Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜார்ஜ் ஃப்ளாய்ட் வாழ்க்கையின் கடைசி அரை மணி நேரம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஜார்ஜ் ஃப்ளாய்ட் வாழ்க்கையின் கடைசி அரை மணி நேரம்

ஜார்ஜ் ஃப்ளாய்ட் வாழ்க்கையின் கடைசி அரை மணி நேரம்TWITTER/RUTH RICHARDSON

அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட், போலீஸ் காவலில் கொல்லப்பட்டதால் நாடு முழுக்க போராட்டங்கள் வெடித்துள்ளன.

மின்னசோட்டா தலைநகர் மினியாபொலிஸில், 46 வயதான ஜார்ஜ் ஃப்ளாய்ட் போலீஸார் பிடியில் கழுத்து நெறிபட்டு இறந்தார்.

ஒரு காருக்கு அடியில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் கைவிலங்கிடப்பட்டிருப்பது போன்றும் அவரின் கழுத்தின் மேல் தனது முழங்காலை வைத்து காவலர் ஒருவர் அழுத்துவதும் போன்றும் ஒரு காணொளி சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டது.

ஜார்ஜ் ஃப்ளாய்ட் கழுத்தின் மீது காலை வைத்து அழுத்தி கொன்றதாக, சாவின் என்ற காவலர் மீது கொலை வழக்குப் பதியப்பட்டுள்ளது.

ஃப்ளாய்ட் மரணத்திற்கு காரணமான நிகழ்வுகள் அனைத்தும் வெறும் 30 நிமிடங்களில் நடந்து முடிந்தன.

இவை அனைத்தும் 20 டாலர் கள்ளநோட்டு விவகாரத்தில் ஆரம்பித்தது.

கோப்புப்படம்Getty Images

ஒரு கடையில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் சிகரெட் வாங்கியபோது, அவர் கொடுத்த 20 டாலர் பணம் கள்ளநோட்டு என சந்தேகித்த கடைக்காரர், போலீஸாருக்கு தகவல் அளித்தார்.

தனது சொந்த ஊரான டெக்ஸாசில் இருந்து குடிபெயர்ந்து மினியாபொலிஸில் பல ஆண்டுகளாக ஜார்ஜ் ஃப்ளாய்ட் வாழ்ந்து வந்தார். 

சமீப காலம் வரை பவுன்சராக அவர் வேலை செய்தார்.

கொரோனா உலகத் தொற்று காரணமாக அமெரிக்காவில் வேலையிழந்த மில்லியன் கணக்கான மக்களில் ஜார்ஜ் ஃப்ளாய்ட்டும் ஒருவர்.

எங்களது கடைக்கு ஜார்ஜ் ஃப்ளாய்ட் வழக்கமாக வருவார். அவர் எந்த பிரச்சனையும் செய்ததில்லை என என்.பி.சி தொலைக்காட்சியிடம் கூறியுள்ளார் கப் புட் கடையின் உரிமையாளர் அபுமாயலே.

ஆனால், சம்பவம் நடந்த அன்று அபுமாயலே கடையில் இல்லை. கள்ள நோட்டு சந்தேகத்தில் அவரது கடையில் வேலை பார்த்த பதின்ம வயது இளைஞர் வழக்கமான சட்ட நடைமுறைகளைப் பின்பற்றினார்.

கோப்புப்படம்Getty Images

20:01 மணிக்கு அவரச உதவி எண்ணான 911 ஐ தொடர்புகொண்ட கடைக்காரர், ஜார்ஜ் ஃப்ளாய்ட் அளித்தது கள்ள நோட்டு என்ற சந்தேகத்தின் பெயரில் அவருக்கு வழங்கிய சிகரெட்டை திரும்ப கேட்டதாகவும், ஆனால் அவர் அதை வழங்க மறுத்ததாகவும் புகார் அளித்துள்ளார். 

மேலும், ஜார்ஜ் ஃப்ளாய்ட் நன்கு குடித்திருப்பதாக தெரிவதாகவும் கடைக்காரர் புகார் அளித்துள்ளார் என போலீஸார் வெளியிட்ட பதிவுகள் காட்டுகின்றன.

20:08 மணிக்கு சம்பவ இடத்திற்கு போலீஸார் வந்துள்ளனர். அங்கு சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரில் இரண்டு பேருடன் ஜார்ஜ் ஃப்ளாய்ட் அமர்ந்திருந்தார்.

