• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Recommended Posts

On 1/6/2020 at 21:04, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

சோபாசக்தியின் செயலைப் பாராட்டாமல் பலர் நக்கல் நளினம்செய்து வருகின்றனர். அவ்வளவும் எரிச்சல். 

எல்லாவற்றையும் தூக்கிப்பிடித்து முகநூலில் பதிவுபோடும் எம்மவர் கூட இந்த கறுப்பின மனிதனின் கொலையைக் கண்டிக்கவில்லை. எத்தனை கொடூரமாக முழங்காலால் மிதித்துக் கொலை. நாமும் கறுப்பினத்தவர்தான் என்பதை நாம் மறந்துவிட்டோம்.

எல்லாவற்றையும் தூக்கிப்பிடித்து முகநூலில் பதிவுபோடும் எம்மவர் கூட இந்த கறுப்பின மனிதனின் கொலையைக் கண்டிக்கவில்லை. எத்தனை கொடூரமாக முழங்காலால் மிதித்துக் கொலை. நாமும் கறுப்பினத்தவர்தான் என்பதை நாம் மறந்துவிட்டோம்.

இவரின் இறப்புக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

எங்க இருந்து எல்லோரும் புறப்படுகிறீர்கள்???

எம்மை  அழித்தபோது

நாம்  வீதிகளில்  கிடந்து அழுதபோது

அமெரிக்க ஐனாதிபதியே  கறுப்பன்  தானே????

 

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
•என்னது சுமந்திரன் அன்டன் பாலசிங்கமா?
தன்னை பிரபாகரன் என்று நினைத்து கனவு காண சிறீதரனுக்கு உரிமை உண்டு.
ஆனால் அதற்காக சுமந்திரனை அன்டன் பாலசிங்கமாக தமிழ் மக்கள் கருத வேண்டும் என்று கேட்பது ரொம்பவும் ஓவர்.
தேர்தலில் வெற்றி பெறுவதற்காக வேட்பாளர்கள் பொய் சொல்வது வழமைதான்.
ஆனால் அதற்காக கொஞ்சம்கூட கூச்சமின்றி இப்படி ஒரு பொய்யை சிறீதரன் கூறியிருக்கக்கூடாது.
அன்டன் பாலசிங்கம் கொழும்பில் வாழ்ந்திருக்கிறார். அவர் எப்போதாவது கொழும்பில் வாழ்ந்தது தனது பாக்கியம் எனக் கூறியிருக்கிறாரா?
அன்டன் பாலசிங்கம் ஆயுதப் போராட்டத்தை வன்முறை என்றும் அதனை தன்னால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியிருக்கிறாரா?
தனது தேர்தல் செலவுக்கு சுமந்திரன் பணம் தருவதற்கு இணங்கிய காரணத்திற்காக சிறீதரன் அன்டன் பாலசிங்கத்தை இந்தளவுக்கு அசிங்கப்படுத்த வேண்டுமா?
தேர்தல் முடிவதற்குள் சுமந்திரன் பற்றி இன்னும் என்னென்னமெல்லாம் கேட்டு தொலைக்க வேண்டி வருமோ?
ஆண்டவா, தமிழ் மக்களை காப்பாத்து!
104696600_10223424023130018_173098132888
 
 
105943691_10223424024250046_169135953119
 
 
 
 
 
