• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
colomban

லண்டனில் பிறந்த குழந்தையின் 31 ஆம் நாளைக் கொண்டாடிய தமிழ்க் குடும்பத்துக்கு நடந்த கதி!

Recommended Posts

லண்டன் குரைடன் நகரில் பிறந்த குழந்தையின் 31 விழாவை வீட்டில் செய்த தமிழ் குடும்பத்திற்கு £1,000 பவுண்டுகள் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 தினங்களுக்கு முன்னர், வீட்டில் இந்த விழாவை இவர்கள் நடத்தியதால் சுமார் 20 க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் வீட்டுக்கு சென்றுள்ளார்கள்.

இதனை அவதானித்த அயலவர்கள் பொலிசாருக்கு தகவல் சொல்லவே, விரைந்து வந்த பொலிசார் அனைவரையும் கையும் மெய்யுமாக பிடித்துள்ளார்கள்.

விழாவை நடத்திய குடும்பத்தாருக்கு £1,000 பவுண்டுகள் தண்டம் விதித்த பொலிசார், இந்த விதியை மீறிய 20 பேருக்கும் தண்டம் விதித்துள்ளதாக மேலும் அறியப்படுகிறது.

2 வாரங்களில் தொகையை கட்டவேண்டும் என்றும் இல்லையென்றால் அது இரட்டிப்பாகும் என்று பொலிசார் அறிவுறுத்தியுள்ளார்கள்.

தமிழர்களே தற்போது பிரித்தானியாவில் உள்ள சட்ட திட்டங்கள் படி, 6 பேர் தான் கூட முடியும் என்பதனை நினைவில் வைத்திருங்கள். இன்றுவரை அந்த சட்டம் தளர்த்தப்படவில்லை. புதிய அறிவித்தல் வரும்வரை மிக அவதானமாக இருப்பது நல்லது.

ஏன் எனில் விழா வைக்கும் நபர்களுக்கும் தண்டம் அறவிடப்படுவதோடு, விழாவில் கலந்து கொள்ளும் நபர்களுக்கும் தண்டம் அறவிடப்படுகிறது.

http://www.newjaffna.com/2020/06/02/14988/

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)

இது ஆதாரம் இல்லாத செய்தி.

அவனவன், வீட்டுக்கு வெளியால போகாம படுத்துக்கிடக்கிறான். கோவில் வேற பூட்டிக் கிடக்குது.

உதுக்குள்ள, 31ம் நாள் தொடக்கு கழிவோ?

அய்யர் போகமாட்டார், ஒருத்தனும் எட்டிப்பாக்கான். 

இங்கே 20 பேராம். எதிரி.காம் தளத்தில் 35 குடும்பங்கள் என்று போட்டுள்ளார்கள்.

போன ஞாயிறு கோரோனோ கேஸ் செத்தவீடு, 6 பேரோட, லைவ் டெலிகாஸ்ட் பன்னுகினம்.

இது யாரோ, யாழ்பாணத்திலை, அவிச்சு இறங்கின கதை....

நான் கேள்விப்படேல்ல.

பெருமாள்....? வேற யாரும் லண்டன் காரர்?

Edited by Nathamuni
 • Like 1
 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites
5 hours ago, Nathamuni said:

இது ஆதாரம் இல்லாத செய்தி.

அவனவன், வீட்டுக்கு வெளியால போகாம படுத்துக்கிடக்கிறான். கோவில் வேற பூட்டிக் கிடக்குது.

உதுக்குள்ள, 31ம் நாள் தொடக்கு கழிவோ?

அய்யர் போகமாட்டார், ஒருத்தனும் எட்டிப்பாக்கான். 

இங்கே 20 பேராம். எதிரி.காம் தளத்தில் 35 குடும்பங்கள் என்று போட்டுள்ளார்கள்.

போன ஞாயிறு கோரோனோ கேஸ் செத்தவீடு, 6 பேரோட, லைவ் டெலிகாஸ்ட் பன்னுகினம்.

இது யாரோ, யாழ்பாணத்திலை, அவிச்சு இறங்கின கதை....

நான் கேள்விப்படேல்ல.

பெருமாள்....? வேற யாரும் லண்டன் காரர்?

கொரனோ  இரண்டாவது அலை யில் தேவையில்லாமல் ஒரு தமிழரும்  இறக்க கூடாது செய்தி உண்மையோ பொய்யோ இப்போதைக்கு உண்மையாக இருக்கட்டும் ஏற்கனவே  அழிந்து போயுள்ளம் .

