Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

சில ஞாபகங்கள் -7


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்
அப்பா வீட்டில்  சட்ட திட்டம் போடுவது  குறைவு. அதை செய் இதை செய்யாதே என்று நச்சரிப்பது அரிதிலும் அரிது. இருப்பினும் சின்ன வயதிலிருந்து சில பழக்கங்களை வீட்டில்  நடைமுறைக்கு கொண்டு வந்திருந்தார். அதிலொன்று இருட்டியதுவும் புத்தகமும் கையுமாய் மேசையில் போய் குந்த வேண்டும்.
 
இலங்கை வானொலியில்  பின்னேர செய்தி முடிகிறபோது பெரும்பாலும் பகலை இரவு முழுவதுமாக விழுங்யிருக்கும். அதற்கு பிறகு விளையாட முடியாது. முகம் கழுவி  சாமி கும்பிட்ட  பிறகு புத்தகத்தோடு மேசைக்கு போக வேண்டும். இரவு சாப்பாடுவரை புத்தகத்தோடு இருக்கவேண்டும். என் பள்ளி காலங்கள் முழுவதும் இது வழக்கத்தில்   இருந்தது. படிக்கிற காலத்தில் இது நிறைய உதவியதாக என்னளவிலான எண்ணம்.
 
இங்கு கனடாவில் சமர் காலத்தில் இரவு ஒன்பது மணிக்கும் வெயில் எறிக்கிறது. வின்ரரில் நாலு மணிக்கே இருட்டி விடுகிறது. இதனால் என் பிள்ளைகளுக்கு நடைமுறை படுத்த முடியாமல் போய்விட்டது. வீட்டில் முடங்கிக் கிடக்கிற இந்த நாட்களாவது செய்து பார்போமென்றால் புது சிக்கல் வருகிறது. சின்னவளுக்கு ஆறு மணிக்கு வயித்து குத்து வருகிறது. அல்லது சொல்லி வைத்தால் போல் சரியாக ஆறு மணியாகிறபோது ஏதாவது ஒரு வருத்தம் வந்து சேர்வதாக சொல்கிறாள்.  இப்படியாக இதை அமுல் படுத்துவதில் இப்போதும் தோற்றே போகிறேன்.
 
 
வயதும் வகுப்பும் சரியாக நினைவில்லை.அப்போது  சித்தாந்தம் ஒன்றில் தொங்கிக்கொண்டிருந்தேன். அது சமயமும் சடங்கும் பொய்யென்றது. கடவுள் மறுப்பும் கலந்திருந்தது. சரியென பட்டது. சாமி கும்பிடுவதை நிறுத்திகொண்டேன். அப்பாவின் சின்ன வயது பழக்கமொன்று முதன் முதலாக கைவிட்டு போனது.  
 
 
பொன்னரின் ஒரு பனை கள்ளுக்கு ஊருக்குள்  வாடிக்கையாளர் வட்டம் ஒன்று இருந்தது. அப்பாவும் ஆனந்தன அண்ணாவும் சில விடுமுறை நாட்களில் அங்கு போவதுண்டு. அங்கிருந்து வந்ததும் சேர்ந்து காட்ஸ்  விளையாடுவோம்.304 இல் சரியாக  கம்மாரசு அடிப்பது எப்போதும் திரில். கொஞ்சம் பிந்தினாலும் முந்தினாலும் ஆட்டம் கவிழும். கொஞசமும் அசர முடியாது.  வைத்து கொண்டு துரும்பால் வெட்டுவதில் ஆனந்தன் அண்ணா கில்லாடி. கண்டு பிடித்தால் பொன்னரின் கள்ளு செய்த வேலையென்று  தப்பித்துக் கொள்வார்.  அரசியலும்   ஆனந்தன் அண்ணாவின் பகிடியுமென அந்த இரவுகள்  குதூகலம் நிறைந்தவை. இன்றைக்கும் சின்ன வயது ஞாபகங்களில் தொலையாமல் இருப்பவை.  
 
