Jump to content

யுத்தத்தை முடிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இந்தியா இருந்தது : புலிகளுடனான போராட்டம் குறித்து பொன்சேகா கருத்து


Recommended Posts

(ஆர்.யசி)

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் பிடிபட்டிருந்தால் இன்று வடக்கு -கிழக்கு அரசியலில் மிகப்பெரிய சக்தியாக இருந்திருப்பார், வடக்கு கிழக்கை தனது அரசியல் கட்டுப்பாட்டில் வைத்திருந்திருப்பார் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

மேற்கத்திய நாடுகள் யுத்தத்தை நிறுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தாலும் கூட யுத்தத்தை முடிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இந்தியா இருந்தது எனவும் அவர் கூறினார்.

முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போதைய எதிர்க்கட்சி உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா விடுதலைப்புலிகளுடனான போராட்டம் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே இதனைக் கூறினார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒரு பயங்கரவாத குழுவின் தலைவராக இருந்தாலும் கூட அவர் தோல்வி வருமென தெரிந்தும் இறுதிவரை போராட்டத்தை நடத்தியவர் என்ற விதத்தில் அவர் மீது ஒரு மரியாதை உள்ளது.

எவ்வாறு இருப்பினும் பிரபாகரனை உயிருடன் பிடிக்க எந்த எண்ணமும் எமக்கு இருக்கவில்லை. அவ்வாறு அவரை உயிருடன் பிடித்திருந்தால் இன்று அவரும் அரசியலில் ஈடுபட்டிருப்பார்.

கே.பி இன்று என்ன செய்கின்றார், கருணா என்ன செய்கின்றார், பிள்ளையான் என்ன செய்கின்றார்? இவர்கள் அனைவரும் இன்றைய அரசியல் தலைவர்களின் தோழில் கைபோட்டு அரசியல் செய்வதை நாம் பார்க்கின்றோம். பயங்கரவாதிகள் என அடையாளம் காணப்பட்டவர்கள் இன்று ராஜபக்ஷக்களுடன் அரசியல் செய்கின்றனர்.

பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால் அவர் இன்று அரசியலில் மிகப்பெரிய சக்தியாக இருந்திருப்பார். அரசியல் ரீதியில் வடக்கு கிழக்கை அவரது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒரு நபராக இருந்திருப்பார். ஆகவே அவர் கொல்லப்பட்டதே சரியென நினைக்கிறேன்.

விடுதலைப்புலிகளுக்கும் பிரபாகரனுக்கும் சர்வதேசத்துடன் தொடர்புகள் இருந்தது. அவர்களுக்கான ஆயுத மற்றும் நிதி உதவிகள் சர்வதேச நாடுகளின் மூலமாக கிடைத்தது.

ஆனால் இந்தியா இதில் மாற்று நிலைப்பாட்டில் இருந்ததே உண்மை. இந்தியாவிற்கு யுத்தத்தை நிறுத்த வேண்டும் என்ற நோக்கம் இருக்கவில்லை. இந்தியாவும் யுத்தத்தில் பாதிக்கப்பட்டது, அவர்களின் பிரதமரும் கொல்லப்பட்டார். இந்தியா கூறியதை விடுதலைப்புலிகள் கேட்கவும் இல்லை.
ஆகவே இந்தியா யுத்த நிறுத்த விடயங்களில் தலையிடவில்லை. பாகிஸ்தானும் சீனாவும் எமக்கு உதவிகளை செய்தனர். ஆனால் மேற்கத்திய நாடுகள் யுத்தத்தை நிறுத்த வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டில் இருந்தனர்.

யுத்தத்தை யாராலும் வெற்றிகொள்ள முடித்து, இதனால் பொதுமக்கள் கொல்லப்படுவார்கள் என்ற நிலையில் இருந்தனர். சில நாடுகளின் உயர்ஸ்தானிகர்கள் என்னுடன் நேரடியாக பேசி சமாதான பேச்சுவார்த்தைக்கு வலியுறுத்தினர். ஆனால் யுத்தத்தை முடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நாம் இருந்தோம் என்றார்.

https://www.virakesari.lk/article/83207

Link to comment
Share on other sites

  • Replies 55
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

புலிகளை அழித்து ஹிந்தியா பிராந்தியத்தில் தனக்கான மரணப் படுகுழியை தானே தோண்டி விட்டுள்ளது. இதனையே இன்று நாம் பார்கிறோம்.

ஹிந்தியாவைச் சுற்றி யாருமே ஹிந்தியா நம்பக் கூடிய நண்பர்களாக இல்லை. இந்த நிலையை ஹிந்தியா தனது தப்பான கொள்கைகளால் உருவாக்கிக் கொண்டுள்ளது. பாகிஸ்தான் அப்படி.. சீனா அப்படி.. நோபாளம் அப்படி.. சொறீலங்கா அப்படி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

புலிகளை அழித்து ஹிந்தியா பிராந்தியத்தில் தனக்கான மரணப் படுகுழியை தானே தோண்டி விட்டுள்ளது. இதனையே இன்று நாம் பார்கிறோம்.

ஹிந்தியாவைச் சுற்றி யாருமே ஹிந்தியா நம்பக் கூடிய நண்பர்களாக இல்லை. இந்த நிலையை ஹிந்தியா தனது தப்பான கொள்கைகளால் உருவாக்கிக் கொண்டுள்ளது. பாகிஸ்தான் அப்படி.. சீனா அப்படி.. நோபாளம் அப்படி.. சொறீலங்கா அப்படி.

வாசிக்கவே மகிழ்ச்சியாக உள்ளது. இந்தப் போக்கு மென்மேலும் வளர்ச்சியடைய வேண்டும். 👍

Link to comment
Share on other sites

7 hours ago, ampanai said:

ஆகவே இந்தியா யுத்த நிறுத்த விடயங்களில் தலையிடவில்லை.

பாகிஸ்தானும் சீனாவும் எமக்கு உதவிகளை செய்தனர்.

ஆனால் மேற்கத்திய நாடுகள் யுத்தத்தை நிறுத்த வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டில் இருந்தனர்.

வரலாற்றில் எமது தமிழீழ வரலாற்றில் மட்டுமல்ல இந்திய வரலாற்றிலும் இது தாக்கத்தை ஏற்படுத்தும். 

Link to comment
Share on other sites

8 minutes ago, ampanai said:

வரலாற்றில் எமது தமிழீழ வரலாற்றில் மட்டுமல்ல இந்திய வரலாற்றிலும் இது தாக்கத்தை ஏற்படுத்தும். 

இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவர் முகநூலில் போட்ட கருத்து படம் !

78630834_10158105390136855_4880540444192145408_n.jpg?_nc_cat=109&_nc_sid=730e14&_nc_ohc=guWll7heghUAX_LoRUK&_nc_ht=scontent-yyz1-1.xx&oh=7da075760a454af228f98cba1025247f&oe=5EFCA1D7

Source photo?fbid=10217396987104778&set=a.11131

சுதந்திர தமிழீழமே இந்தியாவிற்கு பலம் என்பதை டெல்லி உணர மறுக்கும் ஒவ்வொரு நாளும் பாகிஸ்தான் + சீனா + சிறிலங்கா இந்தியாவை உடைக்கும் நாட்களை நெருங்கிய நாட்களாகவே இருக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா யுத்தத்தை முடிக்க வேண்டும் என விரும்பியது அந்தக் காலம் 

ஆனால் 

இந்தியாவை முடிக்க வேண்டும் என தமிழர்  விரும்புவது இந்தக் காலம் 

 

(ஆமியைக் கண்டு புலிகளோடியது அந்தக் காலம் என்கின்ற பாட்டு யாருக்கேனும் ஞாபகம் வருகிறதா 😀)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா... தான் விட்ட  தவறை, உணர்வது மாதிரி தெரியவில்லையே...
அல்லது  உணர்ந்தும்... வெளியில் காட்டிக் கொள்ளாமல், இருக்கிறார்களோ தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ampanai said:

ஆனால் இந்தியா இதில் மாற்று நிலைப்பாட்டில் இருந்ததே உண்மை.

அகண்ட பாரதம் வேண்டும் என்றால் பிரிவினை இயக்கங்களை ஆதரிக்க முடியாது பொன்சேக்கா மாத்தையா....அரசியலில் எதுவும் நடக்கும் ....ஈழம் என்ற நாட்டை உருவாக்கி லாபமடைவதைவிட சிறிலங்கா என்ற நாட்டை இந்தியாவுடன் இணைத்தால் என்ன என்ற எண்ணம் உருவாகியிருக்கலாம்.....சிங்கள பகுதிக்கு இந்தியாவின் யுனியன் பிரதேசத்த்தின் அதிகாரத்தை வழங்க நினைத்திருக்கலாம் .....ஒரு நாடு இரு அரசியல் சாசனம் என்று சொல்லலாம்....கொங்கொங்க்,தாய்வான் போன்ற நாடுகளுக்கு சீனா அதிகாரம் செலுத்துவது போன்று......

Link to comment
Share on other sites

14 hours ago, ampanai said:

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் பிடிபட்டிருந்தால் இன்று வடக்கு -கிழக்கு அரசியலில் மிகப்பெரிய சக்தியாக இருந்திருப்பார், வடக்கு கிழக்கை தனது அரசியல் கட்டுப்பாட்டில் வைத்திருந்திருப்பார் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

உயிருடன் சரணடைந்த பாலச்சந்திரன் என்ற சிறுவனை கொன்றதன் மூலம் நீங்கள் அனைவரும் போர்க்குற்றவாளிகள் / அரச பயங்கரவாதிகள் என்பது மீண்டும்  உறுதியானது.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, putthan said:

கொங்கொங்க்,தாய்வான் போன்ற நாடுகளுக்கு சீனா அதிகாரம் செலுத்துவது போன்று......