உள்ளூர் செய்திகள் குற்றம்கள் என்பன மொபைலில் உடனுக்குடன் அறிய nextdoor app இருக்கு லண்டனில் பிரியோசனமான ஒன்று .

அட இணைத்தவர்  இவரே கொழும்பாரே அவர் அப்படியான சேதியை தான் தேடி இணைப்பார் புலம்பெயர் தமிழர் மீது அவ்வளவு அன்பு அவருக்கு நன்றி கொழும்பார் .

Share this post


Link to post
Share on other sites
6 hours ago, Nathamuni said:

அய்யர் போகமாட்டார், ஒருத்தனும் எட்டிப்பாக்கான்

இந்த 31 துடக்குகழிவு வதந்தி என்றுதான் நினைக்கின்றேன். இலண்டனில் 1000 பவுண்ட்ஸ் எல்லாம் தண்டம் வைக்கமாட்டார்கள். லொக்டவுனை மதிக்காவிட்டால் 100 பவுண்ட்ஸ் தண்டம். அதை 14 நாளுக்குள் கட்டினால் 50 பவுண்ட்ஸ்தான்.

 

ஆனால் ஐயரைக் கூப்பிட்டு வீட்டுக்குள் நடந்த இரண்டு கலியாணங்களின் வீடியோக்கள் முகநூலில் வந்தன. ஒன்றில் ட்ரோனில் வேறு வீடியோ எடுக்கின்றார்கள்!

 

Share this post


Link to post
Share on other sites

வெறும் வதந்திதான் அது

21 hours ago, கிருபன் said:

இந்த 31 துடக்குகழிவு வதந்தி என்றுதான் நினைக்கின்றேன். இலண்டனில் 1000 பவுண்ட்ஸ் எல்லாம் தண்டம் வைக்கமாட்டார்கள். லொக்டவுனை மதிக்காவிட்டால் 100 பவுண்ட்ஸ் தண்டம். அதை 14 நாளுக்குள் கட்டினால் 50 பவுண்ட்ஸ்தான்.

 

ஆனால் ஐயரைக் கூப்பிட்டு வீட்டுக்குள் நடந்த இரண்டு கலியாணங்களின் வீடியோக்கள் முகநூலில் வந்தன. ஒன்றில் ட்ரோனில் வேறு வீடியோ எடுக்கின்றார்கள்!

 

புத்திசாலிச் சனம். வீண்செலவு இல்லாமல் தள்ளிப்போடாமல் லொக்டவுனில் கலியாணத்தை முடிச்சிட்டினம் 

Share this post


Link to post
Share on other sites

இந்த ஐயரை எங்கேயோ கண்ட மாதிரி இருக்கு 😛

Share this post


Link to post
Share on other sites
38 minutes ago, ரதி said:

இந்த ஐயரை எங்கேயோ கண்ட மாதிரி இருக்கு 😛

தெரிந்தும் தெரியாத ஆள் போல்.

உங்கடை அயல் நாகபூசணி மெயின் அய்யர் தான் .

Share this post


Link to post
Share on other sites
4 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

வெறும் வதந்திதான் அது

புத்திசாலிச் சனம். வீண்செலவு இல்லாமல் தள்ளிப்போடாமல் லொக்டவுனில் கலியாணத்தை முடிச்சிட்டினம் 

இவவின்ரை பிரச்சனைவேறை...😎

 • Haha 1

Share this post


Link to post
Share on other sites
58 minutes ago, ரதி said:

இந்த ஐயரை எங்கேயோ கண்ட மாதிரி இருக்கு 😛

உள்ள   கோயிலுகளுக்கெல்லாம் விரதம் இருந்தால் எல்லா பூசாரியளையும் பக்கெண்டு ஞாபகத்துக்கு வராதுதானே 😊

Share this post


Link to post
Share on other sites
On 2/6/2020 at 21:33, கிருபன் said:

இந்த 31 துடக்குகழிவு வதந்தி என்றுதான் நினைக்கின்றேன்.

 பலர் இதை உண்மை மாதிரி கதைக்கிறார்களே 😟

Share this post


Link to post
Share on other sites
59 minutes ago, விளங்க நினைப்பவன் said:

 பலர் இதை உண்மை மாதிரி கதைக்கிறார்களே 😟

ஊரிலை வதந்தி பரப்புவர்களும் இங்கு வந்து தனி இணையம் வைத்து வதந்தி பரப்புகிறார்கள் .

