Jump to content

அமெரிக்காவில் கொரோனா நோயாளிக்கு ஆஸ்பத்திரி செலவு இவ்வளவா?- வாய் பிளக்க வைக்கும் பில்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவில் கொரோனா நோயாளிக்கு ஆஸ்பத்திரி செலவு இவ்வளவா?- வாய் பிளக்க வைக்கும் பில்

அமெரிக்காவில் கொரோனா நோயாளிக்கு ஆஸ்பத்திரி செலவு இவ்வளவா?- வாய் பிளக்க வைக்கும் பில்

 

 

அமெரிக்காவில் கொலராடோ மாநிலத்தில் உள்ள டென்வர் நகரில் ராபர்ட் டென்னிஸ் என்ற உயர்நிலைப்பள்ளி ஆசிரியருக்கு கொரோனா வைரஸ் பாதித்தது. இதையடுத்து அவர் அங்குள்ள ஸ்கை ரிட்ஜ் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. 2 வாரம் செயற்கை சுவாச கருவி பொருத்தி இருந்தனர். 


குணம் அடைந்த பின்னர் அவருக்கு அந்த ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கான பில்லை நீட்டினர். அதைப் பார்த்து அவர் அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டார். சிகிச்சை கட்டணமாக 8 லட்சத்து 40 ஆயிரத்து 386 டாலர் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இந்த பில்லில் ராபர்ட் டென்னிஸ் ஸ்பால்டிங் புனர்வாழ்வு ஆஸ்பத்திரியில் 3 வாரங்கள் இருந்தது சேர்க்கப்படவில்லை. நல்ல வேளையாக அவர் மருத்துவ காப்பீடு செய்திருந்தார். இதனால் அவர் தப்பித்து இருக்கிறார்.

 

https://www.maalaimalar.com/news/topnews/2020/06/01082017/1565120/US-patient-receives-840000-USD-bill-for-COVID19-treatment.vpf

Just now, உடையார் said:

 


குணம் அடைந்த பின்னர் அவருக்கு அந்த ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கான பில்லை நீட்டினர். அதைப் பார்த்து அவர் அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டார். சிகிச்சை கட்டணமாக 8 லட்சத்து 40 ஆயிரத்து 386 டாலர் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. (ரூபா ???)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா சிகிச்சைக்கான கட்டணம் ரூ.11.33 கோடி நோயாளி அதிர்ச்சி

கொரோனா சிகிச்சைக்கான கட்டணம் ரூ.11.33 கோடி நோயாளி அதிர்ச்சி

 

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்கான கட்டணம் அனைவரையும் வாய் பிளக்க வைத்துள்ளது.
பதிவு: ஜூன் 02,  2020 09:08 AM
வாஷிங்டன்

அமெரிக்காவில் கொலராடோ மாநிலத்தில் உள்ள டென்வர் நகரை சேர்ந்த ராபர்ட் டென்னிஸ் என்ற உயர்நிலைப்பள்ளி ஆசிரியருக்கு கொரோனா வைரஸ் பாதித்தது.

இதையடுத்து அவர் அங்குள்ள ஸ்கை ரிட்ஜ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. 2 வாரம் செயற்கை சுவாச கருவி பொருத்தி இருந்தனர்.இந்த நிலையில் குணம் அடைந்து குடியிருப்பு திரும்பிய பின்னர் அவருக்கு அந்த மருத்துவமனை சிகிச்சைக்கான பில்லை அனுப்பியுள்ளனர்.


அதைப் பார்த்து அவர் அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டார். சிகிச்சை கட்டணமாக 8 லட்சத்து 40 ஆயிரத்து 386 டாலர் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இந்த பில்லில் ராபர்ட் டென்னிஸ் ஸ்பால்டிங் புனர்வாழ்வு மருத்துவமனையில் 3 வாரங்கள் இருந்தது சேர்க்கப்படவில்லை.ஆனால் அவரது மனைவியும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்ததால், அதற்கான கட்டணமும் சேர்த்து 1.5 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.11.33 கோடி) என தெரிவிக்கப்பட்டுள்ளது

நல்ல வேளையாக அவர் மருத்துவ காப்பீடு செய்திருந்தார். இதனால் அவர் தப்பித்து இருக்கிறார்.இருப்பினும், அந்த மருத்துவமனை கட்டணத்தை பார்க்கும் போது உண்மையில் ஒருவகை அச்சமாகவே இருந்தது என அவரது மனைவி தெரிவித்துள்ளார்.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/06/02090854/Surprise-medical-bills-continue-during-coronavirus.vpf

Link to comment
Share on other sites

பல வைத்தியர்களுக்கு கூட சம்பளம் செலுத்த முடியாமல் உள்ள வைத்தியசாலைகள். 

