Jump to content

போர்காலத்திலும் பார்க்க எம் கல்வி தரம் படுவீழ்ச்சி - ஆய்வு (எல்லோரும் காண வேண்டும்.)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பல விடயங்களை அலசி ஆராய்ந்துள்ளார்கள். நன்றி நெடுக்ஸ் இணைப்புக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய கருத்துப்படி தமிழர்களது கல்வித்தகுதி மிகவும் பிந்தள்ளப்பட்டு நாசமாகப்போக பிள்ளைகளது பெற்றொரும் அவர்களது புலம்பெயர்ந்து வாழும் உறவுகளுமே காரணம். குறிப்பிட்டகாலத்துக்கு தாயகத்திலுள்ள எமது உறவுகளைக் கவனிக்காது விட்டால் எல்லாமெ சரியாகிவிடும்.

அதேவேளை, இந்த நிலை தொடர்ந்தால் கெட்டுக்குட்டிசுவராகிப்போய்விடுவினம் அதுகூட எனக்கு விருப்பமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/6/2020 at 15:53, Elugnajiru said:

என்னுடைய கருத்துப்படி தமிழர்களது கல்வித்தகுதி மிகவும் பிந்தள்ளப்பட்டு நாசமாகப்போக பிள்ளைகளது பெற்றொரும் அவர்களது புலம்பெயர்ந்து வாழும் உறவுகளுமே காரணம். குறிப்பிட்டகாலத்துக்கு தாயகத்திலுள்ள எமது உறவுகளைக் கவனிக்காது விட்டால் எல்லாமெ சரியாகிவிடும்.

அதேவேளை, இந்த நிலை தொடர்ந்தால் கெட்டுக்குட்டிசுவராகிப்போய்விடுவினம் அதுகூட எனக்கு விருப்பமே.

நூற்றுக்கு நூறு வீதம் உண்மை.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வடமாகாணம் கல்வியில் பின்னடைகின்றதா.? இராமச்சந்திரன் நிர்மலன்

school-student.jpg

அண்மைக் காலங்களில் தமிழ் மக்களின் மனதில் குடிகொள்கின்ற முக்கியமான கவலைகளில் நாம் கல்வியில் பின்தள்ளப்படுகின்றோம் என்பதும் ஒன்றாகும். போராட்ட காலத்தில் கூட கல்வியில் பின்தங்கவில்லை என தமது ஆதங்கங்களை பலர் வெளியிட்டுவருவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. உண்மையில் வடமாகாணம் கல்வியில் வீழ்ச்சியடைந்து விட்டதா? அதனை நாம் க.பொ.த சாதாரண தர மாகாண தரவரிசை அடிப்படையில் கூறிவிட முடியுமா? என்பதே முதலாவது வினாவாகும்.

இலங்கையில் பாடசாலைக் காலத்தில் மூன்று பொதுப் பரீட்சைகள் நடைபெறுகின்றன. அவையாவன தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை, க.பொ.த சாதாரணதரப் பரீட்சை , க.பொ.த உயர்தரப் பரீட்சை ஆகும். இவற்றில் எப்பரீட்சையின் அடிப்படையில் வடமாகாணம் கல்வியில் பின்னடைந்து காணப்படுகின்றது என கூறுவது?

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையானது உண்மையில் மாணவர்களின் கல்வி அடைவை அறிவதற்காக நடாத்தப்படும் பரீட்சையல்ல. அது மாணவர்களை இடைநிலைப் பாடசாலைகளிற்குத் தெரிவு செய்வதற்கும், வறிய மாணவர்களில் திறமையான மாணவர்களைத் தெரிவுசெய்து அவர்களுக்குப் புலமைப்பரிசில் வழங்குவதன் மூலம் சமூக ஏற்றத்தாழ்வுகளற்று கல்வி கற்பதற்கான சூழலை உருவாக்குவதற்காகவுமே நடாத்தப்படுகின்றது. இதன் நோக்கம் இப்போது கேள்விக்குறியாக இருப்பதுடன் இப் பரீட்சை சிறுவர்;களைப் பாதிப்பதாகவும் கல்வியியலாளர்கள் கூறுகின்றனர்.

