Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

கருப்பினத்தவருக்கு உண்மையில் என்ன நடந்தது? சம்பவத்தை வீடியோ எடுத்த சிறுமி கண்ணீர் பேட்டி

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்
கருப்பினத்தவருக்கு உண்மையில் என்ன நடந்தது? சம்பவத்தை வீடியோ எடுத்த சிறுமி கண்ணீர் பேட்டி
கருப்பினத்தவருக்கு உண்மையில் என்ன நடந்தது? சம்பவத்தை வீடியோ எடுத்த சிறுமி கண்ணீர் பேட்டி
 
அமெரிக்காவை அதிர வைத்திருக்கிறது ஜார்ஜ் பிளாயிட் கொலை. அமெரிக்காவில், ஆயிரக்கணக்காக கருப்பின மக்கள் இனவெறி தாக்குதலுக்குள்ளாகி பலியாகியுள்ளனர். ஆனால், ஜார்ஜ் பிளாயிடின் இறப்பும் அது நிகழ்ந்த விதமும் உலக மக்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கி உள்ளனர்.

 'கலவரக்காரர்களை போலீஸால் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் ராணுவத்தை களமிறக்குவேன் ' என்று அமெரிக்க ஜனாதிபது டிரம்ப் எச்சரித்த பிறகும் , கலவரம் கட்டுக்குள் அடங்கவில்லை. 

கருப்பினத்தவர் மரணம் குறித்து டிரம்பின் கவலையில்லாத பதில் போன்றவை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன.

அமெரிக்கா மட்டுமின்றி ஜார்ஜ் பிளாயிட்டுக்கு ஆதரவாக இங்கிலாந்து போன்ற நாடுகளிலும் அங்கிருக்கும் அமெரிக்காவின் தூதரகம் முன்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

காரணம்... ஜார்ஜ் பிளாயிட்டின் கடைசி விநாடிகள் தொடர்பான வீடியோ  மக்களிடையே ஏற்படுத்திய தாக்கம். இந்த தாக்கத்தை ஏற்பட காரணமாக இருந்தவர்  17 வயது கருப்பின சிறுமி டார்னெல்லா ஃப்ரேஸர்.

கடந்த மே 25- ந் தேதி மின்னபொலிஸ் நகரில் பெட்டிக்கடை ஒன்றுக்கு சிகரெட் வாங்க சென்றார் ஜார்ஜ் பிளாயிட் . அதற்கு, பணமாக 20 டாலர் நோட்டை எடுத்துக் கொடுத்தார். போலி டாலர் என்று, நினைத்த கடைக்காரர் உடனடியாக போலீஸாருக்கு போன் செய்து விடுகிறார். அடுத்த விநாடியில்,  போலீஸ் அங்கே ஆஜர் . காரில் வந்த நான்கு போலீஸ்காரர்களில் ஒருவர், டெரக் சோவீன். காரை விட்டு இறங்கிய  வேகத்தில்  டெரன் சோவீன் , ஜார்ஜ் பிளாயிட்டை குப்புற படுக்க வைத்து  முழங்கையை பின்னால் கட்டி கழுத்தில் தன் முட்டியை வைத்து அழுத்துகிறார். ஜார்ஜ் பிளாயிட் ,  அந்த கருப்பினத்தவர் என்னால் மூச்சு விட முடியவில்லை, என்னை கொல்ல வேண்டாம் என்று கெஞ்சினார்.  அந்த வெள்ளை போலீஸ் அதிகாரி தனது முட்டியை  கழுத்தில் இருந்து எடுக்கவே இல்லை.  அருகிலிருந்த மற்ற போலீஸ்காரர்களும் தடுக்கவில்லை. சுமார் 8 நிமிடம் 46 விநாடிகளில் ஜார்ஜ் பிளாயிட் தன் உயிரை இழந்து விட்டார்.

