Jump to content

கறைபடியாத கலைஞர்,பிறந்த நாள் ஷ்பெசல் பார்வை…


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கறைபடியாத கலைஞர்,பிறந்த நாள் ஷ்பெசல் பார்வை...

By Alias -
img_5077.jpg?resize=696%2C293&ssl=1

திமுக என்னும் ஓர் உத்தமக் கட்சி !

தமிழ்நாட்டிலே ஏன் உலகத்துலயே ஊழல் கறை படியாத கட்சின்னா அது திமுகதான்னு நம்மில் எத்தன பேருக்கு தெரியும்.

இதுவரை எந்த ஊழல், கொலை வழக்கிலும் பெருசா தண்டனை பெற்றதே இல்லன்னு சொல்லலாம்; அந்த அளவுக்கு தெளிவா செய்வோம்.

எங்க ஊர்ல ஒரு அண்ணன் அடிக்கடி சொல்லுவாரு திருடுனா திமுக காரன் மாதிரி திருடனும்னு…

அண்ணா இருந்த ரெண்டு வருசம் எந்த குற்றச்சாட்டும் வராத நிலைல தலீவர் வந்த கொஞ்ச நாள்ல வீராணம், விமானத்தில பூச்சிமருந்து தெளிக்கறது உட்பட 28 குற்றச்சாட்டுகள் (கடைசில இணைச்சிருக்கேன்) எழுகிறது.

உடனே ஆட்சிய கலைச்ச இந்திரா சர்க்காரியா கமிசன் விசாரணைய அமைக்கறாங்க. பாவம் நீதிபதி சர்க்காரியா நம்ம 2ஜி நீதிபதி ஷைனிய விட அதிகமா நொந்து போய் ஊழல் செஞ்சது தெளிவா தெரியுது ஆனா நிரூபிக்க முடியல, விஞ்ஞான பூர்வ ஊழல் அப்டினு பொலம்புறாரு.

நம்ம தலைவரு அடுத்த தேர்தல்ல (எமர்ஜென்சியால பல உயிர்களை பறிகொடுத்த ஈரம் காயுமுன்னேயே) “நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக” அப்டினு பல்லவி பாடி கூட்டணி போட்டு ஜெயிக்கறாங்க அப்புறம் இந்திரா சர்க்காரியா கமிசனை நீக்கிடறாங்க (இதே இந்திரா மண்டைய ஒடச்சி ரத்தம் வந்தப்ப பெண்களுக்கு தலைல மட்டும்தான் ரத்தம் வருமானு கேட்ட கில்லாடிங்கோவ்).

அங்க ஆரம்பிச்ச வரலாறு…

*கூவத்த சுத்தம் செய்றோம்னு கொஞ்சம்..

*அப்றம் நிதி நெருக்கடினு மது விலக்கு ரத்துனு ஆரம்பிச்சி..

*16 வருசம் மத்தில அதிகாரத்துல இருந்தும் காவிரி பிரச்சனைக்கு ஒன்னும் செய்யாதது.

*அது வளந்து கச்சத்தீவு தாரை வார்த்து சந்தோசப்பட்டது வரை போச்சு…

( சரி சட்டசபைல நல்லா பேசுனாங்களானு பாத்தா திராவிட நாடு எங்கனு கேட்ட காங் அனந்த நாயகி கிட்ட நாடாவை அவுத்து பாவாடைய தூக்கி பாரு அங்க இருக்கு திராவிட நாடுனு சொன்ன ஆளுக).

*ஓட்டுக்கு பணம் கொடுக்க திருமங்கலம் பார்முலானு ஒன்ன இந்த நாட்டுக்கே அறிமுகம் பண்ணி வச்சது.

*திமுக முக்கியப் புள்ளிகள, சாராய அதிபர்கள கல்வித் தந்தை ஆக்குனது.

*அண்ணாசாலையில டாடாவுக்கு சொந்தமான பல நூறு கோடி மதிப்புள்ள இடத்தை ராஜாத்தி அம்மையார் பேரம் பேசி வாங்குனது

*டிவி, சினிமாத் துறைய தன்னோடு குடும்ப கட்டுப்பாட்டுல வச்சிருந்தது.

*எந்த மதவாதத்தை எதிர்க்கறோம்னு சொன்னாங்களோ அதே பாஜக வோட கூட்டணி மத்திய அமைச்சர் பதவி (முரசொலி மாறன் இலாகா இல்லாத அமைச்சர்).

*அப்புறமா மறுபடியும் காங். கூட்டணி இந்த காலகட்டத்துலதான் மீத்தேன் ஒப்பந்தம் அனுமதி தந்தது.

*அப்புறம் நம்ம ராசா கனிமொழி 2ஜில மாட்னாங்க; இப்ப விடுதலை ஆகிட்டாங்க. ஆனா கலைஞர் டிவிக்கு ₹200 கோடி எப்படி வந்துச்சினு தெரியல.