வாகனத்துக்கு அருகே சென்ற தாமஸ் லேன் என்ற போலீஸ்காரர் தனது துப்பாக்கியை எடுத்ததுடன், கைகளைக் காட்டுமாறும் ஜார்ஜ் ஃப்ளாய்டிற்கு உத்தரவிட்டுள்ளார். ஆனால், காவல் அதிகாரி ஏன் தேவையில்லாமல் துப்பாக்கியை வெளியே எடுத்தார் என்பதை அவரது வழக்கறிஞர் விளக்கவில்லை.
 

‘’ ஜார்ஜ் ஃப்ளாய்ட்டை போலீஸ் அதிகாரி தாமஸ் லேன் காரை விட்டு வெளியே இழுத்தார். கைகளில் விலங்கு போடும்போது, ஜார்ஜ் ஃப்ளாய்ட் அதை பலமாக எதிர்த்துள்ளார்’’ என தாமஸ் லேனின் வழக்கறிஞர் கூறுகிறார்.

கைவிலங்கு போட்ட பிறகே, கள்ள நோட்டு விவகாரத்தில் கைது செய்யப்படுவதாக ஜார்ஜ் ஃப்ளாய்ட்டிற்கு போலீஸார் தெரிவித்துள்ளனர்.

ஜார்ஜ் ஃப்ளாய்ட்டை காவல்துறை வாகனத்தில் போலீஸார் ஏற்ற முயன்றபோது ஏற்பட்ட கைகலப்பில் அவர் கீழே விழுந்தார்.

அப்போது அங்கு வந்த காவல் அதிகாரி சாவின், ஜார்ஜ் ஃப்ளாய்ட்டை ரோந்து வாகனத்தில் ஏற்ற மற்ற அதிகாரிகளுடன் சேர்ந்து முயன்றுள்ளார்.

கோப்புப்படம்Getty Images

இந்த முயற்சியின் போது, சரியாக 20:19 மணிக்கு காவலர் சாவின் இழுத்ததால், ஜார்ஜ் ஃப்ளாய்ட் கீழே விழுந்தார். அப்போது அவர் கையில் கைவிலங்கு இருந்தது.

காவல் அதிகாரி சாவின், ஜார்ஜ் ஃப்ளாய்ட்டின் தலைக்கும் கழுத்துக்கும் இடையே காலை வைத்து அழுத்தினார். இதை அங்கிருந்த பலர் தங்களது மொபைலில் வீடியோவாக பதிவு செய்தனர்.

‘’ என்னால் மூச்சு விடமுடியவில்லை’’ என தொடர்ந்து கூறிய ஜார்ஜ் ஃப்ளாய்ட், பிளீஸ், பிளீஸ், பிளீஸ் என கெஞ்சியுள்ளார்.

எட்டு நிமிடம் 46 நொடிகளுக்கு ஜார்ஜ் ஃப்ளாய்ட்டின் கழுத்தில், காவலர் சாவின் காலை வைத்து அழுத்தியுள்ளார் என வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.

இதில் முதல் 6 நிமிடத்திலே ஜார்ஜ் ஃப்ளாய்ட் அசைவற்ற நிலைக்கு வந்தார். அங்கிருந்த பலர் ஃப்ளாய்ட்டின் நாடித்துடிப்பைப் பார்க்குமாறு அதிகாரிகளை கேட்டுள்ளனர்.

குயேங் என்ற காவலர் ஃப்ளாய்ட்டின் வலது கையை பிடித்து பார்த்தபோது, நாடித்துடிப்பு எதுவும் இல்லை. ஆனாலும், போலீஸார் ஃப்ளாய்ட்டை விட்டு நகரவில்லை.

20:27 மணிக்கு காவலர் சாவின் தனது காலை ஃப்ளாய்ட்டின் கழுத்தில் இருந்து எடுத்துள்ளார். ஹென்னெபின் கவுண்டி மருத்துவ மையத்திற்கு ஆம்புலன்ஸ் மூலம் ஃப்ளாய்ட் அழைத்துச் செல்லப்பட்டார்.

