ஒடுக்குமுறைக்கு எதிராய் தனி ஒருவனாகப் போராடிய பொன். சிவகுமாரன்
-
Tell a friend
-
Similar Content
-
By புரட்சிகர தமிழ்தேசியன்
உலகின் இருதயங்களை துண்டாடும் கொரோனா: தீபச்செல்வன்
மனிதன் தனித்து வாழ முடியாத காரணத்தினால்தான் குடும்பம் என்ற அலகாகவும் சமூகம் என்ற நிறுவனமாகவும் வாழத் துவங்கினான். மனிதனுக்கு உணவும் உறையுளும் எப்படி முக்கியமோ அப்படித்தான், சக பாடிகளும் ஜோடிகளும் உறவுகளும் முக்கியமானவர்கள். மனிதர்களுக்கு உறவின் தீணியாக, உணர்வின் தீனியாக சக மனிதர்கள் தேவைப்படுகின்றனர். உலகம் இந்த கூட்டிணைவின் புள்ளியில்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. மனித நாகரிகங்களும் வாழ்க்கையும் இந்தப் புள்ளியில் புதிய உலகை படைத்துக் கொண்டிருக்கின்றது.
கிறிஸ்துவுக்குப் பிற்ப்ட்ட இந்த உலகத்திற்கு 2020 வருடங்கள் வரலாறு. இந்த வரலாறு முழுவதும் பல்வேறு கொள்ளை நோய்கள் ஏற்பட்டிருக்கின்றன. பேரழிவுகளும் நடந்திருக்கின்றன. விலங்குகளாக வாழ்ந்த மனிதன், தனது உடலில் ஏற்பட்ட மாற்றங்களையும் விளைந்த ஆற்றல்களையும் வைத்து உலகை வெற்றிக் கொள்ளத் துவங்கினான். அதனால்தான் நாகரிகள் வளர்ந்தன. நாம் வாழுகின்ற வாழ்க்கை என்பது அப்படியான மனிதனின் கண்டுபிடிப்புக்கள்தான்.
மனிதன் இயற்கையை ஒட்டி வாழ்ந்த போது, மனித நாகரிகள் செழிப்படைந்தது. அதனால்தான் உலகின் சில நாகரிகங்கள், பண்பாடுகள் பெரு வளர்ச்சியடைந்தன. இயற்கைக்கு எதிராகவும் மாறாகவும் மனிதனினடம் ஏற்பட்ட பண்பாடுகள் அவனுக்கு பெரும் பாதகங்களைதான் உருவாக்கின. அவைகள் பெரும்பாலும் அழிவுகளில் முடிந்தன. அதற்கான அறுவடைகளாக பூமி அழிவுகளையும் இடர்பாடுகளையும் தொடர்ச்சியாக எதிர்கொண்டும் வருகின்றது.
இப்போது உலகம் முழுவதும் கொரோனாதான் பேசுபொருளாக மாறியிருக்கிறது. ஒரு பெரும் ராட்சதனாக, ஒரு பொரும் கொலையாளியாக உலக மக்களை கொரோனா வைரஸ் அச்சுறுத்தத் துவங்கியுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம் தற்போது வரையில், 110 நாடுகளுக்கு பரவியுள்ளது. இலங்கையில் இரண்டாவது கொரோனா தொற்று நோயாளி இனம் காணப்பட்டுள்ளார். அத்துடன் இந்தியாவின் சில மாநிலங்களிலும் கொரோனா நோயாளிகள் இனம் காணப்பட்டுள்ளனர்.
கொரோனோ தொற்று சீனாவில் அதிகரித்திருந்த நிலையில், தற்போது அந்த நாட்டில் நோய் தொற்று விகிதம் குறைவடைந்துள்ளது. இத்தாலி, ஈரான், தென்கொரியா, பிரான்ஸ் முதலிய நாடுகளுக்கும் இத் தொற்று பரவியிருக்கிறது. கனேடிய பிரதமரின் இல்லத்திற்கும் கொரோனா தொற்று நுழைந்துவிட்டது அண்மைய செய்தி. பிரதமரின் மனைவிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. வேகமாக பரவும் தீயைப் போல இந்த நோய் உலக நகரங்களுக்கும் மக்களிடையேயும் பரவி அச்சுறுத்தலை பிறப்பித்துக் கொண்டிருக்கிறது.
இதுவரையில்ல 4200பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். சுமார் 24ஆயிரம் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஜனவரி மாதம் இந்த நோயின் தாக்கம் ஏற்பட்டு, தற்போது உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பரவி வருகின்றது. இதனால் பொது இடங்கள் முடங்கியிருக்கின்றன. பாடசாலைகளுக்கு விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இலங்கையில் பாடசாலை மாணவர்களின் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு பாடசாலைகளுக்கு ஏப்ரல் 20வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈழத்தில் யாழ்ப்பாணம் கொரோனாவின் அச்சுறுத்தலை கண்டு போர்க்கால வாழ்வைப் போல அஞ்சுகிறது. இதில் கேலி செய்யவம் கிண்டல் செய்யவும் ஒன்றுமில்லை. உலகமே முடங்கி வரும் நிலையில், எப்படியேனும் தம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்ற தவிப்புத்தான் இது. போர்க்காலத்தில், பதுங்குகுழிகளில் உணவுகளையும் அத்தியாவசியமான பொருட்களையும் நுகர்ந்து சேமித்துக் கொண்டதைப் போலவே இந்த முயற்சியும். போரும் அழிவுகளும் பசியும் பட்டினியும் ஆண்டாண்டாய் தொடர்ந்த நகரத்தின் மக்கள் இப்படி இருப்பதில் எந்த விதமான ஆச்சரியமும் கொள்ளத் தேவையில்லை.
ஈழத்தில் குறிப்பாக போர்க்காலத்தில் பல கொள்ளை நோய்கள் ஏற்பட்டிருக்கின்றன. இதனால் உயிரிழிப்புக்களும் நடந்திருக்கின்றன. ஒட்டுமொத்த இலங்கை தீவை சில நோய்கள் அச்சுறுத்தி இருக்கையில், போரால் இடம்பெயர்ந்து காடுகளிலும் மரங்களுக்கு கீழாயும் பதுங்குகுழிகளிலும் வாழ்ந்த மக்கள் பெரும் இடர்பாடுகளை எதிர்கொண்டனர். ஆனாலும் அக் காலத்தில் இருந்த விடுதலைப் புலிகளின் நிர்வாகம், இவற்றை வெற்றிகரமாக எதிர்கொண்டு, போர் நடக்காத இலங்கையின் பிற பகுதிகளின் இழப்புக்களை காட்டிலும் குறைவான இழப்புக்களுக்கு இழிவாக்கினர்.
மலேரியா, கொலரா, டெங்கு, நெருப்புக்காய்ச்சல் போன்ற பல்வேறு கொள்ளை நோய்கள் ஏற்பட்ட நிகழ்வுகளை போர்க்காலத்தில் வாழ்ந்த எவரும் மறந்திரார். இப்போதும் நோயை தடுக்கின்ற விழிப்புணர்வும் மக்கள் மத்தியில் மனிதாபிமானமும்தான் அவசியமாக தேவைப்படுகின்றன. ஊடகங்களும் சமூக வலைத்தளங்களும் கொரோனா பீதியை ஏற்படுத்துவதுடன், மக்களை ஒன்றிணைத்தல் என்ற முதன்மை பணியை செய்யும் ஊடகங்கள் இப்போது மக்களை துண்டாடுகின்ற வேலையை தம்மை அறியாது செய்கின்றன.
