• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
உடையார்

ஐ.நா.நல்லெண்ண தூதராக தேர்வானார் மதுரை சலூன் கடைக்காரரின் மகள்

Recommended Posts

ஐ.நா.நல்லெண்ண தூதராக தேர்வானார் மதுரை சலூன் கடைக்காரரின் மகள்

ஐ.நா.நல்லெண்ண தூதராக மதுரை சலூன் கடைக்காரரின் மகளான மாணவி நேத்ரா தேர்வாகியுள்ளார்.

ஐ.நா.நல்லெண்ண தூதராக தேர்வானார் மதுரை சலூன் கடைக்காரரின் மகள்
மனைவி மற்றும் மகளுடன் மோகன்.
 
மதுரை:

மதுரை மாவட்டத்தில் கொரோனா பரவலைத் தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஊரடங்கு தொடங்கிய நாளில் இருந்து பலர் உதவி செய்து வருகின்றனர்.
 
மதுரையில் மேலமடையில் வசித்து வருபவர் மோகன். 47 வயதான மோகன், சலூன் நடத்தி வருகிறார். ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு 5 கிலோ அரசி, காய்கறிகள், பலசரக்கு சாமான்கள் மற்றும் சமையல் எண்ணெய் போன்றவற்றை வழங்கி வருகிறார். இதற்காக தனது மகள் நேத்ராவின் படிப்புக்காக சேமித்து வைத்த 5 லட்சம் ரூபாயை செலவிட்டுள்ளார்.

மோகனின் மகள் நேத்ரா, தற்போது ஒன்பதாவது வகுப்பு படித்து வருகிறார். ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்ற கனவுடன் படித்து வருவதாக அவர் தெரிவித்திருந்தார்.

இக்கட்டான நிலையில் மக்களுக்கு மோகன் உதவிய சம்பவம் பிரதமர் மோடிக்கு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் மன் கீ பாத் நிகழ்ச்சியின்போது மகள் படிப்புக்காக வைத்திருந்த ஐந்து லட்சம் ரூபாய் பணத்தில் மக்களுக்கு உதவிய மோகனுக்கு பாராட்டு தெரிவித்தார்.

இந்நிலையில் ஐ.நா.நல்லெண்ண தூதராக மதுரை சலூன்கடைக்காரரின் மகளான மாணவி நேத்ரா தேர்வாகியுள்ளார்.  மேலும் நியூயார்க் மற்றும் ஜெனிவாவில் நடக்கும் கூட்டத்தில் பேசவும் நேத்ராவுக்கு ஐ.நா.அழைப்பு விடுத்துள்ளது.  

தனது எதிர்கால கல்விக்காக சேமித்து வைத்திருந்த 5 லட்ச ரூபாயை ஏழைகளுக்காக நேத்ரா வழங்கியதை பாராட்டி கவுரவிக்கும் வகையில் இந்த சிறப்பு அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

படித்து நல்ல நிலைக்கு வந்து இன்னும் பலருக்கு உதவி செய்யம்மா

Share this post


Link to post
Share on other sites

மதுரை மாணவி நேத்ராவை ஐநா கவுரவப்படுத்தியது தமிழர்களுக்கு கிடைத்த பெருமை- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

மதுரை மாணவி நேத்ராவை ஐநா கவுரவப்படுத்தியது தமிழர்களுக்கு கிடைத்த பெருமை- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

 

மதுரை மாணவி நேத்ராவை ஐநா கவுரவப்படுத்தியது தமிழர்களுக்கு கிடைத்த பெருமை என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்து உள்ளார்.
பதிவு: ஜூன் 05,  2020 12:26 PM
மதுரை:

மதுரை மாவட்டத்தில் கொரோனா பரவலைத் தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஊரடங்கு தொடங்கிய நாளில் இருந்து பலர் உதவி செய்து வருகின்றனர்.

மதுரையில் மேலமடையில் வசித்து வருபவர் மோகன். 47 வயதான மோகன், சலூன் நடத்தி வருகிறார். ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு 5 கிலோ அரசி, காய்கறிகள், பலசரக்கு சாமான்கள் மற்றும் சமையல் எண்ணெய் போன்றவற்றை வழங்கி வருகிறார். இதற்காக தனது மகள் நேத்ராவின் படிப்புக்காக சேமித்து வைத்த 5 லட்சம் ரூபாயை செலவிட்டுள்ளார்.


