Jump to content

இந்தியாவிடமிருந்து விலகிச் செல்கிறதா நேபாளம்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவிடமிருந்து விலகிச் செல்கிறதா நேபாளம்?

nepal-vs-india  

சுஹாஸினி ஹைதர்

நேபாளத்தின் அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம்செய்யும் முடிவில் இருக்கிறார் அந்நாட்டின் பிரதமர் கே.பி.ஷர்மா ஒலீ; இந்தத் திருத்தத்தின்படி, எல்லைத் தாவாவில் இருக்கும் இந்தியப் பகுதிகளையும் உள்ளடக்கும்படி நேபாளத்தின் அதிகாரபூர்வ வரைபடத்தில் மாற்றம் செய்யப்படவிருக்கிறது. இதனால், நேபாளத்தின் தெற்குப் பகுதியில் உள்ளவர்கள் பயந்தது மாதிரியே நடந்துவிடும்போல் இருக்கிறது.

சில ஆண்டுகளாகவே ஒலீயின் தேசிய அரசியல் நேபாளத்தை இந்திய எதிர்ப்பு நிலைப்பாட்டுக்குத் தள்ளிவிடும் என்று அவர்கள் அச்சப்பட்டார்கள். லிம்பியதுரா, லிபுலேக், காலாபாணி ஆகிய பகுதிகளை மீட்பதற்கான அறைகூவலாகட்டும், சீனாவிலிருந்து வந்த வைரஸைவிட ‘இந்திய வைரஸ்’, ‘அதிக அளவில் கொல்லும் திறன்’ படைத்தது என்றதாகட்டும், இந்தியாவின் அசோகச் சக்கரத்தில் உள்ள சிங்கங்களை மேலாதிக்கத்தின் குறியீடுகள் என்று கூறியதாகட்டும் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஒலீயின் கூற்றுகள் இந்தியாவில் உள்ள பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கின (நேபாள நாடாளுமன்றத்தில் ‘சத்யமேவ ஜயதே’ என்பதற்குப் பதிலாக ‘சிங்கம் ஜயதே’ என்று ஒலீ குறிப்பிட்டார்). மற்றவர்களைப் பொறுத்தவரை, மோடி அரசாங்கம் நல்லுறவு கொள்ள முடியாதவர் ஒலீ என்ற எண்ணம் வலுப்பட்டிருக்கிறது.

இந்திய எதிர்ப்பு நிலைப்பாடு

இதில் முரண்நகை என்னவென்றால், கடந்த ஐந்து ஆண்டுகளாகத்தான் ஒலீ இந்திய எதிர்ப்பு நிலைப்பாடு எடுத்துவருகிறார் என்கிறார்கள் வெளியுறவுத் துறை அதிகாரிகள். “2015-க்கு முன்பு இந்தியாவுடனான உறவை வலுப்படுத்துவதற்கு எந்த நேபாள அரசியல்வாதி தொடர்ந்து பாடுபட்டுவந்தார் என்ற கேள்விக்கு, கே.பி.ஷர்மா ஒலீ என்பதுதான் பதிலாக இருக்கும்” என்கிறார் நேபாளத்துக்கான முன்னாள் இந்தியத் தூதர் ராகேஷ் சூட். எடுத்துக்காட்டாக, மஹாகாளி நதிநீர்ப் பங்கீட்டு விவகாரத்தில், நேபாள-இந்திய ஒப்பந்தத்தை ஆதரிப்பதற்காக நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் ஒருங்கிணைந்த மாவோயிஸ்ட்-லெனினிஸ்ட் (சிபிஎன்-யூஎம்எல்) பிரிவை இரண்டாக உடைத்தார். ஒலீ நேபாளத்தின் உள்துறை அமைச்சராக இருந்தபோது, இந்தியாவிலிருந்து தப்பி நேபாளத்தில் தஞ்சம் புகுந்த தேடப்படும் குற்றவாளிகளை இந்தியாவுக்கே அனுப்புவதற்கு அவர் எந்த அளவுக்கு ஒத்துழைத்தார் என்பதைத் தூதரக அதிகாரிகள் நினைவுகூருவார்கள். நேபாளத்தின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களிடையே பிளவு ஏற்பட்ட பிற்காலத்தில்கூட அங்குள்ள வெவ்வேறு அரசியலர்களுக்கு இந்தியா அளித்துவரும் ஆதரவு குறித்து இந்தியாவை நேபாளமும் நேபாளத்தை இந்தியாவும் மாறிமாறிக் குற்றஞ்சாட்டிய நிலையிலும் ஒலீ இந்திய எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுக்காமல்தான் இருந்தார்; மேலும், அடிக்கடி இந்தியாவுக்கு வருகையும் தந்தார்.

