• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
தமிழ் சிறி

"சுவாசக்குழாய்" பொருத்தி இருப்பதன், அர்த்தம் என்னவென்று புரியாதவர்களுக்கு...

Recommended Posts

101552406_2613150925607702_1556019956456357888_n.jpg?_nc_cat=110&_nc_sid=8bfeb9&_nc_eui2=AeFxyQizX6rORHoSgJeLiyn1_7LCqgJswMf_ssKqAmzAx0Jzy1I8xxS9JmWMOh5Gd0LbL6AHBw1Eu5mKGu2KgsAP&_nc_ohc=N4ESHFXBh4wAX9wpYpq&_nc_ht=scontent-frx5-1.xx&oh=7342d4959a009d1192f036366eb31583&oe=5EFC5C76

கோவிட் -19 க்கான வென்டிலேட்டர் என்பது உங்கள் தொண்டை வழியாக மூச்சுக்குழலுக்குள் குழாயைச் செலுத்தும் ஒரு வேதனையான செயல்முறையாகும். அந்தக் குழாய் நீங்கள் உயிர் பிழைக்கும் வரை அல்லது நீங்கள் இறக்கும் வரை அங்கேயே இருக்கும். நீங்கள் பேசவோ சாப்பிடவோ இயற்கையாக எதையும் செய்யவோ முடியாது - அந்த இயந்திரம் உங்களை உயிருடன் வைத்திருக்கும்.

இதனால் நீங்கள் உணரும் அசௌகரியம் மற்றும் வலி ஆகியவற்றை கட்டுப்படுத்த, மருத்துவ வல்லுநர்கள் மயக்க மருந்துகள் மற்றும் வலி மருந்துகளை கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். இந்த சிகிச்சையிலிருந்து 20 நாட்களுக்குப் பிறகு வெளிவரும் ஒரு இளம் நோயாளி, 40% உடல் தசையை இழக்கிறார். வாய் மற்றும் குரல்வளைகளில் காயங்களை பெறுகிறார், அத்துடன் நுரையீரல் அல்லது இதய சிக்கல்கள் ஏற்படலாம். இந்த காரணத்தினால்தான் வயதானவர்கள் அல்லது ஏற்கனவே பலவீனமானவர்கள் இந்த சிகிச்சையில் தாக்குப்பிடிக்க இயலாமல் இறந்து விடுகிறார்கள்.

திரவ உணவைச் செலுத்துவதற்காக உங்கள் வயிற்றில் மூக்கு வழியாகவோ அல்லது தோல் வழியாகவோ ஒரு குழாய் வைக்கப்படும். கழிவுகளைச் சேகரிக்க உங்களின் பின்பகுதியைச் சுற்றி ஒரு ஒட்டும் பை, சிறுநீர் சேகரிக்க ஒரு பை, திரவங்கள் மற்றும் மெட்ஸுக்கு ஒரு IV கருவி பொருத்தப்பட்டிருக்கும்.

இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை உங்களின் கை கால்களை செவிலியர்கள் குழு நகர்த்தி வைப்பார்கள். உங்களின் உடல் வெப்பநிலையை 40° டிகிரிக்கு குறைக்கும் வகையில் ஒரு குளிர்ந்த நீர் படுக்கையில் கிடத்தி வைக்கப்பட்டிருப்பீர்கள்.

உங்கள் அன்புக்குரியவர்கள் கூட உங்களைப் பார்க்க வர முடியாது. உங்கள் இயந்திரத்துடன் ஒரு அறையில் நீங்கள் தனியாக இருப்பீர்கள்.

ஆனால் சிலர் முக கவசம் (Mask) அணிவது சங்கடமாக இருக்கிறது என்று நினைக்கிறார்கள்...

ச. பழனி

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, தமிழ் சிறி said:

கோவிட் -19 க்கான வென்டிலேட்டர் என்பது உங்கள் தொண்டை வழியாக மூச்சுக்குழலுக்குள் குழாயைச் செலுத்தும் ஒரு வேதனையான செயல்முறையாகும். அந்தக் குழாய் நீங்கள் உயிர் பிழைக்கும் வரை அல்லது நீங்கள் இறக்கும் வரை அங்கேயே இருக்கும். நீங்கள் பேசவோ சாப்பிடவோ இயற்கையாக எதையும் செய்யவோ முடியாது - அந்த இயந்திரம் உங்களை உயிருடன் வைத்திருக்கும்.

