Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

பிள்ளையை தத்தெடுத்தல்

Recommended Posts

மகளின் ஓவியம் அருமை, உடையார். அவருக்கு பாராட்டுக்கள். ஈன்ற பொழுதின் தன் மகனைச் சான்றோன் என  கேட்ட தாய் " என்ற குறளுக்கு அமைய  பெற்றோருக்கு பெருமை சேர்க்கும்  பிள்ளையை பெற்றுள்ளீர்கள்.

 • Like 2
Link to post
Share on other sites
 • Replies 53
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

பிள்ளையை தத்தெடுத்தல் நான் இங்குள்ள நிறுவனத்திற்கு வருடத்தில் இருமுறை உதவிசெய்வேன் (https://www.cbm.org.au/).    அவர்கள் அதை மூன்றாம் உலக நாடுகளில் உள்ள வறிய மக்களுக்கு உதவி செய்வார்கள், இன்

நன்றி ஈழப்பிரியன்ந நான் முன்னேற பல கடவுள்கள் உதவினார்கள் ஒருவர் அல் பலர். என்னால் இயன்றதை என் சக்திக்கு உட்பட்டு செய்கிறேன், அதையே பிள்ளைகளுக்கு பழக்குகின்றேன், பார்ப்போம்.    நன்றி சிறி,

மகளின் ஓவியம் அருமை, உடையார். அவருக்கு பாராட்டுக்கள். ஈன்ற பொழுதின் தன் மகனைச் சான்றோன் என  கேட்ட தாய் " என்ற குறளுக்கு அமைய  பெற்றோருக்கு பெருமை சேர்க்கும்  பிள்ளையை பெற்றுள்ளீர்கள்.

 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, உடையார் said:

நன்றி பையா, என்னால் முடிந்ததை செய்கிறேன், கடமைப்பட்டவன் பலருக்கு. 

பிள்ளைகளையும் பழக்கி எடுக்கனும், மற்றவர்களுக்கு உதவினால் அது ஒரு தனி மகிழ்ச்சி, அவர்களுக்கும் விருப்பம், இதுதான் முதல் தொடக்கம் 

என‌து ம‌ச்சாள் , இறுதிக‌ட்ட‌ போரில் பொற்றோர‌ இழ‌ந்த‌ பிள்ளைக‌ளை த‌த் எடுத்து வ‌ள‌க்கிரா , அந்த‌ பிள்ளைக‌ளுக்கு ம‌ச்சாள் தான் அம்மா , அன்பை காட்டி பிள்ளைக‌ளின் ம‌ன‌சில் நீங்கா இட‌ம் பிடித்து விட்டா உடையார் ஜ‌யா , 

என‌க்கும் விருப்ப‌ம் போரால் பாதிக்க‌ப் ப‌ட்ட‌ இர‌ண்டு குடும்ப‌த்துக்கு என்னால் முடிந்த‌தை உத‌வ‌னும் என்று ,
அடுத்த‌ வ‌ருட‌ம் இர‌ண்டு கும்ப‌த்துக்கும் மாத‌ம் மாத‌ம் உத‌வ‌னும் என்று முடிவு ப‌ண்ணி இருக்கிறேன் , உத‌வி போட்டு இடையில் விட்டால் உற‌வுக‌ளை பாதிக்கும் , ஒன்ன‌ செய்ய‌ தொட‌ங்கினா ஒழுங்காய் செய்ய‌னும் , 

அது என்னால் முடியும் அந்த‌ உத‌வியை  என் வாழ் நாள் பூரா செய்ய‌ முடியும்  

Edited by பையன்26
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 4/6/2020 at 02:45, உடையார் said:

பிள்ளையை தத்தெடுத்தல்

நான் இங்குள்ள நிறுவனத்திற்கு வருடத்தில் இருமுறை உதவிசெய்வேன் (https://www.cbm.org.au/).   

அவர்கள் அதை மூன்றாம் உலக நாடுகளில் உள்ள வறிய மக்களுக்கு உதவி செய்வார்கள், இன்றைக்கு எனக்கு வந்த கடிதத்தை பார்த்துவிட்டு, தான் வைத்திருந்த AUD20/- தந்தார் அவர்களுக்கு சேர்த்து அனுப்ப சொல்லி.  நான் கேட்கவில்லை, அவராக தந் து மிகவும் சந்தோஷமாக இருந்திச்சு (மூன்று பிள்ளைகளுக்கும்  உதவி செய்ய விருப்பம், ஊருக்கு போகும் போது வொள்ளவத்தை யாழ்பாணத்தில் நிற்கும் வறியவர்களுக்கு பணம் அவர்களை கொண்டுதான் கொடுப்பேன்). 

வந்த கடித்ததில் இருந்த படம் 

20200604-143654.jpg

பிறகு கேட்டார் தான் ஒரு பிள்ளையை தத்தெடுத்து படிப்பிக்கப் போகின்றேன் என்று, அந்த பிள்ளை சின்ன பிள்ளையாக இருக்கனும் என்பது அவாவின் வேண்டுகோள். அப்ப நில்மினி தந்த  மகளிர் இல்லத்தில் (https://mahalirillam.org/au/sponsorship/) ஒருவரை தேர்ந்து எடுக்க சொல்லியுள்ளேன், அவர் அவர்களை இன்று தொடர்பு கொண்டுள்ளார், பார்ப்போம்.

அவரின் கனவு ஊரில் ஒரு வைத்தியசாலை கட்டி ஏழைகளுக்கு வைத்தியம் பார்ப்பது தான். பார்ப்போம் காலம் பதில் சொல்லும்.  