இப் பரீட்சை அடிப்படையில் வடமாகாணத்தின் கல்வி நிலையை அளவிடுவது என்பது நகைப்பிற்குரியது. ஆனபோதிலும் வடமாகாண சிறுவர்கள் இப்பரீட்சையில் கிராம நகர வேறுபாடுகளின்றிச் சாதனை படைக்கிறார்கள் என்பது கண்கூடு.

அடுத்ததாக க.பொ.த.சாதாரணப் பரீட்சையினை நோக்கினால், அப்பரீட்சையானது உயர்தரத்தில் பொருத்தமான பாடத்துறைகளைத் தெரிவு செய்யவும் ஏனைய கற்றல் செயற்பாடுகளைத் தொடரவும் மற்றும் வேலை வாய்ப்புக்களுக்கு அடிப்படைத் தகைமையாகவும் கொள்ளப்படுகிறது. இது ஒரு போட்டிப் பரீட்சை அன்று. க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் வடமாகாண தர நிலையை நோக்கினால் வடமாகாண தர நிலையானது அண்மைய காலங்களில் இறுதி நிலையாகிய ஒன்பதாம் நிலையிலேயே காணப்படுகிறது. எனவே வடமாகாணம் கல்வியில் பின்னடைந்துவிட்டது என கூறமுடியுமா?

உண்மையிலேயே வடமாகாணத்தில் க.பொ.த உயர்தரம் கற்கத் தகுதியுடையோர் சதவீதம் வருடா வருடம்; அதிகரித்துக் கொண்டு வருகிறது. 2019 ஆண்டு சிறிய வீழ்ச்சியினைக் கண்டு இருக்கிறது. அதே சமயம் தேசியமட்டச் சித்திவீதத்திலும் 2019 ஆண்டு வீழ்ச்சி இருப்பது நோக்கத்தக்கது. ஏனைய வருடங்களில் படிப்படியாக வடமாகாணத்தில் க.பொ.த உயர்தரம் கற்கத் தகுதியுடையோர் சதவீதம் அதிகரித்துக் கொண்டு வருகின்றது. 2009 ஆண்டு; க.பொ.த உயர்தரம் கற்கத் தகுதியுடையோர் சதவீத அடிப்படையில் வடமாகாணம் இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டது. 2009 ஆண்டு; வடமாகாணதில் க.பொ.த உயர்தரம் கற்கத் தகுதியுடையோர் சதவீதம் 55.71% 2019 ஆண்டு க.பொ.த உயர்தரம் கற்கத் தகுதியுடையோர் சதவீத அடிப்படையில் வடமாகாணம் ஒன்பதாம்; இடத்தை பெற்றுக் கொண்டது. 2019 ஆண்டு; வடமாகாணதில் க.பொ.த உயர்தரம் கற்கத் தகுதியுடையோர் சதவீதம் 67.74% அப்படியாயின் வடமாகாணம் கல்வியில் பின்னடைகின்றது என்று எவ்வாறு கூறுவது?

வடமாகாண க.பொ.த உயர்தரத்துக்குத் தகுதியுடையோர் சதவீத அதிகரிப்பு ஏனைய மாகாணங்களில் க.பொ.த உயர்தரத்துக்குத் தகுதியுடையோர் சதவீத அதிகரிப்பிலும் குறைவானது. எனவே வடமாகாணம் கல்வியில் பின்னடைந்து விட்டது என்று கூறமுடியுமா? இந்த ஒப்பீடுகள் எந்தளவு சரியானவை வடக்கு , கிழக்கு மாகாணங்களில் அண்ணளவாக 90,000 பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் காணப்படுகின்றன. அதேவேளை நாட்டின் வறுமை கூடிய மாவட்டங்களான முல்லைத்தீவு ,கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்கள் வடமாகாணத்திலே காணப்படுகின்றன. இவ்வாறான பல புறச்சூழல்கள் காணப்படும் மாகாணத்தை மற்றைய மாகாணங்களோடு ஒப்பிடும் முறையே தவறானது.