“அந்த நிலைப்பாடு 2015-ல் மாறியது” என்று நேபாள அரசமைப்புச் சட்டம் அமல்படுத்தப்படுவதற்குக் காரணமாக இருந்த நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டி சூட் கூறுகிறார். நேபாள அரசமைப்புச் சட்டம் தெற்கில் வாழும் மாதேசிகளுக்குப் பாரபட்சமாக இருப்பதாகவும், நேபாளத்தில் தனது நலன்களை அது பிரதிபலிக்கவில்லை என்றும் இந்தியா உணர்ந்தது. அரசமைப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டதில் ஒலீக்கும் முக்கியப் பங்கு இருக்கிறது. அரசமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டதும் நேபாளி காங்கிரஸ் தலைவர் சுஷில் கொய்ராலாவுக்குப் பதிலாகத் தன்னைப் பிரதமராக்கினால் அரசமைப்புச் சட்டத்தைத் தான் ஆதரிப்பதாக ஒரு பேரத்தில் ஒலீ ஈடுபட்டார். கடைசி நேரத்தில், ஒலீயை நாடாளுமன்றத் தேர்தலில் சந்திப்பதாக கொய்ராலா முடிவெடுத்தார். இந்த முடிவுக்குப் பின்னால், இந்தியா இருந்ததாகப் பலரும் நம்பினார்கள். 2015 அக்டோபரில் நடந்த தேர்தலில் கொய்ராலாவை ஒலீ தோற்கடித்தார். எனினும், புதுடெல்லியிலிருந்து மற்றுமொரு சவால் அவருக்குக் காத்திருந்தது. நிலத்தால் சூழப்பட்டிருக்கும் நேபாளத்துக்குப் பொருட்கள் கொண்டுவரப்படும் இந்திய-நேபாள எல்லை பல மாதங்கள் மூடப்பட்டன. மிக மோசமான நிலநடுக்கத்தை நேபாளம் எதிர்கொண்ட சில மாதங்களில் இந்திய-நேபாள எல்லை மூடப்பட்டது புதிய பிரதமருக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது.

“அப்போதுதான் ஒலீக்கு ஆதரவாக சீனா களமிறங்கியது” என்கிறார் நேபாள எழுத்தாளர் சுஜீவ் சாக்கியா. அவர் சுட்டிக்காட்டுவது, எட்டு முனை போக்குவரத்து தொடர்பாக 2016-ல் நேபாளம் செய்துகொண்ட ஒப்பந்தத்தை. இந்த ஒப்பந்தம் முதன்முறையாக சீனாவில் இருக்கும் சரக்கு முனையங்களுக்கும் ரயில்வழிப் பாதைகளுக்கும் நேபாளத்துக்கு இணைப்பை வழங்கியது. இந்த ஒப்பந்தம் இந்தியாவின் அச்சத்தைப் போக்கவில்லை; ஏற்கெனவே சீனாவின் ‘பெல்ட் அண்டு ரோடு இனிஷியேட்டிவ்’ (BRI) குறித்து இந்தியா சந்தேகத்தை வெளிப்படுத்தியிருந்த நிலையில், அடுத்த நான்கு மாதங்களுக்குள் ஒலீ மற்றுமொரு சவாலைச் சந்தித்தார். நேபாளத்தின் முன்னாள் பிரதமர் பிரசந்தா, ஒலீ அரசுக்குக் கொடுத்துவந்த ஆதரவை விலக்கிக்கொண்டார். இதற்கு புதுடெல்லிதான் காரணம் என்று ஒலீ குற்றஞ்சாட்டினார். ஓராண்டு கழித்து செயலூக்கத்துடன் திரும்பவும் களமிறங்கினார் ஒலீ. இம்முறை தன்னோடு தயாள், மாதவ் நேபாள், ஜலனாத் கானல், பாம்தேவ் கௌதம் உள்ளிட்ட எல்லா மூத்த தலைவர்களையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த கம்யூனிஸ்ட் கட்சியுடன் களமிறங்கினார். 2017 டிசம்பரில் நடைபெற்ற தேர்தலில், இந்திய எதிர்ப்பை மையப்பொருளாகக் கொண்டு மூன்றில் இரண்டு பங்கு அளவு தொகுதிகளில் வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியைத் தனது புதிய கட்சியைப் பெறச்செய்தார்.