அவர் இறந்துவிட்டதாக ஒரு மணி நேரம் கழித்து தெரிவிக்கப்பட்டது. 


https://www.bbc.com/tamil/global-52894893

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

Minnesota
US State
 
Description
Minnesota is a midwestern U.S. state bordering Canada and Lake Superior, the largest of the Great Lakes. The state contains more than 10,000 other lakes, including Lake Itasca, the Mississippi River’s primary source. The “Twin Cities” of Minneapolis and state capital Saint Paul are dense with cultural landmarks like the Science Museum of Minnesota and the Walker Art Center, a modern art museum.
Population: 5.64 million (2019)
 
 
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கை 1987ல் இருந்து தொடர்ந்தது தப்பித்துகொண்டுவந்ததின் விளைவால் தான் நீங்கள் இப்படியொரு கருத்தை இன்று முன்வைக்க வேண்டியிருக்கு. இப்படியான கருத்துக்கள் உண்மையில் உங்களை நீங்களே மயக்கத்தில் வைத்திருக்க செய்யும் ஒதலே  தவிர நடைமுறையில் நடப்பவை இன்றுவரை இந்தியாவால் பெரிதாக முன்னோக்கி விடயங்களை நகர்த்தும் ஆற்றல் இல்லை என்பதை தான் மீண்டும் மீண்டும் உறுதிசெய்கிறது. இதுவரை இந்தியாவால் நிலைமையை ஒரு தொய்வு நிலையில் (stalemate) வைத்திருக்க முடிந்திருக்கின்றதே தவிர ஒரு தீர்வு நோக்கி காத்திரமான முன்னெடுப்புகளை (sustained efforts towards a final solution) எடுக்க அதனால் முடியவில்லை. இனிவரும் காலங்களில் இன்றைய பூகோள நிலைமையில் இந்தியாவால் முடியும் என்று கருதமுடியாது. இலங்கை உண்மையில் இந்தியாவின் ராஜதந்திரம் ஒரு அளவுக்கு மேல் போகாமல் (checkmate) தடுத்துள்ளது. இந்த விடயத்தில் இரு பேரினவாத கட்சிகளும்  பங்கக்களிப்பை செய்துள்ளன 
    • பனையை முறித்த ஹூலிற்கு கடைசியாக கிடைத்திருக்கும் சிம்மாசனம், நிச்சயமாக அவர் இதற்க்கு 100 வீதம் தகுதியானவர். இவ்வளவு படித்தும் என்ன பிரயோசனம் ...
    • இருபதாவது திருத்தச் சட்டமூலத்தை ஏன் எதிர்க்கிறார்கள்? ஜனாதிபதித் தேர்தலிலோ நாடாளுமன்றத் தேர்தலிலோ ஒரு கட்சி வெற்றி பெற்றால், நாட்டை ஆட்சி செய்ய, அந்தக் கட்சிக்கு மக்கள் ஆணை வழங்கியதாகவே கருதப்படுகிறது. ஆனால், பதவிக்கு வரும் அக்கட்சி, விரும்பியவாறு எதையும் செய்வதற்கு, அக்கட்சிக்கு மக்கள் ஆணை வழங்கியதாக அதன் மூலம் அர்த்தம் கொள்ளலாமா?  முடியாது.    அரசமைப்பின் 19ஆவது திருத்தத்துக்குப் பதிலாக, எவ்வாறான அரசமைப்புத் திருத்தத்தை அரசாங்கம் கொண்டு வரப்போகிறது என்று ராஜபக்‌ஷ குடும்பத்தினரைத் தவிர, வேறு எவரும் அறிந்திருந்தார்களா என்பது சந்தேகமே. அந்தநிலையில், தமக்கு மக்கள் ஆணை கிடைத்துள்ளது என்று, எதேச்சாதிகாரமாக எதையும் செய்வதற்கு, அரசாங்கத்தின் தலைவர்கள் முயல முடியாது.   ஆனால், அவர்கள் செய்வது எதேச்சாதிகாரமா, இல்லையா என்பதை வகைப்படுத்திப் பார்க்கும் நடுநிலையான பொறிமுறையொன்றோ அளந்தறியும் அளவுகோலொன்றோ இல்லை. எனவே, தமக்குக் கிடைத்திருக்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தைக் கொண்டு, அவர்கள் நினைத்ததைச் செய்யக்கூடிய நிலை தான் உருவாகியிருக்கிறது.   