exam-01.jpg

இதேவேளை தமிழ் , சிங்கள மாணவர்களிடையே க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் பிரதான பாடங்களில் மொழி மற்றும் சமயம் என்பன வேறுவேறு வினாத்தாள்களை உடையன. அட்டவணை-1 இனை அவதானிக்கின்ற போது தமிழ் , சிங்களம் மற்றும் பௌத்தம் , சைவநெறி என்பவற்றில் சிங்களம் , பௌத்தம் என்பவற்றில் ஊ அல்லது அதற்கு மேல் பெற்றோர் சதவீதம் தமிழ் , சைவநெறி ஆகியவற்றில் C அல்லது அதற்கு மேல் பெற்றோர் சதவீதத்திலும் விட குறிப்பிடத்தக்களவு அதிகமாகும் போது வடமாகாணத்தின் தரநிலை பின் நோக்கி நகர்வதனை அவதானிக்கக் கூடியதாகக் காணப்படுகிறது. வேறுவேறு பாடங்களான மொழி மற்றும் சமயம் என்பன வேறுவேறான கடினச்சுட்டி கொண்டவை.

எனவே இவற்றின் பெறுபேறு நிச்சயமாகத் தரநிலையில் தாக்கத்தைச் செலுத்தும். சிங்கள மாணவர்கள் மொழி மற்றும் சமயப் பாடங்களில் ஊ அல்லது அதற்கு மேல் பெறுபவர்களின் சதவீதம் அதிகமாகும் போது அவர்கள் 3C, 3S எடுப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகரிக்கின்றது. ஆனால் தமிழ் மாணவர்கள் மொழி மற்றும் சமயத்திற்கு ஊ அல்லது அதனிலும் அதிகமாகப் பெறுபவர்களின் சதவீதம் சிங்கள மாணவர்களை விடக் குறைவாகவே காணப்படுகின்றது. எனவே 3C,3S எடுப்பதற்கான வாய்ப்புகள் சிங்கள மாணவர்களை விட தமிழ் மாணவர்களுக்குக் குறைவாகின்றது.

வேறுவேறு வினாத்தாள்களில் தமிழ் மற்றும் சிங்கள மாணவர்கள் தோற்றி அவற்றின் புள்ளிகளை ஒரே நியம அளவீட்டுக்கு மாற்றாமல் தரங்களை இட்டு மாகாண தரவரிசையைக் கணிப்பது புள்ளிவிபரவியல்ரீதியில் தவறானவை. இவற்றின் அடிப்படையில் வடமாகாணம் கல்வியில் பின்னடைந்து விட்டது என்பதும் ஏற்புடையதன்று. வடமாகாணம் க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் பல பௌதீக, சமூக, பொருளாதார, கலாச்சாரக் காரணிகளையும் தாண்டி க.பொ.த உயர்தரத்;திற்குத் தகுதியுடையோர் சதவீதத்தைப் படிப்படியாக அதிகரிக்கின்றது என்பதே உண்மையாகும். வடமாகாணத்தின் வளர்ச்சி வீதத்தை ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுவது தவறானது ஆகும்.

exam-02.jpg
அடுத்ததாக க.பொ.த உயர்தரப் பரீட்சையினை நோக்கினால் உயர்தரப் பரீட்சையானது பல்கலைக்கழகத்துக்கு மாணவர்களைத் தெரிவு செய்வதற்கும் ஏனைய உயர் கல்விகளைத் தொடர்வதற்கும் மற்றும் பொருத்தமான தொழில்த் துறைகளைத் தெரிவு செய்வதற்கும் நடாத்தப்படும் ஒருபோட்டிப் பரீட்சையாகும். 2019 ஆண்டு நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாகாண தர நிலைகளில் கலைப் பிரிவில் முதலாம் இடத்தையும் , கணித , விஞ்ஞான மற்றும் வர்த்தகப் பிரிவுகளில் வடமாகாணம் இரண்டாவது நிலையிலும் காணப்படுகின்றது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட தொழில்நுட்பப் பிரிவுகளில் ஒன்பதாம் இடத்தையும் ஏனைய பிரிவில் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளது.