3 மணி நேரம்
  · பொது உடன் பகிர்ந்தது
IBOXrWGhcIu.png
 
•நிதி விடயத்தில் சுமந்திரன் நேர்மை என்ன?
சுமந்திரன் நல்லவர், வல்லவர், நேர்மையானவர் என்றெல்லாம் அவரது தம்பிகள் கூறுகின்றனர்.
குறிப்பாக பண விடயங்களின் அவர் கரங்கள் கறைபடியாதவை என்று வேற பில்டப் கொடுக்கின்றனர்.
சரி. அப்படியென்றால் “தமிழ்தேசியக்கூட்டமைப்பிற்கு வந்த பணம் எங்கே? அதன் கணக்கு வழக்கு என்ன?” என்று மாவை சேனாதிராசாவின் மகன் கேட்டதற்கு ஏன் இன்னும் சுமந்திரன் பதில் அளிக்கவில்லை?
மாவை சேனாதிராசாவின் மகன் இவ்வாறு பகிரங்கமாக கேட்டதால்தான் இம்முறை மாவைக்கு எதிராக சுமந்திரன் செயற்படுகின்றார் என்று கூறுகிறார்களே. அது உண்மையா?
மாவை சோனாதிராசாவின் மகன் கேட்டதைக் கூட விட்டுவிடுவோம். தமிழ்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கேட்டாரே? அவருக்குகூட ஏன் சுமந்திரனால் பதில் அளிக்க முடியவில்லை?
ஒவ்வொரு தேர்தல் காலங்களிலும் இந்திய தூதர் தரும் பணம் எத்தனை கோடிகள்? அது எப்படி வேட்பாளர்களுக்கு பங்கிடப்படுகிறது? அதன் கணக்கு வழக்குகளை மக்களுக்கு காட்டாவிட்டாலும் குறைந்தபட்சம் கூட்டமைப்பு வேட்பாளர்களுக்காவது காட்டலாம்தானே?
அதுவும் கறைபடியாத கரங்களுக்கு சொந்தக்காரர் என்றும் நேர்மையானவர் என்றும் அவரது தம்பிகளால் அழைக்கப்படும் சுமந்திரனால் ஏன் நேர்மையாக கணக்கு வழக்குகளைக் காட்ட முடியவில்லை@?
சுமந்திரன் ஒரு பிரபலமான வழக்கறிஞர். அவர் தனது லட்சக்கணக்கான ரூபா வருமானத்தை விட்டிட்டு வந்து மக்களுக்கு சேவை செய்வதாக தம்பிகள் கூறுகின்றார்கள்.
சுமந்திரனின் வழக்கு நிறுவனம் இப்போதும் இயங்குகிறது. அதனூடாக அவரது வருமானம் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.
அதைவிட கிருத்தவ நிறுவனம் ஒன்றின் ஊடாக சுமந்திரன் மனைவிக்கு மாதம் 3 லட்சம் ரூபா சம்பளம் வழங்கப்படுவதாக ஈழத்து சிவசேனைத் தலைவர் சச்சிதானந்தன் பகிரங்கமாக கூறியுள்ளார். அதை சுமந்திரன் இதுவரை மறுக்கவில்லை.
எல்லாவற்றுக்கும் மேலாக இரகசிய மற்றும் பினாமி சொத்துகளை தவிர்த்து அவர் காட்டிய சொத்து பெறுமதியின்படி அவரது சொத்து மதிப்பு குறையவில்லை. மாறாக அதிகரித்திருக்கிறது.
இத்தனைக்கு பிறகும் சுமந்திரனை நேர்மையானவர் என்று எப்படி அவரது தம்பிகளால் கொஞ்சம்கூட கூச்சமின்றி கூற முடிகிறது?
குறிப்பு - சம்பந்தர் ஐயாவின் மகன் கொழும்பில் செய்யும் பிசனஸ் என்ன? அதற்குரிய முதலீடு எத்தனை கோடிகள்? அது எவ்வாறு பெறப்பட்டது என்பதையாவது சுமந்திரன் கூறுவாரா?
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 4 பேர், சூட்
 
 
 
 
14 ம  · பொது உடன் பகிர்ந்தது
IBOXrWGhcIu.png
 
•வாயால் சுட்ட வடை!
எதுக்கு அண்ணே இவனை அடிக்கிறீங்க ?
வடை வாங்கிட்டு வரச் சொன்னா சம்பந்தர் ஐயா சுட்டதா? சுமந்திரன் சுட்டதா? என்று கேட்கிறான்.
குறிப்பு - எலெக்சன் கடி ஜோக் -1 ( இப்படி எலெக்சன் முடியும்வரை வரும்.)
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 3 பேர், பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர்
 
 
 
 
 
 

Share this post


Link to post
Share on other sites
5 மணி நேரம்
  · பொது உடன் பகிர்ந்தது
IBOXrWGhcIu.png
 