இந்த விசயத்தில் விசயத்திலும் முன்னூதாரணமான மாநிலமாக இருக்கிறது கேரளா. கேரளாக எல்லா விசயத்திலும் முன்னூதாரணமான மாநிலம்தான். அம் மாநிலத்தில் கொரோனா தொற்று நோயாளிகளுக்கு, சிறப்பாக சிகிச்சை அளித்து, அவர்களை அதிலிருந்து மீட்டிருப்பதாக சொல்லப்படுகின்றது. கருணையோடும், அன்போடும் அந்த நோயாளிகள் சிகிச்சை அளிக்கப்பட்டிருப்பதும் அவர்களின் மீட்சிக்கான நம்பிக்கையாக அமைந்திருக்கும் என்பதையும் உணர முடிகின்றது. எனெனில் கொரோனா இந்த உலகை துண்டாடுகின்றது. மனிதர்களுக்கு மனிதர்களை இடைவெளி கொள்ளச் செய்கின்றது. ஒருவருக்கு ஒருவர் விலகச் செய்கின்றது.
கொரோனா நோயில் சிக்கி உயிரிழப்பவர்களின் இறுதி நிமிடங்கள் பற்றி வெளியான சில செய்திகள் மனதை நடுங்கச் செய்கின்றன. உயிரிழப்பவர்கள், தமது உறவினர்களுடன் வீடியோ அழைப்பில் மாத்திரமே உரையாட முடியும் என்பதும் அவர்களை நேரடியாக பார்த்து விடைபெற முடியாது என்பதும் எவ்வளவு கொடுமையானது? இப்படியான மனிதமும் கருணையும் இல்லாத விடைபெறல்கள், ஒரு துயரமான இறுதிநிமிடங்கள் இனி இவ் உலகிற்கு வேண்டாம். தொட்டு தழுவி பிரியாத அந்த உயிர்களின் இறுதி அந்தரிப்பு ஒருபோதும் அடங்காது. மனிதமே இந்த அழிவின் முன்னால் தோற்றுவிட்டது.
உலகம் இயங்குவதற்கும், பண்பாடும் வாழ்வும் மேம்படுவதற்கும் அன்புதான் அடிப்படையானது. அன்பை வெளிப்படுத்த முடியாது, இணையர்களை பிரித்து வைக்கின்ற துயரத்தை கொரோனா ஏற்படுத்துகிறது. அன்பை, உலகை, இருதயங்களை துண்டாடுகின்ற கொரோனா இந்த மானுட உலகிற்கே பெரும் அச்சுறுத்தலானதுதான். ஆனாலும் இந்த நோயிலிருந்து மனித சமூகம் தன்னை பாதுகாத்துக் கொள்ளவும், உலகில் இதுபோன்ற கொள்ளை நோய் யுத்தகங்களிலிருந்து உலக மக்கள் தம்மை பாதுகாத்துக் கொள்ளவும் அன்புதான் கருவி. இதுபோன்ற அனுபவங்களின்போது மனிதநேயத்தை மேம்படுத்திக் கொள்வதுதான் இப் பூமியையும் அதன் மனிதர்களையும் பாதுகாக்கிற வழி.
தீபச்செல்வன். கட்டுரையாளர் ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்.
http://www.vanakkamlondon.com/theepachelvan-16-03-2020/
-
By புரட்சிகர தமிழ்தேசியன்
இவ்வளவுக்கு மத்தியிலும் ஈழத்தில் பொங்கல்: தீபச்செல்வன்
ஒரு இனத்தை அழிக்க வேண்டுமனால், அவர்களின் பண்பாட்டையும் மொழியையும் அழித்தால் போதும் என்பது ஆக்கிரமிப்பாளர்களின் நோக்கம். ஈழத் தமிழினம், கடந்த எழுபது ஆண்டுகளுக்கு மேலாக இன அழிப்பை சந்தித்து வருகின்றது. குறிப்பாக பண்பாடு சார்ந்த இன அழிப்புக்களை மிகவும் நுட்பமாகவும் வேகமாகவும் கண்ணுக்கு தெரியாத வகையிலும் இலங்கை அரசு முன்னெடுத்து வருகின்றது. ஈழத் தமிழினம் தமது உயிரையும் உரிமையையும் காத்துக்கொள்ளுவதற்கு மாத்திரம் போராடவில்லை, மாறாக பண்பாட்டு உரிமைகளுக்காகவுமே ஆயுதம் ஏந்தியும் இன்று ஆயுதமற்றும் போராடுகின்றது.
ஈழத் தமிழ் மக்களைப் பொறுத்த வரையில், பொங்கல் என்பது மிகவும் முக்கியத்துவம் பாய்ந்த பண்டிகையாகும். தைப்பொங்கலே தமிழ் புத்தாண்டாகவும் கொண்டாடப்படுகின்றது. ஆங்கில நாட்காட்டியின் அடிப்படையில் நாட்களல் நகர்ந்தாலும் ஈழத்தில் தமிழ் ஆண்டுப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்கின்ற பண்பாடு காணப்படுகின்றது. எத்தகைய போர்க் காலத்திலும் எறிகணைகள், குண்டு மழைக்கு மத்தியிலும் புதிய மண் பானை வைத்து பொங்கி சூரியனுக்கு படைத்துவிட்டு இடம்பெயர்கின்ற மக்கள் எமது மக்கள்.
பொங்கல் என்பது இரண்டு வித்தில் முக்கியத்தும் பெறுகின்றது. அது தமிழ் மக்களின் பண்பாட்டுச் சிறப்பையும் மாண்பையும் எடுத்துரைக்கின்றது. தமிழர்கள் இயற்கையை தெய்வமாக வழிபடுகிறவர்கள். அத்துடன் பசுக்களையும் தெய்வமாக வழிபடுகின்ற கருணை கொண்டவர்கள். தைப் பொங்கலின்போது, பொங்கி சூரியனுக்கு படையல் செய்கிறோம். இந்த உலகம் சிறப்பாக நகர வேண்டும் எனில் இயற்றை சீராக இருக்க வேண்டும். இன்றைக்கு மனிதர்கள் இயற்கைக்கு எதிராக பல்வேறு செயல்களை செய்து, இயற்கை சீற்றங்களுக்கும் பாதிப்புக்களுக்கும் முகம் கொடுத்து வருகின்றார்கள். பேரழிவுகள் இதனால் ஏற்படுகின்றன.
இயற்கையை தெய்வமாக வழிபட்டு, இயற்கையை பேணினால் இத்தகைய சிக்கல்கள் ஏற்படாது. தமிழ் மக்களின் பண்பாட்டில் இயற்கையை பேணி வணங்குகின்ற செயற்பாடுகள்தான் நிறைந்திருக்கின்றன. இயற்கையை பேண வேண்டும். பாதுகாக்க வேண்டும் என்ற உயரிய எண்ணங்களும் அறிவியலும்தான் தமிழ் மக்களின் வணக்க முறைகளின் பண்பாட்டு அம்சங்கள் எனலாம். அதில் முதன்மையானது தைப்பொங்கல் ஆகும்.
