Jump to content

சுமந்திரனை விலக்கும் கோரிக்கை முன்வைக்கப்பட்டால் டெலோ அழுத்தம் கொடுக்கும்

Recommended Posts

-எஸ்.நிதர்ஷன்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் பதவியில் இருந்து சுமந்திரனை விலக்கும் கோரிக்கை முன்வைக்கப்பட்டால், அந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு, டெலோ முன்னின்று அழுத்தங்களைப் பிரயோகிக்குமென்று, டெலோவின் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில், இன்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், சுமந்திரனுக்கு அடிப்படையிலேயே போராட்டம், அதன் வலி, அதன் சுமை, தாக்கம், பெறுமதி பற்றித் தெரியாதெனவும் ஆயுதப் போராட்டம் ஏன், எதற்கு, யாரால் உருவானது என்றும் அவருக்குத் தெரியாதெனவும் கூறினார்.

இவ்வாறான செயற்பாட்டை முன்னெடுத்த சுமந்திரனைப் பதவி விலக்கும் கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டால், அதற்குத் தமது கட்சி முன்னின்று அழுத்தங்களைக் கொடுக்குமெனத் தெரிவித்த விந்தன் கனகரத்தினம், தானும் ஒரு போராளி என்ற வகையில், வரலாறு தெரியாத சுமந்திரனைப் பதவி விலக அழுத்தங்களைக் கொடுப்பேனெனவும் கூறினார்.

“எனவே, முதலில் இலங்கைத் தமிழரசுக் கட்சி இந்த விடயம் தொடர்பில் என்ன நடவடிக்கை எடுக்கின்றது என்பதைப் பொறுத்து, எமது கட்சியின் நடவடிக்கை எவ்வாறானதாக இருக்கும் என்பதை தெரியப்படுத்துவோம்” என்றார்.

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/சுமந்திரனை-விலக்கும்-கோரிக்கை-முன்வைக்கப்பட்டால்-டெலோ-அழுத்தம்-கொடுக்கும்/71-251327

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள அரசும் தென்னிலங்கை அரசியல்வாதிகளும் விரும்பும் கூட்டமைப்பை உடைக்கும் சதித் திட்டத்தை நீங்களே இலவசமா நிறைவேற்றி விடாமல் உங்கள் நடவடிக்கைகள் இருந்தால் சரிதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ampanai said:

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் பதவியில் இருந்து சுமந்திரனை விலக்கும் கோரிக்கை முன்வைக்கப்பட்டால், அந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு, டெலோ முன்னின்று அழுத்தங்களைப் பிரயோகிக்குமென்று, டெலோவின் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் தெரிவித்தார்.

535943.jpg

கட்ட துரைக்கு கட்டம் சரியில்லை.. 

அடம் பிடித்து "அவுட் பாஸ்" போடுது.. 👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சர்ர்ர்ர்ரி.....

சுமந்திரனை அனுப்பிப்போட்டு அடுத்து என்ன செய்வதாய் உத்தேசம் 😏

Link to comment
Share on other sites

9 hours ago, ampanai said:

“எனவே, முதலில் இலங்கைத் தமிழரசுக் கட்சி இந்த விடயம் தொடர்பில் என்ன நடவடிக்கை எடுக்கின்றது என்பதைப் பொறுத்து, எமது கட்சியின் நடவடிக்கை எவ்வாறானதாக இருக்கும் என்பதை தெரியப்படுத்துவோம்” என்றார்.

கூட்டமைப்பின் பேச்சாளர் சிங்கள-அரச பயங்கரவாதத்துக்கு துணை போவதை தட்டிக்கேட்க வக்கில்லாத விந்தன் கனகரத்தினம் தமிழரசுக் கட்சி மீது பழியை சுமத்தி தப்புவது கோழைத்தனமான அரசியல்.

இந்த கோழைகள் நடவடிக்கை எடுத்தாலும் எடுக்காவிட்டாலும் எடுக்காவிட்டால் வழமைபோல சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளுக்கு வழமை போலவே முண்டு கொடுப்பார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.