Sign in to follow this  
ampanai

சுமந்திரனை விலக்கும் கோரிக்கை முன்வைக்கப்பட்டால் டெலோ அழுத்தம் கொடுக்கும்

Recommended Posts

-எஸ்.நிதர்ஷன்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் பதவியில் இருந்து சுமந்திரனை விலக்கும் கோரிக்கை முன்வைக்கப்பட்டால், அந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு, டெலோ முன்னின்று அழுத்தங்களைப் பிரயோகிக்குமென்று, டெலோவின் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில், இன்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், சுமந்திரனுக்கு அடிப்படையிலேயே போராட்டம், அதன் வலி, அதன் சுமை, தாக்கம், பெறுமதி பற்றித் தெரியாதெனவும் ஆயுதப் போராட்டம் ஏன், எதற்கு, யாரால் உருவானது என்றும் அவருக்குத் தெரியாதெனவும் கூறினார்.

இவ்வாறான செயற்பாட்டை முன்னெடுத்த சுமந்திரனைப் பதவி விலக்கும் கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டால், அதற்குத் தமது கட்சி முன்னின்று அழுத்தங்களைக் கொடுக்குமெனத் தெரிவித்த விந்தன் கனகரத்தினம், தானும் ஒரு போராளி என்ற வகையில், வரலாறு தெரியாத சுமந்திரனைப் பதவி விலக அழுத்தங்களைக் கொடுப்பேனெனவும் கூறினார்.

“எனவே, முதலில் இலங்கைத் தமிழரசுக் கட்சி இந்த விடயம் தொடர்பில் என்ன நடவடிக்கை எடுக்கின்றது என்பதைப் பொறுத்து, எமது கட்சியின் நடவடிக்கை எவ்வாறானதாக இருக்கும் என்பதை தெரியப்படுத்துவோம்” என்றார்.

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/சுமந்திரனை-விலக்கும்-கோரிக்கை-முன்வைக்கப்பட்டால்-டெலோ-அழுத்தம்-கொடுக்கும்/71-251327

Share this post


Link to post
Share on other sites

சிங்கள அரசும் தென்னிலங்கை அரசியல்வாதிகளும் விரும்பும் கூட்டமைப்பை உடைக்கும் சதித் திட்டத்தை நீங்களே இலவசமா நிறைவேற்றி விடாமல் உங்கள் நடவடிக்கைகள் இருந்தால் சரிதான்.

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, ampanai said:

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் பதவியில் இருந்து சுமந்திரனை விலக்கும் கோரிக்கை முன்வைக்கப்பட்டால், அந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு, டெலோ முன்னின்று அழுத்தங்களைப் பிரயோகிக்குமென்று, டெலோவின் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் தெரிவித்தார்.

535943.jpg

கட்ட துரைக்கு கட்டம் சரியில்லை.. 

அடம் பிடித்து "அவுட் பாஸ்" போடுது.. 👍

 • Haha 1

Share this post


Link to post
Share on other sites

சர்ர்ர்ர்ரி.....

சுமந்திரனை அனுப்பிப்போட்டு அடுத்து என்ன செய்வதாய் உத்தேசம் 😏

Share this post


Link to post
Share on other sites
9 hours ago, ampanai said:

“எனவே, முதலில் இலங்கைத் தமிழரசுக் கட்சி இந்த விடயம் தொடர்பில் என்ன நடவடிக்கை எடுக்கின்றது என்பதைப் பொறுத்து, எமது கட்சியின் நடவடிக்கை எவ்வாறானதாக இருக்கும் என்பதை தெரியப்படுத்துவோம்” என்றார்.

கூட்டமைப்பின் பேச்சாளர் சிங்கள-அரச பயங்கரவாதத்துக்கு துணை போவதை தட்டிக்கேட்க வக்கில்லாத விந்தன் கனகரத்தினம் தமிழரசுக் கட்சி மீது பழியை சுமத்தி தப்புவது கோழைத்தனமான அரசியல்.