தமிழகத்தைப் பொறுத்தவரையில் தைப்பொங்கல் பண்பாடு ஆதிகால அம்சங்களில் இருந்து வெகுவாக மாறியிருக்கிறது. நாகரிகம், நவீன வாழ்க்கை முறையால் குக்கர் பொங்கலாக சுருங்கிய நிலமைகளும் காணப்படுகின்றன. அத்துடன் இந்திய அரசு தைப்பொங்கல் திருநாளை விடுமுறையாக அறிவிக்காமையும் தமிழக மக்களுக்கு பெரும் தாக்கத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஈழத்தில் பொங்கல் எப்படி? என்பதுதான் தமிழகத்தில் உள்ளவர்களதும் புலம்பெயர்ந்த மக்களதும் முக்கிய விசாரிப்பு. ஈழத்தில் வீட்டுக்கு வீடு இன அழிப்பு போரின் பலவிதமாக பாதிப்புக்கள். போரில் தாய் தந்தையை இழந்த குழந்தைகள், சிறுவர் இல்லங்களிலும் தெருக்களிலுமாக உள்ளனர். காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளை தேடும் தாய்மார்கள் ஒரு புறத்தில் கண்ணீரும் கம்பலையாகவும் தெருக்களில் இருந்து போராடுகின்றனர். சிறைகளில் அரசியல் கைதிகள். ஒவ்வொரு பொங்கலுக்கும் கணவர் வருவார், அப்பா வருவார் என்று காத்திருக்கும் பெண்களும் குழந்தைகளும் இன்னொரு புறத்தில் துயர வாழ்வு வாழ்கின்றனர்.
இவர்களின் வீடுகளில் பொங்கல் எப்படி இருக்கும்? இந்த மக்களின் பொங்கல் துயரப் பொங்கல்தான். இவ்வளவுக்கு மத்தியிலும் ஒரு வாழ்வை ஈழ மக்கள் வாழ்ந்துதான் ஆக வேண்டும். இத்தனை துயரங்களுக்கு மத்தியிலும் ஒரு பூ மலர்வதைப் போலவே ஈழ மக்கள் தமதது பண்பாட்டு பண்டிகைகளும் அனுசரித்துச் செல்கின்றனர். 2009இற்கு முன்னரான காலத்தில், தமிழீழ விடுதலைப் புலிகள் போர்க்களத்திலும் பொங்கல் செய்வார்கள். விடுதலைக்கான பொங்கலாக போராட்டம் நடந்த காலத்தில் புலிக் கோலமிட்டு, புதிய பானை வைத்து போர்க்களத்தில் பொங்கி தமிழ் பண்பாட்டை காத்தனர் விடுதலைப் புலிகள்.
போர் முடிந்து இந்தப் பத்தாண்டுகளில் எத்தனையோ பண்பாட்டு தாக்குதல்களுக்கும் நெருக்கடிகளுக்கும் ஈழத் தமிழ் மக்கள் முகம் கொடுத்து விட்டனர். ஈழ மக்களின் புனித ஆலயங்கள்மீது தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. ஈழத்து சைவ சுவாமிகள்மீது தாக்குதல்களை சிங்கள காடையர்கள் செய்துள்ளனர். நிலத்தை பிடிப்பதும் புத்தர் சிலைகளை குடியேற்றுவதாக ஒரு போர் நடந்து கொண்டே இருக்கின்றது. நெடுங்கேணி வெடுக்குநாறி மலையில் உள்ள ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் பொங்கல் செய்வதற்கு சிங்களப் பேரினவாதிகள் ஏற்படுத்திய தடைகளையும் இடையூறுகளையும் ஈழ மக்கள் மறந்திரார்.
அதைப்போல, முல்லைத்தீவு செம்மலை பிள்ளையார் ஆலயத்தில், ஆயிரம் பானை வைத்து பொங்கல் செய்தபோது, அங்கு ஆலய வாளகத்தில் அடாத்தாக குடியேறி விகாரை காட்டிய சிங்கள பிக்கு பொங்கல் பானைகளை தூக்கி எறிந்து அட்டாசகம் செய்தமை, ஒரு பண்பாட்டு மீறலும் அழிப்புமாகும். இன்றைக்கு சைவ ஆலயங்களை இலக்கு வைத்து, விகாரைகளை கட்டுவது, புத்தர் சிலையை குடியேற்றுவது என்று ஈழத் தமிழ் இனத்தின் பண்பாடு மீது போர் தொடுக்கப்படுகின்றது. ஒரு புறத்தில் இராணுவமும் இராணுவ முகாங்களும். மறுபறத்தில் சிங்கள பிக்குகளும் புத்தர் சிலைகளும் என்று ஈழம் இன்று பண்பாடு போரை எதிர்கொள்கிறது.
இனியாவது தமிழர்களின் வாழ்வில் இன்னல்கள் அகல வேண்டும் என்று வேண்டியபடி பொங்குவோம். ஈழ மண்மீது உண்மையான வெளிச்சம் படர வேண்டும் என்று பொங்கி சூரியனுக்கு படையல் இடுவோம். காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மீள வீடு திரும்ப வேண்டும் என்றும் அரசியல் கைதிகளாய் சிறையில் வாழ்பவர்களுக்கு விடுதலை வேண்டும் என்றும் இறைஞ்சி பொங்குவோம். பசுக்களுக்குகூட பொங்கி, வழிபட்டு, உணவுட்டும் பண்பாட்டை கொண்ட தமிழ் இனம், இன்று சிறைகளிலும் தெருக்களிலும் வாடிக் கொண்டிருக்கின்றது. உரிமையை இழந்து, பண்பாட்டுக்காகவும் விடுதலைக்காகவும் போராடுகின்றது.
விடுதலையை வென்றெடுக்கும் போராட்டத்தையும் இனியெமது பண்பாடு ஆக்குவாம். அழிவுகளின் மத்தியிலும் பண்பாட்டுக் கூறுகளை கைவிடாதவர்களாய் வாழ்வோம். எமது இனத்தின் மொழி, பண்பாடு, நிலம், உயிரினங்கள் என்று அனைத்தையும் எத்தகைய சூழலிலும் பாதுகாத்து விடுதலையை வென்றெடுப்போம். பண்பாட்டு வழியிலும் போராட வேண்டிய நிலைக்கு ஈழத் தமிழினம் தள்ளப்பட்டுள்ளது. அப்படிப் பார்க்கையில், பொங்கலைக்கூட ஒரு ஆயுதமாக பண்பாட்டு எழுச்சியாக பொங்க வேண்டும். குமுறும் எமது மனங்கள் போல எத்தனை துயரத்தின் மத்தியிலும் பொங்கல் பானையும் பொங்கட்டும்.
-தீபச்செல்வன். கட்டுரையாளர் கவிஞர் மற்றும் பத்திரிகையாளர்
http://www.vanakkamlondon.com/theepachelvan-16-01-2020/
-
By புரட்சிகர தமிழ்தேசியன்
ஈழத்தில் மனித உரிமைகள் - தீபச்செல்வன்.
