• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
தமிழ் சிறி

கொரோனா வைரஸின் வீரியம் குறைந்து வருகிறது – இத்தாலி வைத்தியர்

Recommended Posts

corona-8.jpg

கொரோனா வைரஸின் வீரியம் குறைந்து வருகிறது – இத்தாலி வைத்தியர்

கொரோனா வைரஸின் வீரியம் குறைந்து வருவதாக இத்தாலியைச் சேர்ந்த சிரேஸ்ட வைத்தியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கொரோனாவின் ஆபத்துக்கள் படிப்படியாக குறையும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

கொரோனா தொற்றால் அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகளில் ஒன்றான இத்தாலியில் இதுவரை கொரோனா தொற்றுக்கு 2,32,997 பேர் பாதிக்கபட்டுள்ளனர். அத்தோடு, 33,415 பேர் உயிரிழந்துள்ளனர்.

மே மாதத்தில் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இருந்தபோதும் சில கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில், கொரோனா வைரஸின் வீரியம் குறைந்து வருவதாக தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய செவ்வியில் இத்தாலியைச் சேர்ந்த சிரேஸ்ட வைத்தியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் இருந்த கொரோனாவின் பலமும் இன்றைக்கு இருக்கும் கொரோனாவில் பலமும் ஒன்று அல்ல என ஜெனோவா சான் மார்டினோ மருத்துவமனை தொற்று நோய்கள் பிரிவு தலைவரான மேட்டியோ பாசெட்டி கூறியுள்ளார். இதன் மூலம் இன்றைய கொரோனா தொற்று வித்தியாசமானது என தெளிவாக தெரிகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கொரோனா வைரஸ் மருத்துவ ரீதியாக இனி இத்தாலியில் இல்லை என கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளித்து வரும் சான் ரஃபேல் மருத்துவமனையின் தலைவர் ஆல்பர்டோ ஜாங்க்ரிலோ தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்கு முன் துணியில் எடுக்கப்பட்ட தொற்று மாதிரிகளோடு ஒப்பிடுகையில், கடந்த 10 நாட்களாக துணியில் எடுக்கப்படும் மாதிரிகளில், வைரஸ் தொற்று, எண்ணிக்கை அடிப்படையில் கணக்கிட முடியாத அளவில் இருந்தது.

சில நிபுணர்கள் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலைக்கு வாய்ப்பிருப்பதாக எச்சரித்துள்ளனர். எனவே அரசியல்வாதிகள், புதிய எதார்த்த நிலையை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டிய தேவை உள்ளது. நாம் ஒரு சாதாரண நாடாக திரும்ப வேண்டும்.

அரசு எச்சரிக்கையுடன், விரைவில் கொரோனாவில் இருந்து வெற்றி பெறுவோம் என கூறுகிறது. கொரோனா தொற்று மறைந்துவிட்டது என்ற ஆய்வறிக்கையை ஆதரிக்க அறிவியல்பூர்வமான ஆதாரங்கள் நிலுவையில் உள்ளன.

எனவே இத்தாலியர்களை குழப்பாத வகையில் உறுதியாக கூற முடியுமென்பவர்களை அழைக்கிறேன் என இத்தாலிய சுகாதாரத்துறை துணை செயலரான சாண்ட்ரா ஜம்பா தனது அறிக்கையில் கூறியிருந்தார்.

அதற்கு பதிலாக இத்தாலியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடனும் உடல் ரீதியான இடைவெளியை பின்பற்றவும், கூட்டம் கூடுவதையும், அடிக்கடி கைகளை கழுவுவதையும், முகக்கவசம் அணியவும் அழைக்க வேண்டும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