மனைவியிடம் கர்நாடக சங்கீத படிக்க வந்த சின்ன பிள்ளைகளில் சிலர் மகளிடம்தான் படிக்கனுமென்று விரும்பினார்கள், அதனால் அவருக்கும் வருமானம் வருகின்றது, இப்ப ஆண்டு 11. அத்துடன் வரைதல் பாடமும் எடுக்கின்றவா சிலருக்கு,

அவர் வரைந்த படம், போனகிழமை தன் நண்பிக்கு கொடுக்க வரைந்த படத்தை, நாங்கள் சுட்டு வீட்டில் மாட்டிவிட்டோம், இப்ப வேற வரைகின்றா

20200602-085620.jpg

இந்த பதிவை படித்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். இப்படி ஒவ்வொரு குடும்பமும் தம்மால் ஏலுமானதை  மற்றவர்களுக்கு உதவும்படி செய்தால் எவ்வளவு நல்லம்? உங்கள் மகளின் painting மிகவும் அழகாக இருக்கிறது 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, nilmini said:

இந்த பதிவை படித்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். இப்படி ஒவ்வொரு குடும்பமும் தம்மால் ஏலுமானதை  மற்றவர்களுக்கு உதவும்படி செய்தால் எவ்வளவு நல்லம்? உங்கள் மகளின் painting மிகவும் அழகாக இருக்கிறது 

உண்மை தான் அக்கா , 
புல‌ம்பெய‌ர் நாட்டு உற‌வுக‌ள் ம‌ன‌ம் வ‌ந்து உத‌வினால் , த‌மிழீழ‌த்தில் எவ‌ள‌வோ ம‌க்க‌ள் நின்ம‌தியோடு வாழ்வார்க‌ள் /

எம‌க்காக‌ போராடின‌ போராளிக‌ளை இந்த‌ நிலைக்கு விட்டுட்டோமே என்று நினைத்து க‌வ‌லைப் ப‌டுவ‌துண்டு ,

அன்மையில் முக‌ நூலில் ஒரு ப‌ட‌ம் பார்த்தேன் மாவீர‌ரின் தாய் ரோட்டில் குப்பை கூட்டுவ‌த‌ , ப‌ட‌த்தை பார்க்கும் போது நான் யோசிச்ச‌து அந்த‌ தாயின் ம‌க‌ன் இருந்து இருக்க‌னும் தாயை இந்த‌ நிலையில் விட்டு இருக்க‌ மாட்டார் என்று ,

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, பையன்26 said:

உலகிலேயே அதிகம் தானம் செய்பவர்கள் அமெரிக்கர் தான். 2005 சுனாமியின்போது அமெரிக்கர்களின் டொனேஷன்தான் உலகில் உள்ள எந்த ஒரு அமைப்பிலும் பார்க்க அதிகமாக இருந்தது ( அந்த பணம் எல்லாம் அரசியல்வாதிகளின் கைக்குள் போனது வேறு கதை) 55% வீதமான அமெரிக்கர்கள் தானம் செய்கிறார்கள். இது 10 வாரங்களுக்கு முன் 63% வீதமாக இருந்தது. Global  charitable percentage 20% தான். அதிலும் எம்மக்களை பற்றி சொல்லவே தேவையில்லை. மிகக்குறைந்தவர்களே தானம் செய்கிறார்கள் . Diaspora தமிழர்கள் எல்லாம் சேர்ந்து போராளிகள் குடும்பங்களுக்கு ஒரு அமைப்பு அமைத்து உதவி செய்தால் எவ்வளவு புண்ணியம். எல்லேரும் பிஸி. மற்றவர்களை பற்றி நினைக்க நேரம் இல்லை 

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, nilmini said:

இங்கை எம்ம‌வ‌ர்க‌ளுக்குள் போட்டி என்ன‌ என்றால் , அவை சீத‌ன‌ம் 7ல‌ச்ச‌ம் குரோன்  குடுத்தா அவையை விட‌ தாங்க‌ள் கூட‌ குடுக்க‌னும் , ஆட‌ம்ப‌ர‌மான‌ கொண்டாட்ட‌ங்க‌ள் இப்ப‌டி சொல்லிட்டு போக‌லாம் அக்கா டென்மார்க் வாழ் த‌மிழ‌ர்க‌ளின் கூத்துக‌ளை ,

என்ர‌ சொந்த‌மும் லேசு ப‌ட்ட‌வை இல்ல‌ , கொண்டாட்ட‌த்துகு காசை கொட்டி ஆட‌ம்ப‌ர‌மாய் செய்வின‌ம் , ஆனால் ஊரில் எம்ம‌வ‌ர்க‌ள் ப‌டும் க‌ஸ்ர‌ங்க‌ள் அவைக்கு தெரிவ‌து இல்ல‌ , அஜித்தின்ட‌ விஜேயின்ட‌ ப‌ட‌ம் எப்ப‌ வ‌ரும் திரைய‌ர‌ங்கில் போய் பார்க்க‌லாம் இது தான் அவ‌ர்க‌ளுடைய‌ வாழ்க்கை /

என்னையும் கொண்டாட்ட‌த்துக்கு கூப்பிடுவின‌ம்  ஏதாவ‌து நொண்டி சாட்டை சொல்லிவிட்டு சொந்த‌ங்க‌ளின் கொண்டாட்ட‌ங்க‌ளில் க‌ல‌ந்து கொள்ளுவ‌தில்லை , 

பெரும்பால‌ன‌ யாழ்க‌ள‌ உற‌வுக‌ள் ம‌னித‌ நேய‌த்த‌ மிக‌வும் நேசிக்கிற‌வை , அவையும் வெளியில் தெரியாம‌ க‌ஸ்ர‌ப்ப‌ட்ட‌ உற‌வுக‌ளுக்கு உத‌வின‌ம் ,

எம்மால் ஆன‌ உத‌வியை உற‌வுக‌ளுக்கு செய்வோம் அக்கா 👏🙏

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

மகள் அருமையாக வரைந்துள்ளார். வாழ்த்துக்கள் உடையார்.

நன்றி சுமே, சின்ன வயதிலிருந்தே வரைதலில் நல்ல ஈடுபாடு

12 hours ago, nunavilan said:

மகளின் ஓவியம் அருமை, உடையார். அவருக்கு பாராட்டுக்கள். ஈன்ற பொழுதின் தன் மகனைச் சான்றோன் என  கேட்ட தாய் " என்ற குறளுக்கு அமைய  பெற்றோருக்கு பெருமை சேர்க்கும்  பிள்ளையை பெற்றுள்ளீர்கள்.