நீங்கள் இப்படி இங்கு எழுதலாம். தாக்கம் ஒன்றுமில்லை.

ஆனால், எமது பிரச்சனையை, இலங்கைத்தீவின் அரசியல் ஒழுங்கு முறை கிந்தியா  விரும்பிய படி தான் இருக்கவேண்டும் என்பதை ,    ஹொங் காங் மற்றும் தைவானின் வரலாறு தெரியாமல் ஒப்பிட்டு வேறு வெளியாருடன் உரையாடாதீர்கள்.

ஹொங் காங் மற்றும் தைவான் இன் பிரச்சனைகளும் வரலாறும் முற்றிலும் வேறு பட்டது.

ஹாங் காங் மக்கள் சீன Han இனத்தவரின் புராதன பிரிவினர். புராதன காலத்தில் வடமேற்கு சீனாவில் இருந்து இடம் பெயர்ந்து இப்பொது தென்கிழக்கு சீனாவில்,  Guangzhou உம அதனை சுற்றியுள்ள இடங்களிலும் பெருமளவில் உள்ளனர். Guangzhou இந்த இன்னொரு பெயர் Canton.

hong காங் எப்போதுமே சீனாவின் இறைமை உள்ள இடம், ஒப்பிய யுத்தத்தில் பிரித்தானியா ஆக்கிரமிக்க, பின்பு நீண்ட குத்தகையாக கொடுக்கப்பட்டு, சீனாவுக்கு மீண்டது 1999 இல்.   

Taiwan உம் சீனாவின் இறைமை உள்ள இடம். சீ   Taiwan தனிநாடு என்பதற்கு ஒரு வரலாற்று, இன, மொழி, மானிடவியல், ஏன் அரசியல் தனித்துவம் கூட இல்லை. சீனாவில், மாசேதுங் தொடங்கிய long march இன்னும் உத்தியோகபூர்வமாக முடியவில்லை. இதை வைத்து அமெரிக்கா புகுந்தது,. அந்த லோங் மார்ச் தைவானில் இப்பொது இருக்கும் ஆளும் குழாமை தூக்கி எறிந்த போது, தப்பி தைவான்  இற்கு சென்றார்கள். அமெரிக்கா  பாதுகாப்பு கொடுக்க. சீனாவிடம் பலம் இப்பொது, வரலாற்று மறுவான அப்போது முடிக்க முடியாமல் போன long march ஐ அடுத்த 10-20 ஆண்டுகளுக்குள் முடிவு செய்யும். 

Link to comment
Share on other sites

On 1/6/2020 at 23:44, ampanai said:

மேற்கத்திய நாடுகள் யுத்தத்தை நிறுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தாலும் கூட யுத்தத்தை முடிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இந்தியா இருந்தது எனவும் அவர் கூறினார்.

தமிழின விரோத ஹிந்திய அரச பயங்கரவாதிகள் தமிழர் பலம் பெறுவதை விரும்பாது தமிழின அழிப்பில் கூடிய நாட்டம் கொண்டிருந்தமை அனைவரும் அறிந்ததே. ஹிந்திய அரச பயங்கரவாதிகள் தமிழீழ மண்ணில் நடத்திய சமூகவிரோத செயற்பாடுகளும், சித்திரவதைகளும், படுகொலைகளும் தெரியாததல்ல.

அதன் தொடர்ச்சியாக தொடர்ந்து தமிழின படுகொலைகளில் பல்வேறு விதங்களில் பங்களித்தமையும் தெரியாததல்ல. இதற்கான விலையை ஹிந்திய அரச பயங்கரவாதிகள் கொடுத்தே ஆவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Kadancha said:

புராதன காலத்தில் வடமேற்கு சீனாவில் இருந்து இடம் பெயர்ந்து இப்பொது தென்கிழக்கு சீனாவில், 

 

நீங்களே கூறியிருக்கின்றீர்கள் புராதன காலத்தில் குடியேறிய சீனர்கள் அங்கு வாழ்வதால்....பிறகு பிரிடிஷ் குத்தகைக்கு எடுத்துபடியால் அது மீண்டும் சீனாக்கு சொந்தம் என்ற கருத்துபட அத்துடன் மாவோவையும் குறிப்பிட்டுள்ளீர்கள்...

ஏன் அதே கொள்கை இலங்கைக்கு சரிவராது...
புராதான காலத்தில் குடியேறிய தமிழர்கள் ,பிரிடிஷ் போர்தொடுத்து கைப்பற்றிஆட்சி செய்து விட்டு சென்ற நாடு...
(எமக்கு பக்கத்தில் இருக்கும் இந்தியா , சீனாவை போன்று இராணுவபலத்தை பாவிக்ககூடிய தைரியம் இருந்தால் சிறிலங்காவை முழுதாக கையகப்படுத்தலாம் ....கையக படுத்தினாலும்...கேட்க சர்வதேசம் வந்தாலும் சீனாவை போன்று துணிந்து நிற்க வேண்டும்)தீபேத்தை கைப்பற்றி தன்னகத்தே வைத்திருப்பது போன்று..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, ampanai said:

உயிருடன் சரணடைந்த பாலச்சந்திரன் என்ற சிறுவனை கொன்றதன் மூலம் நீங்கள் அனைவரும் போர்க்குற்றவாளிகள் / அரச பயங்கரவாதிகள் என்பது மீண்டும்  உறுதியானது.   

எங்களுடைய சில புத்திஜீவிகளும் ,சிவப்புசட்டைக்காரரும், புலம்பெயர்ந்த சிங்கள மக்களும் ,தாயக சிங்களவர்களும் முழுமூச்சாக கருத்து எழுதுகிறார்கள் அமேரிக்கா கறுப்பினத்தவரின் படுகொலைக்கு எதிராக....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

நீங்களே கூறியிருக்கின்றீர்கள் புராதன காலத்தில் குடியேறிய சீனர்கள் அங்கு வாழ்வதால்....பிறகு பிரிடிஷ் குத்தகைக்கு எடுத்துபடியால் அது மீண்டும் சீனாக்கு சொந்தம் என்ற கருத்துபட அத்துடன் மாவோவையும் குறிப்பிட்டுள்ளீர்கள்...

ஏன் அதே கொள்கை இலங்கைக்கு சரிவராது...
புராதான காலத்தில் குடியேறிய தமிழர்கள் ,பிரிடிஷ் போர்தொடுத்து கைப்பற்றிஆட்சி செய்து விட்டு சென்ற நாடு...

பிரித்தானிய, காலனித்துவ அரசுகள் ஆக்கிரமித்த போது, சீன சீனவாகத தான் இருந்தது, hong kong, தைவானுடன். 

இந்தியா ஒன்று இருந்ததா? 

இலங்கைத் தீவு ஆகக்குறைந்தது, அந்த நிலத்தில் இல்லாத எந்த வேறு அரசின் கீழ் இருந்ததா?  

மொழி, இனம் ஒன்றா? 

சீனாவின் ஹாங் காங், தைவான் பிரச்சனைகள் வேறு. 

மாவோ  உள் பிரச்னை, எந்த அரசியல் சித்தாந்தம் வேண்டும் என்பதிலேயே தவிர, சீனாவின் நிலப்பகுதிகளை பங்கு போடுவதற்கு அல்ல. 

அதனால் இந்த மேற்கு பயப்பிடுகிறது, சீன regional order ஐ தானாக இருந்த நிலைக்கு கொண்டுவரும், அது கிந்தியவை முற்றாக முறிக்காவிட்டாலும், கிந்தியாவை தளர்த்தும். 

Link to comment
Share on other sites

2 hours ago, putthan said:

எங்களுடைய சில புத்திஜீவிகளும் ,சிவப்புசட்டைக்காரரும், புலம்பெயர்ந்த சிங்கள மக்களும் ,தாயக சிங்களவர்களும் முழுமூச்சாக கருத்து எழுதுகிறார்கள் அமேரிக்கா கறுப்பினத்தவரின் படுகொலைக்கு எதிராக....

தெரிந்த சக உறவு ஒருவர். ஒரு தமிழீழ புலப்பெயர் போராட்டங்களில் வெளிப்படையாக பங்குபற்றாதவர். 

14வயது மகள் டொரோண்டோ மத்திய நகர பகுதியில் ஆர்பாட்டத்தில் அவள் கலந்து கொள்ள கேட்டதை அலட்சியப்படுத்த அவளோ அவரை, 'உங்களுக்கு இந்த பெண் இறந்ததை பற்றி அக்கறை இல்லாமல் இருக்கலாம், ஆனால், நான் போயாக வேண்டும்", என கேட்க இவரும் கோவிட் 19குள்ளும் அழைத்து சென்றுள்ளார். 

ஆனால், அந்த சிறு பெண்ணிற்கு தனது ஈழ (சிறுவர்கள்) இனப்படுகொலை பற்றி ஒருநாள் தெரியவரும்பொழுது, அதை சொல்லி வளர்க்காமல் விட்டதற்கு பெற்றோர்கள் மனம் வருந்துவார்கள்.     

Link to comment
Share on other sites

3 hours ago, putthan said:

எங்களுடைய சில புத்திஜீவிகளும் ,சிவப்புசட்டைக்காரரும், புலம்பெயர்ந்த சிங்கள மக்களும் ,தாயக சிங்களவர்களும் முழுமூச்சாக கருத்து எழுதுகிறார்கள் அமேரிக்கா கறுப்பினத்தவரின் படுகொலைக்கு எதிராக....