19ஆவது திருத்தத்துக்குப் பதிலாக, அரசாங்கம் இப்போது அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை முன் வைத்துள்ளது. அதற்கு எதிராக, திங்கட்கிழமை மாலையாகும் போது 39 மனுக்கள், உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு இருந்தன. அரசாங்கத்துக்குள்ளேயும் சிலர், 20ஆவது திருத்த வரைவில், சில குறைகளைப் பகிரங்கமாகவே சுட்டிக் காட்டுகிறார்கள்.   20ஆவது திருத்தச் சட்டமூலமானது நாட்டில், சர்வாதிகார ஆட்சியையே மீண்டும் கொண்டு வரப்போகிறது என்றே, எதிர்க்கட்சியினர் கூறுகிறார்கள். தனிமனிதனின் கையில், சகல அரச அதிகாரங்களையும் குவிக்கப் போகிறது என்றும் அதற்கு எதிராக எதையும் செய்ய முடியாத நிலைக்கு மக்கள் தள்ளப்படுவார்கள் என்றும் அவர்கள் வாதிடுகிறார்கள்.  இந்த நிலையில், 20ஆவது திருத்தச் சட்டமூலத்தையும் எதிராக முன்வைக்கப்படும் வாதங்களையும் ஆராய்வது பொருத்தமாகும்.    20ஆவது திருத்தச் சட்டமூலத்தின் படி, ஜனாதிபதியே பிரதமரையும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களையும் ஏனைய அமைச்சர்களையும் நியமித்து, அவர்களுக்கான அலுவல்களையும் நிர்ணயிக்க வேண்டும். எத்தனை அமைச்சுகளையும் ஜனாதிபதி, தம்மிடம் வைத்துக் கொள்ள முடியும். அந்த அமைச்சுகளின் கீழ், எந்தவோர் அரச நிறுவனத்தையும் எத்தனை நிறுவனங்களையும் கொண்டு வரமுடியும். எந்தச் சந்தர்ப்பத்திலும் அமைச்சர்களையும் அவர்களுக்கான பொறுப்புகளையும் ஜனாதிபதி மாற்ற முடியும்.   அத்தோடு, நாட்டில் சகல, பிரதான பதவிகளுக்கும் ஆள்களை நியமிக்கும் அதிகாரம், ஜனாதிபதிக்கே வழங்கப்படப் போகிறது. அதன்படி, உயர்நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம் ஆகியவற்றின் நீதியரசர்கள், முப்படைத் தளபதிகள், பொலிஸ் மா அதிபர், சட்ட மா அதிபர், கணக்காய்வாளர் நாயகம், நாடாளுமன்றத்தின் மக்கள் குறைகேள் அதிகாரி (ஒம்புட்ஸ்மன்), நாடாளுமன்ற செயலாளர் நாயகம், அமைச்சரவைச் செயலாளர், அமைச்சுகளின் செயலாளர்கள் ஆகிய அனைவரையும் ஜனாதிபதி, தமது விருப்பப்படி நியமிப்பார்.    பிரதமரையும் அமைச்சர்களையும் உயர் பதவி வகிக்கும் அதிகாரிகளையும் ஜனாதிபதி நினைத்த நேரத்தில், பதவி நீக்கம் செய்யவும் முடியும். இதனால், உயர்பதவி வகிப்போர் அனைவரும், எப்போதும் ஜனாதிபதியின் கோபத்துக்கு ஆளாகாமல் இருக்கவே முயல்வர்; ஜனாதிபதியைத் திருப்திப்படுத்தவும் முயல்வர். இதனால், ஒருபோதும் இவர்களிடமிருந்து நியாயத்தை எதிர்பார்க்க முடியாத நிலைமை உருவாகும் என்றும் அவர்கள் வாதிடுகிறார்கள். ஜனாதிபதி விரும்பியபடியே, நாட்டில் சகலதும் நடைபெறும் என்பதால், இது சர்வாதிகாரம் என அவர்கள் கூறுகிறார்கள்.   ஜனாதிபதி நினைத்த நேரத்தில், சட்ட மா அதிபரைப் பதவி நீக்கம் செய்ய முடியுமாக இருந்தால், அவர் எப்போதும் ஜனாதிபதியின் கோபத்துக்கு ஆளாகாதவாறே செயற்பட நினைப்பார். எனவே, அவர் ஜனாதிபதியின் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்ன குற்றத்தைச் செய்தாலும், அவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யத் தயங்குவார். அதேவேளை அவர், ஜனாதிபதியைத் திருப்திப்படுத்தும் வகையில், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக, வழக்குத் தாக்கல் செய்ய முற்படுவார் எனவும் எதிர்க்கட்சியினர் விவாதிக்கின்றனர்.    