• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
ampanai

வடக்கின் மீது கண் வைக்கிறதா பாகிஸ்தான்?

Recommended Posts

-சுபத்ரா

இந்தியாவின் புதிய தூதுவர் கோபால் பாக்லே, இலங்கைக்கு வந்து தனிமைப்படுத்தல் நடைமுறைகளை முடித்துக் கொண்டு, இலங்கை அரசாங்கத்துடன் முறைப்படியான கலந்துரையாடல்களை ஆரம்பித்த கடந்த 26ஆம் திகதி- பாகிஸ்தான் தூதுவர் முகமட் சாட் ஹட்டக் (Muhammad Saad Khattak) யாழ்ப்பாணத்துக்கான பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

Muhammad_Saad_Khattak.jpg

எந்த முன்னறிவிப்பும் இன்றி, பெரிதாக வெளிப்படையான எந்த நிகழ்ச்சி நிரலும் இல்லாமல், அவரது இந்தப் பயணம் இடம்பெற்றிருக்கிறது.
யாழ்ப்பாணம், சென்.பற்றிக்ஸ் கல்லூரிக்குச் சென்று, பாடசாலை அதிபரைச் சந்தித்து, கிரிக்கெட் மட்டைகள், பாடசாலைப் பைகள் போன்றவற்றை அன்பளிப்புச் செய்திருக்கிறார்.

யாழ்ப்பாணத்திலேயே தங்கியிருந்து, கோட்டையைச் சுற்றிப் பார்வையிட்டிருக்கிறார். மறுநாளும் அங்கேயே தங்கியிருந்து, நல்லூர் கந்தசுவாமி கோவிலையும் வெளிப்புறத்தில் இருந்து பார்வையிட்டிருக்கிறார்.

உருது மொழியில் பேஸ்புக்கில் படங்களுடன் வெளியிட்டுள்ள பதிவில் 500 ஆண்டுகள் பழைமையான இந்து ஆலயம் என்று அதனைக் குறிப்பிட்டிருக்கிறார்.

நல்லூர் கந்தசுவாமி ஆலயம், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, யாரும் நுழைய முடியாமல் தடுக்கப்பட்டிருந்த சூழலில், ஆலயத்தின் முகப்புப் பகுதியில் நின்று எடுத்த படத்தை வெளியிட்டிருக்கிறார் பாகிஸதான் தூதுவர்.

இவர் தனது யாழ்ப்பாணப் பயணம் குறித்து - குறிப்பாக, சென்.பற்றிக்ஸ் கல்லூரிக்கு செய்த அன்பளிப்புகள் குறித்து பேஸ்புக்கில் இட்ட பதிவுகளுக்கு அதிகளவான பாகிஸ்தானியர்கள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள்.

அவரது செயற்பாட்டை பாராட்டியிருக்கிறார்கள். தங்களின் நாட்டுக்கான சிறந்த பணியை ஆற்றுவதாக பாராட்டு மழை பொழிந்திருக்கிறார்கள்.
திடீரென - பாகிஸ்தான் தூதுவர் யாழ்ப்பாணத்துக்கு மேற்கொண்ட இந்தப் பயணம் பலரதும், புருவங்களை உயர்த்த வைத்திருக்கிறது.
அவரது பயணத்துக்கான ஒழுங்குகளை ஆளுநர் செயலகம் ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

ருவிட்டர் பதிவில் அதற்காக அவர் நன்றி தெரிவித்திருக்கிறார்.

பாகிஸ்தான் தூதுவராக முகமட் சாட் ஹட்டக் கடந்த ஜனவரி 15ஆம் திகதி பொறுப்பேற்றார். அதற்குப் பின்னர், ஜனவரி 20ஆம் திகதி, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவிடம் சான்றுப் பத்திரங்களைக் கையாளித்தார்.

அதற்குப் பிறகு, அவர் இலங்கையின் அரசியல் தலைவர்களை, வர்த்தக சமூகத்தினரை, முஸ்லிம் தலைவர்களைச் சந்தித்த போதும், எந்தவொரு தமிழ் அரசியல் தரப்பினரையும் சந்திக்கவில்லை.

அவ்வாறான நிலையில், அவரது கவனம் யாழ்ப்பாணத்தின் மீது திரும்பியது குறித்து ஆச்சரியம் கொள்வது தவிர்க்க முடியாதது.

பாகிஸ்தான் தூதுவராக நியமிக்கப்படுவதற்கு முன்னதாக, முகமட் சாட் ஹட்டக்35 ஆண்டுகள் இராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். மேஜர் ஜெனரல் அதிகாரியாக இவர் இருந்தவர்.

பிரெஞ்சு இராணுவ இளநிலை அதிகாரிகள் கற்கையையும், பிரித்தானியாவில் பாதுகாப்பு புலனாய்வு பணிப்பாளர் கற்கையையும், மேற்கொண்டவர்.

அரசியல் விஞ்ஞானம், போர்க் கற்கைகளில் முதுமாணிப் பட்டமும், சர்வதேச உறவுகள் தொடர்பான முதுதத்துவமாணி பட்டமும் பெற்றுள்ளவர்.

பாகிஸ்தானில் எப்போதும, குண்டுச் சத்தங்கள் கேட்கின்ற பலுசிஸ்தானிலும், கைபர் பக்துன்வா பள்ளத்தாக்கிலும், கிளர்ச்சி முறியடிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்.

