Jump to content

தோழர் பாலன் பதிவுகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
•எங்கு நல்ல புத்தகங்கள் எரிக்கப்படுகிறதோ
அங்கு விரைவில் நல்ல மனிதர்களும் எரிக்கப்படுவார்கள் - சே
அவர்கள் முதலில் யாழ் நூலகத்தை எரித்தார்கள். பின்னர் ஒன்றரை லட்சம் தமிழ் மக்களை எரித்தார்கள்.
ஆனால் வேடிக்கை என்னவெனில் எரித்தவர்கள் நல்லவர்கள் என்றும் அவர்களுடன் 5 வயது முதல் சேர்ந்து வாழக் கிடைத்தது தனது பாக்கியம் என்று ஒரு தமிழ் தலைவர் கூறுகிறார்.
அதைவிட வேடிக்கை என்னவெனில், ஏன் எமது நூலகத்தை எரித்தீர்கள் என்று கேட்ட தமிழ் இளைஞர்கள் பயங்கரவாதிகளாம்.
அவர்கள் அப்படி கேட்டது வன்முறையாம். அதை தன்னால் ஒருபோதும் ஆதரிக்க முடியாது என்று அந்த தலைவர் பெருமையுடன் பேட்டி தருகிறார்.
எப்படி முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு பிரபாகரனின் பயங்கரவாதம்தான் காரணம் என்று கூறுகிறார்களோ அதுபோல் யாழ் நூலகம் எரிக்கப்பட்டதற்கும் யாராவது ஒரு தமிழர்தான் காரணம் என்று இவர்கள் எதிர்காலத்தில் கூறுவார்கள்.
அல்லது, கிருசாந்திகளும் இசைப்பிரியாக்களும் தங்களைத் தாங்களே பாலியல் வல்லுறவு செய்து இறந்தார்களே அதே மாதிரி யாழ் நூலகமும் தனக்கு தானே தீ வைத்து எரிந்தது என்றும்கூட இவர்கள் கூறுவார்கள்.
அது உண்மைதான் என்று நம்புவதற்கும் அதனை பிரச்சாரம் செய்வதற்கும் நம் மத்தியிலும் நாலு பேர் இருப்பதுதான் எமது இனத்தின் சாபக்கேடு.
குறிப்பு - இன்று யாழ் நூலகம் சிங்கள அமைச்சர் மற்றும் பொலிசாரால் எரிக்கப்பட்ட தினம் ஆகும். (31.05.1981)
படம் இதைக் கொண்டிருக்கலாம்: வானம் மற்றும் வெளிப்புறம்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
விகடன் குழுமம் தனது 176 ஊழியர்களை வேலை நீக்கம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது.
விகடனின் இந்த ஈவு இரக்கமற்ற செயலைக் கண்டித்து பல இலக்கியவாதிகள் தமது விருதை திருப்பியளித்து வருகின்றனர்.
அந்த வகையில் ஈழத்து தமிழ் இலக்கியவாதியான சோபாசக்தி தனக்கு விகடன் அளித்த 3 விருதுகளையும் திருப்பி அனுப்புவதாக அறிவித்துள்ளார்.
எழுத்தாளர்களுக்கு ஆதரவாக சோபாசக்கி தமது விருதுகளை திருப்பி அளித்தது ஈழத் தமிழர்களுக்கு பெருமை சேர்க்கிறது.
அனைத்து தமிழ் மக்களும் விகடன் குழுமத்தை கண்டிப்பதோடு வேலை நீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு ஆதரவாக இருப்போம்.
99431453_10223101548748360_2103428321608
 
 
100678755_10223101549668383_817072932989
 
 
 
155Nad Esan, Eelapriyan Balan மற்றும் 153 பேர்
 
42 கருத்துக்கள்
24 பகிர்வுகள்
Z0wClVfQaAf.pngவிரும்பு
vYzaawXiKy4.png
 
கருத்துத் தெரிவி
34pwqAKhD3c.png
பகிர்
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோழர் பாலனின் கருத்துக்களை.... முகநூலில் வாசித்து இருக்கின்றேன்.
ஒவ்வொரு கருத்தும்... நெற்றிப் பொட்டில் அடித்த மாதிரி இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 ம · பொது
IBOXrWGhcIu.png
 
•அடிமையாக வீழ்ந்து கிடப்பதைவிட
எழுந்து நின்று போராடி மடிவது மேல் !
இரண்டு கொலைகள். இரண்டும் பொலிசாரால் நடத்தப்பட்டிருக்கிறது
.
ஒன்று அமெரிக்காவில் அமெரிக்க பொலிசாரால் நடத்தப்பட்டிருக்கிறது.
மற்றது இலங்கையில் கொக்குவிலில் இலங்கை பொலிசாhhல் நடத்தப்பட்டிருக்கிறது.
அமெரிக்காவில் கொல்லப்பட்டவர் கறுப்பு இனத்தவர். அவரின் பெயர் ஜோர்ஜ் பிளைட்
இலங்கையில் கொல்லப்பட்டவர்கள் இருவர் (20.10.2016) அவர்கள் தமிழர்கள் . அவர்கள் மாணவர்கள். அவர்களின் பெயர் சுலக்சன் மற்றும் கஜன்.
அமெரிக்காவில் நடந்தது நிற ஒடுக்குமுறை என்றும் அதற்கு எதிராக அமெரிக்காவில் மட்டுமன்றி ஜரோப்பாவிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன.
ஆனால் இலங்கையில் தமிழ் மாணவர்கள் கொல்லப்பட்டது இன ஒடுக்குமுறை என்று கூறுவதற்கோ அல்லது அவர்களுக்கு நீதி பெறுவதற்காக போராடுவதற்கோ தமிழ் தலைவர்கள் இன்றுவரை தயாராக இல்லை.
கறுப்பு இனத்தவரான ஒபாமா அமெரிக்க அரசின் இக் கொலையைக் கண்டித்ததோடு தன்னால் சகித்துக்கொள்ள முடியவில்லை என்கிறார். இத்தனைக்கும் அவர் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி.
ஆனால் தமிழ் தலைவர் சுமந்திரன் தமிழ் மாணவர்களை கொலை செய்தவர்களை நல்லாட்சியினர் என்றும் அவர்களுடன் சேர்ந்து வாழ தனக்கு கிடைத்தது பெரும் பாக்கியம் என்றும் கூறுகிறார்.
அமெரிக்காவில் கறுப்பு இனத்தவர்கள் சிறுபான்மையினர். ஆயினும் அவர்கள் தமது ஒடுக்கு முறைக்கு எதிராக துணிந்து போராடுகிறார்கள். அவர்கள் அமெரிக்காவில் பொலிசார் முன்னிலையிலேயே அமெரிக்க தேசியக்கொடியை தீயிட்டு கொளுத்துகிறார்கள்.
ஆனால் எமது தலைவர் சம்பந்தர் ஜயா இலங்கை தேசியக்கொடியை அவமதிக்கக்கூடாது என்றும் சிங்கள மக்களுக்கு கோபம் வராமல் நடந்து கொள்ள வேண்டும் என்றும் போதிக்கிறார்.
கறுப்பு இன மக்களின் நிற ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்திற்கு அமெரிக்க வெள்ளை இன மக்களின் ஆதரவு மட்டுமன்றி சர்வதேச ஆதரவும் கிடைத்து வருகிறது.
ஆனால் தமிழ் மக்களின் இன ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்திற்கு இன்னும் இத்தகைய ஆதரவு ஏன் கிடைக்கவில்லை?
குறிப்பு - கறுப்பு இன மக்களின் போராட்டத்தை சுமந்திரன் ஏற்றுக் கொள்கிறாரா? அல்லது அதையும் வன்முறை என்றும் தன்னால் ஒருபோதும் எற்றுக்கொள்ள முடியாது என்று கூறப்போகிறாரா?
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பெருமாள் said:
விகடன் குழுமம் தனது 176 ஊழியர்களை வேலை நீக்கம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது.
விகடனின் இந்த ஈவு இரக்கமற்ற செயலைக் கண்டித்து பல இலக்கியவாதிகள் தமது விருதை திருப்பியளித்து வருகின்றனர்.
அந்த வகையில் ஈழத்து தமிழ் இலக்கியவாதியான சோபாசக்தி தனக்கு விகடன் அளித்த 3 விருதுகளையும் திருப்பி அனுப்புவதாக அறிவித்துள்ளார்.
எழுத்தாளர்களுக்கு ஆதரவாக சோபாசக்கி தமது விருதுகளை திருப்பி அளித்தது ஈழத் தமிழர்களுக்கு பெருமை சேர்க்கிறது.
அனைத்து தமிழ் மக்களும் விகடன் குழுமத்தை கண்டிப்பதோடு வேலை நீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு ஆதரவாக இருப்போம்.
99431453_10223101548748360_2103428321608
 
 
100678755_10223101549668383_817072932989
 
 
 
 
 
 
155Nad Esan, Eelapriyan Balan மற்றும் 153 பேர்
 
42 கருத்துக்கள்
24 பகிர்வுகள்
Z0wClVfQaAf.pngவிரும்பு
vYzaawXiKy4.png
 
கருத்துத் தெரிவி
34pwqAKhD3c.png
பகிர்
 

சோபாசக்தியின் செயலைப் பாராட்டாமல் பலர் நக்கல் நளினம்செய்து வருகின்றனர். அவ்வளவும் எரிச்சல். 