http://athavannews.com/கொரோனா-வைரஸின்-வீரியம்-க/

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • டிக்டாக்கை வாங்கும் முயற்சியில் மைக்ரோசாப்டை தொடர்ந்து களமிறங்கிய டுவிட்டர்   வாஷிங்டன்: தென்சீன கடல் விவகாரம், வர்த்தகப்போரில் தொடங்கிய அமெரிக்க-சீன மோதல் கொரோனா வைரஸ் விவகாரத்தில் உச்சத்தை அடைந்தது.  வைரஸ் தொடர்பாக இரு நாடுகளும் ஒருவரை ஒருவர் குற்றச்சாட்டி வந்தனர். இந்த மோதலை மேலும் அதிகரிக்கும் வகையில் கொரோனா தடுப்பூசி தகவல்களை திருட முயற்சிப்பதாக சீனா மீது அமெரிக்கா அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தியது.    மேலும், அமெரிக்காவின் ஹூஸ்டனில் உள்ள சீன தூதரகம் உளவு வேலையில் ஈடுபடுவதாக கூறி தூதரகத்தை உடனடியாக மூட உத்தரவிட்டது. ஹூஸ்டன் தூதரகம் மூடப்பட்ட சில நாட்களில் பதிலடி நடவடிக்கையாக வுகான் நகரில் அமெரிக்க தூதரகத்தை சீனா மூடியது. இதனால் இரு நாடுகௌக்கு இடையே பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. இந்த மோதலின் ஒரு பகுதியாக சீனாவின் பிரபலமான டிக்டாக் செயலியை அமெரிக்காவில் தடைவிதிக்க அதிபர் டிரம்ப் சிறப்பு உத்தரவு பிறப்பித்தார். அமெரிக்கர்களின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்கும் வகையில் இந்த தடை அமல்படுத்தப்படும் என அவர் தெரிவித்தார். இதற்காக டிக்டாக்கின் தாய் நிறுவனமான பைட்டான்சுக்கு 45 நாட்கள் அவகாசம் விதிக்கப்பட்டது. செப்டம்பர் 15-க்குள் டிக்டாக்கின் அமெரிக்க உரிமத்தை அமெரிக்க நிறுவனத்திடம் விற்றுவிடவேண்டும் அல்லது தங்கள் நாட்டில் செயலிக்கு தடை விதிக்கப்படும் என டிரம்ப் காலக்கெடு விதித்தார். இதையடுத்து, டிக்டாக்கின் அமெரிக்க உரிமத்தை வாங்கும் முயற்சியில் மைக்ரோசாப்ட் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இதற்காக டிக்டாக்கின் தாய் நிறுவனமான பைட்டான்சுடன் மைக்ரோசாப்ட் நிறுவனம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது டுவிட்டர் நிறுவனமும் இந்த களத்தில் குதித்துள்ளது. டிக்டாக்கின் அமெரிக்க உரிமத்தை வாங்க டுவிட்டர் நிறுவனமும் முயற்சித்து வருகிறது. இதற்கான பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருகிறது. டிக்டாக்கின் அமெரிக்க உரிமத்தை வாங்க மைக்ரோசாப்ட் மற்றும் டுவிட்டர் நிறுவனங்கள் முயற்சித்து வரும் நிலையில் நிதி அடிப்படையில் அதிக பலம்வாய்ந்த மைக்ரோசாப்டே டிக்டாக்கின் உரிமத்தை கைப்பற்ற அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   https://www.maalaimalar.com/news/topnews/2020/08/09155024/1769153/Twitter-and-TikTok-reportedly-have-had-talks-about.vpf  
    • நல்ல விடயம். ஆனால் சம் சும் & co வின் அருவருடியாக இல்லாது சுதந்திரமாக செயற்பட வேண்டும்
    • திருமலைக் கோடி தங்கக் கோயில் நாராயணி அம்மா உன் குருவடி பாதம் சரணமடைந்தேன் குறைகள் இல்லையம்மா வேல்விழியாளே நானுனைக் காண வேலூர் வந்தேனே உன் காலடி கண்டே நீண்ட காலம் சுகமாய் வாழ்வேனே நாராயணி நமோ நாராயணி நாராயணி லக்ஷ்மி நாராயணி நாராயணி நமோ நாராயணி நாராயணி லக்ஷ்மி நாராயணி தாமரைப்பூவில் வாழும் காமனின் தாயே தயை செய்ய நேரமில்லையோ பூ மகளே பொன்னருளே நானும் உன் மகள்தானம்மா ஸ்ரீ மஹா லக்ஷ்மியே கண் பாராயம்மா ஸ்ரீதர கேசவன் மாதவன் மார்பில் வாழும் ஸ்ரீமதியே உன் திருவிளக்கேற்றி வணங்குகின்றேன் நற்றாரும் மாநிதியே திருமகளே வரமருளே காலடியின் ஓரத்திலே நான் வாழ ஆனந்த யோகம் நாளும் அளித்திடும் மாயே அடியேனை மறந்தனையோ ஸ்ரீபுரமே வாழ்பவளே ஸ்ரீரங்கன் மகிழ் தேவியே நான் உன்னை பூஜித்தேன் மலர்த் தூவியே ஜோதி அண்ணாமலை ஆதி திருமலை இடையினில் வாழ்பவளே உன் திருமலைக் கோடி வருபவர் கோடி தருவாய்த் திருவருளே பொன்மகளே மண்மகளே யோகா சுப மங்களங்கள் எனை சேர  
    • களப்பணி அடிமட்ட தொண்டனுக்கு அவசியம் 👍 இலங்கையில் தேர்தல் நடந்ததா? 😂
    • அது நல்ல விடயம் தானே?   அவர் இந்த இனங்களை இலக்குவைத்துத் தாக்குவதாக நான் நினைக்கவில்லை. ஆனால், கருனாநிதியின் குடும்பம் நன்றாக விமர்சிக்கப்படுகிறது. அதேபோல, தெலுங்கு வம்சாவளி அரசியல்வாதிகளும், திராவிட இயக்கங்களின் பின்புலத்தில் இயங்கும் தெலுங்கு வம்சாவளியினரும் குறிவைக்கப்படுவதை மறுக்கவில்லை. இதுகூட ஒரு வரையறைக்குள்தான் கிருபன். பணம் இதைவிடப் பலமடங்கு பலத்தினை தேர்தலில் செலுத்துகிறது. இதைவிடவும், பரம்பரை பரம்பரையாக நடிகர்களை வழிபடும் சமூகம் விழித்துக்கொண்டு, உண்மையாக மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்களை பின்பற்றுவது என்பது பல ஆண்டுகள் எடுக்கக் கூடியது. சீமான் இப்போது செய்வது அம்மக்களை தெளிவூட்டி, அரசியல் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதுதான்.