இரவுகள் எப்போதும் ஒரே மாதிரி அமைவதில்லை. மகாபொல காசு கைக்கு வருகிற பேராதனை இரவுகள் பெரும்பாலும் நீளும்.   சிலருக்கு லியோன்ஸ் ஸ்பெசலோடு  அது  முடிந்துவிடும். படிப்பு செலவுக்கு அரசாங்கம் தருகிற காசை சாப்பாட்டுக்கு செலவழிக்க கூச்சபடுகிறவர்  ஈரிகமவில் இருக்கிற  பாருக்கு போகலாம்.  எப்போதும் பிசியாக இருக்கிற அந்த குட்டி  பாரில் ராஜா என்கிற தனி ஆளே எல்லாமாக இருப்பான்.மேசையை துடைப்பது தேவைப்படுவதை  கொண்டு வந்து தருவது திரும்ப திரும்ப ஒன்றையே பேசுபவர் கதைகளை கேட்டது இப்படியாக  பம்பரமாக தனியொருவன்  சுழன்றபடி இயங்குவான்.  ராஜாவின் புண்ணியத்தில்  இருப்பதற்கு மூலையில் ஒரு மேசை கிடைக்கும்.  பிறகு ஒரு போத்திலும் சில  கிளாசும்  கொஞ்ச கடலையும் வந்து சேரும். கொஞ்சம் நேரம் செல்ல அரசியலும் இன்ன பிறவும் பேச்சில்  கலக்கும்.   இலங்கை இனப்பிரச்சனைக்கு தீர்வை காணும்வரை அந்த மேசையில்  யாரும் ஓயமாட்டார்கள். நல்ல வேளையாக  பக்கத்து மேசையில் இருப்பர்களுக்கு தமிழ் தெரியாமல் இருப்பதால் எந்த அசம்பாவிதமும்  நடப்பதில்லை . அப்படி ஏதேனும் சிக்கல் வந்தால் ராஜா ஓடி வருவான். கம்பஸ் கட்டிய என்று சமாளித்து பஸ் ஏத்தி
விடுவான்.
 
அக்பருக்கு வந்து சேர இரவு பன்னிரண்டு  மணியை தாண்டி இருக்கும். ரூமுக்குள்  கச்சேரி தொடங்கும். ரேடியோவில் சினிமா பாடல் அதிரும். சிவமணிகள் மேசையில் திறமையை காட்டுவார்கள். மற்றவர்கள் sp யாகவும்  ஜெசுதாசாகவும் மாறுவார்கள். அந்த இரவு முடிகிற நேரம் யாருக்கும் தெரியாது.
 
இப்போது அப்பா இல்லை. கடவுள் இருக்கிறாரா இல்லையா தெரியாது.
இரவுகள் முந்தியும் பிந்தியுமென்றாலும் இன்னும்  வருகிறது.
 
 
 • Like 7
Link to post
Share on other sites
 • 1 month later...
 • கருத்துக்கள உறவுகள்

ஞாபகங்கள் எப்பொழுதும் அலாதியானவை. அவை என்றும் மகிழ்ச்சியான மன நிறவையும் சில ஞாபகங்கள் கண்ணீரையும் தருபவை. 

அப்பாவின் கடவுள் நம்பிக்கையை நீங்கள் கைவிட்டது உங்கள் தேடல் தெளிவு.அதை உங்கள் அப்பா இப்போது இருந்தால் புரிந்து கொள்வார். 

உங்கள் வீட்டு சட்டம் போல கால் முகம் கழுவி சாமிகும்பிட்டு படித்த நாட்கள் ஞாபகம் வந்து போகிறது. 

அடுத்த தலைமுறையின் உங்கள் பிள்ளைகளுக்கு ஊரில் நீங்கள் படித்தது போல பின்னேரம் இருட்டு வரத் தொடங்க இருத்தி வைத்து படிப்பிப்பது சாத்தியம் இல்லை. 

இங்கு வளரும் எங்கள் பிள்ளைகள் புத்திசாலிகள். அவர்கள் கட்டாயத்தின் பெயரில் எதையும் செய்ய வரமாட்டார்கள். அவர்கள் தாங்களாக படிக்கும் கல்விமுறையோடு வளர்க்கிறார்கள்.  
அவர்களின் ரசனை எதுவோ அது சார்ந்து நான் எப்போதும் உனக்காக இருக்கிறேன் என்று தைரியத்தை கொடுங்கள். அவர்கள் நன்றாகவே வளருவார்கள் வருவார்கள்.

பி.கு - நீண்ட நாட்களின் பிறகு இன்று யாழ் வாசிக்கிறேன். அதில் உங்கள் ஞாபகங்களை வாசித்தேன். 

ஞாபகங்களை தொடருங்கள்.

 • Like 2
Link to post
Share on other sites
 • 1 month later...
 • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்கும் ஊக்கப்படுத்துவதட்கும் நன்றி .

