Jump to content

பொன் சிவகுமாரனின் நினைவு தினம் பிரதேச சபையினால் அனுஷ்டிக்கப்படவுள்ளது.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பொன் சிவகுமாரனின் நினைவு தினம் பிரதேச சபையினால் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

pon.sivakumaran-300x202.jpgமுதல் வித்து பொன் சிவகுமாரனின் 44 வது ஆண்டு நினைவு தினம் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையினால் எதிர்வரும் 6 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு அனுஸ்டிக்கப்படவுள்ளதாக வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

உரும்பிராய் மண்ணின் மைந்தனான பொன் சிவகுமாரன் 1974 ஆம் ஆண்டு யூன் 5 ஆம் திகதி உரும்பிராய் பகுதியில் பொலிசாரின் சுற்றிவளைப்பில் சயனட் அருந்தி மாலை 6.15 மணிக்கு வீரச்சாவடைந்தார். அவரின் திருவுருவச்சிலை உரும்பிராய் சந்தியில் அமையப்பெற்றுள்ளது.

இச் சிலை வளாகத்தில் எதிர்வரும் சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு பொது அஞ்சலிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தற்போதைய கெரோனா சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு சகலரும் அஞ்சலி செலுத்துமுகமாகவே சனிக்கிழமை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இம்முறை உரைகள் எதுவும் இடம்பெறமாட்டாது. அதேவேளை உரிய சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகள், சமூக இடைவெளியுடன் அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகளை வலிகாமம் கிழக்கு பிரதேச சபை மேற்கொண்டுள்ளது. ஏற்கனவே குறித்த அஞ்சலிசெலுத்தல் இடம்பெறும் பகுதியில் சிரமதானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் தொற்று நீக்கியும் தெளிக்கப்பட்டுள்ளது. கலந்துகொள்பவர்கள் முகக்கவசங்களை அணிந்திருப்பது கட்டாயமானதாகும்.

அகவணக்கத்தினைத்தொடர்ந்து பொது ஈகைச்சுடரினை பொன் சிவகுமாரனின் குடும்பத்தினரும் அதனைத் தொடர்ந்து மலர் வணக்கம் செலுத்துதல் என்பன இடம்பெறும்.https://www.kuriyeedu.com/?p=259870

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நினைவு அஞ்சலிகள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

சிவகுமாரனின் நினைவுகளை பகிர்ந்த மௌலவி – (காணொளி)

FF4EE9DC-3A0A-4BF0-B7DB-9330FF895A06.jpg?189db0&189db0

 

தியாகி பொன் சிவகுமாருடனான நினைவுகளை பகிர்ந்துகொள்கிறார் கிளிநொச்சி மாவட்ட ஜும்மா பள்ளி தலைவர் அல்ஹாஜ் சாஹுல் ஹமீத் சாஜஹான்.

சிவகுமாரன் 1974ம் ஆண்டு ஜூன் 5ம் திகதி உரும்பிராயில் காவற்துறையினர் சுற்றி வளைத்த போது சயனைட் அருந்தி மரணமடைந்தார்.

இவர் ஈழப்போரில் முதன் முதலில் சயனைட் அருந்தி உயிர் நீத்த விடுதலை போராளி.

 
Link to comment
Share on other sites

On 5/6/2020 at 03:07, nochchi said:

பொன் சிவகுமாரனின் நினைவு தினம் பிரதேச சபையினால் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

 15 0

pon.sivakumaran-300x202.jpg

உருப்படியான முயற்சி!

சம்பந்தப்பட்டவர்களுக்கு பாராட்டுக்கள்!!!

Link to comment
Share on other sites

பொன் சிவகுமாரன் அவர்களுக்கு வீர வணக்கங்கள்.!! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதல் வித்து பொன் சிவகுமாரனுக்கு நினைவேந்தல்

IMG-1646-960x720.jpg?189db0&189db0

 

தமிழீழ விடுதலை போராட்டத்தின் முதல் வித்து பொன் சிவகுமாரனின் 44ம் ஆண்டு நினைவு தினம் உரும்பிராய் சந்தியில் அமைக்கப்பட்டுள்ள அவரின் திருவுருவச்சிலை அமைந்துள்ள நினைவிடத்தில் அரசியல் கட்சிகள், பொது அமைப்புக்கள் மற்றும் மக்கள் இன்று (06) அஞ்சலி செலுத்தினர்.

உரும்பிராயில் அமைந்துள்ள நினைவிடத்தில் இன்று காலை 8.30 மணிக்கு முன்னாள் எம்பி சிவாஜிலிங்கம் தலைமையிலான தமிழ்த்தேசியக் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.