எல்லாவற்றையும் தூக்கிப்பிடித்து முகநூலில் பதிவுபோடும் எம்மவர் கூட இந்த கறுப்பின மனிதனின் கொலையைக் கண்டிக்கவில்லை. எத்தனை கொடூரமாக முழங்காலால் மிதித்துக் கொலை. நாமும் கறுப்பினத்தவர்தான் என்பதை நாம் மறந்துவிட்டோம்.

39 minutes ago, பெருமாள் said:
1 ம · பொது
IBOXrWGhcIu.png
 
•அடிமையாக வீழ்ந்து கிடப்பதைவிட
எழுந்து நின்று போராடி மடிவது மேல் !
இரண்டு கொலைகள். இரண்டும் பொலிசாரால் நடத்தப்பட்டிருக்கிறது
.
ஒன்று அமெரிக்காவில் அமெரிக்க பொலிசாரால் நடத்தப்பட்டிருக்கிறது.
மற்றது இலங்கையில் கொக்குவிலில் இலங்கை பொலிசாhhல் நடத்தப்பட்டிருக்கிறது.
அமெரிக்காவில் கொல்லப்பட்டவர் கறுப்பு இனத்தவர். அவரின் பெயர் ஜோர்ஜ் பிளைட்
இலங்கையில் கொல்லப்பட்டவர்கள் இருவர் (20.10.2016) அவர்கள் தமிழர்கள் . அவர்கள் மாணவர்கள். அவர்களின் பெயர் சுலக்சன் மற்றும் கஜன்.
அமெரிக்காவில் நடந்தது நிற ஒடுக்குமுறை என்றும் அதற்கு எதிராக அமெரிக்காவில் மட்டுமன்றி ஜரோப்பாவிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன.
ஆனால் இலங்கையில் தமிழ் மாணவர்கள் கொல்லப்பட்டது இன ஒடுக்குமுறை என்று கூறுவதற்கோ அல்லது அவர்களுக்கு நீதி பெறுவதற்காக போராடுவதற்கோ தமிழ் தலைவர்கள் இன்றுவரை தயாராக இல்லை.
கறுப்பு இனத்தவரான ஒபாமா அமெரிக்க அரசின் இக் கொலையைக் கண்டித்ததோடு தன்னால் சகித்துக்கொள்ள முடியவில்லை என்கிறார். இத்தனைக்கும் அவர் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி.
ஆனால் தமிழ் தலைவர் சுமந்திரன் தமிழ் மாணவர்களை கொலை செய்தவர்களை நல்லாட்சியினர் என்றும் அவர்களுடன் சேர்ந்து வாழ தனக்கு கிடைத்தது பெரும் பாக்கியம் என்றும் கூறுகிறார்.
அமெரிக்காவில் கறுப்பு இனத்தவர்கள் சிறுபான்மையினர். ஆயினும் அவர்கள் தமது ஒடுக்கு முறைக்கு எதிராக துணிந்து போராடுகிறார்கள். அவர்கள் அமெரிக்காவில் பொலிசார் முன்னிலையிலேயே அமெரிக்க தேசியக்கொடியை தீயிட்டு கொளுத்துகிறார்கள்.
ஆனால் எமது தலைவர் சம்பந்தர் ஜயா இலங்கை தேசியக்கொடியை அவமதிக்கக்கூடாது என்றும் சிங்கள மக்களுக்கு கோபம் வராமல் நடந்து கொள்ள வேண்டும் என்றும் போதிக்கிறார்.
கறுப்பு இன மக்களின் நிற ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்திற்கு அமெரிக்க வெள்ளை இன மக்களின் ஆதரவு மட்டுமன்றி சர்வதேச ஆதரவும் கிடைத்து வருகிறது.
ஆனால் தமிழ் மக்களின் இன ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்திற்கு இன்னும் இத்தகைய ஆதரவு ஏன் கிடைக்கவில்லை?
குறிப்பு - கறுப்பு இன மக்களின் போராட்டத்தை சுமந்திரன் ஏற்றுக் கொள்கிறாரா? அல்லது அதையும் வன்முறை என்றும் தன்னால் ஒருபோதும் எற்றுக்கொள்ள முடியாது என்று கூறப்போகிறாரா?

எல்லாவற்றையும் தூக்கிப்பிடித்து முகநூலில் பதிவுபோடும் எம்மவர் கூட இந்த கறுப்பின மனிதனின் கொலையைக் கண்டிக்கவில்லை. எத்தனை கொடூரமாக முழங்காலால் மிதித்துக் கொலை. நாமும் கறுப்பினத்தவர்தான் என்பதை நாம் மறந்துவிட்டோம்.

இவரின் இறப்புக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

  

30 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எல்லாவற்றையும் தூக்கிப்பிடித்து முகநூலில் பதிவுபோடும் எம்மவர் கூட இந்த கறுப்பின மனிதனின் கொலையைக் கண்டிக்கவில்லை. எத்தனை கொடூரமாக முழங்காலால் மிதித்துக் கொலை. நாமும் கறுப்பினத்தவர்தான் என்பதை நாம் மறந்துவிட்டோம்.

இவரின் இறப்புக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

இத்தனை ஆயிரம் தமிழ் மக்களை சொறீலங்கா அரசும் படைகளும் கொன்ற போதும்.. ஒரு கறுப்பனும் அழவில்லைத்தானே..??!

ஆட்சியாளர்களும் அதிகார வர்க்கமும்.. அவர்களின் ஏவல் இயந்திரங்களும் எங்குமே கொடூரமாகத்தான் இருக்கிறார்கள்.. அதனை பொதுவாகக் கண்டிக்க எல்லோரும் கற்றுக்கொள்ள வேண்டும். ஈழத்தில் நடந்தால் மெளனம் காப்பதும்.. அமெரிக்காவில் நடந்தால்.. கொதித்தெழுவதும்..  அல்ல.. மனிதாபிமானம்.

முகநூலில் ஒரு படம் பார்த்தேன்.. சொறீலங்கா கொடியை போர்த்திக் கொண்டு ஒரு சிங்களப் பெண்.. இப்படி எழுதிய அட்டையை பிடித்துள்ளார்..

BLACK LIFE MATTER

அதே பெண்ணிடம்.. what about Tamil life in Sri Lanka என்று கேட்க தமிழனும் இல்லை.. ஒரு கறுப்பனும் இல்லை. 

===================

சோபா சுத்தியரின் திருகுதாளங்களை நீங்கள் முகநூலில் படிக்கவில்லை போலும்.

விருதை திருப்பி கொடுப்பாராம்.. ஆனால்.. விகடன் வழங்கிய.. பணத்தைக் கொடுக்கமாட்டாராம்..??! விகடன் விருதுக்கு வழியில்லாமலா.. பணி நீக்கம் செய்கிறது. மூச்சுக்கு முந்நூறு தடவை கறுப்புச் சட்டையும் போட்டுக்கிட்டு பகுத் தரிவு பேசும் இவர்களுக்கு.. கொரோனா கால நிதி நெருக்கடி தெரியாதா..??! அதன் விளைவுகளை உலகம் உணர்வது தெரியாதா..?! விகடன் ஊழியர்களுக்கு உதவனும் என்றால்.. விகடனுக்கு ஒரு நிதிப்பங்களிப்பை செய்து அவர்களைக் காப்பாற்றலாமே..??! அதுதானே பகுத்தறிவு. விருதை திருப்பி கொடுப்பதால்.. இன்னும் திருப்பிக் கொடுக்கவில்லையாம்.. அது வேறு கதை.. எப்படி விகடன் தனது நிதி நெருக்கடியில் இருந்து மீள முடியும்..??!

சும்மா வெட்டிக்கு புகழ் தேடும்.. ஒரு அறிவிப்பே இது. இவருக்கு விகடன் விருது வழங்கியதே பலருக்குத் தெரியாத சங்கதி. இப்ப அதை தெரியப்படுத்தி இருக்கிறார். இவரின் நோக்கமே இது தான். ஓசி விளம்பரம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

தோழர் பாலனின் கருத்துக்களை.... முகநூலில் வாசித்து இருக்கின்றேன்.
ஒவ்வொரு கருத்தும்... நெற்றிப் பொட்டில் அடித்த மாதிரி இருக்கும்.

பாலனுடைய பார்வை எப்போதும் Think outside the box  வகைகள் தமிழில் ஒரு பிரச்னையை வேறு விதமாக அணுகுதல் பார்த்தல் என்று வரும் என்று நினைக்கிறன் .பலர் இவரின் பதிவுகளை எடுத்து தங்கள் பெயரை போட்டு கெத்து  காட்டுவது வழமை .