புதிய வரைபடம்

எதிர்க்கட்சி சக்தியிழந்துபோனது; மாதேசி செயல்பாட்டாளர்கள் ஒன்று ஆதரவாளர்களானார்கள், அல்லது சிறையில் அடைக்கப்பட்டனர்; ஊடகமும் அரசை விமர்சிப்பதில்லை. இப்படியே முதல் இரண்டு ஆண்டுகளை ஒலீ கடத்திவிட்டார். பிறகு, கடந்த ஆண்டு ஜம்மு-காஷ்மீரிலிருந்து லடாக்கைப் பிரிக்கும் வகையில் சட்டப்பிரிவு 370-ஐ இந்தியா நீக்கி, அரசியல்ரீதியிலான புதிய இந்திய வரைபடத்தை வெளியிட்டபோதுதான், காத்மாண்டில் போராட்டங்கள் வெடித்து, மக்களின் எதிர்ப்பை ஒலீ சந்தித்தார். அவரது அரசியல் எதிரிகள் முழங்கிய கோஷங்கள், பத்து ஆண்டுகளுக்கு முன்பு அவர் ஒரு இந்தியக் கையாள் என்று முழங்கப்பட்ட கோஷங்களை நினைவுபடுத்தின. அவரது கட்சியின் நிலைக்குழு சந்திப்பிலேயே அவர் தூக்கியெறியப்படும் சாத்தியங்கள் இருக்கும் நிலையில், ஒலீயின் குரல் உச்சஸ்தாயியை எட்டியது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

“பிரதமர் ஒலீயைப் பொறுத்தவரை தற்போது அவர் இடும் இந்தத் தேசிய முழக்கம் என்பது தனது செல்வாக்கைக் கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பு. நேபாளத்துக்கு ஜனநாயகத்தைக் கொண்டுவந்த பெருமை நேபாளி காங்கிரஸையே சேரும்; அரசாட்சியை அகற்றிய பெருமை பிரசந்தாவையே சேரும்” என்கிறார் நேபாளத்துக்கான முன்னாள் தூதர் மஞ்சீவ் சிங் பூரி.

ஒலீ மீதான நிலைப்பாட்டை இந்தியாவும் கடுமையாக்கியுள்ளது. காலாபாணி, சுஸ்டா விவகாரங்கள் தொடர்பாக வெளியுறவுச் செயலர்கள் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று 2014-ல் மோடி ஒப்புக்கொண்டிருந்தாலும் இந்த விவகாரங்கள் குறித்து, ஆறு ஆண்டுகளாக எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. எல்லைப் பிரச்சினைகள் குறித்துச் சில தீர்வுகளைப் பரிந்துரைக்கும் ஒரு ‘எமினெண்ட் பெர்ஸன்ஸ் குரூப்’பின் அறிக்கையை வெளியிடும்படி ஒலீ விடுத்த கோரிக்கையையும் இந்திய அரசாங்கம் மறுத்துவிட்டது. கடந்த டிசம்பரில் ஒலீயின் பிரதிநிதிகள் இந்தியாவுக்கு வருகைதரவிருந்தார்கள். அந்த வருகையை இந்தியா ரத்துசெய்துவிட்டது. டெல்லியில் இருக்கும் இந்தியாவுக்கான நேபாளத் தூதர் இந்திய வெளியுறவுத் துறை சந்திப்பை நிகழ்த்த வேண்டும் என்று தொடர்ச்சியாகக் கேட்டுக்கொண்டும் அந்தச் சந்திப்பு நிகழவில்லை.

