Jump to content

``பிரபாகரனோடு நாலு மாசம் இருந்தப்ப கறி இட்லி சாப்பிட்டிருக்கீங்களா?'' - ஜான் மகேந்திரன் பதில்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சினிமாவில் என்றைக்கும் நிலைத்திருக்கும் பெயர் இயக்குநர் மகேந்திரன். 'முள்ளும் மலரும்', 'உதிரிப்பூக்கள்' என கிளாசிக் படங்களை இயக்கியவர். இவரும் இவரது மகன் ஜான் மகேந்திரனும் இலங்கைக்குச் சென்று விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுடன் தங்கியிருந்தனர். அந்நாள்களைப் பற்றிப்பேசினேன்.

இயக்குநர் பாலா தயாரிக்கும் மலையாள ரீமேக் படமான 'ஜோசப்' படத்துக்கு நீங்கதான் வசனம் எழுதிட்டிருக்கீங்க. அந்த அனுபவம் எப்படி இருக்கு?

''இயக்குநர் பாலா சாரும், நானும் பக்கத்து வீட்டுக்காரங்கன்றதால எங்களுக்குள்ள நெருக்கம் அதிகம். அடிக்கடி மீட் பண்ணிப் பேசிக்குவோம். நிறைய படங்கள் பற்றின டிஸ்கஷன் எப்பவும் எங்களுக்குள்ள போயிட்டே இருக்கும். பாலா சாரின் 'தாரை தப்பட்டை' படத்துல இணை இயக்குநரா வேலை பார்த்திருக்கேன். அதனால பாலாவுக்கு என்னோட பலம் நல்லா தெரியும். திடீர்னு போன் பண்ணி, ''ஜோசப்' மலையாளப் படத்தை தமிழ்ல ரீமேக் பண்றேன். இதுல தமிழ்ல நீங்க வசனம் எழுதுங்க'னு சொன்னார். எனக்கு மலையாளம் நல்லா தெரியும். அதனால, 'தமிழ்ல உருவாகுற படத்துக்குக் கூடவே இருந்து உதவி பண்ணுங்க'னு சொன்னார். மலையாளத்துல இந்தப் படத்தை எடுத்த பத்மகுமார் சார்தான் தமிழ்லயும் எடுத்திட்டு இருக்கார். லைஃப்ல இந்த மாதிரியான இயக்குநரைத் திரும்பவும் மீட் பண்ணுவேனானு தெரியல. அந்தளவுக்கு ரொம்ப பர்ஃபக்ட்டான ஜென்டில்மேன் பத்மா சார். இவர்கூட வேலை பார்த்தது பெரிய அனுபவத்தைக் கொடுத்திருக்கு. இந்தப் படம் தவிர வேறொரு படத்தைத் தமிழ்ல எடுக்கவும் பத்மா சார் பிளான் பண்ணிட்டு இருக்கார். அந்த புரொஜக்ட்லயும் நான் இருக்கேன்

'ஜோசப்' மலையாளப் படத்துல அறுபது சதவிகிதம் ஒரு விதமான சைலன்ட் டிராவல் ஆகும். இந்த சைலன்ட் மூட் என்னை ரொம்ப பாதிச்சது. மலையாள ஆழ்வுணர்வும் மாறாம, அதேசமயம் நம்ம தமிழ் ஆடியன்ஸூக்கும் ஏத்த மாதிரி வசனங்கள் எழுதியிருக்கேன். அதேமாதிரி ஆர்.கே.சுரேஷோட சினிமா வாழ்க்கையில முக்கியமான படமா இது இருக்கும். இசை ஜி.வி.பிரகாஷ் பண்ணியிருக்கார். 'இந்தப் படத்துக்கு ஜி.வி. இசையமைச்சதான் சரியாயிருக்கும்'னு பாலா சார் சொன்னார். மலையாள வெர்ஷனை விட தமிழ்ல பாடல்கள் ரொம்ப நல்லாயிருக்கும்.''

