-
Tell a friend
-
Topics
-
0
ஏராளன் · தொடங்கப்பட்டது
-
Posts
-
ஈழத்தமிழர்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்று தந்தை செல்வா கூறிவிட்டு சென்றார். ஆனால் கடவுளுக்கு பிரச்சனை வரும்போதும் ஈழத்தமிழர்தான் போராடவேண்டிய நிலமை இன்று.
-
நானும் பிரான்ஸ் வந்து போது எனது நண்பர்கள் உறவினர்கள் இவ்வாறு லண்டன் அமெரிக்கா கனடா அவுஸ்திரேலியா என்று பறந்தார்கள். நான் மட்டும் உழுகிற மாடு எங்கும் உழும் என்று இங்கேயே தங்கி விட்டேன். இப்போது என் பிள்ளைகளின் கல்வி வேலை மற்றும் வாழ்வுநிலையை வந்து பார்க்கும் அங்கு சென்ற அனைவரும் சொல்லும் ஒரே வார்த்தை என் முடிவு சரி என்பது தான்.
-
By ஏராளன் · பதியப்பட்டது
ஆயுத தர அணுசக்திப் பொருட்களின் தயாரிப்புகளை விஸ்தரிக்க வட கொரிய அதிபர் அழைப்பு Published By: SETHU 28 MAR, 2023 | 03:05 PM ஆயுத தரத்திலான அணுசக்திப் பொருட்களின் தயாரிப்புகளை விஸ்தரிக்குமாறு வட கொரிய அதிகாரிகளுக்கு அந்நாட்டு அதிபர் கிம் ஜோன் உன் அழைப்பு விடுத்துள்ளார். புதிய, சிறிய அணுவாயுதங்கள் எனக் கருதப்படும் பொருட்களை இராணுவ அதிகாரிகள் சகிதம் கிம் ஜோன் உன் பார்வையிடும் படங்களையும் அந்நாட்டு அரச ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. சுவரிலுள்ள படங்கள் மூலம் மேற்படி ஆயுதம் "Hwasan-31" என அடையாளம் காணப்பட்டுள்ளது. அமெரிக்காவை அச்சுறுத்துவதற்காக, தனது ஏவுகணைகளில் பொருத்தக்கூடிய சிறிய அணுவாயுதங்களை தயாரிப்பதற்கு வட கொரியா நீண்ட காலமாக முயற்சித்து வந்தது. இந்நிலையில், மேற்படி நிகழ்வின்போது, வட கொரியாவின் அணுவாயுத நிறுவகத்தின் அதிகாரிகளால் கி;ம ஜோன் உன்னுக்கு விளக்கம் அளிக்கப்பட்டதாக வடகொரியாவின் கேசிஎன்ஏ செய்தி முகவரகம் தெரிவித்துள்ளது. அப்போது ஆயுத தரததிலான அணுசக்திப் பொருட்கள் தயாரிப்பை விஸ்தரிக்குமாறு கிம் ஜோன் உன் அழைப்புவிடுத்தார் என அச் செய்திச் சேவை தெரிவித்துள்ளது. இந்த ஆயுதங்கள் காட்சிப்படுத்தப்பட்டமையானது முக்கிய தொழில்நுட்ப முன்னேற்றங்களை வெளிப்படுத்துவதாக நிபுணர்கள் கூறியுள்ளதுடன், விரைவில் அணுசக்தி சோதனை ஒன்று நடத்தப்படலாம் எனவும் எச்சரித்துள்ளனர். https://www.virakesari.lk/article/151594 -
By ஏராளன் · பதியப்பட்டது
லெப்பர்ட் 2 தாங்கிகளை உக்ரேனுக்கு அனுப்பியது ஜேர்மனி Published By: SETHU 28 MAR, 2023 | 09:47 AM லெப்பர்ட் 2 ரக இராணுவத் தாங்கிகளை உக்ரேனுக்கு ஜேர்மனி அனுப்பியுள்ளது என ஜேர்மனிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தள்ளது. ஜேர்மனியில் தயாரிக்கப்பட்ட லெப்பர்ட்2 (Leopard 2 tanks) ரக நவீன இராணுவத் தாங்கிகளை தனக்கு வழங்குமாறு உக்ரேன் கோரி வந்தது. ஆனால், இதற்கு ஆரம்பத்தில் ஜேர்மனி மறுத்தது. பின்னர் வேறு நாடுகள் இந்த தாங்கிகளை உக்ரேனுக்கு வழங்க ஜேர்மனி அனுமதியளித்தது. இறுதியில் தானும் உக்ரேனுக்கு இத்தாங்கிகளை வழங்க ஜேர்மனி கடந்த ஜனவரியில் சம்மதித்தது. இந்நிலையில், உக்ரேனுக்கான லெப்பர்2 தாங்கிகளின் முதல் தொகுதி உக்ரேனுக்கு அனுப்பப்பட்டுள்தளாக ஜேர்மனிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. நேட்டோ நாடுகளால் தயாரிக்கப்பட்ட மிகச் சிறந்த யுத்த தாங்கிகளாக லெப்பர்ட் 2 தாங்கிகள் கருதப்படுகின்றன. ரஷ்யாவின் T90 தாங்கிகளை எதிர்த்துப் போரிடுவதற்கு ஏற்ப லெப்பர்ட் 02 தாங்கிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஐரோப்பாவில் சுமார் 2000 லெப்பர்ட் 2 தாங்கிகள் பாவனையில் உள்ளன. இத்தகைய தாங்கிகளை இயக்குவதற்கு உக்ரேனியர்களுக்கு ஜேர்மனி பல வாரங்கள் பயிற்சிகளை வழங்கின. இதேவேளை, பிரிட்டனில் தயாரிக்கப்பட்ட சலெஞ்சர் 2 ரக இராணுவத் தாங்கிகள் ஏற்கெனவே உக்ரேனை வந்தடைந்துள்ளதாக உக்ரேன் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/151554 -
அண்ணை அப்ப நீங்களும் தேடியிருக்கிறீர்கள்?! பெரிசா கிடைச்சா கொஞ்சத்தை சங்கத்திற்கு தாங்கோ!!
-
Recommended Posts