எதிர்க்கட்சியினரின் வாதத்தின்படி, பொலிஸ் அதிகாரி ஒருவர், நியாயமாக நடந்து கொண்டு, அதனால் அரசாங்கத்தின் கோபத்துக்குள்ளாகித் தண்டிக்கப்பட்டால் நீதிமன்றம் செல்லவும் அஞ்சுவார். ஏனெனில், ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட நீதியரசர்களே உயர்நிலை நீதிமன்றங்களில் இருப்பர். அந்த நீதியரசர்களைக் கொண்ட நீதித்துறை ஆணைக்குழுவாலேயே, ஏனைய நீதியரசர்கள் நியமிக்கப்படுவர்; பதவி உயர்வு பெறுவர். எனவே, நீதிபதிகள் எப்போதும் அரசாங்கத்துக்கு, குறிப்பாக, ஜனாதிபதிக்கு அஞ்சியே செயற்பட வேண்டியிருக்கும். இந்த நிலையில், பொலிஸார் நீதியாக நடந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.   இந்தநிலையில், ஆளும் கட்சியைத் திருப்திப்படுத்த, ஒரு மனிதனுக்கு எதிராகப் பொலிஸார் அநீதி இழைத்தால், அதற்கு எதிராக அவர் நீதிமன்றத்தை நாடுவதும் அர்த்தமற்றது என, அவர்கள் வாதிடுகிறார்கள்.   நீதியரசர்களும் பொலிஸ் மா அதிபரும் ஏனைய உயர் பதவிகளுக்கான ஆள்களும், ஜனாதிபதியால் நேரடியாகத் தற்போது நியமிக்கப்படுவதில்லை. அப்பதவிகளுக்கான பெயர்கள் ஜனாதிபதியால் பரிந்துரைக்கப்பட்டதன் பின்னர், அரசமைப்புச் சபையால் அப்பரிந்துரைகள் அங்கிகரிக்கப்பட வேண்டும்.  இதுவரை அப்பரிந்துரைகள் அங்கிகரிக்கப்படாத சந்தர்ப்பங்களும் இருந்துள்ளன. அவ்வாறு இருந்தும் தற்போதும் பொலிஸார், பல சந்தர்ப்பங்களில் நியாயமாக நடந்து கொள்வதில்லை எனக் குற்றஞ்சாட்டப்படுகிறார்கள். நிலைமை இவ்வாறு இருக்க, நேரடியாகவே ஜனாதிபதியின் கீழ், இவ்வனைத்து உயர்பதவி நியமனங்களும் வந்தால், நிலைமை எவ்வாறு இருக்கும் என்றும் கேள்வி எழுப்பப்படுகிறது.    இதுவரை நீதித்துறையை, நீதித்துறை ஆணைக்குழுவே நிர்வகித்து வந்தது. பொலிஸ் திணைக்களத்தை பொலிஸ் ஆணைக்குழுவே நிர்வகித்து வந்தது. அரச சேவை ஆணைக்குழுவே அரச சேவையை நிர்வகித்து வந்தது. அதேபோல், தேர்தல் ஆணைக்குழு, மனித உரிமை ஆணைக்குழு, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு, நிதி ஆணைக்குழு போன்றவை தத்தமது துறைகளை நிர்வகித்து வந்தன. இவ்வாணைக்குழுக்கள் சபாநாயகர், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், நாடாளுமன்றத்தின் ஏனைய கட்சிகளால் நியமிக்கப்படும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிவில் சமூக உறுப்பினர்கள் சிலரைக் கொண்ட அரசமைப்புச் சபையாலேயே நியமிக்கப்பட்டன.    ஆனால், 20ஆவது திருத்தச் சட்டமூலத்தின் கீழ், அந்த ஆணைக்குழுக்களை ஜனாதிபதியே நியமிப்பார். அவர் விரும்பினால், எந்தவோர் ஆணைக்குழு உறுப்பினரையும் நீக்க முடியும். எனவே, அவர்களும் எப்போதும் அச்சத்துடனேயே செயற்பட வேண்டியிருக்கும். அதாவது, ஜனாதிபதியின் விருப்பப்படியேதான், அவை இனி நடந்து கொள்ளும்.    