அதிகமான மலையாளப் படங்கள் தமிழ்ல இப்போ ரீமேக் ஆகுது... ஆனால் இந்தப் படங்கள் இங்கே கமர்ஷியலா ஹிட் ஆகுமா?

''நிறைய மலையாள சினிமா பார்த்துட்டு நம்ம ஊர்ல இப்படியொரு சினிமா எடுக்க மாட்டுறாங்களேனு ஒரு புலம்பல் எப்பவும் இருக்கும். ஆனா, இப்ப இருக்குற லாக்டெளன்ல தமிழ் ஆடியன்ஸ் நிறைய மலையாளப் படங்களை எடுத்துப் பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க. சோஷியல் மீடியால மலையாள சினிமா பற்றி எழுதிக்கிட்டே இருக்காங்க. 'ஜோசப்' படமும் வசூல் ரீதியா ஹிட் அப்படிங்குறதைத் தாண்டி நல்ல ஃபீல்குட் படம். ஓடிடி ரிலீஸூக்குப் பிறகு நிறைய பேர் மலையாள சினிமா மாதிரியான கதைக்களத்துல படம் எடுக்க வர்றாங்க. 'உதிரிப்பூக்கள்' படத்தையும் ரசிகர்கள் கொண்டாடுனாங்க. அதே நேரத்துல 'சகலகலா வல்லவன்' படத்தையும் ரசிச்சாங்க. அப்பா, 'மக்கள் எப்போதும் நல்ல படங்களை பார்க்க விரும்புவாங்க. நாமதான் கொடுக்கறதில்லை'னு சொல்லுவார். அதனால மலையாளப் படங்களும் தமிழ்ல நிச்சயம் கமர்ஷியலாவும் ஹிட் ஆகும்.''

நிறைய படங்கள்ல வேலை பார்த்தும் 'சச்சின்' படத்துக்குப் பிறகு டைரக்‌ஷன் பண்ண நீங்க இன்னும் தயங்குறது ஏன்?.

''விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன், ஃபிலிம் மேக்கிங் பற்றி அவரோட இயக்கத்துக்கு கத்துக் கொடுக்கணும்னு அப்பாவை ஈழத்துக்குக் கூப்பிட்டார். அப்பா மேல பிரபாகரன் பெரிய மரியாதை வெச்சிருந்தார். அப்போ, அப்பாகூட நானும் போயிருந்தேன். நாலு மாசம் வரைக்கும் அங்கே இருந்து அப்பா பயிற்சி கொடுத்தார். அப்போ, அங்கே கிடைச்ச அனுபவத்தை வெச்சு 'பனிச்சமரம்', '1996'னு குறும்படங்கள் எடுத்தார். அதுல 'பனிச்சமரம்' முழுக்க முழுக்கப் புலிகளைப் பற்றியது. அப்பாவுடைய மாஸ்டர் பீஸ் வொர்க் இதுல இருக்கும். ஆனா, இதை எல்லோரும் பார்க்க முடியாமப் போயிருச்சுனு ஒரு வருத்தம் எனக்குள்ள இருக்கு. அப்போ, 'ஆணிவேர்'னு ஒரு படத்தை நான் டைரக்‌ஷன் பண்ணேன். இதை பிரபாகரன் சார்தான் புரொடியூஸ் பண்ணார்.

அந்த நேரத்துல என்கூட வேலை பார்த்தவங்க எல்லாரும் பயந்து போயிருந்தாங்க. 'ஏன் பிரபாகரன் சார்கூட சேர்ந்து வேலை பார்க்குறீங்க'னு கேள்வி கேட்பாங்க. நானும், அப்பாவும் பிரபாகரனை மீட் பண்ண போட்டோஸ் எல்லாமே பரவ ஆரம்பிச்சிருச்சு. அப்பாவும் எதையும் மறைக்கத் தயாராயில்ல. அதனாலயே சில காரணங்களால் என்னால தொடர்ந்து படம் பண்ண முடியல. ஆனா, இப்போ ஒரு படத்தை இயக்கப் போறேன். தயாரிப்பு நிறுவனம் ரெடியா இருக்காங்க. சீக்கிரமே அதிகாரபூர்வ அறிவிப்பு வரும். அதே மாதிரி சில படங்கள்ல நடிக்கவும் செய்றேன். 'எங்கேயும் எப்போதும்' சரவணன் த்ரிஷாவை வெச்சு 'ராங்கி' படத்தை டைரக்‌ஷன் பண்ணிட்டு இருக்கார். இதுல நான் போலீஸ் கேரக்டர் பண்ணியிருக்கேன். தவிர, அசோக் செல்வன் நடிச்சிருக்குற 'ரெட்ரம்' படத்துலயும் நடிச்சிருக்கேன்.''