மோகனின் மகள் நேத்ரா, தற்போது ஒன்பதாவது வகுப்பு படித்து வருகிறார். ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்ற கனவுடன் படித்து வருவதாக அவர் தெரிவித்திருந்தார். 

இக்கட்டான நிலையில் மக்களுக்கு மோகன் உதவிய சம்பவம் பிரதமர் மோடிக்கு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் மன் கீ பாத் நிகழ்ச்சியின்போது மகள் படிப்புக்காக வைத்திருந்த ஐந்து லட்சம் ரூபாய் பணத்தில் மக்களுக்கு உதவிய மோகனுக்கு பாராட்டு தெரிவித்தார்.

இந்நிலையில் ஐ.நா.நல்லெண்ண தூதராக மதுரை சலூன்கடைக்காரரின் மகளான மாணவி நேத்ரா தேர்வாகியுள்ளார்.  மேலும் நியூயார்க் மற்றும் ஜெனிவாவில் நடக்கும் கூட்டத்தில் பேசவும் நேத்ராவுக்கு ஐ.நா.அழைப்பு விடுத்துள்ளது.  

தனது எதிர்கால கல்விக்காக சேமித்து வைத்திருந்த 5 லட்ச ரூபாயை ஏழைகளுக்காக நேத்ரா வழங்கியதை பாராட்டி கவுரவிக்கும் வகையில் இந்த சிறப்பு அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

முடி திருத்தும் தொழிலாளி மோகன் மகள் நேத்ராவுக்கு 1 லட்சம் ஊக்க தொகையும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

"உலகத்திலேயே வறுமை இருக்க கூடாது என ஐ.நா.வின் நல்லெண்ண தூதரான மதுரை மாணவி நேத்ரா கூறி உள்ளார்.

மதுரை சிறுமி நேத்ராவை ஐநா கவுரவப்படுத்தியது தமிழர்களுக்கு கிடைத்த பெருமை என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்து உள்ளார்.

https://www.dailythanthi.com/News/TopNews/2020/06/05122603/The-UN-honored-Madurai-student-NetraThe-pride-of-the.vpf

Share this post


Link to post
Share on other sites

மதுரை மாணவி நேத்ராவின் உயர்கல்வி செலவை தமிழக அரசே ஏற்கும் -முதல்வர் பழனிசாமி

மதுரை மாணவி நேத்ராவின் உயர்கல்வி செலவை தமிழக அரசே ஏற்கும் -முதல்வர் பழனிசாமி

 

மதுரை மாணவி நேத்ராவின் உயர்கல்வி செலவை தமிழக அரசே ஏற்கும் என முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.
பதிவு: ஜூன் 06,  2020 14:10 PM
சென்னை

மதுரை மாவட்டத்தில் கொரோனா பரவலைத் தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஊரடங்கு தொடங்கிய நாளில் இருந்து பலர் உதவி செய்து வருகின்றனர்.

மதுரையில் மேலமடையில் வசித்து வருபவர் மோகன். 47 வயதான மோகன், சலூன் நடத்தி வருகிறார். ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு 5 கிலோ அரசி, காய்கறிகள், பலசரக்கு சாமான்கள் மற்றும் சமையல் எண்ணெய் போன்றவற்றை வழங்கி வருகிறார். இதற்காக தனது மகள் நேத்ராவின் படிப்புக்காக சேமித்து வைத்த 5 லட்சம் ரூபாயை செலவிட்டுள்ளார்.


மோகனின் மகள் நேத்ரா, தற்போது ஒன்பதாவது வகுப்பு படித்து வருகிறார். ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்ற கனவுடன் படித்து வருவதாக அவர் தெரிவித்திருந்தார். 

இக்கட்டான நிலையில் மக்களுக்கு மோகன் உதவிய சம்பவம் பிரதமர் மோடிக்கு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் மன் கீ பாத் நிகழ்ச்சியின்போது மகள் படிப்புக்காக வைத்திருந்த ஐந்து லட்சம் ரூபாய் பணத்தில் மக்களுக்கு உதவிய மோகனுக்கு பாராட்டு தெரிவித்தார்.