அரசமைப்புச் சபையொன்று, இதுவரை இருந்ததைப் போல், 20ஆவது திருத்தத்தின் கீழ், நாடாளுமன்றச் சபை என்ற நிறுவனம் உருவாக்கப்படும். சபாநாயகர், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், பிரதமராலும் எதிர்க்கட்சித் தலைவராலும் நியமிக்கப்படும் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அச் சபையின் உறுப்பினர்களாக இருப்பார்கள். ஆனால், ஜனாதிபதி ஆணைக்குழுக்களை நியமிக்ககும் போது, அதைப்பற்றித் தமது கருத்தைத் தெரிவிக்க மட்டுமே அச்சபைக்கு முடியும்; அந்தக் கருத்தை, ஜனாதிபதி ஏற்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.    கணக்காய்வு ஆணைக்குழுவொன்றும் 19 ஆவது திருத்தத்தின் கீழ் நியமிக்கப்பட்டு இருந்தது. 20ஆவது திருத்தத்தின் கீழ், அது இரத்துச் செய்யப்படும். அதேவேளை ஜனாதிபதி செயலகம், பிரதமரின் அலுவலகம், அரச கம்பனிகள் ஆகியவை, கணக்காய்வு செய்யப்படும் நிறுவனங்களின் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.    ஜனாதிபதி அலுவலகத்துக்கு ஓர் அமைச்சைப் போல் பெருந்தொகை நிதி ஒதுக்கப்படுகிறது. 20ஆவது திருத்தம் நடைமுறைக்கு வந்ததன் பின்னர், அங்கும் பிரதமர் அலுவலகத்திலும் அரச கம்பனிகளிலும் ஊழல் இடம்பெற்றால், அதைக் கண்டறிய கணக்காய்வு எதுவும் நடைபெறாது என்றும் எதிர்க்கட்சியினர் சுட்டிக் காட்டுகின்றனர்.  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவும் அவ்வாறு ஊழல்கiளில் ஈடுபட மாட்டார்கள் என பொதுஜன முன்னணியினர் வாதிடலாம். அப்படியேதான் வைத்துக் கொண்டாலும் எதிர்க்கால ஜனாதிபதிகள், பிரதமர்கள் ஊழல்களில் ஈடுபட மாட்டார்கள் என்ற உத்தரவாதத்தை அவர்களால் வழங்க முடியுமா?   நாடாளுமன்றம் தெரிவு செய்யப்பட்டு, நாலரை ஆண்டுகள் செல்லும் வரை, நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கலைக்க முடியாது என்று, 19ஆவது திருத்தம் கூறுகிறது. 2015ஆம் ஆண்டு தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்றம், நாலரை வயதை அடையும்முன் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒன்பதாம் திகதி அதைக் கலைத்தார்.    19ஆவது திருத்தத்தின் படி, ஜனாதிபதி சட்ட விரோதமாக எதையும் செய்தால், சட்ட மா அதிபருக்கு எதிரான வழக்கொன்றின் மூலம், நீதியைக் கோர முடியும். எனவே, ஐ.தே.க உள்ளிட்ட சிலர், இதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடினர். நீதிமன்றம், அது சட்ட விரோதமானது எனத் தீர்ப்பளித்தது. ஆனால், 20ஆவது திருத்தத்தின் மூலம், ஜனாதிபதியின் நடவடிக்கைகளுக்கு எதிராக, நீதிமன்றத்தை நாட முடியாது. இந்தக் காரணங்களைச் சுட்டிக் காட்டியே, 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக, மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.        http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/இருபதாவது-திருத்தச்-சட்டமூலத்தை-ஏன்-எதிர்க்கிறார்கள்/91-256117