78099272_10159488373316037_4404178547581648896_n.jpg?_nc_cat=111&_nc_sid=730e14&_nc_ohc=giSVAIW-eS8AX8JI0Om&_nc_ht=scontent-yyz1-1.xx&oh=a30cb094986f36c4d08676903a9427bc&oe=5EFC92CD

Joining hands In solidarity with this sister who raised the voice against the oppressions anywhere !
Hope she will raise her voice against all the racism !

Picture 1) a Srilankan woman in United States , bravely standing up with humanity and supporting the protesters against the racism and brutality .
#blacklivesmatter

Picture 2)Srilankan military brigadier making throat slitting gesture towards the tamil protestors in London .
He was convicted by UK court , but, then brought back to srilanka as a national hero and given promotions in military for his “brave achievements “!
#tamilslivesmatter too

#black_lives_matter
#tamils_lives_matter_too

Source : FB 

Link to comment
Share on other sites

1 hour ago, ampanai said:

Joining hands In solidarity with this sister who raised the voice against the oppressions anywhere !
Hope she will raise her voice against all the racism !

சான்ஸே இல்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Kadancha said:

பிரித்தானிய, காலனித்துவ அரசுகள் ஆக்கிரமித்த போது, சீன சீனவாகத தான் இருந்தது, hong kong, தைவானுடன். 

இந்தியா ஒன்று இருந்ததா? 

இலங்கைத் தீவு ஆகக்குறைந்தது, அந்த நிலத்தில் இல்லாத எந்த வேறு அரசின் கீழ் இருந்ததா?  

மொழி, இனம் ஒன்றா? 

சீனாவின் ஹாங் காங், தைவான் பிரச்சனைகள் வேறு. 

மாவோ  உள் பிரச்னை, எந்த அரசியல் சித்தாந்தம் வேண்டும் என்பதிலேயே தவிர, சீனாவின் நிலப்பகுதிகளை பங்கு போடுவதற்கு அல்ல. 

அதனால் இந்த மேற்கு பயப்பிடுகிறது, சீன regional order ஐ தானாக இருந்த நிலைக்கு கொண்டுவரும், அது கிந்தியவை முற்றாக முறிக்காவிட்டாலும், கிந்தியாவை தளர்த்தும். 

அயல்நாடுகளை ஆக்கிரமித்து சோவியத் யூனியன் என்ற ஒரு நாடு உருவாகி  பிறகு உடைந்தது போன்று சீனாவும் உடையும், நில ஆக்கிரமிப்பு செய்வது தான் தற்போதய சீனாவின் நிலை....மாவோவும் சித்தாந்தவாதிகளும் தங்களது அரசியலை உள்நாட்டில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் புகுத்த பல வருடங்களாக முயன்றுவருகின்றனர்...1975 ஆண்டுக்கு முன்பு புரட்சிகர அமைப்புக்களை உருவாக்கி ஆயுத போராட்டங்களை மறைமுகமாக ஊக்கப்படுத்தினார்கள் ...தற்பொழுது சோசலிசம் பேசும் முதலாளிகளை உருவாக்கி அவர்களுக்கு பணம் கொடுத்து தங்கள் தேவைகளை பூர்த்தி செய்கிறார்கள்...

"மொழி, இனம் ஒன்றா? "
தமிழ்நாடு இந்தியாவில் தானே இருக்கினறது..

சீனா இந்தியாவின் சீக்கிம்  பிராந்தியத்தை ஆக்கிரமிக்க கூறும் காரணம் பெளத்தமும் சீனர்களும் என்ற அடையாளமா?

தீபேத்தை ஆக்கிரமிப்பு செய்துவிட்டு 800 வருடங்களுக்கு முந்திய சரித்திரம் பேச முடியாது தானே....

இனிவரும் காலங்களில் இனம் மொழி பிரிவினையை விட ,புதிய அரசியல் ஆக்கிரமிப்புக்கு மதங்களை .... பயன்படுத்துவார்கள்...மொழி இனங்களை விட மதங்கள் இலகுவாக மக்களை வெறிகொள்ள வைக்கும்...

இந்து,கிறிஸ்தவம்,இஸ்லாம்,பெளத்தம் நாகரீக போர்கள் நடக்க வாய்ப்புக்கள் இருக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, ampanai said:

 

ஆனால், அந்த சிறு பெண்ணிற்கு தனது ஈழ (சிறுவர்கள்) இனப்படுகொலை பற்றி ஒருநாள் தெரியவரும்பொழுது, அதை சொல்லி வளர்க்காமல் விட்டதற்கு பெற்றோர்கள் மனம் வருந்துவார்கள்.     

unarmed black 

சர்வதேச ஊடகங்களை பார்த்தீர்கள் என்றால் ஒவ்வோரு தடவையும்unarmed black man என்ற வசனத்தை பாவிப்பார்கள்.....இது புலம் பெயர்ந்த எமது சிறார்களுக்கு மனதில் இலகுவாக படிந்து விடுகிறது...

எமது மக்கள் இறந்த கதையை கேட் கவோ சொல்லவோ யாருமில்லை...

எமது மக்களே அடுத்த சந்ததிக்கு சொல்ல முயலவில்லை என்பது கவலையளிக்கும் விடயம்...

கறுப்பர்கள் இன ஒதுக்கலுக்கு ஆளாகின்றனர் என்று மார்டின் லூதர் காலத்துக்கு முன்பிருந்தே சொல்லிகொண்டிருப்பதால் ஒரு சிறு சம்பவம் பெரிய எழுச்சியை உண்டாக்கின்றது....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/6/2020 at 20:25, nedukkalapoovan said:

புலிகளை அழித்து ஹிந்தியா பிராந்தியத்தில் தனக்கான மரணப் படுகுழியை தானே தோண்டி விட்டுள்ளது. இதனையே இன்று நாம் பார்கிறோம்.

ஹிந்தியாவைச் சுற்றி யாருமே ஹிந்தியா நம்பக் கூடிய நண்பர்களாக இல்லை. இந்த நிலையை ஹிந்தியா தனது தப்பான கொள்கைகளால் உருவாக்கிக் கொண்டுள்ளது. பாகிஸ்தான் அப்படி.. சீனா அப்படி.. நோபாளம் அப்படி.. சொறீலங்கா அப்படி.

பாகிஸ்தானில் இருந்து பிரித்துக்கொடுத்த பங்காளதேசுடனும் நல்லுறவில்லை.  பல்வேறு தேசிய இனங்கள் வாழும் நாட்டின் வெளியுறவுக் கொள்கையை வகுப்பது ஒருகுறுகிய வட்டம். அதன் விளைவே சுற்றிவரப் பகைநாடுகளை உருவாக்கிவருகிறது. தமிழீழத்தை அங்கீகரிப்பதூடாகத்   தமிழகத்திற் தனக்கொரு பாதுகாப்பான தளவமைவை உருவாக்குவதே இந்தியத் தென்பகுதியில் பாதுகாப்பிற்கான உறுதியினை வழங்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

சீனா இந்தியாவின் சீக்கிம்  பிராந்தியத்தை ஆக்கிரமிக்க கூறும் காரணம் பெளத்தமும் சீனர்களும் என்ற அடையாளமா?

தீபேத்தை ஆக்கிரமிப்பு செய்துவிட்டு

காலனித்துவ ஆட்சி முடியும் பொது அதன் பின்பும் ஆக்கிரமிப்பை செய்து காட்டியது அதனை தொடர்ந்ததும்  கிந்தியா. அந்த நேரத்தில் கூட பிரித்தானியவோ, அமெரிக்காவோ ஒன்றும் எதிர்க்காமல், பச்சை கோடி காட்டி விட்டார்கள்.  

காஷ்மீர் - 1949 
Goa.       - 1961
சிக்கிம் - 1975

ஆனால், சீனாவின் Han இனத்தவர் Tibet இனத்தவருடன் திபெத் நிலப்பரப்புக்கு Mongol காலத்தில் இருந்து போட்டி இருந்து வந்தது உண்மை. 

சீன திபெத்தில் தலியடா வழிகோலியது கிந்தியவும், மேற்கும்.

இது வரைக்கும் சீன-ஹிந்திய யுத்தத்தில்  பெரமும் பகுதிகளில் இருந்து சீன தானாக வெளியேறியது.   

Link to comment
Share on other sites

4 hours ago, putthan said:

அயல்நாடுகளை ஆக்கிரமித்து சோவியத் யூனியன் என்ற ஒரு நாடு உருவாகி  பிறகு உடைந்தது போன்று சீனாவும் உடையும்

அதுக்கு முதல் உடைய வேண்டியது இந்தியா என்டு நினைக்கிறன்,.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/6/2020 at 07:55, putthan said:

அயல்நாடுகளை ஆக்கிரமித்து சோவியத் யூனியன் என்ற ஒரு நாடு உருவாகி  பிறகு உடைந்தது போன்று சீனாவும் உடையும், நில ஆக்கிரமிப்பு செய்வது தான் தற்போதய சீனாவின் நிலை

சீனாவை சோவித்யதுடன் ஒப்பீடு செய்ததின் படி உங்களின் சீன, சோவியத் வரலாறு, கலாசாரம், அரசியல், ,பொருளாதாரம், சித்தாந்தம், ஆட்சிமுறை   போன்றவற்றில் நீங்கள் இன்னும் அறிய வேண்டி உள்ளது என்பது வெளிப்படை. 