•வெற்றியைவிட பெரிசாக ஒன்று இருக்கிறது என்றால்
அது எதிரிகளுக்கு நாம் கொடுக்கிற நடுக்கம்தான்!
புலிகளை தடை செய்துவிட்டோம் என்றார்கள்
புலிகளை கொன்று புதைத்து விட்டோம் என்றார்கள்.
புலிகளை வெற்றி கொண்டுவிட்டோம் என்றார்கள்
ஆனாலும் அவர்கள் நடுங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
சங்கிகளுக்குகூட தம்மை விளம்பரப்படுத்த பிரபாகரன் படம்தான் தேவையாக இருக்கிறது.
தென்னிந்தியாவில் அதிக சம்பளம் பெறும் சினிமா நடிகரான விஜய்க்குகூட விளம்பரப்படுத்த பிரபாகரன் படம் தேவையாக இருக்கிறது.
தமிழ்நாடு மக்கள் மனங்களில் பிரபாகரன் இருக்கிறார் என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று தேவை?
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 3 பேர், பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர்
 
 
 
 
 

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)
39137830_10216941667035167_5425172825952485376_n.jpg?_nc_cat=105&_nc_sid=e3f864&_nc_oc=AQm7DiK9PWSHb7Fyv2Mqr1roE5xpXhnTUBl-2m7cEkr8AKrwfCJXmRSl-iWQv5WMgBo&_nc_ht=scontent-lht6-1.xx&oh=8e898b35bde29470ae8aae42c4df693c&oe=5F28B630
தாய்த் தமிழகத்தின் அர்ப்பணிப்பு விபரங்கள் வெளிவருமா?
தமிழகத்தில் இருந்து வந்து ஈழப் போராட்டத்தில் பங்குபற்றி வீர மரணம் அடைந்தவர்கள் பற்றி நான் எழுதும்போதெல்லாம் பலரும் என்னிடம் கேட்பது இவர்கள் பற்றிய விபரங்களை நூலாக வெளியிடுமாறு.
(1) நான் புலிகள் இயக்கத்தில் இருக்கவில்லை
(2) நான் இவர்களுடன் நேரிடையாக ஒருபோதும் பழகியதில்லை
(3) இப்பகூட இவர்கள் பற்றிய விபரங்கள் எதுவும் என்னிடம் இல்லை.
மேற்கண்ட காரணங்களால் நான் பெரிதும் விரும்பினாலும்கூட என்னால் அவர்கள் பற்றிய விபரங்களை நூலாக எழுத முடியவில்லை.
நான் மதுரை சிறையில் வைக்கப்பட்டிருந்தபோது அங்கிருந்த தமிழ்நாடு மீட்சிப்படையினருடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது.
அவர்கள் மூலம் தமிழ்நாட்டில் இருந்து ஈழம் சென்று பயிற்சி எடுத்தவர்கள் பற்றிய சில செய்திகள் அறிய முடிந்தது.
அவர்களிடம்கூட ஈழம் சென்று வீர மரணம் அடைந்தவர்கள் முழு விபரம் இப்போது இருக்குமா என்று தெரியவில்லை.
ஆனால் இவ்வாறு ஈழம் சென்று தாக்குதல்களில் பங்குபற்றிய ஒருவரின் எழுத்தை படிக்கும் வாய்ப்பு அண்மையில் எனக்கு கிடைத்தது.
அவர் தன் அனுபவங்களை தொகுத்து எழுதிய நூலை என் கருத்தை அறிவதற்காக தந்திருந்தார்.
அதில் முழு விபரங்கள் இல்லாவிடினும் தமிழகத்தில் இருந்து சென்ற ஒருவரின் முதல் நூல் என்ற பெருமை அதற்கு கிடைக்கும் என அவருக்கு கூறியிருந்தேன்.
வெகுவிரைவில் அந் நூல் வெளிவரும் என நம்புகிறேன். அந் நூல் இதேபோல் மற்றவர்களையும் நிச்சயம் எழுத தூண்டும்.
இவ்வாறு பலரும் எழுதும்போது தமிழகத்தில் இருந்து சென்று பங்குபற்றியவர்கள் மற்றும் வீரமரணம் அடைந்தவர்கள் விபரம் தமிழக மக்களுக்கு மட்டுமல்ல ஈழத் தமிழ் மக்களுக்கும் கிடைக்கும்.
ஆனால் இந்திய உளவு நிறுவனங்கள் இவ் விபரங்கள் வெளிவரவோ அல்லது அவ் வீர மரணமடைந்தவர்களை மக்கள் நினைவு கூரவோ ஒருபோதும் அனுமதிக்காது.
ஏனெனில் இனிவரும் காலங்களில் அனைத்து தமிழ் மக்களும் ஒன்றாவதற்கு இவர்கள் வரலாறு முன்னுதாரணமாக அமைந்துவிடும் என்ற அச்சம் அவற்றுக்கு உண்டு.
ஆனால் எத்தனை தடைகள் வந்தாலும் அத்தனையும் தாண்டி தமிழினம் ஒன்று சேர்ந்து போராடப் போவது உறுதி.
குறிப்பு – கீழே தரப்பட்ட விபரங்கள் எந்தளவு தூரம் சரியானவை என்பது குறித்து என்னால் உறுதி செய்ய முடியவில்லை.
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 4 பேர்
 