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பழைய ஞாபகங்களை மீட்டும் நல்ல சம்பவங்கள் பிரி.....!😁

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சில ஒழுக்கங்கள், சிந்தனைகள் பெற்றோரிடம் இருந்துதான் வருகின்றது.  ஆனால் அவற்றில் இப்போதும் கைக்கொள்வதை பிள்ளைகளுக்குக் கடத்துவது இலகு அல்ல. அவர்களாகவே புரிந்து ஏற்றுக்கொள்ளும்போதுதான் வழக்கத்தில் கொண்டுவருவார்கள்.

வீட்டில் ஒருபோதும் என்னை படியென்று சொன்னதில்லை, ஒரேயொரு தடவையைத் தவிர. அப்போது இந்திய இராணுவ ஆக்கிரமிப்புக்காலம். இந்திய இராணுவம் முதன்முதலாக எமது ஊரை சுற்றிவளைக்கும்போது அம்மா மேசையில் இருந்து படி என்றார். ஆனால் அப்போதும் படிக்கவில்லை. வந்த இராணுவமும் சின்னப்பொடியன் என்று ஏதும் கேட்கவுமில்லை.

304 விளையாட்டை ஒபரேசன் லிபரேசன் காலத்தில்தான் முறையாகப் பழகியது. ஆனாலும் கொஞ்சம் கவனம் சிதறினாலும் கம்மாஸ் பிழையாகிவிடும். சிலர் மிகவும் இலாவகமாக எண்ணி விளையாடுவார்கள்! அந்தளவு expert ஆக இன்னமும் வரவில்லை என்ற கவலை உள்ளது.

 

Link to post
Share on other sites
 • 1 month later...
 • கருத்துக்கள உறவுகள்
On 13/8/2020 at 11:55, suvy said:

பழைய ஞாபகங்களை மீட்டும் நல்ல சம்பவங்கள் பிரி.....!😁

நன்றி suvy 

On 14/8/2020 at 17:56, கிருபன் said:

சில ஒழுக்கங்கள், சிந்தனைகள் பெற்றோரிடம் இருந்துதான் வருகின்றது.  ஆனால் அவற்றில் இப்போதும் கைக்கொள்வதை பிள்ளைகளுக்குக் கடத்துவது இலகு அல்ல. அவர்களாகவே புரிந்து ஏற்றுக்கொள்ளும்போதுதான் வழக்கத்தில் கொண்டுவருவார்கள்.

வீட்டில் ஒருபோதும் என்னை படியென்று சொன்னதில்லை, ஒரேயொரு தடவையைத் தவிர. அப்போது இந்திய இராணுவ ஆக்கிரமிப்புக்காலம். இந்திய இராணுவம் முதன்முதலாக எமது ஊரை சுற்றிவளைக்கும்போது அம்மா மேசையில் இருந்து படி என்றார். ஆனால் அப்போதும் படிக்கவில்லை. வந்த இராணுவமும் சின்னப்பொடியன் என்று ஏதும் கேட்கவுமில்லை.

304 விளையாட்டை ஒபரேசன் லிபரேசன் காலத்தில்தான் முறையாகப் பழகியது. ஆனாலும் கொஞ்சம் கவனம் சிதறினாலும் கம்மாஸ் பிழையாகிவிடும். சிலர் மிகவும் இலாவகமாக எண்ணி விளையாடுவார்கள்! அந்தளவு expert ஆக இன்னமும் வரவில்லை என்ற கவலை உள்ளது.

 

நன்றி   கிருபன் .

சில நல்ல  பழக்கங்களை குடும்பங்களில்  சம்பிரதாயங்களாக கடத்தி இருக்கிறார்கள் .
கடவுள் மறுப்பின் பெயரில் அவற்றையும் சேர்த்தே சிதைக்கிறோமோ என்கிற நெருடல் இருக்கிறது .
அவ்வளவுதான் .
 