நன்றி நுணாவிளான், சந்தோஷமாக இருக்கு

11 hours ago, பையன்26 said:

என‌து ம‌ச்சாள் , இறுதிக‌ட்ட‌ போரில் பொற்றோர‌ இழ‌ந்த‌ பிள்ளைக‌ளை த‌த் எடுத்து வ‌ள‌க்கிரா , அந்த‌ பிள்ளைக‌ளுக்கு ம‌ச்சாள் தான் அம்மா , அன்பை காட்டி பிள்ளைக‌ளின் ம‌ன‌சில் நீங்கா இட‌ம் பிடித்து விட்டா உடையார் ஜ‌யா , 

என‌க்கும் விருப்ப‌ம் போரால் பாதிக்க‌ப் ப‌ட்ட‌ இர‌ண்டு குடும்ப‌த்துக்கு என்னால் முடிந்த‌தை உத‌வ‌னும் என்று ,
அடுத்த‌ வ‌ருட‌ம் இர‌ண்டு கும்ப‌த்துக்கும் மாத‌ம் மாத‌ம் உத‌வ‌னும் என்று முடிவு ப‌ண்ணி இருக்கிறேன் , உத‌வி போட்டு இடையில் விட்டால் உற‌வுக‌ளை பாதிக்கும் , ஒன்ன‌ செய்ய‌ தொட‌ங்கினா ஒழுங்காய் செய்ய‌னும் , 

அது என்னால் முடியும் அந்த‌ உத‌வியை  என் வாழ் நாள் பூரா செய்ய‌ முடியும்  

கேட்க மிக்க மகிழ்ச்சியாக இருக்கு, எம்மக்களின் கல்வி தரத்தை உயர்த்திவிட்டால் போதும், அவர்கள் மற்றவர்களை முன்னேற்றிவிடுவார்கள்

10 hours ago, nilmini said:

இந்த பதிவை படித்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். இப்படி ஒவ்வொரு குடும்பமும் தம்மால் ஏலுமானதை  மற்றவர்களுக்கு உதவும்படி செய்தால் எவ்வளவு நல்லம்? உங்கள் மகளின் painting மிகவும் அழகாக இருக்கிறது 

நன்றி நில்மினி, கேட்ட பத்திரங்களை அனுப்பிவிட்டேன், இன்னும் அவர்களிடமிருந்து பதிலில்லை, இது நன்றாக போனல், அவர்களடமிருந்து இன்னுமொரு பிள்ளையை மகனின் பெயரால் உதவி செய்ய யோசித்துள்ளேன், பார்ப்போம்.

7 hours ago, பையன்26 said:

இங்கை எம்ம‌வ‌ர்க‌ளுக்குள் போட்டி என்ன‌ என்றால் , அவை சீத‌ன‌ம் 7ல‌ச்ச‌ம் குரோன்  குடுத்தா அவையை விட‌ தாங்க‌ள் கூட‌ குடுக்க‌னும் , ஆட‌ம்ப‌ர‌மான‌ கொண்டாட்ட‌ங்க‌ள் இப்ப‌டி சொல்லிட்டு போக‌லாம் அக்கா டென்மார்க் வாழ் த‌மிழ‌ர்க‌ளின் கூத்துக‌ளை ,

என்ர‌ சொந்த‌மும் லேசு ப‌ட்ட‌வை இல்ல‌ , கொண்டாட்ட‌த்துகு காசை கொட்டி ஆட‌ம்ப‌ர‌மாய் செய்வின‌ம் , ஆனால் ஊரில் எம்ம‌வ‌ர்க‌ள் ப‌டும் க‌ஸ்ர‌ங்க‌ள் அவைக்கு தெரிவ‌து இல்ல‌ , அஜித்தின்ட‌ விஜேயின்ட‌ ப‌ட‌ம் எப்ப‌ வ‌ரும் திரைய‌ர‌ங்கில் போய் பார்க்க‌லாம் இது தான் அவ‌ர்க‌ளுடைய‌ வாழ்க்கை /

என்னையும் கொண்டாட்ட‌த்துக்கு கூப்பிடுவின‌ம்  ஏதாவ‌து நொண்டி சாட்டை சொல்லிவிட்டு சொந்த‌ங்க‌ளின் கொண்டாட்ட‌ங்க‌ளில் க‌ல‌ந்து கொள்ளுவ‌தில்லை , 

பெரும்பால‌ன‌ யாழ்க‌ள‌ உற‌வுக‌ள் ம‌னித‌ நேய‌த்த‌ மிக‌வும் நேசிக்கிற‌வை , அவையும் வெளியில் தெரியாம‌ க‌ஸ்ர‌ப்ப‌ட்ட‌ உற‌வுக‌ளுக்கு உத‌வின‌ம் ,

எம்மால் ஆன‌ உத‌வியை உற‌வுக‌ளுக்கு செய்வோம் அக்கா 👏🙏

ஒரு நாள் ஆடம்பரமாக செய்யும் செலவை, பலருக்கு உதவலாம்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
11 hours ago, பையன்26 said:

இங்கை எம்ம‌வ‌ர்க‌ளுக்குள் போட்டி என்ன‌ என்றால் , அவை சீத‌ன‌ம் 7ல‌ச்ச‌ம் குரோன்  குடுத்தா அவையை விட‌ தாங்க‌ள் கூட‌ குடுக்க‌னும் , ஆட‌ம்ப‌ர‌மான‌ கொண்டாட்ட‌ங்க‌ள் இப்ப‌டி சொல்லிட்டு போக‌லாம் அக்கா டென்மார்க் வாழ் த‌மிழ‌ர்க‌ளின் கூத்துக‌ளை ,

என்ர‌ சொந்த‌மும் லேசு ப‌ட்ட‌வை இல்ல‌ , கொண்டாட்ட‌த்துகு காசை கொட்டி ஆட‌ம்ப‌ர‌மாய் செய்வின‌ம் , ஆனால் ஊரில் எம்ம‌வ‌ர்க‌ள் ப‌டும் க‌ஸ்ர‌ங்க‌ள் அவைக்கு தெரிவ‌து இல்ல‌ , அஜித்தின்ட‌ விஜேயின்ட‌ ப‌ட‌ம் எப்ப‌ வ‌ரும் திரைய‌ர‌ங்கில் போய் பார்க்க‌லாம் இது தான் அவ‌ர்க‌ளுடைய‌ வாழ்க்கை /

என்னையும் கொண்டாட்ட‌த்துக்கு கூப்பிடுவின‌ம்  ஏதாவ‌து நொண்டி சாட்டை சொல்லிவிட்டு சொந்த‌ங்க‌ளின் கொண்டாட்ட‌ங்க‌ளில் க‌ல‌ந்து கொள்ளுவ‌தில்லை , 

பெரும்பால‌ன‌ யாழ்க‌ள‌ உற‌வுக‌ள் ம‌னித‌ நேய‌த்த‌ மிக‌வும் நேசிக்கிற‌வை , அவையும் வெளியில் தெரியாம‌ க‌ஸ்ர‌ப்ப‌ட்ட‌ உற‌வுக‌ளுக்கு உத‌வின‌ம் ,