Posted on December 29, 2019 by செய்தியாளர் பூங்குன்றன்
அண்மையில் இலங்கை சனாதிபதியாக பதவியேற்ற கோத்தபாய ராஜபக்ச, பெரும்பான்மையின மக்கள் கோபப்படும் வகையில் சிறுபான்மையினர் எதையும் கேட்கக்கூடாது என்றொரு புதிய தத்துவத்தை திருவாய் மலர்ந்துள்ளார். இன அழிப்பு போருக்கு மனிதாபிமானப் போர் என்று பெயர் சூட்டியவர்கள் இப்படி எல்லாம் பேசுவது ஆச்சரியமானதல்ல. இந்த உலகப் பந்தில் வரலாறு ரீதியாக பண்பாட்டு ரீதியாக ஒரு தனித்துவமான இனமாக இறைமையும் சுய நிர்ணய உரிமையும் கொண்ட ஈழத் தமிழ் மக்களின் உரிமைகள், சிங்கள அரசாலும் அனைத்துலக சமூடூகத்தினாலும் எப்படி நோக்கப்படுகின்றன?
ஒரு மனிதனின் அடிப்படை உரிமை என்ன? தான் பிறந்த மண்ணில் தனக்கான உரிமைகளுடன் வாழ்தலே அடிப்படை உரிமையாகும். ஒரு மனிதன் வாழும் உரிமையைப் பெறுவதும் மற்றவரை வாழ விடும் வகையில் நடப்பதுதான் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பிரகடனத்தின் அடிப்படை அம்சம். அப்படிப் பார்க்கையில், நாம் நமக்கான வாழ்வைத்தான் வாழ்கிறோமா? இலங்கைத் தீவைப் பொறுத்தவரையில், சிங்களப் பேரினவாத அரசின் கீழ் நாம் ஒடுங்கியும் அடங்கியும் வாழ வேண்டும் என ஆள்பவர்கள் நினைக்கின்றனர்., இதுதான் யதார்த்தமான நிலை. நாம் பிறந்த மண்ணில் நமது உரிமைகளுடன் வாழ முடியவில்லை. பெரும்பான்மையினமே எமது உரிமைகளுடன் எம்மை வாழ அனுமதிக்கவும் இல்லை மிகவும் வெளிப்படையான விசயம்.
இலங்கையில் புரையோடிப் போயிருக்கிற இனப்பிரச்சினைக்கு இதுதான் அடிப்படைக் காரணமாக இருக்கிறது. எம்முடைய மண்ணில் நாம் வாழ முடியாது. நம்முடைய அடையாளங்களுடன் நாம் வாழ முடியாது. நாம் நாமாக வாழ முடியாது. நம்முடைய வரலாற்றைப் படிக்க முடியாது. நம்முடைய வரலாற்றை பேச முடியாது. இழந்த உரிமைகளைப் பற்றி பேசவும் அதனைக் கோரவும் முடியாது. உலகமயமாதல் சூழலில் உலகின் ஒவ்வொரு செயற்பாடுகளையும் அவதானிக்கின்ற, அல்லது தட்டிக் கேட்கக்கூடிய காலம் ஒன்றிலேயே நாம் பலவந்தமாக இன்னொரு வாழ்க்கையில் அமிழ்த்தப்படுகிறோம். அப்படியெனில் இலங்கை எத்தகைய மனித உரிமை மீறல்களைக் கொண்ட நாடு? இந்த அதிர்ச்சி எவரையும் உறுத்தவில்லை என்பதுதான் உலகின் புதிய வியப்பு.
எல்லா மனிதர்களும் சுதந்திரமானவர்கள் என்பதையும் உரிமையிலும் கண்ணியத்திலும் ஒருவருக்கு ஒருவர் சமமானவர்கள் என்றும் ஐ.நாவின் மனித உரிமைப் பிரகடனம் குறிப்பிடுகிறது. ஒவ்வொரு மனிதனுக்குமான வாழ்தலை வலியுறுத்தும் இந்த நாள் இனம், மதம், நாடு, மொழி, பால், சாதி போன்ற ஏற்றத்தாழ்வுகளற்ற ரீதியில் மனிதர்கள் அவர்களுரிய சம உரிமையை உடையவர்கள் என்றும் குறிப்பிடுகிறது. இந்த நாட்டிலும் இந்த உலகத்தாலும் ஒடுக்கப்படும் ஈழத் தமிழ் இனத்தின் உரிமைகளுக்கு என்ன இடம் வழங்கப்பட்டது என்பதைக் குறித்து ஆராய்வது உபயோகம் மிக்கது.
இலங்கையில் மனித உரிமை மீறல்களின் ஆரம்ப நிலையோ மிகவும் கடூரமானது. உண்மையில் அதன் அடிப்படையே இன மேலாதிக்கம்தான். சக மனிதர்கள்மீதான ஒடுக்குமுறை பாரிய குற்றமாக உலகில் கருதப்படுகின்றது. மனிதர்களுக்கிடையிலான சமத்துவமின்மை மற்றும் ஒடுக்குமுறை, சிறுவர்கள், பெண்கள் மீதான ஒடுக்குமுறை மற்றும் மீறல்கள் குறித்தெல்லாம் உலகில் நன்றாகப் பேசப்படுகின்றது.
ஆனால் மெய்யாகவே அந்த மீறல்களை தடுக்கும் ஆக்கபூர்வமான செயற்பாடுகளை உலகில் உள்ள நாடுகளின் அரசுகள்மீது பணிப்பதற்குத்தான் இயலாமல் இருக்கின்றன. இலங்கையில் ஒரு சிறுபான்மை இனம் இன்னொரு பெரும்பான்மை இனத்தால் ஒடுக்கப்படுகின்றது. இது இன உரிமை மீறல். இது இன உரிமை மறுப்பு. ஆனால் இதனை ஒரு மனித உரிமை மீறல் என்பதை ஏற்றுக் கொள்வதற்கே 30 ஆண்டுகள் இந்த உலகிற்கு தேவைப்பட்டுள்ளன என்றால் இந்த உலகம் எவ்வளவு ஆபத்தமானது? பல இலட்சம் மக்களின் உயிர்களை காவு கொடுக்க வேண்டிய நிலைக்கு ஆளாக்கப்பட்டது என்பது எவ்வளவு கொடூரமான விசயம். ஒரு கொடும்போரின் இறுதி நாட்களில் மாத்திரம் ஒன்றரை லட்சம் மக்களை பலிகொடுக்க வேண்டி ஏற்பட்டதே?
உண்மையில் இதுதான் உலகின் மனித உரிமை குறித்த சிரக்தைளாக இருக்கின்றன. இதுதான் உலகின் உண்மையான நிலவரமாக இருக்கின்றது. ஈழத்தில் மாத்திரமல்ல, ருவாண்டா இனப்படுகொலை, குர்து இனப்படுகொலை, ஆர்மோனியன் இனப்படுகொலை என்று உலகில் நிகழ்ந்தேறிய எல்லா இனப்படுகொலைகளின் போதும் மனித உரிமை என்ற வார்த்தைகள் சாதாரணமாககூட உபயோகிக்கப்பட்டு, அவை தடுத்து நிறுத்தப்படவில்லை. அதனை மனித உரிமை மீறல்களாக ஏற்றுக்கொள்ளவும், இனப்படுகொலைகளாக ஏற்றுக்கொள்ளவும் வெகுகாலம் எடுத்தது. இந்த மக்களின் இனப்படுகொலைக் கல்லறைகள்மீது வெள்ளையும் அடிக்கப்பட்டது. உலகின் அரசியல் தேவைகளின் பிரகாரங்களின்படியே தீர்ப்புக்கள் காலம் தாழ்ந்து கிடைத்தன.
