Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

அடைக்கல மாதா தேவாலயத்தின் திருச்சொரூபம் விசமிகளால் உடைப்பு


Recommended Posts

யாழ்ப்பாணம் மூன்றாம் குறுக்கு தெருவில் அமைந்துள்ள அடைக்கல மாதா தேவாலயத்தின் திருச்சொரூபம் இனந்தெரியாத நபரால் உடைக்கப்பட்டுள்ளது.

கோவிலின் மூலையில் அமைக்கப்பட்டிருந்த குறித்த சொரூபம் மக்களின் வழிபாட்டுக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலையில் உடைக்கப்பட்டுள்ளது.

புலம்பெயர் நாட்டிலிருந்து வருகை தந்த ஒருவராலேயே சிலை உடைக்கப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

தற்போது மாதாவின் சொரூபம் பாதுகாப்பு நலன் கருதி அடைக்கல மாதா ஆலயத்தின் உட்பகுதிக்குள் கொண்டுசென்று வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நபரை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

https://www.ibctamil.com/srilanka/80/144564

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கேவலம் கெட்ட செயல், அதுவும் புலம்பெயர் நாட்டிலிருந்து வந்தவரால் உள்ளுரில் பிரச்சனை உருவாக்கியுள்ளார். Vankalayan உங்களை நீண்ட நாட்களாக காணவில்லை, இவர்களுக்கு மிகவும் கடுமையான தண்டனை வேண்டும், முயற்சி செய்யுங்கள் உங்களின் கார்தினல் ஊடாக, என் ஆதரவு உங்களுக்கு உண்டு 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இருக்கிற பிரச்சனை காணாது எண்டு இது வேறை ibc  உடைத்தவரின் முழுவிபரம் இல்லாமல் புலம்பெயர் நாட்டிலிருந்து வந்தவரால் என்று மொட்டையாய் போட்டு இருக்கு . அவர் உடைப்பதுக்கு  என்ன காரணம் ?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சொரூபம் வைத்திருந்த இடம் அவருக்குச் சொந்தமாக இருக்குமோ 😂

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kapithan said:

சொரூபம் வைத்திருந்த இடம் அவருக்குச் சொந்தமாக இருக்குமோ 😂

ம் தொடங்குங்கோ ..................

செய்தி முழுமையாய் வரமுதல் .

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, உடையார் said:

கேவலம் கெட்ட செயல், அதுவும் புலம்பெயர் நாட்டிலிருந்து வந்தவரால் உள்ளுரில் பிரச்சனை உருவாக்கியுள்ளார். Vankalayan உங்களை நீண்ட நாட்களாக காணவில்லை, இவர்களுக்கு மிகவும் கடுமையான தண்டனை வேண்டும், முயற்சி செய்யுங்கள் உங்களின் கார்தினல் ஊடாக, என் ஆதரவு உங்களுக்கு உண்டு 

இதை பொது அமைதிக்குப் பங்கம் விழைவிக்கும் செயலாகக் கருதி அதற்கான சட்ட நடவடிக்கையே சரியானதாக இருக்கும் என நினைக்கிறேன்.  சம்பவத்தைப் பெரிதுபடுத்துதல் சரியானதாக இருக்குமா 🤔

2 minutes ago, பெருமாள் said:

ம் தொடங்குங்கோ ..................

செய்தி முழுமையாய் வரமுதல் .

ஐயா,

சும்மா நகைச் சுவையாக எழுதினால் அதனை சீரியஸாக (தமிழ்ச் சொல் ?) எடுப்பதா ? 😧

😂 போட்டுள்ளேன் கவனிக்கவில்லையா 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

 திடீரென முளைக்கும் தேவனின் செய்தி சொல்ல வீடு வீடாக தேடிவரும் மத வியாபாரிகளின் மூஞ்சையைகூட உடைக்கலாம் தப்பில்லை.

ஆனால் காலம் காலமாக  ஒன்றோடு ஒன்றாக வாழ்ந்துவரும் கிறிஸ்தவர்களின் மனதை உடைக்கும் இந்த செயல்  மன்னிக்கவே முடியாத குற்றம்.

பரம்பரை பரம்பரையாக இந்துக்களாகவும் கிறிஸ்தவர்களாகவும் வாழ்ந்துவரும் எமது இனத்துக்கிடையில்  வழிபாடுகள்தான் வேறு வேறு.

இன வாழ்வுக்காய் ஒன்றிணைந்து போராடியதில்  எந்த வேறுபாடும் எமக்குள் இருந்ததில்லை.

அது ஒரு அழகிய கனா காலமாக இருந்த இயக்க கட்டுப்பாட்டுக்குள் இன்னமும்  இருந்திருந்தால் , இந்த செயலை செய்ய யாரும் துணியமாட்டார்கள் என்பது ஒருபுறம்,

செய்திருந்தால் இந்துவை காயப்படுத்திய கிறிஸ்தவனுக்கு ஒரு கிறிஸ்தவ போராளி மூலமே இயக்கம் தண்டனை வழங்கியிருக்கும்.

அதேபோல், கிறிஸ்தவனை காயப்படுத்திய ஒரு இந்துவை  இந்து போராளியை கொண்டே இயக்கம் தண்டனை வழங்கியிருக்கும்.

தமிழனாய் நடமாடுவது பாவமோ இல்லையோ தெரியாது, 

ஆனால் பிரபாகரன் என்ற ஆளுமையின் கீழ் வாழாமல் போனது சுய மரியாதையை விரும்பும் ஒவ்வொரு தமிழனுக்கும் சாகும்வரை அது ஒரு ஏக்கம் கலந்த வலிதான்.