எம்மால் ஆன‌ உத‌வியை உற‌வுக‌ளுக்கு செய்வோம் அக்கா 👏🙏

அதுதான் எல்லா இடமும் நம் மக்களிடையே நடக்குது தம்பி. எனது சொந்தம் நட்பு வட்டாரம் முழுக்க அதே தான். மிகச்சிலரே கொஞ்சமாவது செய்கிறார்கள். ஆனால் எல்லோருக்கும் தேவை என்ன என்று தெரிகிறது மனம் தான் இல்லை. எல்லாம் சுயநலம் தான். நீர் சொன்னமாதிரி யாழ் கள  உறுப்பினர் பலரும் தமக்கு முடிந்த அளவு எமது மக்களுக்கு உதவுகிறார்கள். அதை விட நாம் ஒன்றுமே செய்ய முடியாது தம்பி . இப்போது  செய்வதிலும் பார்க்க , சிறப்பாக ஏதாவது எமது மக்களுக்கு அதிலும் முக்கியமாக போராளிகளின் குடும்பங்களுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவ வேண்டும் என்றுதான் முயற்சி செய்கிறேன். உமது மனித நேயம் கண்டு மிகவும் மகிழ்ச்சி. 

Edited by nilmini
 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்
On ‎04‎-‎06‎-‎2020 at 17:45, உடையார் said:

பிள்ளையை தத்தெடுத்தல்

20200602-085620.jpg

தக்கார் தகவிலர் என்பது அவரவர் 

எச்சத்தாற் காணப் படும். 

வாழ்த்துக்கள் உடையார் ...

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, சாமானியன் said:

தக்கார் தகவிலர் என்பது அவரவர் 

எச்சத்தாற் காணப் படும். 

வாழ்த்துக்கள் உடையார் ...

நன்றி சாமானியன் 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அருமையாக வரைந்துள்ளார். வாழ்த்துக்கள் உடையார்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, சுவைப்பிரியன் said:

அருமையாக வரைந்துள்ளார். வாழ்த்துக்கள் உடையார்.

நன்றி சுவைப்பிரியன். 

இன்றுதான் எல்லாம் படிவங்களை நிரப்பி பணமும் எனது வங்கி கணக்கில் இருந்து அனுப்பிவிட்டேன் ஒரு வருடத்திற்கு, தொடர்ந்து பத்து வருடங்களுக்கு உதவ விரும்பியுள்ளா. மகளிடமிருந்து மாதம் மாதம் நான் வங்கிடுவேன், அதுதான் ஒப்பந்தம் இருவருக்கமிடையில். நன்றிகள் மீண்டும் அனைவருக்கும் வாழ்தியதிற்கும் ஊக்கம் தந்திற்கும்

Fund For Mahalir Illam

ABN – 47 467 887 194

Membership Form

Web - http://www.mahalirillam.org /       

“CARING FOR MAHALIR IN NEED”

Sponsorship Type

1)     Child Sponsor donation (A$40/month/child + $10 Ekalvi)

2)     Monthly donation – A$50  (for projects)

3)     Ad- Hoc donation/monthly /annually

Bank details Commonwealth Bank (Hay Market) BSB: 06 2006; A/c No:011033596.

    Account name: “Fund for Mahalir Illam”

admin@mahalirillam.org

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

 .பிள்ளைக்கு முதல் வாழ்த்துக்கள் , பின்னர் தான் உங்களுக்கு அண்ணா.😀மேலும் அவர் பணி தொடரட்டும்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, யாயினி said:

 .பிள்ளைக்கு முதல் வாழ்த்துக்கள் , பின்னர் தான் உங்களுக்கு அண்ணா.😀மேலும் அவர் பணி தொடரட்டும்.

யாயினி உங்களை இங்கு காண்பதில் மகிழ்ச்சி.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, யாயினி said:

 .பிள்ளைக்கு முதல் வாழ்த்துக்கள் , பின்னர் தான் உங்களுக்கு அண்ணா.😀மேலும் அவர் பணி தொடரட்டும்.

நன்றிகள் யாயினி, மகளிடம் கூறுகின்றேன்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

உயிரோட்டமான ஓவியம். மூக்கு கண்கள் அவை நோக்கும் திசை இருகண்களிலும் கச்சிதமாக அமைந்திருக்கிறது உடையார் ஒரு தலைசிறந்த ஓவியராக வருவார். வாழ்த்துக்கள்.

பதின்ம வயதில் நிறைய ஓவியங்களைக் கிறுக்கிய அநுபவம் உண்டு. பள்ளிக்கூடத்தில் போர் அடித்தால் படிப்பதைத்தவிர பிடித்தமானது விளையாட்டு, மற்றும் ஓவியம் வரைதல் ஆரம்பித்தது ஐந்தாம் ஆண்டு சமயப்புத்தகத்திலிருந்த நடன விநாயகரை வரைவதிலிருந்து ஒரு தடவை பள்ளிகூட விடுமுறைக்கு முதல் நாள் ரிப்போர்ட் கார்ட் வாங்கிக் கொண்டுதான் வீடு செல்ல வேண்டும். சிநேகிதிகள் அவரவர் பாட்டுக்கு படக்கதைகள், டக்கோ டிக்கோ டொஸ், இலக்கப்பெட்டி என்று விளையாட நான் எனது நோட் புக்கில் ஏதோ ஓவியத்தை கற்பனையில் நிறுத்தி வரைந்து கொண்டிருக்க என் அன்புத்தோழி ஏதோ கதைகேட்க நான் பதில் தரவில்லை என்பதற்காக எனது ஓவியத்தின் மேல் சரக் புரக் என்று இரு கோடுகளைப்போட்டு கிறுக்கலாக்கி விட்டாள் அன்றைய நாள் எனக்கு மிகவும் கோபம் வந்துவிட்டது அந்த நிமிடத்தில் எனது ஆருயிர்தோழியிடம் கோபம்போட்டேன். வருடக்கணக்காக அவளிடம் பேசுவதை தவிர்த்திருந்தேன். கிட்டத்தட்ட 10 வருடங்களாக பேசவில்லை. கனடா வரும் சமயத்தில்தான் அவளுடன் மீளப்பேசினேன். நானும் என் நண்பியும் அச்சம்பவத்தால் இழந்த அழகான பொழுகள் ஏராளம். எல்லாம் ஓவியக்கிறுக்கு செய்த வேலை.

