Jump to content

கற்கை நன்றே கற்கை நன்றே...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கற்கை நன்றே கற்கை நன்றே...

காரை துர்க்கா   / 2020 ஜூன் 02

இருவர் கவலையுடன் பகர்ந்த விடயங்களைக் கொண்டு, இன்றைய பத்தியைத் தொடர விளைகிறேன். ஒருவர், 39 வயதுடைய பெண். இவரது தலைமையிலேயே அந்தக் குடும்பம் சீவியம் நடத்துகின்றது. அதாவது, பெண் தலைமைத்துவக் குடும்பம். அந்தப் பெண்னுக்கு 17, 15 வயதுகளில், முறையே பெண்ணும் ஆணும் என இரு பிள்ளைகள் உள்ளனர்.

மற்றையவர், ஆங்கில ஆசிரியர். ஒரு நாள் ஆசிரியர், ஆங்கில வினைச் சொற்களைக் கற்பித்துக் கொண்டிருந்தாராம். அவ்வேளையில், Learning (கற்றல்), Earning (உழைத்தல்) ஆகிய சொற்களின் தமிழ்க் கருத்தை விளங்கப்படுத்திய வேளை, "இந்த இரு சொற்களிலும் முதன்மையானது எது" என, மாணவர்களிடம் கேட்டாராம். "Earning" (உழைத்தல்) என்ற சொல்லே முக்கியமானது என, ஏகோபித்த குரலில் மாணவர்களிடமிருந்து பதில் வந்ததாம்.

அடுத்து, அந்தப் பெண்ணின் கதை. அவர், நாளாந்தம் கூலி வேலைக்குச் சென்றே, குடும்பத்தை நடத்தி வருகின்றார். ஒரு நாளுக்குரிய கூலியாக, 700 ரூபாய் வரையிலேயே பெறுகின்றார். இந்த வருமானத்தில், குடும்பச் செலவுடன் பிள்ளைகளது கல்வி நடவடிக்கைகளையும் முன்கொண்டு செல்வதில், பலத்த சவால்களை எதிர்கொண்டு வருகின்றார். அத்துடன், தனது உடல் உபாதைகள் காரணமாக, கடந்த நான்கு ஆண்டுகளாக மாதாந்தம், அரச வைத்தியசாலைக்கு 'கிளினிக்' சென்று வருகின்றார். இதனால், ஒழுங்காக வேலைக்குச் செல்வதிலும் இடர்பாடுகளைச் சந்தித்து வருகின்றார். 

"அம்மா! எங்களுக்காக நீங்கள் ரொம்பவும் கஷ்டப்படுகின்றீங்கள். நான் படித்தது போதும்; இன்னும் ஒரு வருடம் பொறுத்திருங்கள். 'ஓஎல்' சோதனை முடிந்தவுடன், நான் உழைக்கப் போறன். நான் உழைச்சு, குடும்பச் செலவையும் அக்காவின்ர படிப்பையும் பார்த்துக் கொள்கின்றேன்". தனது நெருக்கடிகளைத் தினசரி பார்த்து வருகின்ற 15 வயதுடைய மகன், இவ்வாறு தெரிவித்ததாக அந்தப் பெண் கூறினார். தனது துன்பங்களைப் புரிந்து கொண்ட மகனை நினைத்து, ஒருபக்கம் பெருமைப்படுவதாகவும் மறுபக்கம், பிள்ளையின் கற்றலுக்கான மனநிலை, எங்கள் குடும்ப நிலைவரத்தால் குழம்பி விட்டதே எனக் கவலைப்படுவதாகவும் அப்பெண்மணி தெரிவித்தார்.

'ஒரு பானை சோற்றுக்கு, ஒரு சோறு பதம் போல', வடக்கு-கிழக்கில் வாழும் பல்லாயிரக்கணக்கான பெண் தலைமைத்துவக் குடும்பங்களில் கணிசமானோர், இதே நிலையிலேயே இன்று உள்ளனர்.

இரண்டாம் கட்ட ஈழப் போர் என்று கூறப்படுகின்ற ஆயுதப் போர், பிரேமதாஸ அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே, 1990 ஆம் ஆண்டு ஜுன் மாதம் ஆரம்பமானது.

அக்காலப் பகுதியில், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைப் பிரதேசம், 'பாதுகாப்பு வலயம்' எனச் செஞ்சிலுவைச் சங்கத்தால் பிரகடனப்படுத்தப்பட்டு இருந்தது. இதை அடையாளப்படுத்தும் முகமாக, வலயத்தைச் சூழ, சகவடிவில் (+) மின்சாரக் குமிழ்கள் ஒளிரவிடப்படும்.