 • Like 1
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • நீங்கள் எதோ ஒன்றை கற்பனையில் வைத்துக்கொண்டு எழுதுகிறீர்கள்  நீங்கள் எந்த திரியை சொல்கிறீர்கள் என்பதே உண்மையில் எனக்கு தெரியவில்லை  இங்கு சீமானை விலக்கி வைப்போம்  அதை சீமான் பற்றிய திரியில் பேசுவோம்  அடக்குமுறை எந்த வடிவில் இருந்தாலும் நான் அதுக்கு எதிரிதான்  சிலர் மேட்டுக்குடித்தனமாக சக கருத்தாளர்களை மறைமுகமாக தாக்கி  எழுதுவதும் ஒரு மேட்டுக்குடி போன்ற நிலையை உருவாக்க முனைவதாலும்  தான் எனது கருத்து அவ்வாறு எழுதினேன். அது தவிர நீங்கள் கூறும் எதுவும் என் மன நிலையில் இல்லை. உங்களை ஏதும் தாக்கி எழுதுகிறேன் என்று எண்ணுகிறீர்களா என்று தெரியவில்லை? ன்னான் எனது கருத்தை எழுதும்போது உங்கள் எண்ணமே எனக்கு இருக்கவில்லை.  மற்றது புலிகள் மீது எதிர்க்கருத்து என்பது  ஆதார அடிப்படையில் இருக்கவேண்டும் என்பதுதான் எனது எதிர்பார்ப்பு  எழுந்த மாத்திரமாக எழுதுவதும் எதிர்க்கருத்து எழுதவேண்டி வருகிறது.  ஆயுதப்போராட்டத்துக்கு அப்போதைய இளைஞர்களை தள்ளியது அமிர்தலிங்கம் போன்றவர்கள்தான்  பின்னாளில் இளைஞர்கள் தமது உயிரையே கொடுத்து போராடி கொண்டிருக்கும்போது  மில்லர் திலீபன் போன்றவர்கள் தெரிந்தும் சாவை அணைத்துக்கொண்டு எம் கண்முன்னே  சாகும்போது உங்கள் இரத்தம் சக தமிழனாக எவ்வாறு துடித்திருக்கும்?  அதே ஆயுத போராட்டத்துக்கு ஆப்புவைக்கவும் பதவி ஆசை சொத்து சுகம் தேடியும்  அந்த இளைஞர்களின் உயிரை கூட மதிக்காது எதிரியுடன் கூடி விடுதலை போராட்டத்துக்கு  வில்லங்கம் செய்து அவர்கள் மூலம் சாவை தேடி அவர்களுக்கு ஒரு கெட்ட பெயரை எதிர்க்கருத்து உடையவர்களை சுட்டார்கள் என்று உருவாக்கி கொடுத்தது அந்த இன துரோகிகள்தான்.  இந்த துரோகிகளை அழிக்கவே எத்தனை உயிர்களை கொடுக்க வேண்டி இருந்தது? நீங்கள் என்றாவது ஒருநாள் உங்களை ஒரு புலிபோல கற்பனை செய்து என்றாலும் பார்த்ததுண்டா? அவர்கள் இரவு பகல் வாழ்க்கையை பற்றி உணர்ந்ததுண்டா?  அவ்வாறான ஒரு சூழலில் சும்மா வெறும்பழி மட்டும் எழுதும் அருவெறுப்புக்களை வெறுக்கிறேன்  அதனால் இவற்றை எத்தனை திரி திறந்தாலும் .. அப்படியான வார்த்தைகள் வரும்போது  எழுதியே ஆகவேண்டும்.  யாழ்களத்தின் துர்ரதிஸ்ட்ம் போல அப்ப அப்ப ஒரு பச்சோந்தி வந்து வந்து போகிறது  நான் முன்பு ஒருநாள் திண்ணையில் உங்களுக்கு சொன்னதுபோல கடந்த வருடம் எல்ல்லோரும் சுமுகமாக இருந்தோம்  இப்போ மீண்டும் தனிமனித தாக்குதல் சக கருத்தாளரை அருவெறுக்க தக்க முறையில் அவமதித்து  எழுதுவது என்று மீண்டும் முருங்கை மரத்தில் ஏறி நிற்கிறோம் ஒரே ஒருவரின் வருகையால்.  (சீமான் பற்றிய எந்த கேள்விக்கும் பதில் எழுதவில்லை அதை சீமானின் திரியில் பாப்போம்) 