ஒரு அடிமை தனது அடிமைத்தனத்திற்கு எதிராக போராடுவதே இன்னொரு அடிமைக்கு செய்யும் உதவியாகும் - தோழர் தமிழரசன்.
கறுப்பு இன ஒடுக்குமுறைக்கு எதிராக தனது அதரவைத் தெரிவிக்கும் இந்த சிங்கள பெண்ணின் உணர்வுகளை நான் மதிக்கிறேன்.
ஆனால் இவர் முதலில் செய்ய வேண்டியது தான் போர்த்தியிருக்கும் சிங்கக் கொடியின் கீழ் கொல்லப்பட்ட தமிழ் மக்களுக்கு தனது ஆதரவை தெரிவிக்க வேண்டும்.
இலங்கை இனவெறி அரசின் இனப்படுகொலையில் பலியான தமிழ் மக்களுக்கு ஆதரவு தெரிவிப்பதே கறுப்பு இன மக்களுக்கான உண்மையான ஆதரவாக இருக்கும்.
மாறாக, இலங்கையில் இனப்படுகொலையை ஆதரித்தக்கொண்டு அல்லது கண்டுகொள்ளாமல் இருந்துகொண்டு அமெரிக்காவில் நிற ஒடுக்குமுறைக்கு எதிராக குரல் கொடுப்பது வெறும் வேஷம் ஆகும். அதை அந்த கறுப்பு இன மக்களே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
ஒருபுறம் சிறையில் உள்ளவர்களின் விபரங்களை சுமந்திரன் பிரதமரிடம் கையளித்தார் என்று சுமந்திரன் விசுவாசிகள் படம் போடுகின்றனர்.
இன்னொருபுறம் அமைச்சர் டக்ளஸ் சிறையில் உள்ளவர்களின் விபரங்களை கையளித்தார் என்று ஈபிடிபியினர் படம் போடுகின்றனர்.
இங்கு ஆச்சரியம் என்னவெனில் கடந்த நான்கரை ஆண்டுகளாக சுமந்திரனின் நல்லாட்சி அரசுதானே இருந்தது. அப்போது ஏன் அவர் கொடுக்கவில்லை?
இப்போதுகூட இரு வாரங்களுக்கு முன்னர் சிங்கள ராணுவ வீரரை விடுதலை செய்தமைக்கு எதிராக வழக்கு போடப்போவதாக கூறினார்.
அப்புறம் பார்த்தால் இன்றுபோய் பிரதமரை சந்தித்து கைதிகள் விபரம் கையளித்து பேசியதாக கூறுகிறார்.
சரி. பரவாயில்லை. ஆனால் இன்னும் ஆச்சரியம் என்னவெனில் சிறையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விபரம் உண்மையில் பிரதமரிடம் இல்லையா?
அவர்கள் இலங்கை அரசின் சிறையில்தானே அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அப்படியென்றால் பிரதமர் விரும்பினால் ஒரு போன்கோலில் சிறைத்துறை அமைச்சரிடம் விபரம் கேட்டுப் பெறலாம்தானே?
இங்கு வேடிக்கை என்னவெனில் சிறையில் சிங்கள ராணுவ வீரர் இருப்பதை தெரிந்து விடுதலை செய்த பிரதமருக்கு தமிழ் கைதிகள் இருப்பது தெரியவில்லையா?
அல்லது, எந்தவொரு கட்சியிடமும் விபரம் கேட்டுப்பெறாமல் சிங்கள ராணுவ வீரரை விடுதலை செய்த பிரதமருக்கு தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு மட்டும் யாராவது விபரம் கொடுக்க வேண்டுமா?
சிறையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் பற்றிய விபரம் எதுவும் தெரியாமல்தானா ஜனாதிபதி தேர்தலின்போது ஆட்சிக்கு வந்தால் அவர்களை விடுதலை செய்வேன் என மகிந்தா வாக்குறுதி அளித்திருந்தார்?
என்னவோ போங்கடா, உங்களின் அரசியல் நாடகத்திற்கு அந்த அப்பாவி தமிழ் அரசியல் கைதிகள்தான் கிடைத்தார்களா?
படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள், பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர் மற்றும் உட்புறம்
 
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
#இலங்கை_அரசு தமிழீழ அரசாங்கமான #தமிழீழ_விடுதலைப்புலிகளிடம் வெள்ளநிவாரணம் கோரியது....!
என்ற செய்தியை அறிவீர்களா.....?
நன்றிகெட்ட சிங்கள மக்கள்..!
உண்மையிலேயே இது நடந்தது 2003ஆம் ஆண்டு மே மாதம் இதே நாட்களில்தான்.
இன்று பாதிப்புக்குள்ளான இதே பிரதேசங்கள்தான் அன்றும் வெள்ளத்தில் மூழ்கின. வரலாறு கண்டிராத பேய் மழை பொழிந்து மிகப்பெரிய மனிதப் பேரவலத்தை இவ்விடங்களில் ஏற்படுத்தியிருந்தது.
அப்போதைய வானிலைத் தரவுகளின்படி #Ganapenigola_Iranganie_Estate எனும் இடத்தில் 899mm மழை வீழ்ச்சி பதிவாகியது.
எட்டு இலட்சம் மக்களை இடம்பெயர வைத்த இந்த பேரனர்த்தம் 260 மக்களின் உயிர்களைக் காவுவாங்கியது.
ஏராளமான பகுதிகள் வெள்ளத்தால் மூடப்பட்டன. 2003 may 17, 18 ஆகிய தினங்களிலேயே இது நிகழ்ந்தது.
அப்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவி சந்திரிகா சனாதிபதியாக இருக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கியதேசியக் கட்சி ஆட்சியில் விடுதலைப்புலிகளுடனான சமாதான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட காலம் அது.
வெள்ள நிவாரண ஒருங்கிணைப்பாளராக அப்போதைய அமைச்சருமான கரு ஜெயசூரிய அவர்கள் நியமிக்கப்பட்டிருந்தார்.
இவ்வாறான சூழ்நிலையில்தான் விடுதலைப்புலிகள் இந்த மக்களுக்கு உதவும் பொருட்டு வெள்ள நிவாரணக் குழு ஒன்றை நியமித்தார்கள்.
இதன்போதுதான் வெள்ள நிவாரண ஒருங்கிணைப்பாளராக இருந்த அப்போதைய அமைச்சர் கரு ஜெயசூரிய விடுதலைப் புலிகளிடம் ஒரு கோரிக்கையை முன்வைத்தார்.
“இலங்கை அரசாங்கம் எதிர்பாராதளவு இடர்பாடுகளைச் சந்தித்துள்ளது. இப்படியொரு பேரனர்த்தம் நிகழும் என்பதை நாங்கள் நினைத்தும் பார்க்கவில்லை. இங்குள்ள பாதிக்கப்பட்ட மக்கள் தமது முக்கியமான பொருட்கள் பலவற்றை இழந்துள்ளனர்.
அவசரமாகவும் அவசியமாகவும் உலர் உணவுப் பொருட்களும் உடுக்க உடைகளும் தேவைப்படுகின்றன. முடிந்தால் அனுப்பி வைக்கவும்” என்ற கோரிக்கை விடுதலைப் புலிகளிடம் முன்வைக்கப்பட்டது.
ஆனால் அன்றைய காலம் வடகிழக்கு தமிழ் மக்கள் போரால் மிகவும் பாதிப்புக்குள்ளாகி இருந்த காலமாகும். அரசாங்கம் விடுத்த கோரிக்கைக்கேற்ப தென்னிலங்கை மக்களுக்காய் தம்மால் இயன்ற உணவு, உடை போன்றவற்றை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளிடம் கையளித்தனர்.
இவற்றைச் சுமந்துகொண்டு வன்னியிலிருந்து பாரவூர்திகள் தென்னிலங்கை நோக்கிப் பறந்தன.
அப்போதும் நல்லிணக்கம் பற்றிய கதைகள்தான் சென்றுகொண்டிருந்தது.
#Daily_News பத்திரிகையின் ஊடகவியலாளர் #உடித_குமாரசிங்க இதனை வைத்து ஒரு கட்டுரை எழுதியிருந்தார்.
இதுவரை இல்லாத ஒரு நல்லிணக்கச் சமிக்கையாக இதை வர்ணித்திருந்தார்.
#An_unprecedented_gesture_signifying_goodwill_and_reconciliation என தலைப்பிட்டு எழுதப்பட்டது. இதை இன்று பலரும் மறந்திருப்பர்...!
ஆனால் அன்றைய நாட்களில் ஒரு நெகிழ்வுமிக்க சம்பவமாக இது பேசப்பட்டது. முக்கியமாக தென்னிலங்கை ஊடகங்களில் பேசப்பட்டது.
போரின் காயங்களிலிருந்து மீண்டெழாத நிலையிலும் சக மனிதர்களுக்காக தமது பங்கில் சரிபாதியை தந்துதவிய வடகிழக்கு தமிழ் மக்களின் மனிதாபிமானம் சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்குமான சிறந்த நல்லிணக்க சமிக்கையாக இருக்குமென கூறப்பட்டது.
இந்த விடயத்தில் #ஸ்ரீலங்கா_தமிழீழம் எனும் இரு நாடுகளின் நல்லுறவு பற்றிய பொதுப்பார்வை ஒன்று அப்போது எழுந்திருந்தது...!
அனைத்தும் முறிந்து மஹிந்த ராஜபக்ச சனாதிபதியாக வந்ததன் பிறகு புலிகள் உதவிய-பாதிப்புக்கு உள்ளாகிய இதே பிரதேசங்கள்தான் மஹிந்தவின் மிகப்பெரும் ஆதரவுக் கோட்டைகள் ஆகின.
போர் தொடங்கி தமிழ் மக்களும் விடுதலைப் புலிகளும் அழிக்கப்பட்ட சம்பவத்தை நன்றி மறந்து வெற்றி கொண்டாடியதும் இந்த சிங்கள மக்கள் தாண்.....!!!
மேற்கொண்டு எழுத முடியவில்லை,
ஆனால் நடந்த உண்மைகளைச் சொல்லாமல் கடந்து செல்லவும் முடியவில்லை., அன்று எதிர்பார்க்கப்பட்ட நல்லிணக்கத்தை இன்றும் எதிர்பார்ப்போடு நம்பிக்கொண்டுதான் இருக்கிறோம்...!
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 3 பேர், பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர் மற்றும் வெளிப்புறம்