இந்த கோழைகள் நடவடிக்கை எடுத்தாலும் எடுக்காவிட்டாலும் எடுக்காவிட்டால் வழமைபோல சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளுக்கு வழமை போலவே முண்டு கொடுப்பார்கள்.

 • Like 1
 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • தடுப்புச்சுவரை தாண்டி செல்ல ‘குட்டி’க்கு பயிற்சி அளித்த தாய் யானை   கூடலூர்: நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து கீழ்நாடுகாணி வழியாக கேரள மாநிலம் பாலக்காட்டுக்கு மலைப்பாதை செல்கிறது. இந்த மலைப்பாதையில் இருபுறங்களிலும் அடர்ந்த வனப்பகுதி காணப்படுகிறது. இந்த வனப்பகுதியில் காட்டுயானைகள், புலிகள், காட்டெருமைகள், மான்கள், சிறுத்தைப்புலிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இதனால் மலைப்பாதையில் வனவிலங்குகள் நடமாட்டம் காணப்படும். குறிப்பாக காட்டுயானைகளின் நடமாட்டம் அதிகளவில் இருக்கும்.   தற்போது கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் சரக்கு லாரிகள் மட்டுமே தமிழக-கேரள மலைப்பாதையில் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் பெரும்பாலும் மலைப்பாதை வெறிச்சோடி காணப்படுவதால், வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை 8 மணியளவில் தமிழக-கேரள எல்லையில் உள்ள மலைப்பாதையில் கீழ்நாடுகாணி அருகே தேன்பாறா என்ற இடத்தில் சரக்கு லாரிகள் சென்று கொண்டு இருந்தன. அப்போது பிறந்து 2 மாதங்களே ஆன குட்டியானையுடன் 2 காட்டுயானைகள் மலைப்பாதையை கடந்தன. உடனே சரக்கு லாரிகளை டிரைவர்கள் ஆங்காங்கே நிறுத்தினர். இதற்கிடையில் சாலையோர தடுப்புச்சுவரை தாண்டி செல்ல முடியாமல் குட்டியானை தவித்தது. இதை கண்ட தாய் யானை, தடுப்புச்சுவரை தாண்டி செல்வது எப்படி? என்று செயல்விளக்கம் மூலம் பயிற்சி அளித்தது. இதை கவனித்த குட்டியானை, முன்னங்கால்களை தடுப்புச்சுவரில் தூக்கி வைத்து, ஏற முயன்றது. ஆனால் முடியவில்லை. உடனே தடுப்புச்சுவரின் மீது தாய் யானை ஏறி நின்றது. இதை பார்த்து குட்டியானையும் முன்னங்கால்களை தடுப்புச்சுவர் மீது தூக்கி வைத்து, பின்னங்கால்களை தூக்கி மீண்டும் ஏற முயன்றது. எனினும் ஏற முடியாமல் தவித்தது. உடனே தாய் யானை துதிக்கையால் குட்டியானையை தூக்கிவிட்டு தடுப்புச்சுவரை தாண்டி செல்ல உதவியது. தொடர்ந்து குட்டியுடன் 2 காட்டுயானைகளும் வனப்பகுதிக்குள் சென்றன. இந்த நெகிழ்ச்சி காட்சியை தங்களது செல்போனில் வீடியோ எடுத்த லாரி டிரைவர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டனர். தற்போது அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. காட்டுயானைகள் மலைப்பாதையை கடந்த சென்றதும், டிரைவர்கள் தங்களது லாரிகளை இயக்கி சென்றனர்.      https://www.maalaimalar.com/news/topnews/2020/07/04180306/1671748/mother-elephant-who-trained-her-to-cross-the-barricade.vpf