உள்நாட்டிலும், வெளிநாட்டிலும், பல்வேறு முக்கிய நடவடிக்கைகளில் பங்கேற்ற இவர், இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் சிந்தனைக் குழாம்களுடன் இணைந்து இயங்கியவர்.

தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்று வந்த இவர், அச்சு ஊடகங்களிலும், கட்டுரைகளை எழுதி வந்தார்.

இத்தகைய பின்புலத்தைக் கொண்ட பாகிஸ்தான் தூதுவர் இதற்கு முன்னர், யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரியுடன் எந்த தொடர்பும் இல்லாத நிலையில்- எதற்காக யாழ்ப்பாணத்துக்கு வந்தார் என்ற கேள்விக்கு சரியான விடை இல்லை.

யாழ்ப்பாணம் சென்.பற்றிக்ஸ் கல்லூரி கத்தோலிக்க பாதிரியார்களினால் நடத்தப்படும் ஒரு பழம்பெரும், புகழ் பூத்த பாடசாலை.

தமது நாட்டிலும், சென்.பற்றிக்ஸ் கல்லூரி புகழ்பெற்று விளங்குகிறது என்றும், அதனாலேயே, யாழ்ப்பாணம் சென்.பற்றிக்ஸ் கல்லூரியை தாம் தேடி வந்ததாகவும், பாகிஸ்தான் தூதுவர் கூறியிருக்கிறார்.

பாகிஸ்தானின் கராச்சியில கத்தோலிக்க பாதிரியார்களால் நடத்தப்படும் சென்.பற்றிக்ஸ் உயர்நிலைப் பாடசாலை மற்றும், சென்.பற்றிக்ஸ் கல்லூரி (பல்கலைக்கழகம்) என்பன, மிகப் புகழ்பெற்றவை.

1861இல் தொடங்கப்பட்ட இந்த சென்.பற்றிக்ஸ் உயர்நிலைப் பாடசாலை கராச்சியில் உள்ள இரண்டாவது பழைமையாக பாடசாலை. இதனை விடப் பழைமையானது, யாழ்ப்பாணம் சென்.பற்றிக்ஸ் கல்லூரி. இது 1850ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.

பாகிஸ்தானின் இரண்டு ஜனாதிபதிகள், இரண்டு பிரதமர்களை மத்திரமன்றி, இந்தியாவின் துணைப் பிரதமர் ஒருவரையும் உருவாக்கியது கராச்சி சென்.பற்றிக்ஸ் உயர்நிலைப் பாடசாலை தான்.

பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் இந்தியாவின் முன்னாள் துணைப் பிரதமருமான லால் கிருஷ்ண அத்வானி, பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர்களான சௌகத் அசீஸ், மொகமட் கான் ஜூனேயோ, பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதிகளான ஆசிவ் அலி சர்தாரி, பர்வேஸ் முஷாரப், போன்றவர்கள் இந்தப் பாடசாலையில் கல்வி கற்றவர்கள் தான்.

சிந்து மாகாணத்தின், நான்கு முதலமைச்சர்கள், பாகிஸ்தான் அமைச்சர்கள், போன்றவர்களை மாத்திரமன்றி, ஜாவிட் மியான்டட், டனிஸ் கனேரியா போன்ற புகழ்பெற்ற கிரிக்கெட் வீர்ர்களையும் உருவாக்கியிருக்கிறது.

அவ்வாறான ஒரு பாடசாலையின் இணைப் பாடசாலையாக கருதி, யாழ்ப்பாணத்துக்கு பாகிஸ்தான் தூதுவர் வந்திருப்பது அதிகம் ஆச்சரியமானது அல்ல.

Muhammad_Saad_Khattak_new.jpg

20 ஆண்டுகளுக்குப் பின்னர் யாழ்ப்பாணம் வந்திருப்பதாக அவர் கூறியிருக்கிறார் அவ்வாறாயின் அவர் 2000ஆம் ஆண்டளவில், யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார்.

அது விடுதலைப் புலிகளுடன் கடும் போர் நடந்து கொண்டிருந்த காலம். அப்போது, பாகிஸ்தானின் இராணுவ உதவிகளை இலங்கை இராணுவம் பெற்றிருந்தது. 
யாழ்ப்பாண குடாநாட்டை புலிகளிடம் இருந்து பாதுகாக்கும் நடவடிக்கைக்கு பாகிஸ்தான் பெருமளவில் உதவிகளை வழங்கியது.
அதில் தற்போதைய பாகிஸ்தான் தூதுவருக்கு பங்கு இருந்ததா என்ற கேள்வியும் உள்ளது,

இவற்றுக்கு அப்பால், பாகிஸ்தான் தூதுவர் யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொண்ட முறைதான் அதிக கேள்விகளை எழுப்பியிருக்கிறது,

கொரோனா அச்சுறுத்தல் அதிகமான பகுதியாக இருந்த  கடந்த வாரமே திறந்து விடப்பட்ட கொழும்பில் இருந்து, யாழ்ப்பாணம் வந்தவர்கள், சுயதனிமைப்படுத்தப்படுவது கட்டாயமாக்கப்பட்டிருந்த சூழலில், பாகிஸ்தான் தூதுவர் எந்த கட்டுப்பாடுகளுமின்றி யாழ்ப்பாண நகரில் நடமாடியிருக்கிறார்.