*ஸ்பெக்ட்ரம் புகழ் நீரா ராடியாவும் உளவுத்துறை ஜாபர்சேட்டும் மட்டும் டேப் உரையாடல் மானாட மயிலாட பத்தி பேசுனாங்களாம்.

*அப்றம் நம்ம உத்தம சகோதரங்க மாறன் பிரதர்ஸ் மெர்க்கண்டைல் பேங்க ஆட்டைய போட்ட சிவசங்கரனையே மிரட்டி ஏர்செல் மேக்சிஸ் க்கு எழுதி வாங்குனது.

*ரத்தன் டாடா கண்ணுல விரல விட்டு ஆட்டுனது, தனியா கேபிள் பதிச்சி சன் டிவிக்கு BSNL ல இருந்து டெலிபோன் கனெக்சன் எடுத்தது.

*சென்னைல மேம்பாலங்கள் கட்டுனதுல பணத்த ஆட்டைய போட்டது.

*புதுசா சட்டமன்றக் கட்டடம் கட்டுனதுல ஊழல் செஞ்சது.

*மதுரை பக்கம் ஹார்லிக்ஸ் லாரிய கடத்துனது.

*பல கிரானைட் மலைகள் காணாம போயும் ஒரு பெட்டி கேஸ் கூட போடமுடியாம இருக்குறது.

*மதுவிலக்க ஒவ்வொரு தேர்தலப்பவும் பேசிக்கிட்டே மது ஆலைகள நடத்தறது.

*ஜெ ஆட்சியில் நில அபகரிப்புக்குனே தனிகவனம் செலுத்தி எல்லா அமைச்சர்களையும் சுளுக்கெடுத்தது.

*சில்லறை வர்த்தகத்துல அந்நிய முதலீட்டை அனுமதிக்க மாட்டோம்னு சொல்லி ஆதரிச்சது.

*நீட்தேர்வு வரைவு நிலைல இருந்தப்பவே எதிர்க்காம அமைதியா இருந்தது.

*ஜல்லிக்கட்டு தடைக்கு காரணமான மசோதாவை ஆரம்பநிலைல எதிர்க்காம விட்டது.

*முஸ்லிம்களா இலக்கா வச்சி பாஜக கொண்டு வந்த NIA க்கு ஆதரவா ஓட்டு போட்டது.

*காஷ்மீர்ல அரசியலமைப்புச் சட்டம் 370 வது பிரிவ நீக்கினத பின்னாடி ஆதரிச்சது.

*CAA, NPR, NRC சட்டங்கள் வந்த தொடக்க காலத்துல எதிர்க்காம ஆதரிச்சிட்டு இப்ப எதிர்க்கறதுன்னு இன்னும் நிறைய இருக்கு.

*இது போக மதுரை கவுன்சிலர் லீலாவதி தன்னதானே வெட்டி செத்துபோனது.

*சிதம்பரம் அண்ணாமலை பல்கலை மாணவன் உதயகுமார் தற்கொலை(?) செஞ்சி செத்துபோயி அவனோட அப்பா அம்மா அது என் மகனே இல்லனு சொன்னது.

*தா.கிருட்டிணன் கத்திய எடுத்து தானே வெட்டி செத்தது.

*ஆலடி அருணாவும் அப்டியே செத்தது.

*கே.என்.நேரு தம்பி இராமஜெயம் தானே கம்பியில கட்டிகினு தற்கொலை செய்துகிட்டது.

*அண்ணா நகர் ரமேஷ் 2ஜில சம்பந்தப்பட்டப்புறம் தற்கொலை.

*சாதிக் பாஷா வயித்து வலினு தூக்குல தொங்குனது.

*யார் பெரியவங்க அழகிரியா ஸ்டாலினா மாறனா னு கருத்து கணிப்பு வந்தப்ப தினகரன் ஊழியர்கள் 4பேர் பத்திரிகை அலுவலகத்தை கொளுத்திகினு செத்து போனது.

இன்னும் எவ்வளவோ நடந்துச்சி எதையாவது நிரூபிக்க முடிஞ்சதா. தேக்குடா தேக்கு யாருகிட்ட.

சத்தமா சொல்லுவோம் திமுக ஊழல் கறை படியாத கட்சி..