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

உங்கள் மகளின் ஓவியம் அவவின் மனம் போலவே மிகவும் அழகாக இருக்கின்றது.👌

 உங்களுக்கும் உங்கள் குடும்பத்தவர்களுக்கும் வாழ்த்துக்கள் உடையார் அண்ணா 💐👏

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, வல்வை சகாறா said:

நன்றி சகாறா, சின்ன பிள்ளைகளில் அடிப்பட்டவைகளை நினைக்க இப்ப சிரிப்பாக இருக்கும்.

எனது மச்சாளும் நானும் ஒரு வயது வித்தியாசம், ஒரு சின்னப்பிரச்சனைக்காக 6-7 வருடங்கள் கதைக்கவில்லை அது என்ன பிரச்சனை என்று கேட்கப்படாது😀

6 hours ago, தமிழினி said:

உங்கள் மகளின் ஓவியம் அவவின் மனம் போலவே மிகவும் அழகாக இருக்கின்றது.👌

 உங்களுக்கும் உங்கள் குடும்பத்தவர்களுக்கும் வாழ்த்துக்கள் உடையார் அண்ணா 💐👏

நன்றி தமிழினி, மகளிடம் கூறிவிடுகின்றேன் 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 11/6/2020 at 06:52, உடையார் said:

 என்னால் முடிந்ததை செய்கிறேன், கடமைப்பட்டவன் பலருக்கு. 

பிள்ளைகளையும் பழக்கி எடுக்கனும், மற்றவர்களுக்கு உதவினால் அது ஒரு தனி மகிழ்ச்சி, அவர்களுக்கும் விருப்பம், இதுதான் முதல் தொடக்கம் 

பிறரிடம்  உதவி பெற்றதை மறைக்காததும்

பிறருக்கு உதவ மறுக்காததும் தான் மனிதம் .

மிகவும் நெகிழ்வான பணி உடையார்,

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, valavan said:

பிறரிடம்  உதவி பெற்றதை மறைக்காததும்

பிறருக்கு உதவ மறுக்காததும் தான் மனிதம் .

மிகவும் நெகிழ்வான பணி உடையார்,

நன்றி உங்கள் பாராட்டிற்கு Valavan🙏, பழைய வாழ்க்கையை மறக்கவில்லை, அதுதான் நிம்மதியாக என்னை வாழ வைக்கின்றது. 

Link to post
Share on other sites
 • 4 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

இன்று தான் இந்த திரியை வாசிக்கிறேன். பிரபாவின் பதிலில் சொன்ன படத்தை பார்க்க வந்தேன்.

தமிழினி சொன்னதைப்போல உங்களின் மகளின் மனசைப்போலவே ஓவியமும் மிக அழகு.

உங்கள் பணி தொடர்க.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, பகலவன் said:

இன்று தான் இந்த திரியை வாசிக்கிறேன். பிரபாவின் பதிலில் சொன்ன படத்தை பார்க்க வந்தேன்.

தமிழினி சொன்னதைப்போல உங்களின் மகளின் மனசைப்போலவே ஓவியமும் மிக அழகு.

உங்கள் பணி தொடர்க.

நன்றி பகலவன் உங்கள் பாராட்டிற்கு, மகளிடம் கூறிவிடுகின்றேன்

Link to post
Share on other sites
 • 3 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

உங்கள் மகளை நினைக்க வியப்பாக உள்ளது. ஒரு குழந்தையின் மனவிருத்தியை அந்த குழந்தையின் சூழல்தான் தீர்மானிப்பதாக சொல்வார்கள்.நீங்கள் நல்ல ஒரு சூழலை உருவாக்கி கொடுத்துள்ளீர்கள். மிக மிக அழகான ஓவியம். என் வாழ்த்துக்களை சொல்லி விடுங்கள்....

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, nige said:

உங்கள் மகளை நினைக்க வியப்பாக உள்ளது. ஒரு குழந்தையின் மனவிருத்தியை அந்த குழந்தையின் சூழல்தான் தீர்மானிப்பதாக சொல்வார்கள்.நீங்கள் நல்ல ஒரு சூழலை உருவாக்கி கொடுத்துள்ளீர்கள். மிக மிக அழகான ஓவியம். என் வாழ்த்துக்களை சொல்லி விடுங்கள்....

நன்றி நிகே. கட்டாயம் சொல்லிவிடுகின்றேன், கடவுளின் அருள்தான்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 4/6/2020 at 09:45, உடையார் said:

பிள்ளையை தத்தெடுத்தல்

வாழ்த்துக்கள் உடையார்,அன்பே கடவுள் அதனால் மனிதனும் தெய்வமாகலாம்.

