிகிறது" என்கிறார் ஆபத்துக் கட்டுப்பாட்டு ஆலோசனை அமைப்பின் தெற்காசிய இயக்குநர் ப்ரத்யுஷ் ராவ்

 

https://www.bbc.com/tamil/india-52861160

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்ப‌டி ப‌ல‌ரின் பெய‌ர் வாக்க‌ள‌ர் ப‌ட்டிய‌லில் இல்லை புல‌வ‌ர் அண்ணா..........................நாம் த‌மிழ‌ர் க‌ட்சி பெடிய‌ன் சொந்த‌ ஊரில் ப‌ல‌ வாட்டி ஓட்டு போட பெடிய‌னுக்கு நீ இந்த‌ ஊரில் போட‌ முடியாது வேறு ஊரில் போய் போட‌ சொல்ல‌ அந்த‌ பெடிய‌ன் 40கிலே மீட்ட‌ர் மோட்ட‌ சைக்கில‌ சென்று ஓட்டு போட்ட‌து அந்த‌ பெடிய‌ன் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் வ‌ள‌ர்சிக்கு பெரிய‌ பங்காற்றினது...................... காணொளி ஆதார‌ம் இதோ..........................................    
    • என் வாக்கை திருடியது யார் ?     தோல்விக்கு இப்பவே நாடகம் போடுகின்றார்கள் என ஒரு கூட்டம் சொல்லும் 😂
    • அமெரிக்காவின் எழுதப்பட்ட சாசனத்தை ட்ரம்ப் மீறுவதால் ஆயிரம் யூரிகளும் உருவாக்கப்படுவர். என்ன ஒன்று.... டொனால்ட் ரம்ப் அடுத்த தேர்தலில் வேற்றியீட்டி அந்த நான்கு வருடத்தில் எதையுமே சாதிக்கப்போவதில்லை. எனவே கலக,அழிவின் உச்சம் பெற்றவன் மீண்டும் ஆட்சிக்கு வந்து  உலகம் அழிந்து போவதே சிறப்பு.
    • நாம்தமிழர்  கட்சியின் தீவிர ஆதரவாளர் நடிகர் சூரி தனது பெயர் வாக்களர் டாப்பில் இல்லை மனைவி பெயர் இருக்கிறது என்னால் ஜனநாயகக் கடமையை ஆற்ற முயெவில்லை என்று பேட்டி கொடுத்திருக்கிறார். தமிழ்நாடு அறிந்த ஒருவரன் பெயர் வாக்காளர் அட்டவணையில் இலை;லையென்றால் சாதாரண மக்களின் நிலை என்ன? தேர்தல் ஆணையம் சின்னங்களைப் பறிக்கும் வேலையைப் பார்க்காமல் அனைத்துக் குடிமகன்களுக்கும் வாக்குரிமை இருக்கிறதா அவர்கள் பெயர் வாக்காளர் இடாப்பில் இருக்கின்றதா என்பதைப் பார்க்க வேணடும்.
    • ஓம் ஓம் திராவிட‌ம் எந்த‌ நிலைக்கும் போகும் என்று ஊர் உல‌க‌ம் அறிந்த‌ உண்மை....................இந்த‌ தேர்த‌லில் 300 , 500 , 2000 இதை தாண்ட‌ வில்லை ப‌ல‌ர் கையும் க‌ள‌வுமாய் பிடி ப‌ட்டு த‌ப்பி ஓடி இருக்கின‌ம் நேற்று....................நீங்க‌ளும் காணொளி பார்த்து இருப்பிங்க‌ள் என்று நினைக்கிறேன்😂😁🤣....................................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.