    • மோடியுடன் பேசியது ஞாபகத்தில் இல்லை’ அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில், ஒரே கொள்கையின் கீழ் அரசாங்கம் இருக்கிறது. அதில், தனக்கெனத் தனியானதொரு கொள்கை இல்லையென பதிலளித்த பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, “ஒவ்வொரு கட்சிக்கும் அதிலிருக்கும் ஒவ்வொரு தனிநபருக்கும், தனித்தனிக் கொள்கைகள் இருக்கலாம்; அவற்றையெல்லாம் ஓரிடத்தில் குவிப்பதே முக்கியம். 20ஐ ஆராய்வதற்காக நான் அமைத்த குழு, அறிக்கையைக் கையளித்துள்ளது. அது, எனக்குக் கையளிக்கப்பட்ட தனிப்பட்ட அறிக்கையாகும்” என்றார். “13ஆவது திருத்தத்தை அமல்படுத்துமாறு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, உங்களுடன் இடம்பெற்ற மெய்நிகர் இருதரப்புக் கலந்துரையாடலின் போது வலியுறுத்தியுள்ளார். ஆனால், அவ்வாறு நடக்கவில்லை என்று, ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல மறுத்துள்ளார். அவ்வாறே வலியுறுத்தப்பட்டதாக இந்தியச் செய்திகளும் தெரிவிக்கின்றன. இதில் எவை உண்மையென எழுப்பிய கேள்விக்கு, “மோடியுடன் பேசியது ஞாபகத்தில் இல்லை” என, பிரதமர் பதிலளித்தார். “வடக்கு, கிழக்கு மாகாணசபைத் தேர்தலை, நாங்கள்தான் நடத்தினோம். நேரம் வரும்போது, சகல மாகாண சபைகளுக்குமான தேர்தலை நடத்துவோம்” எனவும் பிரதமர் மஹிந்த கூறியபோது, “அரசமைப்பு அமல்படுத்தப்படும் என்பதை நாங்கள் உறுதிப்படுத்தினோம்” என்று, அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குறுக்கிட்டு பதிலளித்தார். ஊடகங்களின் பிரதம ஆசிரியர்களுடனான சந்திப்பு, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையில், அமைச்சர்களான கெஹலிய ரம்புக்வெல்ல, உதய கம்மன்பில, விமல் வீரவன்ச, டக்ளஸ் தேவானந்தா, இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் ஆகியோர் சகிதம், அலரி மாளிகையில் நேற்று (29) காலை நடைபெற்றது. இதன்போது, “ஞாபகமில்லை”, “அவதானம் செலுத்துகின்றோம்”, “எனக்குரியது”, “தேவையில்லை” என ஒரேயொரு வார்த்தைகளில் பல கேள்விகளுக்குப் பதிலளித்த பிரதமர், தேங்காய் வாங்குவதற்கு அளவுநாடா கொண்டுசெல்ல வேண்டுமா எனக் கேட்டபோது திகைத்துநின்றார். அப்போது, அருகிலிருந்த அமைச்சர்கள் தெளிவுபடுத்தினர். “குண்டு பிரதானமாக இருந்த காலம் போய், தற்போது தேங்காய் பிரதானமாக இருக்கிறது” என, அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.  20ஆவது திருத்தச் சட்டமூலத்தின் ஊடாக, பிரதமருக்கான அதிகாரங்கள் குறைக்கப்படுவதாகக் கூறப்படுகிறதே எனக் கேட்டமைக்கு பதிலளித்த அவர், “இங்கு பிரதமர் யாரென்பது பிரச்சினையில்லை; அரசியலிலிருந்து நான் ஓய்வுபெறப் போகின்றேன் எனக் கூறப்படுவதிலும் உண்மையில்லை. நான் ஓய்வுபெற மாட்டேன். அரசியல்வாதிகள் எப்போது ஓய்வுபெற்றனர்?” என வினவினார். புதிய அரசமைப்புக்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதனை நிறைவேற்றுவதற்கு, சர்வஜன வாக்கெடுப்பை நடத்தவேண்டும். கடந்த பொதுத் தேர்தலில், மூன்றிலிரண்டுப் பெரும்பான்மை கிடைத்துள்ளது. ஒன்றிரண்டு போதாமல் போகலாமெனத் தெரிவித்த அவர், பதவிகளுக்கு ஆசைப்படும் எம்.