கொரோனாவுக்கு இராஜதந்திர சிறப்புரிமைகள் என்று எதுவும் கிடையாது.

இந்திய தூதுவர் கோபால் பாக்லே கொழும்பு வந்து, இரண்டு வாரங்கள் சுயதனிமைப்படுத்தலில் இருந்த பின்னரே, வழக்கமான பணிகளை ஆரம்பித்தார்.

அவ்வாறான நிலையில், பாகிஸ்தான் தூதுவர் யாழ்ப்பாணத்தில், சுகாதார நடைமுறைகளில் இருந்து விலக்களிப்பு பெற்றது எப்படி என்ற கேள்விக்கு யாரிடமும் பதில் இல்லை.

அவரது பயணத்துக்கு அரசாங்க ஒத்துழைப்பு இருந்திருக்கிறது என்பது மட்டும் உறுதி.

ஏனென்றால், 14 நாட்கள் தனிமைப்படுத்தலை முடித்து விட்டு, தனது மகளை அழைத்து யாழ்ப்பாணத்துக்கு அழைத்து வந்த, தேர்தல் ஆணைக்குழு உறுப்பினரான பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் வீட்டுக்குச் சென்று, பொலிசாரும், சுகாதார அதிகாரிகளும், சுயதனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தனர்.

ஆனால், பாகிஸ்தான் தூதுவர் அரசாங்க பாதுகாப்புடன் யாழ்ப்பாணத்துக்கு வந்து சென்ற போது, அவரைத் தனிமைப்படுத்தவோ, தடுக்கவோ யாரும் முன்வரவில்லை.

பாகிஸ்தான் தூதுவரின் இந்தப் பயணம், தமிழ் மக்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளும் ஒரு திட்டத்துடன் இடம்பெற்றிருக்கலாம் என்ற சந்தேகங்கள் இருந்தாலும், தமிழ் அரசியல் தரப்புகளுடன் அவர் பெரிதாக எந்த சந்திப்புகளையும் நடத்தவில்லை என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய விடயம்.

இலங்கையின் வடகுப் பகுதியில், பாகிஸ்தானின், நடவடிக்கைகளை இந்தியா ஒருபோதும் சகித்துக் கொண்டது இல்லை.

ஏனென்றால், பாகிஸ்தானுக்கு எப்போதுமே, இன்னொரு முகம் இருப்பதாக இந்தியா உறுதியாக நம்புகிறது,

இலங்கையில் பாகிஸ்தான் தூதுவர்களாக பெரும்பாலும், இராணுவ அதிகாரிகளே நியமிக்கப்படுகின்றனர். அவர்களும், தூதுரகப் பணிகளுக்கு அமர்த்தப்படும், ஐஎஸ்ஐ எனப்படும் புலனாய்வு அமைப்பின் அதிகாரிகளும், இந்தியாவுக்கு எதிராக செயற்படுவதிலேயே கவனம் செலுத்துவதாக புதுடெல்லி நம்புகிறது.

இந்தியாவில், பாகிஸ்தான் பல்வேறு தீவிரவாத செயற்பாடுகளுக்கு இலங்கையை தளமாக பயன்படுத்திக் கொண்டதாக ஏற்கனவே குற்றச்சாட்டுகளும் உள்ளன.

இவ்வாறான ஒரு நிலையில் பாகிஸ்தான் தூதுவரின் வடக்கிற்கான பயணத்தை, இந்தியா சாதாரணமாக எடுத்துக் கொள்ள வாய்ப்பில்லை.
மற்றொரு புறத்தில், இந்தியாவின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்ட கோபால் பாக்லே, இங்கு வந்து சேர்ந்ததும், அஸ்கிரிய, மல்வத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களுடன் இணையவழியில் கலந்துரையாடியிருந்தார்.

தனிமைப்படுத்தலை முடித்துக் கொண்ட பின்னர், அவர், முதலில் கொழும்பு கங்காராமய விகாரைக்குத் தான் சென்றிருந்தார்.
இவையெல்லாம், சிங்கள பௌத்தர்களை திருப்திப்படுத்துவதில் இந்தியத் தூதுவர் அதிக கவனம் செலுத்துகிறார் என்பதை உணர்த்துகிறது.

புதிய இந்திய தூதுவர், மறைந்த ஆறுமுகன் தொண்டமானை தவிர, தமிழர் தரப்பில் வேறெவருடனும் இந்தப் பத்தி எழுதப்படும் வரையில், சந்திப்புகளை நடத்தவில்லை.

மறுபக்கத்தில், பாகிஸ்தான் தூதுவரோ, யாழ்ப்பாணத்தின் இந்து ஆலயத்தையும், கத்தோலிக்கப் பாடசாலையையும் தமக்கு நெருக்கமானதாக காட்டிக் கொள்ளும் நிலையில் இருக்கிறார்.

பாகிஸ்தான தூதுவரின் இந்தப் பயணம் இந்தியாவை நிச்சயம் உசுப்பி விடும். கூடிய விரைவில் இந்தியத் தூதுவரின் யாழ்ப்பாண பயணத்தை எதிர்பார்க்கலாம்.

https://www.virakesari.lk/article/83121

Share this post

Link to post
Share on other sites

இந்தியாவுக்கு இப்ப மூக்கில் 🤥 வேர்த்திருக்குமே.