இந்த சம்பவத்தை அப்படியே வீடியோவாக பதிவு செய்தவர்தான் டார்னெல்லா.  ஜார்ஜ் பிளாயிட் உயிரை இழக்கும் வீடியோவை  டார்னெல்லா சமூகவலைத்தளத்தில் வெளியிட இப்போது, அமெரிக்காவே பற்றி எரிகிறது. ஆனால், இணையத்தில்  டார்னெல்லாவை ஏராளமானோர் விமர்சனமும் செய்தனர். 'நீ ஏன் அவரை காப்பாற்ற செல்லவில்லை' என்று டார்னெல்லாவை பார்த்து கேள்வி கணைகளை தொடுத்தனர்

தன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு நவ்திஸ் மீடியா வழியாக டார்னெல்லா, பதிலளித்துள்ளார். ''நான் ஒரு மைனர் பெண். அங்கே நடந்த சம்பங்களை பார்த்ததும் பயந்து விட்டேன். என்னால், அந்த போலீஸை எதிர்த்து போராடிவிட முடியுமென்று கருதுகிறீர்களா. ஜார்ஜ்  இறப்பதை நான் 5 அடி தொலைவிலிருந்து பார்த்தேன். அந்த தருணத்தை எப்படி உணர்வதென்றே எனக்கு தெரியவில்லை. மிக மோசமான சம்பவம் அது. என் நிலையில் இருந்து பார்த்தால்தான் அதை உணர முடியும் '' என்று பதிலளித்துள்ளார். ஜார்ஜ் பிளாயிட் மரணத்தை கண்டித்து நடந்து வரும் போராட்டங்களிலும் டார்னெல்லா ஃப்ரேஸர் கலந்து கொண்டுள்ளார்.

https://www.dailythanthi.com/News/TopNews/2020/06/03154056/Teen-who-recorded-George-Floyds-death-says-she-is.vpf

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பின்னாட்களில் இணையத்தில் வந்த வேறும் பல காணொளிகளில் மொத்தம் மூன்று போலீஸ்காரர்கள் சமகாலத்தில் ஜார்ஜ் பிளாயிட்டின் கழுத்திலும் மற்றும் முதுகு இடுப்பு பகுதிகளில் தமது  முழங்கால்களை வைத்து படு மோசமாக அழுத்தியதை காணக்கூடியதாக இருந்தது. ஒரு காணொளியில் ஜார்ஜ் பிளாயிட் காருக்கு பக்கமாக விழுந்து கிடப்பதையும் அவர்கழுத்தில் ஒரு போலீஸ்காரர் காலால் அம்ர்த்துவதும் தெரிகிறது. ஆனால் காருக்கு அந்தபக்கமாக இருந்து எடுத்த காணொளியில் மொத்தம் மூன்று போலீஸார் ஒரே வேளையில் ஜார்ஜ் பிளாயிட்டை  தமது முழங்காலால் அமுக்குவது தெளிவாக படமாக்கப்பட்டுள்ளது.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

உலகத்துக்கு பொலிஸ் வேலை பார்க்கும் ஒரு நாட்டின் கேவலம்...

 • Sad 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

உலகத்துக்கு பொலிஸ் வேலை பார்க்கும் ஒரு நாட்டின் கேவலம்...

கூடை ப‌ந்து விளையாட்டில் அமெரிக்காவுக்கு பெருமை சேர்த‌தே க‌ருப்பு இன‌த்த‌வ‌ர்க‌ள் தாத்தா , 

அமெரிக்காவின் முன்ன‌னி விளையாட்டான‌ NFL அதிலும் க‌ருப்பு இன‌த்த‌வ‌ர்க‌ள் தான் 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவில் துவேசம் உள்ளது. எல்லா பல்லின கலாசார நாடுகளிலும் உள்ளது. 

அமெரிக்காவில் காவல்துறை மத்தியிலும் துவேசம் உள்ளது. எல்லா பல்லின கலாசார நாடுகளிலும் காவல்துறை மத்தியிலும் உள்ளது. 