அந்தக் காலப் பகுதியில், புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குப் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டிருந்தது. மின்சார விநியோகம் முற்றாக நிறுத்தப்பட்டிருந்தது. அதேவேளை, எரிபொருள் விநியோகமும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே பல நோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் விநியோகிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைப் பிரதேசத்தில், ஒளிரவிடப்பட்டிருந்த மின்குமிழ்களின் வெளிச்சத்தில், இரவில், வீதியோரத்தில் இருந்து, பல மாணவர்கள் கல்வி கற்றார்கள்; சிறந்த பெறுபேறுகளைப் பெற்றார்கள்; தங்களுக்கும் தாங்கள் சார்ந்த சமூகத்துக்கும் பெருமை சேர்த்தார்கள்.

இவ்வாறாக, அன்று வெடியோசைகளுக்கும் வேட்டொலிகளுக்கும் இடையேயும் உணவுத் தட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் நாளை உயிருடன் இருப்போமோ,  கந்தகக் குண்டுக்கு இரையாகி விடுவோமோ என்ற ஐயப்பாடுகள், நிச்சயமின்மைகளுக்கு இடையேயும், தெரு விளக்கில் படித்து எம்மவர்கள் சாதித்துக் காட்டினார்கள்.

அன்று, கடும் யுத்தத்துக்குள்ளும் படித்து முன்னேற வேண்டும் என, அன்றைய சந்ததி கருதியது. இன்று, உழைத்து முன்னேற வேண்டும் என, இன்றைய சந்ததி கருதுகின்றது. இதற்கு, இன்றைய சந்ததியைக் குற்றம் சொல்லிப் பிழை இல்லை. ஏனென்றால், இன்றைய சந்ததி கடந்து வரும் பாதைகள், முற்றிலும் பிழைத்துப்போய் விட்டன.

இந்நிலையில், பெரும்பாலான பெற்றோர், என்ன விலை கொடுத்தேனும் தங்கள் பிள்ளைகளைப் படிப்பிக்க வேண்டும் என்றே உள்ளனர். ஆனாலும், அவர்களில் பெரும்பான்மையினர் பொருளாதாரப் பிரச்சினையுடன் தினசரி போரிட்டு வருவதால், பிள்ளைகளுடன் சமாதானமாக வாழ்வது, சவாலான விடயமாகி வருகின்றது.

அதேவேளை, பட்டம் பெற்றவுடன் அரசாங்கம், தங்களுக்கு உத்தியோகம் வழங்க வேண்டும் என எதிர்பார்க்கும் தன்மை, ஏனைய இனங்களைவிடத் தமிழ் மக்கள் (மாணவர்கள்) மத்தியில் அதிகமாக உள்ளது. அதற்காகத் தங்கள் மாவட்டச் செயலகம் முன்னால், தகரக் கொட்டகை அமைத்து, பட்டதாரிகள் போராட்டம் நடத்துகின்றனர். இவற்றைப் பார்க்கின்ற 15 வயதுடைய மாணவன் ஒருவன், 'படித்துப் பட்டம் பெற்றும் வேலை இல்லையே! இப்போதே ஏதாவது உழைக்கலாம்' என, அப்பாவித்தனமாக மனதில் நினைக்கலாம்.

இவ்வாறானதொரு நிலையில், ''வடக்கு மாகாணத்தில் பரீட்சைப் பெறுபேறுகளை அதிகரிக்க வேண்டுமானால், வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களம், பெற்றோர் மத்தியில் பிள்ளைகளின் கல்வி தொடர்பில் கரிசனையை ஏற்படுத்த வேண்டும்" என, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் வாழ்நாள் பேராசிரியருமான பொ. பாலசுந்தரம்பிள்ளை தெரிவித்து உள்ளார்.

கடந்த ஆண்டு, சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறு தொடர்பிலேயே, பேராசிரியர் இவ்வாறாகக் கருத்து வெளியிட்டு உள்ளார். வடக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில், ஆசிரியர் வளம் உட்பட அனைத்து வளங்களும் சிறப்பாகக் காணப்படுகின்றன. அதேவேளை, அரசாங்கம், தனியார் தொண்டு நிறுவனங்கள ஊடாகவும்; பாடசாலைகளுக்கு வளங்கள் பெற்றுக் கொடுக்கப்படுகின்றன.

இவ்வாறான சூழ்நிலையில், பரீட்சைப் பெறுபேறுகளில் முன்னேற்றம் ஏற்படாது இருப்பதற்குக் காரணம், பெற்றோர் தமது பிள்ளைகளின் கல்வியில் கூடிய கரிசனை செலுத்தாமையே எனச் சுட்டிக்காட்டுகின்றார் பேராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளை.