சர்க்காரியா கமிசன் அமைக்க காரணமான வழக்குகள்…

1. மேகலா பிக்சர்ஸ் ஊழல்

2. அஞ்சுகம் பிக்சர்ஸ் ஊழல்

3. டிராக்டர் ஊழல்

4. கருப்பு பணத்தில் கோபாலபுரம் இல்லம் விரிவாக்கம்

5. முரசொலி ஊழல்

6. திருவாரூர் வீட்டு ஊழல்

7. ராஜா அண்ணாமலைபுரம் வீடு ஊழல்

8. கோபாலபுரம் வீட்டு மதிப்பு ஊழல்

9. ஊழல் அதிகாரியை காப்பாற்றி முறைகேடு செய்தது

10. வீராணம் ஊழல்

11 (அ).நாதன் பப்ளிகேசன்ஸ் ஊழல்

11. (ஆ) பூச்சி மருந்து தெளிப்பு ஊழல்

12. மணி அரிசி ஆலை கடன் ஊழல்

13. ஜெ.கே.கே. குழுமத்தின் விற்பனை வரி ஏய்ப்பு ஊழல்

14. சமயநல்லூர் மின்திட்ட ஊழல்

15. குளோப் தியேட்டர் வாடகை சட்டத் திருத்த ஊழல்

16. பிராட்வே டைம்ஸ் ஊழல்

17. சர்க்கரை ஆலை ஊழல்

18. கூட்டுறவு சங்க ஊழல்

19. மது ஆலை ஊழல்

20. கொடைக்கானல் & பழனி சாலை ஊழல்

21. தி.மு.க. அறக்கட்டளைகள் ஊழல்

22. நில ஆக்கிரமிப்பு & கொலை குற்றச்சாட்டு

23. ஊழல், கிரிமினல் குற்றவாளிகளுக்கு ஆதரவு

24. தொழிற்சங்க ஊழல்

25. ஊடகங்களுக்கு மிரட்டல்

26. மின் திருட்டு

27. எதிர்க்கட்சிகள் மீது தாக்குதல்

28. இழப்பீட்டு தொகை ஊழல்

ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லாத வகையில் விஞ்ஞான முறையில் திமுகவினர் ஊழல் செய்துள்ளனர் என்று தான் சர்க்காரியா ஆணையம் கூறியதே தவிர, ஊழலே நடக்க வில்லை என்று கூறவில்லை..

திமுக துரைமுருகன் அவரது மனைவி சாந்தகுமாரி, பொன்முடியும் அவரது மனைவி விசாலாட்சி, எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் அவரது மனைவி, எ.வ.வேலு மற்றும் அவரது மனைவி, என்.கே.கே.பி. இராஜா அவரது மனைவி(கள்), கோவை பொங்கலூர் பழனிச்சாமி, கே.என். நேரு அவரது மனைவி சாந்தா, மகன் அருண், தங்கம் தென்னரசு அவரது மனைவி மணிமேகலை, சாத்தூர் இராமச்சந்திரன் அவரது மனைவி ஆதிலட்சுமி, கீதா ஜீவன் சுரேஷ் ராஜன் அவரது மனைவி பாரதி, தந்தை நீலகண்ட பிள்ளை, ஆ ராசா அவர் கூட்டாளிகள் என்று திமுகவின் தலைகள் யார் மீது இல்லை ஊழல் வழக்கு?

கருணாநிதி குடும்பத்த பத்தி சொல்லவே வேணாம். இந்தியாவுலயும், வெளிநாடுகள்லயும் இருக்கற பல்லாயிரங்கோடிகள் மதிப்புள்ள மொத்த குடும்ப சொத்தையும் சேர்த்தா அம்பானி அதானிலாம் இவங்ககிட்ட பிச்ச எடுக்கனும். அந்தளவு கொடூரமான கொள்ளைக் கூட்டம் இது. அவங்க குடும்ப சொத்துப் பட்டியல இங்க போட்டனா உங்களால படிக்க முடியாது; பக்கம் பக்கமா இருக்கு.

இந்தியாவுலயே ஒரு கட்சியோட சொத்துக்கள நிர்வகிக்க சொத்துப் பாதுகாப்புக் குழு, சொத்துத் தணிக்கை குழுன்னு வச்சிருக்க ஒரே கட்சி திமுக தான். திமுக அறக்கட்டளை, முரசொலி அறக்கட்டளையின் சொத்து மதிப்பு மட்டும் பல ஆயிரங்கோடிகள தாண்டுமாம். தமிழகம் முழுக்க இந்த அறக்கட்டளைங்களுக்கு எக்கச் சக்க சொத்துக்கள் இருக்கு. இந்த அறக்கட்டளைகள ஸ்டாலினும், அவரோட பையன் உதயநிதியும் தான் இப்ப பாத்துக்கறாங்க.

இப்பவும் திமுக வுல இருக்க சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள்ல 20 பேருக்கு மேல சொத்துக்குவிப்பு வழக்கு, நில மோசடி வழக்கு ன்னு பல வழக்குகள் நடந்துட்டுதான் இருக்கு.

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் னு ஐவகை பஞ்ச பூதங்கள்லயும் ஊழல் செஞ்ச கட்சி ஒன்னு இருக்குன்னா அது இந்த உலகத்துலயே நம்ம திமுக தான்!

ஆகவே திமுக ஒரு உத்தமக் கட்சிதான்!

உதய்ணா க்கு ஜெய்.. இன்பாவுக்கு ஜெய்..

Saravanan

https://orupaper.com/hbd-kalaingnar/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.