அமெரிக்காவில் வெள்ளை மாளிகை உட்பட அரசியல் மட்டத்தில் துவேசம் உள்ளது. எல்லா பல்லின கலாசார நாடுகளிலும் அரசியல் மட்டத்தில் உள்ளது. 

ஆனால், அமெரிக்காவில் சிறுபான்மை மக்களான கறுப்பின மற்றும் இலத்தீன் மக்கள் இந்தியர்கள் சீனர்கள் போன்று முன்னேறவில்லை. தவறு, அந்த சிறுபான்மை மக்கள் மீதும் உள்ளது. 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

https://www.nytimes.com/video/us/100000007159353/george-floyd-arrest-death-video.html?smid=fb-nytimes&smtyp=cur&fbclid=IwAR3U8is3tkHXIq7kHpz3sszDarcpx_yMcUvhIc_lSAQuIeX35bw43KMlykA&fbclid=IwAR0SrmzqooyI9-ynCWt4d3OiximlaplZoAZR9XbXGl4GFy0X2Sf86vLAPuQ&fbclid=IwAR2t_ZJvgeCQpeUz9qk4DboUzybhoFbS9kZd_rEjK7VObodC_ytqjNECJF4&fbclid=IwAR163t0_TwP4uaZFmMIAWBhk4sjpmwwo7eEKXCO7B-9UBvOowJO5PKf20jc&fbclid=IwAR2dqHXqQ0i8k3ajQs-7y-i82f3M5hzAyYxh6ld9OP4ihFDXdqrvX2mHqkw

இறந்தவரும்,கழுத்தின் மேல் இருந்து மூச்சை நிறுத்திய பொலீசும் முந்தி ஒரே இடத்தில் ஒன்றாய் வேலை செய்தவர்கள் என்று சொல்லினம் 
இந்த கொலை திட்டமிட்டு நடந்ததா அல்லது நடந்த கொலையை அரசியலாக்கினார்களோ தெரியவில்லை 
இதன் பின்னால் பெரிய ஒரு பிரச்சனை மறைக்கப்படுகிறது.
இவ்வளவு சனம் அங்கு ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள் ...கொரோனா எங்கே போச்சு?
அமெரிக்காவில் கள்ளக்காசு கொடுத்தவனை பிடிக்கிறதிற்கு பொலீஸ் உடனே வரும் என்று இந்த கொலைக்கு பின்னரே தெரிந்து கொண்டேன் .(அவ்வளவு வெட்டியாவா இருக்கிறார்கள் )

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இறந்த இந்த கறுப்பர் அப்பாவியாக இருக்கலாம். ஆனால்... கறுப்பினக் குற்றவாளிகள் அல்லது சந்தேக நபர்கள்.. விசாரணைக்கு வரும்.. பொலிஸாரை எதிர்ப்பது அதிகம். இதனால்.. பொலிஸும் கடுமையாக நடப்பதுண்டு. 

லண்டனிலும் ஒரு கறுப்பர் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து சில காலங்களுக்கு முன்னர் வன்முறை வெடித்ததை இங்கு நினைவு கூறலாம். 

இருந்தாலும் குற்றச் செயல்களில் ஈடுபடும் போது கறுப்பர்கள்.. தயவுதாட்சண்ணியம் பார்க்காமல் தான் அதிகம் ஈடுபடுகின்றனர். எடுத்ததுக்கு எல்லாம் வன்முறையால் பேசுவது அவர்களின் பாணியாக இருக்கும் வரை.. இவ்வாறான நிகழ்வுகளுக்கும் காரணம் கண்டுபிடிக்கப்பட்டுக் கொண்டே தான் இருக்கும். 