Share this post


Link to post
Share on other sites
10 hours ago, பெருமாள் said:

தெரிந்தும் தெரியாத ஆள் போல்.

உங்கடை அயல் நாகபூசணி மெயின் அய்யர் தான் .

எனக்கு அவரைத் தெரியாமல் இருக்குமா 😅 ...நான் சும்மா பகிடிக்கு எழுதினேன்🤣 ..பெருமாளுக்கு இவரை கண்ணில் காட்டக்  கூடாது என்று நினைக்கிறேன் :unsure:
 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

அப்ப லண்டன் வல்வை சுமனின்யூ  ரியூப் நாடகம் போகுது..

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • நீங்கள் உங்கு கோழி வளர்ப்பதில்லையா ???? சரி அதையும் ஒருக்காச் செய்து சாப்பிட்டுப் பாப்பம் 😀
  • எம்மை நோக்கி பாயும் இராணுவ, பௌத்த ஆக்கிரமிப்பு: ஸ்ரீதரன் (ஆர்.யசி) தமிழ் மக்களை நோக்கிய ஆபத்தான அரசியல் சூழலொன்று உருவாகி வருகின்றது. எம்மை நோக்கிய பெளத்த, இராணுவ ஆக்கிரமிப்புகள் படையெடுத்து வருகின்றது. இது எம் இனத்தின் இருப்பு கேள்விக்கு உட்ப்படுத்தப்படுகிறது எனத் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் யாழ் மாவட்ட வேட்பாளருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைபின் தேர்தல் பிரசார கூட்டமொன்றில் உரையாட்டும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.  மேலும், எம் இனத்தின் வாழ்க்கை என்பது அழிக்கப்பட்டுக்கொண்டு செல்கிறது. எங்களை நோக்கி புத்த கோவில்கள் வருகிறது எங்கள் இடங்கள் இராணுவ முகாம்களாக மாற்றப்பட்டுக்கொண்டு உள்ளது. காலையில் இருந்து மாலை வரை எத்தனையோ காவலரண்களை பார்கின்றோம். நாளாந்தம்  புத்தம் புதிய காவலரண்கள் வருகிறது. இந்த சூழ்நிலைகள் எல்லாம் எங்களைப் பொறுத்த வரை ஒரு ஆபத்தான சூழ்நிலைக்குள் போய்கொண்டிருக்கின்றோம் . முழுமையாக ஒரு இராணுவ மயப்படுத்தப்பட்ட இராணுவ பிரசன்னத்திற்குள் வாழ்கின்ற  சூழல் எங்களை நோக்கி நகர்ந்துகொண்டுள்ளது. இந்த சூழலில் தான் எங்கள் பணிகளை நாங்கள் முன்னெடுத்து வருகின்றோம். இப்போது தமிழர்கள் அனைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்போடு ஒன்றாக  பயணிக்க வேண்டிய நேரம் அவ்வாறு ஒன்றாக பயணித்தால் வடக்கு கிழக்கில் இந்த பாராளுமன்ற தேர்தலில் இருபது ஆசனங்களை நாம் பெற முடியும். 225 பாராளுமன்ற உறுப்பினர்களில் 20 உறுப்பினர்கள் இருந்தால் மட்டுமே நாம் எதிர்வரும் காலங்களில் இந்த மண்ணில் ஏதாவது பேசக்கூடிய அறுத்துறுத்து சொல்லக் கூடிய அல்லது எங்கள் உரிமைக்காக உரத்துக் குரல் கொடுக்கக்கூடிய வல்லமை எங்களுக்கு கிடைக்கும். இல்லை என்றால் யாரோ அபிவிருத்தி என்கின்ற மாய வலையை விரித்து வாக்குக் கேட்பவர்களுக்கும், அரச முகவர்களுக்கு வாக்களித்துக் கொண்டிருக்க போகின்றோம். நாங்களாக எங்கள் மண்ணில் இறந்துபோன இறமைகளை  மீட்டு எடுத்து  நிமிர்ந்து வாழப்போகின்றோம் என்கின்ற சூழல் எங்களுக்கு எப்போது வரப் போகிறது. நான் கூட இரண்டு தடவைகள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்திருக்கின்றேன், என்னால் முடிந்த பணிகளை இந்த மண்ணிற்கு ஆற்றியிருக்கிறேன். மீண்டும் உங்கள் பேராதரவினை நாடி நிற்கின்றோம் என  தெரிவித்தார்     https://www.virakesari.lk/article/85379