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • சிங்கம், நமக்கு ஒரு விசயம் புது விசயம் என்பதால் அது நடக்கவில்லை என்பதல்ல. பொன்னம்பலம் காலத்தில் முஸ்லீம்களை வேணும் என்றே புறக்கணித்தார் - இவர்களை நம்பி பயனில்லை எமக்கு ஒரு அமைச்சர் தேவை என்ற பிராச்சாரம் முஸ்லீம்கள் மத்தியில் நடந்தது -அதற்கு பொன்னரின் நடவடிக்கையும் வலு சேர்த்தது. அதே போல் ஆசிரியர் நியமனம், பாடத்திட்டத்தின் அமைப்பில் தமிழர் புறகணிப்பு என்ற விடயம் பதிதின் முகமட் காலத்தில் பேசப்பட்டது, அதற்கு பதிதின் நடவடிக்கைகள் வலுச்சேர்த்தது. இவைதான் திட்டமிட்ட தமிழ்-முஸ்லிம் பிரிவினையின் தொடக்கம்.  அதை பின்னர் மொசாசாட்டின் உதவியுடன் ஜே ஆர் இன்னும் கூர்மையாக்கினார்.
  • இங்கும் பாடசாலைகளை திறந்து வைத்து கூத்தடிக்கிறார்கள் பின் முடுகிறார்கள்.அது போக தமிழ்மக்களின் கொண்டாடங்களில் பரவுதல் நடக்கிறதாக அறியக் கூடியதாக இருக்கிறது..நிறைய விடையங்கள் வெளி வருவது மிகவும் குறைவு.நான் கடந்த சில தினங்ளுக்கு முன் மருத்துவமனை ஒன்றுக்கு சென்றேன்..அங்கு இரண்டு நம் இனத்து பெண்கள் தங்களுக்கு தாங்களே ஏதோ பார்சல் பரிமாற்றத்தில் நின்றார்கள் அதுவும் பார்க்கிங்லொற் பக்கத்தில்..ஒரு பெண் மற்றைய பெண்ணுக்கு இதை கை காவலுக்கு வைச்சுக்கோ உறுதி செய்யப்பட்டால் பின் பார்ப்போம் என்று சொல்லியது நான் அவர்களை கடந்து செல்லும் போது காதில் விழுந்தது.
  • ரத்த மகுடம்-117 ‘‘இதை எதற்கு இங்கு வந்து உயர்த்திக் காட்டுகிறாய்..?’’ சாளுக்கிய இளவரசனின் நயனங்கள் அனலைக் கக்கின. ‘‘என்ன தைரியமும் நெஞ்சழுத்தமும் இருந்தால் ‘நான் அணிந்திருந்த கச்சை இது...’ என எங்களிடமே சொல்வாய்..? எங்களைப் பார்த்தால் உனக்கு எப்படித் தெரிகிறது..?’’ கர்ஜித்தான்.சிவகாமி உதட்டைச் சுழித்தாள். ஸ்ரீராமபுண்ய வல்லபரை ஏறிட்டாள். ‘‘என்ன குருநாதரே இளவரசர் இப்படி பச்சைக் குழந்தையாக இருக்கிறார்..?’’விநயாதித்தன் ஆத்திரத்துடன் அவளை நோக்கி அடியெடுத்து வைத்தான். ஸ்ரீராமபுண்ய வல்லபர் அவனது கைகளை இறுகப் பற்றி, கண்களால் ‘பொறு’ என்றார். உண்மையில் அவருக்கும் எதுவும் புரியவில்லை. என்ன சொல்வதென்றும் தெரியவில்லை. ஆனாலும், தான், அணிந்திருந்த கச்சை என்று சொல்லி சிவகாமி தங்களிடம் காட்டுகிறாள் என்றால் அதில் ஏதோ இருக்கிறது. இல்லையெனில் எந்தப் பெண்ணும் இப்படி நடந்து கொள்ள மாட்டாள்... தொண்டையைக் கனைத்தார். ‘‘இது நீ அணிந்திருந்த கச்சையா..?’’ ‘‘ஆம் குருநாதரே...’’‘‘எங்கு அணிந்திருந்தாய்... இல்லை இல்லை... எந்த இடத்தில் அணிந்திருந்தாய்... இல்லை இல்லை... எப்பொழுது அணிந்திருந்தாய்..?’’ சாளுக்கிய போர் அமைச்சரின் பதற்றத்தையும் அதனால் சொற்கள் குழறுவதையும் கண்டு சிவகாமி வாய்விட்டுச் சிரித்தாள்.   சாளுக்கிய இளவரசனுக்கு பற்றிக்கொண்டு வந்தது. ‘‘வாயை மூடு!’’ எரிந்து விழுந்தான். ‘‘குருநாதர் கேட்டதற்கு பதில் சொல்...’’‘‘மன்னிக்கவும் குருவே...’’ நகைப்பதை அடக்கினாள் சிவகாமி.ராமபுண்ய வல்லபரும் விநயாதித்தனும் அவளை கண்களால் எரித்தார்கள்.சிவகாமி அதைப் பொருட்படுத்தவில்லை. ஆனாலும் தொடர்ந்து, தான் விளையாடுவது நல்லதற்கல்ல என அவளுக்குத் தோன்றியது. இமைகளை மூடித் திறந்தாள். கணத்தில் அவள் வதனம் கம்பீரமாக மலர்ந்தது. ‘‘மதுரை பாதாளச் சிறையில் நான் அணிந்த கச்சை இது குருநாதரே...’’நாணைப் போல் ராமபுண்ய வல்லபரும் விநயாதித்தனும் நிமிர்ந்தார்கள். ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.அமைதியாக அவர்கள் இருவரையும் நோக்கிவிட்டு அந்த அறையை சிவகாமி தன் பார்வையால் அலசினாள். ஈசான்ய மூலையில் தென்பட்ட அறையையும் அக்கதவு தாழிடப்படாமல் மூடியிருந்ததையும் கணத்துக்கும் குறைவான நேரத்தில் பார்த்தாள்.பெருமூச்சுடன் மேற்கொண்டு, தான் பேசப் போவதைக் கேட்பதற்காக மவுனமாகக் காத்திருந்த ஸ்ரீராமபுண்ய வல்லபரையும் விநயாதித்தனையும் நோக்கினாள்.   ‘‘குருநாதா... இந்தக் கச்சைக்காகத்தான் ஒரு திங்களுக்கும் மேலாக கரிகாலனுடன் நடமாடினேன்; சுற்றினேன்; இழைந்தேன்; குழைந்தேன். எனது நடவடிக்கைகள் உங்களுக்குக் கூட சந்தேகத்தை எழுப்பியிருக்கும் என்பதை அறிவேன் இளவரசே... ஆனால், எனக்கு வேறு வழி தெரியவில்லை. நமது இலக்கு பல்லவர்களை வீழ்த்துவது.   