எதுஎப்படியோ.. முள்ளிவாய்க்கால் பெருந்துயரை தடுத்து நிறுத்தச் சொல்லி உலகெங்கும் இருந்து தமிழ் மக்கள் அமெரிக்க கறுப்பர் ஒபாமாவை கெஞ்சிக் கேட்டும்.. அவர் அசரவே இல்லையே. லண்டனில் உண்ணா நோன்பிருந்த அந்த ஈழத்தமிழ் இளைஞனுக்கும்..  பொய் வாக்குறுதியை கொடுத்துவிட்டு ஓய்ந்துவிட்டார். 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பையன்26 said:

கூடை ப‌ந்து விளையாட்டில் அமெரிக்காவுக்கு பெருமை சேர்த‌தே க‌ருப்பு இன‌த்த‌வ‌ர்க‌ள் தாத்தா , 

அமெரிக்காவின் முன்ன‌னி விளையாட்டான‌ NFL அதிலும் க‌ருப்பு இன‌த்த‌வ‌ர்க‌ள் தான் 

அமெரிக்காவுக்காக கடினமாக உழைத்தவர்களே கறுப்பு இனத்தவர்கள்தானே......!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா பற்றி எரிகின்ற காட்சி!

அமெரிக்காவின் மினபொலிஸ் நகரில் கறுப்பின இளைஞர் ஜோர்ஜ் பிளாய்ட், பொலிஸாரால் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து பல்வேறு மாகாணங்களிலும் போராட்டம் வெடித்துள்ளது.

மக்களின் போராட்டங்கள் வன்முறையாக மாற ஆரம்பித்திருக்கின்ற காட்சிகள் மனதை உலுக்கும்படியாக இருக்கின்றன.

கடந்த சில தினங்களாக அமெரிக்காவின் பல இடங்களிலும் நடைபெறுகின்ற வன்முறைச் சம்பவங்கள் பற்றிய அதிர்ச்சிகரமான பதிவு இது:

https://www.ibctamil.com/usa/80/144589?ref=imp-news

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, nedukkalapoovan said:

இறந்த இந்த கறுப்பர் அப்பாவியாக இருக்கலாம். ஆனால்... கறுப்பினக் குற்றவாளிகள் அல்லது சந்தேக நபர்கள்.. விசாரணைக்கு வரும்.. பொலிஸாரை எதிர்ப்பது அதிகம். இதனால்.. பொலிஸும் கடுமையாக நடப்பதுண்டு. 

லண்டனிலும் ஒரு கறுப்பர் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து சில காலங்களுக்கு முன்னர் வன்முறை வெடித்ததை இங்கு நினைவு கூறலாம். 

இருந்தாலும் குற்றச் செயல்களில் ஈடுபடும் போது கறுப்பர்கள்.. தயவுதாட்சண்ணியம் பார்க்காமல் தான் அதிகம் ஈடுபடுகின்றனர். எடுத்ததுக்கு எல்லாம் வன்முறையால் பேசுவது அவர்களின் பாணியாக இருக்கும் வரை.. இவ்வாறான நிகழ்வுகளுக்கும் காரணம் கண்டுபிடிக்கப்பட்டுக் கொண்டே தான் இருக்கும். 

எதுஎப்படியோ.. முள்ளிவாய்க்கால் பெருந்துயரை தடுத்து நிறுத்தச் சொல்லி உலகெங்கும் இருந்து தமிழ் மக்கள் அமெரிக்க கறுப்பர் ஒபாமாவை கெஞ்சிக் கேட்டும்.. அவர் அசரவே இல்லையே. லண்டனில் உண்ணா நோன்பிருந்த அந்த ஈழத்தமிழ் இளைஞனுக்கும்..  பொய் வாக்குறுதியை கொடுத்துவிட்டு ஓய்ந்துவிட்டார். 

நீங்கள் "கறுப்பர்கள் எல்லோரும் கள்ளங்கள்" என்று சொல்வது சர்வதேசம் "புலிகள் தீவிரவாதிகள்" என்று சொல்வதற்கு ஒப்பானது ...ஒரு காலத்தில் அவர்கள் களவு முதலான கள்ள வேலைகளை பெருமளவில் செய்திருக்கலாம் ...இப்ப அப்படி இல்லை .
சிங்கள இன வெறி அரசால் அடிபட்டு வந்து விட்டு இப்படி எழுத முடிந்தது?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
26 minutes ago, ரதி said:

நீங்கள் எழுத நினைப்பதை என்னை சாட்டி எழுதுறீங்கள் போல.