அது மட்டுமல்ல, சமகாலத்து சீனாவை பற்றி நீங்க அறியவுமில்லை, புரியவும் இல்லை.  நீங்கள் இன்னும் கெடுபிடி யுத்தத்தின் காலத்திற்கு  மிகவும் முற்பட்ட காலத்திலேயே உங்களின் சீன பற்றிய புரிதல் உள்ளது   

ஒன்று மட்டும் சொல்கிறேன், சீன மக்களின் வாழ்வில், வரலாற்றில் கடந்த 40 வருடங்களேமிகச் சிறந்த காலம் என்றே சீன மக்கள் நம்புகிறார்கள்.

மேற்கு ஊடகங்கள் சொல்வது சீனவை பெரும் பூச்சாண்டியாக காட்டுவது. objective ஆக சீனாவை அறிந்து, விளங்கி வாருங்கள் கதைப்போம். 

கீழே உள்ள பேட்டி சுருக்கமாக இதை சொல்கிறது .

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/6/2020 at 21:16, Kadancha said:

காலனித்துவ ஆட்சி முடியும் பொது அதன் பின்பும் ஆக்கிரமிப்பை செய்து காட்டியது அதனை தொடர்ந்ததும்  கிந்தியா. அந்த நேரத்தில் கூட பிரித்தானியவோ, அமெரிக்காவோ ஒன்றும் எதிர்க்காமல், பச்சை கோடி காட்டி விட்டார்கள்.  

காஷ்மீர் - 1949 
Goa.       - 1961
சிக்கிம் - 1975

ஆனால், சீனாவின் Han இனத்தவர் Tibet இனத்தவருடன் திபெத் நிலப்பரப்புக்கு Mongol காலத்தில் இருந்து போட்டி இருந்து வந்தது உண்மை. 

சீன திபெத்தில் தலியடா வழிகோலியது கிந்தியவும், மேற்கும்.

இது வரைக்கும் சீன-ஹிந்திய யுத்தத்தில்  பெரமும் பகுதிகளில் இருந்து சீன தானாக வெளியேறியது.   

அந்த வகையான ஆக்கிரமிப்பை இந்தியா சிறிலங்கா மீது செய்து விடுவார்கள் என்ற பயம் சிங்கள கொள்கை வகுப்பாளர்களுக்கு அன்றே(சுதந்திரத்திற்கு பின்பு) ஏற்பட்டுவிட்டது அதன் விளைவு தமிழர்கள் மீதும் தமிழர்கள் பகுதிகள் மீதும் அதிக கவனத்தை செலுத்த தொடங்கிவிட்டார்கள் ...தமிழர்  பகுதியில் சிங்கள குடியேற்றம்(சீனாவின் கொள்கை)தமிழர் பகுதியை இராணுவ மயப்படுத்தல் முக்கியமாக தமிழருக்கு என்ற ஒரு பகுதி அது மாகாணசபையாகவோ ,மாவட்ட சபையாகவோ இருக்க கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர்....இந்து மதம் ,இஸ்லாம் மதங்கள் போன்றவை ஒரு பிராந்தியத்தில் பெரும்பான்மையாக இருப்பதை சிறிலங்கா அரசு விரும்பவில்லை....அதன் தொடர்ச்சிதான் கொத்தாபாய அடிக்கடி பேசும் பொழுது சொல்வது வடபகுதி மக்களுக்கு பொருளாதார பிர்ச்சனை மட்டுமே உண்டு மற்றவை பயங்கரவாதிகளால் உருவானவை என்று....

காஷ்மீரின் இந்து மன்னர் இந்தியாவுடன் இணைவதற்கு சம்மதித்து இணைந்து விட்டார் அத்துடன் மேற்கு நாடுகள் ,நாடுகளை உருவாக்கும் பொழுது மதங்களின் அடிப்படையிலயே உருவாக்கினார்கள் .
இந்தியாவை உருவாக்கும் பொழுது பல திசைகளிலும் செக் வைத்து தான் உருவாக்கினார்கள் ,முக்கியமாக இந்தியாவின் கிழக்கேயும் மேற்கேயும் ஒரே நாட்டை உருவாக்கினார்கள் இரு பிராந்திய மக்களினதும் மதம் ஒன்றாக இருந்தாலும் கலாச்சாரம் ,மொழி போன்றவற்றால் வேறுபட்டிருந்தார்கள். தெற்கே சிறிலங்கா பெளத்தம்  நினைத்திருந்தால் வட பகுதி தீவுகளையும் வடக்கு கிழக்கு பகுதியில் தமிழ்பேசும் இந்து,கிறிஸ்தவ, இஸ்லாமிய மக்களை தமிழ்நாட்டுடன் இணைத்திருக்கலாம்...ஆயிரம் கிலோமீற்றருக்கு அப்பால் இருக்கும் அந்தமான்,மற்றும் லட்ச தீவுகளை இந்தியாவுடன் இணைத்தார்கள் 20 கிலோ மீற்றர் தூரத்தில் இருக்கும் தமிழர் பகுதி ?????
காஷ்மீரின் இஸ்லாமிய பகுதியை பாகிஸ்தான் படைஎடுத்து தனது  கட்டுப்பாட்டில் வைத்துள்ளது அந்த பகுதியில் சீனா தனது பெரிய அபிவிருத்தி திட்டத்தை தொடங்கிவிட்டது பாகிஸ்தானின் அரபிக் கடலில் இருக்கும் துறைமுகத்துக்கு சீனாவிலிருந்து நேரடியாக வர முடியும்....காஷ்மீர் மக்களின் விருப்பு வெறுப்பை இந்தியா,சீனா,பாகிஸ்தான் கணக்கில் எடுக்கவில்லை...பாகிஸ்தானால்  சீனாவின் கடன் தொகையை திருப்பி கொடுக்க முடியாவிடின் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீர் சீனாவுக்கு ....(இந்தியா அந்த பகுதியை தங்கள் வசம் எடுப்போம் என குத்தி முறிகின்றனர் பொறுத்திருந்து பார்ப்போம்).
கொவா..போர்த்துகீசர் காலணித்துவத்தின் கீழ் இருந்த பகுதி கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுபவர்களும் மேற்கத்தைய கலாச்சாரத்தை உள்வாங்கியோரும் அதிகமாக இருந்தனர் ..இந்த நாடு மேற்குலகினால் இந்தியாவுக்கு வைக்கப்பட்டை ம்ற்றுமொரு செக்..
சீக்கிம் இதுவும் கோவா போன்ற ஒர் நாடு கிஸ்தவமும் இந்துக்களும் அதிகமாக இருந்த நாடு 
இதே போன்று சீனாவுக்கு செக் வைக்கப்பட்ட பிரதேசஙள் தான் கொங்கொங்,தைவான்,மாக்கே(போர்த்துகீஸ்)இந்த பிரதேசங்களுக்கு தனி நாணயங்கள் புலக்கத்தில் உண்டு ....மாக்கே க்கு தற்பொழுது இல்லை.

இந்தியாவுக்கு  மேற்குலகு செக் வைத்தமைக்கு காரணம் பெரும் மக்கள் தொகையை கொண்ட நாடு போராட்டங்கள் மூலம் வெள்ளையரை வெளியேற்றிய படியாலும் எதிர்காலத்தில் காந்தீயம் என்ற கொள்கையை உலகம் பின்பற்றினால் உலக வியாபாரம் படுத்துவிடும் என்ற காரணமாக இருக்கலாம் (எனது ஊகம் மட்டுமே)
ஆனால் இந்தியா மேற்குலகின் ஆசைப்படியே மாறிகொண்டு வந்தது (ஜனநாயகம் என்று  உரக்க சொல்ல தொடங்கியது...

இந்தியாவிக்கு செக் வைக்கப்பட்ட நாடுகளில் சிரிலங்காவை தவிர எனையவற்றை தனகப் படுத்தியது ...
நேபாளமும் அதில் ஒன்று தற்பொழுது ,நேபாளமும் சிறிலங்காவும் இந்தியாவுக்கு பெரிய தலையிடியாக உள்ளது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/6/2020 at 21:24, Rajesh said:

அதுக்கு முதல் உடைய வேண்டியது இந்தியா என்டு நினைக்கிறன்,.

20லட்சம் தமிழ்மக்களின் ஆசை  இதில் நானும் ஒருத்தன்.....இந்தியா உடைந்தால் இந்த பிராந்தியத்தில் இருவர்  ஆட்சி செய்வார்கள் ,அட்டகாசம் செய்வார்கள் பாகிஸ்தானும் சீனாவும் இருவர்களுக்கும் மதம் கை கொடுக்கும் ...சீனா சிறிலங்கா பெளத்தர்களுடன் சேர்ந்து வியாபாரம் செய்வார்கள் பாகிஸ்தான் இந்தியா முஸ்லீம்களுடன்  இ லங்கை முஸ்லீம்களுடனும் சேர்ந்து பல இந்து/கிறிஸ்தவ்ர்களை மதம்மாற்றி அகன்ட இஸ்லாமிய தேசத்தை உருவாக்குவார்கள்......பிரித்தானியா படை எடுக்காவிடின்  எம்மில் பலர் இஸ்லாமியராக இருந்திருப்போம்  ......இன்று அரபு நாடுகளும் பணத்தின் மூலம் இஸ்லாத்தை உலகம் பூராவும் பரப்ப முழுமூச்சாக இயங்குகின்றனர்...

தேசிய இனங்களை தெற்காசிய பிராந்தியத்தில் தேசியம் அமைக்க பிரித்தானிய முன் வரவில்லை ஏன் என தெரியவில்லை ..
ஐரோப்பாவில் அப்படி இல்லை ...

On 5/6/2020 at 19:14, Kadancha said:

சீனாவை சோவித்யதுடன் ஒப்பீடு செய்ததின் படி உங்களின் சீன, சோவியத் வரலாறு, கலாசாரம், அரசியல், ,பொருளாதாரம், சித்தாந்தம், ஆட்சிமுறை   போன்றவற்றில் நீங்கள் இன்னும் அறிய வேண்டி உள்ளது என்பது வெளிப்படை. 