•திமுக உடன் பிறப்புகளுக்கு!
கலைஞர் கருணாநிதி தத்தெடுத்த அகதிச் சிறுவன் மணி எங்கே என்று கேட்டு ஒரு பதிவு இட்டிருந்தேன்.
அப்போது பல திமுக உடன் பிறப்புகள் நான் பொய் கூறுவதாகவும் போராட்டத்தில் பங்கெடுக்காமல் ஓடி வந்து லண்டனில் வாழ்வதாகவும் எழுதினார்கள்.
அத்தகைய திமுக உடன் பிறப்புகள் இப் பதிவு நான் யார் என்பதை அறிந்து கொள்ள உதவும்; என நம்புகிறேன்.
நான் சென்னையில் வளசரவாக்கம் என்ற இடத்தில் தங்கியிருந்தபோது 12.03.1991 யன்று இரவு இரண்டு மணிக்கு கியூ பிராஞ் டிஎஸ்பி ராமையா என்னை பிடித்துச் சென்றார்.
மத்திய புலாய்வுதுறை (ஜபி) பிடிக்கச் சொன்னதால்தான் தான் என்னைப் பிடிப்பதாகவும் நாளை காலை அவர்கள் என்னுடன் பேசுவார்கள் என்றும் டிஎஸ்பி ராமையா கூறினார்.
அடுத்த நாள் காலை மந்தைவெளி கியூ பிரிவு அலுவலகத்தில் வைத்து இரண்டு ஜபி அதிகாரிகள் என்னிடம் பேசினார்கள். அவர்கள் சுற்றிவளைக்காமல் நேரிடையாக விடயத்திற்கு வந்தார்கள்.
கலைஞர் கருணாநிதிக்கு எதிரான சதித்திட்டத்திற்கு என்னை ஒத்துழைக்கும்படியும் அப்படி ஒத்துழைத்தால் 50 லட்சம் ரூபா பணம் தருவதாகவும் விரும்பிய வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதாகவும் கூறினார்கள்.
ஒத்துழைக்க மறுத்தால் வழக்கு போட்டு பல வருடங்கள் என்னை சிறையில் அடைப்போம் என்றும் மிரட்டினார்கள். ஆனாலும் நான் சம்மதிக்கவில்லை.
இவையாவும் அங்கு கியூ பிராஞ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த திமுக ஆதரவாளரான ஏகாம்பரம் மூலம் கலைஞரும் உடனுக்குடன் அறிந்து கொண்டிருந்தார்.
இப்போது இதை நான் கூறும்போது திமுக உடன் பிறப்புகள் நம்பமாட்டார்கள் என்று தெரியும். இதோ அவர்களுக்கான ஆதாரம்.
30.08.1995 யன்று திண்டுக்கல் நீதிமன்றத்தில் நான் வாக்குமூலம் அளித்திருந்தேன். அப்போதே இதனை நான் நீதிபதியிடம் தெரிவித்திருக்கிறேன். இதோ அந்த வரிகள்,
“12.03.1991 அன்று இரவு இரண்டுமணியளவில் நான் தங்கியிருந்த வீட்டிலிருந்து கியூ பிரிவு போலீசார் என்னைப்பிடித்துச் சென்றனர். உதவிக்கண்காணிப்பாளர், ,ராமையா தலைமையில் வந்த கியூ பிரிவு போலீசார் என்னைப்பிடித்துச் சென்று மந்தைவெளியிலுள்ள கியூ பிரிவு அலுவலகத்தில் வைத்தனர். அதன்பின் அங்கு மத்திய உளவுப்படையினைச் சேர்ந்த ஜ.பி அதிகாரிகளினால் தமது சதித்திட்டத்திற்கு ஒத்துழைக்கும்படி மிரட்டப்பட்டேன். கலைஞர் கருணாநிதி அவர்களின் தலைமையிலான தி.மு.க அரசு மத்திய அரசினால் "டிஸ்மிஸ்" செய்யப்பட்டதால் மக்கள் மத்தியில் அக்கட்சிக்கு உருவான அனுதாப ஆதரவை உடைக்கும் வண்ணம், தி.மு.க கட்சியை ஒரு வன்முறைக் கட்சியென்று மக்கள் மத்தியில் காட்டுவதற்கு, மத்திய உளவுப்படையானது சதித்திட்டம் தீட்டியிருந்தது. இச்சதித்திட்டத்திற்கு ஒத்துழைக்கும்படி என்னை மிரட்டியது. நான் இதற்கு இணங்க மறுத்தேன். இதனால் கோபமடைந்த மத்திய மாநில உளவுப் படையினர், அவர்கள் குறிப்பிட்டது போன்றே என்மீது பொய் வழக்குப் போட்டதோடு இத்தனை வருடங்களாக அடைத்துவைத்து கொடுமைப்படுத்தி வருகின்றனர். அவர்களின் சதித்திட்டத்திற்கிணங்க மறுத்தமையினாலேதான் நான் பழிவாங்கப்படுகிறேன்.”
குறிப்பு - எனது இவ் நீதிமன்ற வாக்குமூலம் “சிறப்புமுகாம் என்னும் சித்திரவதை முகாம்” என்னும் நூலில் பக்கம் 88ல் இடம் பெற்றுள்ளது.
கீழே உள்ள புகைப்படம் மதுரை சிறையில் இருந்து திண்டுக்கல் நீதிமன்றத்திற்கு என்னை அழைத்துச் செல்லும்போது எடுக்கப்பட்ட படம் ஆகும். (1995)
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
தீ பரவட்டும்!
உலகில் இதுவரை பற்றி எரிந்த பெரு நெருப்பெல்லாம் ஒரு தீப் பொறியில் இருந்தே ஆரம்பித்தது.
பிரபாகரன் பயங்கரவாதி. எனவே அவர் மகனும் பயங்கரவாதி என்று எந்த சிறுவனை சுட்டுக் கொன்றார்களோ அந்த சிறுவன் இன்று தமிழ்நாட்டில் பெட்டிக் கடைவரை வந்துவிட்டான்.
குறிப்பு - இட்லிக்குள் கறி வந்தது எப்படி என்று கேள்வி கேட்பவர்கள் பாலச்சந்திரன் எப்படி பெட்டிக்கடைவரை வந்தான் என்பதையும் ஒருமுறை கேட்கவேண்டும்.
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்
 
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 ம
 · பொது
IBOXrWGhcIu.png
 
•நாம் ஊமையாக இருக்கும்வரை
உலகம் செவிடாகவே இருக்கும்!
வாழ்க்கையில் ஒரு புத்தகத்தைக்கூட வாசிக்காதவன் எல்லாம் யாழ் நூல் நிலையம் எரித்ததை நினைவு கூர்கிறான் என ஒருவர் கிண்டலாக எழுதியிருந்தார்.
என்னடா இது? இந்த மகிந்த ராஜபக்சாவின் விசுவாசிக்கு ஏன் இத்தனை எரிச்சல் ஏற்படுகிறது என்று கொஞ்சம் விசாரித்து பார்த்தேன்.
1981ம் ஆண்டு எரிக்கப்பட்டதை இப்பவும் தமிழர்கள் நினைவு கூர்கிறார்களே என்பதைவிட இம்முறை வழக்கத்தைவிட அதிகளவில் நினைவு கூர்கிறார்களே என்ற எரிச்சல் அது என்பதை புரிந்து கொண்டேன்.
ஆம். உண்மைதான். இந்த கொரோனா நெருக்கடிகளுக்கு மத்தியிலும் குறிப்பாக புலம்பெயர்ந்த தமிழர்கள் பல்வேறு வடிவங்களில் நினைவு கூர்ந்துள்ளார்கள்.
அதுவும் ஜெர்மனியில் யூதர்களின் நூல்கள் எரிக்கப்பட்ட அதே சதுக்கத்தில் யாழ் நூல் நிலையம் எரிக்கப்பட்டதை தமிழர்கள் நினைவு கூர்ந்துள்ளனர்.
இங்கு ஆச்சரியம் என்னவெனில் இந்த நிகழ்வில் அதிகளவு அடுத்த சந்ததியினரான இளையவர்கள் பங்கு பற்றியுள்ளனர்.
எந்த சந்ததி தமிழை மறந்துவிடும் என்றார்களோ, எந்த சந்ததி தமது வேர்களை தேடமாட்டார்கள் என்று கூறினார்களோ அந்த சந்ததி பங்குபற்றியிருக்கிறது.
இந்த அடுத்த சந்ததியினர் தாம் வாழும் நாடுகளில் உள்ள மக்கள் என்ன மொழி பேசுகிறார்களோ அந்த மொழியில் தமக்குரிய நீதியை கோருகிறார்கள்.
எனவே இனி உலகம் செவிடாக இருக்க முடியாது. ஏனெனில் எமது அடுத்த சந்ததி பேச ஆரம்பித்து விட்டார்கள்.
மிக விரைவில் எமக்குரிய பதில் கிடைக்கும் என்ற நம்பிக்கை உருவாகிறது.
இதனால்தான் இலங்கை இந்திய அரசுகளின் விசுவாசிகளுக்கு எரிச்சல் ஏற்படுகிறது.
படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள், பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர், கூடைப்பந்து அரங்கம் மற்றும் வெளிப்புறம்
 