இந்நிலையில் ஐ.நா.நல்லெண்ண தூதராக மதுரை சலூன்கடைக்காரரின் மகளான மாணவி நேத்ரா தேர்வாகியுள்ளார்.  மேலும் நியூயார்க் மற்றும் ஜெனிவாவில் நடக்கும் கூட்டத்தில் பேசவும் நேத்ராவுக்கு ஐ.நா.அழைப்பு விடுத்துள்ளது.  

தனது எதிர்கால கல்விக்காக சேமித்து வைத்திருந்த 5 லட்ச ரூபாயை ஏழைகளுக்காக நேத்ரா வழங்கியதை பாராட்டி கவுரவிக்கும் வகையில் இந்த சிறப்பு அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

மாணவி நேத்ராவின் செயலுக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்தனர்.அமைச்சர்கள் செலூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார் ஆகியோர் பாராட்டினர்

இந்த் நிலையில் தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்த நேத்ராவிற்கு முதலமைச்சர் பாராட்டு தெரிவித்து உள்ளார்.

த.ன்னலம் கருதாமல் அர்ப்பணிப்புடன் செயல்படும் நேத்ராவின் செயலை அங்கீகரிக்கும் வகையில் நேத்ராவின் உயர்கல்வி செலவை தமிழக அரசே ஏற்கும் என கூறி உள்ளார்.

https://www.dailythanthi.com/News/TopNews/2020/06/06141007/Madurai-student-pays-for-higher-education-he-Government.vpf