Share this post

Link to post
Share on other sites
6 hours ago, ampanai said:

மற்றொரு புறத்தில், இந்தியாவின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்ட கோபால் பாக்லே, இங்கு வந்து சேர்ந்ததும், அஸ்கிரிய, மல்வத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களுடன் இணையவழியில் கலந்துரையாடியிருந்தார்.

தனிமைப்படுத்தலை முடித்துக் கொண்ட பின்னர், அவர், முதலில் கொழும்பு கங்காராமய விகாரைக்குத் தான் சென்றிருந்தார்.

இவையெல்லாம், சிங்கள பௌத்தர்களை திருப்திப்படுத்துவதில் இந்தியத் தூதுவர் அதிக கவனம் செலுத்துகிறார் என்பதை உணர்த்துகிறது.

இந்திய கொள்கை வகுப்பாளர்களை தமிழர் தரப்பால் கணக்கிட முடியவில்லை. இல்லை, இந்திய கொள்கை வகுப்பாளர்களை சிங்கள + சீன + பாகிஸ்தான் கொள்கை வகுப்பாளர்கள் தொடர்ந்தும் மூக்குடை பட வைக்கிறார்களோ தெரியவில்லை. 

அன்று, ஒரு இடைக்கால தமிழீழ அரசை ஆண்டவர்கள் புது டெல்லியை பகைத்துக்கொள்ளவும் பல கலாச்சார  வழிகளால்  பின்னிபிணைந்தவர்கள் என்ற ரீதியிலும் அவர்கள் சீன - பாகிஸ்தான் உறவுகளை விரும்பி இருக்கவில்லை. 

பிரிவினையை மறுத்து, ஒற்றையாட்சியை மறுத்து, ஒரே நாட்டிற்குள் அதிகரா பரவலை கேட்க்கும் இன்றைய சம்பந்தர் தலைமையிலான கூட்டமைப்பும் கூட டெல்லியை மீறி எதுவும் செய்வதில்லை. 

இருந்தும், டெல்லி தமிழர்களை இன்னும் நம்ப மறுக்கின்றது. ஏன்?  

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, ampanai said:

இருந்தும், டெல்லி தமிழர்களை இன்னும் நம்ப மறுக்கின்றது. ஏன்?

நான் நினைக்கின்றேன் “சூடு கண்ட பூனை அடுப்பங்கரை நாடாது” என்பதனால் இருக்குமோ??!! அல்லது தமிழரின் உறவு அவசியமில்லை என்பதனாலா?!

சிங்களவர்கள் தமிழர்களின் மீது காட்டும் துவேசத்திற்கு காரணம் அவர்கள் மீதான அச்ச உணர்வே. பக்கத்தில் அதிக எண்ணிக்கையில் தமிழர்கள் இருப்பதால் அவர்களுடன் இணைந்து எம்மை அழித்து விடுவார்களோ என்ற அச்ச உணர்வு. அந்த அச்ச உணர்வைப் போக்கினால் போதும் அவர்கள் தமிழர்களை சம‍ உரிமை வழங்குவர்கள். இன்னும் சொல்லப்போனால் உண்மையான  நண்பர்களாக பழகுவார்கள் மதிப்பார்கள். 

ஆனால் இந்திய அரசிடம் இருப்பது தமிழர்கள் எமக்கு கீழ்பட்ட கீழ்ஜாதி சூத்திர‍ர்கள் என்ற பார்பன அதிகார திமிர். அது நாம் எவ்வளவு தான் கீழ்ப்படிந்து அவர்களை ஏற்றுக்கொண்டாலும்  எமது துன்பத்தில் தான் இன்பம் காணுமே தவிர என்றுமே எமக்கு சம உரிமை வழங்க ஒத்து கொள்ளாது. 

  • Like 3

Share this post

Link to post
Share on other sites
8 hours ago, ampanai said:

இவற்றுக்கு அப்பால், பாகிஸ்தான் தூதுவர் யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொண்ட முறைதான் அதிக கேள்விகளை எழுப்பியிருக்கிறது,

இவ்வளவு அடி அடித்தும் எப்படி இவர்களால் இப்படி இருக்க முடிகிறது என்று பார்க்க வந்திருக்கலாம்.

இந்தியாவில் இருந்து ஒரு கப்பல் கிரிக்கட் உபகரணங்கள் யாழ் பாடசாலைகளுக்கு விரைவில் வழங்கப்படும்.

  • Haha 1

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, பழுவூர்கிழான் said:

நான் நினைக்கின்றேன் “சூடு கண்ட பூனை அடுப்பங்கரை நாடாது” என்பதனால் இருக்குமோ??!! அல்லது தமிழரின் உறவு அவசியமில்லை என்பதனாலா?!

ஈழத்தமிழர்கள் தான் அதிக 'அடுப்பங்கரை சூட்டை' இந்தியாவிடம் இருந்து கண்டவர்கள்.

இருந்தாலும், சீனாவின் பக்கமோ இல்லை பாகிஸ்தான் பக்கமோ சாயாமல் சரியாமல், டெல்லி பக்கமே பார்த்து தலைவைத்து துயில் கொள்பவர்கள். 

