Jump to content

எடுக்கவோ ...... கோர்க்கவோ.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

20200603-210213-1.jpg

 

                          எடுக்கவோ.....கோர்க்கவோ.

 

அரவக்கொடியோனின் அரண்மனைதனில் 

            பரவித் தொடுத்த முத்தாடை அணிந்து 

இரவியின் பெயருடை பானுமதியாள் 

           புரவித் தேருடை  மன்னனுடன் 

கரத்தில் தாயக் கட்டைகளோடு 

           உருட்டி ஆடுகின்றாள் சதுரங்கம்.

 

அங்கதேசத்து மன்னனாம் கர்ணன் 

           தங்கக் கவச  குண்டலத்துடன் பிறந்தோன் 

இங்கு மாமன்னன் துரியனைக் காணவந்தவன் 

            தங்கையனைய  மங்கை வேண்ட  ---   சதுர் 

அங்கம் ஆட  மஞ்சத்தில்  எழுந்தருளி  

             சிங்கம் போலவும்  வீற்றிருந்தனன்.

 

ஆட்ட  சுவாரசியத்தில் மலர்ந்திருந்தவள் 

              இட்ட  இலக்கங்கள் இல்லாமலாகி 

வாட்டமுடன் கட்டைகளை காளையிடம் தர ---  அவன் 

              கேட்ட  தானங்கள் கேட்டபடியே 

போட்டதுமே  வாய்த்தது  தானம் தருவோனுக்கு 

            நாட்டமுடன்  அவனும்  நயமுடன் ஆடினன்.

 

அன்னவனும் முறுவலுடன் காய்களை நகர்த்த ---  அவள் 

            மன்னவனும் அப்போதங்கே முன்னே தோன்றினன் 

இன்னவனும் பின்னேவந்த  மன்னவனைக் கண்டிலன் 

             வண்ணமகளும் உடனே வாரிச்சுருட்டி  எழுகையில் 

பின்னை இவள் தோற்றாளென கர்ணனும் எண்ணி  

               எண்ணியபடியே  சேலைத்தலைப்பையும் பற்றினன்.

 

கெத்தாகக் கைப்பிடித்த வேளை  முந்தானையில் 

               முத்துக்கள் அறுந்து சிதறித் தெறித்தோட  

கொத்தான தனபாரங்கள் சற்றே  தளர்ந்திட 

               சித்தினிப் பெண்ணே "நில் எங்கே ஓடுகின்றாய்" 

சத்தமுடன் வினவுகின்றான் குந்தியின் மைந்தன் --- சிதறிய 

               நித்திலங்களை எடுக்கவோ கோர்க்கவோ என்றனன் துரியன்.

 

குரல்வந்த திசையில்  அஸ்தினாபுரத்து வேந்தனும் 

               விரல் நடுக்கம் மேலிட அங்கதேசத்து அரசனும்  --- தாழ்ந்த 

சிரத்துடன் சிற்றிடையாளும் சிலையென  நிலைகுலைந்து 

               மரத்த மனத்துடன் மறுபுறம்  ஒதுங்கிநிற்க  

பெருத்த மனமுடையோன் முத்துக்கள் எடுக்க --- நாடு 

                இரந்த வள்ளல் வந்தவன் பாதம் தழுவினன்.

 

முத்துக்கள் பொறுக்க வெறுங்கரங்கள் போதும் 

முத்துக்கள் கோர்க்க நிதானமும் பொறுமையும் வேண்டும் --- விழி 

முத்துக்கள் சொரிய இருவரும் வர  மூவரும் --- இதழ் 

முத்துக்கள் சிதற சிரித்திடும் போதினிலே 

முத்துக்கள் போல பத்தினியும் நட்பும் கொண்டவன் 

முத்துக்கள் கோர்க்க முன்வருதல் தெய்வீகம்.......!

 

ஆக்கம் : சுவி .....!

ஓவியம் : கவி அருணாசலம்......!

 

                

 

 

 

            

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

(கவி அருணாசலத்தின் படத்துக்காக எழுதிய கவிதை).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சினிமா படத்தில் வந்த காட்சி நினைவுக்கு வந்த படியால் கவிதையை வாசித்தேன் ....உங்கள் தமிழுக்கு ஒரு சலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, suvy said:

முத்துக்கள் பொறுக்க வெறுங்கரங்கள் போதும் 

முத்துக்கள் கோர்க்க நிதானமும் பொறுமையும் வேண்டும் --- விழி 

முத்துக்கள் சொரிய இருவரும் வர  மூவரும் --- இதழ் 

முத்துக்கள் சிதற சிரித்திடும் போதினிலே 

முத்துக்கள் போல பத்தினியும் நட்பும் கொண்டவன் 

முத்துக்கள் கோர்க்க முன்வருதல் தெய்வீகம்.......!

 

 தமிழை எடுத்ததும் கோர்த்ததும் முத்து மாலையின் அழகு தான் அருமை சுவி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/6/2020 at 09:39, putthan said:

சினிமா படத்தில் வந்த காட்சி நினைவுக்கு வந்த படியால் கவிதையை வாசித்தேன் ....உங்கள் தமிழுக்கு ஒரு சலாம்

 

On 4/6/2020 at 10:17, uthayakumar said:

 தமிழை எடுத்ததும் கோர்த்ததும் முத்து மாலையின் அழகு தான் அருமை சுவி 

வருகைக்கும் பதிவுக்கும் மிக்க நன்றி புத்ஸ் & உதயகுமார்......!   🌹

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கு.சா.....!  🌹

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை நன்று👍🏾

கர்ணன் படத்தில் வந்த காட்சியை கவிதை நினைவுபடுத்தியது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எடுக்கவா .. கோர்க்கவா..? 

Edukk.jpg வாழ்த்துக்கள் தோழர்..💐

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 7/6/2020 at 09:54, கிருபன் said:

கவிதை நன்று👍🏾

கர்ணன் படத்தில் வந்த காட்சியை கவிதை நினைவுபடுத்தியது.

 

On 7/6/2020 at 09:56, புரட்சிகர தமிழ்தேசியன் said:

எடுக்கவா .. கோர்க்கவா..? 

Edukk.jpg வாழ்த்துக்கள் தோழர்..💐

நன்றி கிருபன் & புரட்சி ....!

வருகைக்கும் கருத்துக்களுக்கும் மற்றும் இட்ட  புள்ளிகளுக்கும் நன்றிகள்......!  🌹

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான கவிதை, தமிழ் சொற்களை முத்துக்களாக கோர்த்துவிட்டீர்கள் சுவி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மென்மேலும் தமிழ் முத்துக்களைக் கோர்த்து கவி மாலையாக்கி தாருங்கள் உங்கள் அழகு தமிழ் அருந்தி மகிழ ஆவலாய் உள்ளோம்.

Link to comment
Share on other sites

  • 3 months later...

சுவி அண்ணா, இன்று தான் உங்கள் 'முத்தான' கவிதையைப் படித்தேன்.

கவிஞரின் ஓவியத்துக்குச் சுவியரின் கவிதை இனிமை!

பாரதியின் பாஞ்சாலி சபதம் போல நீங்களும் பழைய காவியங்களின் ஒரு பகுதியைக் கவிதைகளாக வடித்து வெளியிடலாமே! அவ்வளவு ஆற்றல் உங்களுக்குள் கொட்டிக்கிடக்குது! 

கவி அருணாசலம் அண்ணாவின் ஓவியமும் அருமை. இருவருக்கும் வாழ்த்துக்கள். 😊

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.