கொரோனாவால் உயிழந்தவர்களை விட இந்த வென்ரிலேட்டர் போட்டே நிறைய பேர் இறந்து போனார்கள்.

ஆனாலும் என்ன சீனா மீது சுலபமாக பழியைப் போட்டு தப்பிக்கிறார்கள்.

  • Sad 1

Share this post

Link to post
Share on other sites
9 hours ago, ஈழப்பிரியன் said:

கொரோனாவால் உயிழந்தவர்களை விட இந்த வென்ரிலேட்டர் போட்டே நிறைய பேர் இறந்து போனார்கள்.

ஆனாலும் என்ன சீனா மீது சுலபமாக பழியைப் போட்டு தப்பிக்கிறார்கள்.

சீனா மீது, இருக்கிற...  "பழைய கறல்" எல்லாத்ததையும், 
சந்தர்ப்பம் பார்த்து.... இப்ப கொடுக்கிறார்கள். :)

Share this post

Link to post
Share on other sites

வென்டிலேட்டர் அவ்வளவு மோசமா?

ஆனால் எனது தம்பி 35 நாட்கள் சுவாச கருவி மூலமே உயிர் பிழைத்தார். முதல் 1 வாரம் வாய்க்குள் செலுத்தி சுவாசிக்கவும் மூக்கால் திரவ உணவு வழங்கப்பட்டது. பின்னர் தொண்டைப்பகுதியில் துளை போடப்பட்டு அதனூடாக சுவாசக் கருவியின் உதவியோடு சுவாசித்தார். 

அவருக்கு guillain-barré syndrome ஏற்பட்டிருந்தது. மருந்தாக immunoglobulin iv ஒரு நாளைக்கு 36g (எடை கூட) படி 5 நாட்கள் செலுத்தப்பட்டது. 3 நாட்களுக்கான மருந்திற்காக அண்ணளவாக 9 லட்சம் செலவாகியது. 2 நாட்களுக்கான மருந்தை யாழ் போதனா வைத்தியசாலை வழங்கியது.

மிக ஆபத்தான நிலையில் இருந்து மீண்டவர். தற்போது மாற்றுத்திறனாளியாக உள்ளபோதும் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று பிரதேச சபை உறுப்பினராக இருக்கின்றார்.

  • Like 3

Share this post

Link to post
Share on other sites
37 minutes ago, ஏராளன் said:

ஏராளன்... உங்களுடைய சகோதரர் வேறு மருத்துவ காரணங்களுக்காக...  
சுவாசக்  குழாய் பொருத்தப் பட்டிடிருக்கலாம் என நினைக்கின்றேன்.

கொரோனா தொற்று உள்ளவர்களுக்கு... சுவாசக்  குழாய் பொருத்தும் போது,
எதிர்மறையான விளைவுகளை சந்திக்கின்றார்கள் என,
பல் வேறு நாடுகளும்... குற்றம் சாட்டுகின்றன.

அத்துடன்.... தற்போது, மருத்துவ மனைகளில் சுவாசக் கருவி தட்டுப் பாடாக உள்ள நிலையில்,
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யும்... கருவிகள் தரமற்ற  நிலையில் உள்ளதாக கூறுகிறார்கள்.

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, ஏராளன் said:

ஆனால் எனது தம்பி 35 நாட்கள் சுவாச கருவி மூலமே உயிர் பிழைத்தார். முதல் 1 வாரம் வாய்க்குள் செலுத்தி சுவாசிக்கவும் மூக்கால் திரவ உணவு வழங்கப்பட்டது. பின்னர் தொண்டைப்பகுதியில் துளை போடப்பட்டு அதனூடாக சுவாசக் கருவியின் உதவியோடு சுவாசித்தார். 