இந்தியாவில் உள்ள மாநிலங்களில் இரண்டாவது பொருளாதார அபிவிருத்தி கண்ட மாநிலமாகவும் அமைதியான மாநிலமாகவும் இந்திய கொள்கைகளுக்கு கட்டுண்ட மாநிலமாகவும் தமிழகம் உள்ளது. ஆக, எதை வைத்து டெல்லி பயம் கொள்ளும்?  

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, tulpen said:

சிங்களவர்கள் தமிழர்களின் மீது காட்டும் துவேசத்திற்கு காரணம் அவர்கள் மீதான அச்ச உணர்வே. பக்கத்தில் அதிக எண்ணிக்கையில் தமிழர்கள் இருப்பதால் அவர்களுடன் இணைந்து எம்மை அழித்து விடுவார்களோ என்ற அச்ச உணர்வு. அந்த அச்ச உணர்வைப் போக்கினால் போதும் அவர்கள் தமிழர்களை சம‍ உரிமை வழங்குவர்கள். இன்னும் சொல்லப்போனால் உண்மையான  நண்பர்களாக பழகுவார்கள் மதிப்பார்கள். 

அவ்வாறு சிங்களவர்கள் நினைத்தால் அதற்கு ஒரு காரணமே உள்ளது : இவ்வாறான ஆதரமில்லாதா கூற்றை வைத்து 80% பௌத்தர்களை ஏமாற்றும் நோக்கமே. மேலும், அதன் மூலம் சிறுபான்மை மக்களை நசுக்கி, இறுதியில் நாட்டையும் அழிவு பாதையில் இட்டு செல்வதுமே !  

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, tulpen said:

ஆனால் இந்திய அரசிடம் இருப்பது தமிழர்கள் எமக்கு கீழ்பட்ட கீழ்ஜாதி சூத்திர‍ர்கள் என்ற பார்பன அதிகார திமிர். அது நாம் எவ்வளவு தான் கீழ்ப்படிந்து அவர்களை ஏற்றுக்கொண்டாலும்  எமது துன்பத்தில் தான் இன்பம் காணுமே தவிர என்றுமே எமக்கு சம உரிமை வழங்க ஒத்து கொள்ளாது. 

இந்திய பார்ப்பனிய மனப்பாங்கிலான அதிகார திமிர் தமிழரை ஒருபோதும் சக மனிதனாக மதித்ததில்லை அல்லது மதிக்கப் போவதில்லை. இந்தியாவால் ஈழத்தமிருக்கு ஒரு விடுதலை கிடைக்கும் என்பதான ஒரு எதிர்பார்ப்பே எம்மை இன்னும் ஒரு கீழ் நிலைக்கே இட்டுச் செல்லும்.

இந்தியாவின் இந்த மனப்பாங்கின் விளைவே விடுதலைப்புலிகள் அவர்களை எதிர்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். 
 
Share this post

Link to post
Share on other sites
9 hours ago, தமிழ் சிறி said:

இந்தியாவுக்கு இப்ப மூக்கில் 🤥 வேர்த்திருக்குமே.

ஒரு நாட்டின் ராஜதந்திரி தனது நாட்டினை பிரதிநித்துவம் செய்பவர், உடைகளில் கவனமாக இருப்பார்கள். அதுவே சம்பிரதாயமும்...

இந்த மனிசன்... போட்டு இருக்கிற டெனிம் டௌசரும், ட்ரைனிர் சூவும்.... சிவப்பு டீ சேர்ட்டும்.... போக்கெட்டுக்குள்ள கையும்... ஆள் இந்தியாவை கடுப்பேத்த வந்து நிக்கிற பாகிஸ்தான் உளவு நிறுவன ஆள் போலை கிடக்குது. 

ஒஸ்மானியா கல்லூரிக்கு போயிருக்க வேண்டியவர், சென்.பற்றிக்ஸ் கல்லூரிக்கு போயிருக்கிறார். 

எலி என்ன கோவணத்தோட திரியுது??🤔

Share this post

Link to post
Share on other sites
8 hours ago, சுவைப்பிரியன் said:

இனித்தான் தான் இருக்கு திருவிளா

என்ன‌ மூத்த‌வ‌ரே , யாழ்க‌ள‌ வாத்தியார் வ‌ருவ‌தில்லை என்ற‌ நினைப்பில் க‌ண்ட‌ ப‌டி எழுதுறீங்க‌ள் /

இனித்தான் தான் இருக்கு திருவிழா , ஊரில் பெரிய‌ ப‌டிப்பு ப‌டிச்சிட்டு வ‌ந்த‌ நீங்க‌ளே இப்ப‌டி எழுத‌லாமா , நாம‌ தான் அரைகுறை ப‌டிப்பு ப‌டிச்சோம் ஊரில் போர் சூழ‌லில் /

ஜ‌ஸ் யோக் 😁

Share this post

Link to post
Share on other sites
2 minutes ago, Nathamuni said:

ஒரு நாட்டின் ராஜதந்திரி தனது நாட்டினை பிரதிநித்துவம் செய்பவர், உடைகளில் கவனமாக இருப்பார்கள். அதுவே சம்பிரதாயமும்...

