Jump to content

உயிரோடு எரிந்த யாழ் நூலகம்..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய நாள்(31.05.2020) 39 ஆண்டுகளுக்கு முன் கல்வி ஒளி தந்த யாழ் நூலகத்தின் கடசிநாள்.

எரியூட்டி எரித்த எதிரிகளும் வெட்கப்படும் நாள்.

 

உயிரோடு எரிந்த யாழ் நூலகம்..!

1959இல் ஆலமரமாய் 

யாழ்நகர் நடுவில்

ஆயிரக்கணக்கில் 

ஓலைச்சுவடிகள்

கோப்புக்களோடு..

 

தொண்நூற்றி

ஏழாயிரம்.

தமிழ்,ஆங்கில.. 

தொன்மைநிறைந்த

புத்தகக் குவியல்கள்

எங்களின்..

கல்விக்கண்ணை 

திறந்த கோயிலாய்

காலம் முழுதும்-அந்த

ஒளியில் வாழ்ந்தோம்.

 

ஏசியாவின் 

முதல்தரப் படிப்பகம்

என்ற  பெருமையும் 

எமக்குக் கிடைத்தது.

 

தமிழனின் உயிரோ

கல்விதான் என்று

கண்டான் அன்றைய 

ஆட்சியின் கொடியவன்

இனத்தையழிக்க.. 

இதுதான் முதலென

ஏவி விட்டான்-தன் 

ஏவல் படைகளை

 

1981 மே 31இல்

நடுச்சாம இருளில்

நடந்தது கொடுமை

அப்பன் பெயர் தெரியா

அந்தச்சிலரால்..

வெந்தது நூலகம்

வேதனையோடு.

 

உலகம் முழுவதும்

ஓங்கி அழுதது

அன்றைய..

கோழையரசின் 

ஈனச்செயலை

இன்றும் எம்மால்

எப்படி மறப்பது.

 

-பசுவூர்க்கோபி-

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
On 31/5/2020 at 19:19, பசுவூர்க்கோபி said:

அன்றைய..

கோழையரசின் 

ஈனச்செயலை

இன்றும் எம்மால்

எப்படி மறப்பது.

அருமை!
மறக்கவே முடியாது

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 16/6/2020 at 10:11, Gowin said:

அருமை!
மறக்கவே முடியாது

கவிதை பார்த்து பாராட்டியதற்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.