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுடன் இருந்த நாள்கள் பற்றிச் சொல்லுங்க?

''பிரபாகரன் சாருக்கு சினிமா ரொம்பப் பிடிக்கும். ஒரு படத்தை எடுத்துக்கிட்டு முழுசா அலசி, ஆராய்வார். ரொம்ப நுணுக்கமா பேசுவார். புலிகளின் தலைவர் மாதிரி நம்மகிட்ட இருக்க மாட்டார். சினிமால பிரபாகரன் கேரக்டரை உருவகப்படுத்திக் காட்டுறதுக்கும் ஒரிஜினலா பார்த்ததுக்கும் நிறைய வித்தியாசமிருக்கு. அங்கேபோய் இறங்கினதும் பிரபாகரன் சாரைப் பார்க்க நானும், அப்பாவும் ஒவ்வொருநாளும் காத்துட்டு இருப்போம். அப்பா சில புத்தகங்கள்லாம் கையில வெச்சுட்டு ரெடியா உட்கார்ந்திருப்பார். 'சில சம்பவங்கள் இப்போ நடந்திருக்கு, பிறகு சந்திக்கலாமே'னு சொல்லுவாங்க. அப்புறம் ரெண்டு நாள் கழிச்சு 'இரவு உணவு அண்ணன் கூட இருக்கும்'னு சொல்லுவாங்க. ஆனா, நடக்காது. 'என்னடா மீட் பண்ணுவோமா மாட்டோமா'னு ஒரு சர்ப்ரைஸோடயே டிராவல் ஆனோம். நமக்குள்ள அவரைப் பற்றின நிறைய இமேஜ் இருக்கும். ஆனா, அவரை மீட் பண்ணப்போ அந்த இமேஜ் எல்லாத்தையும் உடைச்சுதான் அவரைப் பார்த்தோம். அவரோட தோற்றம், பாடி லாங்குவேஜ் எல்லாம் ரொம்ப இயல்பா இருந்தது. ரொம்ப நெருக்கமான சொந்தக்காரனைப் பார்த்த மாதிரியிருந்தது.

'கனநேரம் காக்க வெச்சுட்டேனா'னு சிரிச்சிக்கிட்டே வந்தார். அதே மாதிரி அங்கே இருந்தவங்கலாம் அப்பாகிட்டா, 'தம்பி, தலைவர், பிரபானு எப்படி வேணா கூப்பிடுங்க. எப்படி கூப்பிட்டாலும் அண்ணன் தப்பா நினைக்க மாட்டார்'னு சொல்லுவாங்க. சாப்பிடும்போது 'இதைச் சாப்பிடுங்க'னு பாசமா எங்களுக்கு எடுத்து வைப்பார். அங்கே இருந்த ஒரு வெஜிடபிள் ரோலுக்குப் பெயர் கன்னிவெடி. ஒரு நியூ இயர் டைம் அவர்கூட அங்கே இருந்தேன். அப்போ என்னை அவ்வளவு நல்லா பார்த்துக்கிட்டார். 'Will to freedom' புத்தகத்துல கையெழுத்து போட்டுக் கொடுத்தார். எந்தச் சூழலிலும் உலகமே பார்த்து மிரண்டு மரியாதை கொடுக்குற ஒருத்தர்கூட பேசிக்கிட்டு இருக்கோம்னு தோணவே இல்ல. யாராவது டூப் போட்டுக்கிட்டு நம்மகிட்ட பேசிக்கிட்டு இருக்காங்களானு ஆச்சர்யப்பட வைக்குறளவுக்கு நடந்துகிட்டார். பிரபாகரன் மற்றும் தமிழ்செல்வன் ரெண்டு பேருமே இப்படிதான் நடந்துகிட்டாங்க. அங்கே இருந்து கிளம்பி சென்னைக்கு எங்க வீட்டுக்கு வர்ற வரைக்கும் அவரோட ஆட்களை வெச்சு விசாரிச்சிக்கிட்டே இருந்தார்.''

