nochchi

நாம் ஊமையாக இருக்கும்வரை உலகம் செவிடாகவே இருக்கும்.

Recommended Posts

நாம் ஊமையாக இருக்கும்வரை உலகம் செவிடாகவே இருக்கும்.

 
 
img_5015.jpg?resize=696%2C522&ssl=1

வாழ்க்கையில் ஒரு புத்தகத்தைக்கூட வாசிக்காதவன் எல்லாம் யாழ் நூல் நிலையம் எரித்ததை நினைவு கூர்கிறான் என ஒருவர் கிண்டலாக எழுதியிருந்தார்.

என்னடா இது? இந்த மகிந்த ராஜபக்சாவின் விசுவாசிக்கு ஏன் இத்தனை எரிச்சல் ஏற்படுகிறது என்று கொஞ்சம் விசாரித்து பார்த்தேன்.

1981ம் ஆண்டு எரிக்கப்பட்டதை இப்பவும் தமிழர்கள் நினைவு கூர்கிறார்களே என்பதைவிட இம்முறை வழக்கத்தைவிட அதிகளவில் நினைவு கூர்கிறார்களே என்ற எரிச்சல் அது என்பதை புரிந்து கொண்டேன்.

ஆம். உண்மைதான். இந்த கொரோனா நெருக்கடிகளுக்கு மத்தியிலும் குறிப்பாக புலம்பெயர்ந்த தமிழர்கள் பல்வேறு வடிவங்களில் நினைவு கூர்ந்துள்ளார்கள்.

அதுவும் ஜெர்மனியில் யூதர்களின் நூல்கள் எரிக்கப்பட்ட அதே சதுக்கத்தில் யாழ் நூல் நிலையம் எரிக்கப்பட்டதை தமிழர்கள் நினைவு கூர்ந்துள்ளனர்.

இங்கு ஆச்சரியம் என்னவெனில் இந்த நிகழ்வில் அதிகளவு அடுத்த சந்ததியினரான இளையவர்கள் பங்கு பற்றியுள்ளனர்.

எந்த சந்ததி தமிழை மறந்துவிடும் என்றார்களோ, எந்த சந்ததி தமது வேர்களை தேடமாட்டார்கள் என்று கூறினார்களோ அந்த சந்ததி பங்குபற்றியிருக்கிறது.

இந்த அடுத்த சந்ததியினர் தாம் வாழும் நாடுகளில் உள்ள மக்கள் என்ன மொழி பேசுகிறார்களோ அந்த மொழியில் தமக்குரிய நீதியை கோருகிறார்கள்.

எனவே இனி உலகம் செவிடாக இருக்க முடியாது. ஏனெனில் எமது அடுத்த சந்ததி பேச ஆரம்பித்து விட்டார்கள்.

மிக விரைவில் எமக்குரிய பதில் கிடைக்கும் என்ற நம்பிக்கை உருவாகிறது.

இதனால்தான் இலங்கை இந்திய அரசுகளின் விசுவாசிகளுக்கு எரிச்சல் ஏற்படுகிறது.https://orupaper.com/jpl-memorial/

Share this post


Link to post
Share on other sites

நொச்சி ஜ‌யா இந்த‌ ச‌ம்ப‌வ‌ம் ந‌ட‌க்கும் போது நான் பிற‌க்க‌ வில்லை , 

ஆசியாவில் பெரிய‌ நூல‌க‌ம் என்று கேள்வி ப‌ட்ட‌ன் , 

கொஞ்ச‌ வ‌ருட‌த்துக்கு முத‌ல் சிங்க‌ள‌ புத்த‌ பிக்கு நூல‌க‌ எரிப்புக்கு ம‌ன்னிப்பு கேட்ட‌தாய் வாசித்தேன் ,

சின்ன‌னில் ப‌டிக்க‌ ஆசை போர் சூழ‌லில் ப‌ல‌ரின் ப‌டிப்பு மிக‌வும் பாதிக்க‌ ப‌ட்ட‌து , ப‌லாளியில் இருந்து ஒரு செல் அடிச்சா ஏழாலை பாட‌சாலை உட‌ன‌ மூட‌ப் ப‌டும் , ந‌ம்ம‌ ஊர் பாட‌சாலை சொர்க்க‌ம் , ஆனால் அதில் ஒழுங்காய் ப‌டிக்க‌ குடுத்துவைக்க‌ல‌ 😓 அது தான் என் த‌மிழ் எழுத்து சொத்திக்கும் பித்திக்கும் 😓

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)
52 minutes ago, பையன்26 said:

நொச்சி ஜ‌யா இந்த‌ ச‌ம்ப‌வ‌ம் ந‌ட‌க்கும் போது நான் பிற‌க்க‌ வில்லை , 

ஆசியாவில் பெரிய‌ நூல‌க‌ம் என்று கேள்வி ப‌ட்ட‌ன் , 

கொஞ்ச‌ வ‌ருட‌த்துக்கு முத‌ல் சிங்க‌ள‌ புத்த‌ பிக்கு நூல‌க‌ எரிப்புக்கு ம‌ன்னிப்பு கேட்ட‌தாய் வாசித்தேன் ,

சின்ன‌னில் ப‌டிக்க‌ ஆசை போர் சூழ‌லில் ப‌ல‌ரின் ப‌டிப்பு மிக‌வும் பாதிக்க‌ ப‌ட்ட‌து , ப‌லாளியில் இருந்து ஒரு செல் அடிச்சா ஏழாலை பாட‌சாலை உட‌ன‌ மூட‌ப் ப‌டும் , ந‌ம்ம‌ ஊர் பாட‌சாலை சொர்க்க‌ம் , ஆனால் அதில் ஒழுங்காய் ப‌டிக்க‌ குடுத்துவைக்க‌ல‌ 😓 அது தான் என் த‌மிழ் எழுத்து சொத்திக்கும் பித்திக்கும் 😓