இலங்கை விடயத்தில் ஐ.நா மிகவும் தோற்றுப் போயிருந்தது. இதனை ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள், இந்நாள் செயலாளர் நாயகங்கள் ஒத்துக்கொண்டிருக்கிறார்கள். ஐ.நா அதிகாரிகள் இதனை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். காலம் கடந்த இந்த ஒப்புதல்களும் வருத்தங்களும் இந்த மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க தவறியிருக்கின்றன. இராண்டாம் உலகப் போரின் பேரழிவின் பின்னர், உலகின் வல்லரசு நாடுகளின் பாதுகாப்பைத்தான் இத்தகைய தினங்கள் உறுதிப்படுத்த முயலுகின்றன. ஒடுக்கப்பட்ட இனங்களும் சிறுபான்மை இனங்களும் உலகின் ஆதிக்க நாடுகளினாலும், அதன் அரசியல் கூட்டு நாடுகளினாலும் உரிமை இழப்புக்கு உள்ளாக்கப்படுகின்றனர். அதனை நியாயப்படுத்தவும் அவர்களின் அரசியலுக்கும்தான் இவை உபயோகப்படுகின்றன.
இலங்கைத் தீவில் தொடரும் இன உரிமையும் இப்படி ஒரு கணக்கிலேயே தொடர்கின்றது. ஒரு சிறு இனத்தின் பல்லாயிரம் போராளிகள் ஆயுதம் ஏந்தி மாண்டுபோனதின் அரசியல் உண்மையை புரிந்துகொள்வது அவ்வளவு கடினமானதல்ல. உலகெங்கும் அதற்கு பல உதாரணங்கள் இருக்கின்றன. தன்னுடைய மொழியை, தன்னுடைய நிலத்தை, தன்னுடைய அடையாளத்தை, தன் சக மனிதர்களை அழிப்பவர்களுக்கு எதிராக ஆயுதம் தாங்குகிற நிலமை வருகின்றது எனில் அங்கு மனித உரிமை மீறல் என்பது எந்தளவுக்கு முற்றிப் போன பிரச்சினையாக மாறியிருக்கிறது என்பதை வல்லுனர்கள் அறியாதவர்களல்ல.
ஈழத்தில் மிகக் கொடிய இனப்படுகொலை நடைபெற்று பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன. போரில் படு பயங்கரமாக ஒரு இன அழிப்பின் அத்தனை நோக்குகளுடனும் கொல்லப்பட்ட மக்கள் குறித்து எந்த நீதியும் இல்லை. மக்கள் கொல்லப்பட்டார்கள் என்பதை ஏற்கவும் அந்த மக்களுக்காக ஒரு விளக்கினை ஏற்றவும், அவர்களுக்காக அழவும்கூட இங்கு உரிமை மறுக்கப்பட்டிருந்தது. இதனைக்கூட இந்த உலகும், இத்தினங்களும் இதுசார் அமைப்புக்களும் கண்டுகொள்ளவில்லை. இறுதியில் ஈழ இனப்படுகொலை குற்றங்களிலிருந்து தப்பிக் கொள்ளும் சர்வதேச நிகழ்ச்சி நிரல்களின் அடிப்படையில் அதிகாரபூர்வமாக ஏற்கப்படாத நிலையில் கள்ள மௌனத்துடன் இணங்கப்பட்டிருக்கிறது.
இலங்கையில் மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில், குறிப்பாக இனப்படுகொலைப் போரின்போதும், அதற்குப் பிந்தைய சில வருடங்களிலும் மனித உரிமை விடயம் குறித்து எந்தக் கேள்வியும் எழவில்லை. பின்னர் உலக அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கு ஏற்ப பேசப்பட்டது. ஆனால் மகிந்தவின் ஆட்சி முடிவுற்ற பின்னர், மைத்திரி – ரணில் ஆட்சிக் காலத்தில் ஈழப்படுகொலை விவகாரங்கள்மீது மெல்ல மெல்ல வெள்ளையடிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. போரில் கொல்லப்பட்டவர்கள் குறித்து எந்த சொற்களையும் இலங்கை ஆட்சியாளர்கள் எவரும் இதுநாள்வரை பேசியதில்லை. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பல நூறு நாட்களாக ஈழ வீதிளில் நின்று போராடுகிறார்கள். இன்னமும் போராடுகிறார்கள்.
ஒரு மனிதரின் உரிமை குறித்துப் பேசும் சாசனங்கள், ஒரு இனத்தின் பகுதியினரே இல்லாமல் போயிருப்பதை குறித்து பேசாமல் இருப்பது ஏன்? அவர்கள் மிகவும் கொடூரமான வழிகளில் கொல்லப்பட்டமை குறித்தும் காணாமல் ஆக்கபட்டமை குறித்தும் அவர்களின் வாழ் நிலங்கள் பறிக்கப்பட்டமை குறித்தும் பேசாதிருப்பது ஏன்? உலகின் இந்த வஞ்சகங்களிற்கும் இலங்கையில் காணப்படும் இனப் பாரபட்சங்களுக்கும் இடையில் ஒரு வேறுபாடும் இல்லை. ஐக்கிய நாடுகள் சபை போன்றவை இந்த உரிமை மீறல்களை ஊக்குவிக்கின்றன. இத்தனை உலகப் பேரழிவுகளின் பின்னரும் தரவுகளை மதிப்படும் ஒரு சபையாக, ஈறுகளில் வருத்தம் தெரிவிக்கும் ஒரு அமைப்பாக ஐ.நா தேவை தானா?
ஆனாலும் நாம் இரத்தமும் சதையுமாக அனுபவித்த கதைகளை இவ் உலகிற்கு கையளிக்க வேண்டிய தேவையில் இருக்கிறோம். எங்களுக்கு நேர்ந்த இந்தக் கதி உலகில் எந்த இனத்திற்கும் நேரக்கூடாது. உலகில் உள்ள மக்களின் உனித உரிமைகள் மதிக்கப்படவேண்டும். எந்த இனமும் எங்களைப் போல அழிந்துபோகக் கூடாது. ஒடுக்கப்படக்கூடாது. அரசெனப்படுவது மக்களை பாதுகாக்கவும், அந்த மக்களை இறைமையைப் பெற்று ஆள்வதும் என்பதும் எங்கள் நாட்டில் எங்கள் விடயத்தில் எத்தனை அர்த்தமற்றது? எங்கள் அரசே எங்களை கொலை செய்தது. இப்போது எங்களை கொலை செய்தவர்களே மீண்டும் ஆள்கின்றனர்.
ஈழப் பிரச்சினைக்கு அதிகாரப் பகிர்வை தரப் போவதில்லை என்று புதிய அதிபர் கோத்தபாய தெரிவித்தார். ஆனால் புலிகளை அழித்துவிட்டுத்தான் அதிகாரத்தை கொடுப்போம் என்று இந்தியாவுக்கும் பிற நாடுகளுக்கும் ராஜபக்சேவினர் வாக்குறுதி அளித்துள்ளனர். அப்படியிருக்க இன்று அதிகாரத்தை தர மாட்டோம் என்கிறார். உள்ளக சுயநிர்ணய உரிமை அதாவது சமஷ்டி ஆட்சி மறுக்கப்பட்டால், வெளியக சுயநிர்ணய உரிமையை அதாவது தனிநாடு கோரும் உரிமை ஐ.நா சாசனத்தின் பிரகாரம் ஈழ மக்களுக்கு உண்டு ஈழத் தமிழ் தலைவர் சம்பந்தன் தெரிவித்திருக்கிறார். ராஜபக்சேவைப் போல கோத்தபாயாவும் தனி ஈழத் தீர்வுக்குத்தான் தமிழர்களை தள்ளுகின்றனர்.
