• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
உடையார்

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பிறந்தநாள்: 15 சுவாரசிய சினிமா தகவல்கள்

Recommended Posts

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பிறந்தநாள்: 15 சுவாரசிய சினிமா தகவல்கள்

S. P. BALASUBRAHMANYAM birthday special

கிட்டத்தட்ட 40,000க்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களைப் பாடியுள்ள எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு இன்று 74ஆவது பிறந்தநாள்.

இவர் குறித்த சில முக்கியத் தகவல்கள் இதோ.

  1. எஸ்.பி.பியின் தந்தை ஒரு ஹரிஹத கலைஞர். இளம் வயதிலேயே இவருக்கு இசையின் மீது அளாதி பிரியம்.
  2. இளம் வயதில் தெலுங்கு இசை நிறுவனம் ஒன்று நடத்திய பாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றார். அந்தப் பரிசுதான் பாடகராக வேண்டும் என்கிற ஆர்வத்தை அவருக்குள் விதைத்தது.
  3. இவருடைய தாய்மொழி தெலுங்கு. தெலுங்கு இசையமைப்பாளர் ஒருவரின் இசையில் 'ஶ்ரீ ஶ்ரீ மரியாத ராமண்ணா' என்கிற திரைப்படத்தில் தன்னுடைய முதல் பாடலைப் பாடினார் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.
  4. 1969ஆம் ஆண்டு சாந்தி நிலையம் படத்திற்கு 'இளையகன்னி' என்கிற பாடலைப் பாடி தமிழில் பின்னணிப் பாடகராக அறிமுகமானார்.
  5. 'இளையகன்னி' படம் வெளிவருவதற்கு முன்னரே 'அடிமைப்பெண்' படத்தில் 'ஆயிரம் நிலவே வா' என்கிற பாடல் மூலம் இவரது குரல் தமிழ் உலகிற்கு கேட்க ஆரம்பித்துவிட்டது.
  6. மின்சாரக்கனவு திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'தங்கத் தாரகை மகளே' என்கிற பாடலுக்காக அவர் தேசிய விருதைப் பெற்றார்.
  7. இதுவரை தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என இவர் நான்கு மொழிகளில் பாடிய வெவ்வேறு பாடல்களுக்கு ஆறு முறை சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதினை வென்றிருக்கிறார்.
  8. இவர் பாடகர் மட்டுமல்ல சில படங்களுக்கு டப்பிங்கும் கொடுத்திருக்கிறார். மேலும், நடிகராகவும் பல படங்களில் நடித்திருக்கிறார்.
  9. உலகிலேயே அதிகமான திரைப்படப் பாடல்கள் பாடிய பாடகர் என்கிற கின்னஸ் சாதனையையும் செய்துள்ளார் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.
  10. அதுமட்டுமில்லாமல் ஒரே நாளில் 19 பாடல்களைப் பதிவு செய்து அனைவரையும் பிரம்மிக்க வைத்தவர்.
  11. கிரிக்கெட் விளையாட்டில் அதீத ஆர்வம் கொண்டவர். இவருடைய ஆர்வத்தைப் பார்த்து சச்சின் டெண்டுல்கர் அவருடைய கையெழுத்திட்ட பேட்டை பரிசாக எஸ்.பி.பிக்கு அளித்திருக்கிறார்.
  12. ரஜினிகாந்த், இளையராஜா, அமிதாப் பச்சன் உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்கள் பெற்றுள்ள 'இந்தியன் பிலிம் பர்சனாலிட்டி ஆஃப் தி இயர்' விருதை 2016ஆம் ஆண்டு நடந்த 47வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இவர் பெற்றார்.
  13. இந்திய அரசின் பத்மஸ்ரீ மற்றும் பதமபூஷன் விருதுகளைப் பெற்றுள்ள இவருக்கு ஓவியங்கள் வரைவதில் மிகுந்த பிரியம் உண்டு. அதே போன்று நன்றாக புல்லாங்குழல் வாசிப்பார்.
  14. பாடகராக மட்டுமல்லாது இசையமைப்பாளர், பின்னணிக் குரல் கலைஞர், குணச்சித்திர நடிகர் ஆகிய பிரிவுகளிலும் ஆந்திர அரசு வழங்கும் நந்தி திரைப்பட விருதுகளை எஸ்.பி.பி பெற்றுள்ளார்.
  15. வெவ்வேறு மொழிகளில் கிட்டத்தட்ட 60 படங்களுக்கு இசை அமைத்திருக்கிறார்.