 
 
 
 
 
 
 
Edited by பெருமாள்

Share this post


Link to post
Share on other sites
2 ம
  · பொது உடன் பகிர்ந்தது
IBOXrWGhcIu.png
 
•தேர்தலும் பேஸ்புக்கும்
தேர்தலில் போட்டியிடும் பல வேட்பாளர்கள் என்னுடன் தொடர்பு கொண்டு தமக்கு ஆதரவு தருமாறு கேட்டு வருகின்றனர்.
இதில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஏனெனில் போட்டியிடுபவர்கள் ஆதரவு கேட்பது வழமையான ஒன்றுதானே.
ஆனால் சுமந்திரன் சார்பாக என்னுடன் பேசிய நபர் “ நீங்கள் சுமந்திரனை ஆதரிக்க வேண்டாம். ஆனால் தேர்தல் முடியும்வரை அவருக்கு எதிராக பேஸ்புக்கில் எழுதாமல் இருந்தால் போதும்” என கேட்டுக் கொண்டார்.
அவர் இவ்வாறு கேட்டது எனக்கு வித்தியாசமாகவும் உண்மையில் ஆச்சரியமாகவும் இருந்தது. எனவே நான் அவரிடம் “ ஏன் அவ்வாறு கேட்கிறீர்கள்” என்று கேட்டேன்.
அதற்கு அவர் “ உங்கள் எழுத்துகள் அனைத்து தரப்பினரையும் சென்றடைகிறது. சுமந்திரன் தோற்கடிக்கப்பட வேண்டும் என்ற ஒரு பொது அலையை அது உருவாக்கிறது” என்றார்.
அவர் என் குறித்து சற்று மிகைப்படுத்தி கூறியிருக்கிறார். ஆனால் அவர் கூறியதில் ஒரு உண்மை இருக்கிறது. அதாவது இம்முறை தேர்தலில் பேஸ்புக் முக்கிய பங்காற்றுகிறது என்பது.
பல நாடுகளில் தேர்தல்களில் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதில் பேஸ்புக் முக்கிய பங்கு வகிப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
தற்போது கொரோனோ காலமாக இருப்பதால் வழக்கத்தை விட இன்னும் அதிகமாக பேஸ்பக் பங்கு வகிக்கிறது போலும்.
அதுவும் சிங்கள பகுதியைவிட தமிழ் பகுதிகளில்தான் இம்முறை பேஸ்புக் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. அதற்கு முக்கிய காரணம் சுமந்திரன் எதிர்ப்பு.
அதனால்தான் ஒரு லட்சம் வாக்குகளால் வெற்றிபெறுவேன் என திமிராக பேட்டியளித்த சுமந்திரன் இப்போது 5 நாளில் 79 சந்திப்பகளை நிகழ்த்தியுள்ளார்.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பக்கத்தில் இருந்து சுமந்திரனுக்கு எதிராக எதிர்ப்புகள் வெளிப்படுகின்றன.
பெருகி வரும் எதிர்ப்புகளை சமாளிக்க முடியாமல் தன்னந்தனியாக சுமந்திரன் தடுமாறுகிறார். பலத்த எதிர்ப்பு அவரைத் துரத்துகிறது.
துரத்தியடிக்கும் பலத்த எதிர்ப்பு
சமாளிக்க முடியாமல் ஓட்டம் பிடிக்கும் சுமந்திரன்!
குறிப்பு - சுமந்திரன் தோல்வி உறுதி செய்யப்பட்டுவிட்டது. இதையும் தாண்டி சுமந்திரன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டால் அது உலகின் எட்டாவது அதிசயமாக இருக்கும்.
  • Like 1