 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • எம்மை நோக்கி பாயும் இராணுவ, பௌத்த ஆக்கிரமிப்பு: ஸ்ரீதரன் (ஆர்.யசி) தமிழ் மக்களை நோக்கிய ஆபத்தான அரசியல் சூழலொன்று உருவாகி வருகின்றது. எம்மை நோக்கிய பெளத்த, இராணுவ ஆக்கிரமிப்புகள் படையெடுத்து வருகின்றது. இது எம் இனத்தின் இருப்பு கேள்விக்கு உட்ப்படுத்தப்படுகிறது எனத் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் யாழ் மாவட்ட வேட்பாளருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைபின் தேர்தல் பிரசார கூட்டமொன்றில் உரையாட்டும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.  மேலும், எம் இனத்தின் வாழ்க்கை என்பது அழிக்கப்பட்டுக்கொண்டு செல்கிறது. எங்களை நோக்கி புத்த கோவில்கள் வருகிறது எங்கள் இடங்கள் இராணுவ முகாம்களாக மாற்றப்பட்டுக்கொண்டு உள்ளது. காலையில் இருந்து மாலை வரை எத்தனையோ காவலரண்களை பார்கின்றோம். நாளாந்தம்  புத்தம் புதிய காவலரண்கள் வருகிறது. இந்த சூழ்நிலைகள் எல்லாம் எங்களைப் பொறுத்த வரை ஒரு ஆபத்தான சூழ்நிலைக்குள் போய்கொண்டிருக்கின்றோம் . முழுமையாக ஒரு இராணுவ மயப்படுத்தப்பட்ட இராணுவ பிரசன்னத்திற்குள் வாழ்கின்ற  சூழல் எங்களை நோக்கி நகர்ந்துகொண்டுள்ளது. இந்த சூழலில் தான் எங்கள் பணிகளை நாங்கள் முன்னெடுத்து வருகின்றோம். இப்போது தமிழர்கள் அனைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்போடு ஒன்றாக  பயணிக்க வேண்டிய நேரம் அவ்வாறு ஒன்றாக பயணித்தால் வடக்கு கிழக்கில் இந்த பாராளுமன்ற தேர்தலில் இருபது ஆசனங்களை நாம் பெற முடியும். 225 பாராளுமன்ற உறுப்பினர்களில் 20 உறுப்பினர்கள் இருந்தால் மட்டுமே நாம் எதிர்வரும் காலங்களில் இந்த மண்ணில் ஏதாவது பேசக்கூடிய அறுத்துறுத்து சொல்லக் கூடிய அல்லது எங்கள் உரிமைக்காக உரத்துக் குரல் கொடுக்கக்கூடிய வல்லமை எங்களுக்கு கிடைக்கும். இல்லை என்றால் யாரோ அபிவிருத்தி என்கின்ற மாய வலையை விரித்து வாக்குக் கேட்பவர்களுக்கும், அரச முகவர்களுக்கு வாக்களித்துக் கொண்டிருக்க போகின்றோம். நாங்களாக எங்கள் மண்ணில் இறந்துபோன இறமைகளை  மீட்டு எடுத்து  நிமிர்ந்து வாழப்போகின்றோம் என்கின்ற சூழல் எங்களுக்கு எப்போது வரப் போகிறது. நான் கூட இரண்டு தடவைகள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்திருக்கின்றேன், என்னால் முடிந்த பணிகளை இந்த மண்ணிற்கு ஆற்றியிருக்கிறேன். மீண்டும் உங்கள் பேராதரவினை நாடி நிற்கின்றோம் என  தெரிவித்தார்     https://www.virakesari.lk/article/85379
    • கூட்டமைப்புக்குள் தீவிரமடையும் உள் மோதல்கள்? - யதீந்திரா தேர்தல் தொடர்பில் மக்கள் மத்தியில் எவ்வாறான பார்வை காணப்படுகின்றது என்பதை தற்போதைக்கு ஊகிப்பது கடினம். ஆனால் தேர்தல் போட்டியானது, குறிப்பாக வடக்கு மாகாணத்தில், இம்முறை ஒப்பீட்டடிப்படையில் மக்களுக்கு முன்னால் தெரிவுகள் அதிகரித்திருக்கின்றன. அதே வேளை கூட்டமைப்புக்குள்ளும் இலங்கை தமிழசு கட்சிக்;குள்ளும் உள் முரண்பாடுகள் தீவிரமடைந்திருக்கின்றன. தேர்தலில் வெல்ல வேண்டுமென்பதற்காக கூட்டமைப்புக்குள்ளும் தமிழரசு கட்சிக்குள்ளும் அணிகள் உருவாகியிருக்கின்றன. தமிழரசு கட்சிக்குள் மாவை அணி – சுமந்திரன் அணியென்று இரு அணிகளாக பிரிந்து செயற்பட வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. சுமந்திரன் அணியென்பது, உண்மையில் சம்பந்தன் அணியாகும். சம்பந்தன் பொதுவாக