அது மட்டுமல்ல, சமகாலத்து சீனாவை பற்றி நீங்க அறியவுமில்லை, புரியவும் இல்லை.  நீங்கள் இன்னும் கெடுபிடி யுத்தத்தின் காலத்திற்கு  மிகவும் முற்பட்ட காலத்திலேயே உங்களின் சீன பற்றிய புரிதல் உள்ளது   

ஒன்று மட்டும் சொல்கிறேன், சீன மக்களின் வாழ்வில், வரலாற்றில் கடந்த 40 வருடங்களேமிகச் சிறந்த காலம் என்றே சீன மக்கள் நம்புகிறார்கள்.

மேற்கு ஊடகங்கள் சொல்வது சீனவை பெரும் பூச்சாண்டியாக காட்டுவது. objective ஆக சீனாவை அறிந்து, விளங்கி வாருங்கள் கதைப்போம். 

கீழே உள்ள பேட்டி சுருக்கமாக இதை சொல்கிறது .

 

 

இதற்கு பிறகு பதில போடுகிறேன்....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "மதுவும் மாதுவும் - சுமேரியாவில் இருந்து சங்கத் தமிழ் நாடுவரை"     பண்டைய சுமேரியாவில் பொதுவாக பெண்களின் வேலை அல்லது பங்கு வீட்டு பணிகளில் இருந்தே வருகிறது. கி மு 1800 ஆம் ஆண்டை அல்லது அதற்கும் முற்பட்ட சுமேரியன் துதி பாடல் [Sumerian Hymn to Ninkasi] ஒன்று "மது" பெண் தெய்வமான நின்காசியையும் [Ninkasi: “வாய் நிரப்பும் பெண்மணி] மது வடித்தலுக்கான சேர்மானங்களையும் செய்முறையையும் [recipe for brewing] பாராட்டுகிறது. பொதுவாக மது வடிப்போர் /காய்ச்சுவோர் அங்கு பெண்களாக இருந்தார்கள், அதிகமாக நின்காசியின் பெண் குருவே இவர்கள். மேலும் முன்பு, துணை உணவாக மது, வீட்டில் பெண்களால் வடிக்கப்பட்டது அல்லது காய்ச்சப்பட்டது. எனவே வீட்டு பணிகளுடன் மேல் அதிகமாக அவர்கள் தாம் வடித்த ஒரு வகைச் சாராயத்தை /பீர் மது பானத்தை [beer] விற்கவும் முடியும். அதாவது பெண்கள் தவறணை காப்பாளராகவும் இருக்க முடியும். மேலும் அந்த துதி பாடல் சேர்மானங்களையும் செய்முறையையும் விளக்கமாக கொண்டுள்ளது. உதாரணமாக புளிக்கச் செய்யப் பயன் படும் பொருள் முதல், ஊற வைத்தல், நொதித்தல், வடித்தல் என்பனவற்றின் விபரங்களை தருகிறது.     "நின்காசி, நியே மாவை [dough] ஒரு பெரிய வாரி [shovel] மூலம் குழியில் கலாவுகிறாய்- பார்லி ரொட்டியையும் [bappir] தேனையும் [இந்த தேன் பேரீச்சம் பழம் சாறாக இருக்கலாம்? வாசனை சுவை கொடுப்பதற்கு இங்கு பேரீச்சம் பழம் சேர்க்கப்படுகிறது?]   நின்காசி, நியே பார்லி ரொட்டியை பெரிய சூளையில் வேக வைக் கிறாய்- உமி தானியங்ககளை [hulled grains] ஒரு ஒழுங்காக குவித்து [வடித்தலின் போது "பப்பிர்" [bappir: பார்லி ரொட்டி] ஒன்றுக்கு மேற்பட்ட நோக்கங்களை நிறைவேற்றுகிறது. ஒன்று சர்க்கரை உற்பத்திக்கான மாப்பொருளை தருகிறது. மற்றது அரைத்தலுக்கான புரதங்களையும் சுவைகளையும் தருகிறது]   நியே பார்லி முளை தானியத்திற்கு [malt] தண்ணீர் விடுகிறாய்- பெரும் அதிகாரம் உள்ளவர்களையும் உன் மேன்மை பொருந்திய நாய் காத்து தள்ளி விடுகிறது நின்காசி, நியே பார்லி முளை தானியத்தை சாடியில் ஊற வைக்கிறாய்- அலைகள் ஏறுகின்றன, அலைகள் இறங்கு கின்றன [இந்த அசைவு மறை முகமாக அரைத்தலை குறிக்கலாம் ? அப்பொழுது முளை தானியமும் பப்பிரும் மேல் அதிக பார்லி உடன் சேர்க்கப் படுகிறது? அத்துடன் இந்த மசியல் அதிகமாக சூடாக்கி இருக்கலாம்?]   நின்காசி, நியே சமைத்த கூழாகிய களியை [cooked mash] நாணல் பாயில் பரப்புகிறாய்- சூடு தணிகிறது, குளிர்ச்சி வெற்றி கொள்கிறது [இது இரண்டு நோக்கங்களை நிறைவேற்றி இருக்கலாம். ஒன்று பாவித்த தானியத்தின் உமியை அகற்றவும் மற்றது திரவம் வடியவும் இது உதவி இருக்கலாம்? அது மட்டும் அல்ல, சாராயத்துக்கான மாவூறல் நன்கு குளிர்ச்சியாக இருந்தால், நொதித்தல் அல்லது புளித்தல் திறமையாக நடை பெரும். ஏன் என்றால் உயர் வெப்பம் மாவை புளிக்க வைக்க உதவும் பொருளின் [yeast / புளிச்சொண்டியின்] ஆற்றலை குறைத்து விடும் என்பதால்]   நியே உனது இரு கையாளும் சாராயத்துக்கான இனிக்கும் மாவூறலை [great sweet wort] வைத்து இருக்கிறாய் - அதை தேனுடனும் திராட்சை ரசத்துடனும் வடிக்கிறாய் [இது உண்மையில் தேனா? அல்லது பேரீச்சம் பழம் சாறா? என்பது ஒரு கேள்விக் குறியே. அது மட்டும் அல்ல, திராட்சை பழம் அல்லது உலர்ந்த திராட்சையின் தோலில் இயற்கையாகவே "ஈஸ்ட்" ['yeast'] காணப்படுகிறது. ஆனால் ஒயினில் [wine] அப்படி அல்ல. அங்கு "ஈஸ்ட்" இன் செயற்படு அற்று காணப்படுகிறது. ஆகவே இது திராட்சை ரசமாக இருக்க முடியாது. அது அதிகமாக திராட்சை பழம் அல்லது உலர்ந்த திராட்சையாக இருக்கலாம்?]   நின்காசி, வடி கட்டும் பெரும் மரத்தொட்டி ஒரு இன்பமான ஒலியை தருகிறது- நீ சேகரிக்கும் பெரும் மரத்தொட்டியில் [large collector vat] சரியாக வைக்கிறாய்" [இந்த இன்பமான ஒலி அதிகமாக, சொட்டு சொட்டாக மரத் தொட்டிக்குள் வடியும் பீர் மது பானத்தின் சத்தமாக இருக்கலாம்?]   அது மட்டும் அல்ல, இந்த துதி பாடலில் இருந்து நாம் எப்படியான பாராட்டுதலை அல்லது புகழ்ச்சியை ."பீர் மதுபான பெண் தெய்வம்" பெற்றால் என அறிய முடிகிறது. மேலும் நின்காசிக்கும் பீர் மது பானத்திற்கும் உள்ள தொடர்பு மிகவும் பலமானது என்பதையும் அறிய முடிகிறது. உதாரணமாக மேலும் இரண்டு புகழ்ச்சியை கிழே தருகிறோம்.   "நின்காசியே, நியே, வடித்த பீர் மது பானத்தை மரத் தொட்டியில் இருந்து ஊற்றுகிறாய். அது டைகிரிஸ், யூபிரட்டீஸ் ஆறு மாதிரி வேகமாய்ப் பாய்கிறது [Ninkasi, you are the one who pours out the filtered beer of the collector vat, It is [like] the onrush of Tigris and Euphrates]"   மற்றது   "குடிப்பவர்களிடம் ஒரு கவலையும் இல்லா பேரின்ப மனோ நிலையை ஏற்படுத்தக் கூடியதாக [a blissful mood… with joy in the [innards] [and] happy liver] அதை நீ தயாரித்து எமக்கு அளிக்கிறாய்" என நின்காசியை புகழ்தல் ஆகும்.   மேலும் மெசொப் பொத்தேமியாவில் கண்டு எடுக்கப்பட்ட கி மு 1800 ஆண்டை சேர்ந்த களி மண் பலகை கல் ஒன்று ஒரு பெண் தனது கணவனுடன் ஒன்று கூடும் போது, சாடி ஒன்றில் இருந்து. பீர் மது பானம் குடிப்பதை தெளிவாக வரைந்து காட்டுகிறது.   “துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும் நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.” (குறள் 926)   என்று கூறுகிறார் வள்ளுவர்.அதாவது, உறங்கினவர் இறந்தவரை விட வேறுபட்டவர் அல்லர், அவ்வாறே கள்ளுண்பவரும் அறிவு மயங்குதலால் நஞ்சு உண்பவரே ஆவர் என்கிறார். என்றாலும் நாம் சங்க இலக்கியத்தை பார்க்கும் போது, அங்கு மது பானம் பண்டைய தமிழர் வாழ்வில், ஆண் பெண் இரு பாலாரிடமும், ஒரு முக்கிய பங்கு வகுத்ததை காண முடிகிறது.  