 

https://www.bbc.com/tamil/arts-and-culture-52918181

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • மாவட்ட செயலக வாள் வெட்டு; சற்றுமுன் ஐவர் கைதாயினர்!   யாழ்ப்பாணம் மாவட்ட செயலக முன்பாக மாவட்ட செயலக சுற்றுச்சூழல் அதிகார சபை உத்தியோகத்தர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய பெரும் குற்றத் தடுப்புப் பொலிஸ் பிரிவினரின் நடவடிக்கையில் சந்தேக நபர்கள் இன்று (08) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர். மல்லாகத்தில் வைத்து சந்தேக நபர்கள் ஐவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து இரு வாள்கள், கைக்கோடரி ஒன்று, இரு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன. மல்லாகம் கனி எனப்படும் குழுவை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டனர். தாக்குதலில் காயமடைந்தவரும் முன்னர் அந்தக் குழுவில் இருந்துள்ளார் என்ற பொலிஸ் தரப்பால் தெரிவிக்கப்படுகிறது. https://newuthayan.com/மாவட்ட-செயலக-வாள்-வெட்டு/
    • 2020  தேர்தல் மேடைகளில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள்...        
    • என் கூடவே இரும்  ஓ இயேசுவே நீர் இல்லாமல் நான் வாழ முடியாது என் பக்கத்திலே இரும் ஓ இயேசுவே நீர் இல்லாமல் நான் வாழ முடியாது 1. இருளான வாழ்க்கையிலே வெளிச்சம் ஆணீரே உயிரற்ற வாழ்க்கையிலே ஜீவன் ஆனீரே என் வெளிச்சம் நீரே என் ஜீவனும் நீரே எனக்கெல்லாம் நீங்கதனப்பா 2. கண்ணீர் சிந்தும் நேரத்தில் நீர் தாயுமாநீரே காயப்பட்ட நேரத்தில் நீர் தகப்பனாணீரே என் அம்மாவும் நீரே என் அப்பாவும் நீரே எனக்கெல்லாம் நீங்காதானப்பா  3.வியாதியின் நேரத்தில் வைத்யராநீரே சோதனை நேரத்தில் நண்பரானீரே என் வைத்தியர் நீரே என் நண்பரும் நீரே எனக்கெல்லாம் நீங்கதானப்பா  
    • இராவணன் சிவபக்தன்: தேரரின் கருத்து கண்டிக்கத்தக்கது – இந்துமகாசபா வேதனை   “கோணேஸ்வரம் என்பது பாடல் பெற்ற சிவதலம். எல்லாவல மேதானந்த தேரர் கூறிய கருத்து கண்டிக்கத்தக்கது. இது தொடர்பில் ஆலய நிர்வாகம் உரிய பதிலை வழங்க வேண்டும். அத்துடன் புத்தசாசன அமைச்சுக்கு சான்றுகளையும் சமர்ப்பிக்க வேண்டும். இலங்கை இராவணன் ஆண்ட தேசமாகும். சீதாவலியவில் கோயில் உள்ளது. அனுமன் இலங்கை வந்து சென்ற ஆதாரங்கள் உள்ளன. மேலும் இராவண எல்லவில் குகைகள் உள்ளன. ஆகையால் தேரர் குறிப்பிட்ட கருத்தானது இந்து மக்களின் மனதை மேலும் புண்படுத்தியிருக்கிறது. இது கண்டிக்கத்தக்கது “ என்று இலங்கை இந்துமாசபா தலைவர் சிவஸ்ரீ வேலு சுரேஸ்வர சர்மா சபா சார்பில் தமது கண்டனத்தை தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோத்தபாயவால் நியமிக்கப்பட்ட செயலணியின் தலைவரான எல்லாவல மேதானந்த தேரர் “இராவணன் இலங்கையை ஆண்டது கட்டுக்கதை” என்றும் “கோணேஸ்வரம் கோயில் அல்ல. அது கோகண்ண விகாரை” என்றும் “சுடர் ஒளி” பத்திரிகைக்கு வெளியிட்ட கருத்துக்களுக்கு பல்வேறு தரப்பினர் தமது எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://newuthayan.com/இராவணன்-சிவபக்தன்-தேர/  
    • சங்குப்பிட்டி விபத்தில் மூவர் படுகாயம்; நொருங்கியது ஆட்டோ! கிளிநொச்சி – பூநகரி, சங்குப்பிட்டி பாலத்துக்கு அருகில் இன்று (08) மாலை இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். இவர்கள் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மணல் ஏற்றிவந்த டிப்பர் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து முச்சக்கர வண்டியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது முச்சக்கர வண்டி முழுமையாக சேதமடைந்துள்ளது சம்பவத்தில் கிளிநொச்சியை சேர்ந்த யோ.பிரியதர்சன் (25-வயது), உதயநகரை சேர்ந்த ப.தர்சிகன் (24-வயது), ஆனந்தபுரத்தை சேர்ந்த எஸ்.செல்வகுமார் (24-வயது) ஆகியோரே காயமடைந்துள்ளனர்.   https://newuthayan.com/சங்குப்பிட்டி-விபத்தில்/