Share this post


Link to post
Share on other sites
3 ஜூலை, பிற்பகல் 1:12
  · பொது உடன் பகிர்ந்தது
IBOXrWGhcIu.png
 
•தோழர் சண் அவர்களின் 100வது பிறந்ததினம்!
இன்று தோழர் சண்முகதாசன் அவர்களின் 100 பிறந்த தினம் ஆகும் (03.07.1920 – 03.07.2020)
தோழர் சண் அவர்கள் தமிழ் ஆங்கிலம் சிங்களம் ஆகிய மும்மொழிகளிலும் புலமை பெற்றிருந்தார்.
இலங்கையில் தமிழ் முஸ்லிம் மற்றும் சிங்கள மூவின மக்களின் மதிப்பை பெற்றிருந்த தமிழ் தலைவர் அவர்
அதுமட்டுமல்ல சர்வதேசத்திலும் மதிப்பு பெற்றிருந்த இலங்கைத் தமிழ்த் தலைவர் அவர்.
மாசேதுங் சிந்தனைகளை இலங்கையில் அறிமுகப்படுத்தியதுடன் இறுதிவரை கொள்கை மாறாது செயற்பட்ட புரட்சியாளர் அவர்.
இலங்கையில் தமிழ் மற்றும் சிங்கள இளைஞர்கள் ஆயுதம் ஏந்திப் போராடியதற்குரிய அரசியலை வழங்கியவர் அவரே.
அதனாலேயே அனைத்து ஆயுத பிரிவு போராளிகளின் தலைமைகளும் அவர் மீது மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்தனர்.
அவர் தமிழீழ கோரிக்கையை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனாலும் தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராட்டத்தை அவர் பகிரங்கமாக ஆதரித்தார்.
ஆயுதம் ஏந்திய தமிழ் இளைஞர்களை ஜே.ஆர் ஜெயவர்தனா “பயங்கரவாதிகள்” என்றார். அமிர்தலிங்கம் “பொடியன்கள்”என்றார். ஆனால் சண்முகதாசன் மட்டுமே முதன் முதலாக அவர்களை “போராளிகள்”என்று அழைத்தார்.
அதுவும் சிறிமாவோ பண்டாரநாயக்கா, அமிர்தலிங்கம், என்எம் பெரோரா, கொல்வின் ஆர்டி சில்வா போன்ற தலைவர்கள் இருந்த மேடையில் இவ்வாறு கூறினார்.
அதனால்தான் தமிழ் போராளிகளின் தலைவர்களும் அவர் மீது மதிப்பு கொண்டதுடன் அவரை அடிக்கடி சந்தித்து ஆலோசனைகள் பெற்று வந்தார்கள்.
இறுதியாக அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தபோது அவரது மகள் அவரை இங்கிலாந்துக்கு அழைத்துச் சென்று தன்னுடன் வைத்திருந்தார்.
இங்கிலாந்திலும் அவர் சும்மா இருக்கவில்லை. பல சர்வதேச புரட்கர சக்திகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தி சர்வதேச அகிலம் ஒன்றை உருவாக்கும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தார்.
எனினும் இங்கிலாந்தில் அவர் ஓரிரு வருடங்களே உயிர் வாழ்ந்தார். இறுதியாக 08.02.1993 யன்று தனது 73வது வயதில் அவர் உயிர் பிரிந்தது.
அவருடன் அவருடைய இறுதிக்காலங்களில் நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தமை எனக்கு மதிப்பு மிக்க அனுபவத்தை தந்தது.
அவர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவர் எழுதிய “ ஒரு கம்யுனிச போராளியின் அரசியல் நினைவுகள்” என்னும் தமிழ் நூல் பதிப்பை நானே முதலில் வெளியிட்டிருந்தேன்.
அவரை நினைவு கூர்வது என்பது அவர் காட்டிய பாதையில் சென்று அவர் விரும்பிய புரட்சியை மேற்கொள்வதே ஆகும்.
குறிப்பு- தோழர் சண் பற்றி அறிய விரும்புவோர் கீழ்வரும் இணைப்பில் உள்ள வீடியோவை பார்க்கவும்.
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், அமர்ந்துள்ளார்
 
