Jump to content

கல்முனை இந்து ஆலய வழக்கு தொடர்பில் நீதிபதி வழங்கியுள்ள உத்தரவு!


Recommended Posts

கல்முனை வடக்கு உப பிரதேச செயலத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆலயம் தொடர்பான வழக்கினை கல்முனை நீதவான் நீதிமன்று தள்ளுபடி செய்துள்ளது. குறித்த வழக்கு தொடர்பான விசாரணையை விஷேடமாக பொறுப்பளிக்கப்பட்ட நீதிபதி தர்மலிங்கம் கருணாகரன் வழக்கை விசாரித்து மனுவில் உள்ள குறைபாடு காரணமாக இன்று வழக்கை தள்ளுபடி செய்துள்ளார்.

இன்று கல்முனை வடக்கு பிரதேச செயலக ஆலயம் சார்பாக பிரதேச செயலாளர் ரி.ஜே அதிசயராஜ் மன்றில் ஆஜராகியிருந்ததுடன் சட்டத்தரணிகளான ந.சிவரஞ்சித், மதிவதனன், ஆகியோர் ஆதரவாக ஆஜராகியிருந்தனர்.

கடந்த 2018ம் ஆண்டு கல்முனை மாநகர சபை முதல்வர் சார்பில் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தில் நீண்டகாலமாக ஊழியர்களால் வழிபட்டு வந்த இவ்வாலயம் சட்ட ரீதியற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ளதாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

அத்துடன் இவ்வாலய வழக்கில் நீண்டகாலமாக பல்வேறு வழக்கு தவணைகளில் பிரதான சட்டத்தரணி நா. சிவரஞ்சித்துடன் சட்டத்தரணிகளான ஆர்த்திகா, மதிவதனன் ஆகியோர் ஆஜராயிருந்தமை குறிப்பிடத்தக்கது.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/144506

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.