பிரபாகரன் வீட்டில் பரிமாறப்படும் உணவுகள் மிகுந்த ருசியாக இருக்கும் என்கிறார்களே... அவரோடு சேர்ந்து சாப்பிட்டிருக்கிறீர்கள். உங்கள் அனுபவம் எப்படி?

''உண்மைல அங்கே ருசியான உணவே சாப்பிட மாட்டாங்க. நூறு தோசை வரைக்கும் ஏற்கெனவே போட்டு அங்கே ரெடியா இருக்கும். அதைத்தான் எல்லோரும் எடுத்துச் சாப்பிடுவாங்க. சூடான உணவெல்லாம் எதிர்பார்க்க முடியாது. போர் இடங்கள்னால பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள்தான் அங்கே அதிகமா இருக்கும். நல்ல ருசியான சாப்பாடு என்னனுகூட அவங்களுக்குத் தெரியாது. கிடைக்குற டிரெஸ், செருப்பு போட்டுட்டு அலைஞ்சுக்கிட்டு இருப்பாங்க. ஏன்னா, அங்கே இருந்தவங்க எல்லாருமே வேறொரு மனநிலைல எப்பவும் இருப்பாங்க. சிலர் இப்போ சொல்லிட்டு இருக்குற கறி இட்லி உணவு வகைகளை நாங்க அங்க ஒருநாள்கூட பார்க்கல. மிகைப்படுத்திச் சொல்றாங்கனு தோணுது. ''

https://cinema.vikatan.com/tamil-cinema/director-john-mahendran-shares-his-experience-in-sri-lanka-with-his-father

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

அப்போ, 'ஆணிவேர்'னு ஒரு படத்தை நான் டைரக்‌ஷன் பண்ணேன். இதை பிரபாகரன் சார்தான் புரொடியூஸ் பண்ணார்.

தலைவர் புரொடியூசர் ஆகவும் இருந்திருக்கிறார்....

சேராவின் நண்பன் இதற்கு பதில் தருவாரா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, பிழம்பு said:

''உண்மைல அங்கே ருசியான உணவே சாப்பிட மாட்டாங்க. நூறு தோசை வரைக்கும் ஏற்கெனவே போட்டு அங்கே ரெடியா இருக்கும். அதைத்தான் எல்லோரும் எடுத்துச் சாப்பிடுவாங்க. சூடான உணவெல்லாம் எதிர்பார்க்க முடியாது. போர் இடங்கள்னால பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள்தான் அங்கே அதிகமா இருக்கும். நல்ல ருசியான சாப்பாடு என்னனுகூட அவங்களுக்குத் தெரியாது. கிடைக்குற டிரெஸ், செருப்பு போட்டுட்டு அலைஞ்சுக்கிட்டு இருப்பாங்க. ஏன்னா, அங்கே இருந்தவங்க எல்லாருமே வேறொரு மனநிலைல எப்பவும் இருப்பாங்க. சிலர் இப்போ சொல்லிட்டு இருக்குற கறி இட்லி உணவு வகைகளை நாங்க அங்க ஒருநாள்கூட பார்க்கல. மிகைப்படுத்திச் சொல்றாங்கனு தோணுது. ''

பிட்டும், இடியாப்பமும், பாணும் சாம்பலும் இருக்கிற இடத்தில ஆறின 100 தோசையா?
பிரபாகரனின் பிட்டு என்று தென் இலங்கையர்களே அனுபவித்து எழுதி இருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