நாங்கள் எங்கே எழுதினோம்.. கறுப்பர்கள் எல்லாரும் கள்ளர் என்று.

மேலும்.. அமெரிக்காவில்.. கறுப்பர்கள் இனவிடுதலைக்காகவா.. போராடுறார்கள். சமூகக் குற்றங்களை செய்துவிட்டு..  அதில் இருந்து தப்ப வன்முறையை தெரிவு செய்கிறார்கள். அதுவே.. அவர்கள் மீதான மனித உரிமை மீறல்களுக்கும் காரணத்தை தேடிக் கொடுக்கிறது என்பதை தான் சொல்லி இருக்கிறோம்.

கறுப்பர்கள் (பொதுவாக.. எல்லோரும் அல்ல) எடுத்ததுக்கு எல்லாம் வன்முறையை கையாளாமல்..  சட்டத்தை மதித்து.. சமூக அக்கறையோடு மற்றைய சமூகங்களையும் மக்களையும் மதித்து நடந்து கொண்டால்.. அவர்கள் மீதான மனித உரிமை மீறல்களை வெகுவாகக் குறைக்க முடியும்.

மற்றும்படி.. கறுப்பர்கள் நாடுகளின் பொருண்மிய வளர்ச்சிக்கு கட்டுமான வளர்ச்சிக்கு மற்றும் இதர சேவைகளுக்கு ஆற்றும் பணியை நாங்களும் எல்லோரும் மதிக்கிறார்கள். அதில் மாற்றுக் கருத்தில்லை. 

ஆனால் வீதி வன்முறைகளில்.. போதைப்பொருள் விற்பனை.. வன்முறைகளில்.. கத்தி வன்முறைகளில்..  இவர்களின் பங்களிப்பு மற்றையவர்களை விட அதிகம் இருப்பதும் துரதிஷ்டம். இதனை அவர்கள் களைய வேண்டும். 

Edited by nedukkalapoovan
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

அமெரிக்க அதிபர் டிரம்ப்... பதுங்கு குழிக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது ஏன்? 
ஜார்ஜ் ஃப்ளாய்டின் கடைசி 30 நிமிடத்தில் என்ன நடந்தது? 
கொரோனாவை விட அமெரிக்காவில் மிகப்பெரிய விவகாரமாக இச்சம்பவம் உருவெடுத்தது எப்படி? 
ஒரு விரிவான தொகுப்பு.

Edited by தமிழ் சிறி
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவில் பத்திரிகைகளும் சமுக ஊடகங்களும் கருப்பினத்தவர்களை குறிக்கும்போது ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் என்ற வார்த்தையை பயன்படுத்துவதை காண்கிறோம். மாறாக   வெள்ளையர்களை குறிக்கும்போது பிரென்ச்சு அமெரிக்கர் என்றோ, ஆங்கிலேய அமெரிக்கர் என்றோ அல்லது ஜெர்மன் டச்சு அமெரிக்கர் என்றோ பிரித்து குறிப்பிடுவதில்லை.

பல்வேறு நாடுகளில் இருந்து சென்ற வெள்ளை இனத்தவர்கள் அமெரிக்காவில்  குடியேறியதை போலவே கருப்பினத்தவர்களில் பலர் அங்கு குடியேறி எத்தனையோ தலைமுறைகள் கடந்துவிட்டபோதிலும் வெள்ளையர்களே அமெரிக்க நாட்டின் சுதேசிகள் என்ற கருத்தை விதைப்பதும் பல சிறுபான்மை இனத்தவர்களை தெரிந்தே ஓரங்கட்டுவதும் ஆட்சியாளர்களின் நோக்கமாகவும் இருக்கலாம்.