அட்டவணை-2 இனை அவதானிக்கின்ற போது வடமாகாணம் உயர்தரப் பரீட்சையில் மாகாணத் தரவரிசையில் முன்னணியில் இருப்பதனை அவதானிக்கலாம். அத்துடன் உயர்தரத்தில் பல்கலைக்கழகத் தெரிவுகள் ணு புள்ளி அடிப்படையில் இடம் பெறுவதால் வினாத்தாள்களின் தன்மை பற்றி ஒப்பிட வேண்டிய அவசியம் இல்லை. குறிப்பிட்ட சில ஆண்டுகளாக வடமாகாணம் கணித,விஞ்ஞானப் பிரிவுகளில் முதலாம், இரண்டாம் நிலைகளையே பெறுகின்றது. அதேவேளை கணித,விஞ்ஞானப் பிரிவுகளில் வடமாகாண மாணவர்கள் தேசியமட்ட முதல் பத்து நிலைகளில் குறிப்பிடத்தக்களவு இடங்களைப் பெறுகின்றனர். எனவே வடமாகாண மாணவர்கள் உயர்தரத்தில் தமது திறமைகளைத் தேசியமட்டத்தில் வெளிக்காட்டி வருகின்றனர்.இவை பாராட்டப்பட வேண்டிய விடயங்கள் ஆகும்.

இதேவேளை தேசிய மட்டத்தில் நடைபெறுகின்ற கற்றல் சார் போட்டிகளிலும் வடமாகாண மாணவர்கள் தமது சாதனைகளைப் படைக்கத் தவறுவதில்லை. அண்மைக் காலமாக கணித , விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டிகளில் வடமாகாண மாணவர்கள் தேசியத்தையும் தாண்டி சர்வதேசரீதியில் பதக்கங்களைப் பெற்று தமது பாடசாலைக்கும் , வடமாகாணத்திற்கும் , இலங்கைக்கும் சர்வதேச ரீதியாகப் பெருமைகளைத் தேடித் தருகின்றார்கள். அத்துடன் தமிழ்த்தினப்போட்டி, ஆங்கிலதினப்போட்டி, சமூகவிஞ்ஞானப்போட்டி போன்றவற்றில் வடமாகாண மாணவர்கள் தேசிய மட்டத்தில் சாதனை படைக்கிறார்கள்.

எனவே வடமாகாணம் கல்வியில் பின்னடைகின்றது என்பது தனியே க.பொ.த. சாதாரணதர மாகாண தரவரிசையின் அடிப்படையில் மாத்திரம் கூறிவிட முடியாது. அத்துடன் இவ் தர நிலைக் கணிப்புக்கள் புள்ளிவிபரவியல் ரீதியாகப் பெறுமதியற்றவை. வடமாகாணம் கல்வியில் படிப்படியாக முன்னேறி வருகின்றது என்பதே உண்மையாகும்.

அத்துடன் கல்வியறிவில் பரம்பரைக்காரணிகளின் தாக்கம் கணிசமானளவு காணப்படுகிறது என கல்வியியலாளர்கள் கூறுகின்றனர். யுத்தம் காரணமாகவும் ஏனைய பொருளாதாரக் காரணிகளுக்காகவும் பல புத்திஜீவிகள் வடமாகாணத்தை விட்டு வெளியேறியுள்ளனர்;. அவர்களின் பிள்ளைகள் இன்று புலம்பெயர் தேசங்களில் சாதனையாளர்களாக மிளிர்கின்றனர். அவர்களின் வெளியேற்றம் இன்றேல் இன்று வடமாகாணக் கல்வி வளர்ச்சி வேகம் மேலும் அதிகமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

எனவே கல்வியியலாளர்களும் , சமூக ஆர்வலர்களும் முதலிலே நாம் கல்வியில் பின்னடைகின்றோம் என்ற கருத்தை கை விட வேண்டும். நாம் கல்வியில் பின் தங்கியிருக்கிறோம் என்பது எம் மீது திணிக்கப்படுகின்ற ஒரு கருத்தியல். நாம் கல்வியில் பின் தங்கியிருக்கின்றோம் என்ற கருத்தியல் எம்மை ஒரு பின் தங்கிய சமூகமாக, அடிமைப்பட்ட சமூகமாகக் காட்டுவதன் மூலம் வடமாகாணத்தின் மக்கள் இனி உரிமைகள் தொடர்பாகச் சிந்திக்க கூடாது என்பதற்காக உளவியல் ரீதியாக உருவாக்கப்பட்ட கருத்தியல் ஆகும். எனினும் நாம் எமது கல்வி நிலையினை மேலும் மேலும் மேம்படுத்த வேண்டும். அதற்காக அனைவரும் இணைந்து செயலாற்ற வேண்டும். அதற்கு நாம் முதலில் செய்ய வேண்டியது வடமாகாணம் கல்வியில் வீழ்ச்சியடைந்து வருகின்றது என்ற கருத்தியலைக் கைவிடுவதே ஆகும்.