  • ஆகா .... நீங்கள் இலங்கை அரசியலில் பழைய அரசியலில் சொல்வதே, எனக்கு புது கதைகளாக இருக்கையில், பெரும் இந்திய தேசத்தின் அரசியலில் சொல்லும் கதைகள் நமபக்கூடிய வகையில் இல்லை. சரி... கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளுக்கு தானே. நீங்கள் சொன்ன மாதிரியே சீமான் நடந்தால்..... தல, அப்புறம் நீங்கள் தல இல்லை.... தெய்வம்.... 
  • கோரோனோ மூக்கு, வாய் வழியாக உள்ளே நுழைய முற்படும்போது எமது உடலுக்கு நல்ல நோய் எதிர்ப்பு சக்தி இருந்தால் வாயுடேனேயே, தொண்டையுடேனேயே நின்றுவிடும். மிக அதிகளவு கிருமிகள் ஒரே நேரத்தில் நேருக்கு நேர் வந்தாலோ (அதிக கூட்டம் உள்ள இடங்களில் இது சாத்தியம்) அல்லது எதிர்ப்பு சக்தி அவ்வளவு போதாமல் இருந்தாலோ நுரையீரலுக்குள் போய்விடும். அங்குள்ள கலங்களில் தாம் இனம் பெருகி நுரையீரலை அழிக்கும்போது  மிகக்கூடிய எதிர்ப்பு சக்தி தேவைப்படுகிறது. இவ்வளவு செயல்களுக்கும் மருந்து ஒன்றுமே இல்லை. எமது உடல் மட்டுமே வெண்கலங்களை கொண்டு சண்டை போடமுடியும். அதற்கு விட்டமின் மட்டும் எடுத்தால் போதாது. பலவருடங்களாக நாம் வாழ்ந்த வாழ்க்கை முறையின், உணவு முறை, அறுவை சிகிச்சைகள், வயது, மது, சிகரெட், மரபணு கோளாறுகள், மன நிலைமை (அதிகம் கவலைப்பட்டு Stress ஆகியவர்களுக்கு தாக்கம் அதிகமாக இருக்கும்).  நான் இந்த கோரோனோ பிரச்சனை துடங்கின காலம் முதல் நிறய ஓர்கானிக் மஞ்சள், மிளகு, கீரை வகைகள், எல்லா பெரிகளும் சேர்ந்த தேன்  சேர்த்த ஸ்மூதி , மீன் இவைகளை அதிகம் உணவில் சேர்க்கிறேன். இப்பதான்  Ashwagandha என்று ஒரு பவுடர் வாங்கினேன். மற்றும்படி கண்டபாட்டுக்கு வைட்டமின் வகைகளை எடுப்பது தேவையற்றது சிலசமயம் ஆபத்தானது. evening primrose oil , Centrum  போன்றவை நல்லம் என்று நினைக்கிறன். இப்படி தாக்கப்பட்ட உடலில் ஆபத்தான பக்டீரியாக்கள் புகுந்து தமது வேலையை துடங்கும். இவற்றுக்குத்தான் மருத்துவ சிகிச்சை இருக்கிறது. எமது பாடகர்  இறந்தது போனதுக்கு அதிகப்படியான  காரணம் இந்த பக்க விளைவுகளால் தான். அவரது உடல் நிலை , வயது இந்த பக்க விளைவுகளின் தாக்கத்தையும் அதற்கு கொடுத்த மருத்துவ சிகிச்சைகளையும் ஏற்றுக்கொள்ளும் நிலையில் இருக்கவில்லை .  
  • பாஸ் வாக்கு வங்கி அரசியலுக்கு மேலாக, தமிழர் தலைவர்களை நம்ப முடியாது என முஸ்லீம்களையும், முஸ்லிம் தலைவர்களை நம்ப முடியாது என தமிழர்களையும் எண்ண வைக்கும் உத்தி ஜே ஆருக்கு முதலே தொடங்கி விட்டது. சரி ஜேஆர் காலத்தில் தொடங்கியதோ, அதற்கு முதல் தொடங்கியதோ இப்படி ஒரு மறைமுக அரசியலை இலங்கை கொள்கை வகுபாளர் செய்தனர் என்பதை நீங்களும் ஏற்கிறீர்கள்தானே? 1. இதற்கு உங்களிடம் ஆதாரம் இல்லை தானே? 2. இப்படி ஒரு மறைமுக அரசியல் நகர்வை அமித்ஷா சீமானை வைத்து செய்கிறார் எனும் என்னிடம் மட்டும் எப்படி ஆதாரம் இருக்கும்?
  • உங்கள் தனிப்பட்ட கருத்தாயினும், பொதுவெளியில் பதியும் போது, வரும் கேள்விகளுக்கு பதில் தந்தால், நாமும் விவாதிக்கலாம் அல்லவா. சிலவேளை நாம் எமது கருத்துக்களை மாத்தவும் முடியும் அல்லவா.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.