• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
தமிழ் சிறி

இந்தியாவின் பெயரை... மாற்றுமாறு, வலியுறுத்தும் மனு மீது இன்று விசாரணை!

Recommended Posts

high-court-2-720x450.jpg

இந்தியாவின் பெயரை.... மாற்றுமாறு, வலியுறுத்தும் மனு மீது இன்று விசாரணை!

நாட்டின் பெயரை பாரத் என்று மாற்ற உத்தரவிடக்கோரி தொடுக்கப்பட்ட மனு இன்று (செவ்வாய்கிழமை) உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படவுள்ளது.

டெல்லியை சேர்ந்த ஒருவர்  உச்சநீதிமன்றத்தில் இதுதொடர்பாக பொதுநல மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

குறித்த மனுவில் நாட்டின் பெயரான இந்தியா என்பது ஆங்கில சொல் எனவும் இது ஆங்கிலேயர்களின் காலனியாதிக்கத்தை நினைவு படுத்துவதுபோலவுள்ளதாகவும்  தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாட்டின் பெயரை இந்தியா என்பதிலிருந்து பாரத் அல்லது ஹிந்துஸ்தான் என்று மாற்றம் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

இதற்கு ஏதுவாக நாட்டின் பெயர் சம்பந்தப்பட்ட விவகாரத்தை கையாளும் அரசியலமைப்பு சட்ட 1ஆவது பிரிவில் திருத்தம் செய்ய உத்தரவிட வேண்டுமெனவும் அவர் கோரியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/இந்தியாவின்-பெயரை-மாற்று/

Share this post


Link to post
Share on other sites

இந்தியாவுக்கு... புதிய பெயர் சூட்ட,  
உங்களுக்கு.... தெரிந்த,  நல்ல பெயர்கள்... இருந்தால், கூறுங்கள். 

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)
32 minutes ago, தமிழ் சிறி said:

இந்தியாவுக்கு... புதிய பெயர் சூட்ட,  
உங்களுக்கு.... தெரிந்த,  நல்ல பெயர்கள்... இருந்தால், கூறுங்கள். 

 குடுமிநாடு அல்லது குடுமிஸ்தான்

Edited by tulpen
 • Haha 1

Share this post


Link to post
Share on other sites
12 minutes ago, tulpen said:

 குடுமிநாடு அல்லது குடுமிஸ்தான்

  ருல்ப்பன்...  குடும்ப அரசியல் செய்வதால், குடுமிஸ்தான் என்ற பெயரை வைத்தீர்களா? 😁

அல்லது வேறு விசேட காரணங்கள் உண்டா?🤠

Share this post


Link to post
Share on other sites

“ஏமாந்தியா” என்ற பெயரை நான் பரிந்துரை செய்கின்றேன். 😎🤪

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)

பிச்சி போட்டது போல் பலதும் இருப்பதால் கொத்து ரொட்டி போல கொத்து நாடு என்பது சரியா இருக்கும் தோழர்..👌

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Share this post


Link to post
Share on other sites

கூழைக் கும்பிடுஸ்தான். 

கோமியஸ்தான்

GoGoஸ்தான்

வெட்டிப் பெருமைஸ்தான்

 

பெயர்கள் தொடரும்....

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • வாழ்த்துகள், நல்ல தொடக்கம்   
  • ஜெயலலிதா நினைவிட கட்டுமானப் பணிகளை விரைவில் நிறைவு செய்யுமாறு உத்தரவு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிட கட்டுமானப் பணிகளை விரைவில் நிறைவு செய்யுமாறு அதிகாரிகளுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அங்கு ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி ஜெயலலிதாவின் நினைவு மண்டபம் கட்டுவதற்காக 50.80 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இதற்கான கட்டுமான பணியை கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் 8ஆம் திகதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் ஆரம்பித்து வைத்தனர். அதன்பின்னர் தொடர்ந்து இரவு பகலாக கட்டுமாணப் பணிகள் நடந்து வருகின்றன. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பணியில் சற்று தொய்வு ஏற்பட்டது. எனினும் நினைவு மண்டபத்தில் அமைக்கப்படும் பீனிக்ஸ் பறவைக்கான ராட்சத சிறகு மற்றும் அதனை தாங்கி நிற்கும் கருவிகள் டுபாயில் இருந்து கப்பலில் கொண்டுவரப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில், பணிகளின் முன்னேற்றம் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமை செயலகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஆய்வு கூட்டம் இடம்பெற்றது. இதன்போது, கட்டுமானங்கள் குறித்து பொதுப்பணித்துறை பொறியாளர்கள் விளக்கம் அளித்தனர். இதனையடுத்து, நினைவிட பணிகளை செப்டம்பரில் முடிக்குமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். இந்த கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயகுமார், கடம்பூர் ராஜூ மற்றும் தலைமைச் செயலாளர் சண்முகம், பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் மணிவாசன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். https://athavannews.com/ஜெயலலிதா-நினைவிட-கட்டுமா/
  • கங்கையை சுத்தப்படுத்தும் நமாமி கங்கை திட்டதிற்கு உலக வங்கி கடனுதவி கங்கை நதியைப் புதுப்பிப்பதற்கு முற்படும் ‘நமாமி கங்கே’ திட்டத்திற்காக உலக வங்கியும், இந்திய அரசும் கடன் ஒப்பந்தத்தில் இன்று கையெழுத்திட்டன. இரண்டாவது தேசிய சின்னமான கங்கைநதி மாசுபடுவதைத் தடுக்கவும், 500 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் நதிப்படுகையின் நிர்வாகத்தை வலுப்படுத்தவும் இந்தத் திட்டம் உதவும் என கூறப்படுகின்றது. 400 மில்லியன் டொலர் ஒப்பந்தத்தில் 381 மில்லியன் கடன் மற்றும் 19 மில்லியன் டொலர் வரை முன்மொழியப்பட்ட உத்தரவாதம் ஆகியவை அடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த விடயம் குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்தியாவிற்கான உலக வங்கி இயக்குநர் ஜுனைத் அகமட், அரசாங்கத்தின் நமாமி கங்கே திட்டம் கங்கையைப் புதுபிப்பதற்கான இந்தியாவின் முயற்சிகளுக்குப் புத்துயிர் அளித்துள்ளது என கூறினார். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 40 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் அடர்த்தியை கொண்ட கங்கை நதிப் படுகையில் உருவாக்கப்படுகிறது. ஆனால் கங்கை நதி இன்று மனிதர்களின் பொருளாதார நடவடிக்கைகளின் காரணமாக அழுத்தங்களை எதிர்கொள்கிறது. அது அதன் தரத்தையும், நீரோட்டங்களையும் பாதிக்கிறது. கங்கையில் மாசுபாட்டின் 80 சதவீதத்திற்கும் அதிகமானவை நதி மற்றும் அதன் துணை நதிகளில் அருகில் உள்ள நகரங்கள் மற்றும் மாநகரங்களிலிருந்து சுத்திகரிக்கப்படாத கழிவு நீரிலிருந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/கங்கையை-சுத்தப்படுத்தும/