இந்த மனிசன்... போட்டு இருக்கிற டெனிம் டௌசரும், ட்ரைனிர் சூவும்.... சிவப்பு டீ சேர்ட்டும்.... போக்கெட்டுக்குள்ள கையும்... ஆள் இந்தியாவை கடுப்பேத்த வந்து நிக்கிற பாகிஸ்தான் உளவு நிறுவன ஆள் போலை கிடக்குது. 

ஒஸ்மானியா கல்லூரிக்கு போயிருக்க வேண்டியவர், சென்.பற்றிக்ஸ் கல்லூரிக்கு போயிருக்கிறார். 

எலி என்ன கோவணத்தோட திரியுது??🤔

//மறுபக்கத்தில், பாகிஸ்தான் தூதுவரோ, யாழ்ப்பாணத்தின் இந்து ஆலயத்தையும், கத்தோலிக்கப் பாடசாலையையும் தமக்கு நெருக்கமானதாக காட்டிக் கொள்ளும் நிலையில் இருக்கிறார்.

உருது மொழியில் பேஸ்புக்கில் படங்களுடன் வெளியிட்டுள்ள பதிவில் 500 ஆண்டுகள் பழைமையான இந்து ஆலயம் என்று அதனைக் குறிப்பிட்டிருக்கிறார்.//

சென் பற்றிக்ஸ், நல்லூர் எல்லாம் போனவர்....  
முஸ்லீம் பகுதிகளுக்கு செல்லாமல் இருந்தது ஆச்சரியமாக உள்ளது. :)

Share this post

Link to post
Share on other sites

ராயதந்திரி சம்பந்தர் இவரோடு சந்திப்பொன்றை நிகழ்த்த வேண்டும்..  முதலாளி கேட்டால் "தனிபட்ட கருத்து"  போல  மரியாதை நிமித்தமான சந்திப்பு என்டு அடித்து விடுக.. உடல் நிலைய காரணம் காட்டலாம் .. இதெல்லாம் அவருக்கு சொல்லியா தெரிய வேண்டும்..👍

Share this post

Link to post
Share on other sites
36 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

ராயதந்திரி சம்பந்தர் இவரோடு சந்திப்பொன்றை நிகழ்த்த வேண்டும்..  முதலாளி கேட்டால் "தனிபட்ட கருத்து"  போல  மரியாதை நிமித்தமான சந்திப்பு என்டு அடித்து விடுக.. உடல் நிலைய காரணம் காட்டலாம் .. இதெல்லாம் அவருக்கு சொல்லியா தெரிய வேண்டும்..👍

அந்தளவிற்கு ஐயா அவர்களுக்கு துணிவு இல்லை. டெல்லியின் விருப்பத்திற்கு எதிராக மூச்சும் விடார்.  

பரவாயில்லை, டெல்லியை கொஞ்சம் என்றாலும் எமது மக்களுக்காக திருப்பும் இராசதந்திரமும் இல்லை. 

சரி, அப்ப என்ன இவரிடம் இருக்கு என கேட்டுவிடாதீர்கள்.  🙂 

Share this post

Link to post
Share on other sites
23 minutes ago, ampanai said:

அந்தளவிற்கு ஐயா அவர்களுக்கு துணிவு இல்லை. டெல்லியின் விருப்பத்திற்கு எதிராக மூச்சும் விடார்.  

பரவாயில்லை, டெல்லியை கொஞ்சம் என்றாலும் எமது மக்களுக்காக திருப்பும் இராசதந்திரமும் இல்லை. 

சரி, அப்ப என்ன இவரிடம் இருக்கு என கேட்டுவிடாதீர்கள்.  🙂 

அடுத்த மெடிக்கல் செக்கப்புக்கு டெல்லி போகோணும் மெல்லோ. 😎

Share this post

Link to post
Share on other sites
5 hours ago, பழுவூர்கிழான் said:

நான் நினைக்கின்றேன் “சூடு கண்ட பூனை அடுப்பங்கரை நாடாது” என்பதனால் இருக்குமோ??!! அல்லது தமிழரின் உறவு அவசியமில்லை என்பதனாலா?!

பூனை சூடு காண்பதற்கு முன்னர் அடுப்பங்கரைப் பக்கம் வந்ததா ? 🤔

7 hours ago, ampanai said:

இந்திய கொள்கை வகுப்பாளர்களை தமிழர் தரப்பால் கணக்கிட முடியவில்லை. இல்லை, இந்திய கொள்கை வகுப்பாளர்களை சிங்கள + சீன + பாகிஸ்தான் கொள்கை வகுப்பாளர்கள் தொடர்ந்தும் மூக்குடை பட வைக்கிறார்களோ தெரியவில்லை. 

அன்று, ஒரு இடைக்கால தமிழீழ அரசை ஆண்டவர்கள் புது டெல்லியை பகைத்துக்கொள்ளவும் பல கலாச்சார  வழிகளால்  பின்னிபிணைந்தவர்கள் என்ற ரீதியிலும் அவர்கள் சீன - பாகிஸ்தான் உறவுகளை விரும்பி இருக்கவில்லை. 

பிரிவினையை மறுத்து, ஒற்றையாட்சியை மறுத்து, ஒரே நாட்டிற்குள் அதிகரா பரவலை கேட்க்கும் இன்றைய சம்பந்தர் தலைமையிலான கூட்டமைப்பும் கூட டெல்லியை மீறி எதுவும் செய்வதில்லை. 