1500382885710.jpg
இராமச்சந்திரன் நிர்மலன் (புற்றளை)

ஆசிரியர், வவு/ கனகராயன்குளம் மகா வித்தியாலயம்.

https://www.vanakkamlondon.com/school-education-21-06-2020/

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்
On 3/6/2020 at 06:19, nedukkalapoovan said:
 

இதில் இணைக்கப்பட்டிருந்த வீடியோவை திரும்பவும் ஒரு தரம் இணைக்கமுடியுமா? 

நன்றி..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

இதில் இணைக்கப்பட்டிருந்த வீடியோவை திரும்பவும் ஒரு தரம் இணைக்கமுடியுமா? 

நன்றி..

உங்களுக்கும் நெடுக்கின் வீடியோ தெரியவில்லையா ?

நானும் ஒரு புதிய அட் பிளாக் அப்ஸ் குழப்படி பண்ணுது என்று நினைத்தேன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, பெருமாள் said:

உங்களுக்கும் நெடுக்கின் வீடியோ தெரியவில்லையா ?

நானும் ஒரு புதிய அட் பிளாக் அப்ஸ் குழப்படி பண்ணுது என்று நினைத்தேன் .

இல்லை பார்க்கமுடியவில்லை..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பிரபா சிதம்பரநாதன் said:

இல்லை பார்க்கமுடியவில்லை..

இப்படியான ஒளிப்பதிவுகளுக்கு யூடுப் கணக்கு ஒன்று வைத்து இங்கு தள்ளிவிடுவதுண்டு சில ஒளிப்பதிவுகள் ரகளை பண்ணும் இனி நெடுக்கர்  மூலத்தை குறிப்பிட்டால் நல்லது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@பிரபா சிதம்பரநாதன் @பெருமாள்  இது தான் இணைப்பு என்று நினைக்கிறேன் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, முதல்வன் said:

@பிரபா சிதம்பரநாதன் @பெருமாள்  இது தான் இணைப்பு என்று நினைக்கிறேன் 

 

ஏன்  நெடுக்கரின் பதிவில் வெறுமையாய் உள்ளது ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல இணைப்பை முதலில் இணைத்த நெடுக்குக்கும், பின் இணைந்த முதல்வனுக்கும் நன்றி.

சமூகத்தின் கல்வி மீதான அக்கறையின்மை, புறக்காரணிகளால் கவனச் சிதறல், வெளிநாட்டு பணம் கொடுக்கும் ஊக்கமின்மை என்பவை கல்வி வீழ்ச்சியின் காரணிகளாக முன்வைக்கப்படுகிறன.

இவை மூன்றையும் நிவர்த்தி செய்வது வடமாகாணத்தவர் கைகளில்தானே உள்ளது?

மாகாணசபை அரசியலில் அறிக்கை கிடப்பில் போடப்பட்டது என்பதை கேட்க அழுவதா, சிரிப்பதா தெரியவில்லை.

இருக்கும் சொற்ப அதிகாரங்களையே வீணடிகிறார்கள்.

இதில் இன்னுமொன்றும் தோன்றியது. கெட்டிகாரர்களை மட்டும் கொண்டாடும் சமூகம் நாம்.

யாழில் ஒவ்வொரு பிரபல பாடசாலையும்  போட்டி பரீட்சை அல்லது புலமைபரிசில் மூலமே பெரிதும் மாணவர்களை உள்வாங்குகிறது. இவர்கள் 100% கிட்டதட்ட ஓஎல் பாஸ் பண்ண கூடும்.

இந்த பள்ளிகளில் சேரமுடியாத மாணவர்களே இந்த தென்மாகாணத்துடன் ஒப்பிடும் போது குறையும் 15% சதவீதத்தில் வருவர் என நான் நினைக்கிறேன்.

நான் சொல்ல வருவது என்னவென்றால் - யாழின் கல்வி சூழல் நன்றாக படிக்கும் மாணவரை நோக்கி இயைந்துள்ளமையால் (oriented towards catering for high achievers) நன்றாக படிக்காத மாணவர்கள் மீது கவனம் குறைவாக இருக்கிறதா? என்பதே.