அமெரிக்காவில் இனவெறி இல்லை என்று என்னதான்  சொன்னாலும் வெள்ளை இனத்தவர்களிடையே இனவெறி புரையோடிப்போயிருப்பதை இதுபோன்ற போராட்டங்கள்தான் உலகுக்கு உண்மையை வெளிச்சம்போட்டு காட்ட உதவும்.

Link to post
Share on other sites
On 3/6/2020 at 15:59, ரதி said:

https://www.nytimes.com/video/us/100000007159353/george-floyd-arrest-death-video.html?smid=fb-nytimes&smtyp=cur&fbclid=IwAR3U8is3tkHXIq7kHpz3sszDarcpx_yMcUvhIc_lSAQuIeX35bw43KMlykA&fbclid=IwAR0SrmzqooyI9-ynCWt4d3OiximlaplZoAZR9XbXGl4GFy0X2Sf86vLAPuQ&fbclid=IwAR2t_ZJvgeCQpeUz9qk4DboUzybhoFbS9kZd_rEjK7VObodC_ytqjNECJF4&fbclid=IwAR163t0_TwP4uaZFmMIAWBhk4sjpmwwo7eEKXCO7B-9UBvOowJO5PKf20jc&fbclid=IwAR2dqHXqQ0i8k3ajQs-7y-i82f3M5hzAyYxh6ld9OP4ihFDXdqrvX2mHqkw

இறந்தவரும்,கழுத்தின் மேல் இருந்து மூச்சை நிறுத்திய பொலீசும் முந்தி ஒரே இடத்தில் ஒன்றாய் வேலை செய்தவர்கள் என்று சொல்லினம் 
இந்த கொலை திட்டமிட்டு நடந்ததா அல்லது நடந்த கொலையை அரசியலாக்கினார்களோ தெரியவில்லை 
இதன் பின்னால் பெரிய ஒரு பிரச்சனை மறைக்கப்படுகிறது.
இவ்வளவு சனம் அங்கு ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள் ...கொரோனா எங்கே போச்சு?
அமெரிக்காவில் கள்ளக்காசு கொடுத்தவனை பிடிக்கிறதிற்கு பொலீஸ் உடனே வரும் என்று இந்த கொலைக்கு பின்னரே தெரிந்து கொண்டேன் .(அவ்வளவு வெட்டியாவா இருக்கிறார்கள் )

கடைக்காரர் 911(அவசர இலக்கம்) க்கு அழைத்த படியால் தான் பொலிஸ் சம்பவ இடத்துக்கு வந்தது. 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:

கடைக்காரர் 911(அவசர இலக்கம்) க்கு அழைத்த படியால் தான் பொலிஸ் சம்பவ இடத்துக்கு வந்தது. 

அந்தக் கடையின், வாடிக்கையாளர் இவராம்.
மிகவும் அமைதியானவராம், சிரித்த முகத்துடன் வந்து... பொருட்களை வாங்கிச் செல்வாராம்.
சம்பவம் நடந்த அன்று... கடை முதலாளி அங்கு இல்லையாம். வேலையாள் தான்... 
காவல் துறைக்கு, அறிவித்தகாக குறிப்பிட்டதை ஒரு செய்தில் வாசித்தேன்.  

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, nunavilan said:

கடைக்காரர் 911(அவசர இலக்கம்) க்கு அழைத்த படியால் தான் பொலிஸ் சம்பவ இடத்துக்கு வந்தது. 

நீங்கள் அமெரிக்காவில் தான் இருக்கிறீர்கள் ...கள்ள நோட் கொண்டு வந்து இருக்கினம் என்று அறிவிச்சால் உடனே பொலீஸ் வருமா ?...இங்கே என்றால் அநேகமான கடைக்காரர் கள்ள காசை புடுங்கி வைத்திட்டு நல்ல காசை கேட்ப்பார்கள் ...பிரச்சனை பண்ணினால்  தான் போலீசை கூப்பிடுவார்கள் 

Link to post
Share on other sites
4 hours ago, ரதி said:

The death of George Floyd, an unarmed Black man, after an interaction with police has brought racial injustice concerns in the United States to a boiling point.