இருந்தும், டெல்லி தமிழர்களை இன்னும் நம்ப மறுக்கின்றது. ஏன்?  

ஏனென்றால் நாங்கள் இந்தியாவுக்கு எப்போதுமே சூத்திரர்கள்தான். 😏

Share this post

Link to post
Share on other sites
3 hours ago, manimaran said:

இந்திய பார்ப்பனிய மனப்பாங்கிலான அதிகார திமிர் தமிழரை ஒருபோதும் சக மனிதனாக மதித்ததில்லை அல்லது மதிக்கப் போவதில்லை. இந்தியாவால் ஈழத்தமிருக்கு ஒரு விடுதலை கிடைக்கும் என்பதான ஒரு எதிர்பார்ப்பே எம்மை இன்னும் ஒரு கீழ் நிலைக்கே இட்டுச் செல்லும்.

இந்தியாவின் இந்த மனப்பாங்கின் விளைவே விடுதலைப்புலிகள் அவர்களை எதிர்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். 
 
சரியாகச் சொன்னீர்கள்.

நாங்கள் இந்திய சார்பு நிலைப்பாட்டால் இதுவரை அவமானப்பட்டது ஒன்றுதான் மிச்சம். தன்மானத்துடன் வாழ்வதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்குமென்றால் சிங்களத்துடன் வாழ்வது எவ்வளவோ மேல். 👍

எமது அரசியற் தலைமைகள் எல்லோருமே (சுமந்திரனைத் தவிர்த்து) இந்தியாவிடம் செஞ்சோற்றுக் கடன்பட்டவர்கள். அவர்கள் சுயமாகச் சிந்திப்பார்கள் என எதிர்பார்த்தால் அதைவிட முட்டாள்தனம் வேறெதுவும் இருக்க முடியாது 🙂

எப்போது நாம் சுயாதீனமான கொள்கை ஒன்றைக் கைக்கொள்ள முயற்சிக்கின்றோமோ அன்றுதான் எல்லோரும் எம்மைத் தேடி வருவார்கள். 👍

  • Like 1

Share this post

Link to post
Share on other sites
3 hours ago, Nathamuni said:

ஒரு நாட்டின் ராஜதந்திரி தனது நாட்டினை பிரதிநித்துவம் செய்பவர், உடைகளில் கவனமாக இருப்பார்கள். அதுவே சம்பிரதாயமும்...

இந்த மனிசன்... போட்டு இருக்கிற டெனிம் டௌசரும், ட்ரைனிர் சூவும்.... சிவப்பு டீ சேர்ட்டும்.... போக்கெட்டுக்குள்ள கையும்... ஆள் இந்தியாவை கடுப்பேத்த வந்து நிக்கிற பாகிஸ்தான் உளவு நிறுவன ஆள் போலை கிடக்குது. 

ஒஸ்மானியா கல்லூரிக்கு போயிருக்க வேண்டியவர், சென்.பற்றிக்ஸ் கல்லூரிக்கு போயிருக்கிறார். 

எலி என்ன கோவணத்தோட திரியுது??🤔

அதுதான் விடயமே. தனது பயணத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் நாடி பிடித்தறிய முயன்றிருக்கலாம். 🤔

வடக்கே கால் வைப்பதற்கு ஏதாவது ஒரு வலுவான காரணம் வேண்டும். அதற்காகத் தெரிவுசெய்யப்பட்டிருப்பதுதான் St. Patrick’s College. இல்லையேல் அவர்கள் Central College அல்லது Jaffna Hindu Collegeஐத்தான் தெரிவு செய்திருப்பார்கள். 

Share this post

Link to post
Share on other sites
3 hours ago, தமிழ் சிறி said:

//மறுபக்கத்தில், பாகிஸ்தான் தூதுவரோ, யாழ்ப்பாணத்தின் இந்து ஆலயத்தையும், கத்தோலிக்கப் பாடசாலையையும் தமக்கு நெருக்கமானதாக காட்டிக் கொள்ளும் நிலையில் இருக்கிறார்.

உருது மொழியில் பேஸ்புக்கில் படங்களுடன் வெளியிட்டுள்ள பதிவில் 500 ஆண்டுகள் பழைமையான இந்து ஆலயம் என்று அதனைக் குறிப்பிட்டிருக்கிறார்.//

சென் பற்றிக்ஸ், நல்லூர் எல்லாம் போனவர்....  
முஸ்லீம் பகுதிகளுக்கு செல்லாமல் இருந்தது ஆச்சரியமாக உள்ளது. :)

இதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை.