தென் மாகாணத்தினதும், வட மாகாணத்தினும் OL pass rate ஐ ஒப்பிடும் அதே சமயம் இரு மாகாணங்களின் OL 9 As rate ஐயும் ஒப்பிட்டால் இன்னும் விபரமாக நோக்கலாம்.

தவிரவும் இது உண்மையில் மாவட்ட ரீதியியிலும் பார்க்க பட வேண்டியது. அல்லது one size fits all என்பதாக மன்னாரில் நானாட்டானில் இருக்கும் தேவை, யாழ் நகரிலும் உள்ளது என கருதும் நிலை ஏற்படலாம்.

ஓ எல் சோதனையில் யாழ் இந்துவிலும் வேம்படியிலும் ஆங்கிலத்தில் A எடுத்தவர்கள், தமிழில் A எடுத்தவர்களை விட கூட என்பது அதிர்ச்சியான செய்திதான்.

நமது காலத்தில் பொதுவாக - டி எடுக்க இலகுவான பாடம், சமயம், தமிழ், சமூககல்வி, கஸ்டமான பாடம் கணிதம், ஆங்கிலம், விஞ்ஞானம் என்றே இருந்தது.

Link to comment
Share on other sites

 

இலங்கையின் கல்வி முறைமை ஒரு வெற்றிபெற்ற கல்வி முறைமையல்ல - மனம் திறக்கும் அரசியல் ஆய்வாளர்???

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பெருமாள் said:

உங்களுக்கும் நெடுக்கின் வீடியோ தெரியவில்லையா ?

நானும் ஒரு புதிய அட் பிளாக் அப்ஸ் குழப்படி பண்ணுது என்று நினைத்தேன் .

நெடுக்கரின் வீடியோ எனக்கும் தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புலவர் said:

நெடுக்கரின் வீடியோ எனக்கும் தெரியவில்லை.

கொஞ்சப்பேருக்கு பிறை தெரிந்து🤣 பச்சையும் குத்தி உள்ளனர் முதல் வேலை செய்து இருக்கு இடைவேளைக்கு பின் காணாமல் போயிட்டுது ஆக்கும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பெருமாள் said:

ஏன்  நெடுக்கரின் பதிவில் வெறுமையாய் உள்ளது ?

நமக்கும் வெறுமையாகத்தான் தெரிகின்றது..😎

Best Marudhamalai GIFs | Gfycat

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, முதல்வன் said:

@பிரபா சிதம்பரநாதன் @பெருமாள்  இது தான் இணைப்பு என்று நினைக்கிறேன் 

 

மிக்க நன்றி..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, goshan_che said:

இதில் இன்னுமொன்றும் தோன்றியது. கெட்டிகாரர்களை மட்டும் கொண்டாடும் சமூகம் நாம்.

யாழில் ஒவ்வொரு பிரபல பாடசாலையும்  போட்டி பரீட்சை அல்லது புலமைபரிசில் மூலமே பெரிதும் மாணவர்களை உள்வாங்குகிறது. இவர்கள் 100% கிட்டதட்ட ஓஎல் பாஸ் பண்ண கூடும்.

இந்த பள்ளிகளில் சேரமுடியாத மாணவர்களே இந்த தென்மாகாணத்துடன் ஒப்பிடும் போது குறையும் 15% சதவீதத்தில் வருவர் என நான் நினைக்கிறேன்.

நான் சொல்ல வருவது என்னவென்றால் - யாழின் கல்வி சூழல் நன்றாக படிக்கும் மாணவரை நோக்கி இயைந்துள்ளமையால் (oriented towards catering for high achievers) நன்றாக படிக்காத மாணவர்கள் மீது கவனம் குறைவாக இருக்கிறதா? என்பதே.

எனது கருத்தும் இதுவே, ஆனால் இந்த வீடியோவை இன்னமும் பார்க்கவில்லை, மேலும் இன்னொரு திரியில் மஹாபொல வசதிகள், தொழிநுட்ப கல்லூரிகள், வெளிநாடுகளில் போய் படிக்கிறார்கள் என்று எல்லாம் கூறுவதால் அண்மைக்கால தரவுகள் இல்லாமல் எழுதுவதில் தயக்கம் உள்ளது. அவ்வளவுதான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

எனது கருத்தும் இதுவே, ஆனால் இந்த வீடியோவை இன்னமும் பார்க்கவில்லை, மேலும் இன்னொரு திரியில் மஹாபொல வசதிகள், தொழிநுட்ப கல்லூரிகள், வெளிநாடுகளில் போய் படிக்கிறார்கள் என்று எல்லாம் கூறுவதால் அண்மைக்கால தரவுகள் இல்லாமல் எழுதுவதில் தயக்கம் உள்ளது. அவ்வளவுதான்

நிச்சயமாக கல்விக்கான வாய்ப்புகள் இப்போ பெருகிவிட்டது உண்மையே. 