பிக்கள் தற்போது இல்லையென்றார். தேங்காய்களின் அளவுக்கேற்ப விலைகளை நிர்ணயம் செய்தமை, மக்களிடத்தில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது எனச் சுட்டிக்காட்டி பிரதம ஆசிரியர்கள், தேங்காய்க்கு விலை நிர்ணயம் செய்யவேண்டுமெனக் கேட்டுக்கொண்டனர். அத்துடன், வர்த்தமானி அறிவித்தலைத் திருத்துவதில் பெயர் பெற்றிருக்கும் இந்த அரசாங்கம், தேங்காய்க்கான வர்த்தமானியையும் திருத்துமா? என வினவினர். “தேங்காய்” கேள்விகளால் ஒருகணம் திகைத்துப்போன பிரதமர் மஹிந்த, விடயதானத்துக்குப் பொறுப்பான அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டுவரப்படும் என்று குறிப்பிட்ட போது குறுக்கிட்ட அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, “தேங்காய்க்கான வர்த்தமானி அமைச்சுக்குரியது அல்ல; அது, நுகர்வோர் அதிகார சபைக்குரியது. சந்தைகளுக்குச் செல்வோர், தேங்காய்களின் அளவைப் பார்க்க மாட்டார்கள், குவியல்களைப் பார்த்தே தேங்காய்களை விலைக்கு வாங்குவார்கள்” என்றார். “ஒரே நோக்கத்தில் பயணித்தால், 20ஐ வெற்றிகொள்வது இலகுவானது. கட்சிகளுக்கும் தனிநபர்களுக்கு இடையில் கொள்கைகள் வேறுபடும். இன்னும் சிலர், வாய்த்திறக்காமலே இருக்கின்றனர். 20 நிறைவேற்றப்படுமென்ற நம்பிக்கை இருக்கிறது. அதிலெந்தச் சந்தேகமும் இல்லை” எனப் பதிலளித்த பிரதமர், “வர்த்தமானியைத் திருத்துவது ஜனநாயகம்” என்றார். 20ஆவது திருத்தச் சட்டத்தில், ஊடக அனுமானங்கள் கேள்விக்கு உட்படுத்தப்பட்டு உள்ளனவெனக் கேட்டதற்கு பதிலளித்த அவர், “ஹூல்... ஹூல்” என்றார். அப்போது, அருகிலிருந்த அமைச்சர்களுக்கு விளங்கவில்லை. “ஹூல் போன்றவர்களை நியமித்தால், ஊடகச் சுதந்திரம் பாதுகாக்கப்படும்” எனக் கிண்டல் செய்தார். மஞ்சளுக்குத் தட்டுபாடு இருப்பதை ஏற்றுக்கொண்ட அவர், துறைமுகங்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மஞ்சள், சட்டவிரோதமான முறையில் கைப்பற்றப்படும் மஞ்சள் ஆகியன அரசுடமையாக்கப்படுகின்றன எனினும், அவையாவும் எக்காரணம் கொண்டும் சந்தைக்குக் கொண்டுவரப்படாது என்று கூறினார். மஞ்சளை வளர்ப்பதற்கு, உள்ளூர் விவசாயிகள் ஊக்கப்படுத்தப்படுவர். மஞ்சளை உற்பத்திச் செய்வது பிரச்சினைதான். ஆனாலும், பிரச்சினைக்கு மத்தியில்தான் முன்னோக்கிப் பயணிக்க வேண்டும் எனக்கூறிய பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, மஞ்சள் இறக்குமதிக்கான அனுமதி, எக்காரணம் கொண்டும் வழங்கப்பட மாட்டாது என்றார். பொருளாதாரப் பிரச்சினைகளால் மக்கள் சொல்லொணாத் துன்பங்களுக்கு முகங்கொடுக்கின்றனர். அவற்றுக்குத் தீர்வு வழங்கும் வகையில், 2021 வரவு-செலவுத் திட்டத்தில் (பாதீடு, மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த பிரதமர், பாதீடு ஓர் இரகசியமாகும்; அதைப்பற்றி கூறினால், நாளைக்கே எழுதிவிடுவீர்கள், பேசப்பட்ட ஏனைய விடயங்கள் மறந்துவிடப்படுமெனத் தெரிவித்ததோடு, ஒவ்வொரு வாக்காளர் பிரிவுகளிலும், 100 வீடுகளைக் கொண்ட மாடி வீட்டுத்திட்டமொன்று ஆரம்பிக்கப்படும் என்றார். http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/மோடியுடன்-பேசியது-ஞாபகத்தில்-இல்லை/150-256106
    • உலகம் நடு நீக்கின் துன்புறுத்தல் முதல் நீக்கின் தேவாமிர்தம்
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.