துணை உணவாக மது புலவர்களுக்கு வழங்கி அரசனும் சேர்ந்து உண்டு மகிழ்ந்ததை, புகழ்பெற்ற சங்க புலவர் ஒளவையார், தனது புறநானுறு 235 இல்,   "சிறியகட் பெறினே, எமக்கீயும் மன்னே;பெரியகட் பெறினே யாம்பாடத் தான்மகிழ்ந்து உண்ணும் மன்னே;"   என்று எடுத்து உரைக்கிறார். அதாவது, சிறிதளவு கள்ளைப் பெற்றால் அதியமான நெடுமான் அஞ்சி அதை எமக்குத் தருவான்; பெருமளவு கள்ளைப் பெற்றால் எமக்கு அளித்து நாம் பாட அதைக் கேட்டு மகிழ்ந்து அவனும் உண்பான்; என்கிறார் ஒளவையார். மேலும் அகநானுறு 336:   "தெண் கள் தேறல் மாந்தி மகளிர் நுண் செயல் அம் குடம் இரீஇப் பண்பின் மகிழ்நன் பரத்தைமை பாடி அவிழ் இணர்க் காஞ்சி நீழல் குரவை அயரும்"   என கூறுவதையும் காண்க, அதாவது, தெளிந்த கள்ளினைக் குடித்து, பெண்கள், நுண்ணிய தொழில் நலம் வாய்ந்த அழகிய குடத்தினை வைத்து விட்டு, தம் கணவரது நற்பண் பில்லாத பரத்தைமைகளைப் பாடி, விரிந்த பூங்கொத்துக்களை உடைய காஞ்சி மரத்தின் நீழலில் குரவை [கைகோத்து ஆடப்படும்] ஆடுதலைச் செய்யும் மகளிர் என்கிறது. அது மட்டும் அல்ல, பெரும்பாணாற்றுப்படை [275-281] இல், மதுவின் செய்முறை விளக்கப்பட்டு இருப்பதுடன், பட்டிணப் பாலை [106 -110] இல், கணவரோடு கூடி இன்புற்ற இள மகளிர் மதுவை அருந்தி மயக்கத்தில் கொண்டாடியதையும் நாம் காணலாம்.   "அவையா அரிசி அம்களித் துழவை மலர்வாய்ப் பிழாவில் புலர ஆற்றி பாம்பு உறை புற்றின் குரும்பி ஏய்க்கும் பூம்புற நல் அடை அளைஇ தேம்பட எல்லையும் இரவும் இருமுறை கழிப்பி வல்வாய்ச் சாடியின் வழைச்சுஅற விளைந்த வெந்நீர் அரியல் விரல் அலை நறும்பிழி" -பெரும்பாணாற்றுப்படை(275-281)   அதாவது, குற்றாத தவிடெடுபடாத அரிசியைக் அழகினையுடைய களியாகத் துழாவிக் சமைத்த கூழை, வாயகன்ற தாம்பாளத்தில் [தட்டில்] உலர வைப்பார். நல்ல நெல் முனையை இடித்து அக் கூழிற் கலப்பர். அக் கலவையை இனிமை பிறக்கும்படி இரண்டு பகலும் இரண்டு இரவும் கழித்து வலிய வாயினையுடைய சாடியின் கண்ணேயிட்டு, வெந்நீரின் வேகவைத்து நெய்யரியாலே வடிக்கட்டி, விரலாலே அலைத்துப் பிழியப்பட்ட நல்ல வாசனையுள்ள கள் என்கிறது.   "துணைப்புணர்ந்த மடமங்கையர் பட்டுநீக்கித் துகிலுடுத்தும் மட்டுநீக்கி மதுமகிழ்ந்தும் மைந்தர்கண்ணி மகளிர் சூடவும் மகளிர்கோதை மைந்தர் மலையவும்" - பட்டிணப்பாலை[106-110]   அதாவது, தம் கணவரோடு கூடி இன்புற்ற இள மகளிர், தாம் முன்பு அணிந்திருந்தப் பட்டாடைகளைத் தவிர்த்து நூலாடைகளை உடுத்தினர். இன்பத்தின் மயக்கத்தால் தாம் அருந்தும் மயக்கம் தராத கள்ளினைக் [மட்டினைக்] கைவிட்டு மதுவினை குடித்தனர். மதுவுண்ட மயக்கத்தில் கணவர் அணியும் மாலைகளை மகளிர் அணிந்து கொண்டனர். மகளிர் அணியும் கோதையினை (மாலை) ஆடவர் சூடிக் கொண்டனர் என்கிறது.   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 18 ஏப்ரல் 2024, 08:18 GMT புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் யுக்ரேனில் ரஷ்ய ராணுவ வீரர்களின் இறப்பு எண்ணிக்கை இப்போது 50,000ஐ கடந்துவிட்டதை பிபிசி உறுதிப்படுத்தியுள்ளது. ரஷ்யா இரண்டாவது ஆண்டிலும், இறைச்சி அரவை (Meat Grinder) உத்தி என்றழைக்கப்படும் அதன் தாக்குதல் உத்தியின்படி – அதாவது யுக்ரேனிய படைகளை வலுவிழக்கச் செய்வதற்காக கூட்டம் கூட்டமாக ராணுவ வீரர்களை களமிறக்கும் ரஷ்யாவின் உத்தி – பல ராணுவ வீரர்களை போருக்கு அனுப்பியது. அதன் விளைவாக ஏற்பட்ட ரஷ்ய வீரர்களின் இறப்புகள் முதல் ஆண்டைவிட தற்போது கிட்டத்தட்ட 25% அதிகமாக இருப்பதைப் பார்க்க முடிகிறது. பிபிசி ரஷ்ய சேவை, சுயாதீன ஊடக குழுவான மீடியாசோனா மற்றும் தன்னார்வலர்கள், பிப்ரவரி 2022 முதல் இந்த இறப்புகளைக் கணக்கெடுத்து வருகின்றனர். புதைவிடங்களில் உருவாக்கப்பட்ட புதிய கல்லறைகளில் இருந்த ராணுவ வீரர்களின் பெயர்கள் அவர்களுக்கு இந்தக் கணக்கெடுப்பில் உதவின. அலுவல்ரீதியிலான அறிக்கைகள், செய்தித்தாள்கள், சமூக ஊடகங்கள் ஆகியவை மூலம் திறட்டப்பட்ட தகவல்களையும் எங்கள் குழுக்கள் இதில் பயன்படுத்தின. எங்கள் கண்டுபிடிப்புகளின்படி, ரஷ்ய வீரர்களில் சுமார் 27,300க்கும் மேற்பட்டோர் போரின் இரண்டாவது ஆண்டில் இறந்துள்ளனர். இது, பிராந்தியத்தைக் கையகப்படுத்தும் முயற்சியில் எவ்வளவு பெரிய மனித இழப்பு ஏற்பட்டுள்ளன என்பதைப் பிரதிபலிக்கிறது. பிபிசியின் செய்திக்கு பதிலளித்திருக்கும் ரஷ்யா, மாஸ்கோவில் உள்ள பாதுகாப்பு அமைச்சகம்தான் இதுதொடர்பான தகவல்களைத் தர முடியும் என்று கூறியுள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES யுக்ரேனிய படைகளை வீழ்த்துவதற்கும், ரஷ்ய பீரங்கிகளுக்கு அவர்களது இருப்பிடங்களை அம்பலப்படுத்துவதற்கும் ரஷ்யா இடைவிடாமல் ராணுவ வீரர்களை முன்னோக்கி அனுப்பும் இந்த உத்தியை விவரிக்க மீட் கிரைண்டர் (meat grinder) என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. மொத்த ரஷ்ய வீரர்களின் இறப்பு எண்ணிக்கை, 50,000க்கும் அதிகமானது. செப்டம்பர் 2022இல் ரஷ்யாவால் இதுவரை வழங்கப்பட்ட இறப்பு எண்ணிக்கைகளின் அதிகாரபூர்வ தரவுகளைவிட இது 8 மடங்கு அதிகம். ரஷ்யா தரப்பில் ஏற்பட்டுள்ள இறப்புகளின் எண்ணிக்கை உண்மையில் இதைவிட அதிகமாக இருக்கக்கூடும். எங்கள் பகுப்பாய்வில் ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட டொனெட்ஸ்க் மற்றும் கிழக்கு யுக்ரேனில் உள்ள லுஹான்ஸ்கில் ஏற்பட்ட வீரர்களின் இறப்புகள் குறித்து எதுவும் சேர்க்கப்படவில்லை. அதுவும் சேர்க்கப்பட்டால், ரஷ்யா தரப்பில் இறப்பு எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும். "சிறப்பு ராணுவ நடவடிக்கை" அரசு ரகசியங்களை உள்ளடக்கிய சட்டங்கள் மற்றும் தகவல்களைப் கொண்டிருப்பதால், உயிரிழப்புகள் பற்றிய தகவல்களை "பாதுகாப்பு அமைச்சகம்தான் வழங்க முடியும்" என்று கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறினார். இதற்கிடையில், யுக்ரேன் தனது போர்க்களத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளின் அளவு குறித்து அரிதாகவே கருத்து தெரிவிக்கிறது. பிப்ரவரியில், அதிபர் வோலொதிமிர் ஸெலென்ஸ்கி, 31,000 யுக்ரேனிய வீரர்கள் கொல்லப்பட்டதாகக் கூறினார். ஆனால், அமெரிக்க உளவுத்துறையின் தரவுகள் அடிப்படையிலான மதிப்பீடுகள், மேலதிக இழப்புகள் இருப்பதாகக் கூறுகின்றன.   