 
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
அவர் தன்னை உலகத் தமிழினத் தலைவர் என்றார்
ஆனால் ஈழத்தில் தமிழினம் அழிக்கப்பட்டபோது அது இன்னொரு நாட்டு விடயம் என்றார்.
அவர் தன்னை கடலில் வீசி எறிந்தால் கட்டுமரமாகி வந்து தமிழனுக்கு உதவுவேன் என்றார்.
ஆனால் ஈழத்தில் தமிழன் தத்தளித்தபோது கட்டு மரமாகி வந்து உதவுவார் என நம்பினோம். கடைசிவரை அவர் வரவேவில்லை.
3 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்து போர் நிறுத்தப்பட்டுவிட்டது என்றார்.
ஆனால் அதன் பின்பும் தமிழர் கொல்லப்படுகிறார்களே என்று கேட்டபோது “மழை விட்டும் தூவானம் விடவில்லை” என்றார்.
பொதுவாக பதவி கொடுக்காதவர்களுக்கு தன் இதயத்தில் இடம் கொடுப்பதாக கூறுவார்.
ஆனால் தத்தெடுத்த அகதிச் சிறுவன் மணிக்கு அந்த இதயத்திலும் இடங்கொடுக்காமல் கொன்று விட்டார்.
பக்கத்தில் மனைவி, துணைவி என்று இரண்டு பேரை வைத்துக் கொண்டு கொஞ்சம்கூட கூச்சமில்லாமல் ஒருவனுக்கு ஒருத்தி என்பதே தமிழன் பண்பாடு என்று பேசுவார்.
ஈழத்தில் பல்லாயிரம் தமிழர் மாண்டிருக்க உங்கள் பிள்ளைகளின் பதவி எற்பு விழா தேவையா என்று கேட்டால் சங்க இலக்கியத்தில் ஒரு வீட்டில் செத்தவீடு நடக்கும்போது பக்கத்து வீட்டில் கலியாணம் நடந்தது என்பார்.
வரலாறு அவரை பகுத்தறிவு பகலவன் என்று கூட எழுதிச் செல்லலாம்.
ஆனால் ஈழத்தமிழர் அவரது துரோகத்தை ஒருபோதும் மறக்கவும் மாட்டார்கள். மன்னிக்கவும் மாட்டார்கள்.
என்ன அவர் இறந்த பின்பும் திட்டுகிறீர்களே என யாராவது கேட்கக்கூடும். என்னசெய்வது மழை விட்டும் தூவானம் விடவில்லையே.
குறிப்பு - கலைஞர் பிறந்தநாளை ஆடம்பரமாக கொண்டாட வேண்டாம் என ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். அதனால் நாமும் அதிகமாக எழுதமால் சுருக்கமாக திட்டியுள்ளோம்.
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், அமர்ந்துள்ளார்
 
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 ம · பொது
IBOXrWGhcIu.png
 
•கரூர் நீதிமன்றத்தில்
புலிப் போராளி சிவா வழங்கிய வாக்குமூலம்!
தமிழ்நாட்டில் சிறையைவிடக் கொடிய சித்திரவதை முகாமாகிய சிறப்புமுகாம் இருப்பது பலர் மறந்துவிட்டனர். அதுவும் இச் சிறப்புமுகாம் கலைஞர் கருணாநிதியால் ஆரம்பிக்கப்பட்டது என்பதுகூட இப்போதைய திமுக உடன் பிறப்புகளுக்கு தெரிவதில்லை.
துறையூர் சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்த புலிப் போராளி சிவா அவர்கள் தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்து கரூர் நீதிமன்றத்தில் 17.10.1994 யன்று நீதிபதி முன்னிலையில் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.
ஆனால் அந்த நீதிபதி போராளி சிவாவுக்கு நீதி வழங்கவில்லை. மாறாக அவரை வேலுர் சிறப்புமுகாமில் கொண்டுபோய் அடைத்தார்கள். அதன்பின் அவருக்கு என்ன நடந்தது என்பது குறித்து இதுவரை நான் அறியாமல் இருந்தேன்.
கடந்த வாரம் முகநூலில் தொடர்பு கொண்ட நண்பர் ஒருவர், போராளி சிவா வேலூர் சிறப்புமுகாமில் இருந்து தப்பி வந்து வன்னியில் இயங்கிக்கொண்டிருந்தபோது இலங்கை ராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையணியால் கொல்லப்பட்டுவிட்டதாக கூறினார்.
லெப்.கேணல் மகேந்தியுடன் வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது சிவா உட்பட வாகனத்த்pல் பயணித்த நால்வரும் இறந்துவிட்டதாக அந்த நண்பர் கூறியதுடன் அவர்களின் புகைப்படத்தையும் தந்து உதவினார்.
போராளி சிவா தங்களின் கொடுமைகளை நீதிமனத்தில் கூறிவிட்டார் என்பதற்காக சிவாவைவிட என்மீது அதிக கோபம் கொண்டனர் தமிழக கியூ பிரிவு உளவுப் பொலிசார்.
ஏனெனில் சிவா வாக்குமூலம் கொடுப்பதற்கு நான் உதவியதுடன் இவ் வாக்குமூலத்தை எமது தோழர் தமிழ் முகிலன் அவர்களுக்கும் இரகசியமாக வழங்கிவிட்டேன்.
தோழர் தமிழ்முகிலன் உடனே அவ் வாக்குமூலத்தை “குற்றப் பரம்பரையாக கருதப்படும் ஈழத் தமிழர்கள்” என்னும் தலைப்புடன் சிறு பிரசுரமாக அச்சிட்டு வெளியிட்டுவிட்டார்.
அந்த நேரத்தில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு வழங்குவோரை இரும்புக்கரம் கொண்டு அடக்கினார் ஜெயா அம்மையார். ஆனாலும் அதையும் மீறி ஈழத் தமிழருக்கான ஆதரவை வழங்கியவர்களில் தமிழ் முகிலனும் ஒருவர்.
ஈழத் தமிழர்களின் போராட்ட வரலாற்றில் நீதிமன்றத்தில் வாக்குமூலம் வழங்கிய போராளி சிவாவின் பெயர் உச்சரிக்கப்படும்போதெல்லாம் அதனை வெளியிட்டு ஆதரவு தந்த தோழர் தமிழ் முகிலன் பெயரும் உச்சரிக்கப்படும்.
குறிப்பு- கீழ்வரும் இணைப்பில் போராளி சிவாவின் வாக்குமூலத்தை படிக்கலாம்.
101795034_10223208102132128_188902380759
 
