Jump to content

இழப்புகளை சந்திப்பீர்கள் ; அதிர்ச்சியை தாங்க முடியாது ; இந்தியாவிற்கு சீனா எச்சரிக்கை.!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இழப்புகளை சந்திப்பீர்கள்.. அதிர்ச்சியை தாங்க முடியாது.. இந்தியாவிற்கு சீனா எச்சரிக்கை.!

dc-Cover-s9jem2tebm9krf94jpnhaa74k1-2019

பெய்ஜிங்: இந்தியா பெரிய இழப்புகளை சந்திக்கும், இந்தியாவால் இதற்கு மேலும் அதிர்ச்சியை தாங்க முடியாது என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

களமிறக்கப்பட்ட நவீன ஆயுதங்கள். இந்தியா - சீனா எல்லையில் குவிக்கப்படும் படைகள்.

முதல் முறையாக சீனா எல்லை பிரச்சனையில் இந்தியாவிற்கு எதிராக பேசி இருக்கிறது.இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான எல்லை பிரச்சனை மோசம் அடைந்து வருகிறது. இரண்டு நாட்டு படைகளும் எல்லையில் ராணுவத்தை குவித்து வருகிறது. எப்போது வேண்டுமானாலும் இதனால் போர் வெடிக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

மத்தியஸ்தம்

இந்த பிரச்சனையில் மத்தியஸ்தம் பேச விருப்பப்படுவதாக அதிபர் டிரம்ப் ஏற்கனவே தெரிவித்து இருந்தார். ஆனால் இதை சீனா, இந்தியா ஆகிய இரண்டு நாடுகளுமே மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

எச்சரிக்கை

இந்த நிலையில் இந்தியாவிற்கும் சீனா தற்போது கடுமையான எச்சரிகைகளை விடுத்துள்ளது. அதில், சீனா மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான சண்டையில் சிலர் இந்தியாவும் கலந்து கொள்ள வேண்டும் என்று கூறுகிறார்கள். இந்தியா அமெரிக்காவிற்கு ஆதரவு தர வேண்டும் என்று சிலர் கூறுகிறார்கள்.

தவறான பேச்சுக்கள்

இது போன்ற பேச்சுக்கள் தவறானது. இது போன்ற பேச்சுக்கள் இந்தியாவை தவறாக வழி நடத்தும். இது இந்தியாவிற்கு எதிரானது இது போன்ற பேச்சுக்கள் இந்தியாவின் கொள்கைக்கு எதிரானது என்று நாங்கள் நம்புகிறோம். அமெரிக்காவுடன் சேர்ந்ததால் இந்தியாவிற்கு எதுவும் கிடைக்காது. இந்தியாவிற்கு பெரிய அளவில் இழப்புகள் தான் ஏற்படும். இதனால் பிரதமர் மோடியின் அரசு இந்த பிரச்னையை நேர்மையாகவும், வெளிப்படையாகவும் எதிர்கொள்ள வேண்டும். இந்தியா கவனமாக இருக்க வேண்டும்.

china7455-1590988529.jpg

கூட்டு சேர கூடாது

அமெரிக்கா, சீனா பிரச்சனையில் இந்தியா தலையிட கூடாது. இந்தியா இப்படி தலையிட்டால், அது பிரச்சனையை பெரிதாக்கும். அதோடு இந்தியாவிற்கு சிக்கலாக முடியும். அமெரிக்காவின் மத்தியஸ்தம் இதில் தேவை இல்லை. சீனா , இந்தியா இடையிலான பிரச்சனையை நாம்தான் சரி செய்ய வேண்டும். நமக்கு அந்த பலம் இருக்கிறது. அமெரிக்காவை இதில் உள்ளே அனுமதிக்க கூடாது.

அதிர்ச்சியை தாங்க ஏலாது

இந்தியாவில் ஏற்கனவே பொருளாதாரம் சரிந்துள்ளது. இந்தியாவால் மேலும் அதிர்ச்சிகளை தாங்க ஏலாது. அமெரிக்காவுடன் இந்தியா இணைவதை தவிர்க்க வேண்டும். இந்தியாவும் - சீனாவும் அண்டை நாடுகள். நாம் ராஜாங்க ரீதியாக பேசுவதை ஊக்குவிக்க வேண்டும் . அதை விடுத்து தேசிய கொள்கைக்கு எதிராக அண்டை நாடுகளை எதிர்க்க கூடாது, என்று சீனா கூறியுள்ளது .

https://tamil.oneindia.com/news/international/more-to-lose-than-to-gain-china-warns-india-in-very-strong-words-387114.html

டிஸ்கி :

hy.png

அண்ணை என்ன கதைக்கிறார் தெரியுமா.? றோட்டலா எல்லாத்தையும் மூட சொல்லுறார்..☺️..😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

100806507_567473264200338_1046652189658841088_o.jpg?_nc_cat=104&_nc_sid=730e14&_nc_eui2=AeEcIvrVsZZ__edM47DFPGOjuKQOVtcwrYC4pA5W1zCtgABcQ701ehsjfIIlRKq7e8Mxa2gVBKnME043HDMiqe2m&_nc_ohc=t6MtT3sfsjMAX8DXFoS&_nc_ht=scontent-frt3-1.xx&oh=cc947fca0e9364d0176e94f8491ad6f6&oe=5EF92878

இந்தியாவின் பெயரை மாற்றி... பாரத் என்று பெயர் வைக்க வேண்டும் என்று,
உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு போடப் பட்டுள்ளது.

அப்படி மாற்றப் பட்டால்... சீனா,  இந்தியாவை தாக்க வரும்போது... 
பாரத் என்ற,  பிழையான விலாசத்துக்கு வந்து விட்டோம் என்று திரும்பிப் போய் விடும். 😜

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.