பச்சைக் கொடியை அசைத்துவிட்டு அமைதியாக இருப்பார். அதனை சம்பந்தன் ஒரு வேளை தனது சாணக்கியமென்று எண்ணலாம். விக்கினேஸ்வரனுக்கு எதிராக, வடக்கு மாகாண சபையில் தமிழரசு கட்சி நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவந்த போதும் சம்பந்தன் இப்படித்தான் எதுவுமே தெரியாதவர் போலிருந்தார். அதனை மாகாண சபையின் பிரச்சினை மாதிரி காண்பித்துவிட்டு, அனைத்துக்கும் பின்னால் அமைதியாக தலையை ஆட்டிக்கொண்டிருந்தார். இப்போது மாவைக்கு எதிரான அனைத்து நகர்வுகளுக்கும் பின்னாலிருந்து கொண்டு, தனக்கு எதுவுமே தெரியாதது போன்று முகபாவனை காட்டிக்கொண்டிருக்கின்றார். முகத்தை அப்பாவித்தனமாக வைத்துக்கொண்டு, தனது காரியங்களை சாதித்துக் கொள்வதில் சம்பந்தனுக்கு நிகர் சம்பந்தன்தான். தமிழரசின் ஒவ்வொரு அணியும் மற்றவர்களின் தோல்விகளை விரும்புகின்றது. ஏனெனில் ஒரு அணியின் வெற்றி இன்னொரு அணியின் தோல்வியில்தான் சாத்தியப்படும். அதே போன்று கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளும் தங்களுடைய வெற்றிக்காக கடுமையாக உழைக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகியிருக்கின்றது. ஏனெனில் பங்காளிக் கட்சிகள் பெறப் போகும் ஆசனங்கள்தான் கூட்டமைப்புக்குள் அவர்களுக்கான இடத்தை தீர்மானிக்கும். இதன் காரணமாக ஒவ்வொருவரும் மக்களுக்கு முன்னால் தங்களை சரியானவர்களாக காண்பிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கின்றது. இதற்கு சுமந்திரன் தொடர்பான சர்ச்சைகளே பிரதான காரணம். சுமந்திரனின் கருத்துக்களால், கூட்டமைப்பினரை நோக்கி கேள்விகள் எழுகின்றன. ஏனையவர்கள் இதற்கு பதிலளிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கின்றது. கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கும் தமிழசு கட்சியின் வேட்பாளர்களுக்கும் இது ஒரு நெருக்கடியாக மாறியிருக்கின்றது. சுமந்திரனை எதிர்த்துப் பேச வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கின்றது. சிலர் வெளிப்படையாகவும் சிலர் மறைமுகமாகவும் இதனைச் செய்கின்றனர். அண்மையில் வவுணியாவில் இடம்பெற்ற கூட்டமொன்றில் பேசிய டெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் இதனை போட்டுடைத்திருக்கின்றார். கூட்டமைப்பு தவறு செய்யவில்லை. நாங்கள் சரியான வழியில்தான் செல்கின்றோம் ஆனாலும் கூட்டமைப்புக்குள் சில புலியெதிர்ப்பாளர்கள் இருக்கின்றனர். அவ்வாறானவர்களை மக்கள் புறம்தள்ள வேண்டும். துரோகிகளையும் காட்டிக்கொடுப்பவர்களையும் களையெடுக்க வேண்டும். உண்மையில் செல்வம் அடைக்கலநாதன் யாரைப் பற்றி பேசுகின்றார்? இயக்கங்கள் கோலோச்சிய காலத்தில், களையெடுப்பு என்பதற்கு வேறு ஒரு அர்த்தம் இருந்தது. ஆனால் இது ஜனநாயக அரசியல் அல்லவா! கூட்டமைப்புக்குள் பிழையானவர்கள் இருக்கின்றனர் என்பதை கூட்டமைப்பின் தலைவர்களில் ஒருவரே ஒப்புக்கொண்டிருக்கின்றார். கூட்டமைப்பு தொடர்பில் மக்கள் மத்தியில் கேள்விகள் எழுந்திருப்பதால்தான் செல்வம் அடைக்கலநாதன் இவ்வாறானதொரு வாக்குமூலத்தை வழங்கியிருக்கின்றார். அதே போன்று டெலோவின் பிறிதொரு பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய டெலோவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விநோ, சம்பந்தன் அரசியலிலிருந்து ஒதுங்க வேண்டுமென்றும் தெரிவித்திருக்கின்றார். இதன் போது