தூண்டில் வீசும் சீனா

இதற்கிடையே அமெரிக்காவும் சீனாவும் நேபாளத்தில் இருக்கும் தங்கள் தூதரகச் செயல்பாடுகளை அதிகப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். அந்த இரண்டு நாட்டின் தூதரக அதிகாரிகளும் ஒருவருக்கொருவர் போட்டியிட்டுக்கொண்டு காத்மாண்டு மக்களுடன் இரண்டறக் கலந்து, அவர்களுடன் ஆடியும் பாடியும் காணொலிகளைப் பதிவுசெய்துவருகிறார்கள். நேபாளக் கட்டமைப்புக்கு நிதியுதவி செய்வதாக ஒலீக்கு சீனா தூண்டில் வீசுகிறது; அமெரிக்க அரசின் ‘மில்லினியம் சேலன்ஞ் கார்ப்பரேஷன்’ பொருளாதார உதவிகள் என்ற வகையில், இந்திய மதிப்பில் ரூ.3,773.23 கோடியை நிதியாக வழங்கியது. அமெரிக்காவும் சீனாவும் தங்கள் திட்டங்களை நேபாளத்தில் செயல்படுத்த நினைக்கும் வேளையில், நீண்டகால தன்னாட்சியைப் பின்பற்ற தற்போது பிரதமர் ஒலீ முயன்றுகொண்டிருக்கிறார். அவர் நீட்டும் கரங்களை இந்தியா புறக்கணித்துக்கொண்டிருக்கிறது” என்கிறார் ‘காத்மாண்டு போஸ்ட்’ இதழின் அனில் கிரி. அந்த வகையில், நிலவரைபடங்கள் குறித்த ஒலீயின் சமீபத்திய நகர்வென்பது முன்கூட்டியே தெரிந்த ஒன்றுதான். இப்போது முடிவெடுக்க வேண்டியது புதுடெல்லிதான்.

© ‘தி இந்து’, தமிழில்: ஆசை

https://www.hindutamil.in/news/opinion/columns/557782-nepal-vs-india-2.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, உடையார் said:

நேபாளத்தின் அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம்செய்யும் முடிவில் இருக்கிறார் அந்நாட்டின் பிரதமர் கே.பி.ஷர்மா ஒலீ; இந்தத் திருத்தத்தின்படி, எல்லைத் தாவாவில் இருக்கும் இந்தியப் பகுதிகளையும் உள்ளடக்கும்படி நேபாளத்தின் அதிகாரபூர்வ வரைபடத்தில் மாற்றம் செய்யப்படவிருக்கிறது

அது தானே ஏற்கனவே ரா அமைப்பை வைத்து கவனிக்க வேண்டியர்களை கவனித்து அந்த திட்டத்தையே கவுத்துவிட்டோம் என்று வெளிப்படையாவே கூறிவிட்டார்களே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

அது தானே ஏற்கனவே ரா அமைப்பை வைத்து கவனிக்க வேண்டியர்களை கவனித்து அந்த திட்டத்தையே கவுத்துவிட்டோம் என்று வெளிப்படையாவே கூறிவிட்டார்களே?

ஈழப் பிரியன்...  "தமிழ் பொக்கிஷம்" கூறியதை, சொல்கிறார் போலுள்ளது. :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, தமிழ் சிறி said:

ஈழப் பிரியன்...  "தமிழ் பொக்கிஷம்" கூறியதை, சொல்கிறார் போலுள்ளது. :grin:

அவர்கள் என்ன இரகசியமாக கூறினார்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ஈழப்பிரியன் said:

அவர்கள் என்ன இரகசியமாக கூறினார்களா?