உலகின் பாதுகாப்பு விதிகளும் இனப்படுகொலை செய்யப்பட்ட எங்கள் குருதியை கழுவுகின்றன. இத்தகைய விதிகள் திருத்தப்பட வேண்டும். எங்கள் இழப்பும் சிந்திய குருதியும் உலகில் எவரும் இக் கதி ஏற்படாத நிலையொன்றை வலுவாக்க புதிய சாசனத்தை எழுத வேண்டும். இத்தகைய தினங்கள் அர்ததமற்றுப் போகலாம். மனித உரிமைப் பிரகடனம் வெறும் காகித்தில் நினைவுகூரப்படலாம். ஆனால் மனித உரிமைக்கும் இன அழிப்பு மீறலுக்கும் ஆளாகிய நாம் அதன் வலிகளைப் பேச வேண்டும். இந்த தினத்தில் உலகிற்கு அதை உணர்த்த வேண்டும். உலகின் அத்தனை ஒடுக்கப்பட்ட, மனித உரிமை மீறல்களுக்கு உள்ளாக்கப்பட்டவர்களுக்காகவும் குரல் கொடுக்க வேண்டும்.
-- தீபச்செல்வன், கட்டுரையாளர் கவிஞர் மற்றும் பத்திரிகையாளர்.
http://www.vanakkamlondon.com/theepachelvan-29-12-2019/
-
By நிழலி
ஈழக் கவிஞர் தீபச்செல்வன்
முள்ளிவாய்க்கால் என்ற மரண நிலத்தையும் நந்திக்கடல் என்ற மரணக் கடலையும் ஈழத் தமிழினம் மறந்துவிட இயலாது என்று மரணத்தில் துளிர்க்கும் கனவு கவிதை புத்தகத்தின் தொகுப்பாசிரியர் ஈழக் கவிஞர் தீபச்செல்வன் தெரிவித்துள்ளார். வரலாற்றின் தொடர்ச்சியாக தொடர்ந்து வாழ்தலுக்காக நீதியையும் அநீதியையும் பதிவு செய்வதற்காக போரையும் குற்றத்தையும் எடுத்தியம்புவதற்காக வெற்றியையும் வீழ்ச்சியையும் விவாதிப்பதற்காக ஈழத்தின் போர் இலக்கியம் தொகுப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள ஆழி பதிப்பகம் ஈழத்தை சேர்ந்த எட்டு சமகால கவிஞர்களின் கவிதைகளை மரணத்தில் துளிர்க்கும் கனவு என்ற புத்தகமாக வெளியிட்டுள்ளது. வருடம் தோறும் தமிழகத்தில் இடம்பெறும் சென்னைப் புத்தகக் கண்காட்சி வரிசையில் இந்த ஆண்டு நடைபெறும் 35ஆவது சென்னைப் புத்தகக் கண்காட்சியில் இந்த புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் புத்தகத்தை தொகுத்துள்ள ஈழக் கவிஞர் தீபச்செல்வன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து குறிப்பிட்டவை வருமாறு:
ஈழத் தமிழினம் வரலாறு காணாத அழிவை சந்தித்திருக்கிறது. தமிழ் பேசும் மக்களின் அரசியலையும் வாழ்வையும் பொறுத்தளவில் பெரும் வீழ்ச்சியாக இப்போர் முடிந்திருக்கிறது. அழிவு என்ற பேரிலக்குடன் இந்தப் போர் நடத்தப்பட்டது. இந்தக் காலத்தில் ஈழத் தமிழினம் பேரழிவுக்கு முகம் கொடுத்திருக்கிறது என்பது தாங்க முடியாத மகா துயரம். போர் பல்வேறு நோக்கங்களை உடையது. அது அரசியல், பண்பாடு, வரலாறு, இனம், மொழி என்று எல்லா கூறுகளிலும் தாக்குகிறது.
ஒரு முக்கியமான வரலாற்றுக் கால கட்டத்தில் வாழ வேண்டிய நிர்பந்தமும் தேவையும் இருக்கிற தமிழ் பேசும் மக்களின் இன்றைய காலத்தை நாம் கடந்து செல்ல வேண்டும். இதனால் வார்த்தைகள் நம்பிகையை அளிக்க வேண்டிய பொறுப்பை வகிக்கின்றன. நடந்த துயரங்களைக் குறித்து உரையாடவும் பதிவு செய்ய வேண்டிய கடமையும் இருக்கின்றன. ஈழப்போராட்ட இலக்கியங்களில் போராட்டத்தையும் வாழும் கனவையும் கூர்மையாக்க வேண்டிய படைப்புக்களே இன்று நமக்குத் தேவைப்படுகின்றன.
இப்போர் வாழும் இனத்தை மாத்திரம் அழிக்கவில்லை. இந்த இனத்தின் ஈழ நிலத்தின் பல தலைமுறைகளை அழித்திருக்கிறது. தலைமுறைகளைக் கடந்து பல வகையில் தாக்கம் செலுத்துகிறது. இந்தப் பெரும் அழிவை உலகம் பார்த்துக் கொண்டிருந்தது. இந்த துயரத்தை தடுக்க முடியாமல் சுற்றி அரசியல் மற்றும் அதிகார வேலியிடப்பட்டிருந்தது. இப்போர் மற்றும் அதன் துயரம் இன்னும் எழுதப்படாத கவிதைகள். அவை போர் மக்களின் சாட்சியாக எழுதப்பட வேண்டியவை.
இந்தப் போர் எங்கள் மக்களை, எங்கள் கவிஞர்களை குரல் அற்றவர்களாக்கியிருக்கிறது. கவிதைகளை அழித்திருக்கிறது. இலக்கியங்களை இல்லாமல் செய்திருக்கிறது. இவைகள் ஒரு சில கவிஞர்களிடம் மட்டும் உள்ள கவிதைகள். இவைகள் ஒரு சில கவிஞர்கள் மட்டும் எழுதிய கவிதைகள். இப்போர் பற்றி முழுமையான கவிதைகளும் முழுமையான இலக்கியமும் தொகுக்கப்பட வேண்டும். இந்தப் போர் சரித்திரத்தில் முக்கியமானது. வாசிக்கப்படவும் ஆராயப்படவும் வேண்டியது. அதனூடாக ஈழ மக்களின் வாழ்வை வரலாற்றை நகர்த்த வேண்டியுள்ளது.