 

 

Share this post


Link to post
Share on other sites
•பிரான்சும் இந்தியாவும்!
பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற மாநகரசபைத் தேர்தலில் வெற்றி பெற்று சேர்ஜியா மகேந்திரன் துணை முதல்வராக நியமனம் பெற்றுள்ளார். அவருக்கு எமது வாழ்த்துகள்.
பிரான்ஸ்க்கு அகதியாக சென்ற ஈழத் தமிழர்களான செல்லப்பா மகேந்திரன் தேவி தம்பதிகளின் புதல்வியான சேர்ஜியா சட்டம் படித்து இன்று துணை முதல்வராக வந்துள்ளார்.
ஆனால் இந்தியாவில் 1983ம் அண்டு முதல் அகதிகளாக இருக்கும் ஈழத் தமிழர் குடியுரிமை பெறவும் முடியவில்லை. உயர் கல்வி பெறவும் முடியவில்லை.
மாறாக இந்த கொரோனோ காலத்திலும் தம்மை விடுதலை செய்யுமாறு கோரி உண்ணாவிரதம் இருக்கும் அவலநிலை.
இந்த லட்சணத்தில் இந்திய பிரதமர் மோடி தனக்கு பின்னால் இருப்பதாக சம்பந்தா ஐயா பெருமையாக கூறுகிறார்.
என்னே கேவலம் இது!
107708962_10223587792304145_470571652926
 
 
107622398_10223587795464224_730992297671
 
 
 
 
 

Share this post


Link to post
Share on other sites
6 ம  · பொது உடன் பகிர்ந்தது
IBOXrWGhcIu.png
 
அரசு ஆயுதம் கொண்டு வன்முறையை பாவிக்கும்போது அதற்கு ஆயுதரீதியாக பதில் அளிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. இதுவே ஆயுதப் போராட்டத்தின் பின்னால் உள்ள அரசியல்.
இதுவே எளிமையாக “ அடிப்பதுதான் வன்முறை. திருப்பி அடிப்பது வன்முறை அல்ல . அது தற்காப்பு” என்று கூறப்படுகிறது.
இது சுமந்திரனுக்கு புரியவில்லை அல்லது புரிந்தும் வேண்டுமென்றே “ ஆயுதப் போராட்டம் வன்முறை என்றும் நான் அகிம்சை வழியில் தீர்வு பெற்று தருவேன்” என்று கூறுகிறார்.
சரி அப்படியென்றால் கடந்த 11 வருடங்களாக சுமந்திரன் செய்த அகிம்சைப் போராட்டம் என்ன? அதன்மூலம் பெற்ற தீர்வு என்ன? என்று கேட்டால்
அதற்குரிய பதிலை தரவேண்டும். ஆனால் மாறாக “நீங்கள் என்ன செய்தீர்கள?;” என்று திருப்பி கேட்கிறார்கள் சுமந்திரன் தம்பிகள்.
கேள்வி கேட்டால் முதலில் அதற்குரிய பதிலை அளிக்க வேண்டும். அதைவிடுத்து திருப்பி கேள்வி கேட்பது உரிய பதில் இல்லை என்பதை சுமந்திரன் தம்பிகள் முதலில் உணர வேண்டும்.
இதுவரையில் பதவியில் இருந்தது சுமந்திரன்தான். இப்போது வந்து மீண்டும் பதவி தாருங்கள் என்று கேட்பதும் சுமந்திரன்தான். எனவே சுமந்திரனிடம் கேள்வி கேட்பதற்கு ஒவ்வொரு தமிழனுக்கும் உரிமையும் தகுதியும் உண்டு என்பதையும் சுமந்திரன் தம்பிகள் உணர வேண்டும்.
மாறாக ஒருவர் ஏதாவது சாதித்த பின்புதான் வந்து சுமந்திரனிடம் கேள்வி கேட்க வேண்டும் என்று கருதுவது ஆக்கபூர்வமான உரையாடலுக்கு வழி சமைக்காது என்பதை சுமந்திரன் தம்பிகள் உணர வேண்டும்.
எப்படித்தான் சுட்டிக்காட்டினாலும் சில தம்பிகள் புரிந்து கொள்ளப் போவதில்லை. ஏனெனில் அவர்கள் அற்ப சுயநல சலுகைகளுக்காக சுமந்திரனை ஆதரிக்கிறார்கள்.
சுமந்திரன் தோல்வியுற்றதும் செத்த மாட்டில் இருந்து உண்ணிகள் கழருவதுபோல் இவர்கள் கழன்று சென்று விடுவார்கள்.
இது சுமந்திரனுக்கும் நன்கு தெரியும்.
படம் இதைக் கொண்டிருக்கலாம்: , ’எல்லோரிட பேசி புரிய வைக்க முயற்சிக்காதீர்கள் சில நேரங்களில் எதிரில் நிற்பது எருமையாக கூட இருக்கலாம்’ எனச்சொல்லும் உரை
 