  • அயிகிரி நந்தினி நந்தித மேதினி விச்வ வினோதினி நந்தநுதே கிரிவர விந்த்ய சிரோதி நிவாஸினி விஷ்ணு விலாஸினி ஜிஷ்ணுநுதே பகவதி ஹே சிதிகண்ட குடும்பினி பூரிகுடும்பினி பூரிக்ருதே ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி ரம்ய கபர்தினி சைலஸுதே     2. ஸுரவர வர்ஷிணி துர்தர தர்ஷிணி துர்முக மர்ஷிணி ஹர்ஷரதே த்ரிபுவன போஷிணி சங்கர தோஷிணி கில்பிஷ மோஷிணி கோஷரதே தனுஜ நிரோஷிணி திதிஸுத ரோஷிணி துர்மத சோஷிணி ஸிந்துஸுதே ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி ரம்ய கபர்தினி சைலஸுதே   3. அயி ஜகதம்ப மதம்ப கதம்பவன ப்ரிய வாஸினி ஹாஸரதே சிகரி சிரோமணி துங்க ஹிமாலய ச்ருங்க நிஜாலய மத்யகதே மதுமதுரே மதுகைடப கஞ்ஜினி கைடப பஞ்ஜினி ராஸரதே ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி ரம்ய கபர்தினி சைலஸுதே   4. அயி சதகண்ட விகண்டித ருண்ட விதுண்டித சுண்ட கஜாதிபதே ரிபுகஜ கண்ட விதாரண சண்ட பராக்ரம சுண்ட ம்ருகாதிபதே நிஜபுஜ தண்ட நிபாதித கண்ட விபாதித முண்ட பதாதிபதே ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி ரம்ய கபர்தினி சைலஸுதே   5. அயிரண துர்மத சத்ரு வதோதித துர்தர நிர்ஜர சக்தி ப்ருதே சதுர விசார துரீண மஹாசிவ தூதக்ருத ப்ரமதாதிபதே துரித துரீஹ துராசய துர்மதி தானவ தூத க்ருதாந்தமதே ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி ரம்ய கபர்தினி சைலஸுதே   6. அயி சரணாகத வைரிவ தூவர வீர வராபய தாயகரே த்ரிபுவன மஸ்தக சூலவிரோதி சிரோதி க்ருதாமல சூலகரே துமிதுமி தாமர துந்துபி நாத மஹோ முகரீக்ருத திங்மகரே ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி ரம்ய கபர்தினி சைலஸுதே   7. அயி நிஜஹுங்க்ருதி மாத்ர நிராக்ருத தூம்ர விலோசன தூம்ரசதே ஸமரவிசோஷித சோணிதபீஜ ஸமுத்பவ சோணித பீஜலதே சிவசிவ சும்ப நிசும்ப மஹாஹவ தர்ப்பித பூத பிசாசரதே ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி ரம்ய கபர்தினி சைலஸுதே     8. தனுரனு ஸங்க ரணக்ஷண ஸங்க பரிஸ்ஃபுர தங்க நடத்கடகே கனக பிசங்க ப்ரிஷத்க நிஷங்க ரஸத்பட ச்ருங்க ஹதாபடுகே க்ருத சதுரங்க பலக்ஷிதிரங்க கடத்பஹுரங்க ரடத்படுகே ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி ரம்ய கபர்தினி சைலஸுதே   9. ஜய ஜய ஜப்ய ஜயே ஜய சப்த பரஸ்துதி தத்பர விச்வ நுதே ஜணஜண ஜிஞ்ஜிமி ஜிங்க்ருத நூபுர ஸிஞ்ஜித மோஹித பூதபதே நடித நடார்த்த நடீ நட நாயக நாடித நாட்ய ஸுகான ரதே ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி ரம்ய கபர்தினி சைலஸுதே   10. அயி ஸுமன: ஸுமன: ஸுமன: ஸுமன: ஸுமனோஹர காந்தியுதே ச்ரித ரஜனீ ரஜனீ ரஜனீ ரஜனீ ரஜனீகர வக்த்ர வ்ருதே ஸுநயன விப்ரமர ப்ரமர ப்ரமர ப்ரமர ப்ரமரா திபதே ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி ரம்ய கபர்தினி சைலஸுதே   11. ஸஹித மஹாஹவ மல்ல மதல்லிக மல்லி தரல்லக மல்லரதே விரசித வல்லிக பல்லி கமல்லிக ஜில்லிக பில்லிக வர்கவ்ருதே சிதக்ருத ஃபுல்லஸ முல்லஸி தாருண தல்லஜ பல்லவ ஸல்லலிதே ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி ரம்ய கபர்தினி சைலஸுதே   12. அவிரலகண்ட கலன்மத மேதுர மத்த மதங்கஜ ராஜபதே த்ரிபுவன பூஷண பூதகலாநிதி ரூப பயோநிதி ராஜஸுதே அயிஸுத தீஜன லாலஸ மானஸ மோஹன மன்மத ராஜஸுதே ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி ரம்ய கபர்தினி சைலஸுதே   13. கமல தலாமல கோமல காந்தி கலா கலிதாமல பாலலதே ஸகல விலாஸ கலாநிலய க்ரம கேலிசலத்கல ஹம்சகுலே அலிகுல சங்குல குவலய மண்டல மௌலிமிலத் பகுலாலிகுலே ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி ரம்ய கபர்தினி சைலஸுதே   14. கர முரலீரவ வீஜித கூஜித லஜ்ஜித கோகில மஞ்ஜுமதே மிலித புலிண்ட மனோஹர குஞ்ஜித ரஞ்சித சைல நிகுஞ்ஜகதே நிஜகுணபூத மஹா சபரீகண ஸத்குண ஸம்ப்ருத கேலிதலே ஜய ஜய ஹே மஹிஷாசுர மர்தினி ரம்யக பர்தினி சைலஸுதே   15. கடிதடபீத துகூல விசித்ர மயூக திரஸ்க்ருத சந்த்ரருசே ப்ரணத ஸுராஸுர மௌலி மணிஸ்ஃபுர தன்சுல ஸன்னக சந்த்ரருசே ஜிதகனகாசல மௌலி பதோர்ஜித நிர்பர குஞ்ஜர கும்பகுசே ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி ரம்ய கபர்தினி சைலஸுதே     16. விஜித ஸஹஸ்ர கரைக ஸஹஸ்ர கரைக ஸஹஸ்ர கரைகநுதே க்ருத ஸுர தாரக ஸங்கர தாரக ஸங்கர தாரக ஸூனுஸுதே ஸுரத சமாதி ஸமான ஸமாதி ஸமாதி ஸமாதி ஸுஜாதரதே ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி ரம்ய கபர்தினி சைலஸுதே   17. பதகமலம் கருணா நிலயே வரிவஸ்யதியோ ஸ்னுதினம் ஸுசிவே அயி கமலே கமலா நிலயே கமலா நிலய ஸகதம் நபவேத் தவ பதமேவ பரம்பதமித் யனு சீலயதோ மமகிம் ந சிவே ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி ரம்ய கபர்தினி சைலஸுதே   18. கனகல ஸத்கல ஸிந்துஜலைரனு ஸிஞ்சிநுதே குண ரங்கபுவம் பஜதி ஸகிம் நசசீ குசகும்ப தடீ பரிரம்ப ஸுகானுபவம் தவ சரணம் சரணம் கரவாணி நதாமரவாணி நிவாஸிசிவம் ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி ரம்ய கபர்தினி சைலஸுதே   19. தவ விமலேந்து குலம் வதனேந்துமலம் ஸகலம் நனு கூலயதே கிமு புரஹூத புரீந்துமுகீ ஸுமுகீபிரஸெள விமுகீ க்ரியதே மமது மதம் சிவநாமதனே பவதீ க்ருபயா கிமுத க்ரியதே ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி ரம்ய கபர்தினி சைலஸுதே   20. அயி மயி தீனதயாலு தயா க்ருபயைவ த்வயா பவித்வயமுமே அயி ஜகதோ ஜனனீ க்ருபயாஸி யதாஸி ததாஸனு மிதாஸிரதே யதுசித மத்ர பவத்யுரரீ குருதா துருதா பமபாகுருதே ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி ரம்ய கபர்தினி சைலஸுதே  
  • தூய தமிழாகத் தெரியவில்லையோ தோழர்