 
101846452_10223208104492187_912014306483
 
 
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
ஒரு மஞ்சள் பையுடன் சென்னைக்கு வந்த கலைஞர் கருணாநிதி குடும்பம் எப்படி முப்பதாயிரம் கோடி ரூபா சொத்தை சேர்த்தது என்று கேட்க முடியாதவர்கள்,
ஒரு நடிகையாக மூப்பனார் வீட்டுக் கல்யாணத்தில் 600 ருபாவுக்கு டான்ஸ் ஆடிய ஜெயலலிதா எப்படி நாற்பத்தையாயிரம் கோடி ரூபா சொத்தை சேர்த்தார் என்பதை கேட்க முடியாதவர்கள்,
இட்லிக்குள் எப்படி கறி வந்தது என்று சீமானிடம் கேட்கிறார்கள். சரி. பரவாயில்லை.
நேற்று மட்டும் தமிழகத்தில் கொரோனோவுக்கு 6 பேர் பலியாகியுள்ளார்கள். அதைப் பற்றி அக்கறைப்படாதவர்கள் இட்லிக்குள் கறி வந்தது எப்படி என்று அக்கறை கொள்கின்றனர். சரி. பரவாயில்லை.
திருச்சி சிறைக்குள் ஒரு அயுள் கைதிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் சிறையில் இருக்கும் ஏழு தமிழரை விடுதலை செய்யும்படி சீமான் கேட்கிறார்.
ஆனால் இட்லிக்குள் கறி எப்படி வந்தது என்று கவலைப்படுபவர்கள் இந்த ஏழு தமிழர் பற்றியும் ஒரு வரியிலாவது அக்கறை காட்டியிருக்கலாம். சரி. பரவாயில்லை.
தமிழகத்தில் உள்ளவர்கள் தங்கள் அரசியலுக்காக சீமானை கிண்டல் பண்ணுகிறார்கள். ஆனால் ஈழத் தமிழர் சிலர் ஏன் கிண்டல் பண்ணுகிறார்கள் என்று புரியவில்லை.
சீமான் ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுக்கிறார். அதுமட்டுமல்ல ஒரு ஈழத் தமிழரே ( பிரபாகரன்) தன் தலைவர் என்றும் பகிரங்கமாக கூறுகிறார்.
ஆனாலும் சில ஈழத் தமிழர்கள் அவரை ஏன் கிண்டல் பண்ணுகிறார்கள் என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை. சரி. பரவாயில்லை.
சிறையில் இருக்கும் ஏழு தமிழர்களில் ஒருவரான முருகன் தன் தந்தையின் மரண சடங்கை கைத்தொலைபேசி மூலம் பார்க்க அனுமதி கேட்டார். அனுமதிக்கப்படவில்லை.
அடுத்து லண்டனில் இருக்கும் தன் மகளுடன் கைத்தெலைபேசியில் பேசுவதற்கு அனுமதி கேட்டார். அதற்கும் அனுமதி வழங்கப்படவில்லை.
சீமான் இந்த ஈழத் தமிழரான முருகனுக்கும் அவர் மகளுக்காகவும் குரல் கொடுக்கிறார்.
ஆனால் சீமானை கிண்டல் செய்யும் ஈழத் தமிழர்கள் இந்திய அரசின் இந்த அடிப்படை மனிதவுரிமை மீறல் பற்றி ஒரு வரிகூட எழுதுவதில்லை. சரி. பரவாயில்லை.
இட்லிக்குள் கறி இருக்கிறதோ இல்லையோ ஆனால் தமிழனுக்குள் இருக்கும் இன உணர்வை இனி யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.
படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள், பலர் அமர்ந்துள்ளனர் மற்றும் வெளிப்புறம்
 
 
 
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
தியாகி சிவகுமாரனுக்கு வீர வணக்கம்
போராளிகள் புதைக்கப்படுவதில்லை. விதைக்கப்படுகிறார்கள். அவர்களின் மரணங்கள் பல புதிய போராளிகளை தோற்றுவிக்கும் என்பதற்கு சிறந்த உதாரணம் தியாகி சிவகுமாரனின் மரணம். ஆம். அவரது மரணம் பல தமிழ் இளைஞர்களை போராட்டத்தில் ஈடுபடவைத்தது.
சிவகுமாரன் தமிழீழத்திற்காக ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தவர். அதற்காக களப்பலியான முதல் வீரர் எனக் குறிப்பிடக்கூடியவர்.
சிவகுமாரன் நம்பிய த.வி.கூட்டனி தலைவர்கள் தரப்படுத்தலுக்கு எதிராக இளைஞர்களை போராடும்படி தூண்டினார்கள். ஆனால் அவர்கள் தங்கள் பிள்ளைகளை வெளிநாட்டுக்கு அனுப்பி படிக்க வைத்தார்கள்.
குறிப்பாக அமிர்தலிங்கம் தனது மகன் பகிரதனுக்கு எம்.ஜி.ஆர் தயவோடு மதுரை மருத்துவப் பல்கலைக்கழகத்தில் சீட்டு வாங்கிப் படிக்க வைத்தார். தலைவர் சிவசிதம்பரம் மகனை லண்டனுக்கு அனுப்பி படிக்கவைத்தார்.
சிவகுமாரன் விரும்பியிருந்தால் நன்கு படித்து பட்டம் வாங்கி நல்ல உத்தியோகத்தையும் பெற்று வசதியாக வாழ்ந்திருக்க முடியும். அல்லது மற்றவர்கள் போல் வெளிநாட்டுக்கு சென்று பாதுகாப்பாக இருந்திருக்க முடியும்.
ஆனால் அவரோ ஏற்கனவே பல முறை கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்திருந்தாலும் தொடர்ந்து தமிழ் மக்களுக்காக போராடி மரணித்தார். எனவேதான் அவர் தியாகி சிவகுமாரன் என அழைக்கப்படுகிறார்.
பொலிசாரின் நெருக்கடியை அடுத்து சிவகுமாரன் சிலகாலம் இந்தியா தப்பிச் செல்ல விரும்பினார் என்றும் ஆனால் கடத்தல்காரர்கள் கேட்ட பணம் கொடுப்பதற்கு அவரிடம் வசதி இருக்கவில்லை என அறியவருகிறது.
அவர் நம்பிய த.வி.கூ தலைவர்கள் கூட அவருக்கு இந்த பணத்தை கொடுத்து உதவவில்லை. எனவேதான் அவர் வேறு வழியின்றி வங்கியில் பணம் கொள்ளையடிக்க முயற்சி செய்தார் என்பதை அறியும்போது வேதனையாக இருக்கிறது.
வங்கியில் பணம் கொள்ளையடிக்க முயற்சி செய்தபோது பொலிசார் சுற்றி வளைத்துவிட்டார்கள். தப்பிக்க முடியாத நிலையில் வேறு வழியின்றி அவர் சயனைட் உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். எமது போராட்டத்தில் களப்பலியான முதல் போராளி என்ற பெருமை அவருக்கே சாரும்.
சிவகுமாரனுக்கு உதவி செய்யாமல் யார் ஏமாற்றினார்களோ அதே தமிழர் விடுதலைக் கூட்டணிக் கட்சியினர் அவர் தியாகத்தை கொஞ்சம்கூட வெட்கம் இன்றி தமது பிரச்சாரத்திற்கு நன்கு பயன் படுத்திக்கொண்டனர். தேர்தலில் அமோக வெற்றியைப் பெற்றனர்.
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், உரை
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
•கேட்பவன் கேணையன் என்றால்
காட்டெருமை ஏரோப்பிளேன் ஓட்டுது என்று சொல்வார்கள்!
செய்தி - புத்தரின் போதனைகள் மூலம் கொரோனோவை வெற்றி கொண்டுள்ளோம் - பிரதமர் மகிந்த ராஜபக்சா.
நம்பிட்டோம் பிரதமர் அவர்களே! அப்படியே அந்த கிளிநொச்சிவரை வந்தவிட்ட வெட்டுக்கிளி கூட்டத்தையும் புத்தரின் போதனைகள் மூலம் விரட்டிவிடுங்கள்.
அடுத்து, மலையகத்தில் நேற்றும் ஒரு பெண் குளவிக்கடியால் இறந்துள்ளார். அந்த குளவிகளையும் கொஞ்சம் புத்தரின் போதனைகள் மூலம் கலைத்து விடுங்கள்.
தமிழர்களின் கிழக்கு மண்ணில் தொல்பொருள் ஆய்வு செயலணி நியமித்துள்ளீர்கள். அதில் ஒரு தமிழருக்குகூட இடமளிக்கவில்லை. அதற்கும்கூட புத்தரின் போதனைகள்தான் காரணமா பிரதமர் அவர்களே?
அடுத்தமுறை இந்தியா சென்று திருப்பதி வெங்கடஜலபதியை வணங்கும்போது உங்கள் நண்பர் மோடிக்கும் புத்தர் போதனைகள் சிலவற்றை கூறிவிடுங்கள்.
ஏனெனில் அவர் இந்தியாவில் கொரோனோவுக்கு கை தட்டுங்கள் விளக்கு பிடியுங்கள் என்று உளறிக் கொண்டிருக்கிறார். இப்ப கடைசியாக கொரோனோவுடன் வாழப் பழகிக்கொள்ளுங்கள் என்கிறார்.
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 7 பேர், பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர், திருமணம் மற்றும் உட்புறம்
 
 
 
 
 
கடந்த வருடம் வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாயார் ஒருவர் சுமந்திரனுக்கு செருப்பு காட்டினார்.
அப்போது அதை அரசியல் நாகரீகம் அற்றது என்று கூறி கண்டித்தவர்கள் இப்போது சுந்தரவள்ளி “அறுத்திடுவேன்” என்று பொதுவெளியில் பேசியதை அறச்சீற்றம் என்று பாராட்டுகிறார்கள்.
சம்பந்தர் ஜயாவிடம் தேசியக்கொடி பற்றி நிருபர் ஒருவர் கேள்வி கேட்டதையே தவறு என்று கூறியவர்கள் அமெரிக்காவில் போராட்டத்தில் தேசியகொடி எரிக்கப்படுவதை பாராட்டுகிறார்கள்.
இந்த அரசியல் நாகரீகம் என்பதுகூட ஈழத் தமிழருக்கு ஒரு வரையறை, உலகத்திற்கு இன்னொரு வரையறை என்பதை நாம் தெரிந்துகொண்ட நாள் இன்று.
102675470_10223228601124590_389183228109
 
 
102980553_10223228602124615_847925918177
 
 
 