செல்வம் அடைக்கலநாதனும் உடனிருந்தார். பிறர் உதவியின்றி நடக்க முடியாமல் தடுமாறும் சம்பந்தனோ, திருகோணமலையில் போட்டியிடுகின்றார். மேற்படி விடயங்கள் அனைத்தும் கூட்டமைப்புக்குள் அதிகாரம் சார்ந்து மோதல்கள் தீவிரமடைந்திருக்கின்றன என்பதற்கான ஆதாரங்களாகும். மறுபுறத்தில் தமிழரசு கட்சியின் அதிகாரப் போட்டிகள் தினமும் ஊடகங்களின் வாயிலாக, காட்சிப்படுத்தப்படுகின்றது. தமிழரசு கட்சியின் மகளீர் அணித் தலைவி அண்மையில் தெரிவித்திருந்த கருத்துக்கள் கட்சிக்குள்ளும் கட்சிக்கு வெளியிலும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது. கூட்டமைப்பிற்கு இதுவரை புலம்பெயர் சமூகத்திடமிருந்து 21 கோடிகள் வந்திருப்பதாகவும் அவற்றுக்கு என்ன நடந்ததென்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார். இதுவரை கேட்கப்படாத ஒரு விடயம் இந்தத் தேர்தலின் போது ஏன் கேட்கப்படுகின்றது? உண்மையில் தமிழசு கட்சிக்குள் உருவாக்கியியிருக்கும் மாவை – சுமந்திரன் அணி மோதலின் விளைவுதான் இது. பொதுவாக ஒரு அணிக்குள் பிளவுகள் தோன்றினால் உண்மைகள் தாராளமாக வெளிவரத் தொடங்கும். அதுதான் தற்போது நடைபெறுகின்றது. இன்னொரு விடயமும் இங்கு கவனத்தை பெறுகின்றது. அதாவது, தேர்தல் பிரச்சாரங்கள் ஆரம்பித்த நாளிலிருந்து சர்ச்சைக்குரியவாறான கருத்துக்களையே தமிழரசு கட்சியின் முக்கியஸ்தர்கள் வெளியிட்டுவருகின்றனர். இதில் தமிழசு கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் முக்கியமானவர். நீலன் திருச்செல்வத்தை பிரபாகரன் விண்ணன் என்று கூறிதாக தெரிவித்தார். அன்ரன் பாலசிங்கத்தையும் சுமந்திரனையும் தொடர்புபடுத்தி மொட்டைத் தலைக்கும் முழக்காலுக்கும் முடிச்சுப் போட்டார். இதனால் ஒரு சர்ச்சை ஏற்பட்டது. தற்போது 73 கள்ள வாக்குகள் போட்டதாகக் கூறி மீண்டுமொரு சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றார். ஒரு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இவ்வாறு கூறியிருப்பதானது, கூட்டமைப்பின் ஜனநாயக முகமூடியை கிழித்துத் தொங்கவிட்டிருக்கின்றது. கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், அதன் பேச்சாளர் சுமந்திரன் ஆகியோர் ஜனநாயகம் தொடர்பில் அதிகம் பேசுபவர்கள். தங்களுடைய ஒவ்வொரு செயற்பாடுகளும் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கானதென்று வாதிடுபவர்கள். இதிலுள்ள வேடிக்கையான பக்கம் என்னவென்றால் – கள்ளவாக்குள் போட்ட சிறிதரனும் – ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக சதா பாடுபடு;ம் சுமந்தரனும் ஓரணியாக செயற்படுகின்றனர். தேர்தல் என்றாலே ஆச்சரியங்களுக்கு பஞ்சமிருப்பதில்லை. இவ்வாறான சர்ச்சைக்குரிய கருத்துக்களும் கூட்டமைப்பிற்குள் நிலவும் ஒருவகை பதட்டத்தின் பிரதிபலிப்புத்தான். அதே வேளை இதனை ஒரு தேர்தல் உக்தியாகவும் கூட சிலர் பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்கலாம். கூட்டமைப்பு தொடர்பில் மக்கள் மத்தியில் கேள்விகள் அதிகரித்திருப்பதால், மக்களை திசைதிருப்புவதற்கு இவ்வாறான சர்ச்சைகள் உதவக் கூடுமென்று அவர்கள் எண்ணியிருக்கலாம். ஆனால் இவ்வாறான பேச்சுக்கள் கூட்டமைப்பின் ஒழுங்கீனத்தையும் தலைமைத்துவ வறுமையையுமே காட்டுகின்றன. பொறுப்பற்ற கருத்துக்களை வெளியிடும் இவ்வாறானவர்களால் எவ்வாறு தமிழ் மக்களுக்கு சரியானதொரு தலைமைத்துவத்தை