2 hours ago, தமிழ் சிறி said:

கொரோனா தொற்று உள்ளவர்களுக்கு... சுவாசக்  குழாய் பொருத்தும் போது,
எதிர்மறையான விளைவுகளை சந்திக்கின்றார்கள் என,
பல் வேறு நாடுகளும்... குற்றம் சாட்டுகின்றன.

10-20 வென்டிலேற்றர்களை போடுவதற்கு தகுந்த ஆளாக ஆஸ்பத்திரிகளில் ஓரிருவர் இருந்திருப்பர்.
திடீரென 500-1000 என அதிகரிக்கும் போது அதை இயக்க அந்த ஓரிவரே போதாது.திடீரென ஆக்களை எடுத்து பயிற்சி கொடுப்பதும் முடியாது.

 நாங்கள் யுரியூப் பார்த்து சமையல் செய்வது போல பலரும் முயற்சி செய்ய முயன்றே பலரைக் கொன்றிருக்கிறார்கள்.

  • Like 1

Share this post

Link to post
Share on other sites
3 hours ago, ஈழப்பிரியன் said:

நல்ல உதாரணம், ஈழப்பிரியன். 😊

Share this post

Link to post
Share on other sites
18 hours ago, தமிழ் சிறி said:

ஏராளன்... உங்களுடைய சகோதரர் வேறு மருத்துவ காரணங்களுக்காக...  
சுவாசக்  குழாய் பொருத்தப் பட்டிடிருக்கலாம் என நினைக்கின்றேன்.

கொரோனா தொற்று உள்ளவர்களுக்கு... சுவாசக்  குழாய் பொருத்தும் போது,
எதிர்மறையான விளைவுகளை சந்திக்கின்றார்கள் என,
பல் வேறு நாடுகளும்... குற்றம் சாட்டுகின்றன.

அத்துடன்.... தற்போது, மருத்துவ மனைகளில் சுவாசக் கருவி தட்டுப் பாடாக உள்ள நிலையில்,
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யும்... கருவிகள் தரமற்ற  நிலையில் உள்ளதாக கூறுகிறார்கள்.

ஓம் அண்ணா.

Share this post

Link to post
Share on other sites
Posted (edited)
19 hours ago, ஏராளன் said:

வென்டிலேட்டர் அவ்வளவு மோசமா?

ஆனால் எனது தம்பி 35 நாட்கள் சுவாச கருவி மூலமே உயிர் பிழைத்தார். முதல் 1 வாரம் வாய்க்குள் செலுத்தி சுவாசிக்கவும் மூக்கால் திரவ உணவு வழங்கப்பட்டது. பின்னர் தொண்டைப்பகுதியில் துளை போடப்பட்டு அதனூடாக சுவாசக் கருவியின் உதவியோடு சுவாசித்தார். 

அவருக்கு guillain-barré syndrome ஏற்பட்டிருந்தது. மருந்தாக immunoglobulin iv ஒரு நாளைக்கு 36g (எடை கூட) படி 5 நாட்கள் செலுத்தப்பட்டது. 3 நாட்களுக்கான மருந்திற்காக அண்ணளவாக 9 லட்சம் செலவாகியது. 2 நாட்களுக்கான மருந்தை யாழ் போதனா வைத்தியசாலை வழங்கியது.

மிக ஆபத்தான நிலையில் இருந்து மீண்டவர். தற்போது மாற்றுத்திறனாளியாக உள்ளபோதும் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று பிரதேச சபை உறுப்பினராக இருக்கின்றார்.

உங்கள் தம்பி மீண்டதை கேட்க மிகவும் சந்தோஷமாக இருக்கு, நீங்களும் கவனமாக இருங்கள் . 

வாழ்த்துகள் உங்கள் தம்பியிற்கு, அதுவும் நம்மூர் பிரதேச சபை உறுப்பினராக இருப்பதிற்கு, மகிவும் மகிழ்ச்சியாக இருக்கு. மக்களுக்கு நன்மை செய்வாராக சதி மத வேறு பாடு இன்றி

Edited by உடையார்
  • Like 1

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.