""உண்மைல அங்கே ருசியான உணவே சாப்பிட மாட்டாங்க. நூறு தோசைவரைக்கும் ஏற்கெனவே போட்டு அங்கே ரெடியா இருக்கும். அதைத்தான் எல்லோரும் எடுத்துச் சாப்பிடுவாங்க. சூடான உணவெல்லாம் எதிர்பார்க்க முடியாது. போர் இடங்கள்னால பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள்தான் அங்கே அதிகமா இருக்கும். நல்ல ருசியான சாப்பாடு என்னனுகூட அவங்களுக்குத் தெரியாது. கிடைக்குற டிரெஸ், செருப்பு போட்டுட்டு அலைஞ்சுக்கிட்டு இருப்பாங்க. ஏன்னா, அங்கே இருந்தவங்க எல்லாருமே வேறொரு மனநிலைல எப்பவும் இருப்பாங்க. சிலர் இப்போ சொல்லிட்டு இருக்குற கறி இட்லி உணவு வகைகளை நாங்க அங்க ஒருநாள்கூட பார்க்கல. மிகைப்படுத்திச் சொல்றாங்கனு தோணுது. ''""

அவர் தனக்கு புரிந்ததைக் கூறுகிறார். ஆனால் இலங்கைத் தமிழர்களுக்கு உண்மை தெரியும்தானே. 🙂

Link to comment
Share on other sites

1 minute ago, Kapithan said:

கபிதன், என்றாவது விடுதலைப் புலிகளின் முகாமில் அவர்களுடன் இணைந்து உணவு சாப்பிட்டு இருக்கின்றீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, நிழலி said:

கபிதன், என்றாவது விடுதலைப் புலிகளின் முகாமில் அவர்களுடன் இணைந்து உணவு சாப்பிட்டு இருக்கின்றீர்களா?

நான் சாப்பிடேல‌ , ஆனால் போர்க‌ள‌த்தில் காவ‌லுக்கு நிக்கும் போராளிக‌ளுக்கு போர‌ உண‌வை பார்த்து இருக்கிறேன் , ப‌லாளியில் காவ‌லுக்கு நிக்கும் போராளிக‌ளுக்கு இர‌வு நேர‌ உண‌வை என‌து மாமா தான் சைக்கில‌ எடுத்து செல்வார் ,

நாம‌ இர‌வில் சாப்பிடும் புட்டு க‌றிக‌ள் இவை தான் மாமா போராளிக‌ளுக்கு எடுத்து சென்ற‌ போது பார்த்தேன் , 

18 minutes ago, நிழலி said:

கபிதன், என்றாவது விடுதலைப் புலிகளின் முகாமில் அவர்களுடன் இணைந்து உணவு சாப்பிட்டு இருக்கின்றீர்களா?

யாழ்ப்பாண‌த்தில் உற‌வுக‌ள் நேரில் சென்று அவ‌ர்க‌ள் ச‌மைத்த‌ உண‌வை குடுப்பின‌ம் , 
1994ம் ஆண்டு நீங்க‌ள் யாழ்ப்பாண‌த்தில் இருந்து இருந்தா இது உங்க‌ளுக்கு தெரிந்து இருக்கும் , யாழ்ப்பாண‌ ஆரிய‌ குள‌ ச‌ந்தியில் போராளிக‌ளின் சிறு முகாம் இருந்த‌து அந்த‌ முகாமில் இருக்கும் போராளிக‌ளுக்கு ம‌க்க‌ள் தான் கொண்டு போய் குடுக்கிற‌வை  உண‌வை ,பெரிய‌ம்மா ச‌மைத்து த‌ர‌ நானும் கொண்டு போய் குடுத்த‌ நான் 1994ம் ஆண்டு 

Link to comment
Share on other sites

7 minutes ago, பையன்26 said:

பையன், வெளியாட்களோ பெற்றோர்களோ போராளுகளுக்கு உணவு கொடுக்க அனுமதி இல்லை. ஒரு வேளை அந்த காலகட்டத்தில் நீங்கள் மிகச் சிறுவனாக இருந்திருப்பீர்கள் என்பதால் அவ்வாறு விளங்கிக் கொண்டீர்களோ தெரியாது.