30 மில்லியன்கள் மக்களுக்கு வேலை இல்லை 
ஆக, வேலை ஊடாக வரும் வைத்திய காப்புறுதி இல்லை 
எனவே, பணம் செலுத்த முடியாத பலரும். 
இதனால், வைத்தியசாலைகள் வருமானம் குறைய ... 

பல வைத்தியர்களுக்கு கூட சம்பளம் செலுத்த முடியாமல் உள்ள வைத்தியசாலைகள். 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா பாதிப்பு; மரணத்தில் தப்பி பிழைத்த நபருக்கு மருத்துவ பில் தந்த பேரதிர்ச்சி

கொரோனா பாதிப்பு; மரணத்தில் தப்பி பிழைத்த நபருக்கு மருத்துவ பில் தந்த பேரதிர்ச்சி

 

அமெரிக்காவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று மரணத்தில் இருந்து உயிர் தப்பிய முதியவருக்கு வந்த மருத்துவ பில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பதிவு: ஜூன் 14,  2020 09:59 AM
வாஷிங்டன்,

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் வடமேற்கு பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் கடந்த மார்ச் 4ந்தேதி கொரோனா பாதிப்பிற்காக மைக்கேல் புளோர் (வயது 70) என்ற முதியவர் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.  தொடர்ந்து 62 நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த அவருக்கு, சிகிச்சையின் இடையே ஒரு காலகட்டத்தில் அவரை உயிர் பிழைக்க வைக்க முடியாத சூழல் ஏற்பட்டது.  அவரை மரணம் நெருங்கியது.  இதனால், செவிலியர்கள் அவருடைய மனைவி மற்றும் குழந்தைகள் குட்பை சொல்வதற்காக போனை ஆனில் வைத்தனர்.


ஆனால், அதிர்ஷ்டவச முறையில் அவர் உயிர் பிழைத்து விட்டார்.  பின்னர் சிகிச்சை முடிந்த கடந்த மே 5ந்தேதி வீடு திரும்பினார்.  அவருக்கு அளித்த சிகிச்சை பலன் தந்த மகிழ்ச்சியில் செவிலியர்கள் உற்சாகமுடன் வழியனுப்பினர்.  ஆனால், புளோருக்கு வந்த மருத்துவ பில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதில் இந்திய மதிப்பில் ரூ.8.3 கோடிக்கு கட்டண செலவு எழுதப்பட்டு இருந்தது.  தீவிர சிகிச்சை அறைக்கு நாள் ஒன்றுக்கான செலவு, வென்டிலேட்டர் கட்டணம், உயிருக்கு அச்சுறுத்தலான 2 நாட்களுக்கு அளித்த உயர் சிகிச்சை என சேர்த்து இந்த கட்டண தொகை நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

முதியோருக்கான அரசு காப்பீடு திட்டத்தின் கீழ் இருந்த புளோர் தனது பணத்தினை செலவு செய்ய வேண்டிய தேவை இல்லாமல் போனது.  ஆனால் அவர் கூறும்பொழுது, ஒரு நாட்டில், சுகாதார நலம் என்பது உலகில் அதிக விலையுயர்ந்த ஒன்றாக இருக்கும்பொழுது, அதனை சமூகமயமாக்குவதில் சர்ச்சை தொடர்வது, வரி செலுத்தும் மக்களுக்கு அதிக கட்டண சுமையை ஏற்படுத்தும்.  பெருமளவிலான மக்கள் பாதிக்கப்படுவர்.  இதனால் எனக்கு குற்ற உணர்ச்சி ஏற்படுகிறது என கூறியுள்ளார்.

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள் மற்றும் தனியார் காப்பீட்டு நிறுவனங்களுக்கு இழப்பீடு வழங்கும் வகையில் ரூ.75 ஆயிரத்து 957 கோடி அளவுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யும் பெரிய அளவிலான திட்டம் ஒன்றை செயல்படுத்த அமெரிக்க நாடாளுமன்றம் முடிவு செய்துள்ளது.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/06/14095930/Corona-infection-medical-bill-shocked-recovered-patient.vpf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.