இந்நிலையில், பெற்றோர், தமது பிள்ளைகளின் கல்வியில் கூடிய கரிசனை செலுத்தாமை மட்டுமே, வடக்கு மாகாணத்தின் கல்வி வீழ்ச்சிக்குக் காரணம் என்ற கருத்து, குழப்பமானதாகவே உள்ளது.

ஏனெனில், மாணவர்களின் கல்வி அறுவடை, பெற்றோருடன் மட்டுமல்லாது அரசியல்வாதிகள், அதிகாரிகள், ஆசிரியர்கள், பல்கலைக்கழக சமூகம் ஆகியோரிலும் தங்கியுள்ளது. இதில், சிலருக்கு நோயைக் குணப்படுத்த வேண்டும். அத்துடன், சில விடயங்களில் ஆளையே குணப்படுத்த அல்லது, மாற்ற வேண்டிய தேவைப்பாடுகள், தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் நிறையவே உள்ளன.

இதற்கிடையே, 1981ஆம் ஆண்டு, இது போன்றதொரு (ஜுன் 01) நாளிலேயே, தமிழ் மக்களின் பொக்கிஷமான யாழ்ப்பாணம் பொது நூலகம் (அறிவாலயம்) தீயுடன் சங்கமமானது. அந்தத் தீ அணைந்தாலும், அதன் உக்கிரம், எங்கள் மனங்களில் கனன்று கொண்டிருக்கின்றது.

இவ்வாறாகத் தமிழ் மக்களின் கல்விக்குக் கல்லறை கட்ட, காலங்காலமாகப் பல தரப்புகளாலும் பல தடவைகள் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன; இன்னமும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆகவே, பல்வேறு தடைகளையும் உடைத்தெறிந்தே, தமிழ்ச் சமூகம் கல்வியைத் தொடருகின்றது; தொடர வேண்டிய நிலையில் உள்ளது. நடைமுறைக்குச் சாத்தியம் எனப் பிறர் கருதுகின்ற நிலையை, நாம் அதையும் தாண்டிச் செல்வதற்கும் வெல்வதற்கும், ஒரு தரப்பை மாத்திரம் சுட்டிக்காட்டலாமா? 

இந்நிலையில், வடக்கு மாகாணத்தின் கல்விப் பின்னடைவுக்கு, எமது ஒட்டுமொத்த சமூகமும் அதன் கூறுகளும் கூட்டாகப் பொறுப்பு ஏற்க வேண்டும் என்பதே நியாயமானது. நாம் முன்னோக்கிப் பார்க்க வேண்டிய விடயங்கள், ஏராளம் உள்ளன. எமது சொந்தப் பலவீனங்களைக் கூர்ந்து கவனிப்போம்; தவறுகளிலிருந்து பாடம் கற்போம்.

கல்வியின் ஊடாக ஏற்படுகின்ற, தாக்குப் பிடிக்கும் திறனே, எமக்குப் பல வழிகளிலும் உதவப் போகின்றது. எமது இளஞ்சந்ததியின் கல்வியே, எமது கைகளில் போடப்பட்டிருக்கும் அடிமைச் சங்கலியை உடைக்கப் போகின்றது. வீழ்ந்து கிடக்கும், எமது பொருளாதாரத்தை நிமிர்த்தப் போகின்றது.

இது இவ்வாறு நிற்க, ''சரி! உங்கள் மகன் அடுத்த ஆண்டு உழைக்கப் போறான். உங்கள் பஞ்சம் பறந்தோடப் போகுது. இனி, நீங்கள் வீட்டிலிருந்து சமைத்து ஆறின சோறு சாப்பிடலாம் தானே'' என, அந்த அம்மாவைக் கேட்டபோது, ''உந்தச் சின்னப் பொடியன்ர கதையை விடுங்கோ. நான் பிச்சை எடுத்தாவது, என்ர ஆம்பிளைப் பிள்ளையைப் படிப்பிக்க வேண்டும்'' என்ற பதிலில் பொதிந்திருந்த வைராக்கியம், மெய் சிலிர்க்க வைத்தது. 'கற்கை நன்றே கற்கை நன்றே, பிச்சை புகினும் கற்கை நன்றே' என்ற, தமிழ்ப் பாட்டியின் வரிகளும் வைரமானவையே!    