ஒவ்வொரு பிரதேசத்துக்கும் என்று ஒரு சமையல் காம்ப் இருக்கும். ஊரில் இருக்கும் பலர் (முக்கியமாக பெண்கள்)  தாமாகவே முன் வந்து சமையலில் ஈடுபடுவார்கள். ஆனால் உணவு தாயாரிப்பதற்கான உணவுப் பொருட்கள் அனைத்தும் புலிகளினால் தான் கொடுக்கப்பட்டு இருக்கும். அவ்வாறு சமைத்த பின் அங்கிருந்து வாகனங்களில் போராளிகளின் முகாம்களுக்கு எடுத்துச் செல்வர். அவ்வாறு சமைத்த உணவு போராளிகளின் கைகளுக்கு கிடைக்கும் போது அவை ஆறிப் போனதாக அனேக நேரங்களில் இருக்கும். எல்லா போராளிகளும் ஒரே நேரத்தில் உண்பதும் இல்லை.

உணவு வகைகள் தரமானதாக இறைச்சி, மரக்கறி, பிட்டு என்று இருந்தாலும் சுவை, சூடு என்பவை மிகக் குறைவாகவே இருப்பதுண்டு. நெஞ்சில் இலச்சிய தாகமும், மனதில் உரமும் கொண்ட  போராளிகளுக்கு இவை ஒரு பொருட்டாகவே இருப்பதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, நிழலி said:

மாமா என‌து உற‌வின‌ர்க‌ள் ச‌மைத்த‌ உண‌வை எடுத்து செல்வ‌து இல்லை , ம‌ல்லாக‌த்தில் இருந்து எடுத்து வ‌ந்து ப‌லாளியில் நிக்கும் போராளிக்கு இர‌வு நேர‌ங்க‌ளில் கொண்டு போய் குடுப்பார் ,

நான் யாழ்பாண‌த்தில் 1994ம் ஆண்டு குடுத்த‌து என‌க்கு இப்ப‌வும் நினைவு இருக்கு , எங்க‌ட‌ வீட்டில் இருந்து அவையின் முகாமுக்கு 5நிமிச‌ ந‌டை / 

இவை தெரிந்த‌ ப‌டியால் தான் எழுதினேன் , ஒரு த‌ட‌வை தான் நான் உண‌வு கொண்டு போய் கொடுத்த‌ நான் / நீங்க‌ள் சொல்வ‌து ச‌ரி , ஒரு இர‌வு மிஞ்சிய‌ சாப்பாட்டு பாச‌ல் மாமா த‌ந்தார் சாப்பாட்டில் சூடு இல்ல‌ , நான் கொஞ்ச‌ம் சாப்பிட்டு அப்ப‌டியே வைத்து விட்டேன் , 

16 minutes ago, நிழலி said:

பையன், வெளியாட்களோ பெற்றோர்களோ போராளுகளுக்கு உணவு கொடுக்க அனுமதி இல்லை. ஒரு வேளை அந்த காலகட்டத்தில் நீங்கள் மிகச் சிறுவனாக இருந்திருப்பீர்கள் என்பதால் அவ்வாறு விளங்கிக் கொண்டீர்களோ தெரியாது.

ஒவ்வொரு பிரதேசத்துக்கும் என்று ஒரு சமையல் காம்ப் இருக்கும். ஊரில் இருக்கும் பலர் (முக்கியமாக பெண்கள்)  தாமாகவே முன் வந்து சமையலில் ஈடுபடுவார்கள். ஆனால் உணவு தாயாரிப்பதற்கான உணவுப் பொருட்கள் அனைத்தும் புலிகளினால் தான் கொடுக்கப்பட்டு இருக்கும். அவ்வாறு சமைத்த பின் அங்கிருந்து வாகனங்களில் போராளிகளின் முகாம்களுக்கு எடுத்துச் செல்வர். அவ்வாறு சமைத்த உணவு போராளிகளின் கைகளுக்கு கிடைக்கும் போது அவை ஆறிப் போனதாக அனேக நேரங்களில் இருக்கும். எல்லா போராளிகளும் ஒரே நேரத்தில் உண்பதும் இல்லை.