கொடிய இனவழிப்புப் போர் கரணியமாக  உங்களைப்போன்று பாடசாலைக் கல்வியை சரியானமுறையிற் பெறமுடியாதவர்களும் இழந்தவர்களும் எனப்பலர்  உள்ளனர் என்பது வருத்தத்திற்குரிய விடயம்.  இந்த நினைவு நிகழ்வு பேர்லினில் நடைபெற்றபோதும் பெரிய அளவில் தமிழ் ஊடகங்களாற்கூடக் கவனிக்கப்படாத செய்தியாக  உள்ளது. ஒருபேப்பர் மற்றும் குறியீடு ஆகிய தளங்களில் மட்டுமே இந்தச் செய்தி பதிவாகியுள்ளது.  உண்மையில் ஆண்டுதோறும் இந்தநாளைப் பெரியளவில் நினைவுகூருதல் அவசியமானது.  

எமது அடுத்ததலைமுறைக்கு இந்த விடயம் கடத்தப்பட்டாக வேண்டும் என்பது தேசியம் சார்ந்த செயற்பாட்டாளர்களின் எண்ணத்தின் 
வெளிப்பாடாக இளையவர்களையும் இணைத்துக்கொண்டு இந்த விடயத்தைச் செய்துள்ளார்கள். 

நீங்கள் யாழ்நூலகம் தொடர்பான வரலாற்றுத் தரவுகள் இணையத்தில் இருக்கிறது . யாழிணையத்திலும் இந்த ஆண்டு நினைவுப்பகிர்வு தொடர்பான திரியில் உள்ளது. 

 

Edited by nochchi

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


  • Topics

  • Posts

    • அடுத்த வீட்டுக்குள்... நடப்பதை, எட்டிப்  பார்க்கும் பழக்கம் எல்லா இடமும் இருக்குது போலை...
    • இனவாத சிந்தனையுடைய வேட்பாளர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும்- சுமனரட்ன தேரர் இனவாத சிந்தனையுடன் களமிறங்கியுள்ள வேட்பாளர்களை இனங்கண்டு, மக்கள் புறக்கணிக்க வேண்டும் என மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரட்ன தேரர் வலியுறுத்தியுள்ளார். மட்டக்களப்பில் இடம்பெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடக சந்திப்பில் அம்பிட்டிய சுமனரட்ன தேரர்  மேலும் தெரிவித்துள்ளதாவது, “மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் இன்றும் வறுமைக் கோட்டுக்கு கீழ்தான் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களின் வாழ்வாதாரம் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. குடிக்க நீர் கூட இல்லாமல் சில குடும்பங்கள் காணப்படுகின்றன. எனினும், இதுதொடர்பாக எல்லாம் அக்கரைக் கொள்ளாமல் இருக்கும் அரசியல்வாதிகள், இனவாதத்தையும் மதவாதத்தையுமே மக்கள் மனங்களில் விதைத்து வருகிறார்கள். இவ்வாறான செயற்பாடுகளால் எந்தக் காலத்திலும் மக்களின் உரிமையை வென்றெடுக்க முடியாது. இனவாதத்தை தோற்றுவிக்கும் முகமாக பிரபாகரனை காட்டி வாக்குகேட்டு நாடாளுமன்றம் சென்ற உறுப்பினர்கள், மக்களுக்காக செய்தது என்ன என்று கேட்க விரும்புகிறேன். வடக்கின் முன்னாள் முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன், ஒரு நேரத்தில் தன்னை ஜனநாயகவாதியாகும் இன்னொரு நேரத்தில் தன்னை ஒரு அடிப்படைவாதியாகவும் தான் காண்பிக்கிறார். இவ்வாறானவர்கள் நாடாளுமன்றம் சென்று மக்களின் உரிமையை எவ்வாறு பெற்றுக் கொடுப்பார்கள். இதனை மக்கள் சிந்திக்க வேண்டும். எனவே இத்தகைய அரசியல்வாதிகளை இனங்கண்டு மக்கள் புறக்கணிக்க வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/இனவாத-சிந்தனையுடைய-வேட்ப/
    • பின்னாலை வந்து மோடி நின்றது எதற்காக அதையும் விபரமா சொன்னாதானே எங்களுக்கும் புரியும். மோடி வந்து திடிதிப்பென்று இண்டைக்கே உங்கட பின்னாலை நிக்கிறார். தேர்தல் பிரசாரத்திலை போய் இப்படி சொல்லி வாக்கு கேட்கவேணும் என்பதற்காக இதுவரையும் சொல்லாமை இப்பதான் சொல்றிங்கள். மோடி வந்து நிண்டதுதான் நிண்டுட்டார் கொஞ்சம் விடுங்கோ நிண்டிட்டு போகட்டும். இதை கேள்விப்பட்டா தங்களுக்குபின்னாலை சீனாவின் அரச தலைவர் சி ஜிப்பிங் நிக்கிரார் என்றெல்லொ  ராஜபக்ச கோஷ்டி சொல்லபோகுது. இந்தியாவிட்டை இல்லாத வீட்டோ உரிமையும் சீனாவுக்கு இருக்குதெல்லோ. சம்பந்தன் ஐயா உங்கடை திருகு தாளத்தும் ஒரு அளவு வேணும்.