Sign in to follow this  
தமிழ் சிறி

கொரோனா வைரஸின் வீரியம் குறைந்து வருகிறது – இத்தாலி வைத்தியர்

Recommended Posts

corona-8.jpg

கொரோனா வைரஸின் வீரியம் குறைந்து வருகிறது – இத்தாலி வைத்தியர்

கொரோனா வைரஸின் வீரியம் குறைந்து வருவதாக இத்தாலியைச் சேர்ந்த சிரேஸ்ட வைத்தியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கொரோனாவின் ஆபத்துக்கள் படிப்படியாக குறையும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

கொரோனா தொற்றால் அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகளில் ஒன்றான இத்தாலியில் இதுவரை கொரோனா தொற்றுக்கு 2,32,997 பேர் பாதிக்கபட்டுள்ளனர். அத்தோடு, 33,415 பேர் உயிரிழந்துள்ளனர்.

மே மாதத்தில் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இருந்தபோதும் சில கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில், கொரோனா வைரஸின் வீரியம் குறைந்து வருவதாக தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய செவ்வியில் இத்தாலியைச் சேர்ந்த சிரேஸ்ட வைத்தியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் இருந்த கொரோனாவின் பலமும் இன்றைக்கு இருக்கும் கொரோனாவில் பலமும் ஒன்று அல்ல என ஜெனோவா சான் மார்டினோ மருத்துவமனை தொற்று நோய்கள் பிரிவு தலைவரான மேட்டியோ பாசெட்டி கூறியுள்ளார். இதன் மூலம் இன்றைய கொரோனா தொற்று வித்தியாசமானது என தெளிவாக தெரிகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கொரோனா வைரஸ் மருத்துவ ரீதியாக இனி இத்தாலியில் இல்லை என கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளித்து வரும் சான் ரஃபேல் மருத்துவமனையின் தலைவர் ஆல்பர்டோ ஜாங்க்ரிலோ தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்கு முன் துணியில் எடுக்கப்பட்ட தொற்று மாதிரிகளோடு ஒப்பிடுகையில், கடந்த 10 நாட்களாக துணியில் எடுக்கப்படும் மாதிரிகளில், வைரஸ் தொற்று, எண்ணிக்கை அடிப்படையில் கணக்கிட முடியாத அளவில் இருந்தது.

சில நிபுணர்கள் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலைக்கு வாய்ப்பிருப்பதாக எச்சரித்துள்ளனர். எனவே அரசியல்வாதிகள், புதிய எதார்த்த நிலையை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டிய தேவை உள்ளது. நாம் ஒரு சாதாரண நாடாக திரும்ப வேண்டும்.

அரசு எச்சரிக்கையுடன், விரைவில் கொரோனாவில் இருந்து வெற்றி பெறுவோம் என கூறுகிறது. கொரோனா தொற்று மறைந்துவிட்டது என்ற ஆய்வறிக்கையை ஆதரிக்க அறிவியல்பூர்வமான ஆதாரங்கள் நிலுவையில் உள்ளன.

எனவே இத்தாலியர்களை குழப்பாத வகையில் உறுதியாக கூற முடியுமென்பவர்களை அழைக்கிறேன் என இத்தாலிய சுகாதாரத்துறை துணை செயலரான சாண்ட்ரா ஜம்பா தனது அறிக்கையில் கூறியிருந்தார்.

அதற்கு பதிலாக இத்தாலியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடனும் உடல் ரீதியான இடைவெளியை பின்பற்றவும், கூட்டம் கூடுவதையும், அடிக்கடி கைகளை கழுவுவதையும், முகக்கவசம் அணியவும் அழைக்க வேண்டும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

http://athavannews.com/கொரோனா-வைரஸின்-வீரியம்-க/

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • வில்லாதி வில்லன்(1995) சத்தியராஜ் & பகிடி தலைவர் ..👍
    • உண்மைதான் தமிழ் சிறி அண்ணா.   நாங்கள் இந்த கடலையை அவித்து, அதை வெங்காயம், செத்தல்மிளகாய், கடுகு, பெருஞ்சீரகம், கறிவேப்பிலை எல்லாம் போட்டு தாளித்து சாப்பிடுவோம். எனது Fiji நண்பி, பச்சைமிளகாய், வெங்காயம், ஒரு உள்ளி பல், கரம் மசாலா போட்டு செய்வதாக கூறுவா.  நான் இந்த 3 முறைகளிலும் செய்வது வழமை. உங்கள் எல்லோரது கருத்துக்களுக்கும் நன்றிகள்  
    • இயேசுவே என்னுடன் நீ பேசு  
    • சித்தர்கள்   சென்ற நூற்றாண்டில் மெல்ல மெல்ல சைவம் சித்தர் மரபை உள்ளிழுத்துக்கொண்ட பரிணாமத்தை நாம் காண்கிறோம். அதனுடன் இணைந்து பிறர் நோயைத் தொட்டு மருத்துவம் செய்ய வேண்டும் என்பதனால் ஆசாரமானவர்கள் செய்யத் தயங்கி வந்த மருத்துவமும் உயர்குடிச் சைவர்களால் கையகப்படுத்தப்பட்டது. சென்ற நூற்றாண்டில் வெளிவந்த நூல்களைப் பார்த்தோமென்றால் ஒரு பெரும் பகுதி சைவ நூல்கள் என்பதைக் காணலாம். ஒரு மாபெரும் அறிவுக் கொந்தளிப்பே நடந்திருக்கிறது. அந்நூல்களில் பெரும் பகுதி அப்படியே காலத்தின் ஆழத்தில் மூழ்கி இல்லாமலாயின. அவற்றில் நடந்திருக்கும் கருத்துச் செயல்பாட்டை மூன்று புள்ளிகளில் வகுக்கலாம். அவை: 1. வேத, வேதாந்த மரபில் இருந்து முடிந்த வரை சைவத்தை விலக்கிக் கொண்டுவருதல். 2. சைவத்தையும் தமிழையும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்களாகக் காட்டுதல். திருக்குறள் போன்ற நூல்களை சைவத்துக்குள் கொண்டு வந்து நிறுவுதல். 3. சித்தர் மரபு போன்றவற்றை சைவத்திற்குள் கொண்டுவந்து ஒரு தொகுப்புத் தன்மையை உருவாக்குதல். இவ்வாறு எழுதப்பட்ட பல்லாயிரம் பக்கங்கள் வழியாகவே சைவ மரபு சித்தர் மரபை உள்வாங்கிக்கொண்டது. ஆனால், சித்தர் பாடல்களை நேரடியாகப் படிப்பவர்கள் அவை சைவத்துக்குள் அடங்குபவை அல்ல என்பதை எளிதில் காணலாம். அவற்றுக்கு இந்து ஞான மரபில் உள்ள ஜடவாத தரிசனங்களுடனும் வேதாந்த தரிசனங்களுடனும் ஆழமான உறவு உண்டு. சித்தர்களை அப்படி ஒரு குறிப்பிட்ட தத்துவக் கோட்பாட்டுச் சட்டகத்துக்குள் அடக்க முடியாது.