ரஷ்யாவின் மீட் கிரைண்டர் உத்தி பிபிசி மற்றும் மீடியாசோனாவிடம் இருக்கும் இறந்த வீரர்களின் சமீபத்திய பட்டியல், ரஷ்யாவின் மாறிவரும் போரின் முன்களத் தாக்குதல் தந்திரங்களில் இருக்கும் அப்பட்டமான மனித இழப்புகளைக் காட்டுகிறது. யுக்ரேனின் டொனெட்ஸ்க் பகுதியில் ஒரு பெரியளவிலான தாக்குதலைத் தொடங்கியதால், 2023 ஜனவரியில் ரஷ்ய ராணுவம் தரப்பில் இறந்தவர்களின் எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பு எவ்வாறு ஏற்பட்டது என்பதைக் கீழே உள்ள வரைபடம் காட்டுகிறது. ரஷ்யர்கள், வுஹ்லடேரி நகரத்தைக் கைப்பற்றப் போரிட்டபோது, அது “சாரைசாரையாக வீரர்களை முன்னோக்கி அனுப்பும் பயனற்ற தாக்குதல்களை” பயன்படுத்தியதாக போர் ஆய்வுக்கான நிறுவனம் (ISW) தெரிவித்துள்ளது. “சவாலான நிலப்பரப்பு, போர்த்திறன் இல்லாமை, யுக்ரேனிய படைகளுக்கு அதிர்ச்சி அளிக்கத் தவறியது” என இந்தத் தாக்குதல் அதிக போர் இழப்புகளுக்கும் ஆனால் சிறிய அளவிலான ஆதாயங்களுக்கும் வழிவகுத்தது. வரைபடத்தில் மற்றொரு குறிப்பிடத்தக்க உச்சம் 2023 வசந்த காலத்தில் பாக்முத் போரின்போது நிகழ்ந்திருப்பதைக் காணலாம். கூலிப்படை குழுவான வாக்னர், ரஷ்யா அந்நகரத்தைக் கைப்பற்ற உதவியது. வாக்னரின் அப்போதைய தலைவரான யெவ்ஜெனி ப்ரிகோஜின், அந்த நேரத்தில் அவரது குழுவின் இழப்புகள் 22,000 என மதிப்பிட்டார். கடந்த இலையுதிர்க்காலத்தில் கிழக்கு யுக்ரேனிய நகரமான அஃப்டிஃப்காவை ரஷ்யா கைப்பற்றியது ராணுவ வீரர்களின் இறப்புகள் மீண்டும் அதிகரிக்க வழிவகுத்தது.   கல்லறைகளைக் கணக்கெடுத்தல் பிபிசி மற்றும் மீடியாசோனாவுடன் பணியாற்றும் தன்னார்வலர்கள் போர் தொடங்கியதில் இருந்து ரஷ்யா முழுவதும் 70 புதைவிடங்களில் புதிய ராணுவ கல்லறைகளைக் கணக்கெடுத்து வருகின்றனர். இந்தப் புதைவிடங்கள் கணிசமாக விரிவுபடுத்தப்பட்டிருப்பதை வான்வழிப் படங்கள் காட்டுகின்றன. எடுத்துக்காட்டாக, மாஸ்கோவின் தென்கிழக்கில் உள்ள ரியாசானில் அமைந்திருக்கும் போகோரோட்ஸ்காய் கல்லறையின் இந்தப் படங்கள், ஒரு புதிய பகுதி அங்கு தோன்றியிருப்பதைக் காட்டுகிறது. தரையில் எடுக்கப்பட்ட படங்கள் மற்றும் வீடியோக்கள், இந்தப் புதிய கல்லறைகளில் பெரும்பாலானவை யுக்ரேனில் கொல்லப்பட்ட வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்குச் சொந்தமானவை எனத் தெரிவிக்கின்றன. ரஷ்யாவின் இறந்த வீரர்களில் ஐந்தில் குறைந்தபட்சம் இரண்டு பேர், படையெடுப்புக்கு முன்பு நாட்டின் ராணுவத்துடன் எந்தத் தொடர்பும் இல்லாமல் வாழ்ந்தவர்கள் என்று பிபிசி மதிப்பிடுகிறது. “கடந்த 2022ஆம் ஆண்டின் படையெடுப்பின் தொடக்கத்தில், சிக்கலான ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள ரஷ்யா தனது தொழில்முறை துருப்புகளைப் பயன்படுத்த முடிந்தது. ஆனால், அந்த அனுபவமிக்க வீரர்கள் பலர் இப்போது இறந்திருக்கக்கூடும் அல்லது காயமடைந்திருக்கலாம்,” ராயல் யுனைடெட் சர்வீசஸ் நிறுவனத்தைச் சேர்ந்த பாதுகாப்புத் துறை ஆய்வாளர் சாமுவேல் க்ரானி-இவான்ஸ் விளக்குகிறார். மேலும், குறைந்த அளவு பயிற்சி அல்லது ராணுவ அனுபவமே உள்ளவர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் மற்றும் கைதிகள் போன்றவர்கள் அவர்களுக்குப் பதிலாக போர்க்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவிக்கிறார். தொழில்முறை ராணுவ வீரர்கள் செய்யக்கூடியதை இவர்களால் செய்ய முடியாது எனக் கூறும் க்ரானி-இவான்ஸ், “இதன் பொருள், அவர்கள் தந்திரோபாயரீதியாக மிகவும் எளிமையான விஷயங்களைச் செய்ய வேண்டும். அதாவது பொதுவாக பீரங்கிகளின் உதவியோடு யுக்ரேனிய ராணுவ நிலைகள் மீது முன்னோக்கிச் சென்று தாக்குதல் புரிய வேண்டியுள்ளதாகத் தெரிகிறது,” எனக் கூறினார்.   வாக்னர் படையில் சேர்க்கப்பட்ட சிறைக் கைதிகள் சிறைச்சாலையில் செய்யப்படும் ராணுவத்திற்கான ஆட்சேர்ப்பு இந்த மீட் கிரைண்டர் உத்திக்கு மிக முக்கியமானது. மேலும் எங்கள் பகுப்பாய்வு அவர்கள் இப்போது முன்வரிசையில் விரைவாகக் கொல்லப்படுவதாகத் தெரிவிக்கிறது. ஜூன் 2022 முதல் சிறைச்சாலைகளில் ஆட்சேர்ப்பைத் தொடங்க வாக்னர் தலைவர் யெவ்ஜெனி ப்ரிகோஜினுக்கு ரஷ்யா அனுமதியளித்தது. பின்னர் வீரர்களாக மாறிய கைதிகள், ரஷ்ய அரசின் சார்பாக ஒரு தனியார் ராணுவத்தின் ஒரு பகுதியாகப் போரில் களமிறங்கினர். இடைவிடாத சண்டை உத்திகள், மிருகத்தனமான உள் நடவடிக்கைகளுக்குப் பெயர்போன தனியார் ராணுவமாக வாக்னர் இருந்தது. அவர்கள் உத்தரவின்றிப் பின்வாங்கிய வீரர்களை அந்த இடத்திலேயே தூக்கிலிடலாம். இந்தக் குழு பிப்ரவரி 2023 வரை கைதிகளில் இருந்து தனது படைக்கு ஆட்சேர்ப்பு செய்தது. பிறகு ரஷ்யாவுடனான அதன் உறவு மோசமாகத் தொடங்கியது. ப்ரிகோஜின் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ரஷ்யாவின் ஆயுதப் படைகளுக்கு எதிராகக் கலகம் நடத்தினார். பின்னர் அதைக் கைவிட்டார். மேலும் திரும்பிச் செல்ல ஒப்புக்கொள்வதற்கு முன்பு மாஸ்கோவை நோக்கி முன்னேற முயன்றார். அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் அவர் விமான விபத்தில் கொல்லப்பட்டார். முன்வரிசையில் கொல்லப்பட்ட 9,000 ரஷ்ய சிறைக்கைதிகளின் பெயர்களை எங்கள் சமீபத்திய பகுப்பாய்வு மையமாகக் கொண்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES அவர்களில் 1,000க்கும் மேற்பட்டவர்களுக்கு, அவர்களின் ராணுவ ஒப்பந்தம் தொடங்கும் தேதிகள் மற்றும் அவர்கள் எப்போது கொல்லப்பட்டார்கள் என்பதை நாங்கள் உறுதிப்படுத்தினோம். வாக்னரின் கீழ், அந்த முன்னாள் கைதிகள் சராசரியாக மூன்று மாதங்கள் மட்டுமே உயிர் பிழைத்திருந்ததை நாங்கள் கண்டறிந்தோம். இருப்பினும், மேலே உள்ள வரைபடம் குறிப்பிடுவது போல, பாதுகாப்பு அமைச்சகத்தால் அதற்குப் பின்னர் பணியமர்த்தப்பட்டவர்கள் சராசரியாக இரண்டு மாதங்கள் மட்டுமே பிழைத்திருந்தனர். பாதுகாப்பு அமைச்சகம் பொதுவாக புயல் படைப்பிரிவுகள் (Storm platoons) என்றழைக்கப்படும் ராணுவப் பிரிவுகளை உருவாக்கியுள்ளது. இது கிட்டத்தட்ட முழுக்க முழுக்க குற்றவாளிகளால் ஆனது. வாக்னரின் கைதி படைப்பிரிவுகளைப் போலவே, இந்தப் பிரிவினரும் போரில் முன்களத்தில் பலியிடப்படுவதற்கான ஒரு சக்தியாகவே கருதப்படுகின்றனர். “இந்தப் புயல் வீரர்கள், வெறும் சதைப்பிண்டம் மட்டுமே” என்று புயல் உறுப்பினர்களுடன் இணைந்து போராடிய ஒரு சராசரி சிப்பாய் கடந்த ஆண்டு ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் கூறினார். சமீபத்தில், புயல் வீரர்கள் அஃப்திஃப்காவை பிடிக்கப் பல மாதங்கள் நீடித்த போரில் முக்கியப் பங்கு வகித்தனர். இந்த நகரம் எட்டு வாரங்களுக்கு முன்பு ரஷ்யாவிடம் வீழ்ந்தது. அதோடு பாக்முத்திற்கு பிறகு புதினுக்கு மூலோபாய ரீதியாகவும் குறிப்பிடத்தக்க வகையிலும் ஒரு மிகப்பெரிய போர்க்கள வெற்றியை இது பிரதிநிதித்துவப்படுத்தியது.   