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/கற்கை-நன்றே-கற்கை-நன்றே/91-251264

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நேரம் கிடைக்கும் போது காங்கேசந்துறை முதல் தாமரை கோபுரம் வரை நான் எடுத்த படங்களையும் இணைக்கிறேன்.  வாசகர்கள் முடிவு செய்யட்டும். அதான் கொக்கதடில மாம்பழம் சிக்கீட்டே. மரநாய் ஏன் கிடந்து உருளுது🤣
    • இந்த வீழ்ச்சிக்கு என்ன காரணம் என எண்ணுகிறீர்கள்?
    • யாராவது தினமுரசில் அற்புதன் எழுதிய இந்த தொடரை வாசிக்காமல் விட்டிருந்தால் இந.த தொடரை நிச்சயமாக பார்க்க வேண்டும்.ஏனெனில் புலிகளுக்கு நேர் எதிரான அணியிலிருந்த ஒருவரால்த் தான் இது எழுதப்பட்டது. நான் இந்த பத்திரிகையை தொடர்ந்து வாங்கிய போது பலரும் மறைமுகமாக ஈபிடிபிக்கு ஆதரவளிப்பதாக கூறினார்கள். நிறைய பேருக்கு ஆரம்பகாலத்தில் போராட்டத்துக்கு வித்துப் போட்டவர்களையும் வித்துடலானவர்களையும் இன்னமும் தெரியாமல் இருக்கிறார்கள்.
    • தென்னாபிரிக்காவில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 45 பேர் உயிரிழந்துள்ளனர். அதிவேகமாக சென்ற அந்த பேருந்து செல்லும் வழியில் மாமட்லகலா என்ற இடத்தில் வேகத்தக் கட்டுப்படுத்த முடியாமல் அங்குள்ள பாலத்தில் மோதி தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு இருந்து 165 அடி பள்ளத்தில் விழுந்தது. அங்குள்ள பாறையில் விழுந்த வேகத்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்துள்ளது. இதில் பேருந்தில் பயணித்த 45 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அதிலிருந்தவர்களில் நல்வாய்ப்பாக 8 வயது சிறுமி மட்டும் படுகாயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தில் பேருந்து முற்றிலும் எரிந்து நாசமானதில், அதில் இருந்த பலரது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு கருகிப்போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலரது உடல்கள் பேருந்தின் அடிப்புறத்தில் சிக்கியுள்ளன. அவற்றை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தென்னாபிரிக்காவை உலுக்கியுள்ள இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அந்நாட்டின் ஜனாதிபதி சிரில் ரமபோசா இரங்கல் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/297513
    • மிகவும் மேலோட்டமாக விடயங்களை விளங்கிக் கொண்டு இங்கே பகிர்கிறீர்கள். மேற்கு வங்கம் பங்களாதேஸ் பிரச்சினையில் அக்கறையாக இருந்தது உண்மை தான், ஆனால் அந்த மாநிலம் சொல்லித் தான் இந்திரா பங்களாதேசைப் பாகிஸ்தானில் இருந்து பிரித்தார் என்பது தவறு. இந்திரா, பாகிஸ்தானுடன் போர் நடந்த காலப் பகுதியில், பாகிஸ்தானைப் பலவீனப் படுத்த எடுத்துக் கொண்ட முன்னரே திட்டமிட்ட ஒரு நடவடிக்கை இது. இலட்சக் கணக்கான பங்களாதேச அகதிகள் மேற்கு வங்கத்தினுள் குவிந்ததும் ஒரு சிறு பங்குக் காரணம். இந்தியாவை அமெரிக்காவின் US Trade Representative (USTR) என்ற அமைப்பு வளரும் நாடுகள் பட்டியலில் இருந்து அகற்றியிருப்பது உண்மை. ஆனால், இது IMF போன்ற உலக அமைப்புகளின் முடிவல்ல. இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் அதிகரிக்கும் போது, அமெரிக்காவின் USTR அமைப்பு இந்தியாவின் உற்பத்திப் பொருட்களைப் பற்றி விசாரிக்கவும், சட்டங்கள் இயற்றவும் கூடியவாறு இருக்க வேண்டும். இப்படிச் செய்ய வேண்டுமானால் இந்தியாவை இந்தப் பட்டியலில் இருந்து அகற்றினால் தான் முடியும், எனவே அகற்றியிருக்கிறார்கள். இதன் அர்த்தம் இந்தியா உலக வர்த்தகத்தில் அதிக பங்கைச் செலுத்த ஆரம்பித்திருக்கிறது என்பது தான், எனவே இந்தியா வர்த்தக ரீதியில் வளர்கிறது என்பது தான் அர்த்தம். ஆனால், மனித அபிவிருத்திச் சுட்டெண்ணைப் (HDI) பொறுத்த வரை இந்தியா இன்னும் வளர்ந்து வரும் நாடு தான். இந்தியாவை விடப் பணக்கார நாடான கட்டாரும் வளர்ந்து வரும் நாடு தான்.   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.