 
 
 

Share this post


Link to post
Share on other sites

•சுமந்திரன் உருவப் பொம்மையை எரித்தால்
இலங்கை அரசு ஏன் எரிச்சல் அடைகிறது?

கடந்த மே மாதம் 14ம் திகதி இயக்குனர் களஞ்சியம் அவர்கள் தமிழ்நாட்டில் சுமந்திரனின் உருவப் பொம்மைக்கு செருப்படி வழங்கி எரித்தார்.

உடனே இலங்கைப் புலனாய்வு பிரிவைச் சேர்ந்தவர்கள் களஞ்சியம் அவர்களை போனில் தொடர்பு கொண்டு மிரட்டியுள்ளனர் என அறிய வருகிறது.

“எமக்கு தமிழ்நாட்டில் 200 பேர் இருக்கிறார்கள். கருணா அம்மானுக்கு 300 பேர் இருக்கிறார்கள். எல்லோரும் சேர்ந்து உன்னை தூக்குவோம்” என்று களஞ்சியம் அவர்களை கொச்சைத் தமிழில் மிரட்டியுள்ளனராம்.

இதைவிட தமிழக கியு பிரிவு பொலிஸ் “தேவையானால் மோடியின்ரை உருவப் பொம்மையை கொளுத்துங்க. ஆனால் சுமந்திரன் உருவப் பொம்மையை மட்டும் கொளுத்தாதீங்க” என்று கேட்கிறார்களாம்.

சுமந்திரன் உருவப் பொம்மை எரித்தமைக்கு நேரடியாக வழக்கு போட முடியாததால் கொரோனோவில் வீட்டை விட்டு வெளியேறியது குற்றம் என்று வழக்கு போடுகிறார்களாம்.

இப்போது எமது கேள்வி என்னவெனில் சுமந்திரன் தமிழர் தலைவர் என்றால் அவரது உருவப் பொம்மை எரிக்கப்பட்டமைக்கு தமிழ் மக்கள்தானே எரிச்சல்பட வேண்டும். ஏன் இலங்கை இந்திய அரசுகள் எரிச்சல் அடைகின்றன?

இலங்கை இந்திய அரசுகள் தாம் நேரடியாக செய்ய முடியாததை சுமந்திரன் மூலம் சாதிக்க முனைகின்றன என்பதே இதன் அர்த்தம் ஆகும்.

எனவேதான் சுமந்திரன் தோல்வியுற்றால் மீண்டும் தமிழ் தேசிய உணர்வு மேலோங்கிவிடும் என இவ் அரசுகளின் புலனாய்வு அமைப்புகள் அச்சமடைகின்றன.

குறிப்பு- இயக்கனர் களஞ்சியம் அவர்கள் நான் எழதிய “ ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” என்னும் நூலை பெற்றுக்கொண்டபோது எடுத்த படம். இந்த படத்தை பார்த்ததும் இதற்காக இன்னொருமுறை களஞ்சியத்தை கியூ பிரிவினர் விசாரிக்கப் போகிறார்கள்? பாவம் மனுசன்.

Image may contain: 1 person, standing
Image may contain: 1 person, standing and beard
  • Like 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.