இவ் அஞ்சலி நிகழ்வில் முன்னாள் எம்பி ஸ்ரீகாந்தா, மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் ஆகியோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

மேலும் உரும்பிராய் – வேப்பம்பிராய் வீதியில் அமைந்துள்ள மயானத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் காலை 9 மணிக்கு அஞ்சலிசெலுத்தினர்.

இந்த அஞ்சலி நிகழ்வில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திர குமார் பென்னம்பலம், செயலாளர் கஜேந்திரன், அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

உரும்பிராய் பொதுச்சந்தையில் அமைந்துள்ள சிவகுமாரின் திருவுருவ சிலை அமைந்துள்ள இடத்தில் 9.30 மணிக்கு வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் ஏற்பாட்டில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந்த அஞ்சலி நிகழ்வில் முன்னாள் எம்பிகளான மாவை சேனாதிராஜா, சரவணபவன், சித்தார்த்தன், உள்ளூராட்சி சபைகளின் தவிசாளர்கள், உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு அஞ்சலிசெலுத்தினர்.

  • IMG-1657-1024x768.jpg?189db0&189db0
  • IMG-1646-1024x768.jpg?189db0&189db0
  • IMG-1633-1024x768.jpg?189db0&189db0
  • IMG-1610-1024x768.jpg?189db0&189db0
  • IMG-1625-1024x768.jpg?189db0&189db0
  • IMG-1607-1024x768.jpg?189db0&189db0
  • IMG-1586-1024x768.jpg?189db0&189db0
  • IMG-1593-1024x768.jpg?189db0&189db0
 
 

https://newuthayan.com/முதல்-வித்து-பொன்-சிவகு/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தியாகியே வீரவணக்கம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு கூடியுள்ள அரசியல்கட்சிகளிடம் ஒரு வினா. 

 தியாகி பொன். சிவகுமாரனின் உறுதியில் ஒரு  துளியளவாவது உங்கள் உள்ளத்தில் இருக்கிறதா? வெறும் அடையாள நடவடிக்கையை விடுத்து  ஒரு காத்திரமான செயற்பாடுகளை அரசியல் ரீதியாக ஒன்றிணைந்து செய்ய முன்வருவீரகளா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீதியரசர் விக்னேஸ்வரன் தியாகி சிவகுமாரனின் உருவச்சிலைக்கு அஞ்சலி

தமிழ் உரிமைகளை வென்றெடுப்பதற்கான போராட்டத்தில் முதல் வித்தாகிய தமிழ் மாணவர் பேரவையின் முன்னோடியான பொன் சிவகுமாரனின் 44 வது ஆண்டு நினைவு தினமான இன்று சனிக்கிழமை தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் நீதியரசர் விக்னேஸ்வரன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் உரும்பிராய் சந்தியில் அமைக்கப்பட்டுள்ள அவரின் திருவுருவச்சிலைக்கு அஞ்சலி செலுத்தினர்.

தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் நீதியரசர் விக்னேஸ்வரன் மற்றும் முக்கியஸ்தர்களான அருந்தவபாலன், சிற்பரன், மீரா அருள்நேசன், ரட்ணகுமார் அகியோருடன் EPRLF கட்சியை சேர்ந்த முக்கியஸ்தர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் கலாநிதி சர்வேஸ்வரன் ஆகியோருடன் பலர் இந்த அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டனர்.

முன்னதாக தமிழ் மக்கள் கூட்டணியின் சார்பில் திருகோணமலையில் போட்டியிடும் விடுதலைப்புலிகளின் திருகோணமலை மாவட்ட முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளரான ரூபன் மற்றும் தமிழ் தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்களான ஸ்ரீகாந்தா, சிவாஜிலிங்கம் மற்றும் தமிழர் சுயாட்சி கழகத்தை சேர்ந்த அனந்தி சசிதரன் ஆகியோர் காலை 8.30 மணிக்கு தியாகி சிவகுமாரனின் உருவ சிலைக்கு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

TMK Sivakumaran (7)TMK Sivakumaran (5)TMK Sivakumaran (4)TMK Sivakumaran (3)TMK Sivakumaran (1)

 

http://www.samakalam.com/செய்திகள்/நீதியரசர்-விக்னேஸ்வரன்-த/

Link to comment
Share on other sites

On 6/6/2020 at 12:02, உடையார் said:

இந்த அஞ்சலி நிகழ்வில் முன்னாள் எம்பிகளான மாவை சேனாதிராஜா, சரவணபவன், சித்தார்த்தன், உள்ளூராட்சி சபைகளின் தவிசாளர்கள், உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு அஞ்சலிசெலுத்தினர்.

இவர்களெல்லாம் சிவகுமாரனுக்கு சல்யூட் அடிக்கிறது இதுதான் வாழ்க்கைல முதல் தரம்!
தேர்தல் பண்ணுற திருவிளையாடல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வித்திட்ட மாவீரனுக்கு நினைவஞ்சலிகள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.