ஈழப் பிரியன்... எதற்கும் அந்தக் காணொளியை, இங்கே இணைத்து விடுங்கள்.
வாசிப்பவர்களுக்கு... தமாசாக  இருக்கும். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் காணொளியை... 7´வது  நிமிடத்தில் இருந்து பாருங்கள்.
முதலில் இருந்து பார்த்தால்... இன்னும் விசேசம். :grin:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சீமானை எதிர்ப்பவர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாகவும் சீமானை ஆதரிப்பவர்கள்  கண்மூடித்தனமாக உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு மயங்கி சீமானை ஆதரிப்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது.நாங்கள் சீமானை ஆதரிப்பதற்கு காரணம் தமிழ்த்தேசியத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் .அதை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும்.இல்லாவிட்டால் ஆரியத்தை விட திராவிடமே தற்போதைய நிலையில் தமிழ்த்தேசியத்தை அழிப்பதில் முன்நிற்கிறார்கள்.ஆரியம் வட இந்தியாவில் நிலை கொண்டிருப்பதால் அதன் ஆபத்து பெரிய அளவில் இருக்காது.ஆனால் தமிழ்நாட்டுக்குள் இருந்து கொண்டு தமிழ்ப்பற்றாளர்களாக காட்டிக்கொண்டு தமிழ்த்தேசியத்தை இல்லாதொழிப்பதற்கு திராவிடம் அயராது வேலை செய்கிறது.சீமானின் எழுச்சி அவர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.முன்பும் ஆதித்தனார் சிலம்புச்செல்வர் கிபெவிசுவநாதம் பழ நெடுமாறன் போன்றோர் தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்திருந்தாலும் அவர்கள் இயக்கமாக இயங்கினார்களே ஒழிய தேர்தல் அரசியலில் கவனத்தை பெரிய அளவில் குவிக்க வில்லை.திராவிடத்திற்கும் தமிழ்த்தேசிய இயக்கங்கள் இருப்பதில் பிரச்சினை இல்லை.அவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது தமது தேர்தல் அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலே தமிழ்த்தேசியத்தை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.
    • நல்ல கருத்து எனது  கேள்விக்கு உங்களிடமிருந்து  தான்  சரியான  பதில் வந்திருக்கிறது   ஆனால் நீங்கள்  குறிப்பிடும்  (ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள்) இவர்கள்  எத்தனை  வீதம்?? இவர்கள் 50 க்கு  அதிகமான  வீதம்இருந்தால் மகிழ்ச்சியே...  
    • இதையே தான் நானும் சுட்டிக் காட்டியிருக்கிறேன்: தமிழ் நாட்டில் தமிழின் நிலை, யூ ரியூபில் சீமான் தம்பிகளின் பிரச்சார வீடியோக்கள் பார்ப்போரைப் பொறுத்த வரையில் கீழ் நிலை  என நினைக்க வைக்கும் பிரமை நிலை. உண்மை நிலை வேறு. இதை அறிய நான் சுட்டிக் காட்டியிருக்கும் செயல் திட்டங்களை ஒரு தடவை சென்று தேடிப் பார்த்து அறிந்த பின்னர் எழுதுங்கள். மறு பக்கம், நீங்கள் மௌனமாக சீமானின் பாசாங்கைக் கடக்க முயல்வதாகத் தெரிகிறது. மொழியை வளர்ப்பதென்பது ஆட்சியில் இருக்கும் அரசின் கடமை மட்டுமல்ல, ஆட்சிக்கு வர முனையும் எதிர்கட்சியின் கடமையும் தான். தமிழுக்கு மொளகாய்ப் பொடி லேபலில் இரண்டாம் இடம் கொடுத்தமைக்குக் கொதித்த செந்தமிழன் சீமான், தானே மகனுக்கு தமிழ் மூலம் கல்வி கொடுக்கத் தயங்குவதை "தனிப் பட்ட குடும்ப விவகாரம்" என பம்முவது வேடிக்கை😂!
    • அதைத்தானே ராசா  நானும் சொன்னேன் அதே கம்பி தான்...
    • இந்தியாவுக்கு சுத‌ந்திர‌ம்  கிடைச்சு 75ஆண்டு ஆக‌ போகுது இந்தியா இதுவ‌ரை என்ன‌ முன்னேற்ற‌த்தை க‌ண்டு இருக்கு சொல்லுங்கோ நாட்டான்மை அண்ணா 😁😜............................ அமெரிக்க‌ன் ஒலிம்பிக் போட்டியில் 100ப‌த‌க்க‌ங்க‌ள் வெல்லுகின‌ம் இந்தியா வெறும‌னே ஒரு ப‌த‌க்க‌ம்............இந்திய‌ர்க‌ள் எந்த‌ விளையாட்டில் திற‌மையான‌வ‌ர்க‌ள் சொல்ல‌ப் போனால் கிரிக்கேட் விளையாட்டை த‌விற‌ வேறு விளையாட்டில் இந்திய‌ர்க‌ள் பூச்சிய‌ம்.................