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Gowin said:

யாழ்ப்பாணம் மூன்றாம் குறுக்கு தெருவில் அமைந்துள்ள அடைக்கல மாதா தேவாலயத்தின் திருச்சொரூபம் இனந்தெரியாத நபரால் உடைக்கப்பட்டுள்ளது.

இதுவும் மதவெறியின் விளைவுகளே!
இது போன்ற உடைப்புகள் கடும் கண்டனத்துக்கு உரியது. 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

யாழ். அடைக்கல மாதா ஆலயத்தின் திருச்சொரூபத்தை சேதப்படுத்தியவர் கைது

யாழ்ப்பாணம் மூன்றாம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள அடைக்கல மாதா தேவாலயத்தின் திருச்சொரூபத்தை உடைத்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டவர் மனநலம் குன்றியவர் என்று  யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

 

matha.jpg

 

இதனையடுத்து குறித்த நபர் தெல்லிப்பழை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

அடைக்கல மாதா தேவாலயத்தின்  மூலையில் அமைக்கப்பட்டிருந்த குறித்த சொரூபம் மக்களின் வழிபாட்டுக்காக வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று முற்பகல் வெளிநாட்டில் இருந்து வருகை தந்திருக்கும் ஒருவரால் மாதா சிலையின் கண்ணாடிகள் மற்றும் கைப்பகுதி என்பன அடித்து உடைக்கப்பட்டது.

அந்த நபரை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனையைடுத்து தற்போது மாதாவின் சொரூபம் பாதுகாப்பு நலன் கருதி அடைக்கல மாதா ஆலயத்தின் உட்பகுதிக்குள் வைக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/83342

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • நான் உருவாக்கிய கட்சி கண் முன்னால் அழிவடைந்து செல்வத பார்த்துக்கொண்டு இருக்கப்போவதில்லை – வி.மணிவண்ணன் இன்று தன்னை கொள்கை இல்லாதவன் என கூறுபவர்கள் ஏன் முதலிலேயே கட்சியில் இருந்து துரத்தவில்லை என்றும் ஏன் தேர்தலில் போட்டியிட வேண்டும் என மன்றாடினார்கள் என்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஜனநாயக பண்பற்ற கட்சியாக மாறிவிட கூடாது என்பதற்காக தான் தொடர்ந்து கட்சிக்குள் இருந்து போராடவுள்ளதாக அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும் ஊடக பேச்சாளருமான சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்தார்.யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், கட்சிக்குள் நடக்கும் ஜனநாயக மீறலை பார்த்துக்கொண்டு இருப்பவன், தமிழர்களுக்கு எதிரான ஜனநாயக மீறலை எதிர்க்க தகுதியற்றவன் என மேலும் தெரிவித்தார். கட்சிக்குள் ஜனநாயக பண்பற்ற செயற்பாடுகள் தொடர அனுமதித்தால் தமிழ் மக்களுக்கு எதிரான அநீதிக்கு எதிராக போராட தகுதியற்றவனாக இருப்பேன் என்றும் எனவே மிக விரைவில் கட்சியின் பொதுச்சபையை கூட்டி முடிவெடுப்போம் என்றும் நாம் எமது கொள்கை சார்ந்து பயணிக்கும் போது, ஒரு சிலரின் சுயநலம் மற்றும் சுயலாபத்திற்காக திசை திருப்ப முற்பட்டபோது அதனை கட்சிக்குள் இருந்து தான் கடுமையாக எதிர்த்தாகவும் அவர் சுட்டிக்காட்டினார். அவர்களின் சுயலாப நோக்கிற்கு தான் முட்டுக்கட்டையாக இருந்தமையினாலேயே தன்னை கட்சியை விட்டு நீக்க பல முயற்சிகளை மேற்கொள்ள தொடங்கினார்கள் என்றும் சட்டத்தரணி வி.மணிவண்ணன் குறிப்பிட்டுள்ளார்.கட்சிக்கு என நிதிக்கட்டமைப்பை உருவாக்க முயற்சித்த போதும் அது ஒரு சிலருக்கு பிடிக்கவில்லை என்றும் நிதிக்கட்டமைப்பை உருவாக்க நினைத்த தன்னை கடுமையாக எதிர்த்தார்கள் என தெரிவித்தார்.(15)   http://www.samakalam.com/செய்திகள்/நான்-உருவாக்கிய-கட்சி-கண/
  • இல்லையப்பா, உந்த படமும் ஏறீட்டு. ஆனா படத்தை பார்த்தும் செய்தி விளங்கேல்ல. என்ன நடந்தது ?
  • சிங்கம் ஏன் காட்டுக்கு ராஜாவாக இருக்குது என்றால் இதனால்தான்......!   🦔
  • ചട്ട എന്നെ എടുത്ത് പോകുക🤣 வாணம் வாப்பா, வாணம். ஷேய்க் மாருவல நம்ப ஏலாவா, பேசி கொண்டு ஈக்க போல கைய போடுற பழக்கம் ஒண்டு ஈக்கி அவனுவளுக்கு 🤣 நகீஸ் புடிச்சவனுவள்.  இனி ஒட்டக பால்ல போட்ட cappuccino எண்டா குடிச்சி ஈக்கன். ஆனா இறைச்சி தின்னதில்ல. எப்படி ரசையா ஈக்குமா?
  • கோசான்  இத்துப்போன ஜாதி ஆள் வா நீங்கள்... நான் ஈக்கேன் வா.. சேக்மாருவட வூட்டுக்கு கூட்டிபோரன்வா ஒரே கூஜால் வா. வாறிஙகளாவா...ஒட்டக எறச்சியேட சாப்படுவா...ஹபீபீ....
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.