வழங்கமுடியும்? கூட்டமைப்புக்குள் காணப்படும் உள் மோதல்கள் ஒரு விடயத்தை தெளிவாக எடுத்துக்காட்;டுகின்றன. அதாவது, சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பு அதன் தலைமைத்துவ தகுதியை முற்றிலுமாக இழந்துவிட்டது. மக்கள் தமக்கு பழக்கப்பட்ட ஒரு சின்னம் என்னும் நிலையில் ஒரு வேளை கூட்டமைப்பை திரும்பிப் பார்க்கலாம் ஆனால், அது கூட்டமைப்பிலுள்ளவர்களின் வெற்றியாக அமையாது மாறாக, கூட்டமைப்பின் தவறுகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பிப்பதில் காணப்படும் போதைமைகளாவே இருக்க முடியும். மக்கள் மத்தியில் விழிப்புணர்வு அதிகரிக்கும் போதே மாற்றங்கள் சாத்தியப்படும்.   http://www.samakalam.com/செய்திகள்/கூட்டமைப்புக்குள்-தீவிர/  
    • தம்பி பிரபாகரன் கட்டிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற வீடு இப்பொழுது சிதைந்து போயுள்ளது – சீ.வி.விக்னேஸ்வரன் தம்பி பிரபாகரன் கட்டிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற வீடு இப்பொழுது சிதைந்து போயுள்ள நிலையில் எந்த நாளும் அந்த வீட்டினுள் போராட்டங்கள், குழிபறிப்புக்கள், கழுத்தறுத்தல்கள் இடம்பெறுவதாக வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.ஆகவே தம்பி பிரபாகரன் கைநீட்டிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு இப்பொழுது இல்லை என்பது தான் உண்மை.நேற்று நெல்லியடியில் இடம்பெற்ற தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பரப்புரைக் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சென்ற ஐந்து வருடகாலத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மலைபோல் நம்பிய புதிய அரசியல் யாப்பை இந்தா தருகின்றோம் என்று கூறித் தாமதப்படுத்தி ஏமாற்றியதே அன்றி எதுவும் நடக்கவில்லை. இவர்களுக்கு வேண்டியது சிங்கள ஏகாதிபத்தியமே அன்றி தமிழர்கள் நல்வாழ்வு அன்று.சிங்களத் தேசியக் கட்சிகளுக்கு தேர்தல் காலங்களில் எமது வாக்குகள் வேண்டும். அதன் பின் அவர்கள் சார்பில் யாராவது தமிழர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர்களுக்குத் தனிப்பட்ட சலுகைகளைக் கொடுத்து சரிப்படுத்தி விடுவார்கள். தேர்தலுக்காக இவர்கள் செலவழித்த பணம் அவ்வளவையும் கிடைக்க வைத்து மேலதிகமாகவும் வருமானங்கள் வரச்செய்து எமது நாடாளுமன்றப் பிரதிநிதிகளை வாய்மூடச் செய்து விடுவார்கள். ஆகவே பெரும்பான்மை இன மக்களின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் எந்தக் கட்சிக்கும் வாக்களிக்காதீர்கள்.அவர்கள் தரும் சலுகைகளை ஏற்றுக் கொள்ளுங்கள். ஆனால் அவர்களுக்கு வாக்களிக்காதீர்கள். காரணம் தமிழ் மக்களிடம் கொள்ளை அடித்த பணமே எம்மிடம் திரும்ப வருகின்றது. அதற்கு நன்றியறிதல் தேவையில்லை. எமது தமிழ் வேட்பாளர்களுக்கு தமது சிங்களத் தலைவர்களின் நெறிப்படுத்தலுக்கு மாறாக இக் கட்சிகளுடன் சேர்ந்து எதையும் செய்யமுடியாது. பொருளாதார நன்மைகளைப் பெற்றுத் தருவார்களே என்று நீங்கள் கூறலாம். அது தான் இல்லை.தாம் நினைக்கும் திட்டங்களை, தமக்கு நன்மை தரும் திட்டங்களை மட்டுந்தான் அவர்கள் உங்களுக்குக் கொடுக்க முன்வருவார்கள். அதாவது சிங்களப் பெரும்பான்மையினம் நன்மை பெறவல்ல திட்டங்களையே வகுப்பார்கள். செயல்படுத்துவார்கள். வடமாகாணத்தில் இருக்கும் குளங்கள் அனைத்தையும் தூர் அகற்றி சுத்தப்படுத்தி அணைகட்ட வேண்டும் என்று நாங்கள் கேட்டதற்கு பணம் இல்லை என்றார்கள். அதை இந்திய அரசாங்கத்தின் உதவி கொண்டு செய்ய முற்படுகையில் அதற்கு அனுமதி அளிக்காமல் விட்டார்கள்.