வரலாற்றின் தொடர்ச்சியாக தொடர்ந்து வாழ்தலுக்காக நீதியையும் அநீதியையும் பதிவு செய்வதற்காக போரையும் குற்றத்தையும் எடுத்தியம்புவதற்காக வெற்றியையும் வீழ்ச்சியையும் விவாதிப்பதற்காக இந்தப் போர் இலக்கியம் தொகுப்பட வேண்டும். ஈழ இலக்கியம் வெறும் கண்ணீர்ப் பிரதிகள் அல்ல. வெறும் இரத்தப் பிரதிகள் அல்ல. லட்சம் உயிர்கள் அசையும் பிரதிகள். வாழ்வை வாழ விரும்பும் சனங்களின் ஏக்கங்கள். அவர்கள் சொல்ல விரும்பிய கதைகள். அவர்கள் சொல்லாது சென்ற கதைகள். ஈழ மக்களின் வாழ்வு. அந்த வாழ்க்கை பல்வேறு கோணங்களில் காண விரும்பும் கனவுகள். ஈழ நிலத்தில் இந்த ஏக்கமும் கனவும் நெடியதாய் விளைந்திருக்கிறது.
எண்பதுகளில் ஈழத்து கவிஞர்கள் பதினொருபேர் எழுதிய மரணத்துள் வாழ்வோம் என்ற கவிதைத் தொகுப்பு வெளியானது. அதன் பிறகு ஈழத்து கவிஞர்களின் பல்வேறு தொகுப்புக்கள் வெளிவந்து விட்டன. எண்பதுகளில் மரணத்தில் வாழ்ந்து கொண்டு எழுதப்பட்ட இந்தக் கவிதைகளுக்கும் இந்தத் தொகுப்பில் இடம்பெறும் கவிதைகளுக்கும் இடையில் சுமார் மூன்று தசாப்த்தங்கள் கிழிந்திருக்கின்றன. முப்பது ஆண்டுகள் ஆகிப்போயிருக்கின்றன. இப்பெரும் கால கட்டத்தில் பல்வேறு அரசியல் நிகழ்வுகள் நடந்துவிட்டன. ஈழப் போராட்டத்தில் 2009 பெரும் ஊழி நடந்ததொரு காலம்.
தொடர்ந்தும் ஈழ நிலத்தில் வாழ்ந்து கொண்டு போரையும் அதன் துயரத்தையும் எதிர்கொள்ளும் கவிஞர்கள் இந்தக் கவிதைகளை எழுதியிருக்கிறார்கள். இக்கவிதைகளுக்கு இடையில் வேவ்வேறான வாழ்வுச் சூழலும் தவிப்பும் அனுபவங்களும் இருக்கின்றன. எல்லாக் கவிஞர்களிடத்திலும் வாழ்க்கை பற்றிய ஏக்கமும் காதலும் பெரும் எதிர்பார்ப்புக்களாய் இருக்கின்றன. போரையும் காதலையும் வௌ;வேறு கோணங்களில் இந்தக் கவிஞர்கள் பார்க்கிறார்கள்.
இத்தொகுப்பில் ஈழத்தின் கிழச்கைச் சேர்ந்த அனார், அலறி மற்றும் வடமேல் மகாணத்தைச் சேர்ந்த பஹீமஜஹான் ஈழத்தின் வடக்கில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சித்தாந்தன், துவாரகன், வன்னியில் கிளிநொச்சியைச் சேர்ந்த தீபச்செல்வன் முதலியோரின் கவிதைகள் இடம்பெறுகின்றன. தானா. விஷ்ணுவும் பொன். காந்தனும் முள்ளிவாய்க்கால் போர்த்துயரத்தை இறுதிவரை அனுபவித்து மீண்டவர்கள். இந்தத் தொகுப்பைப் பொறுத்தவரை இவர்கள் மிக முக்கியமான சாட்சிகள்.
இந்தத் தொகுப்பில் இடம்பெறும் கவிஞர்கள் ஈழப் போராட்டத்திலும் ஈழ மக்களின் வாழ்க்கையின் இன்றைய கால கட்டத்தில் பல்வேறு நகர்வுகளுடன் தொடர்புடையவர்கள். இந்தக் கவிஞர்கள் தொண்ணூறுகளிலிருந்து இன்று வரை எழுதிக் கொண்டிருப்பவர்கள்.
ஈழப்போரட்டம் மிகப் பெரிய எழுச்சியையும் வீழச்சியையும் இந்த இருபது ஆண்டுகளில் கண்டிருக்கிறது. இந்த எழுச்சியோடும் வீழச்சியோடும் இந்தத் கவிஞர்கள் பயணித்திருக்கிறார்கள். அதனுடன் nhநருங்கியிருந்திருக்கிறார்கள். அழிவின் விளிம்புவரை பயணித்திருக்கிறார்கள். எல்லாவிதமான பார்வைகளுடனும் எதிர்பார்ப்புக்களுடனும் இப்போராட்டத்தை எதிர்நோக்குபவர்கள். இதற்காய் பங்களித்திருக்கிறார்கள்.
அனார் ஈழப்பெண் கவிதைகளில் நவீன முகமாய் முக்கியம் பெறுபவர். பெண்ணுடல் பெண்மொழி என்று தனித்துவமிக்க திசையில் அவரது கவிதைகள் பயணித்துக் கொண்டிருக்கின்றன. பஹீமாஜான் அரசியல் சர்ரந்த பார்வையும் புரட்சித்தனமும் கொண்ட கவிஞர். ஈழத்து கவிதைகளில் அவர் தனக்கான தனியிடத்தை உருவாக்கியிருக்கிறார். நம்பிக்கையையும் வலிமையையும் இவரது கவிதைகள் தருகின்றன.
துவாரகனும் சித்தாந்தனும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள். யாழ்ப்பாணம் மூடுண்டு இராணுவ வலயமாகிய பொழுது இவர்களது கவிதைகள் அந்த வாழ்க்கையை அச்சமும் இருளுமாக பதிவு செய்தது. வார்த்தைகள் தடை செய்யப்பட்ட காலத்தில் குரல்கள் முறிக்கப்பட்ட காலத்தில் இவர்களின் கவிதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. அச்சம் மிகுந்த வாழ்வின் குரூரத்தை சித்தாந்தன் சித்திரித்திருக்கிறார். அதே வாழ்வை துவாரகன் கேலி செய்கிறார். இந்த இரண்டு அணுகுமுறைகளும் இக்கவிஞர்களின் கால கட்ட அரசியலின் எதிர்வினையாகவும் மெனளமாகவும் கேலியாகவும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
கிழக்கு மகாணத்தின் மண்வாசனையையும் இயற்கையையும் யுத்தம் உருவாக்கிய பயரங்கர சூழலையையும் பற்றி அலறி எழுதுகிறார். இத்தலைமுறையில் அலறி முக்கியமானவர். கிளிநொச்சியைச் சேர்ந்த நான் வன்னியில் போர்ச் சூழலிலும் பின்னர் யாழ்ப்பாண இராணுவ பிரதேசத்திலம் வாழ்ந்த பொழுது இந்தக் கவிதைகளை எழுதியிருந்தேன். யுத்தம், வாழ்வு, கொலை, இரத்தம், அச்சம் முதலிய சூழலில் நான் வாழ்ந்திருந்த பொழுது அந்த வாழ்க்கையை இக்கவிதைகளில் எழுதினேன்.