உணவு வகைகள் தரமானதாக இறைச்சி, மரக்கறி, பிட்டு என்று இருந்தாலும் சுவை, சூடு என்பவை மிகக் குறைவாகவே இருப்பதுண்டு. நெஞ்சில் இலச்சிய தாகமும், மனதில் உரமும் கொண்ட  போராளிகளுக்கு இவை ஒரு பொருட்டாகவே இருப்பதில்லை.

எம் போராட்ட‌த்துக்கு என்று ப‌ல‌ விதிமுறைக‌ள் இருக்கு , சாப்பாட்டுக்கும் க‌ட்டுப் பாடு என்று இப்ப‌ தான் அறியிறேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

கபிதன், என்றாவது விடுதலைப் புலிகளின் முகாமில் அவர்களுடன் இணைந்து உணவு சாப்பிட்டு இருக்கின்றீர்களா?

ஆம்.  🙂

போர் முன்னரங்குகள் எவ்வாறு இருக்கும் என்று எல்லோருக்குமே தெரியும். ஆனால் முகாம்களில் சமைக்கும்போது முடிந்த அளவு சுவையாக சமைக்க முற்படுவர். அதன் அர்த்தம் எப்போதுமே,  எல்லோருமே  சுவையாக சமைக்க மாட்டார்கள் என்றாகாது. 👍

Link to comment
Share on other sites

4 hours ago, Nathamuni said:

பிட்டும், இடியாப்பமும், பாணும் சாம்பலும் இருக்கிற இடத்தில ஆறின 100 தோசையா?
பிரபாகரனின் பிட்டு என்று தென் இலங்கையர்களே அனுபவித்து எழுதி இருக்கிறார்கள்.

என்ன செய்யிறது எங்கடை வீடைப்பற்றி பக்கத்துவீட்டுக்காரன் சொல்லிகேக்கவேண்டிய நிலையில் எங்கடை ஆட்கள் இருப்பதை பார்த்து …………..

விடுதலை புலிகளின் சாப்பாடை பற்றித்தான் நிறையபேருக்கு பிரச்சனையா இருக்கு.

தலைவர் நல்லபடியாகத்தான் தன்னுடைய பிள்ளைகளை பார்த்தார் .

இது எனது சகோதரர் சொன்னது 
எல்லோருக்கும் ஒரேவகையான உணவு வழங்கப்படுவதில்லை. ஒவ்வொருவரின் செயற்படடை பொறுத்து அவர்களின் உணவும் மாறுபடும். அரசியல், நிர்வாகம் செய்ப்பவர்களுக்கு சாதாரண உணவு {அது யாராக இருந்தாலும்}, பயிற்சி, மருத்துவமனையில் இருப்பவர்களுக்கு விசேட உணவு, விசேட பயிற்சியில் இருப்பவர்களுக்கு அதிவிசேட உணவு (இந்த உணவை கனவில் கூட ஒருவரும் நினைத்து பார்த்திருக்க மாடீர்கள்  )
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

கபிதன், என்றாவது விடுதலைப் புலிகளின் முகாமில் அவர்களுடன் இணைந்து உணவு சாப்பிட்டு இருக்கின்றீர்களா?

நான் போய் இருக்கின்றேன் சமையல் அறை வரை, பொன்னாலை காட்டுக்குள் பிடிக்கப்பட்ட 10-15 உடும்புகளை நான்தான் உரித்துக்கொடுத்தேன் சமைப்பதற்கு, நின்று பார்த்தேன் அவர்களுடன் சமைப்பதை, ஏன் அவர்களும் மனிதர்கள் தானே? நல்ல உணவு சாப்பிடக்கூடாத?