அவர் ஒரு இராச தந்திரியாக மட்டும் வந்திருக்கிறேன் என்று கூறுகிறார். ஒஸ்மானியாக் கல்லூரிக்குப் போயிருந்தால் இலங்கையில் நொந்து போயுள்ள முசிலிம்களுக்கு தெம்பைக் கொடுக்கும் செய்தியாக முடிந்திருக்கும் (கோட்டபாயவிற்கு வேறு அது பிடிக்காது). அதனைத் தவிர்த்து வடக்கிலுள்ள தமிழர்களைப் பார்க்க வந்திருப்பதாக நிறுவ முயற்சிக்கிறார்.🙂

மிக விரைவில் கச்ச தீவிற்கும் நெடுந்தீவுக்கும் போனாலும் ஆச்சரியப்பட முடியாது. 🙂

3 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

ராயதந்திரி சம்பந்தர் இவரோடு சந்திப்பொன்றை நிகழ்த்த வேண்டும்..  முதலாளி கேட்டால் "தனிபட்ட கருத்து"  போல  மரியாதை நிமித்தமான சந்திப்பு என்டு அடித்து விடுக.. உடல் நிலைய காரணம் காட்டலாம் .. இதெல்லாம் அவருக்கு சொல்லியா தெரிய வேண்டும்..👍

மிக விரைவில் அந்த சந்திப்பு நடக்கும். இருந்து பாருங்கள். 👍

2 hours ago, Nathamuni said:

அடுத்த மெடிக்கல் செக்கப்புக்கு டெல்லி போகோணும் மெல்லோ. 😎

கோடாரிக் காம்புகளை நாம்தானே தெரிவு செய்தோம். அவரைக் குறை கூறுவது எனக்குப் பிடிக்கவில்லை. 😂

13 hours ago, தமிழ் சிறி said:

இந்தியாவுக்கு இப்ப மூக்கில் 🤥 வேர்த்திருக்குமே.

பாகிஸ்தானின் அழைப்பை தமிழர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். 👍

Share this post

Link to post
Share on other sites
4 hours ago, Kapithan said:

இல்லையேல் அவர்கள் Central College அல்லது Jaffna Hindu Collegeஐத்தான் தெரிவு செய்திருப்பார்கள். 

சைவ பாடசாலைகளுக்கு போனால் பிரச்சனையோ?

Share this post

Link to post
Share on other sites

வடக்கு கிழக்கு மாகாண ஆளுநர் ஆன்வ்ராட் ھ ạ yhmpt அவரது அலுவலகத்தில் சந்திப்பில் பாகிஸ்தான் மாகாணத்தில் இருபக்க உறவுகள் குறித்து விரிவான உரையாடல். பாகிஸ்தான் அரசாங்கமாக இருந்த அனைத்து வகையான ஆதரவையும் நான் நம்பினேன். நன்றியுடன்.

100592525_1714260665381506_9189121034173808640_o.jpg?_nc_cat=100&_nc_sid=8bfeb9&_nc_ohc=VDNZl4dZE_MAX807BSo&_nc_ht=scontent-yyz1-1.xx&oh=ddbc2fc54ff0ee335d5fe3b0685f8901&oe=5EF9E8C2

photo?fbid=1714260655381507&set=pcb.1714

இதையும் போட்டுள்ளார் 

97259423_10217396987144779_1402650655750881280_n.jpg?_nc_cat=104&_nc_sid=730e14&_nc_ohc=kngAUORBPNQAX_lJL2d&_nc_ht=scontent-yyz1-1.xx&oh=c5d5e5e7116a40838523eb4e3913c5bf&oe=5EFCDC8F

photo?fbid=10217396987104778&set=a.11131

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, ஈழப்பிரியன் said:

சைவ பாடசாலைகளுக்கு போனால் பிரச்சனையோ?

1) Jaffna Central College சைவப் பாடசாலையல்ல. மெதடிஸ்ற் கிறீத்துவக் கல்லூரி. தனியார் பாடசாலைகளை அரசாங்கம் பொறுப்பெடுத்த பின்னர் (எனது தகவல் சரியானால்) சமய ரீதியிலான அதிபர் நியமனங்கள் இல்லை என நம்புகிறேன். 

2) Jaffna St. Patrick’s College ஐ தெரிவு செய்ததற்கு கட்டுரை ஆசிரியர் கூறிய காரணங்கள் பொருந்தலாம். 

3) யாழ்ப்பாணத்தில்  மெதுவாக சந்தடியின்றி கால் எடுத்து வைக்க கொறோனா ஒர் வாய்ப்பை வழங்கியுள்ளது.

கிடைக்கும் சந்தர்ப்பங்களை தமிழர் தரப்பு கெட்டியாகப் பிடிக்குமானால் எல்லோருமே எம்மைத் தேடி சீர் வரிசையுடன் வருவார்கள். 👍

ஆனால் நாம் எப்போதும் அடிமைச்  சேவகம் செய்து பழக்கப்பட்டவர்கள் ஆயிற்றே. வடக்கின் மனம் நோக விரும்பப் போவதில்லை. ☹️

(வடக்கத்தேயர் வடக்கத்தேயர் என்று இந்தியரை குறைவாக எடைபோடும் எமது சமூகம் வடக்கத்தயவர்களுக்கு பயப்படுவது எவ்வளவு முரண்ணகை 😀)

  • Haha 1

Share this post

Link to post
Share on other sites
19 hours ago, தமிழ் சிறி said:

சென் பற்றிக்ஸ், நல்லூர் எல்லாம் போனவர்....  
முஸ்லீம் பகுதிகளுக்கு செல்லாமல் இருந்தது ஆச்சரியமாக உள்ளது. :)

இவர் இலங்கையில் உள்ள முஸ்லிம் அல்லாதவர்களை மதிக்கிறார் என்றால் நவீன சிந்தனை கொண்ட முஸ்லிமாக இருக்க வேண்டும். மதவாத தாடியும் இல்லை முஸ்லிம் உடைக்கு பதிலாக ரிசேட் 👍

  • Haha 1

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.