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/6/2020 at 02:59, பெருமாள் said:
அவர் தன்னை உலகத் தமிழினத் தலைவர் என்றார்
ஆனால் ஈழத்தில் தமிழினம் அழிக்கப்பட்டபோது அது இன்னொரு நாட்டு விடயம் என்றார்.
அவர் தன்னை கடலில் வீசி எறிந்தால் கட்டுமரமாகி வந்து தமிழனுக்கு உதவுவேன் என்றார்.
ஆனால் ஈழத்தில் தமிழன் தத்தளித்தபோது கட்டு மரமாகி வந்து உதவுவார் என நம்பினோம். கடைசிவரை அவர் வரவேவில்லை.
3 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்து போர் நிறுத்தப்பட்டுவிட்டது என்றார்.
ஆனால் அதன் பின்பும் தமிழர் கொல்லப்படுகிறார்களே என்று கேட்டபோது “மழை விட்டும் தூவானம் விடவில்லை” என்றார்.
பொதுவாக பதவி கொடுக்காதவர்களுக்கு தன் இதயத்தில் இடம் கொடுப்பதாக கூறுவார்.
ஆனால் தத்தெடுத்த அகதிச் சிறுவன் மணிக்கு அந்த இதயத்திலும் இடங்கொடுக்காமல் கொன்று விட்டார்.
பக்கத்தில் மனைவி, துணைவி என்று இரண்டு பேரை வைத்துக் கொண்டு கொஞ்சம்கூட கூச்சமில்லாமல் ஒருவனுக்கு ஒருத்தி என்பதே தமிழன் பண்பாடு என்று பேசுவார்.
ஈழத்தில் பல்லாயிரம் தமிழர் மாண்டிருக்க உங்கள் பிள்ளைகளின் பதவி எற்பு விழா தேவையா என்று கேட்டால் சங்க இலக்கியத்தில் ஒரு வீட்டில் செத்தவீடு நடக்கும்போது பக்கத்து வீட்டில் கலியாணம் நடந்தது என்பார்.
வரலாறு அவரை பகுத்தறிவு பகலவன் என்று கூட எழுதிச் செல்லலாம்.
ஆனால் ஈழத்தமிழர் அவரது துரோகத்தை ஒருபோதும் மறக்கவும் மாட்டார்கள். மன்னிக்கவும் மாட்டார்கள்.
என்ன அவர் இறந்த பின்பும் திட்டுகிறீர்களே என யாராவது கேட்கக்கூடும். என்னசெய்வது மழை விட்டும் தூவானம் விடவில்லையே.
குறிப்பு - கலைஞர் பிறந்தநாளை ஆடம்பரமாக கொண்டாட வேண்டாம் என ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். அதனால் நாமும் அதிகமாக எழுதமால் சுருக்கமாக திட்டியுள்ளோம்.
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், அமர்ந்துள்ளார்
 
 
 
 

தோழர் பாலன்.... நாம் மறந்த பல விடயங்களை நினைவு ஊட்டியுள்ளார்.

கடைசிப் பந்தி.... மிக அழகு.😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
தியாகி சிவகுமாரனே!
மீண்டும் வந்து பிறந்துவிடாதே
பிறந்தாலும் தமிழ் இனத்திற்காக போராடிவிடாதே
ஏனெனில் இது தியாகிகள் துரோகிகளாகவும்
துரோகிகள் தியாகிகளாகவும் மாறும் காலம்
நீ கொல்ல முயன்ற துரையப்பா நல்லவராம்
அவரைக் கொன்றவர்கள்; வன்முறையாளர்களாம்.
துரையப்பாவை துரோகி என்று யார் உனக்கு சொல்லி தந்தார்களோ
அவர்களே இப்ப கூறுகிறார்கள் துரையப்பாவை சுட்டது தவறாம்.
தமிழாராய்ச்சி மாநாட்டில் மக்கள் இறப்பதற்கு
யார் காரணம் என்று என்று நீ கோவப்பட்டாயோ
அவர்களுடன் சேர்ந்து வாழ்வது தான் செய்த பாக்கியம் என்று கூறுபவரே
இப்போது தமிழினத்தின் தலைவராக இருக்கிறார்.
யார் உனது போட்டோவைக் காட்டி தேர்தலில் வென்றார்களோ
அவர்களே இப்போது கூறுகிறார்கள் தாங்கள் ஒரு போதும்
பயங்கரவாதத்தை ஆதரிக்கவில்லையாம்.
எனவே தயவு செய்து மீண்டும் பிறந்துவர எண்ணிவிடாதே!
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்
 
 
 
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
•அமீர் சொன்ன பொய்
ஆனாலும் அது எமக்கு பிடிச்சிருக்கு!
அண்மையில் மரணமடைந்த திமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகள் விடுதலைப் புலிகள் இயக்க தலைவருக்கு ஜாமீன் பெற்று தன் இடத்தில் தங்கவைத்து உதவி செய்தார் என இயக்குனர் அமீர் கூறியிருக்கிறார்.
நான் அறிந்தவரையில் அமீர் கூறியது தவறான செய்தி. ஆனாலும் அவர் அவ்வாறு கூறியது ஒருவழியில் எமக்கு மகிழ்வு தருகிறது.
ஏனெனில் 12 வருடம் சட்டமன்ற உறுப்பினராகவும் திமுக மாட்ட தலைவராகவும் இருந்தவருக்குகூட ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு உதவி செய்தார் என்பதை கூறி பெருமை சேர்க்க வேண்டிய நிலை தோன்றியுள்ளது அல்லவா!
எந்த இயக்கத்தை பயங்கரவாத இயக்கம் என்று இந்திய அரசு ஒவ்வொரு வருடமும் தடையை நீடித்து வருகிறதோ அந்த இயக்கத்தின் தலைவருக்கு உதவியதாக கூறி பெருமை தேட வேண்டிய நிலை ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கே ஏற்பட்டுள்ளது.
நடிகரும் இசையமைப்பாளருமாகிய ஜீ.வி. பிரகாசிடம் யாராவது ஒருவர் வாழ்வை ஒருநாள் வாழ சந்தர்ப்பம் கிடைத்தால் யாருடைய வாழ்வை தேர்ந்தெடுப்பீர்கள் என கேட்டபோது தயக்கமின்றி ஒருவர் பெயரை அவர் குறிப்பிட்டார்.
அவர் குறிப்பிட்ட அந்த ஒருவர் பெயர் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன். இந்த பெயரைக் கூறுவதால் அவருக்கு எந்த சலுகையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக இந்திய அரசின் நெருக்கடிகளே கிடைக்ககூடும். ஆனாலும் அவர் தைரியமாக கூறியிருக்கிறார்.
பயங்கரவாதிகள் என்று எந்த திலீபன் , பாலச்ந்திரன் போன்றவர்களை இந்திய அரசு கொன்றதோ இன்று அவர்கள் இந்தியாவில் தமிழ்நாட்டிற்கே வந்துவிட்டார்கள்.
ஆம். பெட்டிக்கடைகளின் பெயர்கள், வாகனங்களில் அவர்கள் படம், பிறக்கும் குழந்தைகளுக்கு பெயர் என எங்கும் எதிலும் அவர்கள் வந்துவிட்டார்கள்.
இப்போது புரிகிறதா, ஏன் இந்திய அரசு தமிழர்களை கண்டு அஞ்சுகிறது என்று?
104081370_10223323333332836_424692299827
 
 
104217267_10223323334092855_375099578945
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 ம
  · பொது உடன் பகிர்ந்தது
IBOXrWGhcIu.png
 
•சுமந்திரன் தோற்கடிக்க முடியாதவரா?
இலங்கை அரசின் நோக்கத்தை சுமந்திரன் பூர்த்தி செய்து வருவதால் எப்படியாவது அவரை வெற்றி பெற்றதாக இலங்கை அரசு அறிவிக்கும் என சிலர் கூறுகிறார்கள்.
சுமந்திரன் தோற்கடிக்கப்பட்டால் தமிழ் தேசிய உணர்வு மேலோங்கிவிடும். எனவே இந்திய உளவுத்துறை எப்படியாவது சுமந்திரனைக் காப்பாற்றும் என வேறு சிலர் கூறுகின்றனர்.
சுமந்திரன் வடமராட்சியைச் சேர்ந்தவர். எனவே அந்த மக்கள் மண்ணின் பாசத்தில் அவருக்குத்தான் வாக்களிப்பார்கள் என இன்னும் சிலர் கூறுகின்றனர்.
இவ்வாறு கூறுபவர்கள் வரலாற்றை கொஞ்சம் மீட்டிப் பார்க்க வேண்டும்.
அமிர்தலிங்கம் சுட்டுக் கொல்லப்படுவதற்கு முன்னர் அவர் தேர்தலில் மக்களால் தோற்கடிக்கப்பட்டவர். ஆனானப்பட்ட அமிர்தலிங்கத்தையே தோற்கடித்த தமிழ் மக்களுக்கு சுமந்திரன் எம்மாத்திரம்?
உடுப்பிட்டி சிங்கம் என அழைக்கப்பட்டவர் சிவசிதம்பரம். அவரையே வடமராட்சியில் உடுப்பிட்டி தொகுதி மக்கள் தோற்கடித்திருக்கிறார்கள்.
விகிதாசாரத் தேர்தலை அறிமுகப்படுத்தி இதில் யாரும் 100 வீத வெற்றி பெற முடியாது என்று ஜே.ஆர். ஜெயவர்த்தனா கூறினார்.
அவர் அதை கூறிய முதல் மாவட்டசபைத் தேர்தலிலேயே 100 வீத வெற்றியை தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு பெற்றுக் கொடுத்தவர்கள் யாழ் மாவட்ட மக்கள்.
எனவே மக்கள் முடிவு எடுத்துவிட்டால் அப்புறம் இலங்கை அரசு மட்டுமல்ல இந்திய உளவுப்படையே நினைத்தாலும் சுமந்திரனை காப்பாற்ற முடியாது.
மக்கள் மீது நம்பிக்கை வைப்போம். மக்கள் அற்புதம் நிகழ்த்துவார்கள்.
குறிப்பு - ஒரேயொரு விடயம் மட்டும் சுமந்திரனுக்கு வாய்ப்பாக இருக்கிறது. அது என்னவெனில் சுமந்திரனுக்கான ஒரு பலமான மாற்று இன்னும் வைக்கப்படவில்லை.
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், நிற்கிறார்
 