இவரின் பேட்டியை முதலே படித்துவிட்டேன், வேணுமேன்றே விகடன் இதை செய்கின்றார்கள்

Link to comment
Share on other sites

9 minutes ago, உடையார் said:

அவர்கள் மனிதர்கள் இல்லையென்றும் நல்ல உணவு சாப்பிடக் கூடாது என்றம் எவராவது இங்கு குறிப்பிட்டுள்ளார்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நிழலி said:

அவர்கள் மனிதர்கள் இல்லையென்றும் நல்ல உணவு சாப்பிடக் கூடாது என்றம் எவராவது இங்கு குறிப்பிட்டுள்ளார்களா?

இந்திரியின் நோக்கமும் நீங்கள் கேட்ட கேள்வியும், அவர்கள் நல்ல உணவு சாப்பிடக்கூட மாட்டார்கள் என்ற மாதிரி இருந்திச்சு, அப்படி நீங்கள் நீங்கள் நினைக்கவில்லையென்றால் மிக்க சந்தோஷம் 🙏

Link to comment
Share on other sites

13 minutes ago, உடையார் said:

இந்திரியின் நோக்கமும் நீங்கள் கேட்ட கேள்வியும், அவர்கள் நல்ல உணவு சாப்பிடக்கூட மாட்டார்கள் என்ற மாதிரி இருந்திச்சு, அப்படி நீங்கள் நீங்கள் நினைக்கவில்லையென்றால் மிக்க சந்தோஷம் 🙏

4 hours ago, நிழலி said:

உணவு வகைகள் தரமானதாக இறைச்சி, மரக்கறி, பிட்டு என்று இருந்தாலும் சுவை, சூடு என்பவை மிகக் குறைவாகவே இருப்பதுண்டு. நெஞ்சில் இலச்சிய தாகமும், மனதில் உரமும் கொண்ட  போராளிகளுக்கு இவை ஒரு பொருட்டாகவே இருப்பதில்லை.

இவ்வாறு நான் எழுதியதை பார்த்து(ம்) எவ்வாறு இப்படி  உங்களுக்கு தோன்றியது என யோசிக்கின்றேன்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, நிழலி said:

இவ்வாறு நான் எழுதியதை பார்த்து(ம்) எவ்வாறு இப்படி  உங்களுக்கு தோன்றியது என யோசிக்கின்றேன்...

நிழலி நீங்கள் கனக்க யோசிக்கவேண்டாம், என்னில்தான் பிழை, நீங்கள் அப்படி யோசிப்பவர் இல்லையென்று தெரிந்து கேட்டது எனென்றால், இதை முதலே விகடனில் வாசித்து கடுப்பில் இருந்தனான் இவர் மேல்😡, அதை இங்கு கண்டு, உங்கள் கேள்வியையும் பார்த்து இன்னும் கடுப்பாய்விட்டது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொல்லுறன் எண்டு கோவிக்கப்படாது, 

ஈழ விடுதலைப் போராட்டத்தை போராளிகள் சாப்பிட்ட  சப்பாட்டைக் கொண்டும் சமையலின் ருசியைக் கொண்டும் அளவிடும் நிலைக்கு நாம் தரம் தாழ்ந்து போய்விட்டோம் 

வெட்கக் கேடு. 😡

Link to comment
Share on other sites

3 hours ago, Kapithan said:

சொல்லுறன் எண்டு கோவிக்கப்படாது, 

ஈழ விடுதலைப் போராட்டத்தை போராளிகள் சாப்பிட்ட  சப்பாட்டைக் கொண்டும் சமையலின் ருசியைக் கொண்டும் அளவிடும் நிலைக்கு நாம் தரம் தாழ்ந்து போய்விட்டோம் 

வெட்கக் கேடு. 😡

என்ன செய்யிறது, இதுவும் கடந்து போகும் ,

போராடடத்தை மல்லினபடுத்துவர்க்கு  இந்தியாவின்  சவுத் புளொக் ஆடும் நாடகம், இதை விளங்கிக்கொள்ளாமல் எம்மவர்களும் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.