ஹிந்தி தினிப்ப‌தில் காட்டும் ஆர்வ‌ம்  பிள்ளைக‌ளுக்கு விளையாட்டு அக்க‌டாமி திற‌ந்து அதில் திற‌மையை காட்டும் வீர‌ர்க‌ளை புக‌ழ் பெற்ற‌ ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப‌லாமே................28கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்கின‌மாம்................யூடுப்பில் ம‌த்திய‌ அர‌சு இந்தியாவை புக‌ழ் பாட‌ சில‌ர‌  அம‌த்தி இருக்கின‌ம்.....................பெரும்பாலான‌ ப‌ண‌த்தை போர் த‌ள‌பாட‌ங்க‌ளை வேண்ட‌ ம‌ற்றும் இராணுவ‌த்துக்கே ம‌த்திய‌ அர‌சு ப‌ண‌த்தை ஒதுக்குது................ இந்தியாவே நாறி போய் கிட‌க்கு..........இந்தியா வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் எத்த‌னையாவ‌து இட‌த்தில் இருக்குது..............இந்தியா என்றாலே பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்கும் நாடு என்று தான் ஜ‌ரோப்பிய‌ர்க‌ள் சொல்லுவார்க‌ள்.................   இந்தியாவை விட‌ சின்ன‌ நாடுக‌ள் எவ‌ள‌வோ முன்னேற்ற‌ம் அடைந்து விட்டார்க‌ள்..............இந்தியா அன்று தொட்டு இப்ப‌ வ‌ரை அதே நிலை தான்.............இந்தியா 2020இல் வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ ஆகிவிடும் என்று போலி விம்ப‌த்தை க‌ட்டு அவுட்டு விட்டார்க‌ளே இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடா வ‌ந்திட்டா..............இந்திய‌ர்க‌ளுக்கு வ‌ல்ல‌ர‌சுசின் அர்த்த‌ம் தெரியாது.................இந்திய‌ர்க‌ள் ஒற்றுமை இல்லை அத‌னால் தான் சிறு முன்னேற்ற‌த்தையும் இதுவ‌ரை அடைய‌ வில்லை..............த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ள் டெல்லிக்கு போனால் டெல்லியில் அவைச்சு த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ளுக்கு ஊமை குத்து குத்தின‌ம் ..................இந்தியா ஏற்றும‌தி செய்வ‌தை விட‌ இற‌க்கு ம‌தி தான் அதிக‌ம்................டென்மார்க் சிறிய‌ நாடு டென்மார்க் காசின் பெரும‌திக்கு இந்தியாவின் ரூபாய் 11 அடி த‌ள்ளி நிக்க‌னும்   இந்தியா ஊழ‌ல் நாடு அன்டை நாடான‌ சீன‌னின் நாட்டு வ‌ள‌ர்சியை பார்த்தும் இந்திய‌ர்க‌ளுக்கு சூடு சுர‌ணை வ‌ர‌ வில்லை.............மொத்த‌த்தில் இந்தியா ஒரு குப்பை நாடு.............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளை நேரில் போய் பாருங்கோ எப்ப‌டி வைச்சு இருக்கிறாங்க‌ள் என்று..................   ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌ல் செய்வ‌தில்லை அது தான் டென்மார் நோர்வே சுவிட‌ன் பின்லாந் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் அடைந்து இருக்கு...............இந்த‌ நாளு நாட்டிலும் டென்மார்க் சிட்டிச‌ன் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் லோன் எடுக்க‌லாம்..................அப்ப‌டி ப‌ல‌ விடைய‌ங்க‌ளில் ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாடுக‌ளுக்கு உல‌க‌ அள‌வில் ந‌ல்ல‌ பெய‌ர் இருக்கு............இந்தியா  வெறும‌ன‌ குப்பை தொட்டி நாடு..............த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ஒரு விசிட் அடிக்க‌னும் ஜ‌ரோப்பாவுக்கு ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு அப்ப‌ உண‌ருவின‌ம் இந்திய‌ம் திராவிட‌ம் என்ற‌ போர்வைக்குள் இருந்து நாம் ஏமாந்து விட்டோம் என்று இதை யாரும் மூடி ம‌றைக்க‌ முடியாது இது தான் உண்மையும் கூட‌......................இந்தியாவை த‌விர்த்து விட்டு உல‌க‌ம் இய‌ங்கும் சீன‌ன் இல்லாம‌ இந்த‌ உல‌க‌ம் இய‌ங்காது.............இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ சீன‌னின் முன்னேற்ற‌ம் இந்தியாவை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம்...........நீங்க‌ள் பாவிக்கும் ஜ‌போனில் கூட‌ சீன‌னின் பொருல் இருக்கும்............இப்ப‌டி சொல்ல‌ நிறைய‌ இருக்கு..............................................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.