அதுவும் வேரோடு... மண்ணோடு... இதற்காகத்தான் நம் சாளுக்கிய மாமன்னர் பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக தவமிருக்கிறார். அந்தத் தவம் பூர்த்தியாக வேண்டும் என்பதற்காகத்தான் என்னையே நீங்கள் உருவாக்கினீர்கள் குருநாதரே... இதை எக்காலத்திலும் நான் மறக்கவில்லை...’’இரு உள்ளங்கைகளையும் தேய்த்து தன்னிரு கன்னங்களிலும் பதிய வைத்த சிவகாமி தொடர்ந்தாள். ‘‘காஞ்சி கடிகையில் இருந்து சில சுவடிக் கட்டுகளை கரிகாலன் களவாடிச் சென்றதை நீங்கள் இருவருமே அறிவீர்கள். அந்தச் சுவடிகளில் தமிழக சிறைச்சாலைகள் குறித்த விவரங்கள் இருந்தன. அதை ஏன் கரிகாலன் களவாடினான் என்ற வினா உங்களுக்குள் எழுந்திருக்கும். அதற்கான விடைதான் இந்தக் கச்சை... மதுரை பாதாளச் சிறையில் அடைக்கப்பட்டபோது நான் அணிந்திருந்த கச்சை...’’பேசியபடியே மெல்ல சிவகாமி நடக்கத் தொடங்கினாள்.‘‘குருநாதரே... சாளுக்கிய பேரரசின் விடிவெள்ளியும், எக்காலத் திலும் சாளுக்கியர்களுக்கு வழிகாட்டி வருபவரும், பாரதத்தின் தக்காண சக்கரவர்த்திகளில் முதன்மையானவரும், எதிர்கால சந்ததியினரும் வியக்கும் மாவீரருமான நமது மாமன்னர் இரண்டாம் புலிகேசி எப்படி மறைந்தார் என்பது நினைவில் இருக்கிறதா..?’’‘‘இருக்கிறது...’’ விநயாதித்தன் சீறினான்.‘‘ஆம்... இளவரசரால் மட்டுமல்ல... ஒவ்வொரு சாளுக்கிய குடிமகனாலும் அதை ஒருபோதும் மறக்க முடியாது...’’ நடந்தபடியே சொன்ன சிவகாமி, ஈசான்ய மூலையில் தாழிடப்படாமல் மூடியிருந்த அறையின் முன்னால் வந்து நின்றாள். கதவை ஒட்டி இருந்த சுவரில் தன் வலது கையை ஊன்றினாள். இடது கையில் இருந்த கச்சை காற்றில் நர்த்தனமாடியதை அவளும் சரி, அறையில் இருந்த ஸ்ரீராமபுண்ய வல்லபரும் விநயாதித்தனும் சரி பொருட்படுத்தவில்லை.சிவகாமியே தொடர்ந்தாள். ‘‘போரில் நம் மாமன்னரின் தலை சீவப்பட்டது. சீவியவர்... மரியாதை என்ன வேண்டிக்கிடக்கிறது... சீவியவன் பல்லவ தளபதியான பரஞ்சோதி...’’ தழுதழுத்தபடி இமைகளை மூடியவள் சில கணங்களுக்குப் பின் கண்களைத் திறந்தாள். அவளது கருவிழிகள் இரண்டும் தீ ஜ்வாலைகளாக எரிந்தன. ‘‘அதற்கு பழிவாங்க வேண்டும்... பழிவாங்கியே தீர வேண்டும்...’’‘‘அதற்குத்தான் உன் கச்சையை எங்கள் முன் நீட்டுகிறாயா..?’’ விநயாதித்தனின் உதடுகளில் இருந்து அம்பென சொற்கள் பாய்ந்தன.‘‘ஆம் இளவரசே...’’‘‘சே...’’ சாளுக்கிய இளவரசன் முகத்தைத் திருப்பிக் கொண்டான்.‘‘பொறு விநயாதித்தா... இவள் என்ன சொல்கிறாள் என முழுமையாகக் கேட்போம்... சிவகாமி... ம்...’’ தனது வலது உள்ளங்கையை நீட்டி மேலே தொடரும்படி அவளுக்கு சைகை செய்தார் ஸ்ரீராமபுண்ய வல்லபர்.‘‘மகேந்திரவர்ம பல்லவன் ஆட்சியில் நம் மாமன்னர் இரண்டாம் புலிகேசி காஞ்சியை நோக்கிப் படையெடுத்தார்.தர்மப்படி நடைபெற்ற அப்போரில் சாளுக்கியர்கள் மகத்தான வெற்றியை அடைந்தார்கள். பல்லவ நாட்டின் பரப்பளவு பெருமளவு சுருங்கியது. இதற்குப் பழிவாங்க மகேந்திரவர்மரின் மகன் நரசிம்மவர்ம பல்லவன் அரியணை ஏறியதும் புறப்பட்டான். இதற்குள் பல்லவ சேனாதிபதியான பரஞ்சோதி படைகளைத் திரட்டியிருந்தான்.பல்லவப் படைகள் சாளுக்கிய நாட்டுக்குள் புகுந்து வெறியாட்டம் ஆடின. சாளுக்கிய ஊர்கள் அனைத்தும் பல்லவர்களால் கொள்ளையடிக்கப்பட்டன. ஏனெனில் தர்மப்படி பல்லவர்கள் யுத்தம் செய்யவில்லை. அசுரப் போரைக் கையாண்டார்கள். சாளுக்கிய தலைநகரான வாதாபியைக் கொளுத்தினார்கள்.   இந்தப் போரில்தான் நம் மாமன்னர் இரண்டாம் புலிகேசி வீரமரணம் அடைந்தார். உண்மையில் அது படுகொலை. ஆம். படுகொலைதான் அது. பல்லவ சேனாதிபதியான பரஞ்சோதி அதர்மமான முறையில் நம் மாமன்னரின் சிரசை தன் வாளால் வெட்டி எறிந்தான்...   இந்த அநியாயத்தை அந்தணர்கள் நியாயப்படுத்தினார்கள். எப்படி..? ஜோதிடத்தைக் கையில் எடுத்து. நினைக்க நினைக்க கோபத்தில் வெந்து தணிகிறேன் குருநாதரே... நம் மாமன்னர் இரண்டாம் புலிகேசி கிரகணத்து அன்று சாளுக்கிய அரசராக முடிசூட்டிக் கொண்டாராம்... அதனால்தான் கிரக சேர்க்கைப்படி யுத்தத்தில் அவரது சிரசு வெட்டப்பட்டதாம்...பிராமணர்களும் அந்தணர்களும் இருக்கும் இடத்தில் அயோக்கியத்தனம்தானே ஆட்சி செய்யும்..? அதர்மம்தானே கோலோச்சும்..? அதுதான் அரங்கேறி வருகிறது.அந்தர்ணர்களின் தொடர் பிரசாரத்தால் தர்மப்படி போர் புரிந்த நம் மாமன்னர் இரண்டாம் புலிகேசியின் மரணம்... படுகொலை என்ற உண்மை நிலைக்கு அருகில் கூட செல்லவேயில்லை. மாறாக, நவகிரகங்களால்... ராசிக் கட்டங்களில் சேர்ந்த கோள்களின் கூட்டணியால்... அவரது சிரசு வெட்டப்பட்டதாகச் சொல்ல ஆரம்பித்தார்கள்.