பட மூலாதாரம்,REUTERS பயிற்சியின்றி போர்க்களத்தின் முன்வரிசைக்கு அனுப்பப்பட்ட கைதிகள் வாக்னர் கூலிப்படையின் கீழ், வீரர்களாக மாறிய சிறைக்கைதிகளுக்கு போரில் களமிறக்கப்படுவதற்கு முன்பாக 15 நாட்கள் ராணுவப் பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்கு நேர்மாறாக, பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் சேர்க்கப்பட்டவர்கள் சிலர் ஒப்பந்தம் போடப்பட்ட இரண்டே வாரங்களில் முன்வரிசையில் கொல்லப்பட்டதைக் கண்டோம். பிபிசி இறந்த மற்றும் உயிருடன் இருக்கின்ற ராணுவ வீரர்கள் சிலரது குடும்பத்தினரிடம் பேசியது. சிறையில் ஆட்சேர்ப்பு செய்தபோது படையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு அமைச்சகம் வழங்கிய ராணுவப் பயிற்சி போதுமானதாக இல்லையென்று அவர்கள் கூறினர். கடந்த ஆண்டு ஏப்ரல் 8ஆம் தேதி சிறையில் தனது கணவர் அமைச்சகத்தின் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக கணவரை இழந்த ஒரு பெண் எங்களிடம் கூறினார். மேலும், அவர் ஒப்பந்தம் போடப்பட்டு மூன்று நாட்களுக்குப் பிறகு போரில் முன்வரிசையில் சண்டையிட்டார். “அவர்கள் கூறியதன்படி சில வாரங்களுக்கு பயிற்சிகள் இருக்கும் என்று நான் உறுதியாக இருந்தேன். குறைந்தபட்சம் ஏப்ரல் இறுதிவரை பயப்பட ஒன்றுமில்லை என நினைத்தேன்.” தனது கணவர் தன்னிடம் பேசுவார் எனக் காத்திருந்ததாகவும் ஆனால் அவர் ஏப்ரல் 21 அன்று கொல்லப்பட்டதாகத் தெரிய வந்ததாகவும் அந்தப் பெண் தெரிவித்தார்.   மற்றொரு தாய் கூறுகையில், போர்க்களத்தில் சண்டையிட்டுக் கொண்டிருந்த தனது மகனின் மரணம் குறித்துத் தெரிவிக்கத் தனது கணவரைத் தொடர்புகொள்ள முயன்றபோதுதான் தனது கணவரும் சிறையில் இருந்து போர்க்களத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதைத் தாம் அறிந்ததாகக் கூறினார். இரட்டைக் குழந்தைகளின் தந்தையான தனது மகன் வாடிம், இந்த ராணுவ ஆட்சேர்ப்புக்கு முன்னதாக எந்த ஆயுதத்தையும் ஏந்தியதில்லை என்று அவரது தாய் அல்ஃபியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கூறினார். மகனின் மரணம் குறித்துத் தனது கணவர் அலெக்சாண்டரிடம் அவரால் சொல்ல முடியவில்லை. ஏனெனில் அவர் சண்டையிடுவதற்காக “போர்க்களத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்” என்று அவர் கூறுகிறார். வேறொரு கைதியின் தொலைபேசி அழைப்பு மூலமாகத்தான் தன் கணவர் சென்றிருப்பது அவருக்குத் தெரிய வந்தது. அலெக்சாண்டர் யுக்ரேனில் வளர்ந்ததாகவும் அங்கு குடும்பம் நடத்தியதாகவும் அல்ஃபியா கூறுகிறார். மேலும், பாசிசத்தை எதிர்த்துப் போராடுவதற்காக ரஷ்யா யுக்ரேனை ஆக்ரமித்தது “பொய் என்று அவருக்குத் தெரியும்” எனவும் அவர் தெரிவித்தார். அவரது மகன் இறந்து ஏழு மாதங்களுக்குப் பிறகு கணவர் அலெக்சாண்டரும் போரில் கொல்லப்பட்டதாக அல்ஃபியாவுக்கு தெரிவிக்கப்பட்டது.   ‘இறப்பதற்குத் தயாராக இருங்கள்’ வாக்னர் கூலிப்படைக்கு வேலை செய்யும்போது, சிறைக்கைதிகள் பொதுவாக ஆறு மாதங்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டனர். ஒப்பந்த காலத்தின் இறுதியில் அவர்கள் உயிர் பிழைத்தால் அவர்களுக்கு சுதந்திரம் வழங்கப்படும். ஆனால், கடந்த செப்டம்பரில் இருந்து பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் பட்டியலிடப்பட்ட கைதிகள் அவர்கள் இறக்கும் வரை அல்லது போர் முடியும் வரை, இரண்டில் எது முதலில் வருகிறதோ அதுவரைக்கும் போரில் சண்டையிட வேண்டும். சரியான சீருடைகள், காலணிகளை வாங்குவதற்கு உதவுமாறு உறவினர்களிடம் கேட்ட கைதிகள் பற்றிய கதைகளை பிபிசி சமீபத்தில் கேட்டுள்ளது. கைதிகள் சரியான உபகரணங்கள், மருத்துவப் பொருட்கள் அல்லது கலாஷ்னிகேவ் துப்பாக்கிகள் கூட இல்லாமல் சண்டைக்கு அனுப்பட்ட செய்திகளும் உள்ளன. ரஷ்ய போர் ஆதரவாளரும் பதிவருமான விளாதிமிர் க்ரூப்னிக் தனது டெலிகிராம் சேனலிலி, “பல வீரர்களிடம் போருக்குப் பொருத்தமற்ற துப்பாக்கிகள் இருந்தன,” என்று எழுதியுள்ளார். “முதலுதவிப் பெட்டி, அகழி தோண்ட மண்வெட்டி, உடைந்த துப்பாக்கியுடன் முன்வரிசையில் ஒரு சிப்பாய் என்ன செய்ய முடியும் என்பது பெரிய மர்மம்” எனக் குறிப்பிடுகிறார் அவர்.   பட மூலாதாரம்,GETTY IMAGES க்ரூப்னிக், ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு யுக்ரேனை தளமாகக் கொண்டவர். சில துப்பாக்கிகள் “முற்றிலும் உடைந்து இருப்பதைக் கண்டறிந்தபோது, அவற்றை மாற்றுவது சாத்தியமற்றது” என்று தளபதிகள் கூறியதாக அவர் கூறுகிறார். “அந்தத் துப்பாக்கி ஏற்கெனவே அந்த நபருக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது. மேலும் கடுமையான ராணுவ அதிகாரத்துவத்தால் அதுகுறித்து எதுவும் செய்ய முடியவில்லை,” என்று அவர் குறுப்பிடுகிறார். முன்னாள் கைதிகளும் தங்கள் தோழர்கள் தம் உயிர்கள் மூலம் இந்தப் போருக்காகச் செலுத்தியுள்ள அதிக விலையை விவரித்துள்ளனர். “நீங்கள் படையில் இப்போது பதிவு செய்தால், இறப்பதற்குத் தயாராக இருங்கள்” என்று புயல் வீரர்கள் மற்றும் அவர்களது உறவினர்களுக்கான ஆன்லைன் குழுவில் செர்கேய் கூறுகிறார். இந்தத் தளத்தில் அவர்கள் பற்றிய தகவல் பகிரப்படுகிறது. அவர் அக்டோபர் முதல் புயல் படையில் சண்டையிட்டு வரும் முன்னாள் கைதி எனக் கூறுகிறார். இந்தத் தளத்தைச் சேர்ந்த மற்றோர் உறுப்பினர், ஐந்து மாதங்களுக்கு முன்பு 100 வீரர்களைக் கொண்ட புயல் படைப்பிடிவில் தாம் சேர்ந்ததாகவும் இப்போது அதில் உயிருடன் இருக்கும் 38 வீரர்களில் தானும் ஒருவர் எனவும் கூறுகிறார். “போரில் நடத்தப்படும் ஒவ்வொரு தாக்குதலும், மறுபிறவியைப் போல் உள்ளது” என்கிறார் அவர். https://www.bbc.com/tamil/articles/c2e074ry91ro
    • உந்த ஆறில எங்கண்ட ஒண்டும் இருக்கு. அதுக்கு பிரசாந்த் பரமலிங்கம் எண்டு பேர்!
    • https://www.jpost.com/middle-east/iran-news/three-quarters-of-israeli-public-opposes-an-iran-attack-if-it-undermines-security-alliance-survey-797523  முழுவதுமாக இணைப்பை வாசித்து விட்டு பதில் எழுத பழகவும். 74 வீதமான மக்கள் இணை நாடுகளை எதிர்த்து போரை விரும்பவில்லை என்று எனக்கு விளங்குகிறது!!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.