The 46-year-old man died after being arrested by police outside a store in Minneapolis, Minn.

His arrest was captured on cellphone video, showing a white police office kneeling on Floyd’s neck for several minutes while he was pinned to the ground. The video led to widespread rage across the country, spurring protests, which sometimes included looting and vandalism.

Derek Chauvin, 44, the white police officer kneeling on Floyd’s neck in the video, was charged with second-murder — up from third-degree murder — and manslaughter as the protests proliferated.

STORY CONTINUES BELOW ADVERTISEMENT

Here are the key events that led to Floyd’s death and the investigation so far:

Initial issue and arrest 

The ordeal started with what was believed to be a counterfeit $20 bill.

On May 25, Floyd visited Cup Foods grocery store in Minneapolis to buy a pack of cigarettes. A store employee believed the bill he used to be counterfeit and reported it to the police.

The store owner, Mike Abumayyaleh, told NBC that he was not at work the day of the incident but that his employees told him that Floyd initially came into the store with a man and a woman. The man tried to use what an employee suspected was a fake bill, which the employee caught and gave back to the man. Abumayyaleh said Floyd returned to the store about 10 minutes later and tried to use a suspicious $20 bill to make a purchase. The employee didn’t realize at first, according to Abumayyaleh, but when they did, they followed protocol and called police.

GMA_thumb.png?w=1040&quality=70&strip=al‘They murdered my brother:’ George Floyd’s sister speaks out after brother died in police custody

 ‘They murdered my brother:’ George Floyd’s sister speaks out after brother died in police custody

In a call to 911, the employee told the operator that he asked Floyd for the cigarettes back but “he doesn’t want to do that,” an official transcript reads. The employee also claimed Floyd was “awfully drunk” and “not in control of himself.”

STORY CONTINUES BELOW ADVERTISEMENT

Floyd was near the store, sitting in a car with two other people, when the police arrived.

The officers involved were responding to a report of a forgery in progress, according to a police department account. Once at the store, they found a man fitting the suspect’s description, Floyd, sitting in a car. The police department said a physical altercation between the officers and Floyd unfolded after Floyd got out of the car.

When the officers approached the car, one of them, Thomas Lane, began speaking with Floyd, according to a statement from prosecutors.

“He pulled his gun out and pointed it at Mr. Floyd’s open window and directed Mr. Floyd to show his hands,” it reads. There is no reason stated for why the officer brandished his weapon.

The prosecutors say Lane put the gun away once Floyd put his hands on the steering wheel but “put his hands on Mr. Floyd, and pulled him out of the car” when he ordered him to step out. Floyd then “actively resisted being handcuffed,” the statement reads. When the officers tried to bring Floyd to their cruiser, he “stiffened up, fell to the ground, and told the officers he was claustrophobic,” the report states.

https://globalnews.ca/news/7010572/george-floyd-arrest-explained/

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலியாவில் டாஸ்மானியா என்னுமிடத்தில் அவுஸ்திரேலிய நாட்டின் பழங்குடி மக்களை வேட்டையாடுவதற்கு அனுமதிப்பத்திரம் வழங்கியிருந்தார்கள், உலகில் வெள்ளையினத்தவர் மட்டுமல்ல எல்லா இனத்தவர்களும் ஏதோ ஒரு வகையில் தாம்தான் மேலானவர்கள் என்று நினைக்கிறார்கள் குறிப்பாக ஒரே இனத்திற்குள் மதம், சாதி, செல்வந்தர், ஏழை, படித்தவன், படிக்காதவன் இப்படி பல இதற்கு நானும் விதி விலக்கல்ல, ஆனால் கிட்லரையும் அந்த காவல்துறையினரயும் மட்டும் குறை கூறுவதுதான் வேடிக்கையானது, என்ன அவர்கள் கொலை செய்தார்கள் நாங்கள் அது மட்டும்தான் செய்யவில்லை.

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.