மேலும் நாம் மரக்கறி வகைகள், பழங்கள் ஆகியவற்றை இங்கு பயிரிட்டு அவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக் கேட்ட போது சகல அறிக்கைகளும் எமக்கு சார்பாக இருந்த போது மத்திய அரசின் காணி செயலாளர் நாயகம் மட்டும் அந்த செயற்றிட்டத்திற்கு அனுமதி வழங்காமல் விட்டுவிட்டார். காரணம் அவர்களைத் தமக்குச் சார்பாக பக்கத்தில் வைத்திருக்க பெரும்பான்மையினத் தேசியக் கட்சிகள் பார்க்கின்றனவே தவிர தமிழ் மக்கள் வளர்வதை, மேம்படுவதை, முன்நகர்வதை அக்கட்சிகளை அடக்கி ஆளும் பெரும்பான்மை இனத்தவர் விரும்பமாட்டார்கள்.அடுத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு. இவர்களுக்கும் தேசியக் கட்சிகளின் அடிமைக் கட்சிகளுக்கும் இடையில் கடந்த ஐந்து வருடங்களில் எந்த வித வித்தியாசமும் இருக்கவில்லை என்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள்.தம்பி பிரபாகரன் கட்டிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற வீடு இப்பொழுது சிதைந்து போயுள்ளது. கூரையுடு வானத்தைப் பார்க்கலாம் எந்த நாளும் அந்த வீட்டினுள் போராட்டங்கள், குழிபறிப்புக்கள், கழுத்தறுத்தல்கள். முதலில் அந்தக் கூட்டில் ஒன்றிணைந்த கட்சிகள் பல அதனுள் இருந்து வெளியேறிவிட்டார்கள். மிகுதி இருந்த பங்குக் கட்சிகள் சில தமக்குள் பிரிந்துவிட்டனர். ஆகவே தம்பி பிரபாகரன் கைநீட்டிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு இப்பொழுது இல்லை என்பது தான் உண்மை.தமக்குள் முரண்பட்டுக் கொண்டிருக்கும் அவர்களை அதாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தொடர்ந்து ஆதரிப்பதில் எதுவித நன்மையும் இல்லை.இன்று ஒட்டு மொத்த வடக்கு, கிழக்குத் தமிழ்ப் பேசும் மக்களின் நிரந்தரத் தொடர் இருப்பானது கேள்விக்குறியாகியுள்ளது. ஒரு பக்கத்தில் சர்வாதிகாரத்திற்கான அடித்தளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மறுபுறம் வரும் தேர்தலில் அந்த சர்வாதிகாரத்தை நடைமுறைப்படுத்த உங்களிடம் அனுமதி கேட்டு சில வேட்பாளர்கள் வந்துள்ளார்கள். 19ஆவது திருத்தச் சட்டத்தை நீக்க வேண்டும் என்றும் திரும்பவும் அதீத அதிகாரங்கள் கொண்ட ஒரு ஜனாதிபதி உருவாக வாக்களிக்க வேண்டும் என்றும் இவர்கள் கேட்கின்றார்கள்.வெளிப்படையாக அவ்வாறு அவர்கள் கேட்காவிட்டாலும் அவர்களது கட்சித் தலைமைகள் அவர்களைக் களத்தில் இறக்கியிருப்பது முக்கியமாக 19ஆவது திருத்தச் சட்டத்தை நீக்குவதற்காகவே என்பது வெளிப்படை. பொல்லைக் கொடுத்து அடி வாங்குவதெனக் கூறுவார்கள். அது போன்றதொரு காரியம் தான் இது. பெரும்பான்மை இனத்தவரின் கட்டுப்பாட்டில் இருக்கும் தேசியக் கட்சிகளுக்கு வாக்களித்தீர்களானால் இதுதான் நடக்கும். உங்கள் வாக்குகளைப் பெற்று உங்களை அடிமைப்படுத்தி விடுவார்கள்.ஐக்கிய தேசியக் கட்சி அதற்கு இடம் கொடுக்குமா? என்று சிலர் கேட்பார்கள். ஆனால் நீங்கள் கடந்த 5 வருடகால நல்லாட்சி பற்றி சிந்தித்துப் பார்க்க வேண்டும். கோட்டாபயவும், மகிந்தவும், ரணிலும், சஜித்தும் ஒரே குட்டையில் பிறந்த சிங்கள மட்டைகள் என்பதை மறந்துவிடாதீர்கள் என தெரிவித்துள்ளார்.(15)   http://www.samakalam.com/செய்திகள்/தம்பி-பிரபாகரன்-கட்டிய-த/