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
இருவரும் ஈழத் தமிழர்கள்
இருவரும் வழக்கறிஞர்கள்.
இருவரும் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
அதுவும் யாழ் மாவட்டத்திலேயே போட்டியிடுகின்றனர்.
ஒருவர் மகிந்த அணியில் போட்டியிடும் செலஸ்ரின்.
மற்றவர் தமிழ்தேசிய கூட்டமைப்பில் போட்டியிடும் சுமந்திரன்.
தமிழ்நாட்டில் சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டிருக்கும் ஈழ அகதிகள் 5வது நாளாக உண்ணாவிரதம் இருப்பதை அறித்து அவர்களுக்காக குரல் கொடுத்துள்ளார் செலஸ்ரின்.
இதுகுறித்து இலங்கை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதுடன் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய தூதரை நேரில் சந்தித்து வலியுறுத்தப் போவதாகவும் செலஸ்ரின் கூறியுள்ளார். ( அவர் பேசிய வீடியோ கீழே பின்னூட்டத்தில் தரப்பட்டுள்ளது)
இப்போது எமது கேள்வி என்னவெனில் மகிந்த ராஜபக்சாவின் அணியில் உள்ள ஒருவரே ஈழ அகதிகளுக்கு குரல் கொடுக்க முடிகிறது என்றால் சுமந்திரனால் ஏன் கொடுக்க முடியாது?
தமிழ் மக்களின் ஏக பிரநிதிகளாக தங்களை ஆதரிக்கும்படி கேட்கும் சுமந்திரன் ஈழ அகதிகளுக்காக குரல் கொடுக்க வேண்டியது கடமை அல்லவா?
இலங்கையில் சிறையில் உள்ளவர்களின் பட்டியலை பிரதமர் மகிந்தவிடம் கையளித்தேன் என பெருமையாக கூறும் சுமந்திரன் அதேபோன்று இந்தியாவில் சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகளின் விடுதலைக்கும் பட்டியல் வழங்கி பெருமை கொள்ளலாமே?
மக்களுக்கு குரல் கொடுப்பதற்கே எம்.பி பதவியே யொழிய சிங்கள பொலிஸ் பாதுகாப்பு பெறுவதற்கோ அல்லது சொகுசு பங்களா பெறுவதற்கோ அல்ல என்பதை யார் சுமந்திரனுக்கு கூறுவது?
103986481_10223323984069104_242331070628
 
 
104097130_10223323985709145_257813009115
 
 
 
 
11
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
•இதற்கு என்ன சொல்லப் போகிறார்கள்?
திலீபன் உண்ணாவிரதம் இருந்தபோது காந்தி தேசத்தின் (இந்திய)தூதரான டிக்சித் அவர்கள் “திலீபன் ஒரு பயங்கரவாத புலி இயக்க உறுப்பினர். எனவே அவரின் உயிர் போவது பற்றி இந்திய அரசுக்கு கவலை இல்லை” என்று திமிராக பதில் கூறினார்.
இன்று தீட்சித் யார் என்றோ அல்லது அவர் எங்கே என்றோ யாருக்கும் தெரியாது. ஆனால் திலீபன் இந்தியாவில் தூத்துக்குடியில் பெட்டிக்கடைவரை வந்துவிட்டார்.
எந்த திலீபனை பயங்கரவாதி என்று இந்திய அரசு கொன்றதோ இன்று அந்த திலீபன்; தமிழ்நாட்டில் பல வடிவங்களில் திகழ்கிறார்.
தூத்துக்குடியில் பெட்டிக்கடையின் பெயராக, மதுரையில் ஒரு வீதியின் பெயராக, தஞ்சாவூரில் ஒரு பேருந்து தரிப்பிட நிழற்குடையாக, பிறக்கும் பல குழந்தைகளின் பெயராக தமிழ்நாடு எங்கும் திலீபன் இருக்கிறார்.
ராஜிவ்காந்தி கொலைக்கு பின் தமிழ்நாட்டில் ஈழப் போராட்டத்திற்கு ஆதரவு இல்லை என பார்ப்பணிய ஊடகங்கள் கூறி வருகின்றன.
ஆனால் தமிழ்நாட்டில் ராஜீவ்காந்தி என்று பெயர் வைப்பதைவிட திலீபன் என்ற பெயரே அதிகமாக ஏன் வைக்கப்படுகிறது என்பதை இவர்கள் கூறுவதில்லை.
இதில் இருந்து என்ன தெரிகிறது?
நாம் திலீபனை. அறுவடை செய்கிறோம். ஏனெனில் நாம் விதைத்தது திலீபனையே யொழிய தீட்சித்தை அல்ல.
இனி இவ்வாறு பல அறுவடைகளை நாம் பெறப்போகிறோம்!
104214499_10223328133292832_716638312825679016_n.jpg?_nc_cat=104&_nc_sid=730e14&_nc_oc=AQl6cOcC6u3nzCmtPN0YLy-aDTGfhMwb9QSM85odEtUiAXkZgHiqUuFphSRv6EFOzqM&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=b01887dd59e905e8d14fe28b1aa5dd3d&oe=5F0DB072
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
•சுமந்திரனுக்கு ஏற்படும் பரிதாபநிலை?
தமிழ் மக்களுக்கு எதிரானவர்களுக்கு தன்னால் ஆதரவு கோர முடியாது என்று தமிழரசுக்கட்சி வேட்பாளர் சசிகலா ரவிராஜ் கூறுகிறார்.
சுமந்திரனுடன் கூடச் சென்றால் தனக்கும் தமிழ் மக்கள் வாக்களிக்கமாட்டார்கள் என சுமந்திரனின் விசுவாசியான ஆர்னோல்ட்டே சுமந்திரனை தவிர்க்கிறார்.
சிறீதரன் இன்னும் ஒருபடி மேலே சென்று “ சுமந்திரனுடன் சென்றால் தோல்வி வரும் என்றால் அதை ஏற்க தயார்” என்று கூறியுள்ளார்.
ஆக மொத்தத்தில், சுமந்திரன் தோல்வி அடையப் போகிறார் என்பதை அவரது கட்சிக்காரர்களே வெளிப்படையாக கூற ஆரம்பித்துவிட்டார்கள்.
ஒரு லட்சம் வாக்குகளால் வெற்றி பெறுவேன் என்று திமிராக பேட்டியளித்த சுமந்திரனுக்கு தன் கட்சிக்காரர்களாலேயே இப்படி ஒரு நிலை வரும் என நிச்சயம் எதிர் பார்த்திருக்கமாட்டார்.
ஆனால் இதைவிட சுமந்திரனுக்கு பெரும் அதிர்ச்சி ஒன்றை யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கொடுக்கப் போகிறார்கள்.
ஆம். சுமந்திரனுக்கு வாக்களிக்கக்கூடாது என அவர்கள் தமிழ் மக்களிடம் கோரப் போகிறார்கள்.
எனவே இனி சுமந்திரனை மகிந்த ராஜபக்சா மட்டுமல்ல இந்திய தூதுவராலும் காப்பாற்ற முடியாது.
இவை எல்லாம் தெரிந்தும் எப்படி சிலரால் சுமந்திரனை புகழ்ந்து பதிவுகள் இட முடிகிறது என நீங்கள் யோசிக்கலாம்.
ஆம். அவர்கள் செத்த மாட்டில் இருந்து உண்ணி கழருவதுபோல் சுமந்திரன் தோல்வி அடைந்தவுடன் விலகி விடுவார்கள். இது சுமதிரனுக்கும் தெரியும்.
படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள், பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர், வெளிப்புறம் மற்றும் இயற்கை, , ’i PAGETAMIL.COM சுமந்திரனுக்காக பிரச்சாரம் செய்வதால் தமிழ் மக்கள் என்னை தோற்கடிப்பார்களாக இருந்தால்,...’ எனச்சொல்லும் உரை
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் தோற்றாலும் தேசியப்பட்டியலில் வரலாம் தானே?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.