வசதி படைத்தவர்கள் வெளிநாடு போகிறார்கள். அதே போல் திறந்த வெளி பல்கலையும் உண்டு. ஆனால் இங்கே போல் திறந்தவெளி கல்வியை மதிக்கும் பாண்பு அங்கே குறைவுதான்.

சில வெளிநாட்டு யூனிகள் சில கோர்ஸை முழுக்க முழுக்க இலங்கையிலும், சிலர் இறுதியாண்டு மட்டும் சிங்கப்பூர் அல்லது லண்டனில்/அவிசில் படிக்கும் வகையிலும் செய்கிறார்கள்.

அதே சமயம் மிக மோசமான மோசடிகளும் நடக்கிறன. 

 

17 hours ago, புலவர் said:

நெடுக்கரின் வீடியோ எனக்கும் தெரியவில்லை.

 

34 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

எனது கருத்தும் இதுவே, ஆனால் இந்த வீடியோவை இன்னமும் பார்க்கவில்லை, மேலும் இன்னொரு திரியில் மஹாபொல வசதிகள், தொழிநுட்ப கல்லூரிகள், வெளிநாடுகளில் போய் படிக்கிறார்கள் என்று எல்லாம் கூறுவதால் அண்மைக்கால தரவுகள் இல்லாமல் எழுதுவதில் தயக்கம் உள்ளது. அவ்வளவுதான்

 

15 hours ago, குமாரசாமி said:

நமக்கும் வெறுமையாகத்தான் தெரிகின்றது..😎

Best Marudhamalai GIFs | Gfycat

அதைதான் முதல்வன் மீள இணத்துள்ளார் என நினக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/7/2021 at 00:13, goshan_che said:
On 26/7/2021 at 08:49, குமாரசாமி said:

அதைதான் முதல்வன் மீள இணத்துள்ளார் என நினக்கிறேன்

நேற்றே முதல்வன் இணைத்ததை பார்க்க முடிந்தது, ஆனால் நேரம் போதாமையால் முழுவதும் பார்க்கமுடியவில்லலை.. இன்றுதான் பார்த்தேன் நன்கு விபரமாக புள்ளிவிபர்ஙகளுடன் கூறியுள்ளார்..

எங்களிடமுள்ள வளத்தை சரியான முறையில் பயன்படுத்தவில்லை என்பதை மீண்டும் நிருபித்துள்ளது..

இன்றும் கூட ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது, அதிலும் கிராமப்புற பாடசாலைகள், பின் தங்கிய பாடசாலைகள் சிலவற்றிற்கு ஆங்கில மொழி கற்பிக்கும் ஆசிரியர்கள் இல்லை.. சில நகர்ப்புற பாடசாலைகளில் தேவைக்கு அதிகமான கட்டடங்கள். 

அதேபோல பெற்றோரின் தலையீடு நல்லமுறையில் இல்லாமல் ஒரு வித போட்டி மனபான்மையுடன் இருப்பதை கண்டிருக்கிறேன், கேள்விப்பட்டும் இருக்கிறேன்.. எப்படியாவது தேசிய பாடசாலை ஆகிவிடவேண்டுமென நினைப்பவர்களும் அதிகம். அதனால் ஏற்படப்போகும் நன்மைகள் அதிகமா? தீமைகள் அதிகமா என யோசிக்க விடாமல் “ தேசிய பாடசாலை” கண்ணை கவருகிறது.. 

கல்விக்கான வாய்ப்புகள் அதிகம் ஆனால் அதற்கேற்ப தொழில் வாயப்புக்கள் உருவாகினால்தான் அதிக பயன் வரும்.. 

அவர் கூறும் திட்டங்களில் பெரும்பலானவை, நடைமுறைக்கு சாத்தியமானது மட்டுமல்ல, அதிக செலவும் இல்லாத ஒன்று.. கவனிப்பார்களா தெரியவில்லை

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.