வேதம் படித்தவன் பொய் சொல்ல மாட்டான் என்ற நம்பிக்கைதான் மக்கள் மனதில் நிலவுகிறதே... எனவே அவர்களும் இதை அப்படியே நம்பினார்கள். விளைவு... பரஞ்சோதி நல்லவனாகி விட்டான்... ஆம்... அதர்மமான முறையில் யுத்தம் செய்த... சாளுக்கிய தேசத்தை கொள்ளையனைப் போல் சூறையாடிய... அசுரப் போரைக் கையாண்ட... பல்லவ சேனாதிபதி பரஞ்சோதியின் நடவடிக்கை முற்றிலுமாக வரலாற்றில் இருந்து மறைக்கப்பட்டுவிட்டது.காரணம் என்ன தெரியுமா..? பரஞ்சோதி என்னும் அயோக்கியன், யுத்த வெறியன், சிறு தொண்டராகிவிட்டான். சிவப் பழமாக மாறிவிட்டான். சைவம் வளர... சைவத்தின் பெயரால் மக்களைச் சுரண்டி அந்தணர்கள் வளர... அந்த சிறு தொண்டன் தேவை. எனவே வாதாபியைக் கொள்ளையடித்த அந்தக் கொள்ளையனின் செயலை... சிறுமைப்படுத்தி இகழ வேண்டிய அவனது நடவடிக்கையை... வீரம் என்ற பெயரில் சரித்திரத்தில் பதித்துவிட்டார்கள்...’’‘‘இதை ஏன் இப்பொழுது சொல்கிறாய் சிவகாமி...’’ ஸ்ரீராமபுண்ய வல்லபர் நிதானமாகக் கேட்டார்.‘‘இக்கணத்தில் அதைச் சொல்வதே சரி என்று தோன்றியதால் குருநாதரே...’’ என்றபடி இடது கையில் இருந்த கச்சையை வலது கைக்கு மாற்றினாள்.‘‘எக்கணத்தில் சொன்னாலும் அது கடந்த காலம்தானே..?’’ விநயாதித்தன் புருவத்தை உயர்த்தினான்.‘‘எதிர்காலத்தில் அச்சுறுத்தலாக இருக்கப் போவதும் அதுதானே இளவரசே..?’’‘‘ஆனால், நாம் இருப்பது நிகழ்காலத்தில் அல்லவா..?’’ சாளுக்கிய இளவரசன் நகைத்தான்.‘‘அது கடந்த காலத்தின் தொடர்ச்சி அல்லவா..? தொடரப் போகும் நிகழ்ச்சி நிரல் அல்லவா..?’’  ‘‘அதற்கு வாய்ப்பில்லை சிவகாமி...’’ நெஞ்சை நிமிர்த்தினார் ஸ்ரீராமபுண்ய வல்லபர். ‘‘அசுரர்களால் கூட அவ்வளவு சுலபத்தில் அசுர வியூகத்தை அமைக்க முடியாது.   அதற்கு கசடற போர்க் கலைகளைக் கற்றிருக்க வேண்டும். இப்போதைய பல்லவ மன்னனான பரமேஸ்வரவர்மனும் சரி... அவனது மகன் ராஜசிம்மனும் சரி... ஏன், சோழ இளவரசனான கரிகாலனும் சரி... இந்த விஷயத்தில் சூன்யம்தான்... ஒருவேளை... தப்பித்தவறி அவர்கள் அசுர வியூகத்தை அமைத்தாலும்...’’ நிறுத்தியவர் தன் நெஞ்சில் கை வைத்தார். ‘‘அதை இந்த சாளுக்கிய போர் அமைச்சனால் தகர்க்க முடியும்...’’   ‘‘பரஞ்சோதியின் அசுர வியூகங்களையா..?’’‘‘அவன்தான் இப்பொழுது இல்லையே..?’’‘‘நான் சொல்ல வருவது உங்களுக்கும் இளவரசருக்கும் புரியவில்லை என்று நினைக்கிறேன் குருநாதரே...’’ என்றபடியே தாழிடப்படாமல் இருந்த ஈசான்ய மூலைக் கதவை சிவகாமி திறந்தாள். ‘‘மன்னா... தங்களுக்குப் புரிந்ததல்லவா..?’’அவர் அப்படிப் பார்ப்பதை இன்னொரு மனிதனும் மற்றவர்கள் பார்வையில் படாமல் மறைந்திருந்து பார்த்தான். அவன் உதட்டில் புன்னகை பூத்தது. அதுவரை அந்த ஈசான்ய மூலை அறையில் விக்கிரமாதித்தருடன்தான் அவன் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தான். சிவகாமி சொன்னதை எல்லாம் மன்னருடன் சேர்ந்து கேட்டுக் கொண்டிருந்தான்.அவன் -கரிகாலன்! http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=17288&id1=6&issue=20200927
  • தல, பொன்னர் மீது வைக்கப்படும் குற்றசாட்டு, மலையகத்தமிழர் வாக்குரிமை பறிப்பு. இது மிகவும் மோசமானது தான். அந்த நேரத்தில் தம்மை கை விட்டு விட்டார் என்பது இன்றும் உள்ள குற்றசாட்டு. வேறு வகையில், அவர் தமிழ் பேசும் மக்களிடையே பிரச்சனைகளை உண்டாக்கினார் என்பது நீங்கள் சொல்லும் புது கதை. ஜேஆர் என்ற குள்ள நரி தான், கூட்டணி தலைமைத்துவத்தில் இருந்து, தொண்டாவை முதலில் கழட்டி அமைச்சர் பதவி கொடுத்தார். பின்னர் அஷ்ரபினை கூட்டணியில் இருந்து கழட்டி, முஸ்லீம் காங்கிரஸினை உருவாக்க வைத்து, தமிழ் பேசும் மக்களை, தமிழராயும், இஸ்லாமியராயும் பிரிந்து மேய்ந்தார். அஷ்ரப் கூட அமைச்சரானார். இன்று.... தமிழரை ஒரு வழி பார்த்த சிங்களம், இஸ்லாமியரை... ஒரு வழி பார்க்க முனைகிறது.  நமக்காவது அந்த நேரத்தில் இங்கே ஓடி வரக்கூடியதாக இருந்தது. இஸ்லாமியருக்கு, இன்றய உலக ஒழுங்கில் அதுவும் இல்லை. ஆகவே, மீண்டும், தமிழ் பேசும் மக்களாக இணைவதை தவிர, இரு பகுதிக்கும், வேறு வழியும் இல்லை.  
  • சீமான் ஏதோ ஆஸ்பத்திரி போய் வந்துள்ளாராம். விரைவில் நலம் பெற வாழ்துகள். 
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.