முள்ளிவாய்க்கால் என்ற மரண நிலத்தையும் நந்திக்கடல் என்ற மரணக் கடலையும் ஈழத் தமிழினம் மறந்துவிட இயலாது. அவை ஈழத்தின் அரசியல் குறியீடுகள். மனசாட்சியுள்ள எந்த மனிதர்களும் மறுத்துவிட முடியாது. கொல்லப்பட்ட மக்களுக்காக வாழும் விடுதலையை வாழும் கனவை அவாவிக் கொண்டிருக்கிறோம். மரணத்திலிருந்து எங்கள் வாழ்க்கையை மீள கட்டி எழுப்ப வேண்டிய நிலையில் இருக்கிறோம்.
வாழ்வது என்பது எங்களின் மாபெரும் கனவு. வாழ்வதற்காகவே இத்தனை துயரங்களை கடந்தோம். இத்தனை துயரங்களைச் சுமந்தோம். இப்பெரும் துயரினதும் மனிதப்படுகொலையினதும் பின்னர் மரணத்தில் துளிர்க்கும் கனவாக ஒன்றாய் வாழ்தலுக்கான குரலாய் ஈழத்தின் தமிழ் பேசும் சமூகத்திடமிருந்து இந்தக் கவிதைகளை ஒன்றாய் தருகிறோம் என்று தீபச்செல்வன் குறிப்பிட்டார்.
நான் ரத்தமும் சதையுமாக ஈழ ஆதரவு இயக்கங்களில் வளர்ந்தவன் பதிப்பாளர் செந்தில்நாதன்
ரத்தமும் சதையுமாக ஈழ ஆதரவு இயக்கங்களில் வளர்ந்தவன் நான் என்று மரணத்தில் துளிர்க்கும் கனவு புத்தகத்தை பதிப்பித்த ஆழி பதிப்பகத்தைச் சேர்ந்த பதிப்பாளர் செந்தில்நாதன் தெரிவித்தார். ஆழி பதிப்பகம் ஈழம் தொடர்பாக பல நூல்களை வெளியிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்:
தனிப்பட்ட முறையிலும் இதில் எனக்கு பொறுப்பிருப்பதாக நினைக்கிறேன். என்னைப் பொறுத்தவரையில் மிகச்சிறிய வயதிலிருந்தே ரத்தமும் சதையுமாக ஈழ ஆதரவு இயக்கங்களில் வளர்ந்தவன் நான். விடுதலைப் புலி ஆதரவு மாணவர் செயல்பாடுகள் மூலம் ஒரு காலத்தில் எனது வாழ்க்கையே திசைமாறிப்போனது. ஆனால் அதுதான் நான் இன்று விரும்பும் வாழ்க்கையின் அடித்தளமாக இருந்துவருகிறது.
ஈழ மக்கள் விடுதலையின் மீது நூறு சதவீத அக்கறை கொண்டது ஆழி. இது முள்ளிவாய்க்கால் பெரும்சோகத்துக்குப் பின் ஈழம் தொடர்பான ஐந்து நூல்களை வெளியிட்டது. யோ.திருவள்ளுவரின் ஈழம் - இனப்படுகொலைக்குப் பின் என்கிற நூல் மிகவும் பரவலாக படிக்கப்பட்டது. கவிதைகள் எனில்,. கவிஞர் குட்டிரேவதி தொகுத்த முள்ளிவாய்க்காலுக்குப் பின் என்கிற தொகுப்பு சுமார் 60 ஈழக்கவிஞர்களின் கவிதைகளைக் கொண்டிருந்தது. கவிஞர்கள் தமிழ்நதியின் தொகுப்பு ஒன்றும் வா.ஐ.ச. ஜெயபாலனின் தொகுப்பு ஒன்றும் வெளியாயின. இப்போது இதே நிலையில் தீபச்செல்வன் தொகுத்திருக்கும் எட்டு ஈழக் கவிஞர்களின் கவிதைகளின் தொகுப்பு.
முள்ளிவாய்க்காலுக்குப் பிந்தைய சுமார் 300-400 கவிதைகள் மொத்தமாக இவற்றில் இடம்பெற்றிருக்கின்றன என்பது வரலாற்றின் இலக்கியப் பதிவாக முக்கியத்துவம் பெறுகிறது. இதில் பங்கு பெற்ற அனைத்து கவிதை உள்ளங்களுக்கும் ஆழி நன்றியை பகிர்ந்துகொள்கிறது.
ஈழப் படைப்புகளை தொடர்ந்து வெளியிடுவதில் ஆழி முனைப்பாக இருக்கும். இந்தக் கவிதைகளை வெறும் பதிப்பாளனாக நான் வெளியிடவில்லை. ஈழ மக்களின் விடுதலைக்காக தமிழ் நாட்டில் 80களின் இறுதியில் ஓர் அணிற்பிள்ளையைப் போல எனது பங்களிப்பைச் செய்திருக்கிறேன். வீடு வீடாக கல்லூரி கல்லூரியாக ஈழ ஆதரவு அறிக்கைகளை விநியோகித்திருக்கிறேன். அந்த நிகழ்வுகளின், நினைவுகளின் தொடர்ச்சியாகவே இந்த நூல்களை வெளியிடுவதையும் பார்க்கிறேன் என்றார் ஆழி பதிப்பகத்தின் பதிப்பாhளர் செந்தில்நாதன்
http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/72649/language/ta-IN/article.aspx
-
-
Topics
-
0
By தமிழ் சிறி
தொடங்கப்பட்டது
-
-
Posts
-
By தமிழ் சிறி · Posted
நிகே.... பூசனிக்காய் கறி எனக்கு மிகவும் பிடித்தது. ஆனால் இந்த முறையில்... ஒருநாளும் செய்து பார்க்கவில்லை. ஒருநாள்.. செய்து பார்க்க வேண்டும். ஜேர்மனியில் பூசனிக்காயை... புரட்டாதி மாதத்தில் இருந்து, மாசி மாதம் வரை தான் கடைகளில் வாங்கலாம். விலை மலிவாக போடும் நேரமாக பார்த்து... 2 கிலோ உள்ள பூசனிக்காகளை வாங்கி, நில அறையில் வைத்து விடுவேன். அந்த நேரம் ஒரு பூசனிக்காய், ஒரு ஐரோ அளவில் வரும். அதனால்... வருடம் முழுக்க அதனை பாவிக்கக் கூடியதாக இருக்கும். -
நமது சமூகம் ஏன் இப்படி மாறிவிட்டது.
-
நன்றி உடையார் மிக மிக நன்றி உங்கள் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் புங்கையூரன் நன்றி sir எனக்கு உள்ளி ஊறுகாய் பிடிக்கும்...மிக சுவையாக இருக்கும்... மிக மிக நன்றி சுவி... உங்கள் ஒவ்வொருவரின் கருத்துக்கள்தான் என்னை இப்படி வடிவமைத்திருக்கின்றது...சின்ன வெங்காயம் நன்றாக இருக்கும் ஆனால் எனக்கு அது கிடைக்கவில்லை.
-
By அக்னியஷ்த்ரா · Posted
அப்படியே பாமர மக்களை பேச்சாற்றலால் உசுப்பேற்றி பொத்துவில் முதல் பொலிகண்டி வரை நடத்தி அவர்கள் மேல் நீதிமன்ற வழக்கு பாயவைத்து அழிவிற்கு உட்படுத்த துடிக்கும் பசும்தோல் போர்த்திய தேசிக்காய் ஓநாய்களை தோலுரிப்பதும் காலத்தின் கடமையல்லவா, இதற்கு Mr.சூமா என்ன சொல்கிறார்...?
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.